Advertisement

தினமும் அதியனின் குறுஞ்செய்திகள் தொடர்ந்தது.

ஸனா கண்டுக்கொள்ளாமல் இருந்தாள். ‘ஒரு மாதம் தானே, என் மனசில் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு போக வேண்டியது தான்’என்ற எண்ணம் தோன்றியதால்.

ஆனால் அதியன் மெசேஜ் தான் அவளை படுத்தியது தினமும்.

ஸனா ரிப்ளே பண்ண வில்லை என்றால் உடனே அதியன் அவளை வம்பிழுப்பான், “என் மேல ஏதோ மேக்னெட் லுக் வந்துவிட்டது போல அதான் நாட் ரிப்ளே” என்பான்.

ஸனா கடுப்பாகி, “அது எல்லாம் ஒரு மண்ணும் இல்லை, ஒரு மாசம் முடிஞ்சு ஒன்னுமில்லைனு ஒரேதா சொல்லலாமேனு இருந்தேன்”என்பாள்.

அது அப்பிடியே உரையாடலாக மாறும், அதியன் “ஐ லவ் யு, யு ஆர் மை ஸ்பெஷல், ஐ லவ் யுவர் ஐஸ்…”என்ற காதல் டயலாக்குகளை அடித்து விடுவான்.

ஸனா மனதிற்கு அது எல்லாமே கேட்ட டயலாக்குகள் என்பதால் பெரிதாக ஈர்ப்பில்லை.

ஒரு நாள்”மஸ்து! நான் அனுப்புற மெசேஜ் எல்லாமே பயங்கர லவ் டயலாக்ஸ் தானே.. ஆனா உனக்கு போர் அடிக்குது கரெக்டா…?”என்று கேட்டான்.

“பரவாயில்லை கண்டிப்பிடிச்சுட்டீங்க….”

“ஏன் கண்டுப்பிடிக்க மாட்டேன், இது எல்லாமே நீ நடிச்ச படங்களில் ஹீரோஸ் சொன்னது தான்…”

“ஓ! அதான் கேட்ட டயலாக்கஸா இருந்ததா…?”

“ஹஹஹஹ! இதை எப்பிடி நீ கேட்டு படத்தில் லவ் பண்ண…?”

“ம்ம்ம்! நான் லவ் பண்ணல, அது நடிப்பு. லவ் பண்ணதா நடிச்சேன்..”

“அப்ப நான் அந்த டயலாக்ஸ் சொல்லும் போதும் லவ் பண்ற மாதிரி நடிச்சுடு…”

“ஹலோ! ஆர் யு மேட்..? நம்ம என்ன படத்தில் நடிக்குற ஹீரோ, ஹீரோயினா…..? திஸ் இஸ் ரியல் லைஃப்..”என்று ஆங்கிரி ஸ்மைலிப் போட்டாள்.

“அப்ப நான் என்னோட ஸ்டைலில் ப்ரோபோஸ் பண்ணவா……?”

ஸனா எதுவும் அனுப்பவில்லை.

“ஓகே! மௌனம் சம்மதம்.. நாளைக்குப் பாரு.”என்று மெசேஜை கட் பண்ணி குட் நைட் அனுப்பினான்.

ஸனாவிற்கு ஒரு எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை தான்.

அடுத்த நாள் ஃபோனையே பார்த்துக் கொண்டு இருந்தாள், கடந்த ஆறு நாட்களாக சினிமா டயலாக்ஸா அனுப்பியவன் காலையில் இருந்து எதுவுமே அனுப்பவில்லை.

ஸனா மனதில்’இவன் என்ன ப்ரோபோஸ் பண்றேனு சொல்லிட்டு ஆளையே காணும்’என்று வாட்ஸ் ஆப்பை திறந்து திறந்துப் பார்த்தாள்.

இரவு ஆகியது…

நாளை ஞாயிறு வேறு.

ஸனாவின் ஷெடியுல் படி அதியன் கடை ஆட் ரீ ஷூட் இருந்தது நாளை.

ஸனா மொபைலையே பார்த்தாள், அதியன் மெசேஜ் வரவே இல்லை.

“சரி தூங்குவோம் நாளைக்கு நம்ம வேலையை பார்க்க வேண்டும்”என தூங்க ரெடியானாள்.

***

நைட் லேம்பை எரியவிட்டு ஸனா தூங்க சென்றாள்.

மெல்லிய வெளிச்சத்தில் தனிமையில் மனதில் பல யோசனைகளோடு படுத்திருந்தாள்.

‘ஏன் அவன் மெசேஜ் பண்ணவில்லை, இன்னைக்கு ப்ரோபோஸ் பண்றேனு சொன்னானே’என்று எண்ணியவளிடம் அவள் மனம் கேட்டது
‘அவன் ப்ரோபஸ் பண்ணா ஓகே சொல்ல போறீயா என்ன…..?’என்று.

‘இல்ல’

‘அப்புறம் எதுக்கு இந்த எதிர்ப்பார்ப்பு..?’

‘சும்மா தான்.. ‘என்று தன் மனதை முறைத்தாள்.

****

சரியாக மணி பன்னிரெண்டு ஆக சில நிமிடம் இருந்தது..

ஸனா நல்ல தூக்கத்தில் இருந்தாள்.

“ஹாய் மஸ்து! ஐ வான்ட் டு யுவர் லவ். நாட் ஒன்லி லவ், ஐ வான்ட் மஸ்தூரா வித் லவ். ப்ளீஸ் ட்ரஸ்ட் மி மஸ்து, எனக்கு நீ மஸ்து அவ்ளோ தான். அதுக்கு மேல நீ ஸனா மஸ்தூரா நடிகை இது எல்லாமே எனக்கு தேவையில்லை, உன்னோட பாஸ்ட்..? ஐ டோன்ட் ஹேர் அபௌட் இட், நான்…. நான் தான் ANR”என்ற குரல் மட்டுமே கேட்டது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஸனாவிற்கு.

முதலில் புரியாத ஸனா.. ‘கனவில் வந்து ப்ரோபஸ் பண்றானே’என்று கண்களை திறக்க முடியாத அளவிற்கு நித்திரையில் இருந்தவளின் கன்னத்தில் முத்தம் வைத்த ஈரத்தோடு சத்தம் கேட்க.

ஏதோ உணர்வு வர, கண்களை முழித்தாள் முடியவில்லை.

விழிகள் கட்டப்பட்டு இருந்தது.

எழுந்தமர்ந்தவள். “ஏய் யாரு நீ….?”என்று வேகமாக கேட்டாள்.

அவளின் வாயை மூடிய அதியன்.

“உஷ்ஷ்ஷ்ஷ்! டோன்ட் ஷவுட் மஸ்து. நான் ப்ரோபஸ் பண்ண தான் வந்தேன். பண்ணிட்டேன் சத்தம் இல்லாம போயிடுவேன்”என்று மெதுவாக ஹஸ்கி வாய்சில் பேசினான், குரல் தெரியாமல் இருக்க,  இதுவரையும் அந்த குரலில் தான் பேசினான்.

அதனால் தான ஸனாவிற்கு அது கனவாக இருந்த உணர்வு தெரிந்தது.

“ம்ம்ம்ம் உம்ம்ம்”என்று முரண்டுப் பிடித்தாள் ஸனா, வாயில் இருந்த கையை எடுக்க.

“இங்க பாரு, நீ என்னைய பாக்க முடியாது, நான் கிளம்புறேன் கத்தாத இப்ப கத்தினா உனக்கு தான் பிரச்சனை நான் தப்பிச்சுடுவேன், அப்புறம் நாளைக்குப் பேப்பரில் கிசுகிசு வந்துடும்,  சரியா இன்னைக்கு முடியப் போற நேரத்தில் ப்ரோபஸ் பண்ணிட்டேன், ஓகே பை”என்று அவ கன்னத்தில் மறுபடியும் முத்தம் வைத்தான். மணி பன்னிரெண்டு மணியை அடித்தது.

விலகப் போனவன்”மஸ்து! இது படம் இல்லை, நான் ஹீரோ இல்லை. நீ ஹீரோயின் இல்லை. இட்ஸ் ரியல்.. அன்டர்சேண்ட்…”என்று அவளை விட்டு நகர்ந்தான்.

ஸனா அவசரமாக கட்டை அவிழ்க்க, அது முடியாமல் சிறிது நேரம் சென்றே அவிழ்த்தாள்.

இருளாக இருந்தது, நைட் லேம்ப் ஆப் செய்திருக்கான். எழுந்து லைட்டைப் போட்டவள் சுற்றிப் பார்த்தாள்.

யாருமே இல்லை, அவசரமாக ஜன்னல் பக்கம் பார்க்க, அந்த வழியாக எதுவும் தெரியவில்லை. எப்பிடி வந்தான். வாட்ச்மேன்….? என்று எட்டிப் பார்க்க அவன் அமர்ந்திருந்தான்.

உடனே கேட்டுக்கு போன் செய்தாள்,
“சொல்லுங்க மேடம்..”

“அங்க தானே இருக்கீங்க…? வெளியில் போனீங்களா…?”

“இல்ல மேடம். இங்க தான் உட்காந்திருக்கேன்..”

ஸனா அவனிடம் எப்பிடி விசாரிப்பது என்று யோசித்து அதற்கு மேல் கேட்காமல், போனை வைத்தாள்.

‘எப்பிடி…?’என்று யோசிக்க, மறுபடியும் கேட்டைப் பார்த்தாள்.

யாரோ வாட்ச்மேனிடம் பேசுவது தெரிந்தது. “யார்..?” என்று பார்க்க முடிந்தாலும், அடையாளம் தெரியவில்லை.

இவள் இண்டர்கமில் அழைக்க, பேசிக்கொண்டு இருந்தவன் நகர்ந்தான்.

“மேடம்!”

“அது யாரு….? உன் கிட்ட பேசிட்டு இருந்தது.”

“நம்ம ஏரியா கூர்கா மேடம், ரோந்து போயிட்டு இருக்கார், அவர் தான் தண்ணி கேட்டார் பின்னாடி எடுத்துட்டு வரப் போனேன், பவர் போச்சு இண்வெட்டர் லைன் பின் பக்கம் இல்லை வேற, அதான் போன் லைட்டை அடிச்சுட்டு வந்தேன், அவரை காணும் சரினு வெயிட் பண்னேன், இப்ப தான் வந்தார் பக்கத்து தெரு போயிட்டு வந்தாராம்”என்றான் விரிவாக.

“அந்த கூர்கா உனக்கு தெரிந்தவனா…?”

“இங்க தான் பழக்கம் மேடம், தினமும் நைட் ரோந்து போவான்”

“தமிழ் தெரியுமா…?”

“இல்ல மேடம், ஹிந்தி மட்டும் தான் தெரியும், நானும் அவனும் அரைகுறையா பேசி புரிஞ்சிப்போம்”

“ம்ம்ம்! கவனமா நில்லுங்க”என்று கட் செய்தாள்.

மனதில்’அந்த கூர்கா வந்திருக்க வாய்ப்பில்லை, அப்ப அந்த நேரத்தில் வந்தது யார்….?’என்ற கேள்வி எழுந்தது.

சிசிடிவி…?என்று எழுந்து செல்ல எண்ணியவள் மனதில் அவன் வாசல் வழியாக வந்திருந்தால் தான் சிசிடிவியில் தெரியும், இல்லைனா…?என நொந்து அமர்ந்தாள்.

கண்டிப்பாக அவன் தெரியாமல் தான் வந்திருப்பான், பவர் ஆப் ஆகி இருக்கு அப்ப அவன்…?என்று யோசிக்க தலை வலித்தது.

குழப்பத்தோடு படுக்கைக்கு வந்தவள் கண்ணில் ஒரு லெட்டர், கிப்ட் ஜுவெல் பாக்ஸ் இருந்தது.

அதை எடுத்துப் படித்தாள்.

“ஹாய் மஸ்து…

வாட்மேன், கூர்கா அளவுக்கு எல்லாம் என்னைய யோசிக்காத, கூர்கா ஹெல்ப்யோட தான் உள்ள வந்தேன், பாவம் உன் வாட்மேனுக்கு ஒன்னும் தெரியாது, அந்த கூர்காவுக்கும் ஒன்னும் தெரியாது நான் உனக்கு பர்த்டே விஷ் பண்ண போறேனு சொல்லிட்டு தான் வந்தேன், அவன் நம்பலை.

அப்புறம் நான் யாருனு சொன்னதும் ஹெல்ப் பண்ணான்..

நீ உடனே கூர்காவைப் பிடிச்சு விசாரிக்க நினைக்காத. ஏனா…? ஒரு மாசம் தான் நம்ம டீல்… அதுக்கு அப்புறம் நீ சொல்லப் போற பதிலில் தான் நம்ம உறவு இருக்கு.  எதுக்கு டைம் வேஸ்ட் பண்ற..? பை, லவ் ப்ரோபஸ் பண்ணிட்டேன். அப்புறம் அந்த கிப்ட்..

எடுத்துப் பாரு.. வெயிட்! வெயிட்! வெயிட்! எனக்கு ஒரு மெசேஜ் பண்ணு.. ப்ளீஸ்…..”

ஸனாவிற்கு பைத்தியமே பிடிப்பதுப் போல் இருந்தது.

கிப்டை தொடவே இல்லை. ஃபோனை எடுத்து”ஹூ ஆர் யு. ஒய் ஆர் யு டிஸ்டர்பிங் மீ…? ஐ ஆம் நாட் சூட் பார் யு, ஐ ஆம் நாட் வெர்ஜின், ஐ ஆம் நாட் லைக் ஹோம்லி கேர்ள்.. ஐ ஆம் எ ஜஸ்ட் ஆக்ரிக்ஸ்.. இப் யு வான்ட் மை ரிலேசன், ஆஸ்க் டேரக்லி.. டோன்ட் பிளே வித் மை ஃபீலிங்க்ஸ்.”என்று வேகமாக டைப் பண்ணி அனுப்பினாள் கோபமாக.

மூச்சை இழுத்து விட்டவள், தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தாள்.

அந்த ஏசியிலும் வியர்த்தது.. நிதானமானாள்.

அதியன் அவள் காதில் வந்துப் பேசியது, கன்னத்தில் முத்தம் கொடுத்தது என அனைத்தும் மாறி மாறி நினைவிற்கு வந்தது.

கன்னத்தைத் தடவினாள்.

***

அதியன் ப்ரோபஸ் பண்ணுகிறேன் என  சொல்லிவிட்டு யோசித்தான், எப்பிடி செய்யலாம்…?

காலையில் இருந்து யோசித்தவன் மண்டையில் இந்த ஐடியா வந்தது, நேரில் சென்று சொல்லலாம் என.

பிரி பிளான் இல்லை, பத்து மணிக்கே வந்து நோட்டம் விட்டு அப்போது தான் அந்த செக்யூரிட்டியை கவனித்தான்.

அந்த பதினொரு மணியளவில் கூர்கா ரவுண்ட்ஸ் வர, அதியன் ஹிந்தியில் பேசினான் கூர்காவிடம்.

அவனிற்கு ஸனா பற்றி பெரிதாக தெரியாது, புதிதாக வந்தவன்.

ஹெல்ப் செய்தான், பதினைந்து நிமிஷம் தான் டைம் என ஒத்துக் கொண்டான், “வரலைனா போலிஸில் நானே சொல்லிடுவேன்” என்றும், அதியன் யார் என்று தெரியாமல் அவனின் ஆதார் முதல் வாங்கிக் கொண்டான் கூர்கா.

??அதியனிற்கு கூர்காவின் செயல் ஆச்சிரியமாக இருந்தது.

அவன் மனம்’இது எல்லாம் உனக்கு தேவையா…?’என்றது.

‘வித்தியாசமாக ஏதாவது செய்யனும், மஸ்துவை இம்பரெஸ் பண்ண…’

‘ஒரு வேளை அவ ஓகே சொல்லிட்டா என்ன செய்வ…?’

‘ஓகே சொல்லிட்டா என்னோட முயற்சி சக்ஸஸ்’

‘அப்பிடி என்ன அவ உன்ன செஞ்சா…?’

‘அவ யாரையும் லவ் பண்ண மாட்டானு சொன்ன என் ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன் பாருங்கடா என்னைய லவ் பண்றானு…’

‘இதுக்கு முடிவு, அப்ப மஞ்சரி….? தாத்தாவுக்கு தெரிஞ்சா…?’

‘தாத்தாவுக்கு தெரியப் போறதில்லை, இது எல்லாம் ஒரு சேலஞ்சிங் தான், ஸனா வாயால் என்னைய லவ் பண்றேனு சொல்ல வச்சுட்டு, ஐ வில் கொயட் திஸ் கேம், தட்ஸ் ஆல்…’

‘உனக்கும் தங்கச்சி இருக்காங்க, ஸனா பாவம் இல்ல, நல்ல பொண்ணு மாதிரி தெரியுறா அதியா…’என்றது மனம்.

‘ஸி! அது அவளோட ஸ்டாங்க்னெஸ் பொறுத்து, ஒரு மாசம் நான் என்ன பண்ணாலும் அசையாம இருந்தால் அவளுக்கு நல்லது, அதான் ஏற்கனவே ஏமாந்து இருக்காள மனசை பெர்பெக்டா வச்சுக்கட்டும்.. பாப்போம்…’என்று ஸனா வீட்டிற்குள் நுழைந்து சர்ப்ரைஸ் ப்ரோபஸ் பண்ணிட்டு இதோ காரில் சென்றுக் கொண்டிருக்கான்.

போனில் மெசேஜ் வர, அதை ஹாயாக விசிலடித்தப்படி எடுத்துப் படித்தவன் சட்டென்று கார் பிரேக்கைப் போட்டான்.

அது நடுராத்திரி என்பதால் வாகனங்கள் பெரிதாக இல்லை, நிதானித்து காரை ஸ்டார்ட் செய்து ஓரமாக நிறுத்தினான்.

ஸனாவின் மெசேஜ் அவனை பாதித்தது. அவளின் “டோன்ட் பிளே வித் மை ஃபிலீங்க்ஸ்” என்ற வார்த்தை ஏனோ தாக்கியது.

அதியனிற்கு நன்கு தெரியும் தான் ஸனாவை ப்ரோபஸ் பண்ண வைக்குறேன் என எண்ணி அவன் உண்மையில் லவ் பண்ணுகிறான் என்று ஆனால் அதை ஒத்துக் கொள்ளாமல் சப்பைக் கட்டு கட்டிக்கொண்டு இருந்தான்.

ஆனால் ஸனாவின் இந்த மெசேஜில் கலங்கிப் போனான்.

அவன் ஸனாவிற்கு வாங்கிய கிப்ட் அவளை இம்பெரஸ் பண்ண என நினைத்து தான் அவன் வாங்கியது, ஆனால் உள்மனம் அதை ஆத்மார்த்தமாக விரும்பி வாங்க சொன்னது, அவனால் ஸனாவை விரும்பினாலும் ஏற்றுக் கொள்வது கஷ்டம், தாத்தாவை மீறி முடியாது, ஆனால் அவளோடு மெசேஜில் பேச ஆரம்பித்த இந்த நாட்களில் ரொம்ப ஹேப்பியா இருந்தான்.

டீன் ஏஜ் போல் தன்னை மறந்து நெருங்கினான் அவளிடத்தில்.

தான் யார் என்பதை மறந்து அந்த கிப்டை வாங்கினான்.

அதியன் இரு முகமாக இருந்தான் ஸனா விஷயத்தில்.

உள் மனம் ஆயிரம் ஆயிரம் ஆசைகளோடு நெருங்கியது அவளிடம் உண்மையான காதலானாக.

ஆனால் வெளிமனம் இது எல்லாம் பெட்டிங், இம்பெரஸ் செய்ய என வேஷம் போட்டது.

இறுதியில் எந்த மனம் சொல்வதை கேட்கப் போகிறான் என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது ஸனாவின் மெசேஜால் உள் மனம் வருந்தியது.

“மஸ்து! ப்ளீஸ் ஸி தட் கிப்ட்..”என்று மெசேஜ் அனுப்பினான்.

ஸனா அந்த மேசெஜைப் பார்த்து மேலும் கடுப்பாகி,”என்ன காஸ்ட்லியா எதும் ஜூவல் வாங்கி நான் பல்லை காட்டுவேனு நினைச்சான…?”என்று வேகமாக பிரித்தாள்.

பிரித்தவள் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியமானாள்.

அதில் இருந்தது மஞ்சள் கயிற்றில் தொங்கிய மாங்கல்யம் கோத்த தாலிக்கயிறு.

ஸனா கண்களை சிமிட்டாமல் பார்த்தாள்.

எடுத்து கைகளில் தொங்கவிட்டாள்.

‘இது என்ன மாதிரி கிப்ட்’என்று மனசு கேட்டது.

அதியன் மெசேஜ் அனுப்பினான்.

“அதான் என் கிப்ட், என் ப்ரோபஸ் அது உண்மையான தாலி தான், நீ படத்தில் எத்தனையோ முறை கட்டி இருப்பாய், ஆனா இது…..?  உனக்கானது.. ஐ ஆம் நாட் பிளே வித் யுவர் ஃபிலீங்க்ஸ்… வெர்ஜின் இஸ் நாட் மை செர்ஜ், ஜெஸ்ட் வான்ட் யுவர் லவ்”என்று அனுப்பிவிட்டு ‘குட் நைட்’ என ஃபோனை ஆப் செய்து காரை கிளப்பினான்.

அதியன் மனசு முழுவதும் மஸ்தூரா இருந்தாள், ஏனோ இந்த நிமிடம் தாத்தா, மஞ்சரி, குடும்பம் யாருமே மூளை,  மனம்  இரண்டிற்கும் வரவில்லை அவனை குழப்புவதற்கு ஆனால் புரியாத புதிராக சென்றது அவன் மொத்த மனமும்.

ஸனா மெசெஜைப் பார்த்து செய்வதறியாது படுத்தாள், கையில் தாலி இருந்தது.

என்ன முடிவு என்று புரியாமல் கண்களை மூடினாள், அவள் விரும்பிய தாலிக் கயிறு தான் ஆனால் இது…?

முடிவு எடுக்க குழம்பினாள், மனசு அந்த தாலிக் கயிறுக்காக ஏங்கியது.

தானும் ஒரு இல்லதரசியாக வாழ விரும்பும் ஒருத்தி தானே. ஆனால் அவளின் வாழ்க்கை மாறாக பயணித்தது.

தாலியைக் கையில் சுருட்டி நெஞ்சோடு வைத்துக் கொண்டு.

அதியனவள் அடுத்து..

Advertisement