Advertisement

காலைப்பொழுது, ஆறு மணியை தொடும் முன்பே எழுந்த ஸனா, வழக்கம் போல் ஃபோனை பார்த்தாள்.

அந்த மெசேஜில் ANR என்று இருக்க அதை கவனித்தவள், யோசனையில் ஆழ்ந்தாள்.

அவள் குழம்ப வேண்டும் என தானே அதியன் அனுப்பியதும்.

ஸனா அதையே யோசித்தாள், யார்..? என்று அவளின் துறையை தொடர்புடையவர்களை மட்டுமே யோசனை வட்டத்திற்குள் கொண்டு வந்தாள், அத்துறை இல்லை என்று சொல்லி இருந்தாலும்.

ஆறு மணியளவில் ‘குட் மார்னிங்’என்ற ஹார்ட் ஸ்மைலியோடு வந்தது ஒரு மெசேஜ் அதியனிடம் இருந்து.

‘யார் இவன்..?’என்று காலையிலே கோபமானாள்.

அதே கோபம் வெளிப்படும் விதமாக”பேட் மார்னிங்” என்று அனுப்பினாள்.

எந்த பதிலும் இல்லை அதியன் பக்கம் இருந்து.

அன்று ஞாயிறு..

ஸனாவிற்கு நவநீ சில்ஸின் விளம்பரம் ஷூட்டிங் இருந்தது.

காலையில் சென்றவள் நடித்து முடிக்க மாலை ஆனது, ஐந்துப் புடவைகள் கட்டி எடுத்ததார்கள்.

அதியன் அந்த ஏரியாப் பக்கம் போகவே இல்லை.

ஸனா ஷூட்டிங் முடித்துக் கொண்டு கிளம்பினாள்.

விளம்பரக் காட்சிகள் எடிட்டிங் முடிச்சு, ஃபைனலாக அதியனிடம் சென்றது.

பாரி தான் அதை அண்ணனிடம் போட்டுக் காட்டியது.

ஒவ்வொரு புடவையிலும் தேவதைப் போல் ஜொலித்தாள் மஸ்து.

நிதானமாகப் பார்த்தவன், பாரியிடம்
“இது எதுமே நல்லா இல்லை, யாரு ஷூட் பண்ணது…?”என்றான்.

ஒரு நிமிடம் பாரி தான் ‘கனவில் இருக்கோமா..?’ என தன்னை தட்டிக் கொண்டு, பிறகு உணர்வு மீள,

“இது சூப்பரா வந்திருக்கு அண்ணா, சொல்ல போனால் ஸனா செம பொருத்தமாக இருந்தாங்க இந்த விளம்பரத்துக்கு” என்றான் உண்மை நிலையை.

“ஐ ஆம் ஆஸ்கிங் யு தட் ஹூ வாஸ் ஷூட் திஸ் ஆட்…”

“ம்ம்ம்! நம்ம ரோஸ் ஆட் கம்பெனி தான்”

“ஓகே! ரீ ஷூட்டுக்கு அரேன்ஞ்ச் பண்ணு” என்று எழுந்துச் சென்றான்.

காலையில் பேட் மார்னிங் என்று ஸனா அனுப்பியதால் கடுப்பில் இருந்தவன், இன்றைய அவளோட உழைப்பினை தூரமாக தூக்கிப் போட்டான்.

அதியனின் கூற்றுப் புரியாத பாரி அடுத்து என்ன செய்வது என யோசித்தான்.

சேரர், சோழா, பாண்டி, பரணி என அனைவருமே இந்த விளம்பரத்தைப் பார்த்து எக்ஸ்லென்ட், மார்வெலஸ் என பாராட்டி இருந்தனர்.

பரணியிடம் தான் சென்று பாரி விசயத்தை சொன்னான்.

“என்ன தம்பி சொல்றீங்க…?”

“ஆமா அங்கிள், அண்ணன் ஸ்ட்ரிட்டாக சொல்லிட்டுப் போயிட்டார்…”

“ஓ! அய்யோ தம்பி, அந்த நடிகை கிட்ட மறுபடியும் கால்சீட் வாங்க முடியுமானு தெரியல, இதுவே அவங்க முடியாதுனு சொல்லி வாங்கினது, ஞாயிறு ஃப்ரீ என்பதால் நடிச்சுக் கொடுத்தாங்க…”

“புரியுது அங்கிள், தாத்தா அண்ணன் ஃபைனலிஸ்ட் பண்ணால் ஓகே செய்ய சொல்லி இருக்கார்…”

“அப்ப சரி தம்பி, நம்ம ஐயா கிட்ட காட்டி நிலவரத்தை சொல்வோம்…”என்றார்.

“ஆனா அங்கிள், அண்ணன் திட்ட மாட்டருல…?”

“எப்பிடி திட்டாம இருப்பார், ஒரு முயற்சி தான், இல்லனா வேற நடிகை கிட்ட தான் பேசிப் பாக்கனும்.”

***

இரவு உணவு வேளை நெருங்கவில்லை.

வழக்கம் போல் பரணி அன்றைய வரவு, செலவு நிலவரத்தை நவநீதத்திடம் காட்டிக் கொண்டு இருந்தார்.

பாரி லேப் டாப்போடு வந்தான். அதியன் தங்கச்சிகளோடு அமர்ந்து ஏதோ படிப்பு தொடர்பான பேச்சில் அமர்ந்திருந்தான்.

சங்கவி ஃபைனல் இயர் கேம்பஸ் டிப்ஸ் பற்றி விளக்கினான் அதியன்.

சைந்தவி தேர்டு இயர் , சாருமதி ஃபர்ஸ்ட் இயர் அவர்களும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அன்னம் ஹாலில் அமர்ந்து அதியன் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டே கையில் இருந்த புத்தகத்தையே மேய்ந்தார்.

“தாத்தா! இது தான் இன்று எடுத்த புது விளம்பரம்..”என்று லேப் டாப்பை நீட்டினான் பாரி.

“அதியன் பார்த்தாச்சா…?”

அதியன் திரும்பிப் பார்த்தான்.

“பார்த்துட்டாங்க.”

“அப்புறம் நான் பார்க்க என்ன இருக்கு..?”

மகன்கள் வர, “பாருங்க அப்பா, நாங்களும் பார்த்தோம் நல்லா வந்து இருக்கு..”என்றனர்.

அதியன் கண்டுக்கொள்ளாமல் அவன் தங்கைகளிடம் பேசுவதைத் தொடர்ந்தான்.

நவநீதம் லேப் டாப்பை தூரமாக வைக்க சொல்ல, சோழா”பாரி! டிவியில் கனெக்ட் பண்ணு, நம்ம வீட்டுப் பெண்களும் பார்க்கட்டும், புடவைனா யாருக்கு தான் விருப்பம் இருக்காது”என்று சிரித்தார்.

“ஆமா! இதில் பார்ப்பதை விட டிவியில் போடு, சற்று தெளிவா இருக்கும்”என்றார் நவநீதம்.

பெண்களும் ஹால் பக்கம் வந்தனர், பாரி, பரணி இருவருக்கும் சந்தோஷம். எப்பிடியும் விளம்பத்தை மாற்ற சொல்ல மாட்டார்கள் என்று.

டிவியில் ஓட ஆரம்பித்தது. “பட்டு வாங்க சிறந்த கடை”என்ற வாசகம் முதலில் மியூசிக்கோடு வந்தது.

பிறகு ஒரு சுடிதார் போட்டு ஷனா கடைக்குள் நுழைவதுப் போல் தன் திருமணத்திற்கு புடவை வாங்க வந்திருப்பது மாதிரியான காட்சி ஆரம்பித்து தொடர்ந்தது.

“மேடம்! நீங்க ஸனா மேடம் தானே..? உங்க படம் எல்லாம் ரொம்ப பிடிக்கும்”என்றான் கடைக்காரப் பையன் ஆச்சிரியமாக.

அவள் சிரித்து”கல்யாணப் புடவைகள் பார்க்க வேண்டும்”என்கிறாள்.

அந்த செக்ஷனுக்கு அழைத்துச் செல்ல, பிடித்தப் புடவைகளை தேர்ந்தெடுத்து வைத்தவளிடம், பணிப்பெண்”மேடம்! நீங்க கட்டியே பார்க்கலாம்”என்று கூறி, கட்டி விடுகிறாள்.

ஒவ்வொரு புடவையிலும் மணப்பெண்ணாக ஜொலிக்குறாள் ஸனா.

இறுதியில் ஸனா”என்னோட கல்யாணத்திற்கு புடவை எடுத்துட்டேன். நீங்களும் இதே மாதிரி டிசைன்ஸ் விரும்புறீங்களா…? உடனே வாங்க நம்ம நவநீ சில்க்ஸிற்கு.. நவநீ சில்க்ஸ், ஆர் நகர், சென்னை. உங்களுக்கு ஏற்ற தரமான வகைகள் இங்கு கிடைக்கும், நம்பி வாங்கலாம்”என்று பேசி முடிக்கின்றாள்.

அனைவருக்குமே பிடித்தது.

அதியனும் ஸனாவை ஓரக்கண்ணால் அப்பப்ப பார்த்து ரசித்தான்.

நவநீதத்திற்கும் ஒன்றும் குறை தெரியவில்லை.

“நல்லா இருக்கு பரணி அண்ணே!” என்றார் தேவி.

“ஆமா பாரி! அந்த பொண்ணு அம்சமாக இருக்கு நம்ம கடைப் புடவையில்”என்றார் மல்லி.

“சூப்பர்! நம்ம பொண்ணுங்க கல்யாணத்திற்கு இந்த டிசைனில் தான் கொடுக்கனும், அந்த ஸனா கலர் தானே நம்ம சங்கவியும்..”என்றார் மாலினி.

“ஏன் அதியனுக்கு பார்த்து இருக்க பொண்ணுக்கு பொருத்தமாக இருக்காத மாலனி…?”என்று அதியனைப் பார்த்துக் கொண்டே கேட்டார் அன்னம்.

அதியன் மனதில்’இந்த பாட்டி வேற’என்று முகத்தை சுழித்தான்.

அதை ஆழமாக கவனித்தார் அன்னம்.

“இல்ல அத்தை! மஞ்சரிக்கும் நல்லா இருக்கும். சட்டுனு நம்ம வீட்டுப் பொண்ணுங்க வந்துட்டாங்க”என்று கூறி சமாளித்தார் மாலினி.

“ஆனா! அதியன் அண்ணனுக்குப் பிடிக்கலை, விளம்பரத்தை மாற்ற சொல்லிட்டார்”என்றான் பாரி.

சங்கவி அண்ணனை லுக் விட்டு, “ஏன்…? நீங்க அப்பப்ப நவநீ பேரன் என ப்ரூவ் பண்றீங்க அண்ணா”என்றாள் மெதுவாக.

“ஆமா! ஆமா!”என்று மண்டையை ஆட்டினர் சைந்து, சாரு.

நவநீ கேள்வியாக அதியனை பார்த்தார்.

“ஏன் அதியா…? நல்லா தானே இருக்கு.” என்றார் சேரர்.

அதியன் எழுந்து அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.

“பெரியப்பா! இது என்ன விளம்பரம். ஓல்டு பேஷன் மாதிரி இருக்கு…”

“மணமகள் விளம்பரம் இப்பிடி தானே இருக்கும்”என்றார் பாண்டி.

“ஆமா சித்தப்பா, ஆனா இயற்கையாக இல்லை…”

“புரியுற மாதிரி சொல்லு அதியா…” என்றார் அவன் தந்தை சோழா.

அன்னம் பாட்டி பேரனையே பார்த்தார்.

நவநீயும் பார்க்க, “தாத்தா! நேரடியா சொல்றேன். இப்ப இந்த விளம்பரத்தில்
உங்க கண்ணுக்கு முதலில் புடவை தெரிந்ததா, இல்ல இந்த நடிகை தெரிஞ்சாங்களா…?”

“ரெண்டும் தான் அண்ணா…”என்றான் பாரி.

“உன் கிட்ட கேக்கலை, பெரியம்மா, அம்மா, சித்தி, ஆ! பாட்டி நீங்களும் சொல்லுங்க…?”

அவர்கள் முழிக்க, “அந்த நடிகை தான் பேராண்டி, அந்த கால பத்மினி மாதிரி கண்ணால் பேசுறா..”என்றார் பாட்டி.

“இதுக்கு தான் சொன்னேன், விளம்பரம் நம்ம புடவைக்கு மட்டுமே அந்த நடிகைக்கு இல்லை. அதனால் கல்யாணப் பொண்ணுக்கு போடுற மாதிரி மேக் அப் இல்லாம, புடவையை மட்டும் கட்டனும், கழுத்தில் ஒரு மெல்லிய செயின், கையில் ஒரு மெல்லிய வளையல், புடவை மட்டும் கிளாஸ்ஸிக்கா தெரியனும், அதே மாதிரி சிங்கிள் ஃபிலீட்ஸ் வச்சு காட்டனும் புடவை டிசைன்ஸை, விளம்பரத்தில் முடிவில் ஒரு நல்ல புடவையை கட்ட சொல்லி நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்க சொல்லி  அந்த சீனோடு கடைப் பெயரை விளம்பரப் படுத்தி முடிக்கனும்”என்றான்.

“என் பையன் சொன்னா சரியா தான் இருக்கும்”என்றார் மல்லி.

“வீட்டில் எல்லாரும் இது நல்ல இருக்குனு சொல்றாங்க, மூத்தவர் என் வீட்டுக்காரர் கூட சொன்ன பிறகு, அதியன் ஒருவனுக்காக மாற்ற முடியுமா…?”

“பரணி! அதியன் கூறியது சரி தான்.. மறுபடியும் தேதி வாங்கு அந்த நடிகையிடம்.”என்றார் தாத்தா.

“ஐயா! அதான் சிரமம், அந்த பொண்ணு மேனெஜர் தேதி இல்லாததால் இன்னைக்கு ஞாயிறு தான் கொடுத்தாங்க, மறுபடியும் கிடைக்குமானு தெரியல..”

“சம்பளம் கூடுதலாக சொல்லு, அதையும் மீறி மல்லுக்கட்டினா. அடுத்த ஹுரோயின் பாரு”என்றார் நவநீ.

“சரிங்க ஐயா!”

“டிபன் ரெடியா தேவி”என்றார் சேரர்.

தேவி உள்ளே செல்ல, மாலியும் கூடவே சென்றார்.

“பாரு மாலினி! அதியா சொல்றானு மாமா உடனே மாத்திட்டார், என் புருசனை சும்மா உப்புக்கு சப்பாணியா, என் பையனை வேலைக்காரனாக தான் பாக்குறாங்க”என்று புலம்பினார்.

“விடுங்க அக்கா, சாப்பாடு எடுத்து வைப்போம்”என்று சமாதானம் செய்தார்.

“மாலி! அந்த  நடிகை விளம்பரத்தில் நல்லா தானே இருக்காள்..? நகை எல்லாம் போடாம எடுத்தாலும் அம்சமாக இருப்பாள் தான்”என்று சொன்னப்படி வந்தார் மல்லி.

“ம்ம்ம்! நல்ல நடிகை அக்கா”

“ஆமா! ஆமா! நானும் பார்த்து இருக்கேன் படத்தில், நல்ல அழகு…”

“ஏன் அதியனுக்கு வேணுனா கட்டி வையே அவ்வளவு புடிச்சு இருந்தா…”என்றார் கடுப்பாக தேவி.

“அது எப்பிடி அக்கா! அவள் ஒரு நடிகை அதும் ஏற்கனவே கிசுகிசுப்பு வந்த நடிகை, அதான் அதியனுக்கு பொண்ணு பார்த்தாச்சே, வேணுனா பாரிக்கு நீங்க கட்டி வைங்க…”என்றார் வேண்டுமென்றே.

“ஏன்! என் பிள்ளை மட்டும் இழிச்சவாயா போயிட்டான, அந்த நடிகையை கட்ட, நானா அவளை வர்னிச்சேன்..?  ஆ! ஓ! னு “என்று முறைத்தார் தேவி.

“அய்யோ! அக்கா ரெண்டுப் பேரும் நிறுத்துங்க, அங்க சாப்பிட வெயிட்டிங்.” என்று டேபிளை நோக்கி நடந்தார் மாலினி.

இருவரும் திருப்பிகிட்டு ஆளுக்கொரு பாத்திரத்தை தூக்கிட்டு சென்றனர்.

இது பழக்கமான ஒன்று தான் அவர்களுக்கு..

***

இரவு அதியன் தன் அறைக்குள் சென்றான்.

ஸனாவின் விளம்பர விடீயோவை பார்த்தவன், சிரித்தப்படி’எனக்கே பேட் மார்னிங்னு அனுப்புறீயா…..? இன்னைக்கு நீ நடிச்சதையே வேணாமுனு ஒதுக்கி தள்ளிட்டேன் பாத்தீயா..?’என்று கேட்டான்.

ஃபோனை எடுத்து, “ஹாய்! குட் நைட்  ப்ரம் பேட் மார்னிங்❤”என்று அனுப்பினான்.

ஸனா போனை பார்த்ததும் சிரித்து விட்டாள்.

‘இவன் என்ன லூசா இருப்பான….?’ என்று நினைத்தவள்,

“பேட் நைட் ப்ரம் பேட் மார்னிங்”என்று அனுப்பினாள்.

“வாவ்! ஆக மொத்தம் டுடே பேட் டே எனக்கு”

“மே பி”

“ஹவ் வாஸ் யுவர் டே…?”

“குட்”

அதியன் அர்த்தமாக சிரித்தான், ‘நாளைக்கு தெரியும், இன்றைய நாள் குட் டேவானு…’என்று நினைத்து.

“டிட் யு ஃபைன்ட் மை நேம் மீன்ஸ் ANR…?”

“ஐ டோன்ட் வான்ட் நோ அபௌவ்ட் இட்..”

“ஓ! குட்,  பட் வில் ட்ரை மேடம்.”

“நோ நீட்… வாட் யு வான்ட்…?”

“ஐ லவ் யூ…”

“ஸி! இந்த மாதிரி கேட்டு எனக்கு பழகிட்டு, ஏன் இப்ப கூட ஒரு நாளைக்கு ஃபேன்ஸ் அத்தனை பேர் சொல்றாங்க, அதுக்காக சொல்ற எல்லாருக்கும் நான் ஓகே சொல்ல முடியுமா…?”

“பட்! நான் ஸ்பெஷல் இல்லையா, ஐ மீன் உங்க பெர்சனல் நம்பர் புடிச்சு வந்திருக்கேன் என்றால், நானும் நல்ல பொஸிஸன் பெர்சன், கவலைப் படாதீங்க நான் ஹேண்ட்சம்மா தான் இருப்பேன்…”

“அஸ்யூஸ்வெல் டீன் ஏஜ் டாக்கிங்…”என்று நக்கல் ஸ்மைலி போட்டாள்.

“யா! யா! காதல் என்றாலே வயசு குறையும் தானே. ஆனா எனக்கு வயசு முப்பது உள்பக்கம் தான் மேடம்..”

“தைரியம் இருந்தால் நேரில் வந்து சொல்லுங்க…”

“ஹஹஹ! தைரியம் அதுக்கு பஞ்சமா…?ஆனா என்ன நேரில் வந்தால் உங்க பக்கத்தில் கூட வர முடியாது, அப்புறம் எனக்கும் பப்ளிசிட்டி புடிக்காது, நானும் ரவுடி தான் அதாங்க வி ஐ பி லிஸ்ட்.”

“அப்புறம் எதுக்கு இந்த காதல், அன்னோன் நம்பர் சாட்டிங், ஃபேக் பெர்சன் மாதிரி…”

“ஏன் வி ஐ பி லிஸ்டில் இருந்தால் காதலிக்க கூடாத, நீங்க பெரிய நடிகை என்பதால் எனக்கு புடிச்சு இருக்குனு சொல்ல கூடாத, லவ் இஸ் ஹேப்பி மூமென்ட், அதை ரசிக்கனும் இப்பிடி ரகசியமாக…”

இதை படித்ததும், ஸனாக்கு இயல்பாக ஒரு சிரிப்பு வந்தது..

ரிப்ளே செய்யவில்லை..

“காதல் பூக்கள்
கோத்தேன்
என் காதலியின்
கார்க்குழலுக்காக
சூட்டிக் கொள்ள
ஆசை கொண்டவள்
அது வாடும் என
மறுத்து வாதாடுகிறாள்”

என்று அடுத்து அனுப்பினான்.

“ஓ! கவிதை எல்லாம் வருமா…?”

“இதுவரை வரலை, காதலில் வீழ்ந்ததும் தானாக வருது போல”

“மிஸ்டர் ANR நான் நடிகை, நீங்க ஃபேக் பெர்சனாக வந்து இப்பிடி மெசேஜ் பண்ணா, என்னோட ரியாக்சன் வேற மாதிரி இருக்கனும். பட் நீங்க முதல் இரண்டு மாதமும் எந்த தொந்தரவு தராததால் சைலன்டா விட்டுட்டேன், பட் இப்ப இது சரியில்லை..”

“ஓகே! ஐ அண்டர்சேன்ட்.. ஜெஸ்ட் சே எஸ் ஆர் நோ…”

“இது நான் சொல்லனுமா.. ஆப்வியஸ்லி நோ தான்…”

“ஓகே! நான் உங்களுக்கு ஒரு மாதம் டைம் தரேன், நம்ம டெய்லி சாட் பண்ணுவோம், நீங்க ப்ரண்டா நினைங்க, நான் லவ்வரா நினைச்சுகிறேன். அப்போதும் உங்களுக்கு என் மேல க்ரஷ் வரலனா வீ வில் ஸ்டாப் திஸ் ஆல், நான் யாருனே தெரியாம போயிடுறேன். பட் இப் யு லைக் மீ என்ட் ஆப் மன்த், புடிச்சி இருக்குனு சொன்னா, அடுத்த மாதத்தின் முதல் நாள் உங்க முன்னாடி வரேன்..”

“எதுக்கு இந்த முயற்சி எல்லாம். எனக்கு எப்பிடியும் விருப்பம் இருக்காது..”

“ஜஸ்ட் ட்ரை மஸ்து”

ஸனாவிற்கு ஏதோ வசியம் செய்தது போல் இருந்தது அந்த வார்த்தை.

அதனால் யோசித்தாள். ஒரு மாதம் தானே அந்த ஒரு மாதத்தில் காதல் வந்துடுமா என்ன..? என்று நினைத்தாள்.

“ஓகே!”என்று அனுப்பினாள்.

‘எஸ்! எஸ்!’என்று மகிழ்ச்சியானவன்.

“சூப்பர்! குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்… ப்ரம் டுமாரோ ஃபர்ஸ்ட் டே”என்று மெசேஜை முடித்தான்.

ஸனா எஸ் சொன்னாலும், ‘நம்ம செய்வது சரியா’என்று எண்ணி குழம்பினாள்.

பிறகு ‘ஓகே’ என தூங்க முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டாள்.

அதியனவள் அடுத்து…

Advertisement