அத்தியாயம் – 31

செல்லம்…

“என்னடா லெட்டர் எழுதி இருக்கானேன்னு பாக்குறியா?! எஸ்.. தங்கா.. இது என்னோட பல வருஷ ஆசை. கனவுன்னு கூட சொல்லலாம். எனக்கே எனக்குன்னு ஒருத்தி வருவான்னு, அப்பபோ என்னோட உள் மனசு சொல்லிட்டே இருக்கும். பட், நிஜமா இப்படி ஒருத்தி வருவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை..“ என்று படித்ததுமே, படிப்பதை நிறுத்திவிட்டு கண்களை சுருக்கி அவனை முறைக்க,

“படி படி…” என்று ப்ரித்வி சைகை செய்ய, மீண்டும் கடிதத்தில் பார்வையை ஓட்டினாள்.

“உன் மேல அடிக்கடி கோவப்படுறேன் அப்படித்தானே. என்ன பண்றது, சில ஆசைகள் எனக்கும் இருக்குமில்லையா. நேர்ல பார்த்துக்கிறோம் தினமும். ஆனாலும் ஒருதடவையாவது உன் கை பிடிச்சு ரோட்ல நடந்து போகணும் டி தங்கா..” என்றிருக்க, இந்த ஆசை மீனாளுக்கும் இருக்கிறதுவே.

தன்னைப் போலவே அவனும் விருப்பம்கொண்டிருக்கிறான் என்று கண்டதுமே, அவளுக்கு தங்களின் ஒத்த மனதினை எண்ணி ஆச்சர்யமே.

“எனக்கும் உங்க கையை பிடிச்சிட்டு, ஜாலியா வேடிக்கைப் பார்த்துட்டு ரோட்ல நடந்து போகணும்னு ரொம்பவே ஆசை மாமா..” என்று மெல்லிய குரலில் அலைபேசி திரையில் தெரியும் அவனிடம் சொல்ல,

“தெரியும்..” என்றான் ப்ரித்வியும் உள்ளார்ந்த குரலில்.

‘எப்படி?!’ என்று கண்களை விரிக்க,

“அப்படித்தான்.. மேல படி..” என, மீனாளோ அவனைப் பார்த்துவிட்டு படிக்கத் தொடங்கினாள்.

“லவ் பண்ணனும்னு ஆசை நிறையவே இருந்தது. ஆனா, லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணனும்னு கொள்கை கோட்பாடு எல்லாம் எனக்கு இல்லை தங்கா. பட் எல்லாத்தையும் நீ மாத்திட்ட. உன் பின்னாடி என்னை சுத்த வைக்கிற நீ. நீ என்ன செஞ்சாலும் அது எனக்கு பிடிக்குது. ரசிக்கிறேன்.. உன்னோடவே இருக்கணும்னு நினைக்கறேன். நீ எனக்கு மட்டும் தான் அப்படின்னு ரொம்பவே உரிமை எடுத்துக்க தோணுது. கோபமா இருந்தாலும்,  உன் கிட்ட நான் ப்ளர்ட் பண்றேன். இப்படில்லாம் நான் இருந்ததே இல்லை…” என்று அவன் எழுதியிருக்க, இது அத்தனையும் அவனது குரலிலேயே உள்ளுக்குள் ஒலிக்க, மீனாளின் இதழ்களோ மந்தகாச புன்னகை ஒன்று மலர்ந்து விரிந்தது.

“எனக்குத் தெரியும்.. உனக்கான சுதந்திரங்கள் எத்தனை பெருசோ, அதுபோலவே கட்டுப்பாடுகளும் நிறைய. அதெல்லாம் தாண்டி, முக்கியமா உன்னோட பேரன்ட்ஸ் தாண்டி, நீ என்னை உன் மனசுல நினைச்சதே பெருசு தான். அதுவும் எனக்கு முன்னாடியே நீ இம்ப்ரெஸ் ஆகிருக்க அப்படிங்கப்போது ஐ பீல் ரியலி ப்ளஸ்ட்.

இதெல்லாம் உன்ன பக்கத்துல உக்காரவச்சுட்டு, உன் கை பிடிச்சிட்டு, கன்னம் தாங்கிட்டு, கண்ண பார்த்துட்டு சொல்லணும்னு அவ்வளோ ஆசை. ஆனா முடியாது. டெஃபெனட்லி ஐ வில் லூஸ் மை கண்ட்ரோல்.

உன்ன என் கை குள்ளயே வச்சுக்கணும். உன்னோட ஹார்ட் பீட் கேட்கணும்.. எப்பவுமே உனக்காக நான் இருக்கேன்னு உன்னோட ஃபோர்ஹெட்ல கிஸ் பண்ணனும்..” என்று காதலின் வரிகள் நீண்டுகொண்டே போக, மீனாளுக்கோ படிக்க படிக்க ப்ரித்வி மீதான காதல் கூடிக்கொண்டே போனது.

இமைகளை அழுந்த மூடி, ஆழ ஒரு மூச்சினை எடுத்துவிட்டவளுக்கு என்னவோ அவனே தன்னருகினில் இருப்பது போல ஓர் உணர்வு. ஒருவித கதகதப்பினை அவளது உள்ளமும், உடலும் உணர்வது போல இருக்க, ப்ரித்வியின் பார்வையோ அவளையே பருகிக்கொண்டு இருந்தது.

லேசாய் அமட்டு கடித்து, உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முயன்றாலும் அது முடியாது போல இருந்தது மீனாளுக்கு. இப்போதே ப்ரித்வியின் நெஞ்சுக்குள் புதைந்துகொள்ள வேண்டும் என்கிற ஒரு பேராவல் எழுந்து அவளைப் போட்டு படுத்த, கண்களோ ஏன் கசிகின்றது என்றே தெரியாத ஒரு நிலையில் இருந்தாள் மீனாள்.

இத்தனை காதலை ஒரே நேரத்தில் வெளிக்காட்டினால் அவளும் தான் என்ன செய்வாள்?!

வேகமாய் முகத்தினை அழுந்த துடைத்துக்கொண்டவள்    “நா.. நான் தனியா படிச்சுக்கவா?” என்று கேட்க,

அவனோ பிடிவாதமாய் “நோ..” என்று தலையை மறுப்பாய் அசைக்க,

“ப்ளீஸ் மாமா…” என்று இவளும் சொல்ல,

“ம்ம்ஹும் நோ வே…” என்றான் உறுதியாய்.

“என்னால முடியல மாமா..” என்று இவளும் பாவமாய் உதடு பிதுக்க,

“ஏன் என்ன பண்ணுது?!” என்றான் விஷமமாய்.

“எனக்கு இப்போவே உங்கள பார்க்கணும் போல இருக்கு..”  என,

“தென்?!” என்றான்.

“மேல சாஞ்சுக்கணும்..” என்று மீனாளும் அடுத்து பேச,

“வாவ்..! தென்?!” என்று அவனும் புருவம் உயரத்த,

“இப்போதைக்கு அவ்வளோதான்..” என்று கடுப்பாய் மொழிந்தவள், இவன் விட மாட்டான் என்று தெரிந்துகொண்டு கடிதத்தை கையில் எடுத்தாள்.   

“இந்த லெட்டர்ல என் மனசுல இருக்கிறது எல்லாம் ரைட் பண்ணிருக்கேனா அப்படின்னா, கண்டிப்பா இல்லை. சொல்லாத விசயங்களும், சொல்ல முடியாத விசயங்களும், நம்ம வாழ்ந்து பார்த்துமட்டுமே தெரிஞ்சுக்கவேண்டிய விசயங்களும் நிறையவே எனக்குள்ள இருக்கு செல்லம்..

நீ.. நான்… நம்ம சேர்ந்து வாழப் போற இந்த வாழ்க்கை, எப்போ எப்போன்னு ஏங்க வைக்குது தங்கா. ஆனா இன்னும் லவ் பண்ணனும். நிறைய நிறைய லவ் பண்ணனும். நிறைய சண்டை போடணும்.. உன்னை சமாதானம் செய்ய திரும்ப உன் பின்னாடி சுத்தணும். உன்கிட்ட கெஞ்சி நிக்கணும்.. மிஞ்சி நிக்கணும்.. கொஞ்சி நிக்கணும். இப்படி நிறைய…” என்று படிக்கும்போதே, அவனது வார்த்தைகள் எல்லாம் காட்சிகளாய் அவள் கண் முன்னே விரிய, அதற்குமேல் முடியாமல்  அக்கடிதம் கொண்டே தன் முகத்தினை மூடிக்கொண்டாள்.

அவன் கெஞ்சி, மிஞ்சி, கொஞ்சி நிற்கும் அழகினை அவள் மனம் இப்போதே உணர்ந்துகொள்கிறதே. அவ்வுணர்வில் எழும் பூரிப்பையும், புல்லரிப்பையும் அவள் எப்படி மறைக்க?!

அது முடியுமா என்ன?!

அதுதான் முகத்தினை மூடிக்கொண்டாள்.

நொடிகள் கடந்தபின்னும் அவள் அப்படியே இருக்கவும், ப்ரித்வி தான் “ஓய் தங்கா..” என்று குரல் கொடுக்க,

அவளோ “நீங்க கால் கட் பண்ணுங்க மாமா..” என்றாள் சிணுங்கிய குரலில்.

“முழுசா படிச்சு முடி செல்லம்..” என்று அவன் ஊக்க,

“எவ்வளோ பிடிவாதம்?!” என்று கேட்டபடி அவளின் முகத்தினைக் காட்ட, சிவந்து கொஞ்சம் பரிதவித்து, கொஞ்சம் வெட்கி, கொஞ்சம் கூச்சம் உணர்ந்து, ஒருவித பரபரப்புமாய் அவளது இமைகள் படபடத்து காண காண அவனுக்கு போதவில்லை.

“தங்கா…” என்றவன் அவளை அணைப்பது போல கைகளை விரித்துக்கொள்ள, அவளோ பதிலே பேசாமல் அவனையே பார்த்துகொண்டு இருந்தாள்.

இத்தனை காதலை எப்படி தாங்குவேன் என்று நினைத்தாளோ என்னவோ?!

தாங்குவது என்ன, இரட்டிப்பாய் அவனுக்கே திருப்பி கொடேன் என்று சொன்னது அவளது மனம்.

ப்ரித்வியோ “நாளைக்கு என்னை ரசிச்சுக்கோ.. இப்போ படி.. சீக்கிரம்.. எனக்கு வொர்க் இருக்கு டி..” என்று வேகப்படுத்த,

“அப்போ நீங்க வேலையை பாருங்க..” என்றாள் வேகமாய்.

“ஐ க்னோ தட்.. படி டி..” என்று கோபம் காட்ட,

‘பார்றா…’ என்று கண்களை உருட்டியவளின் கண்கள் மீண்டும் அவனின் வரிகளில் பயணித்தது.

“ரொம்ப படுத்துறேனா உன்னை. ஆனா இந்த பீல், அதை எப்படின்னு சொல்லவும் கூட தெரியலை எனக்கு தங்கா.. யு ஆர் மைன்.. ஐம் யுவர்ஸ்.. முழுசா உனக்கே உனக்குத்தான் நான்.. கட்டிக்கோ.. கடிச்சுக்கோ.. வச்சுக்கோ.. கொஞ்சிக்கோ.. இன்னும் உனக்கு என்னென்னலாம் தோணுதோ செஞ்சுக்கோ.. ஆனா ஒரே ஒரு கண்டிசன். மேரேஜ் முன்னடி நமக்குள்ள லிப் லாக் மட்டும் கூடாது. நானே கண்ட்ரோல் மீறினாலும் நீ தடுத்துடு..” என்று எழுதி.. அதோடு கடிதம் முடிவடைந்து இருந்தது.

‘கள்ள கோடாங்கி.. லாஸ்ட்ல இப்படியொன்ன சொல்லி, என்னை கேள்வி கேட்க வச்சிட்டாங்க இந்த மாமா. இப்போ நான் என்னன்னு கேட்க..?’ என்று மண்டையை போட்டுத்தான் உருட்டினாள்.

அவன் கொடுத்த கடிதம் படிக்க படிக்க அவளுக்கே அவனை அணைத்து முத்தமிட தோன்றுகிறதே. அப்படியிருக்கா ‘லிப் லாக் நோ..’ என்று சொல்லியிருக்க, கேள்வியாய் அவனைப் பார்த்தாள் மீனாள்.

“என்ன கேளு?!” என்று ப்ரித்வி கொஞ்சம் வில்லங்கமாய் சிரிக்க,

“படிச்சு முடிச்சிட்டேன்..” என்றாள் கொஞ்சம் உதடு சுளித்து.

“சரி.. லாஸ்ட்ல படிச்சிட்டு எதுவும் கேட்கல..” என்று அவன் ஆர்வமாய் பார்க்க,

“என்ன கேட்கணுமாம்?!” என்று கேட்கும்போதே அவளுக்கு குரல் உள்ளே போக,

“சுளிச்சுக்காத டி தங்கா. கடிச்சுக்கணும் போலவே இருக்கு..” என்றிட முதல்முறையாய் இப்படியொரு சரச பேச்சு அவர்களுக்குள்.

மீனாளுக்கோ தடக் தடக் என்று அடித்துக்கொள்ள, மனதிற்குள் லட்சம் கற்பனைகள் கண்டபடி ஓடினாலும், அலைபேசி திரையே என்றாலும் நேருக்கு நேரே பார்த்தபடி, அதுவும் ப்ரித்வியே இப்படி பேசவும், அவளுக்கோ பேச்சற்ற நிலை.

மீனாளின் இந்த ஒவ்வொரு மாற்றத்தையும் ரசித்தபடி “பேச்சு வரலையா டி.. எனக்கும் பல நேரம் உன்கிட்ட அப்படித்தான் இருந்திருக்கு. உன்னை பர்ஸ்ட் டைம் அன்னிக்கு போட்டோ எடுக்கும்போது அப்படிதான் மூச்சு முட்டி போய் நின்னேன். அதுலயும் உன்னோட வெக்கம்.. அதுவும் என்கிட்டன்னு உணரும்போது வேற பீல் தங்கா..“ என்று அவன் பேசவே தொடங்கிவிட, தங்கமீனாளோ, கையில் இருக்கும் கடிதத்தை இறுக பற்றிக்கொண்டாள்.

“மனசுக்குள்ள உன்னோட வாழவே ஆரம்பிச்சுட்டேன் டி..” என்றவனின் ஆழ்ந்த குரல், அவளின் நெஞ்சை வெகு வேகமாய் நடுங்கச் செய்ய,

“எஸ்… நோ லிமிட்ஸ். ஆனா இந்த லிப் லாக்..” என்றவனின் பார்வை அவளின் இதழ் மீது படிய, அவளோ ‘பேசாதே…’ என்பதுபோல தலையை அசைக்க,

“இது மட்டும் சொல்லிக்கிறேன் டி..” என்றவன் அவளின் சம்மதம் கிடைக்கும் முன்னமே “இப்போ கூட இதோ அத்தனை கிஸ் என் பார்வையாள கொடுத்தேன். ஆனா நிஜத்துல நமக்கே நமக்குன்னு ஒரு நாள் வரும் இல்லையா.. கல்யாணம்.. அதோட நைட்..” என்றவன் சொல்லி நிறுத்த,

“போதும் மாமா..” என்று செவிகளை மூடிக்கொண்டவள், இமைகளையும் மூடிக்கொண்டாள்.

“கண்ண மூடிக்கோ. ஆனா நான் பேசுறத கேளு டி..” என, அவனது குரல் அவளை ஆட்டுவிக்கும் மந்திர கயிறாய் மாறிப்போனது.

செவியை பொத்திய கையை விலக்கிக்கொண்டவள், கண்களை மட்டும் திறக்கவில்லை. அவனை நேருக்கு நேராய் காண இப்போது அவளுக்கு அத்தைரியம் இல்லவே இல்லை.

“பர்ஸ்ட் கிஸ் எப்பவுமே ஸ்பெசல் இல்லையா.. கன்னத்துல, நெத்தியில, கைல கொடுக்கிறது எல்லாம் வேற. ஆனா.. நீயும் நானும் ஒண்ணுத்தான்னு உணர்த்தற ஒரு முத்தம் அது. நான் சொன்ன ஒன்னு தானே தங்கா..” என, உள்ளுக்குள் அவளது இதயத்தில் ஏதோ ஒன்று உடைப்பெடுத்தது.

“நமக்கே நமக்கான அந்த நைட்ல.. முதல் முறையா படபடத்து, கொஞ்சம் பயந்து, நானுமே உன்கிட்ட வெட்கப்பட்டு, அரைகுறையா தெரிஞ்சு, அடுத்து புரிஞ்சு, என்னவோ ஏதோன்னு பதறி, அவஸ்தையா, ஆசையா, ஆழமா ஒரு முத்தம் அன்னிக்கு கொடுக்கணும் டி. நம்மளோட இந்த காத்திருப்பு எல்லாம் அன்னிக்கு காதலா இன்னும் இன்னும் கூடிப்போகணும். நம்ம கூடுறது போல..” என்று சொல்லி நிறுத்த, அவளுக்கோ மூடிய கண்களின் வழியே கண்ணீரே வந்துவிட்டது.

இப்படியும் ஒருவன் காதலிப்பானா?!

செய்கிறானே..

மாமா..

ப்ரித்வி மாமா..

மெல்ல அவளின் இதழ்கள் முணுமுணுக்க, நெஞ்சம் விம்மிக்கொண்டு இருக்க, கண்களில் நீர் வழிய, முகமோ அவன்மீதான காதலிலும் அவன் அவள்மீது கொண்ட காதலின் ஆழம் புரிந்தும் விகசித்து புன்னகை பூத்து, அழுகையும் சிரிப்பும் மாறி மாறி போட்டி போட்டு அவனைப் பார்த்தவளோ தாளவே முடியாமல் “ஐ.. லவ் யூ சோ மச் மாமா..” என்று சொல்லியிருந்தாள்.