Advertisement

“ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான் தான்டா
என் மனசுக்கு ராஜா

வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கேட்டுக்கோடா

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே”

என்ற பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.

அந்த பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு நடனம்  ஆடிக் கொண்டு இருந்தான் அவன்.

“டேய்! நியூ ட்ரெண்டுக்கு ஏத்த பாட்டை போடாம, இது என்னடா பாட்டு…?”என்று கடுப்பானான் அச்சுசாய்.

பின்ன அது என்ன இடம்.

மாலை ஐந்து மணி கடற்கரையோரம்.

மேற்கில் ஆதவன் விடைப்பெற்றுக் கொண்டிருக்க, ஆங்காங்கே வண்ண வண்ணமாக ஆடைகளை தேடும் அளவிற்கு தேகத்தை மிளிர விட்டு, மது, மாது என சூழலை மறந்து சங்கமிருந்தனர் அனைவரும்.

கோவா…

தனிமைக் கொண்டாட்டத்திற்கே பெயர் போன இடம்.

“மச்சான்! நம்ம இந்த இடத்தில் இருக்கிறமோனு சுத்தி இருக்கவனுக்கு எல்லாம் தெரியனுமுல.”

“ஆமா! ஆமா!”என்று இழுத்தான் மற்றொருவன் தீரன்.

“சும்மா மெலோடி ட்ராமா மாதிரி ஆடிட்டு இருந்தால் எவன் பார்ப்பான். இப்ப பாரு சுத்தி நம்மளை தான் பார்த்து பொறாமைப்படுறாங்க, என்ஜாய் மச்சான்…”

“அடேய்! உன் ஆக்ஷன், என்ஜாய்மென்ட் எல்லாம் ஓகே தான், இதே ரணகளத்தை நீ சென்னை மெரினா கடற்கரையில் போட்டிருந்தா நாங்களும் எங்க நண்பன் யாருடானு பொறாமைப்பட்டிருப்போம்..” என்றான் மாதவன்..

“ஹஹஹ! அது தான் முடியாதே.”

“தெரியுதுல அப்புறம் என்ன…? ஒழுங்கா நாங்க சொல்ற பாட்டைப் போடு.”என்ற அச்சுவிடம்.

“மச்சான்! மெரினாவில் நான் இந்த பார்ட்டியை வச்சு இருந்தா, அடுத்து எந்த பார்ட்டியும் நம்ம செஞ்சி இருக்க முடியாது, ஓகேனா சொல்லு அங்கயே வச்சுடுறேன்”என்றான் அதியன்.

“வேணாம்! வேணாம்! இதுவே போதும். ஆனா கொஞ்சம் பாட்டை மட்டும் மாத்துடா, உஷ்ஷ்ஷ்! முடியல”என்றான் அச்சு.

“முடியாது!”என்ற அதியன், அந்த பாடலை  இன்னும் சத்தமாக வைத்து நடனம் ஆடினான்.

“அச்சு! அவனை பற்றி தெரியாதா உனக்கு, அவன் விருப்பம் தான். அவன் அடங்குற ஒரே ஆள் அவனோட தாத்தா மிஸ்டர் நவநீதம் மட்டுமே…”என்றான் தீரன்.

“ஆமா அதியா! மதியம் வரை சென்னையில் இருந்த, இப்ப எப்பிடி எஸ்கேப் ஆகி வந்த. தாத்தா எப்பிடி விட்டாரு. அதும் பிறந்தநாள் அன்று”என்று கேட்டான் மாதவன்.

“தாத்தா பொறுத்த வரை நான் தமிழ்நாட்டில் இருக்கேன், காஞ்சிப்புரத்தில் ஒரு மீட்டிங் அதாவது புடவை நெய்கிற ஊர், அங்க சிக்னல் சரியா கிடைக்காது அதனால் எதுவாக இருந்தாலும் நேரில் பேசிக் கொள்வார்.” என்று சிரித்தவன் கையில் மதுக் கோப்பையுடன் ஆட்டம் போட்டான்.

“ஓ! இது தான் காஞ்சிப்புரமா….? அது சரி இன்னும் எத்தனை நாளைக்கு தான்டா இப்பிடி வாழ்வாய், உங்க தாத்தாக்கு நேராக ஒரு வாழ்க்கை. வெளியில் எங்க முன் ஒரு வாழ்க்கை.”என்று கேட்டான் தீரன்.

அனைவருமே மதுப் போதையில் தான் மூழ்கி இருந்தார்கள்.

“டேய்! தாத்தா ஒரு ஆர்மி பெர்சன் அவரோட கண்ட்ரோலில் தான் வீடே ரன் ஆகுது. அதை என்னோட விருப்பத்துக்காக மாத்த விருப்பம் இல்லை. அதுக்காக என் ஆசைகளை விட்டுத்தள்ளும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. சோ! ஐ ஆம் ஹேப்பி இன் திஸ் வே. அங்க அதியன் நவநீதம், இப்ப அதியா அவ்வளவு தான்.”

“ஒரு வேளை உனக்கு கல்யாணம் செய்யுற பொண்ணும் அவரு விருப்பப்படி இருந்தால், நீ விட்டுக்கொடுத்து தானே ஆகனும். அதுக்கு நீ வெளியில் ஸ்பேர் தேட முடியாதுல..?”என்றான் மாதவன்.

“அது நடக்கும் போது பாப்போமுடா, இப்ப நான் ஹேப்பி, என்ன ஆனாலும் என்னோட விருப்பத்தை நிறைவேத்திட்டு தான் இருப்பேன். அது தாத்தாக்கு பிடிச்சதுனா நேரிலும், பிடிக்காததை மறைமுகத்திலும் ஐ வில் என்ஜாய்..”

“மாதவா! அவன் நினைத்ததை செய்பவன். அதுவும் நம்ம முடியாதுனு சொன்னா அதை மல்லுக்கட்டி செய்வான். சின்ன வயசில் இருந்து பாக்குறோமுல.”என்று நக்கலடித்தான் தீரன்.

“அது என்னவோ உண்மை தான், பாரு நம்ம வேலைகளை எல்லாம் விட்டுட்டு இவனோட கோவாவில் இப்ப ஐக்கியமாகிட்டோம், அதும் என் பொண்டாட்டியை சமாளிச்சு வரதுக்குள்ள போதும் போதுமுனு ஆகிட்டு.”என்று நொந்தான் அச்சு.

“ஏன்டா! அஜிதா நல்ல பொண்ணு தானே. அதான்  உன்னைய சுதந்திரமாக விட்டு இருக்காள, அப்புறம் என்ன..?” என்றான் அதியன்..

“ம்ம்ம்! அது எல்லாம் ஓகே தான், நாளைக்கு ஒரு அவார்ட் பங்கஷன் இருக்காம் நானும் வரனுமாம், அதான் இன்னைக்கு விடவே ரொம்ப யோசிச்சாள். இவன் சொன்னதும் உடனே விட்டாள மனுசி. மொத்த ப்ராடுதனமும் இவன் தான் செய்றது ஆனா நம்ம வீட்டில் எல்லாம் இவன் ஹீரோ, நம்ம கெட்டவன்கள்”என்று புலம்பினான் அச்சு.

“ஹஹஹ! அதான்டா வாழ்க்கையில் த்ரில். சும்மா ஹீரோ மாதிரி நாட்டுக்கு நல்லது பண்ணனும், வீட்டுக்கு அடங்கி இருக்கனும், சோசியல் ஆக்டிவெட்டி இது மட்டுமே இருந்தால் போர்டா..”என்று கூறியவாறு அதியன் போதையில் மிதந்தான்.

“ம்ம்ம்! நல்லா தான் இருக்குடா இந்த இடம், இந்த போதை. செம ஃபீல் இல்ல” என்று எழுந்து டான்ஸ் மூவ்மென்ட்ஸ் போட்டான்  தீரன்.

“எது எப்பிடியோ நாளைக்கு மாலை நான்கு மணிக்கு நான் சென்னையில் இருக்கனும்..”என்றான் அச்சு.

“டேய்! புலம்பி இப்ப இருக்க மூடினைக் கெடுக்காத. நாளைக்கு நீ சொல்ற அவார்ட் பங்கஷனுக்கு எனக்கும் கால் வந்து இருக்கு. நவநீ குரூப்ஸ்ம் ஒரு ஸ்பான்சர் அதுக்கு, சோ நானும் வருவேன். யூ வோன்ட் வொரி நான் எதும் சொதப்ப மாட்டேன்..”என்ற அதியனை கட்டிப் பிடித்தான் அச்சு.

இப்ப தான் மனம் மகிழ ஆட்டம் போடத் தொடங்கினான் அச்சு.

பின்ன இதுக்கு முன்னாடி நடந்தது எல்லாம் அப்பிடிப்பட்ட அனுபவங்கள்.

அதியன் இந்த மாதிரி ஏதாவது பார்ட்டியை அரேன்ஞ்ச் செய்துவிட்டு கடைசி நேரத்தில் தான் சொல்வது. இவர்களும் வந்துடுவார்கள் ஆனால் சொன்ன நேரத்தில் விட மாட்டான். அவரவர் குடும்பக் கடலில் சிக்கி நண்பர்கள் மட்டும் கரை ஏற முடியாமல் தத்தளிப்பார்கள்.

அச்சுவும், நம்ம ஸனா ப்ரண்ட் அஜியும் தான் காதல் கல்யாணம் செய்தவர்கள்.

தீரன், மாதவன் சிங்கிள்ஸ் தான். அதனால் அச்சு மட்டும் தான் அதிகப் பாதிப்புக்குள்ளவான்..

அஜியை அச்சு விரும்பினது அதியனிற்கு தெரியாது. தெரிந்த நேரத்தில் கல்யாணம் பற்றிய ஐடியாவை கொடுத்தது அதியன் தான்.

இரண்டுப் பேரும் வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் செய்துக் கொண்டனர்.

ரெஜிஸ்டர் மேரெஜ் என்பதால் அதியனும் கலந்துக் கொள்ளவில்லை, ஸனாவும் கலந்துக் கொள்ளவில்லை.

இருவருக்குமே அறிமுகம் கிடையாது. அச்சு, தீரன், மாதவன், அதியன் எல்லாம் சிறு வயது நண்பர்கள்.

அச்சு விசயம் வெளியில் தெரியும் போது,  இரு வீட்டிலும் எதிர்ப்பு.

அச்சு வசதியானவன், அஜி மிடில் கிளாஸ் கீழ்.

அஜி ஸனாவிடம் பி ஏ வாக செர்ந்தாள். பிறகு தான் ஓரளவிற்கு வசதி வர ஆரம்பித்தது.

ஒரு தடவை அஜி ஸனாவை ஒரு லோக்கல் சேனலில் இண்டர்வியூ எடுக்க வந்த பெண். அதில் பழக்கமாகி இருவரும் நட்பாகினர்.

ஸனா வளர, அஜி கூடவே அனைத்தையும் பார்க்கும் தோழியுமாக, உதவியாளாராக மாறினாள்.

அதனால் அஜியை நம்பி தான் அவளின் குடும்பம் இருந்தது.

அச்சு அஜியை சந்திக்க, அது காதலாக மாறியது. பிறகு ரகசியத் திருமணம் செய்து அது  வீட்டிற்கும் தெரிந்து, வீட்டினை விட்டு வெளியில் வந்தனர்.

அச்சு பற்றி நவநீதத்துக்கு தகவல் தெரிந்தப் போது அதியனை அச்சுக் கூட பழகுவதற்கு தடைப் போட்டார்.

கல்யாணம் செய்ய ஐடியா கொடுத்தவனே இவன் தான்.

ஆனாலும் அவர்களின் நட்பு இப்பிடி தொடர்ந்துகிட்டே தான் இருக்கிறது, நவநீதத்திற்கு தெரியாமல்.

தாத்தா முன் விலகி இருப்பர். ஸனா, அஜி வீட்டிற்குப் போனதில்லை..

அச்சுவைக் கூட நேரில் ஓரிருமுறை தான் பார்த்திருப்பாள் ஸனா.

அதுவும் இந்த மாதிரி பங்ஷனில். ஸனா தான் அச்சுவிற்கும் அழைப்புக் கொடுத்திருந்தது.

போனில் பேசிக்கொள்வார்கள். ஸனா லைம்லைட் பெர்சன் என்பதால் வெளியில் பழகுவது கஷ்டம்.

“அச்சு! அதுக்கு தான் கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் செய்யக் கூடாதுனு சொல்றது”என்றான் தீரன்.

“நான் எங்கடா செஞ்சேன். இதோ இருக்கானே இந்த நடிகன் தான் செய்ய சொன்னான்…”என்று அதியனை கை காட்டினான்.

“நான் சொன்னா உனக்கு அறிவில்லை, நான் ப்ரண்ட் அப்பிடி தான் அட்வைஸ் பண்ணுவேன். நீ தான் புத்திசாலியா யோசிக்கனும்.”என்று சிரித்தான் அதியன்.

மற்ற இரு நண்பர்களும் சிரித்தனர்.

“சொல்லுவ நீ, ஏன் சொல்ல மாட்ட, உன் கூட எல்லாம் குப்பை கொட்டுறேன் பாரு, என்னைய சொல்லனும். அன்னைக்கு நீ தானேடா சொன்ன, இப்ப இது தான் வழி வேற வழியில்லை கல்யாணம் பண்ணிடுனு.”

“ஆமா சொன்னேன்! நீ உங்க வீட்டில் சம்மதிக்க மாட்டாங்கனு மட்டும் தான் யோசிச்ச, கல்யாணம் பண்ணா சுதந்திரம் போயிடுமுனு யோசிக்கவே இல்லைல.”

“இந்த அட்வைஸை முன்னாடியே சொல்லி இருக்கனும் மச்சான்”என்றான் அச்சு.

“எனக்கே நீ கல்யாணம் செஞ்சதும் தானே தெரியும். அதான் நாங்க உஷாராகிட்டோம், இல்லங்கடா…?”என்ற அதியனுக்கு ‘ஹை பை’ அடித்தனர் தீரனும், மாதவனும்.

“பாக்குறேன், எத்தனை நாளைக்குனு. டேய் நட்புகளா! சுதந்திரம் என்னமோ இல்லை தான் ஆனா அது ஒரு விதமான லவ்லி லைப்டா. அது எல்லாம் காதலிச்சு, கல்யாணம் பண்ணி பாருங்க தெரியும்.” என்றான் அச்சு.

“ஓ! “என்றனர் கோரஸாக.

அந்த இரவு அவர்கள் இரவானது. பேச்சுலர் வாழ்க்கையை பெரிதாக வஞ்சனை இல்லாமல் அனுபவித்தனர்.

அதியன் ஒன்றும் பெண்கள் பக்கம் திரும்பாதவன் இல்லை, ப்ரண்ட்ஸ் கூட பெட் கட்டி டேட்டிங் எல்லாம் கூட்டிக் கொண்டுப் போய் இருக்கான்.

உனக்கு தாத்தா பயம் பெண்களை பார்க்கவே பயப்புடுகிறாய் என சொல்லி டீஸ் பண்ண ஆரம்பித்தது தான் முதலில், யாருக்கு பயம் என்று ஆரம்பித்தவன் அதில் இருந்து அனைத்து வேலைகளிலும் இறங்கிருந்தான்.

ஆனால் நவநீதத்திற்கு அவன் அக்மார்க் பேரப்பிள்ளை, அந்த குடும்பத்துக்கே தங்கமான மூத்தப் பிள்ளை.

*** ***

விழா சிறப்பாக தொடங்கப்பட்டது….

நேற்று கோவாவில் இருந்த அதியன் முற்றிலும் மாறி இன்று அதியன் நவநீத ராகவனாக வந்திருந்தான்.

ஸ்பான்சர் என்பதால் கோட் போட்டு  ஆகனும், அதும் நவநீதத்தின் ஆர்டர் அது.

அதியன் லைட் க்ரீம் கலர் சர்ட், பிளாக் கோட் அன்ட் பேன்ட் என அசத்தலாக காரில் இருந்து இறங்கவும், அவனை ப்ரி போட்டோ செக்ஷன் முடித்து அனுப்பினர்.

அது ரவுண்ட் டேபிள் ஸ்டைல் சிட்டிங் அரேன்ஞ்மென்ட்.

இருக்கைகள் விஐபி, ஸ்டார் நடிகர்கள், நடிகைகள் என ஒதுக்கப்பட்டிருந்தது.

அதியன் அவனிற்கு ஒதுக்கப் பட்ட  விஐபி சீட்டில் சென்று அமர்ந்தான்.

அவனின் அருகில் அந்த அவார்ட் பங்சனின் ஹெட், சிஇஒ என அமர்ந்திருந்தனர்.

அதியன் ஸ்பான்சர் என்பதால் விருது வழங்கும் இடத்தில் இருந்தான், அதை முன்னரே கூறி அனுமதி வாங்கி இருந்தனர்.

மன்னிக்கவும் அதியனிடம் இல்லை, நவநீதத்திடம். அவருக்கு இந்த சினிமா துறையில் நவநீதத்திற்கு பெரிதாக விருப்பமும் இல்லை, மரியாதையும் இல்லை.

தரம் தாழ்ந்து போனவர்கள் அங்கு இருப்பவர்கள் என நினைக்கும் மனம் கொண்டவர் அவர்.

ஆனால் நவீனம் வளர, தொழில் விரிவுத்தன்மை என யோசிக்கும் போது அதியன் தான் இந்த ஐடியா கொடுத்தது.

படங்களின் முக்கிய காட்சிகளான கல்யாணக் காட்சி மணப்பெண், மாப்பிள்ளை ஆடைகள் ஸ்பான்சர் நவநீ சில்க்ஸ் என்றால் கடை பெயர் வெளியுலகம் போகும் என எடுத்துக் கூறினான்.

தொழிலில் அதியனின் கருத்துக்களை ஒரு போதும் அலட்சியம் செய்யாமல் நவநீ கேட்பார்.

அதன் விளைவாக இன்று சினிமாத் துறையில் நவநீ குரூப்ஸ் ஸ்பான்சர் மட்டுமில்லை, அவங்க கடை ஆட் பண்றதே சில முக்கிய நடிகைகள் தான்.

முதலில் பெரிதாக வரவேற்காத நவநீதம் தொழிலில் வித்தியாசம் தெரிய, அதியனிடம் இவை அனைத்தும் தொழில் முறையோடு நிறுத்திக்கனும், அதை கடந்து நட்பு, வேற மாதிரி போகக் கூடாதென்று சொல்லிவிட்டார்.

முக்கியமாக பார்ட்டி, இரவு கொண்டாட்டம் என மாறிடக் கூடாது, நடுநிலையோடு நிற்க வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

இன்று அவார்ட் கொடுப்பதற்கு கூட நவநீதத்திடம் கேட்க, முதலில் முடியாது என்றார்.

பிறகு நவநீ குரூப்ஸ் ஸ்பான்சர் தான் முதலில் வருவது, நாங்க அதை வெளியுலகிற்கு காட்ட வேண்டும், கண்டிப்பாக அதியன் சார் கையினால் ஒரு அவார்ட் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சிஇஒ கேட்டுக் கொண்டதால், நவநீதம் மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டார்.

அதியன் சுற்றி அமர்ந்திருந்தவர்களோடு பொதுவாக பேசிக் கொண்டிருந்தான்.

திடீரென்று கரகோஷம் ஆடியன்ஸ் பக்கம் இருந்து வர, அதியனும் திரும்பிப் பார்த்தான்.

அருகில் இருப்பவர்”ஸனா மேடம் வராங்க போல.. அதான் ரசிகர்கள் கூச்சல்,  கிளாப் சத்தமா இருக்கு.” என்றார்.

அதியனிற்கு ஸனா ஒன்றும் தெரியாதவள் இல்லை, ஸ்டார் ஹீரோயினை தெரியாமல் இருக்குமா என்ன..?

ஆனால் நேரில் எல்லாம் சந்தித்து இல்லை, இந்த அவார்ட் பங்சனுமே சிஇஒ முயற்சியால் வர நேர்ந்தது தானே.

அதியன் மனதில் ‘ஆப்ட்ரால் ஒரு நடிகை, இவ்வளவு சத்தம் என்றால் க்ரஷ் நிறையப் போல..’என்று நக்கலடித்துக் கொண்டான்.

மஞ்சள் நெட் புடவையில், சிங்கிள் ப்லீட்ஸ் விட்டு, கருப்பு நிற ஸ்லீவ் ப்ளவுஸில், ஹை ஹீல்ஸில் ஒய்யாரமாக நடந்து வந்தாள் ஸனா.

ப்ரீ ஹேரில் இரு பக்கமும் டிஸ்ட்பர்ன்ஸ் இல்லாமல் சென்டர் க்ளிப் லூசாக போட்டுக் கொண்டு, கழுத்தில் மெல்லிசாக ஒரு கோல்ட் வித் பிளாக் ஸ்டோன் டாலர், அதே காம்பினேசன் ஜிமிக்கி என படு ஸ்டைலாக, சே டைம் சிம்பிள் பெண்டாஸ்டிக் லுக்கிங் என நடந்து வந்தவள் மீது தான் அனைவரின் கண்ணும் இருந்தது.

ஆனால் அதியன் மனதில் அந்த உணர்வு இல்லை.

‘என்ன நடிகை தானே…?’என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சி இருந்தது.

அவளின் டேபிள் எதிர்ப் பக்கம் என்பதால் சற்றுப் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் கவனித்தான் அஜி, அச்சு அவள் கூட வந்ததினை.

அடப்பாவி! நடிகை தானே என நக்கலடித்துவிட்டு, கூடவே  ப்ரண்ட்,  ப்ரண்ட் மனைவி வருவதைப் பார்க்கவே இல்லை, அவளை தவிர.

அச்சு அதியனைப் பார்த்து லேசாக தலை அசைத்தான்.

அஜியும் தான்.

அதியன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டு இருக்க, ஹோஸ்ட் பண்ற பெண் வந்து அதியனிடம் ஒரு மூடிய என்வெலப்பை கொடுத்துவிட்டு,
“சார்! நீங்க அவார்ட் கொடுக்கப் போறது, இந்த கவரில் இருப்பவருக்கு தான். வேணுனா பார்த்துகோங்க.. எனிதிங் சேஞ்ச் மீன்ஸ் வீ வில் அரேன்ஞ்ச் ஃபார் யுவர் கம்பர்ட்..”என்றார்.

அதியன் அதை ஓபன் செய்துப் பார்க்க
அதில் பெஸ்ட் ஹீரோயின் டைட்டிலில்
“ஸனா மஸ்தூரா” என எழுதி இருந்தது..

அதை மனதில் படித்தவன் ‘ஸனா மஸ்தூரா’என்று எழுத்துக் கூட்டினான்.

ஹோஸ்டிங் பெண் நிற்க, “நோ ப்ராப்ளம்”என்றான்.

பயப்பிள்ளை தாத்தாவை பற்றி நினைக்கவே இல்லை, நினைத்திருந்தால் ஒழுங்காக வேற  ஏதாவது ஹீரோ, சப்போர்டிங் ரோல் என தேர்வு செய்திருப்பான்.

அதியனவள் அடுத்து…

Advertisement