Advertisement

காலையில்’குட் மார்னிங்’என்ற மெசேஜை பார்த்த ஸனா, ‘குட் மார்னிங்’என்று பதில் அனுப்பினாள்.

குட் மார்னிங் மெசேஜ் அனுப்பிவிட்டால் லவ் வந்துவிடுமா…?என்று எண்ணிக்கொண்டு.

அதியன்”குட் மார்னிங் கமிங் ப்ரம் குட் மார்னிங்”என்று அனுப்பினான் நக்கலுக்காக.

ஸனா”உனக்கு குட் மார்னிங் அனுப்பியதே தப்பு”என்று வாய் விட்டு சொல்லிட்டு, போனை தூக்கிப் போட்டு குளியலறை நோக்கி சென்றாள்.

***

காலை எட்டு மணி.

ஸனா கிளம்பி டைனிங் டேபிள் அருகே வந்தாள்.

“குட் மார்னிங் ஸனா..”என்றாள் அஜி உள்ளே நுழைந்தவாறு.

“குட் மார்னிங்”என்று அதே வேகத்தில் சொன்னவள் மனதில் அதியனின் மெசேஜ் தான் நினைவு வந்தது.

தன்னையே நினைத்து லேசாக சிரித்தாள்.

அவளின் சிரிப்பைக் கவனித்த அஜி
“என்ன மேடம் ஹேப்பி மோட்ல இருக்கப் போல…?”

“நாட் லைக் தட், வா சாப்பிடலாம்..”

“இல்ல ஸனா, ஐ ஃபினிஷ்டு”என்று ஹால் சோபாவில் அமர்ந்தாள் அஜி.

வேலை செய்யும் பெண் வர, “ஒரு காபி மட்டும் கொடு”என்றாள் அஜி.

“ஏன்டி! ஜூஸ் குடிக்கலாமுல..?”

“அதை எல்லாம் நீயே குடிம்மா, உனக்கு ஸ்கின் கேர், ஹேர் கேர், ஃபிட்னஸ்னு ஆயிரம் இருக்கு, எனக்கு நான் எப்பிடி இருந்தாலும் பிரச்சனை இல்லை, எனக்கு புடிச்ச காபி போதும்..”என்று சிரித்தாள் அஜி.

“அது ஹெல்த்துக்கு நல்லதில்லை அஜி, அதுக்கு ஜூஸ் குடிச்சா ஹெல்தி தானே”

“அடிப்போடி! ஒரு காபி குடிக்குறதால அப்பிடி என்ன ஆகப்போது, நான் ஒன்னும் காபி அடிட்டர் இல்லை”

“யாரு நீ…? ஒரு நாளைக்கு எத்தனை காபி போகுது…?”

“காலையில் ஒன்னு, இதோ ஆப்டர் பிரெக் ஃபாஸ்ட், அப்புறம் ஈவ்னிங் அவ்ளோ தான்டி..”

“ஒரு நாளைக்கு ஒன்னு குடிச்சாலே நோனு சொல்றாங்க. நீ மூன்று டோஸ் ஏதோ மெடிசன் மாதிரி”என்று ஸனா திட்டினாள்.

நல்ல வேளை அஜி போன் அடித்தது, இருவரும் டைவர்ட் ஆனார்கள்.

“ஹலோ!”

“நான் பரணி பேசுறேன் நவநீ சில்க்ஸில் இருந்து…”

“சொல்லுங்க சார், பேமென்ட் டிரான்ஸ்பெர் ஆச்சே. நான் கன்பார்ம் பண்ணிட்டேன் உங்க அசிட் கிட்ட..”

“மேடம்! அது ஓகே, ஆனா ஒரு பிரச்சனை…”

“என்ன சார் பிரச்சனை…?”

“அது வந்து, அந்த ஆட் சரியில்லை வேற ஆட் ரெடிப் பண்ண சொல்லிட்டாங்க”

“வாட்..?”

“ஆமா மேடம், அதான் ஸனா மேடம் டேட் கேக்க தான் அழைத்தேன்”

“யாரு சொன்னா சரியில்லைனு.”

“அதியன் சார்”

“அது நீங்க சொன்ன ஆட் கம்பெனி தானே, உங்க ஸ்கீரின் பிளே தானே, அதுக்கு நாங்க ஒன்னும் செய்ய முடியாது”என்றாள் கோபமாக.

ஸனாவும் சாப்பிட்டு வந்து அமர்ந்தாள் அஜி எதிரில்.

“சாரி மேடம்! சார் இந்த ஆட் புடவைக்கு கொடுப்பதுப் போல் இல்லை, ஆக்டிரிக்ஸ்க்கு கொடுப்பது போல் இருக்கு, மேக் அப் இல்லாமல், நகைகள் அணியாமல் இயற்கையாக புடவை மட்டும் கட்டி ஷூட் பண்ண சொல்றார் மேடம்..”

“அப்ப வேற யாராவது போட்டு ஆட் பண்ணுங்க, ஸனா பெமிலியர் ஆக்டிரிஸ் நானல தானே கூப்புட்டீங்க அப்புறம் புடவை மட்டும் தான் தெரியனும் என்றால் உங்க கடையில் வேலை செய்யும் ஒரு பையனை விரிச்சு காமிங்க சொல்லுங்க”

“அப்பிடியில்லை மேடம்…”என்று பரணி இழுத்தார்.

“இங்க பாருங்க சார், இவ்வளவு பணத்தை கொடுத்து ஸனாவை ஏன் புக் பண்ணீங்க, அவ முகத்தை காட்டி ஆட் பண்ண உங்க கடை பெமிலியர் ஆகுமுனு தானே. அப்புறம் என்ன சும்மா சீன் போடுறார் உங்க எம் . டி.”என்று சீறினாள்.

“மேடம் பேமஸ் ஆனவங்க தான் அவங்களைப் போட்டால் ஆட் மாத்தாம பாப்பாங்க, ஆனா அதையுமே மீறி புடவையை பாக்கனுமுனா மேக் அப், நகை போட்டு கல்யாணப் பொண்ணு மாறி இல்லாம எடுக்க சொல்றார் மேடம். ஒரு நாள் போதும்…”

“அது எல்லாம் முடியாது போனை வையுங்க”என்று கட் செய்தவள்,

“என்ன நினைச்சுட்டு இருக்காங்க, அவங்க ஒழுங்கா பிளான் பண்ணி எடுத்திருக்கனும். இப்ப வந்து அப்பிடி, இப்பிடினா இங்க வேலை வெட்டி இல்லாமயா இருக்கோம்..”என்று புலம்பினாள்.

காபி வர, அதை எடுத்து உறிஞ்சினாள்.

ஸனா கேஷ்வலாக.

“என்ன அஜி, யாரு கால்சீட் கேக்குறா..?” என்றாள்.

“எல்லாம் அந்த அதியன் தான். நீ சொன்னப்ப நம்பலை இப்ப நம்புறேன்…”என்று மேலும் புலம்பினாள்.

“எந்த அதியன்…?”

“எந்த அதியனா…? அடியேய்! அன்னைக்கு உனக்கு அவார்ட் கொடுத்தானே அவன் தான், அச்சு ப்ரண்ட்னு சொன்னேல”

“ஓ! ஆமா, அவனுக்கு என்னடி….?”

“ம்ம்ம்! அவன் தானே நவநீ சில்க்ஸின் எம் டி…”

“ம்ம்ம்! அது தெரியும். இப்ப என்ன பிரச்சனை..?”

அஜி பரணிக் கூறியதை ஒப்புவித்தாள்..

“சோ!”

“ரீ ஷூட் டேட் வேணுமாம்”

“ம்ம்ம்! நெக்ஸ்ட் சண்டே வேணா கொடு…”

“ஏய்! லூசாடி நீ, ப்ரீயா இருந்தா கூட வேணாம், அவன் சொன்ன விதம் எனக்குப் புடிக்கல, புடவை மட்டும் தெரிய எதுக்கு செலிப்ரட்டிஸ் அவனே முகத்தை மறைச்சுட்டு புடவை மட்டும் காட்டலாம்” என்றாள் கடுப்பாக.

ஸனா சிரித்து”உன் புருசனோடு ப்ரண்ட்டை இப்பிடி திட்டுற..?”என்றாள்.

“ஆமா! அது ரொம்ப முக்கியம். உன்னைய மதிக்காதவன் எவனாக இருந்தால் என்ன..?”

“ஸி அஜி! இதுல தப்பு ஒன்னும் இல்லை, என்னைய காட்டி காசு சம்பாரிக்க பார்க்கிறவர்கள் தான் அதிகம், என்னை வச்சு விளம்பரம் எடுத்தாலும் புடவை தான் மெயினா தெரியனுமுனு நினைக்குறது ஐ அப்ரிஷேட்..”

“என்ன ஸனா சொல்ற…?”

“ஆமான்டி, எனக்கு ஓகே பேமென்ட் வேணாம், அதே பேமென்ட் இருக்கட்டும் நோ ப்ராப்ளம். அவங்க அந்த ஸ்கிரீன்ப்ளேவில் ஸ்டாட்டிஸ்பைய்டு ஆகல அவ்ளோ தானே அடுத்து தேவையானதை நடிச்சுக் கொடுக்குறேன்…”

“ஓகே! ஏன் பேமென்ட் வேணாமுனு சொல்ற..? அவங்க ஒன்னும் இல்லாதவங்க இல்லை, நீ ஆஃபர் கொடுக்க”

“தெரியுமுடி, ஓகே என்ன ஆகப் போது ரீ டேக் எடுத்தாத நினைச்சுக்குறேன். எனக்கு அவங்க கான்செப்ட் புடிச்சு இருக்கு, சோ ஒன்லி..”

“அப்பிடி எல்லாம் நீ இறங்கிப் போக கூடாது, உனக்குனு ஒரு பிரிட்சிடிஜ் இருக்கு, பேமென்ட் நானா பேசலை, அவங்களா பேசினா அசெப்ட் பண்ணி வாங்கிடுவேன்…”என்றாள் அழுத்தமாக.

ஸனா சிரித்து விட்டு”உன் இஷ்டம், இன்னைக்கு எங்க ப்ரோகிராம்”என்று அவர்கள் வேலையை தொடங்கினார்கள்.

***

ஸனா டேட் கொடுத்தது பாரி, பரணி இருவருக்கும் ஹேப்பி ஆனது.

ஸனாவின் மனதை சிறிதுப் படித்தமையால் அதியன் அவள்  ஓகே சொல்வாள் என்பதை கணித்திருந்தான்.

பாரி மற்றும் அதியன்  கார்மென்ட்ஸ் கம்பெனியில் மீட்டிங்கில் இருந்தனர்.

அதியன் போன் அடித்தது.

யார் நம்பர் என எடுத்துப் பார்த்தான்.

புதிய நம்பராக தெரிய, கட் பண்ணிவிட்டு மீட்டிங்கை தொடர்ந்தான்.

மறுபடியும் கால் வந்தது.

அதே நம்பர்.

பாரி”அண்ணா! இம்பார்ட்டென்ட் கால் ஆ  இருக்கப் போகுது, அட்டென்ட் பண்ணுங்க”என்றான்.

“எக்ஸ் க்யூஸ் மீ, பாரி வில் கண்டினீவ்”என்று வெளியில் சென்றான்.

“ஹலோ!”என்றான் வேகமாக.

“ஹாய்! ஐ ஆம் மஞ்சரி ஸ்பீகிங்”என்றாள் அவள்.

“ஹூ இஸ் திஸ் மஞ்சரி..?”என்றான் நிஜமாகவே மறதியோடு.

மஞ்சரி மனம் ‘தன்னையே யாருனு கேக்குறானே’என கோபமாகியது. 

“மிஸ்டர் நவநீதத்தின் குடும்பத்தோடு பொண்ணு பார்க்க வந்தீங்களே அந்த மஞ்சரி”என்றாள் படாரென்று.

அதியனிற்கு யார் என்று புரிய, ‘ச்சே!’ என்று நினைத்தவன்.

“ஓகே! புது நம்பரா இருந்ததால் யாருனு தெரியல. எனி இம்பார்ட்டென்ட்..?”

“மிஸ்டர் நவநீதம் அதான் உங்க தாத்தா,
என் அப்பா கிட்ட உங்க நம்பர் கொடுத்துப் பேச சொன்னராம். என் நம்பர் உங்களுக்கு கொடுத்ததா சொன்னாங்க சேவ் பண்ணலையா…?” என்றாள் அதிகாரமாக.

“ஸி! கொடுத்தாங்க பட் சேவ் பண்ண மறந்துட்டேன், ஐ ஹேவ் மீட்டிங் நவ், வில் ஸ்பீக் லேட்டர். அன்ட் என் தாத்தாவோட பெயரை இப்பிடி சொல்லாத, முடிஞ்சா தாத்தானு சொல்லு, இல்லை பெரியவருனு சொல்லு, ஐ டோன்ட் லக் திஸ் அகெயின்..”என்று போனை கட் செய்தான் கடுப்பாக.

‘டேமிட்! என்னையே யாருனு கேக்குறான், தாத்தா பேரு சொல்ல கூடாத, இனி அந்த தாத்தவை வச்சே உன்னை வழிக்கு கொண்டு வரேன்’ என்று போனை தூக்கிப் போட்டாள்.

‘இந்த தாத்தாக்கு வேற வேலை இல்லை, எதுக்கு என் நம்பரை அவ கிட்ட கொடுத்தார், நான் ஃப்ரீயா இருக்கும் போது கூப்புட்டுகிறேனு சொல்லிட்டு தானே வந்தேன்’என நொந்தான்.

மீட்டிங் ஹாலிற்கு நுழையப் போனவன் போன் மறுபடியும் அடிக்க, கோபமாக போனை பார்த்தவன் திரையில் ஸனா நம்பர்.

அதிர்ச்சி ஆச்சிரியமாக பார்த்தான், மற்றொரு நம்பரும் இந்த போனில் தான் இருந்தது, போனை அட்டென்ட் செய்தான்.

ஆனால் மறுமுனையில் கேட்ட சத்தம் வேறு.

“ஆன்டி! உங்க போன் லாக் ஆச்சு எடுத்து கொடுங்க”என்ற ஒரு சிறுப் பெண்ணின் குரல் கேட்டது.

தூரமாக நின்ற ஸனா”வெயிட் டியர் வரேன்”என்று அருகே வந்து.

“கேம்ஸ் விளையாடிட்டே இருந்தா ஐ ப்ராப்ளம் ஆகிடும் குட்டி, வாங்க நம்ம போய் வேற விளையாடலாம், அடுத்த சீன் எடுக்குற வரை”என்றாள் ஸனா.

“இந்த கேம் முடியப் போகுது ஆன்டி..”

“அப்புறம் டேரக்டர் தாத்தா திட்டுவாரு”

“அவரு கிடக்கட்டும், வீட்டுலையும் தர மாட்டாரு, இங்க வந்தா நீங்க மட்டும் தான் தரீங்க, ப்ளீஸ் ஆன்டி”

டேரக்டரின் பேத்தி தான் அது, சூட்டிங் பார்க்க வந்த பெண்.

“குட்டி! தாத்தா பெரிய ஆள்ல அப்பிடி எல்லாம் சொல்ல கூடாது, உன்னோட நல்லதுக்கு தானே சொல்றாங்க, சரி, ஆன்டி போனை ஆப் பண்ணிடுறேன் நம்ம போய் ஐஸ் க்ரீம் சாப்பிடலாம் வாங்க”என்று சிறுமியை தூக்கி இருப்பாள் போல, ஓரளவு புரிந்தது.

போன் ஆப் மோட் போனது.

அதியன் ஏதோ கனவில் இருப்பது போல் இருந்தது.

அழகான குரல், அவளௌ சிறுமியை சமாதானம் செய்ததை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான், மீட்டிங்கை மறந்து.

ஸனாவோ அதியன் நம்பரிற்கு கால் போனது தெரியாமல் போனை ஆப் செய்திருந்தாள்.

“அண்ணா!”என்றழைத்தான் பாரி.

நினைவு திரும்ப, “மீட்டிங் முடிஞ்சுட்டு என் பண்றீங்க, யாரு போன்ல. எமஜெர்ன்ஸியா..?”

“இல்லடா! அந்த மஞ்சரி…”

“எந்த மஞ்சரி…?”

அதியன் மனதில் சிரித்து விட்டு, “ம்ம்ம்!
அன்னைக்குப் பொண்ணு பார்க்கப் போனமே அந்த பொண்ணு தான்…”என்று உள்ளே சென்றான்

“ஓ! அண்ணி கூட பேசியதால் மெய் மறந்து நின்னீங்களா…?”என்று கேட்டுக் கொண்டே பின்னால் போனான்.

அதியன் அதை கண்டுக்கொள்ளாவில்லை.

***

ஃபோனை ஆன் செய்தாலும், வாட்ஸ் ஆப் கால் ஹிஸ்டரி பார்க்கவில்லை ஸனா.

சிறுமி விளையாடும் போது எதேச்சையாக போனது தான் கால், அவனின் இரண்டாவது மெசேஜை ஓபன் பண்ணாமல் இருந்ததால் அது ப்ரண்ட் சிலைடில் வந்து வந்து போனது, அப்ப மெசேஜ் ஓபன் ஆகி க்ளோஸ் பண்ணும் கால் சென்றது.

படுக்கப் போகும் போது, அஜி போன் செய்ய, மிஸ்டு கால் போனது.

மறுபடி ஸனா அழைக்க போகும் போது தான் கால் ஹிஸ்டரி பார்த்தாள்.

அதியன் நம்பர் அதுவும் பத்து நிமிடம் கால் ஆக்டிவேட் என வந்தது.

டைமிங் செக் செய்தாள். அந்த டைம் யோசிக்க புரிந்தது சிறுமி விளையாடியபோது என்று.

‘ச்சே! நானும் பாக்கவே இல்லை..’என நொந்தாள்.

அஜி மெசெஜில் சொல்லிவிட்டு படுக்கப் போனாள்.

ஸனா அதற்கு ரிப்ளே பண்ணிவிட்டு, ‘அடக் கடவுளே, அவன் என்ன நினைச்சி இருப்பான்.’என்று நினைத்துப் புலம்பினாள்.

பத்து மணி அளவில் மெசேஜ் வந்தது.

“ஹாய் ஆன்டி!”

ஸனா  கடுப்பாக.

“ஹலோ! நான் கால் பண்ணல, அது டேரக்டர் சார் பேத்தி, ஷூட்டிங் பார்க்க வந்துச்சு, கேம்ஸ் விளையாடப் போன் கேட்டுச்சு கொடுத்தேன், அந்த பொண்ணு கால் பண்ணிட்டு…”என்று அனுப்பினாள்.

“ஐ நோ”

“அப்புறம் என்ன ஆன்டினு நக்கல்..?”

“சும்மா மஸ்து, நீ அந்த பொண்ணு கிட்ட அழகா பேசின தெரியுமா…? யூ ஆர் க்யூட் கேரக்டர் ஐ திங்”

“போதும் போதும், வைக்குற ஐஸ்ல ஜன்னி வந்துட போகுது”

“டோன்ட் வொரி, அதான் நான் இருக்கேன்ல பாத்துக்குறேன்…”

“எப்பிடி, இப்பிடி போனில் மெடிசன் ஸ்மைலி சென்ட் பண்ணுவீங்களா” என்று சிரித்தாள் வாயினுள்.

“ச்சே! ச்சே! யூ ஆர் ராங் திங்கிங் அபௌவட் மீ, கண்டிப்பா கூட இருந்து பாத்துப்பேன்”

ஸனா மனதின் ஓரத்தில் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது தான்..

அதியனுமே தான் எதற்கு மெசேஜ் பண்ண ஆரம்பித்தோம் என்பதை மறந்து அதை தாண்டி, அவளின் மேல் காதலை தூவ  ஆரம்பித்தான்.

ஸனா சட்டென்று மனம் விழித்திட,
“என்னைய பாத்துக்க ஆள் இருக்கு, யு கேரி ஆன் யுவர் வொர்க்..”என்று முறைப்பு ஸ்மைலி அனுப்பினாள்.

“ஹஹஹ! அழகா இருக்க, இதே மாதிரி இப்ப நீ முறைச்சிப் பாரு கண்ணாடியில்”

ஸனா எதிரில் தெரிந்த கண்ணாடியில் அந்த ஸ்மைலி மாதிரி செய்துப் பார்த்தாள், குழந்தைதனமா இருந்தது.

தலையில் தட்டிக் கொண்டவள், “நல்லாவே இல்ல”என்று அனுப்பினாள்.

“அப்ப செஞ்சுப் பாத்து இருக்க, கண்டிப்பா சின்னப்புள்ள தனமா இருந்திருக்கும், சிரிச்சு இருப்ப”

ஸனாவிற்கு’அய்யோ’என்றிருந்தது.

“அது எல்லாம் இல்லை, குட் நைட்”என்று அனுப்பிவிட்டு போனை தூக்கிப்  போட்டுப் படுத்தாள்.

அதியன் சிரித்துக் கொண்டே’லவ் யு டி..’
என்று எண்ணியவன், “லவ் யூ மஸ்து, ❤”போட்டு அனுப்பிட்டு, அவனும் தூங்கப் போனான்..

ஸனா சிறிது நேரம் கழித்து, மெசேஜ் டோன் கேட்டாலும் அப்போ பார்க்காமல் இப்ப எடுத்துப் பார்த்தாள்..

ஸனா அதையே பார்த்துக் கொண்டு தூங்கினாள்..

அதியனவள் அடுத்து…

Advertisement