Advertisement

காலையில் கண் விழித்தவள் இரவினை மறந்த நிலையில் இருந்தாள். ஆனால் கையில் ஏதோ உறுத்த, கையைத் தூக்கி பார்த்தவள் நினைவில் இரவின் நிகழ்வுகள் வரிசையாகியது.

தாலியைத் தூக்கிப் பிடித்தப்படி அமர்ந்திருந்தவள் மனம் அழுத்தத்தில் தத்தளித்தது.

‘தாலியை கிப்டா கொடுத்து இருக்கான், யாருடா நீ…? ஏன் என் கூட விளையாடுற…?’என நொந்தவாறு தன்னை தானே கேட்டுக் கொண்டாள்.

மனம்’இங்க பாரு ஸனா! தேவை இல்லாம என்னைப் போட்டு அலட்டாத, உன்னைய மீறி நான் என்ன செய்யப் போறேன், போய் அடுத்த வேலையைப் பாரு, ஒரு மாசம் முடியும் போது, இந்த கிப்டை தூக்கி அவன் மூஞ்சில் போடு, இல்ல புடிக்கலையா தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு போ, யாருனே தெரியாத ஒருத்தனுக்காக ஏன் ஃபீல் பண்ணி ஃப்ரஷர் ஆகுற’என்றது.

அந்த நேரம் அதியன் மெசேஜ் வர, எடுத்துப் பார்த்தாள்.

“சாரி மஸ்து! ப்ரோபஸ் பண்ணனும் என்ற எண்ணத்தில் மட்டும் தான் அங்க வந்தேன், மத்தப்படி வேறெதுவும் இல்லை, அது தான் என்னோட கிப்ட், உனக்கு கண்டிப்பா கோபம் வரும். இப்பையும் சொல்றேன் இன்னும் மூன்றே வாரங்கள் தான். இது எல்லாமே எனக்கு ஒரு வாய்ப்பாக தான் நான் நினைக்குறேன். ஒரு மாசம் முடிஞ்சதும் உனக்கு புடிக்கலைனா ஐ வில் லீவ் ப்ரம் யு. டோன்ட் வொரி.. பட் நவ் யு டோன்ட் ஃபீல் பெர்சனலி… ஐ ஆம் நாட் ஹர்ட் யு… பட் ஐ லவ் யு…”என்று அனுப்பி இருந்தான்.

‘ஸனா நீ என்ன இத்தனை பலவீனமானவளா….? இல்லல. அப்புறம் ஏன் ஃபீல் பண்ற, டேக் இட் ஈஸி…’என்று ஒரு முடிவு எடுத்தாள் மனதில்.

அவளிற்கு அதுவே சரி எனப்பட்டது. தாலியை தூக்கிப் போட போக, ஆனால் அதற்குள் ஃபோன் அடித்தது, அது அஜி தான்.

தாலியைத் தலையணைக் கீழ் போட்டவள், போனை எடுத்துப் பேசினாள்.

“ஹலோ!”

“ஸனா! ரெடியாகிடு, நான் ராணியை வரச் சொல்லி இருக்கேன். இங்க அச்சுக்கு ஃபீவர்டி நான் வர முடியாது, அவவை தனியா விட்டு. ராணி இன்னைக்கு ப்ரீ தான்”என்றாள் அஜி.

“நோ ப்ராப்ளம் அஜி! ஐ வில் மேனெஜ். யு கேரி ஆன் அச்சு…”என்று போனை வைத்துவிட்டு, நவநீ சில்க்ஸ் ரீ ஷூட்டுக்கு கிளம்பினாள்.

ராணி வந்து காத்திருந்தாள்.

ஸனா கிளம்பி வர, “ஹாய் அக்கா, அஜி அக்கா போன் பண்ணி சொன்னதும் கிளம்பிட்டேன். பொண்ணுக்கும் லீவ் தானே. ஹஸ்பேண்ட் வீட்டில் இருக்கார். புடவை கடையில யாருக்கு தான் புடிக்காது. போகலாம் வாங்க. ஆனா அக்கா ஷூட் முடிஞ்சு அங்க ஒரு பர்சேஸ் பண்ணிட்டு தான் வரோம். ஏனா என் வெட்டிங் டே வருது. நீங்க தான் சூஸ் பண்ணனும்..”என்றாள் ராணி.

“ஓ! சூப்பர். கண்டிப்பா குயின், பர்சேஸ் போட்டுடலாம். நானே கிப்ட் பண்ணிடுறேன்..”

“நோ அக்கா! என் வீட்டுக்காரர் பணம் கொடுத்துட்டார். மனுசன் அது எல்லாம் பக்காவ செய்வார். புடிச்சதை எடுக்க சொல்லி. சோ யு ஆர் செலக்ஷன் ஒன்லி…”

“ம்ம்ம்! ஹஸ்பேண்ட் வாங்கி தர சந்தோஷம் முகத்தில் டால் அடிக்குது…” என்று நக்கல் அடித்தாள் ஸனா.

“இல்லையா அப்புறம், அவரும் நானும் லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணினோம். அந்த காதல் மாறவில்லை அக்கா, ஆனா சண்டை மட்டும் புதுசு புதுசா வருது. பட் அவரே பணம் கொடுத்து புடவை வாங்கிக்க சொன்னது அந்த சண்டைக்கு எல்லாம் பனிக்கட்டி வச்ச மாதிரி ஆச்சு…”என்று சிரித்தாள்.

“ம்ம்ம்! இது தான் மாங்கல்ய மகிமையோ, நான் நடிச்ச ஒரு படத்தில் வர சீன் மாதிரி இருக்கு…”

“அக்கா! எல்லாம் ரியல் லைஃப் கதை தான். தாலினு ஒன்னு கட்டி உரிமையாகிட்டா அதோட பவர் என்ன வேணாலும் செய்யும். காதலை அதிகமாக உருவாக்கும். இல்ல அழிக்கவும் செய்யும். என் விஷயத்தில் காதலை வளர தான் செஞ்சிருக்கு.. ஒவ்வொருத்தர் வாழ்க்கைக்கும் வித்தியாசம் அக்கா…”

“ஹேப்பியா இரு குயின்.”

“அக்கா! நீங்களும் இந்த மாதிரி புருசன், குழந்தைகளுனு வாழுவீங்க.. எனக்கு தோணுது. நம்ம கலாச்சாரத் தாலி உங்க வாழ்க்கையில் காதலை உருவாக்கும் கண்டிப்பா”என்றாள் ராணி.

ஸனா மனதில் அதியன் கொடுத்த தாலி தான் வந்து நின்றது.

இதுவரை அஜியிடம் கூட சொல்லவில்லை. அதனால் ராணியிடம் சொல்லாமல் மறைத்தாள் அதியன் பற்றி.

“பார்ப்போம் குயின்! நீ சொல்ற தாலி என்னோட மதத்தில் இல்லையே, நோ மாங்கல்ய மகிமை…”என்று சிரித்தாள்.

“அக்கா! எந்த மதமா இருந்தா என்ன..? தாலி முறை தான் வேறுப்படும் ஆனா கல்யாணம், புருசன், பிள்ளைங்க ஒன்னு தானே. யாருக்குத் தெரியும் நீங்க மஞ்ச கயிற்றால் கட்டும் தாலியை தான் கழுத்தில் சுமக்கப் போறீங்களோ என்னவோ…?”என்று கேட்டாள்.

“நீ பேசியே டைம் ஆக்கிடுவ, முதலில் வா போகலாம்”என்று பேச்சினை நிறுத்திவிட்டு கிளம்பினர்.

ஆனால் ராணி சொன்னது ஸனா காதில் ஒலித்தப்படி இருந்தது.

****

பட்டுப் புடவையில் நகை இல்லாத அலங்காரத்தோடு ஸனா ரெடி ஆனாள்.

“என்ன அக்கா நீங்க சுத்தமா மேக் அப் போடலை, எனக்கு வேலையே வைக்கல…”என்று கேட்டாள் ராணி.

ஸனா முதல் ஷூட்டிங் பத்தி சொல்லி, இப்ப நடப்பதையும் கூறினாள்.

“இது என்னக்கா புதுசா இருக்கு, ஏதாவது படமுனா கேரக்டர்காக மேக் அப் இல்லாம நடிக்கலாம்.. ஆனா இது புடவைக் கடை விளம்பரம் மேக் அப் இல்லாமயா…?”

“ம்ம்ம்! எனக்கு கூட இது புடிச்சு இருக்கு குயின். பாரு இப்ப நான் நானா இருக்கெனா..?”

“அக்கா! நீங்க அழகு. மேக் அப் இல்லாமயே நீங்க டூ பியூட்டி. இப்பிடி நடிச்சாலும் எல்லாரும் உங்களை தான் பாப்பாங்கனு அந்த எம் டி க்கு தெரியலை” என்று சிரித்தாள்.

ஸனாவும் சிரித்தாள்.

ஆட் டேரக்டர்”மேடம் ரெடியா…?”என்றார்.

“எஸ்!”என்று எழுந்து வந்தாள்.

மணப்பெண் புடவையில் மிக அழகாக இருந்தாள் ஸனா.

இயற்கையில் வெண்மை நிறம் கொண்ட ஸனா, பொட்டு வைக்காமல் வளர்ந்ததால் அவளுக்கு அது பிளஸ் தான். சிலருக்கு பொட்டு வைத்து பழக சட்டுனு இல்லாமல் டல்லாகும்.

ஸனாவிற்கு சிறிய அளவில் ஒரு குங்குமப் பொட்டு மட்டுமே வைத்தாள் ராணி.

தலையை லேசாக இடையில் பின்னி, பின்னால் ப்ரீகேர் ஸ்டைல் விட, முடிகள் படர்ந்து இருந்தது.

சிங்கிள் பிலீட்ஸ், பின் பண்ணி என மாறி மாறி அனைத்து போஸ்ஸிலும் வீடியோ எடுத்தனர். டயலாக் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று.

ஆட் டைரக்டர் பரணி மற்றும் பாரியிடம்
“அதியன் சாரை வரச்சொல்லிடுங்க, அவர் நேரில் வந்து செக் பண்ணட்டும். ஏதாவது கரெக்ஸ்னா மேடம் இருக்கும் போதே பண்ணிடலாம்”என்றார்.

பாரிக்கு சரி எனப்பட, அதியனிற்கு கால் செய்தான்.

அதியன் ஸனாவிற்கு காலையில் மெசேஜ் அனுப்பிவிட்டு, அவளோட நினைவிலே இருந்தான். அவளோட முகத்தைப் பார்க்கத் தோன்றியது, இரவு நடந்ததில் எந்தளவு மாறி இருக்காள் என்று பார்க்க ஆர்வமாக, ஷூட்டிங் கிளம்பினான்.

அந்த நேரத்தில் தான் பாரி கால் செய்தது.

நவநீதத்திடம் சொல்லிவிட்டுக் கிளம்ப போக,

“இன்னைக்கு மஞ்சரியை உன்னைய பார்க்க வர சொல்றதா சொன்னார் அவ அப்பா அதியா”என்றார் நவநீ.

“தாத்தா! எனக்கு இன்னைக்கு வொர்க் இருக்கு, ஆட் ஷூட் தான் போறேன்..”

“ஓ! அப்ப என்ன..? நான் அந்த பொண்ணை அங்க வர சொல்றேன், அப்பிடியே நம்ம கடையை சுத்திக் காட்டி பேசிட்டு இருங்க. ஆட் ஷுட்க்கு தான் பாரி இருக்கானே, நீ ஃபைனல் செக் பண்ணிடு…”என்றார்.

இதை கேட்ட தேவி மனதில்”என் மகன் பாரி தான் வேலைக்காரன் இவங்களுக்கு…”என்று நொந்தார்.

அதியனிற்கு மறுக்க முடியவில்லை, “ஓகே தாத்தா”என்று  சொல்லிவிட்டு கிளம்பினான்.

மஞ்சரி வரப் போறதை அதியன் மூளையில் ஏற்றிக்கொள்ளவில்லை.

***

புடவைகள் மாற்றி ஓரளவு ஷூட் முடிந்த நிலையில், அதியனிற்காக காத்திருந்தனர்.

கடைசி இருப் புடவை இருந்தது. இதுவரை எடுத்ததில் விமர்சனங்கள் பார்த்துவிட்டு அதை எப்பிடி கட்டி எடுப்பதென்று முடிவுப் பண்ணலாம் என டைரக்டர் வெயிட் செய்தார்.

அது ஷூட்டிங் ஸ்பாட் இல்லை, கடை அன்று லீவ் விட்டாச்சு.

அதனால் நடு போர்ஷனில் செட் போட்டு ஷூட் செய்தனர்.

ஸனா ஒரு பக்கம் சேர் போட்டு அமர்ந்து ராணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

பாரி, பரணி, டைரக்டர் என இருந்தனர் மறுப்பக்கம்.

கடை ஊழியர்கள் சிலர் உதவிக்கென்று இருந்தனர்.

அதியன் வர, கடை ஊழியர்கள் எழுந்து நின்றனர்.

பரணி, டைரக்டர் எழுந்து நிற்க, பாரி மெதுவாக”ஓ காட்! எவ்ளோ நேரம் வெயிட்டிங் கம் ப்ரோ…”என்றான்.

அதியன் கடையின் ஊழியர்களுக்கு தலையை ஆட்டி விட்டு, நேராக பாரியிடம் திரும்பினான்.

வரும் வழியில் மஞ்சரி கால் பண்ணி அவள் வருவதை சொல்ல, புடிக்கலை என்றாலும் சரி என்று ஃபோனை வைத்தான். அவனிற்கு ஏனோ கடுப்பாக அதே முகத்தோடு வந்தான்.

“ஹாய்!”என்றான் பொதுவாக. ஸனா பக்கம் திரும்பவே இல்லை.

“ஹாய் ANR, ஹவ் ஆர் யு..?”என்றார் டைரக்டர்.

அதுவரை அதியன் நுழைந்தது முதல் அவனை பார்த்துக் கொண்டு இருந்த ஸனா, அன்று ஸ்டேஜில் பார்த்த அதே மிடுக்கோடு இருப்பதாக நினைத்தாள்.

முகத்தில் ஒரு சிரிப்புக் கூட இல்லை, ஆனால் வசீகரமாக இருந்தான். பார்த்தவள் ‘ச்சே! ஏதோ படத்தில் என்ட்ரி ஆகுற ஹீரோவைப் பார்க்குற மாதிரி சைட் அடிக்குறேன். லூசாடி நீ.?’என்று தன்னை கடிந்தவள் காதில், அந்த பெயர் “ANR” என்று விழ. நிகழ் உலகிற்கு வந்து அதிர்ச்சியானாள்.

ஆனால் அதியன் அதிரவில்லை ஏனென்றால் அவன் தான் மஞ்சரி வரப்போற கடுப்பில் இருந்தானே.

“ஹாய்! க்ளாட் டு மீட் யு.. ஹவ் இஸ் கோயிங் ஷூட்…”என்றான் கேஷ்வலாக.

“யா! கமிங் ஃபைன். பட் யு வில் செக். பேலண்ட்ஸ்டு டு சாரிஸ் இருக்கு, நீங்க சொல்ற மாதிரி ஷூட் செய்யலாம்.”என்றார் அவர்.

வீடியோ பார்க்க ஆரம்பித்தவன் மண்டையில் அப்போது தான் ஆணி அடித்தது, ஸனா பின் பக்கம் அமர்ந்திருப்பதும். தன் பெயரை ANR என்று டைரக்டர் அழைத்ததும்.

அதியனிற்கு பின்னால் திரும்பாமலே தன் முதுகை ஸனாவின் பார்வை துளையிடுவது தெரிந்தது.

‘என்ன செய்வது.. எப்பிடி அவளை டைவர்ட் செய்வது’என்று யோசித்தான்.

வீடியோவைப் பார்த்தவன் அவள் அழகில் மயங்கி தான் போனான் மேக் அப் இல்லாமல் இத்தனை அழகியா நீ என்று….

டைரக்டர்”சார் ஓகேவா…?”என்றார். 

“ம்ம்ம்! பேலன்ட்ஸ்டு டு சாரிஸ் வில் வியர் அன்ட் ஷூட். பட் லெப்ட் சிங்கிள் பிலீட்ஸ். இட்ஸ் நைஸ் ஃபார் சாரிஸ்”என்றவன் மனதில் மஸ்துவும் சூப்பர் அதுல என்றான்.

பாரி”அண்ணா! ஸனா மேடம் வெயிட்டிங் ஒரு ஹாய் சொல்லு”என்றான்.

அப்போது தான் பார்ப்பது போல். “ஓ!” என்று திரும்பியவன், முகத்தில் எந்த ஒரு நிலையையும் காட்டிக்கொள்ளாமல், துளியளவு சிரிப்பு இல்லாமல், ஸனாவின் கண்களை மட்டுமே பார்த்து”ஹாய்!”என்றான் ஒற்றை வார்த்தையில்.

அதுவரை அவன் மேல் குழப்பத்தில் இருந்த ஸனா சட்டென்று எழுந்து அவனையேப் பார்த்து”ஹாய்”என்றாள் மெதுவாக.

அவனின் பார்வை அவள் விழிகளில் ஊடுருவி அவளை மிஸ்மரிசம் செய்தது.

அப்பிடியே நின்றாள், ஆனால் அதியன் திரும்பி டைரக்டரிடம் பேச ஆரம்பித்தான்.

ஸனாவிற்கு ஒரே குழப்பம், ‘இவனா அது..? வாய்ப்பே இல்லை.. அந்த குரல் ஹஸ்கி குரல் அதே நேரம் ஒரு மாதிரி ஷாப்ட் வே.. இவன் ரப் வே.. ஆனா இவன் பார்வை…?’என்று குழம்ப, ஆனால் ஸனா மனதிற்கு “ANR”என்பதை தவிர எந்த ஒற்றுமையும் தெரியவில்லை.

ஏதோ யோசனை வர, ஃபோனை எடுத்து நம்பர் டையல் செய்தாள். அது ரிங் போனது, ஆனால் எடுக்கவில்லை.

அதியன் ஃபோன் ரிங் ஆகவில்லை.

அதியனவள் அடுத்து…

Advertisement