Advertisement


தன்னிலை உணர்ந்த ஸனா, குடித்த டீ கப்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

சிறிது நேர அமைதிக்குப் பின் வெளியில் வந்த அதியன், ஸனா அங்கு இல்லாததை கண்டு ரிலாக்ஸ் ஆனான்.

உடல் அசதி, மன அசதி என ஒன்று சேர, கண்கள் சுழன்றது.

அப்படியே சென்று படுத்துக் கண்களை மூடினான். ஸனா படுத்திருந்த படுக்கை என்று நன்கு உணர முடிந்தது, அவள் பயன்படுத்தும் வாசனை திரவியம் இன்னும் மணத்தது.

ஏதோ அவள் அருகில் உறங்குவது போல் தலையணையை எடுத்து அணைத்துப் படுத்து உறங்க ஆரம்பித்தான்.

***

இறங்கி வந்தவள் கிச்சனுக்குள் சென்று டீ பிளேட்டை வைத்துவிட்டு, ஹாலிற்கு திரும்பினாள்.

பாட்டி அங்கில்லை.. மனதில்’எங்க இருப்பாங்க…?’ என்ற கேள்வியோடு சுற்றிப் பார்த்தாள்.

பிறகு வேலையாளிடம்”பாட்டி எங்கக்கா…?” என்று கேட்க,

“வெளியில் இருக்க கார்டனில் இருப்பாங்கம்மா..”

“தேங்க்ஸ் அக்கா” என்று கூறி நடந்தவளிடம்,

“உங்க படம் எல்லாம் பார்த்திருக்கேன், படத்தில் மட்டுமில்லை நிஜத்திலும் அழகாக இருக்கீங்க மேடம்..” என்றார் அவர்.

சிரித்தவள், “நன்றி அக்கா, சும்மா பேரு சொல்லியே கூப்புடுங்க. முன்னாடி வேற ஒருத்தவங்க இருந்தாங்க நீங்க புது மெய்டா..?”

“இல்லம்மா, நானும் இங்க தான் வேலை செய்றேன். லீவில் இருந்தேன். அவளை ஐயா வேற இடத்திற்கு மாத்திட்டாங்க, துணிக்கடையில் இருக்கா…”

“ஓ! சரிக்கா, நீங்க பாருங்க” என்று வெளியில் சென்றாள்.

‘மெய்டு எல்லாம்  தன்மையா இருக்காங்க இந்த வீட்டில்’ என்று எண்ணி சிரித்தவாறு சென்று நின்றது, பாட்டி முன்தான்.

“என்ன டீ குடிச்சாச்சா..?”

“ஓ! எஸ் பாட்டி” என்று அவர் எதிரில் அமர்ந்தாள்.

“ம்ம்ம்! பேரன் என்ன பண்றான்..?”

“அதியனுக்கு காலையில் சாப்பிட்ட ஃபுட் அலர்ஜி போல பாட்டி, அதான் வாமிட்டிங் இப்ப ஓகே தான் , ரெஸ்ட் எடுக்குறார்..” என்றாள் சாதரணமாக.

“அடக்கடவுளே! நானும் பல தடவை சொல்லிட்டேன் வெளியில் போய் சாப்பிடாதனு கேக்க மாட்டேனுங்குறான்” என்று புலம்பினார்.

“டோன்ட் வொரி பாட்டி, இது ஒன்னும் பெரிய விஷயமில்லை அதுக்காக சிட்டிவேசன் வரும் போது வெளியில் தானே சாப்பிடனும். நான் எல்லாம் முக்கால்வாசி அவுட் சைடு ஃபுட் தான்..”

“ம்ம்ம்! ஏன் உனக்கு சமைக்கத் தெரியாத…?”

“அய்யோ பாட்டி! நான் சின்ன வயசில் நடிக்க போயிட்டேன். படிப்புக் கூட கஷ்டப்பட்டு தான் ஸ்கூலிங் முடிச்சேன். காலேஜ் எல்லாம் கரஸ் தான்.. சமையல் வாய்ப்பே இல்லை, அப்புறம் லைஃபே மாறிட்டு…”

“ம்ம்ம்! உன் சொந்த ஊரு எது…?”

“நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பை தான், முதலில் ஹிந்தி சீரியலில் அறிமுகம் ஆனேன். அப்புறம் மலையாளம் படம் வந்தது, அதோட தமிழ் டப்பிங்கில் நானே நடிச்சேன் அப்படியே தமிழ் வாய்ப்பு நிறைய வர, இங்கயே செட்டில் ஆகிட்டேன்..”

“தமிழ் இவ்வளவு நல்லா பேசுற…?”

“என் கூட படிச்சப் பொண்ணு தமிழ் பாட்டி. அவங்க வீடும் எங்க ஏரியா தான். அவங்க வீட்டில் தான் அதிகம் இருப்பேன் அப்படியே கத்துக்கிட்டது இங்க நடிக்க வந்ததும் நானே முயற்சிப் பண்ணி பேசி இப்ப சொந்த டப்பிங் தான் படத்தில்..”

“ம்ம்ம்! திறமையான பொண்ணு தான். உன் குடும்பத்தில் யாரு எல்லாம் இருக்காங்க..?”

“அம்மா, அண்ணன், அண்ணி, அவங்க பையன். இதான் என் குடும்பம். அப்பா இல்லை. அவங்க எல்லாம் மும்பை தான். இப்ப தான் அம்மா என்னோட விஷயம் தெரிந்து வந்திருக்காங்க என்னோட வீட்டில் இருக்காங்க. இங்க வர ஆசை தான் ஆனா உங்க ஹஸ்பேண்ட் கிட்ட என்னோட அம்மா அசிங்கப்பட்டுட கூடாதுல அதான்.. வேணாமுனு சொல்லிட்டேன்..” என்றாள் விளக்கமாக.

“ஓ! என் வீட்டுக்காரர் கோபம் நியாயமானது தானே. நீங்க ரெண்டுப் பேரும் ரகசிய திருமணம் பண்ணா எப்படி பொறுமையா ஏத்துப்பாங்க பேத்தி..” என்றார் ஸனா கண்களையே பார்த்து.

“பாட்டி! நீங்க இப்ப சொன்னது தான் சரியான வார்த்தை. நீங்கனு…? என்னையும் அதியனையும் சேர்த்து கேள்விக் கேக்குறீங்க. ஆனா மிஸ்டர் நவநீதம் என்னைய மட்டுமே குற்றவாளியா பாக்குறார். அதியன் மீது தப்பே இல்லாத மாதிரி.” என்றாள் கோபமாக.

பாட்டி லேசாக சிரித்து”என் புருசன் பேரை இப்படி பொட்டில் அடித்த மாதிரி அப்பப்ப சொல்ற பாரு நீ, இதுக்கே உனக்கு நான் நாலுப் போடனும் ஆனா உன் பக்கம் நியாயம் இருப்பதால் ஏத்துக்குறேன். அதியனே தப்பு செஞ்சு இருந்தாலும் நீ தானே பொண்ணு புத்திசாலியா இருக்க வேண்டாம..?”
என்றார் அவளை சீண்டியவாறு.

“என்ன பொண்ணு, பையனு பாட்டி, எனக்கும் மனசு இருக்குல.. உங்க பேரன் என் கூட காதல் விளையாட்டு விளையாடி இருக்கார். நண்பர்களிடம் ஸனா மஸ்தூரா என்னைய விரும்புறா ஆனா நான் விரும்பலைனு தம்படம் அடிக்க ஆனா நிலை தலைகீழா மாறிட்டு என்னைய உண்மையில் காதலிச்சுட்டாராம் ஆனா தாத்தாக்கு பயமாம். நான் யாருனே தெரியாம தான் இருந்தேன் அவரே நேரில் கூப்பிட்டு உண்மையை சொல்லிட்டு நான் தெரியாம விளையாடிட்டேனு சொன்னா என்ன மாதிரியான அர்த்தம் பாட்டி. தாலியை யாராவது கொடுத்து காதலித்து விளையாடுவாங்களா..? நான் படத்தில் தாலிக் கட்டி நடிச்சு இருக்கேன் ஆனா அது நடிப்புனு தெரிஞ்சு நடித்தது பாட்டி” என்று பொருமி மனதில் இருப்பதை கொட்டினாள் ஸனா.

பாட்டி அவளையே பார்த்தார்.

“எல்லாம் சரி பேத்தி! என் பேரன் பண்ணது மிகப்பெரிய தப்பு தான். உன் கிட்ட தாலிக் கொடுத்து எல்லாம் காதலிக்குறேனு சொன்னது பாவம்.. ஆனா உன் மனசில் அவன் மேல எந்த வித காதலும் இல்லைனா ஏன் இந்த தாலியை நீ ஒரு நாடகக்காரன் கொடுத்ததா நினைச்சி தூக்கிப் போட்டு இருக்க கூடாது அதை விட்டுட்டு அவனை பழிவாங்கனு வீடு வரை வந்திருக்க…?”
என்றார் வேண்டுமென்றே.

“என்ன சொல்றீங்க பாட்டி..? அது எப்படி ஜஸ்ட் ஃபார் தட்னு தூக்கிப் போட முடியும். அப்ப எனக்கு மனசு இல்லையா…?”

“அப்ப உன் மனசில் என் பேரன் இருக்கான…?”

சட்டென்று தடுமாறினாள் ஸனா..

“இல்ல, அப்படி இல்லை. என்னைய ஏமாத்த எப்படி தைரியம் வந்தது, நான் கேவலம் நடிகை தானேனு எண்ணம் தானே. அதான் நான் வெறும் நடிகை இல்லை மனசு இருக்க பொண்ணுனு உணர்த்த வந்தேன்..” என்றாள் அழுத்தமாக..

“எத்தனை நாளைக்கு உணர்த்துவ. ஆறு மாசம் கழிச்சு நீ போயிடுவீயா..? ஏனா என் புருசன் நினைத்ததை முடிக்காம விட மாட்டார்.. அதியனும் அவன் தாத்தா சொன்னா பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுவான். உன்னோட பழி வாங்கல் இந்த  ஆறு மாசம் நிறைவேறிடுமா..?”

“பாட்டி!” என்றாள் புரியாமல்.

“சொல்லு பேத்தி”

“தெரியலை பாட்டி, ஆனா அதியன் நான் நினைச்ச மாதிரி இல்லை, அவருக்கு நல்ல குணம் தான் இருக்கு, ஆனா தாத்தானு வந்தா மாற்றுக் கருத்தே இல்லை நவநீதம் வாக்கு தான்…”

“என் பேரன் நல்லவன் தான் பேத்தி, ஆனா தாத்தானு சொன்னா தன்னையே இழப்பான். அது அவனுக்கு சாபக்கேடு மாதிரி ஆச்சு.”

“உங்க ஹஸ்பேண்ட் ஏன் இப்படி இருக்கார் பாட்டி…? அடுத்தவங்க வாழ்க்கையை அவர் ஏன் வாழ ஆசைப்படுறார்…?” என்றாள் கோபமாக.

“ஸனா! அவரை பத்தி பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை அவர் எனக்கு புருசன். அவரை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. ஆனா உனக்கு ஒன்னு சொல்றேன். அதியனை நீயும் மனதார விரும்புற இல்லைனா இவ்வளவு துணிவோடு உனக்கு சமூகத்தில் இருக்க அந்தஸ்து மறந்து, எங்க வீட்டின் நிலை அறிந்து இங்க வந்திருக்க மாட்ட. அதியனை பழிவாங்குறனு அவனை விட்டுக் கொடுக்க முடியாம தான் வந்திருக்க. அதை புரிஞ்சுக்க முதலில்..”

“இல்ல பாட்டி, இல்ல அப்படி எதுவும் இல்லை” என்றாள் படாரென்று.

“இரு கொஞ்சம். நான் அனுபவசாலி ஒருத்தவங்க முகத்தை வச்சே கண்டறிவேன் அவங்க மனசின் நிலையை. உன் மனசும் நல்லா தெரியுது ஆனா அதுக்கு ஒரு திரைப் போட்டிருக்க. அதை விலக்கு முதலில். அதியனுக்கு நீ கிடைச்சா நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் இல்லைனா தாத்தாக்காக புடிக்காத வாழ்க்கையை தான் வாழுவான். உனக்கும் தான் சொல்றேன், நீ ஒரு நடிகை உனக்குனு சில முன் வாழ்க்கை இருக்கு அது ஊரறிந்தது. ஆனா இப்ப உனக்கு கிடைச்சு இருக்க வாழ்க்கை அற்புதமானது அதை இழந்துடாத உன்னோட வீம்பால்.” என்றார் தெளிவாக.

“பாட்டி! என் வாழ்க்கை எல்லாம் எப்பவோ இழந்துட்டேன். ஆனா அதியன் தேவையில்லாம இடையில் வந்து என்னனமோ செஞ்சு இப்ப இங்க வந்து நிக்குறேன். எனக்கே புரியாத புதிரா இருக்கு இப்ப. அதியனை வெறுக்க முடியலை. அதே நேரம் மன்னிச்சுப் போனு விட முடியல. இரண்டையும் செய்ய மனசு வலிக்குது..” என்றாள் கண்கள் கலங்க.

“என்னைய நீ நம்புறீயா…?”

“என்ன பாட்டி இப்படி கேக்குறீங்க..? இந்த வீட்டில் இந்த நேரத்தில் இப்படி உங்க கூட பேசுவேனு நான் நினைக்கவே இல்லை. ஆனா நம்பிக்கை இருப்பதால்தானே இந்தளவு வந்து பேசிட்டு இருக்கேன்..”

“அப்ப இதுவரை நடந்ததை எல்லாம் தூக்கிப் போடு குப்பையில்.. இனி நடப்பதை பார்ப்பொம்..”

“புரியல பாட்டி, இனி என்ன நடக்கனும்..”

“இனி தான் நீ புத்திசாலியா நடந்துக்கனும். அதியனுக்கு நீ மட்டும் தான் பொண்டாட்டியா இருக்க முடியும் அவனுக்கும் அது தான் சந்தோஷம், உனக்கும் அது தான் நிம்மதியான வாழ்க்கையை தரும். நீ இந்த வீட்டு மருமகளா மாறு பேத்தி.. எல்லாரையும் உன் அன்பான சங்கிலியில் கட்டிப் போடு நீ தான் இந்த வீட்டு மருமகனு சொல்ல வை..” என்றார்.

“பாட்டி! நானா..? அதியனுக்கு பொண்டாட்டியா. எல்லார் கிட்டையும் அன்பா.. நினைச்சு பார்க்கவே முடியலை அதுவும் உங்க ஹஸ்பேண்ட் சான்ஸ்லெஸ்.. எல்லாத்துக்கும் முன்னாடி நான் அதியனை ஏத்துக்கனும்..”

“என் பேரனுக்கு என்ன குறைச்சல். உன் மனசில் அவன் இருக்கான் ஆனா உனக்கு பிடிவாதம் ஒத்துக்க. வயசில் மூத்தவளா சொல்றேன் கேட்டுக்கோ ஒரு ஆம்பளை பொம்பளை பக்கத்தில் விரும்பி வரதுக்கும், கட்டாயத்தில் வரதுக்கும் வித்தியாசம் இருக்கு, உனக்கு பக்கத்தில் விரும்பி உண்மையா வரவனை ஏத்துக்க வாழ்க்கை சிறப்பா இருக்கும், நீயா..? நானா…? போட்டியை உங்க இல்லறத்தில் போடுங்க. இல்லனா அவன் வாழ்க்கை உன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடும்..”

ஸனா யோசனைக்கு சென்றாள்.

“பாட்டி! அட்வைஸுனு குழப்புறீங்க என்னைய..” என்றாள் சோகமாக.

“சரி எல்லாத்தையும் விடு, நீ அதியன் கிட்ட உன் மனசில் இருப்பதை சொல்லிப் பாரு, அவனுக்கு புது வித தெம்பு வரும் அப்புறம் உங்க வாழ்க்கையில் மாற்றம் வந்தா இந்த வீட்டில் உள்ளவர்களை நீங்க சேர்ந்தே சமாளிக்கலாம்..” என்றார் வழி அறிந்தவாறு.

“என் மனசில் ஒன்னுமில்லை பாட்டி..”
என்றாள் வீம்பாக.

அவளை முறைத்தவர், “அப்ப, அதியன் அந்த மஞ்சரியை கல்யாணம் பண்ணிட்டு போகட்டும். ஆறு மாசம் கழிச்சு நீ டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிடு அதான் நல்லது..” என்றார் கடுப்பாக.

“பாட்டி!” என்றாள் மனதில் அதை ஏற்க முடியாமல்.

“என்ன பாட்டி..? அதான் உன் மனசில் எதுவும் இல்லையே..”

“ம்ம்ம்! அதியனை புடிக்கும் பாட்டி, ஆனா அது காதலனு என்னால ஏத்துக்க முடியலை. ஏற்கனவே வந்த காதல் எல்லாம் அடையாளமா என்னை அழிச்சுட்டு. இப்ப எப்படி காதல் வரும்..?”

“இங்க பாரு, இப்ப அவன் உனக்கு புருசன். புருசனை விரும்புறது தப்பில்லை, அதை மறைக்குறது தான் தப்பு. நீ நேரம் எடுத்துக்கோ நல்லா யோசி, அதியனை நீ நினைச்சா அடையலாம் ஏனா அவனோட காதல் உன் கிட்ட தான் இருக்கு இல்லனா அவன் தாத்தாவை மீறியும் நேத்து பேசி இருக்க மாட்டான் உன்னோட படவாய்ப்புக்காக. அதிலே நான் கண்டுப்பிடிச்சுட்டேன் அவன் மனசை..”

ஸனாவின் மனம் குழம்பி தவிக்க ஆரம்பித்தது..

பாட்டியின் தூவல்கள் வேலைப் பார்த்தது..

தலைவலி தான் வந்தது, “பாட்டி! சாயங்காலம் ஒரு ஃபங்சன் இருக்கு நான் போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்குறேன்..” என்றாள்.

“ம்ம்ம்! போ, இன்னைக்கு தான் நல்ல நேரம் கிடைத்தது நம்ம பேச, இனிமே பேசுவோம் ஆனா என் மருமகள்கள் வீட்டில் இருக்க கூடாது.” என்றாள் நக்கலான சிரிப்போடு.

ஸனா சிரித்துவிட்டு”பாட்டி! நீங்க டெரர் பாட்டி தான்.” என்று கூறி சென்றாள்.

அறைக்குள் செல்ல, அங்கு அதியன் அவள் படுக்கும் கட்டிலில் படுத்து, நல்ல உறக்கத்தில் இருந்தான்.

ஸனா சென்று மறு ஓரத்தில் படுத்தாள். அதியனைப் பார்த்தவாறே..

அதியன் முகம் அவளை ஏதோ செய்தது.
சிரித்தாள் தானாக.

கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள்.

நேரம் கடந்தது…

அதியன் தூக்கத்திலே ஸனா நினைவில் தலையணை என்று அருகில் இருந்தவள் மீது கைப் போட்டு அருகில் இழுத்து அணைத்தான்.

ஸனாவிற்கு முதலில் புரியவில்லை, நொடியில் அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.

அதியன் கண்கள் இன்னும் தூக்கத்தில் இருந்தது..

ஸனா நிமிர்ந்துப் பார்த்தாள் மிக அருகில் அவன் தாடையை.

மார்பு, கழுத்தில் முகம் இருக்க, அவளின் உடல் சிலிர்த்தது..

எத்தனையோ ஸீன்கள் இப்படி நடித்திருக்காள்.. ஷாட் ஓகேவா இருக்குமானு யோசிப்பாளே தவிர உணர்வு இருக்காது.

காதலில் விழாதவள் இல்லை, காமம் தாண்டிய உணர்வு ஒன்று இருக்கிறது என்பதை மனது அடித்துச் சொன்னது இந்த நொடி.

இது எதனால் வந்த உணர்வு தெரியவில்லை, புருசன் என்ற உரிமையா, இல்லை மனதில் ஆழமாய் வேரூன்றி விட்டான் என்ற தகவலா..? புரியாமல் குழம்பி கண்களை மூடினாள்.

அதியனின் அணைப்பு இறுகியது, அவனோ தலையணை என்று நினைக்க. அசலோ அறியாது தவித்தது…

மெல்ல நிமிர்ந்தாள், சற்றே மேலே எக்கி அவன் நெற்றியில் முத்தத்தை வைத்தாள்..

“ஐ கான்ட் மிஸ் யு” என்று மறுபடியும் முத்தத்தை வைத்தாள்.

கன்னங்கள் என முன்னேறினாள்.

மனம் அமைதியாக, மெதுவாக அவன் கைகளை விலக்கி தலையணையை வைத்து விட்டு, ஷோபாவில் சென்றுப் படுத்துக் கொண்டாள்.

ஏதோ தோன்றிய அதிர்ச்சியில் அதியன் எழுந்து நெற்றி,கன்னங்கள் என தடவினான்.

ஸனா கவனித்தாள், ஆனால் எந்த ரியாக்ஸனும் கொடுக்காமல் கண்களை  மூடிக் கொண்டாள்.

ஸனாவைப் பார்த்த அதியன்’ச்சே! ட்ரீமா..’ என்று திரும்பிப் படுத்துக் கொண்டான்.

‘அடக்கடவுளே! இவ்வளவு தூரத்தில் இருந்து இப்படி கனவு வருது, பக்கத்தில் படுத்தா அவ்வளவு தான் போல..’ என்று நொந்தான்.

ஸனாவிற்கு சிரிப்பு வர, திரும்பி படுத்தாள்…

அதியனவள் அடுத்து…

Advertisement