Advertisement

அனைவரும் வீட்டிற்குள் நுழைந்த முதல் ஒவ்வொர் முகங்களையும் ஆராய்ந்தார் அன்னம் பாட்டி.

அனைவர் முகமும் பிரகாசமாக இருந்தது, அதில் இருந்து பெண்ணைப் பிடித்து விட்டது என புரிந்தது அவரிற்கு.

அதியனை தேடினார் அவன் மனமிற்கு பிடித்து இருக்கிறதா என தெரிந்துக் கொள்வதற்காக.

அவன் வெளியில் போன் பேசியபடி நின்றான்.

சங்கவியை அழைத்த பாட்டி”அண்ணன் எங்கடா…?”என்று கேட்டார்.

“வெளியில் நிக்குறாங்க பாட்டி”

“பொண்ணு பிடிச்சு இருக்கா…?”

“ம்ம்ம்! சூப்பர் பாட்டி, செம அழகு. தாத்தா செலக்சன் தப்பா இருக்குமா…?”என்று கூறிவிட்டு ஓடினாள்.

‘பொண்ணுப் பத்தி கேட்டா, அழகை மட்டுமே சொல்லிட்டு ஓடுறா’ என எண்ணியவர், ‘சரி அவ சின்னப் பொண்ணு அத மட்டும் தானே பார்ப்பாள்’ என்றுணர்ந்து, பின்னால் வந்த மருமகள்களை கவனித்தார் மீண்டும்.

“என்ன பொண்ணு எப்பிடி இருந்துச்சு..? நல்லா பேசுனுச்சா…?”என்று பொதுவாக கேட்டார் மூன்று மருமகளிடமும்.

“ம்ம்ம்! பொண்ணு செம அழகு அத்தை” என்றார் மாலினி.

“அவங்க அம்மா அவ்ளோ அருமையாக பழகுறாங்க அத்தை”என்றார் தேவிபிரியா.

“நம்ம அதியனுக்கு நல்ல பொருத்தமான பொண்ணு அத்தை”என்றார் மல்லிகா.

அன்னம் மூவரைப் பார்த்து முறைத்துவிட்டு.

“பொண்ணு எப்பிடி பழகுற ரகமுனு கேட்டால், அம்சமாக இருக்கு, அவள் அம்மா நல்லா பேசுறாங்க, அதியனுக்குப் பொருத்தமுனு சொல்றீங்க, இதான் நீங்க பொண்ணு பார்க்கப் போன லட்சனமா…?” என்று கேட்டார்.

“இல்ல அத்தை!”என்று தேவி இழுக்க.

“பொண்ணு பத்தி கேட்கனுமுனா அதியன் கிட்ட தான் கேக்கனும் அத்தை, ஏனா அவன் தான் தனியா போய் பேசினான்.”என்றார் மாலினி.

“ஆமா அத்தை! நான் கூட பேசலை பொண்ணு கிட்ட, என்னமோ போங்க பிள்ளையை பெத்ததோட சரி, மத்த எந்த உரிமையும் இல்லை”என்று புலம்பிவிட்டு சென்றார் மல்லிகா.

அன்னம் மருமகள்களை மாறி மாறிப் பார்க்க, அவரின் நினைவுகளை களைக்கவென உள்ளே நுழைந்தான் பேரன்.

தேவியும், மாலினியும் நகர்ந்தனர். அன்னம் அதியனை கவனித்து அருகில் வருமாறு அழைத்தார்.

“சொல்லுங்க பாட்டி…?”

“எதுக்கு கூப்புடப் போறேன். பொண்ணு பத்தி கேட்க தான், என் இளவரசனுக்கு ஏத்த இளவரசியா அவள்”என்றார் அவன் கன்னத்தை தடவியவாறு.

“ம்ம்ம்! மத்தவங்க கிட்ட கேக்கலையா பாட்டி…?”

“கேட்டேன், எல்லாம் பொண்ணு அம்சம், அழகு, உனக்கு பொருத்தமுனு சொல்றாங்கள தவிர குணத்தைப் பத்தி சொல்லலையே…”

“எனக்கு எப்பிடி தெரியும் பாட்டி அதப்பத்தி எல்லாம், பொண்ணு பார்க்க ஓகே தான்..”என்றான் பொதுவாக.

“என்ன இப்பிடி சொல்லிட்ட, நீ தான் தனியா போய் பேசினீயே..? அத வச்சு கண்டுப்பிடிக்க தெரியாத உனக்கு…?”

சிரித்த அதியன்”பாட்டி! பொண்ணு கூட தனியா பேசின அந்த பத்து நிமிடத்தில் நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்க முடியுமா…?”

“ஏன் முடியாது, பார்க்கும் பார்வை அவளின் நேர்மையை சொல்லும், சிரிக்கும் சிரிப்பு அவளின் அந்தாதியை சொல்லும், பேசும் வார்த்தைகள் அவளின் தனித்துவத்தை, அவள் யார் என்பதை சொல்லும், எல்லாத்துக்கும் மேல அவள பார்த்த அந்த நேரம் உனக்கு நேர்மறையான எண்ணம் தோன்றி இருக்கனும், இல்ல அவள் கூட பேச சந்தர்ப்பத்தை தேடி இருக்கனும். இதில் எல்லாமே நடக்கனுமுனு இல்லை ஏதோ ஒரு விதமான ஈர்ப்பு இருந்தால் போதும் உனக்கு பொண்ணைப் புடிக்க ஆரம்பிச்சுட்டுனு அர்த்தம் கண்ணா…” என்றார் வாஞ்சனையாக.

“ஓ! இவ்வளவு இருக்கா பாட்டி, நீங்க போகும் போது சொல்லி இருக்கலாமுல பாட்டி”என்றான் கிண்டலாக.

“அது சரி! இப்ப நீ பார்த்தப் பொண்ணு இதில் எந்த ரகமுனு சொல்லவே இல்லையே”

“தாத்தாக்கு, மத்த எல்லாருக்கும் ஓகே பாட்டி, நிச்சயத் தேதிக் கூட குறிச்சாச்சு, நான் என்ன வேணாமுனா சொல்லப் போறேன்..? நீங்க போய் தூங்குங்க. நானும் போறேன் டயர்டா இருக்கு”என வேகமாக தன் அறை நோக்கி நடந்தான்.

அன்னம் பாட்டியின் சிந்தனை அவனை பின் தொடர்ந்தது புருவ முடிச்சுகளோடு.

*** 

அதியன் உடையை மாற்றி விட்டு கேஷ்வெல் ட்ரஸில் பெட்டில் சாய்ந்தான்.

ஃபோனை எடுத்து பார்வையிட்டான்.

மணி பத்து எனக் காட்டியது…

ஸனாவிற்கு மெசேஜ் அனுப்பும் நேரம்.

குட் மார்னிங், குட் நைட் தாண்டி ஹாய் மெசேஜுக்கு எந்த ரிப்ளேவும் இல்லாததால். இன்று காலை எந்த மெசேஜும் அனுப்பவில்லை அதியன்.

இப்போது பத்து மணி ஆகப்போகிறது என மணியை பார்த்தவன் மனம்  ஸனாவை நினைவுப்படுத்தியது.

பாட்டி கூறியவற்றை நினைவுப் படுத்தியவன் மனதில் மஞ்சரி எதற்குமே பொருந்தாமல் ஸனா அனைத்திலும் பொருந்தி வந்தாள்.

அவன் மனமோ அதிர்ச்சி ஆகியது, எழுந்து அமர்ந்தவன் தன் தலையில் தட்டிக் கொண்டான்.

‘அடேய்! நீ எதுக்கு மஞ்சரி இடத்தில் ஸனாவை யோசிக்குற..? மஞ்சரி, தாத்தா பார்த்த பெண். ஸனா ஒரு நடிகை..’

அவன் மனமோ’ஸனா நடிகை தான், ஆனா மஸ்தூரா ஏதோ நெருக்கமான இடம் போல் தோன்றவில்லை உனக்கு.?’என்றது.

‘ம்ம்ம்! ரெண்டும் ஒன்னு தான், நீ அடங்கு’என்றவன் போனில் வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்தான்.

ஆட்டோமெட்டிக்காக கை ஸனா நம்பர் நோக்கிப் போக, அதில் அவள் ஆன்லைனில் இருப்பது தெரிய வந்தது.

அதியனிற்கு க்யூரியாசிட்டி வந்தது, ‘அவள் எதற்கு ஆன்லைனில் இருக்காள். ஒரு வேளை என் மெசேஜிக்கு வெயிட்டிங்கா..?’என்ற சந்தேகம் ஏற்பட்டது.

பத்து மணியை தாண்டியப் போது அதியன் அமைதியாக ஃபோனை பார்த்தான்.

ஸனாவிற்கோ காலையில் மெசேஜ் வரவில்லை என்றதும் ஏதோ பாசிட்டிவ் வைப் குறையுற மாதிரி தோன்றியது.

கடந்த இரண்டு மாதங்களாக தினசரி வந்த குறுஞ்செய்தியால் அவளுக்கு எந்த தொந்தரவும் இல்லை. அது அவள் மனதிற்கு ஏதோ ஒரு சந்தோஷத்தை கொடுத்தது.

நேற்று அதியன் அனுப்பிய ‘ஹாய், ஹவ் ஆர் யு..?’ மெசேஜ் கூட அவளுக்கு பெரிதாக வித்தியாசத்தை கொடுக்கவில்லை.

ஆனால் காலையில் மெசேஜ் வராதது ஒரு விதமான ஏமாற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

ஒரு பெரிய நடிகை இப்பிடி ஒரு அன்னோன் மெசேஜுக்கு வெயிட் பண்ணுவது அவளுக்கே ஆச்சிரியமாக இருந்தது.

இது தான் சைக்காலாஜிக் மெத்தடா…? மனசு ஒரு விதமான ஏமாற்றத்தை ஏற்கனவே சந்தித்து இருந்தாலும் அடுத்து வரப்போற நிகழ்வுக்கு எப்பிடி எதிர்ப்பார்க்குது என்று தெரியவில்லை.

ஸனாவின் மனம்’அது பொண்ணா..? பையனா..? தெரியல, எந்த மாதிரி ஆளுனு தெரியல, நீ ஏன் எதிர்ப்பார்ப்பை கொடுக்குற’என்றது.

‘உண்மை தான், நீ சொல்றது புரியுது ஆனா மூளை மெசேஜ் வருதானு பார்க்க சொல்லுது. பட் நீ சொல்றது கரெக்ட்’என்று போனை தூக்கி ஓரமாக வைத்தாள்.

***

அதியன் ஸனா ஆன் லைன் விட்டு விலகியதும், ஒரு ஆர்வத்தில்.

“ஹாய்!”என்று மட்டும் அனுப்பினான்.

அது மெசேஜாக அவள் ஃபோனுக்கு போன நேரத்தில், இரு டிக் வந்தது.

ஸனா காதி குறுஞ்செய்தி சத்தம் வரவும், மூளையா…? மனசா…? என கேட்காமல் சட்டென்று ஃபோனை எடுத்துப் பார்த்து ஓபன் செய்துவிட்டாள்.

அவள் முகத்தில் சிரிப்பு வந்தது. மெசேஜ் புளு டிக் வர, அதை பார்த்த அதியன் முகத்தில் சிரிப்பு விரிந்தது.

இருவரும் ஃபோனையே பார்த்தனர்.

ஸனாவின் கைகள் ஆட்டோமெட்டிக்காக
“ஹாய்”என்று தட்டியது.

தனக்கு மெசேஜ் ரிப்ளே வந்திருப்பதை நம்பாத அதியன் ஏதோ டீன் ஏஜ் பசங்க சந்தோஷத்தில் குதிப்பது போல் பெட்டில் இருந்து ஜம் பண்ணி அமர்ந்து தலைமுடியை கோதினான்.

ஸனா உணர்வு மீண்ட நேரத்தில் தான், தானும் மெசேஜ் அனுப்பியதை உணர்ந்தாள், நாக்கைகடித்து, கண்களை சுருக்கினாள்.

‘அய்யோ ஸனா என்ன பண்ணி வச்சு இருக்க..? அது பொண்ணா, பையனா..? இல்ல எதும் ராங் பெர்சனோ இப்பிடி நீ பாட்டுக்கும் சாட் பண்ணி  இருக்க..’ என்று அதட்டியது மனம்.

அவளை யோசிக்க விடாமல் அதியன்
“ஹவ் ஆர் யு..?”என்று அனுப்பினான்.

ஸனாவின் மனம் யோசனையில் ஆழ்ந்தது.

‘சரி யாருனு கேட்போம். சும்மா கண்ணாமூச்சி ஆடக் கூடாது’என தோன்றவும்.

“ஐ ஆம் ஓகே.. யு நோ ஹூ ஐ ஆம்..?”
என்று அனுப்பினாள், ஒரு வேளை தெரியாமல் அனுப்புகிறார்களோ என்று.

அதியன் நக்கலாக சிரிக்க,
இப்போது தெளிந்திருந்தான், ‘பரவாயில்லை அதியா உன்னோட பிளான் வொர்க் ஆகுது’என.

“யாருனு தெரியாமயா, ப்ரொபைல் பிக்சர் உங்களை வச்சு இருக்கேன்”

‘ஓ! ஷிட் ஆமால இத மறந்துட்டேன் பாரு’ என நினைத்தவள்.

“ஓ!”என்று அனுப்பினாள்.

“திங் அபௌவுட் ஹூ ஐ ஆம்…?”

“சிம்பிளி டோன்ட் நோ அபௌவுட் யு, ப்ளீஸ் நாட் வேஸ்ட் மை டைம்..”

“ஐ ஆம்  பாய் ஒன்லி, பட் ஐ ஆம் நாட் யுவர் ஃபேன் மஸ்து..”என்று அனுப்பினான்.

ஸனா மனதிற்கு அது வித்தியாசமாக இருந்தது. ஃபேன் என்று சொல்லி பேசுபவர்கள் தான் அதிகம் அவள் சந்தித்தது. அது மட்டுமில்லை அவனின் மஸ்து என்ற அழைப்பும் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

ஆனாலும், “சோ வாட்! ஐ ஆம் நாட் வொரி அபௌவுட் தட் யு ஆர் கேர்ள் ஆர் பாய். ஒய் ஆர் யு மெசேஜ் மி லாஸ்ட் ப்வியூ டேஸ் அன்ட் நவ்..”

“உண்மையை சொல்லவா இல்ல பொய் சொல்லவா…?”

“ஜெஸ்ட் ஆன்சர் மி..?”

“உண்மையை சொல்லனுமுனா  ஐ வாண்ட்  யுவர் லவ்.. பொய் சொல்லனுமுனா ஐ வாண்ட்  யுவர் ப்ரண்ட்ஷிப்…”

“ஆர் யு மேட்…? ஹவ் டிட் யு கெட் மை பர்சனல் நம்பர்…?”

“காட் இட் பெர்சனலி, ஜெஸ்ட் ஆன்சர் மி”

“ஹலோ! டோன்ட் ஆர் ஆர்டர் டு மி, டு மன்த்ஸ்ஸா வந்த மெசேஜில் நான் யோசிச்சேன் இப்பிடி ஏதாவது இருக்குமுனு பட் அட்லாஸ்ட் யு ஆல்சோ சேம் போட்..”

“எஸ்! எஸ்! ஃபர்ஸ்ட் டே இப்பிடி பேசி இருந்தால் நீங்க ரிப்ளே பண்ணி இருப்பீங்களா…? பிளாக் தான் பண்ணி இருப்பீங்க…”

“ஏன் இப்ப பண்ண மாட்டேனா…?”

“ம்ம்ம்! வாய்ப்பு கம்மி தான்.”

“இப்பிடி ஃபோனில் பேசுவதிலே தெரியுது உங்க தைரியம்”

“ஹலோ மேடம்! நேரில் உங்க பக்கத்தில் வர முடியுமா…? அதான் ஃபோனில் ப்ரோபோஸ் செய்றேன்…”

“ம்ம்ம்! எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியுது, நீங்க சினி ஃபீல்டு இல்லை நயன்டி பெர்சன்..”

“எப்பிடி சொல்றீங்க…?”

“இல்ல! அந்த மாதிரி இருந்தால் நேரில் தூது வந்திருக்கும், இல்லை நேரில் ஆளே வந்திருக்கும். ஏனா ரெண்டு மாசம் வெறும் குட் மார்னிங், குட் நைட் மட்டுமே அனுப்ப யாரால் முடியும்”என நக்கல் ஸ்மைலிப் போட்டு விட்டாள்.

“ஹஹஹஹ! யூ ஆர் வெரி க்ளெவெர் மஸ்து… ஐ ஆம் நாட் ப்ரம் யுவர் ஃபீல்டு. அப்கோர்ஸ் ஐ டிட்டின்ட் ஸி யுவர் பிலிம்ஸ் மோர், டு ஆர் மோர் மூவிஸ் ஒன்லி ஸீன்.”

“ம்ம்ம்!”

“ஓகே! ஆன்சர் மி, உண்மை…? பொய்….?”

ஸனாக்கு சிரிப்பு வந்தது.

‘யாரு இவன்.? யாரோ தெரிந்தவன் தான். இந்த நம்பர் வாங்கும் அளவுக்கு நெருங்கிய வட்டத்தில் இருப்பவன் போல..’என்று யோசித்தாள்.

“ஹலோ மேடம்…?”

ஸனா உணர்வு வர, “நான் இதுக்கு பிறகும் ரிப்ளே அனுப்புவேனு நம்புறீங்களா….?”

“யா! டெப்னெட்லி…”

“ஓவர் கான்பிடென்ட்..”

“ஐ லவ் யூ..”

ஸனாவிற்கு சீரியஸாக தெரியவில்லை.

“இது மாதிரி நிறைய கேட்டாச்சு.. ஓகே! டேக் கேர்.. பை..”என்று போனை தூக்கிப் போட்டாள்.

“நைஸ், டேக் கேர் மஸ்து… மை நேம் இஸ்
ANR…”என்று போட்டுவிட்டு,

அதியனும் போனை நகர்த்தினான்.

தான் யார்..? என்று யோசிக்கவும், அவள் மீண்டும் இணைப்புக்கு வரவும் அடுத்த பதிவை தொடர டிவிஸ்ட் வைத்தான்.

இருவரும் ஃபோனை பார்க்கவில்லை அதன்பிறகு.

ஆனால் மனங்களில் மாற்றம் நிகழ ஆரம்பித்து இருந்தது.

அதியன் மனதில் ஸனா பேசியதில் எந்த நடிப்பும் தெரியவில்லை. இயற்கையாக தோன்றியதை பேசினாள் என்று பதிவாகியது. ஆனாலும் அவளை தன் வலையில் விழ வைத்து நண்பர்கள் முன் ஸனா என் வலையில் விழுந்துவிட்டாள் என சொல்ல காத்திருந்தான்.

ஸனா மனதில் எந்த வித எண்ணமும் வரவில்லை..

காதல்….? அது தன் வாழ்க்கையில் படத்தில் வருவதுப் போல்  நிழலாக இருக்கிறது என நினைக்க செய்தது.

அதியனவள் அடுத்து…

Advertisement