Advertisement

அதியனின் ஃபோன் அடிக்காமல் இருந்ததால் ஸனாவின் சந்தேகம் பொய்யாகியது.

ஆனால் அடுத்த நொடி அதியன் ஃபோனை எடுத்துப் பார்த்தான், போன் சைலன்ட் மோடில் இருந்தது.

ஸனா, அவன் ஃபோனை எடுத்ததும், ‘அப்ப இவன் தானா…?’என்ற கேள்வி எழ, ஒரு நொடி அவளிற்கு எந்த உணர்வும் தோன்றவில்லை.

ஆனால் ஃபோனை பார்த்தவன், எடுத்துப் பேசினான்.

ஸனா புருவத்தைச் நெளித்து தன் ஃபோனை பார்த்தாள், அது ரிங் போய் கொண்டிருந்தது.

‘அதியன் யாரிடம் பேசிட்டு இருக்கான்,
அப்ப இந்த நம்பர் அவன் இல்லைப் போல’ என்ற முடிவுக்கு வந்தவளின் மனதில் ஏனோ ஏமாற்றம் தெரிந்தது.

மனம் ‘அவன் நம்பர் இல்லனு தெரிஞ்சு நீ ஏன் ஏமாற்றமாக வருத்தப்படுற…?’ என்றது.

‘நான் ஒன்னும் வருத்தப்படல, கண்டுப்பிடிச்சுட்டேனு நினைத்தேன் ஆனா இல்லைனு தெரிந்ததும் வந்த ஏமாற்றம் அது’என்றாள்.

ஸனாவின் மனப்போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்க.

காரணமானவனோ, சமாளித்துக் கொண்டிருந்தான்.

ஆம்! அவனின் ஃபோன் ரிங் ஆனது, நார்மலாக அதியன் டிஸ்டர்ப்ன்ஸ் ஆகாமல் இருக்க சைலன்டில் போட்டு விடுவான் இன்றும் அப்பிடி தான்.

ஃபோன் ரிங் ஆக, யோசிக்காமல் எடுத்தவன் அது ஸனா என்றதும், மூளை அதட்டியது’அடேய்! அவ நீ தான் ANR னு செக் பண்றா’என்று அலார்ட் செய்தது.

‘ஆமால, என்ன பண்ண, ஆ! எடுத்துப் பேசிடுவோம் அட்டென்ட் செய்யாம என, ஹாய்! எஸ், ஐ ஹேவ் ஒன் மீட்டிங்.’என போனில் பேசினான்.

ஸனாவின் ரிங் கட் ஆனது. ஆனால் அவன் தொடர்ந்துப் பேச, ஸனா ஃபோனை எதிரில் இருந்த டேபிளில் வைத்தாள்.

அதன் பிறகே அதியன் ஃபோனை பாக்கெட்டில் போட்டான்.

‘ஷ்ப்பாபா என்னமா ஆக்ட் பண்ண வேண்டியது இருக்கு’என்று ஸனா பக்கம் திரும்பாமல் டைரக்டரிடம் பேச ஆரம்பித்தான்.

பரணி ஸனா அருகில் வந்தார்,”மேடம்! ஜூஸ் ஆர்டர் செய்றோம், என்ன ஜூஸ் வேணும்…? அப்பிடியே லன்ஞ் என்னனு சொல்லிட்டா சொல்லிடலாம் மேடம்”என்றார்.

“சார்! நான் உங்களுக்கு பொண்ணு வயசு, என்னைய ஏன் மேடமுனு கூப்புடுறீங்க…? ஸனானு கூப்புடுங்க, நான் போன தடவையே சொன்னேன்ல…”என்றாள் ஸனா.

“அப்பிடியில்லைமா, நீங்க பெரிய நடிகை அதான் சட்டுனு பேரு சொல்ல வரலை..”

“ஓகே! நான் உங்களை அங்கிளுனு கூப்புடுறேன், நீங்க என்னைய ஸனானு கூப்புடுங்க அங்கிள்”என்றாள் சிரித்தவாறு.

“ஓகேம்மா! உன் ஆசைப்படி கூப்புடுறேன் ஸனா, என்ன ஆர்டர் செய்யட்டும்..?”

“எல்லாருக்கும் சொல்வதையே ஆர்டர் பண்ணுங்க அங்கிள்..”

“சரிம்மா!”என்று கடைக்கார ஊழியரிடம் சொல்லி ஆர்டர் செய்தார்.

ஸனா பேசியதை கேட்டுக் கொண்டிருந்தான் அதியன் அவள் பக்கம் திரும்பாமலே.

அவன் மனதில் ஸனா ஒரு படி ஏறி இருந்தாள். பொதுவாக நடிகை என்ற பந்தா, பகட்டு இல்லாமல் சாதரணப் பேச்சு, பழக்கத்தை கொண்டிருந்த ஸனா அதியன் மனதில் ஆழம் பார்த்தாள்.

“மேடம்! நெக்ஸ்ட் ஷாட் ரெடி, புடவை மாத்திட்டு வந்தா, ஓகே பண்ணிடலாம்” என்றார் டைரக்டர்.

ஸனா, ராணியோடு உடை மாற்ற சென்றாள்.

“அக்கா! அந்த கடை ஓனர் நல்ல மாதிரியா தெரியுறார் இல்ல…?”

“யாரை சொல்ற….?”

“அதான் அந்த அதியன் சார்..”

“ஓ! உனக்கு முன்னாடியே தெரியுமா அவரை…?”

“இல்லையே! இப்ப தான் முதல் தடவைப் பாக்குறேன்…”

“அப்புறம் எப்பிடி அந்த வல்லவரு நல்லவரா தெரிஞ்சாரு…?”என்றாள் புடவையை கழட்டிக் கொண்டே, புது புடவையை கட்டுவதற்கு.

“ம்ம்ம்! இல்ல, அந்த பாரி சார் உங்களை அறிமுகப்படுத்தும் போது, சாதரணமாக ஹாய் சொல்லிட்டு திரும்பிட்டார். பொதுவா உங்க கிட்ட பேச சான்ஸ் கிடைக்குற ஆளை தான் பாத்திருக்கேன்… இவரு கொஞ்சம் ஜென்டில்மேன் போல…”

“பெரியக் கண்டுப்பிடிப்பு, எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க, அதுக்காக நல்லவங்கனு சொல்லிட முடியுமா.. நீ சீக்கிரம் சேரியை கட்டு..”என்றாள் ஸனா.

“ம்ம்ம்! அது என்னவோ உண்மை தான். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குனு யாருக்கு தெரியும்.. ஆனா இவரை பார்த்ததும் நல்லவரா தெரிந்தார். உங்களுக்கு இந்த மாதிரி ஒருத்தர் வந்தா சூப்பர் ஜோடியா இருக்கும் அக்கா..”என்று புடவையை மார்பில் போட்டு, பின் பன்னினாள் ராணி.

“உனக்கு வர  வர வாய் கொழுப்பு ஆகுது. நகரு, நான் நடிகை அவ்ளோ தான்”என்று கண்ணாடியைப் பார்த்து முகத்தை சரி செய்து வெளியில் சென்றாள் ஸனா.

***

அந்த புடவையில் ஷூட் செய்ய, ஸனா அழகாக போஸ் கொடுத்தாள், டைரக்டர் சொல்வதற்கு ஏற்ப.

அதை லேப் டாப்பில் பார்த்தப் படி அமர்ந்திருந்தான் அதியன்.

மனதில்’அழகிடி நீ, மேக் அப் இல்லாம இவ்வளவு அழகு முடியுமா…?’என்று அவளையே பார்த்தான்.

ஸனா ஷாட் முடிய “வெயிட் மேடம்! உட்காருங்க, நான் அதியன் சார் கிட்ட ஓகே யானு கேக்குறேன்”என்றார் டைரக்டர்.

“ஓகே சார்”என்று சற்று அருகில் தான் அமர்ந்திருந்தாள் ஸனா.

“சார்! ஓகே வா…?”

“யா! ஃபைன், நெக்ஸ்ட் சேரி பிரைடல் லுக் வேணும், நெற்றியில் கல்யாணம் ஆனவங்க மாதிரி  பொட்டு வச்சு எடுங்க”என்றான் அதியன்.

“சார்! அதுக்கு கல்யாண சீன் வைக்கனும், மாப்பிள்ளை கேரக்டர் வேணும்..”

“நோ! நோ! நாட் லைக் தட்,  கல்யாணம், ஃபங்சன்ஸ் ஹைடில் வரட்டும். மணப்பெண் மட்டும் ஃபோகஸில் வச்சு சேரியோடு காட்டுங்க…”

“ஓகே கிரேட்.. அதியன் சார் பேசாம உங்க கடை விளம்பரத்துக்கு நீங்களே நடிச்சுடலாம்.. நல்லா இமேஜின் செய்றீங்க இப்ப எல்லாம் அதானே ஃபேஷன்…”என்று சிரித்தார் டைரக்டர்.

“ஹஹஹ! நான் சேரி கட்டி விளம்பரம் செய்யவா…? மோர் ஓவர், எனக்கு இந்த ஆக்டிங், மேக் அப் ஃபீல்டு நாட் லைக். சோ ஐ ஆம் நாட் ட்ரை வென்எவர்.. திஸ் இஸ் மை பாயிண்ட் பிகாஸ் என் ப்ரொபஸன் வேற…”என்றான் சிம்பிளாக.

அதை கேட்ட ஸனாவிற்கு ஏனோ இடித்தது.. ‘அப்பனா இவனுக்கு ஆக்டிங் ஃபீல்டே புடிக்காது போல… அப்ப என்னையும் சுத்தமா புடிக்க வாய்ப்பில்லை இது தெரியாம அவன் தான் மெசேஜ் பண்றவனுக்கு டெஸ்ட் செய்யுமளவு போயிட்டேன்’என்ற சிந்தனை ஓடியது.

‘அச்சசோ! நான் பாட்டுக்கும் போன் பண்ணிட்டேன். அந்த ANR என்ன நினைப்பான். நான் அவன் கூடப் பேச தான் பண்ணினேனு நினைப்பானே… என்று’புலம்ப ஆரம்பித்தாள் அடுத்து.

பரணி அழைப்பதுக் கூட தெரியாமல்.

பரணி சற்று சத்தமாக அழைக்க, அதியன் திரும்பிப் பார்த்தான். ராணி”அக்கா!”என்றாள்.

ஸனா நினைவுலகு வர, பரணி எதிரில் நின்றார்.

“என்ன அங்கிள்…?”

“என்னம்மா ஆச்சு…? ஏதோ கனவில் இருக்க போல..”

“இல்ல அங்கிள், கொஞ்சம் டயர்டு வேறெதுவும் இல்லை. சொல்லுங்க…”

“இன்னும் ஒரு புடவை தான் ஸனா, ஆனா கொஞ்சம் காஸ்ட்லி, ரிச் பிரைடல் சாரி, உன் அசிஸ்டென்ட் பொண்ணுக்கிட்ட சொல்லி கேர்புல்லா மேனெஜ் பண்ணுங்க. ஏனா அது ரேர் பீஸ்மா…”என்றார்.

“ஓகே அங்கிள்! நோ ப்ராப்ளம் நான் பாத்துக்குறேன்..”

பரணி சேரியை பாக்ஸில் வைத்துக் கொடுத்தார்..

அதை வாங்கியவள் பத்திரமாக கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், டைரக்டர் மாற்ற சொல்லும் போது போகலாம் என்று..

அதியன் கூட டிஸ்கஸனில் இருந்தார் டைரக்டர்..

அந்த நேரத்தில் தான் நட்புப் பட்டாளத்தோடு வந்து நுழைந்தாள் மஞ்சரி.

மூன்றுத் தோழிகளோடு வந்தாள்.

அதியன் உள்ளே இருக்கான் என்று பணியாள் சொல்ல, ப்ரண்ட்ஸோடு வந்தாள் அங்கு.

“ஹாய் அதியன்”

அதியன் நிமிர்ந்துப் பார்த்தான். மஞ்சரியை கண்டதும் தலையை மட்டும் ஆட்டி”ஹாய்!”என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.

அதுவே மஞ்சரிக்கு இன்செல்டா போய் விட்டது தன் தோழிகள் முன்.

“ஹாய் அண்ணி! வாங்க உட்காருங்க, ஆட் ஷூட் போகுது அதான் அண்ணன் அந்த கிளிப்ஸ் பாத்துட்டு இருக்கார்”என்று அங்கிருந்த நாற்காலியை காட்டினான் பாரி.

“இட்ஸ் ஓகே பாரி..”என்று அமர்ந்தாள் தன் ப்ரண்ட்ஸோடு.

“என்ன ஷூட்…?”

“பிரைடல் சாரிஸ் ஆட் அண்ணி, ஹீரோயின் ஸனா மஸ்தூரா தான் பண்றாங்க, அதோ இருக்காங்க பாருங்க”என்றான் பாரி.

மஞ்சரி திரும்புவதற்குள் அவளின் தோழிகள்”வாட்! ஆக்டரிஸ் ஸனாவ”என்று எழுந்து அவளிடம் தாவினார்கள்.

மஞ்சரிற்கு கடுப்பாகியது,’எனக்கு துணைக்குக் கூட்டி வந்தால் இதுங்க பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பாத்த மாதிரி ஓடுதுங்க’ என்று முறைத்தாள்.

“ஹாய் மேம்.. ஹவ் ஆர் யு.. உங்க மூவி எல்லாம் ரொம்ப பிடிக்கும். நீங்க படத்தை விட நேரில் க்யூட்டா இருக்கீங்க, ஆட்டோகிராப் ப்ளீஸ்”என்றார்கள் அவர்கள்.

பாரி”வாங்க அண்ணி! இன்ட்ரோ கொடுக்குறேன்..”என்றான்.

அவளும் பாரியே  கேட்டதால் கொஞ்சம் கெத்தாக, திமிராக சென்றாள்.

“ஸனா மேடம்! இவங்க பேரு மஞ்சரி அதியன் அண்ணன் ஃபியான்ஸி.. ஜஸ்ட் அண்ணனை பார்க்க வந்து இருக்காங்க.”என்றான்.

“ஓ! ஹாய்”என்று கைக் கொடுத்தாள் ஸனா.

“ஹாய்!”என்றாள் மஞ்சரியும்.

தன் தோழிகளைப் பார்த்து முறைத்து
பாருங்க உங்களை மாதிரி தானாக போய் பேசவில்லை, நான் ஸ்பெஷல்    வி ஐ பி என்றாள் கண்களால்.

“கங்கிராட்ஸ் ஃபார் யுவர் மேரெஜ் லைஃப் மஞ்சரி”என்றாள் ஸனா.

“தேங்க்யூ.. ஆமா! இது தான் சேரிஸ் கலெக்ஸ்னா..?”

“ஆமா அண்ணி! மற்றது எல்லாம் கட்டியாச்சு, இன்னும் ஒரு புடவை தான் இருக்கு, இதோ இது தான். காஸ்ட்லி சிங்கிள் பீஸ். சோ கொஞ்சம் சேஃப்லி ஹேண்டில் லாஸ்ட்டா ஷூட்டுக்கு இருக்கு…”என்றான் பாரி.

“ஓ! ஓகே.. ஆனா ஸனா நீங்க ஏன் மேக் அப் போடாம டல்லா இருக்கீங்க…? இது தான் உங்க ஒரிஜினல் பேஸா..?” என்றாள் மஞ்சரி.

“ஆமா! மேக் அப் போட வேண்டாமுனு சொல்லிட்டாங்க, அதான்….”

அதியன் திரும்பிப் பார்த்தான் இருவர் பேசுவதையும்.

“யாரு சொன்னா…? இந்த சாரிஸ் கட்டி மேக் அப் இல்லாம நடிச்சா, எப்பிடி ரீச் ஆகும். பாருங்க உங்களை விட புடவை தான் சூப்பரா இருக்கு”

“ஹேய் மஞ்சு! ஸனா மேடம் மேக் அப்பே இல்லாம செம பியூட்டியா இருக்காங்கடி.”என்றாள் தோழி ஒருத்தி.

மஞ்சரி முறைத்து”எது இது தான் பியூட்டியா, காதில் ஒரு ஜிமிக்கி, கழுத்தில் குட்டிச் செயின்.. ஏதோ இறந்த வீட்டுக்குப் போயிட்டு வந்த முகம்.. இது தான் பியூட்டியா…?”என்றாள்.

அந்த தோழி வாயினைத் திறக்கவில்லை. அவள் கண்ணுக்கு அழகாக தெரிகிறது, ஆனா சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டாள் அதனால் அமைதியாகினாள் தோழி..

“அண்ணி! இது அண்ணன்யோட ஐடியா தான்.. “என்றான் பாரி.

“ஓ! யாரு ஐடியாவ இருந்தா என்ன…?”என்றாள் அசால்டாக.

“மஞ்சரி பாப்பா! அதியன் தம்பி புடவை தான் விளம்பரம் செய்யனும், நடிக்கும் ஆள் இல்லைனு இப்பிடி நடிக்கச் சொன்னார்”என்றார் பரணி.

“என்னது மஞ்சரி பாப்பாவ.. கால் மி மேடம்.. மிஸர் பரணி. யூ ஆர் வொர்க்கர் ஹியர்..”என்றாள் அதிகாரமாக.

அதுவரை அமைதியாக இருந்த அதியன்
“மஞ்சரி! அவரு வொர்க்கர் தான் ஆனா அப்பா மாதிரி உனக்கு அவர் உன் பேர் சொல்லி கூப்பிட்டால் தப்பில்லை” என்றான்.

“அதியன், இவரு இங்க வொர்க்கர் அவ்ளோதான். டோன்ட் பிகேவ் சென்டிமென்ட்.. ஹி இஸ் நாட் மை ரிலேசன் பெர்சன். ஜஸ்ட் வொர்க்கர்..”

“மஞ்சரி!”என்று கோபத்தில் அவள் பெயரை அழுத்தமாக உச்சரித்தான்.

“தம்பி! இருங்க, சாரி மேடம். நான் சைந்தவி பாப்பா மாதிரி நினைச்சு கூப்புட்டேன். என் மேல தான் தப்பு.. விடுங்க தம்பி”என்றார் பரணி.

அதியனும் அங்கு பிறர் இருக்க அமைதியானான்.

ஸனாவிற்கு பரணியை பார்க்க பாவமாக இருந்தது.

டைரக்டர் ஸனாவை ரெடி ஆக சொன்னார்.

ஸனா”சாரி! பேசிட்டு இருங்க வரேன்”என்று உள்ளே புடவை மாற்ற சென்றாள்.

“அக்கா! இந்த பொண்ணு தான் அந்த சாருக்கு ஜோடியா…?  கொடுமை இல்ல.. பாவம்…”என்றாள் ராணி.

“ம்ம்ம்! அவருக்கு இப்பிடி பட்ட பொண்ணுங்க தான் பிடிக்கும் போல. அவரு இஷ்டம் உனக்கென்ன.. “

“இல்ல அக்கா, உங்களை மாதிரி குணமான பொண்ணு கிடைச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும்..”

“ம்ம்ம்! என்னைய மாதிரியா, அவருக்கு ஆக்டிங் ஃபீல்டே புடிக்காதாம். ஏதோ தீண்ட தகாத மாறி பேசுறார். அதில் இருக்கும் என்னைய மாறி பொண்ணு நீ சொல்ற. ஓவரா  இல்லை உனக்கு..” என்று சிரித்தாள்.

“அடபோங்கக்கா! அவளும் அவ பேச்சும். நீங்க கூட தான் பெரிய நடிகை. எவ்வளவு சம்பாரிக்குறீங்க. அந்த பெரிய மனுசனை எவ்ளோ மரியாதையா பேசுறீங்க…?”

“குயின்! நான் எத்தனை கோடி சம்பாரிச்சாலும் நடிகை.. யூஸ் அன்ட் த்ரோ. ஆனா அவங்க இயற்கையான ரிச் பெர்சன்ஸ் பேச்சு எப்பிடி இருந்தா என்ன, கோல்டு ஸ்டேஜ்.. “என்றாள் புடவையை கழட்டிக் கொண்டே.

புது புடவையை எடுத்து மெதுவாக கட்டினாள் ஸனா.

கொஞ்சம் வெயிட்டாக இருந்தது..

எடுத்துக் கட்டுவதற்கு தொடங்கினாள் பார்த்து பார்த்து பொறுமையாக ராணி உதவியோடு.

“அக்கா! செம சூப்பரா இருக்கீங்க. நீங்க பேசாம இந்த புடவையை புக் பண்ணி வைங்க உங்க கல்யாணத்துக்கு இப்பவே…”

“ம்ம்ம்! நடக்காத ஒன்னுக்கு புக்கிங்கா..” என்று சிரித்தாள்.

“இது எவ்ளோ விலை அக்கா….?”

“மினிமம் லேக் தாண்டி தான் இருக்கும்”

“ம்ம்ம்! யாருக்கு கொடுத்து வச்சு இருக்கோ, சரி வாங்க போகலாம்”என்று இருவரும் வெளியில் சென்றனர்.

அவளைப் பார்த்த அனைவருமே வியந்தனர்.

அவ்வளவு அழகாக இருந்தாள் ஸனா.

“வாவ்! ஸனா மேடம் இப்பவே நீங்க கல்யாணத்திற்கு ரெடி ஆகிட்ட மாதிரி இருக்கு. ஜுவெல்ஸ் இல்லாமயே நீங்க செம அழகாக இருக்கீங்க”என்றாள் மஞ்சரி தோழி.

“தேங்க்ஸ்”என்று ஷூட்டுக்குப் போனாள்.

டைரக்டர்”ஸனா! இந்த குங்குமத்தை நெற்றியில் வச்சுடுங்க…”என்று கொடுத்தார்.

ஸனா”சார்! ஆனா கழுத்தில் தாலி இல்லாம இது என்ன கான்செப்ஸ்ட்” என்று கேட்டாள்.

“ஆமால, அதையே மறந்தாச்சு”என்று அதியனைப் பார்த்தான்.

“மஞ்சள் கயிறு தானே.. பாரி சாமி படத்தில் இருக்குமுல எடுத்துட்டு வா”என்றான் அதியன்.

பாரியும் சென்று எடுத்து வந்தான்.

மஞ்சளும், தாலிக் கயிறும் இருந்த பாக்கெட்டில் அதைப் பிரித்து மஞ்சள் வைத்துக் கட்டினர் உதவியாளர்கள்.

அதை வாங்கி டைரக்டர் கொடுக்க கழுத்தில் மாட்டிவிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து டைரக்டர் சொல்லும் போஸைக் கொடுத்து நடித்தாள் ஸனா.

அதியன் மனதில்’இப்ப எவ்வளவு கேஷ்வலாக தாலியை வாங்கிப் போட்டு போறா. ஆனா நேத்து அவ்வளவு எமஷோனலா பேசுனா….’என்று எண்ணினான்.

மஞ்சரிற்கு போர் அடித்தது.. “அதியன் லேட் ஆகுமா..?  தாத்தா உங்க கூட பேச தான் வரசொன்னார். ஆனா நீங்க இவ்வளவு பிஸியா இருக்கீங்க…?”

“சரி பேசு.. என்ன பேசனும்..”என்றான் உடனே.

“இப்பிடி கேட்டா எப்பிடி, நம்ம கல்யாணம் செய்யப் போறவங்க. தனியா போய் பேசலாம் அதியன்..”

“இந்த ஷூட் முடியட்டும்..”என்றான் பொறுமையாக, தான் ஏதாவது பேசினால் அது தாத்தாவிற்கு தான் கெட்டப் பெயராகும்  என்பதால்.

ஸனா ஷூட் முடிந்தது..

மஞ்சரி அதியனின் அருகில் நின்றாள். லேப் டாப்பில் ஸனா ஃபைனல் புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

டைரக்டர் ஸனாவையும் அழைத்துக் காட்டினார்.

மஞ்சரி”அதியன்! உங்க ஐடியா சூப்பர் தான். மேக் அப் இல்லாம ஸனா நடித்ததால் புடவை தான் பளிச்சென்று தெரியுது. இந்த புடவை சூப்பர். நம்ம நிச்சயத்திற்கு புக் பண்ணிடலாம் அதியன். ஆனா இந்த புடவை வேணாம்.  இதே மாதிரி ஆர்டர் செய்யலாம்.” என்றாள்.

“இந்த புடவைக்கு என்ன அண்ணி…?”என்று கேட்டான் பாரி.

“இது இவங்க யூஸ் பண்ணிட்டாங்க.. சோ ஐ வான்ட் நியூ ஒன்..”

” நிச்சயத் தேதிக்கு எல்லாம் புது ஆர்டர் வராது மேடம்”என்றார் பரணி ரியால்டியை.

“ஓ! நீங்க ஆர்டர் நம்பரை கொடுங்க, நான் அப்பா கிட்ட கொடுத்து நிச்சயத்திற்கு ரெடிப் பண்ணிக்குறேன் மிஸ்டர் பரணி”என்றாள்.

“அங்கிள்! நோ ப்ராப்ளம் ஆர்டர் பண்ணிடலாம்”என்றான் அதியன்.

“தேங்க்ஸ் அதியன்..”என்று அவனின் அருகில் நெருங்கிச் சிரித்தாள்.

அதை பார்த்த ஸனாவிற்கு ஏனோ ஒரு உணர்வு ஏற்பட்டது.. பின் ‘அவங்க மேரெஜ் பண்ணிக்கப் போறாங்க’ என்று சமாதானம் ஆனாள்.

பிறகு புடவையை மாற்றி விட்டு, மடித்து அதே பாக்ஸில் வைத்து பரணியிடம் கொடுத்தாள்.

பரணி அந்த  பாக்ஸை ஸனாவிடமே நீட்டினார்.

“இது…?”என்றாள் புரியாமல் ஸனா.

“திஸ் இஸ் ஃபார் நவநீ சில்க்ஸின் காம்பிமென்ட்”என்றார்.

ஸனா”இது எல்லாம் எதுக்கு..?”என்று தடுமாறினாள்.

“ஆக்ஸ்வெலி! இது பிரைடல் சேரி தான், உங்களுக்கு காம்பிளிமென்ட் கூட அட்வடைஸ்மென்டு தான். நீங்க நிறைய பங்கஷன்ஸ் போவீங்க சோ இது பப்ளிசிட்டி தான், வாங்கிக்கோங்க..” என்றான் பாரி.

“பட்! இது ரேர் சேரி டிசைன் சொன்னீங்க, இதை எனக்கு காம்ப்ளிமென்ட் கொடுத்தா எப்பிடி. வேணுனா வேற சேரி கொடுங்க நோ ப்ராப்ளம்..”

“ஸனாம்மா! போன தடவையே உங்கங்களுக்கு காம்பிளிமென்ட் கொடுத்திருக்கனும். அப்ப உங்க வீட்டிற்கு அனுப்பலாமுனு நினைச்சி இருந்தோம். பட் ரீ ஷூட் இருந்ததால் இப்ப நேரில் கொடுத்துடலாமுனு நான் தான் சொன்னேன், வாங்கிகோங்க..”

“அது இல்ல அங்கிள்”என்று இழுத்தாள் ஸனா.

“ஸி! திஸ் இஸ் காம்ப்ளிமென்ட் ஒன்லி, உங்களுக்கு சேலரி பேசலை செகண்ட் டைம். இப் யூ ஆர் நாட் இன்ட்ரெஸ்ட் காம்ப்ளிமென்ட் சேலரிக்கு யூஸ்..”

“நான் காம்ளிமென்ட் வாங்குறது உண்டு மிஸ்டர் அதியன், பட் இப்பிடி காஸ்ட்லி காம்ளிமென்ட் நாட் இன்ட்ரெஸ்ட்.. தேங்க்ஸ். ஆப்டர் தட் நான் சேலரி வேணாமுனு தான் பேசலை. ரீ ஷூட் தானே அதுவும் உங்க கான்செப்ட் புடிச்சு இருந்ததால்… “

“நோ ப்ராப்ளம், பட் நாங்க சும்மா ஆட் ஷூட் எடுக்க முடியாது.. இப் யு வான்ட் சேலரி கெட் இட் அதர்வைஸ் டேக் திஸ் சேரி..”என்றான் அதியன் சற்று கடுமையாக.

ஸனாவிற்கு கோபம் வந்தது, “நோ ப்ராப்ளம், ராணி வாங்கிக்கோ”என்று பரணியிடம் சொல்லிட்டு நடந்தாள்.

அதியன் தெரிந்து தான் சொன்னான். சம்பளம் இவ்வளவு என்று ஸனா கேட்க மாட்டாள். சோ புடவையை வாங்கிட்டு போயிடுவாள் என்று.

இந்த புடவை கொடுக்கும் ஐடியா பரணி கூறியது தான். ஆனால் சேரி செலக்ட் செய்தது அதியன் தான்..

அதற்கு அவன் பாரி மற்றும் பரணியிடம் சொன்ன காரணம் பப்ளிசிட்டி. ஆனால் உண்மை அவளிற்கு அந்த புடவை பொருத்தமாக இருந்ததால்.

ஸனா காரில் ஏறி திரும்ப.  மஞ்சரி அதியனோடு முன் பக்கம் வந்தாள். இருவரும் அருகருகே நின்று பேச,  காரில் அமர்ந்தவாறு பார்த்த ஸனாவிற்கு ஏதோ ஏக்கமாக இருந்தது.

அதியனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் கூலிங் கிளாஸ் வழியே, ஆனால் மஞ்சரியிடம் தலை ஆட்டிக் கொண்டே..

காரில் சென்ற ஸனாவிற்கு ஒரே குழப்பம் தாலி கையில் கிடைத்திருக்கு. கல்யாணப்புடவைப் போல் ஒன்னு கிப்டா வந்திருக்கு.  இது எல்லாம் எதற்கு…?

அதியனவள் அடுத்து…

Advertisement