Advertisement

அன்று ஸனாவிற்கு ஷூட்டிங் இல்லை, மாறாக மாலை ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்சன் இருந்தது.

பொதுவாக ஸனா இதில் எல்லாம் பங்கேற்பதில்லை.

ஆனால் இந்த படத்தின் டைரக்டர் தான் ஸனாவிற்கு முதல் படம் கொடுத்தவர், அதனால் அந்த நன்றிக்காக வருவதாக கூறி இருந்தாள்.

அவருக்கும் ஒரு பப்ளிசிட்டி தேவைப்பட்டது படத்திற்கு.

நன்கு தூங்கி நேரம் கழித்தே எழுந்தவள், குளித்து முடித்து ரெடியாகி வந்தாள்.

நேரமோ இடையில் இருந்தது, காலை பதினொரு மணியளவில்.

அதியன் கிளம்பும் வரை ஸனா எழாமல் இருக்க, தூங்கட்டும் என்று கிளம்பிச் சென்றான்.

ஆபிஸ் போனவனிற்கோ யோசனையாக இருந்தது’ஸனாக்கு ஷூட்டிங் இல்லையா, இல்லை உடல்நிலை எதும் பிரச்சனையா..?’ என்றவாறு.

உடனே அச்சுக்கு கால் செய்து, அஜியிடம் விசாரிக்க சொல்ல, இன்று ஷூட் இல்லை, ஈவ்னிங் ஒரு ஃபங்சன் என்ற இன்பர்மேசனை கேட்டே நிதானமானான்.

அச்சு அதை அஜியிடம் கேட்டு சொல்வதற்குள் படாதப்பாடு பட்டான்.

😄😃😀 முதலில் தெரியாது என்ற அஜி பிறகு அச்சுவின் கெஞ்சலில் சொல்லி தொலைத்தாள்.

“டேய் நண்பா! என் பொண்டாட்டி கிட்ட கேட்டதுக்கு நீ உன் பொண்டாட்டி கிட்டயே கேட்டு இருக்கலாம். என்னமோ சிபிசிஐடி யின் ரகசியம் போல ரொம்ப பிகு பண்றா…” என்று நொந்தான் அச்சு.

“சரி! சரி! வை போனை”என்று போனை கட் பண்ணினான் அதியன். அச்சுவின் ‘உன் பொண்டாட்டி’ என்ற வார்த்தையில் கனவுலகிற்கே போனான்.

***

பதினொரு மணி.

இந்த நேரத்தில் என்ன சாப்பிடுவது என்று மெதுவாக கீழே இறங்கினாள்.

வந்த நாள் முதல் பகலில் இன்று தான் வீட்டில் இருக்கிறாள் ஸனா.

இறங்கி வந்தவள், ஹாலில் யாருமே இல்லாததை கவனித்து, கிச்சனை எட்டிப் பார்த்தாள்..

அங்கும் எவருமில்லை. வேலை செய்யும் பெண்ணை தவிர.

‘எங்க யாரையும் காணும்..?’ என்ற சிந்தனையில் நின்றாள்.

அன்று இரவு கோபத்தில் சென்று வீட்டில் இருந்ததை எடுத்து சாப்பிட்டவளிற்கு இன்று சற்று சங்கடமாக இருந்தது.

“ம்க்கும் உக்கும்..” என்ற கனைக்கும் சத்தம் கேட்டது ஸனாவிற்கு.

சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

பின்னால் பூஜை அறை முன் நாற்காலியில்  அன்னலெட்சுமி பாட்டி கண்ணாடி அணிந்து புத்தகத்தை கையில் வைத்திருந்தபடியே அவரின் கண்கள் ஸனாவையே நோக்கியது.

ஸனா என்ன பேசுவது என்று யோசித்தாள்.

“என்ன வேணும்…?” என்றார் பாட்டி.

“ஒன்றுமில்லை” என்று தலையை  மட்டும் ஆட்டினாள்.

“அந்த பேச்சு பேசுவ, பதில் சொல்ல வாய் வலிக்குதா…?” என்றார் வேகமாக.

“இல்ல, எங்க யாரையும் வீட்டில் காணும்..?”

“எல்லாரும் அவங்கவங்க வேலைக்காக போய் இருக்காங்க. நான் மட்டும் தான் இருக்கேன். வேலைச் செய்யும் பெண் இருக்கா.. நீ வேலைக்குப் போகலையா…?”

“இல்ல பா…” என்று நிறுத்தியவள்.

“இன்னைக்கு ஷூட்டிங் இல்லை..” என்றாள்.

“என் பேரனுக்கு நான் பாட்டி என்றால் அவன் பொண்டாட்டி தான் நீ.. அப்படினு தானே உள்ள வந்திருக்க.. பாட்டினே கூப்புடு ஒன்னும் மோசம் போகாது..” என்றார் மேல் விழிப் பார்த்தவாறு.

“ம்ம்ம்! சரி பாட்டி” என்றாள் மெதுவாக.

“என் புருசன் கிட்ட அப்படி எகிறி பேசுவ, என் கிட்ட  பதுசா பேசுறீயே…?” என்றார் நக்கல் பார்வையில்.

“பாட்டி! உங்க வீட்டுக்காரர் பேசுறது அப்படி, அடுத்தவங்க மனசை புரிஞ்சுகாம பேசுவார் ஆனா நீங்க வேற மாதிரி” என்று லேசாக சிரித்தாள்.

அவளை ஒரு மாதிரி பார்த்தவர்,

“இங்க வா..” என்றழைத்தார்.

ஸனா அவர் அருகில் சென்றாள்.

“இன்னைக்கு வெள்ளிக்கிழமை, ரொம்ப நல்ல நாள் அதாவது நெறைஞ்ச பௌணர்மி வரப்போகுது இரவு.. அந்த விளக்கை போய் ஏத்தி வை…” என்றார்.

ஸனா கேள்வியாகப் பார்த்தாள்.

“நான் இதை செய்யலாமா…?”

“அதியன் பொண்டாட்டி தானே..”

“ஆமா! ஆனா அது பேப்பர் அளவில் தான்.. இந்த தாலி அவரு கையால் கிடைத்தது தானே தவிர கட்டியது இல்லை பாட்டி…” என்றாள் அவரை பார்த்தவாறு.

அவளின் கண்களையே பார்த்த பாட்டி, “நீ முஸ்லீம் தானே…?”

“ம்ம்ம்!”

“உங்க மதத்தில் தாலி மஞ்சள் கயிற்றில் கட்டுவாங்களா…?”

“இல்ல..”

“அப்புறம் என்ன..? போய் ஏத்து விளக்கை. அவன் தாலினு ஒரு மாங்கலயத்தை வாங்கி உனக்காக கொடுத்து இருக்கான அது சும்மா பொம்மை இல்லை வச்சு விளையாட பொண்ணே! அவன் தான் உன் புருசன். நான் சொல்றதை செய்..”

ஸனா அதற்கு மேல் யோசிக்காமல் சென்று விளக்கை ஏற்றி வைத்தாள்.

குங்கும தட்டை எடுக்க சொல்லி, அவளுக்கு நெற்றியில் வச்சு விட்டார் பாட்டி.

“பாட்டி! நீங்க இந்த வீட்டில் வித்தியாசமா இருக்கீங்க..”

“எப்படி..? ரெண்டு கால், கை தானே இருக்கு. வேற மாதிரி இல்லையே…?”

ஸனா சிரித்தாள். வாய் விட்டு சிரித்தாள்.

அவள் சிரிப்பதை பார்த்தப் படி வாசலில்  நின்றான் அதியன்.

பாட்டி ஸனாவின் எதிரில் இருந்ததால் அதியனை  பார்த்தார்.

“என்ன பேராண்டி! இந்த நேரத்தில் வந்திருக்க…?” என்றதும், ஸனா திரும்பினாள்.

அதியன், பாட்டியை பார்த்து பதில் அளித்தான்.

“கொஞ்சம் தலைவலி பாட்டி, அதான் மதியம் ரெஸ்ட் எடுக்கலாமுனு வந்தேன்.” என்று தங்கள் அறையை நோக்கி நடந்தான்.

“டீ கொண்டு வர சொல்லவா..?”

“ம்ம்ம்! ஓகே பாட்டி. அம்மா இல்லையா..?”

“அவங்க எல்லாம் கோயிலுக்கு போய் இருக்காங்க. வேலைக்காரப் பொண்ணு இருக்கு டீ எடுத்து வர சொல்றேன் போ..” என்றார்.

அதியன் சென்று விட்டான்.

உண்மையில் தலைவலி காரணமாக தான் அவன் வந்தது. ஏனோ காலையில் சாப்பிட்டது ஒத்துக் கொள்ளாமல் வாந்தி வந்துவிட்டது, அதன் தாக்கம் வலி.

***

ஸனாவிற்கு பசி தாங்க முடியவில்லை, ஆனால் சாப்பிட  யோசித்தாள்.

பாட்டிக்கு அவளின் முகம் சொல்லியது பின் புரிந்தது.

“போய் சாப்பிடு முதலில் நீ..”

“இல்ல பாட்டி! நான் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுகிறேன்…” என்றாள்.

“பேசாம நீயுமே டீ குடி ரொட்டி இருந்தா ஒரேதா மதியம் நன்கு சாப்பிடலாம் என்ன ஆர்டர் பண்ண போற இப்ப..”

“இல்ல பாட்டி” என்று இழுத்தாள்.

“ஏ புள்ள!” என்று வேலை செய்யும் பெண்ணை அதட்டினார்.

அந்த பெண் வர, “போய் இரண்டு டீ இஞ்சி போட்டு, இந்த பொண்ணு கிட்ட கொடு, அப்படியே ரஸ்க், இல்ல இனிப்பு ரொட்டி இருந்தா எடுத்து வை பிளேட்டில்” என்றார்.

ஸனா அந்த ஹாலையே சுற்றிப் பார்க்க.

அவள் கண்ணில் வரலெட்சுமி போட்டோ பட்டது.

அதையே பார்த்தவள்… “பாட்டி! இவங்க யாரு…? சின்னப் பொண்ணா இருக்காங்க…”

“அவ தான் என் மூத்தப் பொண்ணு பேரு வரலெட்சுமி..” என்று கண்களை கசக்கினார்.

“ஓ! இறந்துட்டாங்களா.. சாரி பாட்டி..” என்று அவருக்கு ஆறுதல் கூறினாள்.

“ம்ம்ம்!”என்றவர். “இன்னைக்கு தான் அவ பிறந்த தினம் பேத்தி, அதான் உன்னை விளக்கு ஏத்த சொன்னேன். இங்க யாரும் அவளை நினைக்குறது இல்லை, அதனால் மத்தவங்களை அவளை நினைச்சு இதை செய்ய சொல்ல மனசு இல்லை. ஆனா உன் கிட்ட சொல்ல தோணுச்சு.. என் ஆசை மக அவ…” என்று கண் கலங்கினார்.

“பாட்டி! கவலைப்படாதீங்க.. அவங்க இறந்தாலும் உங்க பக்கத்துலயே இருப்பாங்க…”

“ம்ம்ம்! நானும் அவ முகத்தை நினைச்சுட்டே தான் வாழுறேன்..”

டீ வந்தது.

“சரி! நீ பேரனுக்கு எடுத்துட்டு போ, ரெண்டுப் பேரும் போய் குடிங்க..”

“இல்ல பாட்டி! அக்கா நீங்க கொண்ட அதியனுக்கு கொடுங்க” என்று அவளுக்கு மட்டும் எடுத்தாள்.

“இங்கரு பேத்தி! போ நீ போ.. ஏ புள்ள பேத்தி கிட்ட கொடுத்துட்டு நீ வேலையை பாரு..” என்று அதட்டினார்.

ஸனா அதற்கு மேல் மறுக்காமல் டீயை வாங்கிட்டு அறை நோக்கி சென்றாள்.

அதியன் உடை கூட மாற்றாமல் படுத்திருந்தான்.

ஸனா டீயை எடுத்துட்டு போனவள், அங்கிருந்த டேபிளில் வைத்தாள்.

அதியன் கண்கள் மூடி இருக்க, முதலில் அழைக்க யோசித்து பிறகு “அதியன்!” என்றாள்.

அவன் காதில் விழவில்லை.. சற்று வேகமாக அழைத்தவளை சட்டென்று முழித்துப் பார்த்தவன்.

“என்ன ஸனா…?” என்றான் மெல்லிய குரலில்.

“பாட்டி, டீ கொடுக்க சொன்னாங்க..”

“ம்ம்ம்!” என்று மெதுவாக எழுந்தவனுக்கு மறுபடியும் வாந்தி வர, வேகமாக சென்று பாத்ரூமில் உமட்டினான்.

இயற்கையாகவே பதறிய ஸனா அவன் பின்னே சென்று, “அதியா என்ன ஆச்சு..?” என்று கேட்க. அவன் வாந்தி எடுத்ததால் தலையைப் பிடித்தாள்.

காலையில் அவுட் சைடு ஃபுட் அவசரமாக சாப்பிட்டு மீட்டிங் போய் விட்டான், அதன் விளைவு தான் இது.. அச்சு பேசியப் பிறகு தான் சாப்பிடவே சென்றான்.

அதியன் தன்னை மீறி நின்றான். ஸனா அவன் நிலை அறிந்து தண்ணீரை எடுத்துக் கொடுத்து வாய் கழுவ சொன்னாள்.

பிறகு வெளியில் வர உதவி, டவலை எடுத்துக் கொடுத்தாள் துடைப்பதற்காக.

தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து வேகமாக நீட்டினாள்.

அதை வாங்கி சிறிது குடித்தவன். சற்று ரிலாக்ஸ் ஆனான்.

“ஆர் யு ஓகே…?” என்று கேட்டாள் ஸனா.

“யா! ஓகே.. மார்னிங் ஃபுட் ப்ராப்ளம் தான்..” என்று ஷோபாவில் சென்று அமர்ந்தான்.

“டீ எடுத்து தரவா அதியா..?”

“ம்ம்ம்! நோ ப்ராப்ளம் ஸனா, நான் எடுத்துக்குறேன்..” என்று தன் முகத்தை டவலால் துடைத்தவன், டேபிளில் இருந்த டீயை எடுக்கப் போனான்.

மற்றொன்று இருக்க, “உனக்கா இது..?”

“ம்ம்ம்!”

“டேக் இட்..” என்றான்.

ஸனா அவன் அருகில் அமர்ந்து, டீயை எடுத்து அருந்தினாள்.

பிஸ்கட் இருக்க, “நீ இன்னும் சாப்பிடலையா..?”

“இல்லை” என்று தலை ஆட்டினாள்.

“ஏன் கேக்குறீங்க…?”

“இல்ல பாட்டி பொதுவா சாப்பிடலைனா தான் பிஸ்கட் தர சொல்வாங்க. அதான் கேட்டேன்..”

“ஓ!”

“ஓகே! பிஸ்கட் எடுத்து சாப்பிடு ஸனா. நேரமாச்சுல..”

“நோ ப்ராப்ளம், நீங்களும் எடுத்துக்கோங்க..”

“இல்ல! எனக்கு டீ மட்டும் போதும்.. ப்ரீயா இருக்கட்டும்” என்று டீயை வாயில் வைத்தான்..

இருவரும் எதுவும் பேசவில்லை.

“என்ன சிரிப்பு சத்தம் கேட்டது நான் வரும் போது, பாட்டியோட பேசிட்டு இருந்த போல..?”

“ம்ம்ம்! உங்க வீட்டிலே உங்க பாட்டி மட்டும் தான் நல்லவங்க போல..” என்றாள்.

“ஆமா! அதுக்காக மத்தவங்க எல்லாம் கெட்டவங்க இல்லை, உனக்கு அவங்களை  நல்லவங்களா ஏத்துக்க முடியலை…”

“எப்படியோ போறாங்க மத்தவங்க மூலமா எனக்கு என்ன ஆகப்போது.. ஆமா! அந்த போட்டோவில் இருப்பது உங்க அத்தைனு பாட்டி சொன்னாங்க. அவங்க எப்படி இறந்தாங்க…?”

“தெரியலை, நாங்க பிறக்குறத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்க..”

“ஏன் உங்க வீட்டில் யாரும் சொன்னதில்லையா…?”

“நான் கேட்டதில்லை ஸனா.. இறந்துட்டாங்க அவ்ளோதான் அதப்பத்தி கேட்டு ஏன் கஷ்டப்படுத்துவான…”

“ம்ம்ம்! ஆனா நான் வெளியில் வேற மாதிரி கதை கேட்டேன்.  இந்த வீட்டில் ஒரு பொண்ணு இறந்ததுக்கு…”

“என்ன கதை…?”

“அதை ஏன் உங்க கிட்ட சொல்னும்..”

அவளை முறைத்தவன், பிறகு லேசாக சிரித்தான்.

“என்ன ஸனா. படக்கதை தவிர நிறைய கதைகள் தெரியும் போல.. யாராவது வேண்டாததை சொல்வாங்க அதை எல்லாம் நம்பாத, தாத்தாக்கு நிறைய ஆப்போஸிட் பெர்சன்ஸ் இருக்காங்க..”

“நானும் அதில் ஒருத்தி தானே. சோ நான் கேட்டக் கதை உண்மையா இருந்தால்..?”

“சரி விடு! இப்ப எதுக்கு அது..? மதியம் என்ன சாப்பிடப் போற.?”

“ஆர்டர் பண்ணனும்..”

“ஏன் வீட்டிலே சாப்பிட வேண்டியது தானே. அதான் அன்னைக்கு ரோசமா சாப்பிட்ட போல..”

“அது அன்னைக்கு. ஆனா இன்னைக்கு தோணலை..”

“எதுக்கு இப்படி செய்ற..? நான் வரேன் வா, போய் சாப்பிடலாம் கொஞ்சம் லேட்டா…”

“ஏன் எனக்கு பயமா…? நீங்க சேஃப்டி கார்டா…? எனக்கு தேவைனா நானே சாப்பிட்டுப்பேன்..” என்றாள் உதட்டை சுளித்து.

“இட்ஸ் ஓகே, வீட்டிலே சாப்பிடு அவ்ளோதான். பாரு எனக்கு வெளியில் சாப்பிட்டு ஒத்துக்கவே இல்லை. இப்ப எல்லாம் வெளியில் ஃபுட் சரியில்லை..”

“ம்ம்ம்! எனக்கு பழகிட்டு, பாதி நாட்கள் வெளிச்சாப்பாடு தானே.”

ஸனாவையே பார்த்தான்.

“வேணுனா அம்மா கூட போய் தங்கிட்டு வா ஸனா…” என்றான் அக்கரையோடு.

“ஏன் உங்க தாத்தாவோடு பிளான் போட்டு அப்படியே அனுப்பிடலாமுனு எண்ணமா…?”

சிரித்தவன்.. “ஆறு மாசம் நான் உன்னைய போகவே சொல்ல மாட்டேன்.. ஐ ஆம் ஹேப்பி நீ இங்க இருந்தால்…”

“ஆறு மாசம் முடிஞ்சு…”

அதியன் விரக்தியாக சிரித்தான், “நான் ஹேப்பியா இருக்க மாட்டேன் ஸனா..”

“ஏன்…? அதான் உங்க தாத்தா மஞ்சரியை ரெடியா வச்சு இருக்காரே.. கல்யாணம் பண்ணி ஹேப்பியா ஆக வேண்டியது தானே..”

“ப்ச்சு.. ஹேப்பினா மனதார இருக்கனும் அதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லை. நீயாச்சும் படத்தில் நடிக்குற.. நான் நிஜத்தில் நடிக்குறேன் நீ சொன்ன மாதிரி. விடு தட்ஸ் மை ஃபேட்.. நீ ஹேப்பியா இரு.. இந்த வீடு உனக்கு வேணாம் அதான் சொல்வேன். அப்பவும் இப்பவும்..” என்று அவள் முகத்தை இரு கைகளாலும் ஏந்தியவன்.

அவள் நெற்றியில் முத்தம் வைத்தான். “ஐ லவ் யு ட்ருலி மஸ்து. இட்ஸ் நாட் ஃபேக்.. பட் மை சிட்டிவேசன் நாட் குட் வித் யு.. கண்டிப்பா தாத்தா கிட்ட முடியாது. நீயா இந்த வீட்டிற்கு வந்த, இதோ இப்படி இருப்பனு நான் எதிர்ப்பார்க்கலை இதுவே எனக்கு கிரேஸ் பீரியட் மாதிரி இருக்கு, இந்த ஹேப்பினஸை நான்  சேவ் பண்ணிக்குறேன்..” என்றான்.

கன்னத்தில் இருப் பக்கமும் முத்தத்தை வைத்தவன். எழுந்து சென்று பாத் ரூமுக்குள் புகுந்துக் கொண்டான்.

ஸனா அவனின் முத்தத்தை தடுக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

‘என்ன ஆச்சு ஸனா உனக்கு…?’ என்ற கேள்வியோடு.

தன் முகத்தை தடவினாள் அவனின் முத்தம் இன்னும் ஈரத்தோடு உணர்த்தியது அவன் காதலை..

ஸனாக்கு புரியவே இல்லை ஒன்றும். இது என்ன விதமான வாழ்க்கை…?

அதியன் மேல் இருந்த கோபம் இப்போது பாவமாக மாறியது.

அவனின் நிலை அவளுக்கு ஏதோ ஒரு மாற்றத்தைக் கொடுத்தது.

அப்படியே அமர்ந்திருந்தாள்.

அதியன் பாத் ரூமில் அமர்ந்து தன்னை கண்ட்ரோல் செய்தான். ஸனா அருகில் அவனால் நார்மலாக இருக்க முடியவில்லை. அதனால் தான் வந்து விட்டான்.. இன்னும் ஆறு மாசம் எப்படி ஓட்டுவது என்று தவித்தான்..

அதியனவள் அடுத்து..

Advertisement