Advertisement

விருது நிகழ்ச்சியானது ஆரம்பமாகியது.

ஆடலுடன் தொடங்கினார்கள் முதல் நிகழ்ச்சியை.

விருதானது திரைப்படங்களில் வரும் இதர கதாப்பாத்திரங்கள், பாடல்கள், நடனங்கள் என தொடங்கியது.

“அடுத்த கேட்டகரி சொல்வதற்கு முன் அந்த விருதை வழங்க நம் விழாவின் முக்கிய ஸ்பான்ஸரான நவநீ குரூப்ஸின் மேனெஜிங் டேரக்டர் மிஸ்டர் அதியன் நவநீத ராகவனை மேடைக்கு அழைக்கின்றோம்..” என்றார் பெண் தொகுப்பாளர்.

அதியன் எழுந்து மேடையை நோக்கி நடந்து சென்றான்.

அவன் பார்ப்பதற்கு நாயகன் தோற்றத்தில் தெரிய பயங்கர கைத்தட்டல்கள் கேட்கத் தொடங்கியது.

ஸனாவும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“ஸனா! எனக்கு என்னவோ நீ அதியன் கையில் தான் அவார்ட் வாங்க போறேனு நினைக்குறேன்.”என்றாள் அஜி.

“யாரு இவர்….?”என்று கேட்டாள் ஸனா.

“ஹேய்! இவரு தான்டி மிஸ்டர் அதியன் நவநீத ராகவன்.”

“அதை தான் அந்த பொண்ணே சொன்னுச்சே. விருதுக் கொடுக்குற அளவுக்கு பெரிய ஆளா…?”

“ஸனா! இதுக்கு தான் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் அக்கவுண்ட் வச்சு இருக்கனும். இன்னேரம் இதோ நீ கட்டி இருக்க புடவையில் போட்டோ எடுத்து ப்ரொபெயில் பிக்சர் வச்சு எத்தனை பேர் அக்கவுண்ட் உன் பேரில் ஓபன் பண்ணி இருக்கானோ. ஆனா நீ எதிலும் இல்லை. அப்பிடி இருந்திருந்தால் இவர் யாருனு கேட்பீயா. கொஞ்சமாச்சும் நாட்டு நடப்பை தெரிஞ்சிக்கோடி…”என்றாள் அஜி.

அச்சுசாய் சிரித்துக் கொண்டே”ஆமா! நாட்டு நடப்பு எல்லாம் அதில் தான் வரும்…”என்றான்.

ஸனா”யா! கேளுங்க சாய். இவ வேற, இவர் யாருனு கேட்டது ஒரு தப்பா…?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“அச்சு கிட்ட கேளு சொல்வாரு, அவரோட ப்ரண்ட் தான்..”

“அப்பிடியா…?”என்று ஸனா ஆச்சிரியமாக கேட்டாள்..

“எஸ்! எங்க கல்யாணத்திற்கு ஐடியா கொடுத்தார் அச்சுப் ப்ரண்ட் ஒருவருனு சொன்னேன்ல அவரு தான் இது. பாவம் இவரு தாத்தாக்கு அச்சு செஞ்சது புடிக்கல அதான் இவர் கூட பேசக் கூடாதுனு சொல்லிட்டார். அதியன் நேரில் அச்சுவோடு பேச மாட்டார், போன், வெளியூர்களில் தான் மீட்டிங்.”

“ஓ! அஜி இந்த காலத்தில் தாத்தா பேச்சுக்கு மரியாதை. இட்ஸ் லுக்கிங் ஸ்டேஞ்ச்.”

“நீ வேற, அவரு செம ஸ்ட்ரிட்.”என அஜி தாத்தாவைப் பற்றி  சொல்ல வர, அதற்குள்,

“வெல்கம் சார்!”என்று அந்த பெண் குரல் ஓங்கியது.

ஸனா அங்கு கவனிக்க தொடங்கினாள்.

சிஇஒ அவராகவே மேடைக்கு வந்தார். அதியனுக்கு மரியாதை செய்ய ஒரு சால்வையும், நினைவு ஷீல்டும் வழங்கினார்.

ஹோஸ்டிங் பெண்ணிடம் மைக்கை வாங்கியவர்”ஹாய் அதியன் சார், நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்.” என்றவரிடம் சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தான் அவன்.

“உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லனும், நவநீ குரூப்ஸ் தான் எங்க பெரிய முக்கிய ஸ்பான்சர் ஆனா அவங்க இப்பிடி எல்லாம் வெளியில் மீடியா முன்பு வரதை விரும்புவதில்லை. நவநீத ஐயாவிடம் இந்த முறை நாங்க ரொம்ப ரெக்வெஸ்ட் செய்ததால் மிஸ்டர் அதியனை இங்கு அனுப்ப சம்மதம் கொடுத்தார். அவங்க ரொம்ப பெரிய பேமிலி மீடியாவுக்கும் அவங்களுக்கும் தூரம், ஆனால் அதியன் சார் வந்து தான் அவங்க பிஸ்னஸில் நமக்கும் பங்குப் பெற அனுமதித்தார். அதற்கு அவருக்கு மிக்க நன்றி…”

“இவரை மாதிரி யங் ஜெனெரேசன் சப்போர்ட் இருந்தால் தான் மீடியாவும் வளரும். சீக்கிரம் நீங்க இந்த துறையில் கால் பதிக்க வாழ்த்துகள் சார்.”

அதியன் சிரிக்க, அவன் கையில் ஒரு மைக் வழங்கப்பட்டது.

“குட் ஈவ்னிங் டு ஆல். தேங்க்ஸ் மிஸ்டர் வினித் ராயன், என்னை இன்வெயிட் பண்ணினதுக்கு. எனக்கு மீடியாவை இப்பிடி வெளியில் இருந்து பாக்குறது தான் பிடிச்சிருக்கு.”

“சார்! நீங்களே பார்க்க ஹீரோ மாதிரி இருக்கீங்க, ஏன் ட்ரைப் பண்ண கூடாது. உங்களுக்கு புரொடெக்சன் பிரச்சனை கூட வர வாய்ப்பில்லை.”என்று கேலியாக கேட்டாள் பெண் தொகுப்பாளர்.

“வாய்ப்பே இல்லை, திஸ் இஸ் நாட் மை ப்ரொஃபெஸென்”

“அஜி! அவனுக்கு தாத்தா பயம். இல்லைனா எல்லா ஏரியாவிலும் புகுந்து வந்துடுவான், அந்தளவு டேலன்ட்டெடு ஹெய், பட் குடும்ப வட்டத்துக்குள் இருந்து வேஸ்ட் பண்றான்..”என்றான் அச்சு மனைவியிடம்.

அது ஸனா காதிலும் விழுந்தது.

ஆனால் அவள் அதற்கு மேல் கேட்டுக்கொள்ளவில்லை.

“அச்சு! அவங்க பேமிலி பிஸ்னஸ் பண்றாங்க, அதில் தானே இருக்க விடுவாங்க, அதியன் இஷ்டத்துக்கு விட்டால் அவங்க தலைமுறை மாறுமுனு நினைக்குறாங்க, அதில் என்ன தப்பு இருக்கு..”

“அப்பிடியில்லை அஜி, இப்ப உனக்கு பிடிச்சதை நீ செய்ற, எனக்கு உன்னைய பிடிச்சு உனக்காக வெளியில் வந்துட்டேன். ஏன் ஸனா மேடம் கூட ஃப்ரீ பேர்டு தானே இப்பிடி இருந்தால் தானே லைஃப் அவன் இருக்குறது ஜெயில்.”

“அவருக்கு பிடிச்சிருக்கு உனக்கு என்ன..?”

“அது என்னவோ உண்மை தான். தலையே போனாலும் தாத்தா தான் தலைகவசமுனு சொல்வான்.”என்று சிரித்தான்.

ஸனா காதில் விழ, இப்பிடி ஒருத்தனா…? ஓவர் ஆக்டிங் பெர்சன் தான் என நினைத்து மனதில் நகைத்தாள்.

“சார்! ஆனா வாய்ப்பு வந்தா நீங்க நடிக்கப் போற படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்துடுங்க, இப்பவே அப்ளிகேசன் கொடுத்துட்டேன்..”என்று கிண்டல் செய்த பெண்.

“நவ் வீ ஆர் கோயிங் டு ஸி அபௌவட் பெஸ்ட் ஹீரோயின்ஸ் அவார்ட், தி நாமினிட்ஸ் ஆர்”என சிலப் பெயர்களை ஸ்கீரினில் வர அதை வாசித்தாள்.

“அதியன் சார், உங்க கையில் இருக்க அந்த பெஸ்ட் ஹீரொயினை அனனோஸ் பண்ணிடுங்க.”

அதியன் ஏற்கனவே பார்த்திருந்தாலும் ஆடியன்ஸ் மத்தியில் அதை ஓபன் செய்து படித்து விட்டு “திஸ் அவார்ட்ஸ் கோயிங் டு மிஸ் ஸனா மஸ்தூரா” என்றான்.

ஸனாவிற்கு அந்த அவார்ட் இருக்கு என்று தெரிந்தாலும், அதைக் கொடுப்பது இவன் தான் என அறிமாமல் இருந்தவள், பெஸ்ட் ஹீரோயின் டிஸ்பிளே வந்ததும்
ரெடியாகினாள்.

அவளின் பெயர் வாசித்ததும் எழுந்து ஹை ஹீல்ஸில் கம்பீரமாக பெண்மை மாறாமல் நடந்து மேடை ஏறினாள்.

அந்த இடமே சரவெடி சத்தமாக கைத்தட்டல் கேட்டது.

நடந்து வந்தவள் மரியாதை நிமித்தமாக மேடைப் படிகளை வணங்கிவிட்டு மேலே சென்றாள், பின் சிஇஒ விடம் தலையை அசைத்துக் கையை கொடுத்தாள்.

அடுத்து அதியனிடம் நீட்ட, அவனோ எதேச்சையாக கையை நீட்டினான்.

இருவரும் கைக்குலுக்கினர் நொடிப் பொழுதே.

“வெல்கம் மேம், இந்த அவார்ட்க்கு நீங்க டிசெர்வெடு பெர்சனுக்கு எல்லாருக்கும் தெரியும். கொஞ்சம் அந்த படத்தை பற்றி சுவாரசியத் தகவல் சொல்லாலமே.” என்றாள் பெண் தொகுப்பாளர்.

மைக்கை வாங்கியவள்”அனைவருக்கும் வணக்கம், இந்த படத்திற்கு பெஸ்ட் ஹீரோயின் அவார்ட் கிடைத்தற்கு முழுக்காரணமும் ரசிகர்கள் தான். ஹீரோ சப்ஜெட் தான் என்ற மாறாத மாற்றத்தை மாற்றி எனக்கும் ஆதரவு தந்தார்கள். படத்தில் சுவாரசியம் என்றால் நான் பேசும் தமிழ் தான், கொங்கு தமிழ் அது ரொம்ப புதுசு. அதை கத்துக்கிட்டு பேசுறது கொஞ்சம் சவாலாக இருந்தது.”

“வாவ் ஸனா மேடம்! நீங்க இவ்வளவு அழகா தமிழ் பேசுறதே ஆச்சிரியம் தான். அதுவும் பாம்பே பொண்ணு கொங்கு தமிழில் பிண்ணி பெடர் எடுத்து இருக்காங்க.”என்றாள் அவள்.

“நான் பிறந்தது மும்பை தான், ஆனால் தமிழ் பேச நல்லா தெரியும். நான் இருந்த ஏரியாவில் ஒரு ஆண்டி எனக்கு தமிழ் கத்துக் கொடுத்தாங்க பேச அதனால் சரளமா வரும்..”என்று சிரித்தாள்.

“மேம்! நீங்க மும்பையில் பிறந்த தமிழ் தெரிந்த பெண், அப்ப தமிழ்நாட்டு மருமகளாக மாறிடுங்க எங்களுக்கும் எங்க ஸனாவை விட மனசே இல்லை” என்று ஆடியன்ஸிடம் கேட்டாள்.

“என்ன சொல்றீங்க மக்களே..”என்று கத்தினாள்.

கீழ் இருந்து”நாங்க ரெடி”என ரசிகர்கள் கூட்டம் கத்தியது.

ஸனா சிரிக்க. அதியன் மனதில் ‘அடிப்பாவி! சிரிக்குறா, கஷ்டகாலம் இது தான் நடிகை ரூபமோ.’என நினைத்து நக்கலாகப் பார்த்தான்.

விருதை ஒரு பெண் கொண்டு வந்து தர அதை வாங்கிய அதியன்”வாழ்த்துகள்” என்று கூறி நீட்டினான்.

ஒற்றை கையில் பிடித்திருந்த புடவையை விட்டப்படி இரு கைகளாலும் அதை வாங்கினாள்”நன்றி”என்ற வார்த்தையோடு.

இருவர் மட்டும் அழகாக போட்டோவில் விதவிதமாக விழுந்தார்கள்.

விருதை வாங்கிக் கொண்டு ஸனா ஒரு முறை நன்றியைக் கூறினாள் ரசிகர்களுக்கு.

அதியன் விலகப் போக. “சார்! ஒரு நிமிஷம்..”என்றாள் ஹோஸ்டிங் பெண்.

“சார் மறக்காம நீங்க நடிக்கப் போற படத்தில் எனக்கு சான்ஸ் தர மாதிரி, மேடமையே உங்களுக்கு ஹீரோயின் ஆக்கிடுங்க ஏனா நான் எல்லாம் தனியா போய் மேடம் கூட நடிக்க சான்ஸ் கேக்க முடியாது பாருங்க, ஹஹஹ”என்று சிரித்தாள்.

அருகில் பலமுறை அமைதியாய் அப்பப்ப பேசும் ஆண் ஹோஸ்டிங்”இப்ப உனக்கு நடிக்கனும், அதுக்கு ஏன் பிட் போடுற. மேடம் நீங்க ஒரு கேரக்டர் பண்ணுங்க அத மட்டும் இவங்க பண்ணிட்டா சான்ஸ் கொடுக்கட்டும் இங்கயே நிறைய டேரக்டர்ஸ் இருக்காங்க..”

ஸனா சிரித்தப்படி”படத்தில் நடிக்குற மாதிரி நிறையப் பேர் ரியல் லைஃலையும் நடிக்குறாங்க, அதை பார்க்கும் போது இது ரொம்ப ஈஸி, நீங்க வேணா என்னோட நெக்ஸ்ட் படத்துக்கு வாங்க தாரளமாக ஆனால் டயலாக் அங்க தருவாங்க நீங்களா பேசக்கூடாது இப்பிடி எங்களை கேள்விக் கேக்குற மாதிரி.”

“அய்யோ மேம்! எனக்கு இதுவே போதும். தேங்க் யூ சோ மச். சார் தான் பயந்துட்டார் போல நான் உண்மையில் சான்ஸ் கேக்குறேனு சார் சும்மா தான், தேங்க்ஸ் ஃபார்  கம்மிங்  சார்..”

அதியன் ஸனாவைப் பார்த்தப்படி நின்றான், அவள் தன்னைதான் கூறினாளோ நிஜ வாழ்க்கையில் நடிப்பதாக என்று எண்ணியவன், ச்சே! ச்சே! இருக்காது என மீளும் போது தான் அந்த பெண் தேங்க்ஸ்  சொன்னது அதியனிடம்.

வெறும் சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு அதியன் திரும்ப, மைக் இல்லாமல் ஸனா “மிஸ்டர் அதியன், பயப்படாதீங்க தாத்தா திட்ட மாட்டார்” என்றாள் மெதுவாக அவனிடம்.

அவனுக்கு புரிந்தது தன்னை கிண்டல் பண்றாள் என்று.

“நோ ப்ராப்ளம்”என புன்னகையை மட்டுமே கொடுத்தவன் கீழ் செல்ல நடந்தான்.

ஸனாவும் சிரித்தப்படி நடந்து அஜி அருகே வந்தாள்.

அதியன் அச்சுவை முறைத்துப் பார்த்தான்.

அவள் கேலி செய்தது எப்பிடி…? இவன் தான் ஏதோ உளரி இருக்கான் என..

அச்சு குழம்பினான் ‘இவன் ஏன் முறைக்குறான்…?’

ஸனா அப்போது தான் யோசித்தாள், தான் கொஞ்சம் அதிகமாக பேசிட்டோம் போல, முன்பும் தற்போதும் பேசாதவனிடம் கிண்டல் பேசினால் எப்பிடி எடுத்துக் கொள்வான்..

இங்கு அஜி, அச்சு பேசுவதைக் கேட்டுவிட்டுப் போனதால் அந்த கேலி அவளுக்கு இயற்கையாய் வந்தது.

திரும்பி அதியனைத் தேடினாள், அவளின் சற்று தொலைவில்  தான் அமர்ந்திருந்தான்..

விழா முடிவில் இருக்க, அனைவரும் களைய ஆரம்பித்தனர்.

ஸனாவிற்கு அதியனிடம் சாரி கேக்கத் தோன்றியது..

சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்தவள், அது கிடைத்தது..

அதியன் எழுந்து ஸனா வழியாக தான் செல்லப் போனான்..

அவன் கிராஸ் பண்ணின நேரத்தில்,

“மிஸ்டர் அதியன்”

அதியன் நின்று திரும்பினான்.

“சாரி!”

“இட்ஸ் ஓகே. உங்களுக்கு எல்லாம் நடிப்பு வருவதில் ஆச்சிரிமில்லை”என்று அவன் சொல்லிய நொடியில் சென்றான்.

ஸனாவிற்கு முகத்தில் அறைந்ததுப் போல் இருந்தது..

அதியனவள் அடுத்து…

Advertisement