Advertisement

காலை கடன்கள் முடிந்ததும் முதல் வேலையாக செய்தித்தாள் வாசிப்பது அந்த வீட்டின் பெரியவர் நவநீதம் தான்.

அவர் படித்தப் பிறகு தான் மகன்கள் புரட்டுவார்கள்.

ஆனால் நவநீதம் படிப்பதற்கு முன் ஃபோனில் செய்திகளை வாசித்து விடுவார்கள் மகன்கள் இருந்தாலும் தந்தை பார்க்க ஒரு முறை வாசிப்பார்கள்.

பேரப்பிள்ளைகள் செய்திதாள்கள் பக்கம் வருவதில்லை, அவர்கள் ஃபோனிலே படிப்பது நவநீதம் அறிந்தது தான்.

அன்று காலையில் நவநீதம் பேப்பர் படிப்பதற்கு வந்து அமர்ந்தார் ஹாலில்.

ஆறு மணியாகியது.

அனைவரும் அந்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுதபடாத விதிமுறை.

பாரிற்கு இலேசாக தூக்கம் களைய அமர்ந்தப்படி வழக்கப் போல் ஃபேஸ்புக்கை ஓபன் செய்தான்.

தூக்கம் முழுவதும் களையாமல்  மொபைலை பார்க்க தொடங்கி,

ஸ்கோர்ல் பண்ணிக்கொண்டு வந்தவன் கண்ணில் தென்பட்ட புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் கண்களை தடவியப் படி மீண்டும் பார்க்க அது உண்மையான புகைப்படம் தான்.

அதியன் ஸனாவிற்கு அவார்டு கொடுக்கும் புகைப்படம் தான் அது.

அதில் என்ன இருக்கு…? ஒன்றுமில்லையே என்று தான் நினைக்கத் தோன்றும்.

ஆனால் விசயம் அதுவல்ல, அடுத்து ஸ்கோர்ல் ஆன ஒன்றில் இருவருக்கும் வீடியோவில் ரொமான்ஸ் சாங் போட்டு எடிட் செய்திருந்தார்கள் மீமிக்ஸ் க்ரியேட்டர்கள்.

பாரி மனதில் ஒன்றும் புரியவில்லை. இது எப்பிடி…? என அதிர்ச்சியானவன், அவசரமாக எழுந்து அதியன் அறைக்கு ஓடினான்.

அதியன் அப்போது தான் எழுந்து அமர,
பாரி வந்த வேகத்தில்”அண்ணே! நேத்து அவார்ட் பங்சனில் யாருக்கு அவார்ட் கொடுத்த….?”என்றான்.

“ஏன், அந்த ஆக்டிரிக்ஸ் ஸனாக்கு தான்..”

“ஓ! என்ன ஆச்சு தெரியுமா..?”என்று பாரி சொவதற்குள், நவநீதத்தின் குரல் ஒலித்தது.

“அதியன்!”என்ற அழைப்பில் வீடே அதிர்ந்தது.

அதியன் கேட்ட நொடியில் அதிர்ச்சி ஆகி எழுந்து வேகமாக சென்றான் ஹாலை நோக்கி.

அனைவருமே அவசரமாக ஓடி வந்தனர்.

அன்னம் பாட்டி மட்டும் அமைதியாக எட்டிப் பார்த்தார் சாமி அறையில் இருந்து, அவருக்கு விடிந்தால் புகுந்துக் கொள்ளும் முதல் இடம் அது தான்.

“என்னப்பா, என்ன ஆச்சு…?”என்று ஓடி வந்த வேகத்தில் கேட்டனர் சேர, சோழ, பாண்டி ஆகிய மூன்று மகன்களும்.

அதியன்”தாத்தா! கூப்பிட்டிங்களா…?” எனக் கேட்டான் வந்த வேகத்தில்.

பாரி தன் மனதில்’போச்சு, அண்ணன் இன்னைக்கு தொலைஞ்சார்’என முழித்து, ‘ஆனால் தாத்தா அந்த மீமிக்ஸ் பார்த்திருக்க வாய்ப்பில்லையே அவர் சோசியல் மீடியாவில் இல்லை அப்புறம் ஏன் டென்சனாக இருக்கார்’என யோசித்தான்.

“அதியன்! இது என்ன….?”என்று செய்தித்தாளை தூக்கிப் போட்டார்.

அதை பார்த்த அதியன் சாதரணமாக
“இது நேத்து அவார்ட் கொடுத்த போட்டோ தாத்தா”என்றான்.

“அது தெரியுது, நீ ஏன் இந்த அவார்ட் எல்லாம் கொடுத்த, வேற யாருக்காவது கொடுக்க வேண்டியது தானே, இந்த நடிகைக்கு தான் கொடுக்கனுமா…? பாரு எப்பிடி முதல் பக்கத்தில் உன்னோட போட்டோவை அந்த நடிகையோடு போட்டு இருக்கான். எனக்கு இது எல்லாம புடிக்காதுனு தெரியாத உனக்கு…”என்று கேட்டார்.

“இல்ல தாத்தா, இது ஜெஸ்ட் அவார்ட் கொடுத்த போட்டோ தானே, அதில் என்ன தப்பு இருக்கு..”

“முட்டாள் தனமாக பேசாத அதியன், எத்தனை பேர் எத்தனை அவார்ட் கொடுத்தாங்க அது எல்லாத்தையும் விட்டு சரியா நீ கொடுத்த போட்டோவை மட்டும் எடுத்து தனியா அந்த நிகழ்ச்சி தலைப்புக்கு போட்டு இருக்காங்கனா.. அது வேண்டுமென்றே தான்”என்றார்.

“தாத்தா! இது நார்மலான விஷயம் அவங்க ஹீரோயின் அதனால் பப்ளிசிட்டிக்காக போட்டோவைப் போட்டு இருப்பாங்க.”

“அடேய் முட்டாள்! அது பப்ளிசிட்டி இல்லை, இந்த நியூஸ் பேப்பர்காரன் செய்த வேலை, அவன் கேட்டப்ப நான் பேட்டி கொடுக்க முடியாதுனு சொன்னேன், அது மட்டுமில்லை இந்த மாதிரி மீடியா பழக்கமே வேண்டாமுனு சொன்னேன் நீ தான் தேவை இல்லாம பிஸ்னஸ் அது இதுனு ஆரம்பிச்ச, இந்தா இப்ப வேணுமுனே இதை முதல் பக்கத்தில் போட்டுட்டான்ல”

“தாத்தா! அப்பிடி இருக்காது, நீங்க தேவை இல்லாம யோசிக்குறீங்க.” என்றான் அதியன்.

“அப்பிடியா!”என்றவர், உடனே அவார்ட் ஃபங்சன் சிஇஒ விற்கு ஃபோன் செய்ய சொன்னார் பாண்டியை.

அவரும் போன் செய்து, நவநீதம் பேசுவதாக கொடுத்தார்.

“சொல்லுங்க ஐயா, நல்லா இருக்கிங்களா…?”

“நல்லா இருப்பது சரி, அதியனை அந்த நடிகைக்கு தான் அவார்ட் கொடுக்க சொல்லனுமா..? பாருங்க இன்னைக்கு அந்த நியூஸ் பேப்பரில் முதல் பக்கத்தில்
போட்டு இருக்காங்க.”

“ஐயா! நாங்க சார் கிட்ட கேட்டு தான் கன்பார்ம் செய்தோம், அவரும் மேடமுக்கு அவார்ட் கொடுக்க ஓகே சொன்னார்.” என்றார் அவர்.

அதியனை நிமிர்ந்து முறைத்தவர், “சரி! இந்த விழா எப்ப டிவி சேனலில் போடுவீங்க….?”

“சார்! அது இன்னும் பத்து நாளில்”

“அந்த விழாவில் என் பேரன் கொடுக்கும் அவார்ட் டெலஹாஸ்ட் ஆகக் கூடாது.”

“ஐயா….”என்று இழுத்தவர், “அது எப்பிடி முடியும், அவங்க மெயின் ஹீரோயின் அந்த விருதுக் கொடுப்பதை எல்லாம் நீக்க முடியாது, பிரச்சனை ஆகிடும்.”

“அது போட்டா என்னைய சீண்ட நிறையப் பேர் இருக்கானுங்க, அது என்னோட கௌரவம், ஏன் பிரச்சனை ஆகும் நான் பாத்துக்குறேன், என்ன அந்த போடப்போற சேனலுக்கு இழப்பு அதை நான் சரிப்பண்ணிக்குறேன்.”

“அப்பிடியில்லை ஐயா, நீங்க நினைக்குற மாறி அவங்க பத்தோட பதினொன்றாம் நடிகை இல்லை, இப்ப அவங்க தான் நடிகைகளிலே டாப் ஃபர்ஸ்ட் அவங்களை பார்க்கவே தான் பாதி வியூர்வர் வருவாங்க அப்பிடியிருக்க கஷ்டம், வேணுனா அந்த நியூஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணி இனி இப்பிடி போடக்கூடாதுனு சொல்லுங்க”என்றார் அவர்.

நவநீதம் போனை வைத்தார்.

“அந்த நியூஸ் ரிப்போர்டர் வேண்டுமென்றே போட்டு இருக்கான், அவன் கிட்ட போய் நான் பேசனுமா”என்று கத்தியவர்.

“அவங்க உன் கிட்ட கேட்டப்ப நீ ஏன் கொடுக்க ஒத்துகிட்ட, வேற யாருக்காவது கொடுக்க வேண்டியது தானே…?”

“தாத்தா, நான் இனி  கவனமாக இருக்கேன்”என்றான்.

அதியன் அம்மா தன் கணவனை முறைத்தார்.

பாரியின் அம்மா நக்கலாகப் பார்த்தார் அவரை. எல்லாம் வாரிசுப் போராட்டம் தான்.

“அதியன்! இது கடைசி முறையாக இருக்கனும், இதுக்குப் பிறகு இந்த மாதிரி எல்லாம் நியூஸ் பேப்பரில் நடிகைக்கு அவார்ட், விருந்துனு போகக் கூடாது, நம்ம வீட்டிற்கும் அந்த துறைக்கும் சம்பந்தம் இல்லை, தொழில் முறையை தொழிலோடு நிறுத்து “என்று கண்டித்தார்.

“சேரா! அதியனின் ஜாதகத்தை ரெடிப் பண்ணு, ஜோசியரை வரச் சொல்லு”என எழுந்துச் சென்றார்.

அன்னம் பாட்டி மனதில் சிரித்தவாறு சாமி அறையில் அமர்ந்திருந்தார்.

அதியன் தன் அறைக்குள் சென்றான். ‘இது என்னடா ஒரு அவார்ட் கொடுத்தது தப்பா.?’என தலையை உலுக்கினான்.

“அண்ணே! நீங்க அவார்ட் கொடுத்தது எல்லாம் தப்பில்லை, தாத்தா நியூஸ் பேப்பரில் போட்டோ வந்ததுக்கே இப்பிடி குதிக்குறார், இன்னும் இதை பார்த்தார், தங்களுக்கு சங்கு தான் இளவரசரே!” என்று தன் பேஸ்புக் வீடியோவை காட்டினான்.

அதில் வந்த மீமிக்ஸ் பாடலை பார்த்தவன், “இது எவன் பாத்த வேலைடா, பட்! நான் அழகா தான் இருக்கேன். பேசாம அந்த ஹோஸ்டிங் பெண் கேட்ட மாதிரி நடிக்கப் போகலாமோ…?”என்றான் சிரித்தவாறு ஹாயாக தன் கட்டிலில் அமர்ந்தவாறு.

“ஏன் பேச மாட்டீங்க..? தாத்தா முன்னாடிப் போய் சொல்லுங்க ப்ரோ…”

“ஏன்டா! அவர் முன்னாடி சொல்லி அவர் பிபியை ஏத்தனும்..”

“ம்ம்ம்! உங்களுக்கு எல்லாமே டேக் இட் ஈஸி தான். ஆமா அந்த ஸனா நேரிலும் அதே அழகு தானா…?”

“ம்ம்ம்! அதுக்கு நான் அவ வீட்டு பெட்ரூம் போய் தான் பாக்கனும்”

பாரி முறைத்தான்.

“அடேய்! மேக் அப் இல்லாம சொல்றேன். மேக் அப்யோட அழகா தான் இருந்தாள்”

“அண்ணே! நீங்க இந்த பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா பக்கம் எல்லாம் இல்லை, இருந்திருந்தா தெரிந்திருக்கும் அவங்களுக்கு எவ்வளோ ஃபேன் பேஜ்னு…”

“அது எல்லாம் பார்த்து நான் டைம் வேஷ்ட் பண்ண விரும்பல, வாட்ஸ் ஆப் போதும் அதுல இருக்க குரூபே தாங்கல. அது பிஸ்னஸ்க்கு தேவைப்படுது, வாட் டு டூ..? உனக்கு தாத்தா வேலை சரியா கொடுக்கல போல அதான் அதை எல்லாம் பாத்துட்டு இருக்க.”

“ஆமா! ஆமா! வேலை கொடுக்கல, அட போங்கண்ணா, கிடைக்குற கேப்ல பாக்குறது தான் ஒரு என்ஜாய்மென்ட்.
அப்பிடி பாத்ததுல தான் இன்னைக்கு உங்க ரொமான்ஸ் பாட்டு பாக்க முடிஞ்சது. இருந்தாலும் உங்க காம்பினேசன் சூப்பர். நீங்க ஹீரோவ நடிச்சா ஸனாவை ஹீரோயினா போடுங்க”என்று சிரித்தான்.

“அவளுக்கு கொஞ்சம் திமிர் இருக்கு,  தான் நம்பர் ஒன் பிளேஸ் நடிகைனு கர்வம். ஐ ஹேட் இட். போயும் போயும் சினிமாவில் விழ சொல்றீயா, இம்பாசிபிள்.. அது எல்லாம் பார்த்தோமா, ரசிச்சும்மா, கை தட்டினமானு போயிட்டேனு இருக்கனும். தாத்தா சொல்ற மாறி.”

“அடப்பாவி அண்ணா! கடைசியில் நவநீதத்தின் பேரன் என்று நிரூபிச்சுட்ட. உங்க கூட சேர்க்கை எவன் வச்சுகிட்டாலும் அவனுக்கு தான் கஷ்டம், எந்த நேரத்தில் நீங்க மாறுவீங்கனு தெரியாது. பாவம் வரப் போற அண்ணி..”

“நீ ஏன்டா இப்பவே அண்ணிக்கு பாவம் பாக்குற…?”

“ம்ம்ம்! தாத்தா உங்க ஜாகத்தை எடுக்க சொன்னது எதுக்குனு நினைக்குறீங்க, அண்ணியைத் தேட தான்.. எந்த வீட்டில் இன்னேரம் இருக்காங்களோ..? தூங்குறாங்களோ இல்லை முழிச்சுட்டாங்களோ..? எப்பிடி இருந்தாலும் இந்த நேரத்தில் நம்ம வீட்டுக்கு வந்ததும் முழிச்சு தான் ஆகனும்.. அண்ணனுக்கு ஏத்த அண்ணி நீங்க எங்க இருக்கீங்க…?”என்று பாடலை பாடிக்கொண்டே சென்றான் பாரி.

***
ஸனா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். இரவு ஷூட்டிங் முடிவதற்கு நேரமானதால் காலை விடிந்தும் தூக்கத்தில் இருந்தாள்.

ஸனா பொறுத்தவரை இரவு நேரமானால், அந்த தூக்கத்தினை சரியாக ஏழு மணி நேரத்துக்கு எடுத்துக் கொள்வாள்.

எழுந்தவள் காலை வேலைகளை முடித்துக் கொண்டு ஹாலிற்கு வந்தாள்.

சரியாக அஜி நுழைய, “ஹாய் ஸனா குட் மார்னிங், ஹவ் ஆர் யு….?”

“யா குட் மார்னிங் அஜி, வாட் எ சர்ப்ரைஸ், சோ எயர்லி..?”

“நத்திங் ஸனா, காலையில் செம தலைவலி அதான் கிளம்பி வந்துட்டேன்..”

“என்ன மாமியார் வீடா..?”

“ஆமா! மகனோடு பேசினா பேசிட்டு வைக்கனும், என்னைய வம்பு இழுக்குறாங்க தேவையில்லாம.”

“ம்ம்ம்!”என்றவள் அவளுக்காக கொண்டு வந்த மார்னிங் ட்ரிங்கை குடிக்க ஆரம்பித்தாள். அது பாதாம், பிஸ்தா, முந்திரி இரவு ஊற வைத்து காலையில் அதை அரைத்து நாட்டுச் சர்க்கரை போட்டு தேங்காய் பால் கலந்த ட்ரிங்.

ஸனா அதை ரசித்து வாயில் வைத்தவாறு”அது சரி, உன் அம்மா வீடு பிரச்சனையே இல்ல போல…?”

லூசான ஒரு வையிட் சர்ட், முக்கால் பேண்ட்.. முடிகளை சேர்த்து கொண்டைப் போட்டு கால்களை தூக்கி கட்டியவாறு அமர்ந்து அதை பருக ஆரம்பித்தாள்.

“அவங்களுக்கு என் கிட்ட இருந்து பணம் போனால் போதும், எனக்கு என்ன ஆனாலும் கவலைப்பட மாட்டாங்க…”

“அச்சுசாய் வீட்டுல என்ன பிரச்சனை, ஏன் ஏத்துக்கவும் இல்ல, பிரச்சனை பண்றாங்க.”

“எல்லாம் ஸ்ட்டேஸ் தான், நான் இல்லாத வீட்டு குடும்பம், உன் கிட்ட வேலைப்பார்ப்பது வேற கௌரவப் பிரச்சனை, அச்சுவை மயக்கி கூடவே வச்சு இருக்கேனு புலம்புறாங்க.”

“ஓ! என்ன சம்பாரிச்சாலும் நடிகைக்கு உள்ள மதிப்பு ரெட் லைட் ஏரியா தான் போல”என சிரித்தாள் ஸனா.

“நீ வேற, இப்ப நான் அம்பானிக்கு பிஏ ஆனா, உடனே ஏத்துப்பாங்களா…? அப்பையும் அம்பானி பொண்ணு இல்ல வேலைக்காரி தானேனு நக்கல் அடிக்கும் கூட்டம் அது”

“பாவம் அச்சுசாய்..”

“ஏன் பாவம், நான் சொல்லிட்டேன் உனக்கு அம்மா, அப்பா வேணுனா போயிட்டே இருனு”

“ஹேய் ஏன்டி அப்பிடி சொல்ற அவர் எவ்வளோ உன்னை லவ் பண்ணியிருந்தால் அப்பா, அம்மா எதிர்த்து எல்லாத்தையும் விட்டு வந்திருப்பார், அவரை போய் ஈஸியா போக சொல்லிட்ட. உனக்கு காதல் இல்லையா அவர விட்டு இருந்துடுவீயா?”

“அப்பிடியில்லைடி, முதல என்னைய பார்த்து எப்பிடி லவ் பண்ணினாரோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் கல்யாணம் பண்ணினோம், ஆனா அச்சு அவரோட நிறைய நார்மல் லைஃபை இழந்துட்டார், அது எனக்காகனு தோணுது அதை பார்த்தா பிரிஞ்சுடலாமுனு யோசிக்க வைக்குதுடி..”

“அஜி! நான் உன்னை பாத்து பொறாமைப்பட்டிருக்கேன், அழகான காதல், கல்யாணம், சொந்த முடிவு என சுதந்திரமாக இருக்கனு, அதை போய் இழக்கப் போறீயா…? நீ ஸ்டாங் பெர்சென், ஆனா நான் திறமை, சம்பாரிப்பு இருந்தாலும் எமோஷனல் வீக் கேர்ள்”

“ஸனா! அச்சுவை ரொம்ப லவ் பண்ணுறேன், அது தான் அப்பிடி யோசிக்க வைக்குது.”

“ம்ம்ம்! ஆனா அவங்க இவங்கனு நினைச்சி அச்சுவை இழந்துடாத, எல்லாருக்கும் இந்த லைஃப் அமைஞ்சுடாது”என்றாள் வருத்தமாக.

“நீ வேற சும்மா கோபத்தில் சொல்றது தான், நானே போடானு சொன்னாலும் அவன் போக மாட்டான்”என்று சிரித்தவள், நியூஸ் பேப்பரை பார்த்தாள்.

“வாவ்! ப்ரண்ட் பேஜ்ல உன் போட்டோ தான்.. பாரு”என்று காட்டினாள்.

“எஸ்! பார்த்தேன்.”

“அதியன் நல்ல ஹேண்ட்செம் சொந்தமாக படம் எடுத்து நடிக்கலாம், அந்த ஹோஸ்டிங் பொண்ணு சொன்ன மாதிரி…”என்று கூறி அஜி சிரித்தாள்.

“ம்ம்ம்! ஆனா லுக்கிங் அரோகென்ட்”என நடந்ததை சொன்னாள்.

“ஓ!”

“நீயும், அச்சுவும் பேசியதில் நான் ஜெஸ்ட் ஒரு க்யூரியாசிட்டியில் பேசிட்டேன் சரினு சாரி கேட்டால், நடிகைனு ஒரு மாதிரி பாத்துட்டு போனது பயங்கர இன்செல்டா இருந்தது அஜி..”

“ம்ம்ம்! அதியனைப் பற்றி எனக்கு முழுசாக தெரியாது, அச்சு சொன்னது தான், வீட்டில் தாத்தாக்கு பயப்புடுவார் ஆனா வெளி வாழ்க்கையில் சந்தோஷமாக அனுபவிப்பார். இருக்கலாமுடி கர்வம் பணக்கார தாத்தா குணம் இல்லாமல் போயிடுமா…?”

“எஸ்!”என்று அந்த கதையை முடித்தவர்கள், அடுத்த வேலையை கவனிக்க தொடர்ந்தனர்.

அதியனவள் அடுத்து…

Advertisement