Advertisement

காலை ஆறு மணியளவில் ஒரு ‘குட் மார்னிங்’ இரவு பத்து மணியளவில் ஒரு ‘குட் நைட்’ இது மட்டுமே மிதந்தது தினசரி செல்பேசியில் குறுஞ்செய்தியாக, ஒரு மாதம் கடந்து இரண்டு மாதங்கள் நெருங்கிய நிலையில்.

அதியன் மனதில் ஏதோ ஒரு உந்துதலில் தோன்றியது தான் குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணம்.

ஆனால் முதல் ஒரு மாதம் வரை ஸனா, அதியனிடம் வரும் குறுஞ்செய்திகளை நேரம் கிடைக்கும் போது மட்டுமே திறந்துப் பார்த்தாள்.

இதில் அதியன் கவனித்த ஒன்று அடுத்த இரண்டாவது மாதத்தில் ஸனா குறுஞ்செய்தியை அவன் அனுப்பிய அடுத்த நிமிடம் பார்த்திருந்ததை.

புளு டிக்கை வைத்து கண்டறிந்தான். அவன் மனதில் வெற்றித் தெரிந்தது.

‘ஆஹா!’என்று மனம் சந்தோஷத்தில் மிதந்தது.

இரண்டாவது மாதம் அந்த புளு டிக் உடனே வந்தது அவனின் முதல் வெற்றியாக எண்ணினான். 

ஸனா முதலில் அது ஏதோ அன்நோன் மெசேஜ் என்று தான் பார்த்தாள். பிறகு அந்த மெசேஜ் அவளுக்கு பூஸ்ட் அப் மாதிரி ஒரு எனர்ஜியாக தெரிய தொடங்கியது.

இது கிட்டதட்ட சைக்லாஜிக்கல் திங்கிங் போல் தான்.

கடந்த இரு மாதமாக வேற எந்த தொந்தரவும் இல்லாமல் வெறுமனே குட் மார்னிங், குட் நைட் மட்டுமே வர, அவளின் மனதிற்கு அது ஒரு புன்னகையை மட்டுமே தந்தது.

‘யாராக இருக்கும்…?’என்ற க்யூரியாசிட்டி  அதிமாகியது அவளிற்கு.

ஸனா அஜியிடம் இது பற்றி சொல்லவில்லை.

எதற்கு சொல்லி பெரிய விசயமாக காட்ட வேண்டும், ‘ஒன் சைடு மெசேஜ் வேற, எதுவும் பிரச்சனை வந்தால் பார்த்துக்கலாம்’என நினைத்தாள்.

ஸனா ரிப்ளே செய்ய போறதில்லை சோ ‘நோ ப்ராப்ளம்’ என்பது அவள் எண்ணம்.

*** ***

இரவு உணவு வேளை முன்  நவநீதம் ஹாலில் அமர்ந்திருந்தார்.

நவநீதம் பரணியோடு அமர்ந்து ஏதோ அக்கவுண்ட் செக் பண்ணிக் கொண்டு இருந்தார்.

மற்றவர்களும் அங்கு தான் அவரவர் வேலைகளில் லயித்திருந்தனர்.

பெண்கள் கிச்சனில், அன்னம் பாட்டி ஒரு வரலாற்று காவியத்தை படித்தப்படி தனி நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

பெண் பிள்ளைகள் டிவிப் பார்த்துக் கொண்டிருக்க, டிவியில் ஓடியது நியூஸ் தான் அது அந்த வீட்டின் ரூல்ஸ் சாப்பிடும் முன் நியூஸ் பார்க்க வேண்டும் என்பது.

சங்கவி”இந்த நியூஸை பார்க்குறதுக்கு தூங்கிடலாம் சாரு”என்றாள்.

“ம்ம்ம்! நான் அதை தான் பண்றேன்..”

“அக்கா! அவ கண்ணாடிப் போட்டுட்டு வரதே இதுக்கு தான்”என்றாள் சைந்து.

“கேடி புள்ள, இரு பெருசு கிட்ட போட்டுக் கொடுக்குறேன்.”என்ற சங்கவியை,

“போங்க சொல்லுங்க, நான் ரீப்பீட்டு அடிப்பேன், தாத்தா நீங்க கூட தான் கண்ணாடிப் போட்டு இருக்கீங்க தூங்குறதா அர்த்தமா”என்பேன்.

“விவரம் தாண்டி, ஆமா பாரி, அதியன் அண்ணன்களை காணும்..”என்றாள் சைந்து.

“இன்னும் வரவில்லை, அதுங்க சரியான ஆளுங்க வீட்டுக்கு வந்தால் நம்மளை மாதிரி மாட்டிட்டு முழிக்கனுமுனு சரியா சாப்பிடுற நேரத்துக்கு வருதுங்க, நம்ம பாரு பொண்ணா பொறந்ததால் புலம்பிட்டு இருக்கோம்..” என்றாள் சங்கவி.

அதியனும், பாரியும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

பாரி தங்கைகளைப் பார்த்து சிரித்தான் நக்கலாக.

“என்னப்பா வந்தாச்சா, ஏன் லேட்..?”என்று கேட்டார் நவநீதம்.

“அப்பா! நான் தான் பிரைடல் சாரிஸ் நியூ டிசைன் வருதுனு, செக் பண்ணிட்டு வர சொன்னேன்..”என்று கூறியப்படி வந்தார் சேரா.

சேரர் தம்பிகளும் வந்தனர் இரவு உணவிற்காக.

அதியன்”ஆமா தாத்தா”என்றான்.

“சரி! எத்தனை டிசைன்ஸ் வந்து இருக்கு..?”

“ஐந்து டிசைன்ஸ் தாத்தா, எல்லாமே விஐபி ரேஞ்ச் தான், குறைந்தது லட்சம் தான் மதிப்பு..”

“ஓ! சரி நாளைக்கே அதுக்கு விளம்பரம் கொடுத்துங்க.”

“தாத்தா! இது ரொம்ப ஸ்பெஷல் வெரைட்டி, நம்ம கொடுக்குற ஆட் தான் டிஸ்பிளே அட்ராக்சன்.. பெரிய சேனலில் ஸ்பான்சர் கொடுப்பதால் ஆட் ஈஸி. பட் இந்த புடவைகளை அட்வெடைஸ் கொடுக்க நல்ல பெமிலியர் மாடல் வேணும்..”என்றான் அதியன்.

“ஆமாப்பா! அதியன் சொல்வது சரி தான், ஆட் தான் இதுக்கு முக்கியம்”என்றார் பாண்யும் கூடவே.

“புரியுது! அதில் என்ன பிரச்சனை, ஏற்கனவே எடுக்குற ஆட்களிடம் பேசுங்க…”

“இல்லப்பா, அவங்க எல்லாம் சீரியல் ஆக்ட்ரிஸ்ட், நியூ ஃபேஸ் ஹீரோயின்ஸ். சோ புதுசா யாராவது ட்ரை பண்ணலாம்”என்றார் சோழா.

“ஆமாங்கய்யா! இப்ப எல்லாம் விளம்பரம் தான் முக்கியமா இருக்கு, பாருங்க நேத்து பாக்குறேன் ஒரு துவட்டுற துண்டுக்கு அத்தனை விதமான போஸ் கொடுத்து ஆட். அதுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு துண்டை கட்டிட்டு வந்து பேசுதுங்க, திஸ் இஸ் குட் ப்ராண்ட் பாத் டவலுனு”என்றார் பரணி அவர் பங்கிற்கு.

சங்கவி, சாரு, சைந்து சிரித்தனர் தங்களுக்குள்ளே.

“சரி, சரி யாரை கூப்புடலாமுனு முடிவு பண்ணுங்க, எவ்ளோ என்னனு பேசலாம்..”என்றார் நவநீதம்.

“யாராவது இப்ப ஃபீல்டில் ஆக்டிவாக இருக்க நடிகையை தான் ஃபிக்ஸ் பண்ணனும் தாத்தா”என்றான் பாரி.

அந்த நேரத்தில் சரியாக, நியூஸில் சினி டைம் ஓடியது. அதில் ஸனாவின் அப்கம்மிங் படத்தின் ட்ரைலர் துணுக்குகள் நகர்ந்தது.

அதை பார்த்த சைந்து உடனே பாரியிடம்.
“பாரி அண்ணா! இவங்க ஓகேயானு பாருங்க.. இவங்க தான் இப்ப ஃபீல்டில் நம்பர் ஒன்..”என்றாள்.

அனைவரும் பார்க்க, அங்கு ஸனா தெரிந்தாள்.

அதியன் மனதில்’சான்ஸே இல்லை, தாத்தா இவளை அக்செப்ட் பண்ண மாட்டார்..’என்று எண்ணி முடித்த வேளையில்,

“சரி, சம்பளம் பேசுங்க…”என்றார் நவநீதம்.

“தாத்தா, அந்த  ஹீரோயினா அன்னைக்கு அவார்ட் கொடுத்ததுக்கு திட்டுனீங்க, இப்ப ஓகே சொல்றீங்க…”என்று கேட்டான் அதியன்.

“அதியா! அது வேறு, இது வேறு. இது தொழில் நமக்கு தேவை இருக்கும் போது பயன்படுத்திட்டு காசைக் கொடுத்து அனுப்ப போறோம், எல்லாம் காசு தானே. சும்மா யாரு நடிப்பாங்க…? தொழிலில் வளைஞ்சுக் கொடுக்கனும், அது அவார்ட், அதை நம்ம தான் தேர்வு செய்யனும் யாருக்கு கொடுக்கனுமுனு நம்ம ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி…”என்றார்.

அன்னம் பாட்டி காதில் வாங்கி கொண்டு
“தலையில் கணம் கூடினால் கால்கள் தரையில் நிற்காதாம் பிறகு தலை மண்ணினை கவ்வுமாம் என்றானாம் பிராகத சுவாமி அந்த கயவனிடம்”என்று வாக்கியத்தை வேகமாக படித்தார்.

“பாட்டி!”என்று அழைத்தான் அதியன்.

“என்ன பேராண்டி..?”என்று நிமிர்ந்தார். 

“மெதுவாக படிங்க…”

“தேவையான வாக்கியத்தை தேவையான இடத்தில் சத்தமாக சொல்லனும் அதியா, நீ ஒரு நாள் புரிஞ்சிப்பாய்…”என்று தன் வாசிப்பை சத்தமின்றி தொடர்ந்தார்.

“பாட்டிக்கும், தாத்தாக்கும் என்ன தான் பிரச்சனைடி. யாரை கேட்டாலும் சொல்ல மாட்டேனுங்குறாங்க…”என்று மெதுவாக கேட்டாள் சாரு.

“யாருக்கு தெரியும், தாத்தா அப்பவே இப்பிடி தான் போல ஹிட்லர், அதான் பாட்டி பேசுறதை விட்டுட்டாங்களா இருக்கும்”என்றார் சங்கவி.

நவநீதம் மனைவியின் வார்த்தைகளை காதில் வாங்காமல், “சரி பரணி, நீ நாளைக்கே விளம்பரத்துக்கு தேதி வாங்கிடு, சம்பளம் பத்தியும் பேசிடுங்க, ஆட் கம்பெனிக்கும் இன்பார்ம் பண்ணுங்க. பாரி பார்த்துப்பான் சூட்டிங் டைம்ல. அதியா நீ ஃபைனலா வர ஆட் ஓகே வானு செக் பண்ணிக்கோ. அப்புறம் ஒரு விசயம் மறந்துட்டேன். நாளைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம்..”

“என்ன மாமா, என் கிட்ட கூட சொல்லவில்லை….?”என்று கேட்டு விட்டார் மல்லிகா.

“சேரனுக்கும், சோழாக்கும் தெரியும். பாண்டி நீ டெக்ஸ்டைஸில் இருந்ததால் சொல்ல முடியல. நாளைக்கு ரெடியாகுங்க எல்லாரும் போறோம். இது முடிவான இடம் தான் ஒரு முறைக்காக தான் பாக்கப் போறோம்..”என்றார்.

“தாத்தா! பொண்ணு போட்டோ காட்டலாமுல அண்ணனுக்கு”என்று கேட்டான் பாரி.

“நாளைக்கு நேரில் பார்க்கப் போறோம், அதுக்குள்ள போட்டோ பார்த்து என்ன பண்ணப் போறீங்க, நேரில் பாத்துக்கலாம். இப்ப போய் டிரஸ் மாத்திட்டு சாப்பிட வாங்க.”என்று எழுந்தவர்..

“சாப்பாடு ரெடியா..?”என்று டைனிங் சென்றார்.

அதியனும், பாரியும் தங்கள் அறைக்கு சென்றனர் ரெப்பெரஷ் ஆகி வர.

மல்லிகா மனமே ஆறவில்லை, பொருமினார் கிச்சனில்.

“ஏன் அக்கா! நான் பையனோட அம்மா தானே ஒரு வார்த்தை சொல்ல கூடாத…?”என்றார் தேவியிடம்.

“அதியன் தான் வீட்டின் மூத்த வாரிசுனு சொல்லிட்டார், அவர் இஷ்டம் தானே, இது என்ன புதுசா மல்லி..?”

“ஆமா அக்கா, உங்க வீட்டுக்காரர் கிட்டயாச்சும் சொல்லி இருக்கார், ஆனா என் வீட்டுக்காரருக்கும் தெரியாதாம். எங்களை மாமா மதிக்குறதே இல்லை ஆம்பளை பிள்ளை பெத்துக் கொடுக்கலனுப் போல..”என்றார் மாலினி சைடுக் கேப்பில்.

“என்ன அங்க சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருக்காங்க, இங்க மாநாடு நடக்குதா..? பொண்ணு பார்க்கப் போறதுக்கு தனி தனியா அழைப்பிதழ் கொடுக்கனுமா, சொல்லியாச்சுல நாளைக்கு கிளம்புங்க. இப்ப செய்ய வேண்டியதை செய்யுங்க”என்று அதட்டிவிட்டு வெளியில் சென்றார் அன்னம் பாட்டி.

“இந்த அத்தை, பேசலைனாலும் மாமாக்கு தான் சப்போர்ட். பாரு எப்பிடி பேசிட்டு போறாங்கனு”என்று புலம்பினார் தேவி.

“வாங்க அக்கா, லேட் ஆச்சு”என்ற மாலினி முன் செல்ல, அனைவரும் வெளியில் சென்றனர்.

***

“அண்ணே! உன் கதை முடியும் நேரமிது.”என்று பாடலைப் பாடினான் பாரி.

“எதுக்கு அண்ணே…?”என்று பதில் பாடல் பாடினான் அதியன்.

“நாளைக்கு பொண்ணுப் பார்க்கப் போறோம் அடுத்து நிச்சயம் அப்புறம் கல்யாணம். அப்புறம் புரோமோஷன் திகார் ஜெயில் தான்..”

“அடப்போடா! எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. கண்டிப்பா தாத்தா எனக்கு ஏத்தப் பொண்ணை தான் பார்த்திருப்பார்”

“எப்பிடி அண்ணா, இந்த காலத்தில் போய் இப்பிடி இருக்கீங்க. ஆனாலும் தாத்தா போட்ட கோட்டை தாண்ட மாட்டீங்க…?”

“எஸ்! எஸ்! நாளைக்குப் போறோம் என்ஜாய் பண்றோம்.”

“ஒரு வேளை தாத்தா பார்த்தப் பொண்ணு உங்களுக்கு ஆப்போஸிட் படிக்காம, அழகு இல்லாம பணம் மட்டும் இருந்தா?”

“அடேய் தாத்தாக்கு ஒரு டேஸ்ட் இருக்கு, அவரை பத்தி எனக்கு தெரியும், எனக்கு ஏத்த படிப்பில், அழகில், பணத்தில் எல்லாம் பொருந்துற மாதிரி தான் பார்த்திருப்பார்..”

“எல்லாம் ஓகே, உங்க மனசுக்குப் புடிக்கனுமே…?”

“புடிக்காம எங்கப் போகப்  போது. எப்பிடி இருந்தாலும் நோ சேன்ஞ்ச். ஐ ஆம் நாட் வொரி. இந்த வீட்டுக்கு, தாத்தாக்கு புடிச்சா போதும்..”

“அப்ப ஓகே. நீங்களே ஹேப்பி. நாளைக்கு பட்டையை கிளபப்புவோம்..”

****
இரவு பத்து மணி..

அதியன் ஸனாவின் நம்பரிற்கு “குட் நைட்”மெசேஜ் அனுப்பினான்.

அதை உடனே பார்த்து விட்டாள்.

இரு மாதங்கள் முடிந்த நிலை அது.

அதியன் மனதில் இன்று ஒரு க்யூரியாசிட்டி தோன்றியது.

இன்று அடுத்த லெவலிற்குப் போனால் என்ன…?

‘எஸ்! வில் ட்ரை..’என அதியன் அடுத்த மெசேஜை அனுப்பினான்.

“ஹவ் ஆர் யு….?”

ஸனா அடுத்த மெசேஜ் டோன் வர. ஏதோ ஒரு மெசேஜ் என எடுத்துப் பார்த்தாள்.

இன்று புதியதாக’ஹவ் ஆர் யூ…?’ வந்திருந்தது.

ஸனா மனம் ஆக்ஸிலேசனில் சுழன்றது. ரிப்ளே பதில்  அனுப்ப டைப் செய்யப் போனவள், நிறுத்தினாள்.

மனதில்’வேணாம்! திஸ் இஸ் நாட் குட்..’ என போனை வைத்துவிட்டு படுத்து விட்டாள்.

ஆனால் வாட்ஸ் ஆப்பில் அவளின் மெசேஜ் பேஜில் இருந்தவன், புளு டிக் வர வெயிட் செய்தான்.

அவள் ஏதோ டைப் செய்கிறாள் என தெரிய ஆர்வமானான்.

ஆனால் அடுத்த நொடியே ஆப் லைன் போனவளை நினைத்து சிரித்தான்.

‘ஹஹஹ! அடுத்த லெவெல் வொர்க் ஆகுது மஸ்தூரா!’என்றான் அவனை அறியாமல் அவளின் பெயரை மாற்றி ஸனா என்றில்லாமல் மஸ்தூரா என்று.

***

பரணி கான்டெக்ட் செய்தது அஜியை தான்.

‘ஆட்’க்கு கேட்க. ஸனாவிடம் கேட்டு சொல்வதாக சொன்னாள் அஜி.

ஸனாவிடம் அஜி கூறினாள். 

“இப்ப இருக்க மூவி ஷெடியுலில் இது எதுக்குடி…? ஜெஸ்ட் ஆட்  தானே…”

“இந்த கடை நல்ல பேமஸ்டி, அன்று அவார்ட் கொடுத்தாரே அதியன் அவங்க ஷாப் தான். ஆட் தான் இப்ப ஹைலைட்டி, டெய்லி வீட்டில் பெண்கள் பார்ப்பது, அதும் பிரைடல் சாரிஸ் ஆட் உனக்கு நல்லா இருக்கும்..”என்றாள் அஜி.

“டைம் வேணுமுல….?”

“ஓகே நைட் டைம் கேக்குறேன்”

“வேண்டாம்! டே டைம். சண்டே ஓகேவானு கேளு. எந்த சண்டேவா இருந்தாலும். பட் ஒன் டே தானு சொல்லு..”

“ஓகேடி”என்று அஜி, பரணியிடம் அமௌன்ட் பேசினாள்.

“அதிகமாக இருக்கும்மா…?”

“சார்! இவங்க ‘சி’யில் சம்பளம் வாங்குறாங்க, நீங்க டெய்லி பேசிஸ் ஆடில் கேக்குறீங்க. அப்ப அதுக்கு ஏத்த ரேட் தான் சொல்லனும். பிகாஸ் அவங்க  கரண்ட் மார்கெட் அதுக்கு கீழ போகாது. வேணுனா வேற யாரையும் ட்ரைப் பண்ணுங்க..” என்றாள் அஜி.

பரணி அதை அதியனிடம் தான் டிஸ்கஸ் செய்தார்.

அதியன்”அங்கிள்! அவங்க பாயிண்ட் கரெக்ட் தான், எனக்கு ஓகேனு தோணுது ஆனா தாத்தா கிட்ட கன்பார்ம் பண்ணிடுங்க, எனக்கு மீட்டிங் இருக்கு”என கேஷ்வலாக சொல்லிவிட்டு போனான்.

பரணியும் நவநீதத்திடம் கேட்க, முதலில் யோசித்தவர் பிறகு சரி என்றார்.

“என்ன பரணி செய்றது, அந்த நடிகைகளுக்கு இப்ப தான் மார்கெட் வயசான சம்பாதிக்க முடியாதுல, அதான் கிடைக்கும் போது பயன்படுத்த தோணுது போல. நமக்கு பிரச்சனை இல்லை, ஓகே சொல்லு” என்றார்.

அதியனவள் அடுத்து…

Advertisement