Advertisement

“அப்பா!” என்று அவரிடம் நீட்ட.. நவநீதம்

“இது எல்லாம் காசு கொடுத்தா சாதரணமா கிடைக்கும். செத்தவனுக்கே கல்யாண சான்றிதழ் தரான் உயிரோடு இருக்கவனுக்கு வாங்க முடியாத.. போன் மெசேஜ் எல்லாம் டெக்னால்ஜி.. வேற என்ன என் பேரன் குழந்தை வளருதா…?” என்றார் சாதரணமாக.

“தாத்தா!” என்றான் அதிர்ச்சியாக.

“நீ பேசாம இரு, அடுத்து அதுவா இருந்தா தான் என்ன.. பொறக்கட்டும் டி என் ஏ டெஸ்ட் எடுப்போம்” என்றார்.

“ஹலோ மிஸ்டர் நவநீதம், என்ன பணக்காரத் திமிரா.. இல்ல ஆம்பளைனு தெனாவெட்டா, இல்ல நான் நடிகை தானேனு இளக்காரமா.. முதலில் நீங்க யாரு…? எனக்கும் அதியனுக்கும் தான் பேச்சு…” என்றாள் ஸனா வேகமாக.

“ஸனா!” என்றான் அதியனும் கோபமாக.

“என்ன…?” என்றாள் திரும்பி அவனிடம்.

“அவரு என்னோட தாத்தா, பாத்து பேசு…” என்றான் கண்களில் ஆத்திரம் வர.

ஸனா எழுந்தாள் அவன் முன் நெருங்கி சென்று, “தாத்தா உங்களுக்கு தானே, எனக்கு இல்லையே…? ஓகே அவர் கூட எனக்கு டயலாக்ஸே இல்ல பாவம் வயசானவர் இருந்துட்டுப் போகட்டும், நீங்க சொல்லுங்க இந்த தாலிக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லைனு” என்று மாங்கலயத்தை தூக்கி காட்டினாள் அவன் கண் எதிரே.

மல்லிகாவிற்கு அதுக்கு மேல் தாங்கமுடியவில்லை..

“இங்க பாரு, என் பையனை எதுக்கு இப்படி படுத்துற. கொஞ்சம் கூட மரியாதை இல்லை பெரியவங்கனு, நீ எல்லாம் எப்படி வாழுவ. அவனை நீ தான் ஏதோ ஏமாத்தி செய்ய வச்சு இருப்ப போல..” என்றார் மல்லிகா.

அதியன் தன் தாயைப் பார்த்து”ஏன்மா! அமைதியா இருங்க..” என்றான்.

ஸனா தாலியை கையில் பிடித்து நின்றாள் இன்னும்.

“சொல்லுங்க மிஸ்டர் அதியன்.” என்று புருவத்தை உயர்த்தினாள்.

“ஸனா! நீ தப்பு பண்ற.. பெரிய தப்பு பண்ணிட்டு இருக்க..”

“ஸனா! ச்சே! ச்சே! மஸ்து நான் உங்க மஸ்து அதியன் சார்…” என்றாள் தலை சாய்த்து.

அதியன் அவளின் கண்களை பார்த்தான். ‘நீ என் மஸ்து இல்ல, முற்றிலும் மாறிய மஸ்து…’ என்று நினைக்க,

அவளின் கண்கள் அவனை ஏக்கத்தோடு பார்த்தது, அதியனால் அதை பார்க்க முடியவில்லை.

“சார்! ஏதாவது பேசுங்க” என்றார் போலிஸ்.

ஏனோ அவளின் கண்களையே பார்த்தவன், மந்திரத்துக்கு கட்டுண்டது போல், “இந்த தாலி நான் தான் வாங்கி கொடுத்தேன் ஆனா நான் கட்டலை” என்றான்.

நவநீதம் அதியனை திரும்பிப் பார்த்தார்..

ஸனா சிரித்தாள் உடனே.

“சார்! புரியலை” என்ற போலிஸ் குழம்பி தான் போனார்.

“சார்! உண்மையை நான் சொல்றேன். நடந்தது இது தான். ப்ரண்ட்ஸ் கிட்ட பேசுனப்போ சும்மா ஒரு பெட் கட்டுற மூடில் ஸனாவை என்னைய  காதலிக்க வைக்கனும் என நினைச்சி இம்பெரஸ் பண்ண அந்த தாலியை கிப்ட் பண்ணினேன் ஆனா அவங்க இம்பெரஸ் ஆகலை, கடைசியில் நான் செய்றது தப்புனு உணரும் போது உண்மையை சொல்லிட்டு விலகிட்டேன் அவங்களும் என்னைய விரும்பல. நானும் ஒதுங்கிட்டேன். இந்த தாலியை கிப்டா கொடுத்தது தான் கட்டி விடலாம் இல்லை.. இது நடந்தது ஒரு மாசம் கூட இருக்காது. இவங்க இப்ப சொல்றது ரெஜிஸ்டர் மேரெஜ் எல்லாம் உண்மை இல்லை..” என்றான் அவளை பார்த்தவாறு..

இன்ஸ்பெக்டர்”சார்! தாலி எல்லாம் கிப்டா கொடுக்குற பொருளா…? நீங்க நல்ல பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவங்க நான் சொல்லனும் தேவையில்லை அதை கொடுத்தா என்ன, கட்டி விட்டா என்ன. பட் அவங்க கிட்ட ப்ரூப் இருக்கு பாத்துக்கோங்க..” என்றார் பொதுவாக.

“இன்ஸ்பெக்டர்! அவன் தான் சொல்றான்ல ஏதோ ப்ரண்ட்ஸ் கூட பந்தயம் கட்டி விளையாடியதுனு அவனே ஒதுங்கிட்டானு. பிள்ளையை கொடுத்துட்டு ஏமாத்திட்டுப் போறாங்க அதையே விட்டுட்டு இருப்பாங்க, ஆனா என்னமோ தாலி கொடுத்ததை ஒரு விஷயமா ஆக்கி போலிஸ் கேஸ் ஆக்கி எங்களுக்கு மனசங்கடத்தை ஆக்குறாங்க இந்த நடிகை. நான் ஒரு கேஸ் தரேன். மான நஷ்ட வழக்கு எங்க குடும்பத்தை இப்பிடி போலிஸ் ஸ்டேசன் வரை அலைய விட்டு மனகஷ்டப் படுத்தியதற்கு” என்றார் நவநீதம்.

“மேடம்! நீங்க என்ன சொல்றீங்க…?”

“நான் ஏற்கனவே சொன்னது தான். எனக்கு இவரு தான் புருசன். நான் இவரு கூட தான் வாழுவேன். என்னைய அவர் கூட அழைச்சுட்டுப் போக முடியாதுனா என் கூட அவர் வரட்டும்..”

“யாரோ ஏதோ வந்து சொல்றாங்கனு நான் அதை எல்லாம் நம்ப முடியாது, எனக்குனு ஒரு மரியாதை இருக்கு, இப்பிடி சிலப் பேர் வருவாங்க அவங்க எல்லாரையும் நான் என் வீட்டு மருமகளா கூட்டிட்டுப் போக முடியுமா….?” என்றார் தாத்தா..

“ஐயா! நீங்க சொல்றது புரியுது. ஆனா அதியன் சாரே ஒத்துக்குறார் அந்த தாலி அவர் வாங்கிக் கொடுத்ததுனு. அதுக்கு மேல அவங்க உண்மை அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். எங்களுக்கு எவிடென்ஸ் தான் முக்கியம் அவங்க மேரெஜ் பண்ணிட்டாங்க, அதையும் நாங்க ரெஜிஸ்டர் ஆபிஸில் செக் பண்ணிட்டோம்.. மேடம் பக்கம் தான் நியாயம் இருக்கு. விளையாட்டு தனம் என்று  எல்லாம் நாங்க ஒதுக்க முடியாது. ஏனா அவங்களும் மக்கள் மத்தியில் பிரபலம் பெரிய பிரச்சனை ஆகிடும்.. நீங்களே பேசுங்க. அழைச்சுட்டுப் போறதா, இல்ல அதியன் சாரை அனுப்புறதானு..” என்றார் போலிஸ்.

அதியனிற்கு தாலி மேட்டர் புரிந்தாலும் அந்த ரெஜிஸ்டர் மேட்டர் புரியலை.

அஜி நக்கலாகப் பார்த்தாள்.. அதியன் தலையில் கை வைத்துக் கோதினான்..

அப்படியே அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான், தன்னுடைய மரியாதையை இழந்த உணர்வு..

எப்படி ஒரு நிர்வாகத்தை திறம்பட நடத்துபவன் சில தவறான சின்னப்புத்தியால் இன்று பெரிய மாற்றத்தில் இருக்கிறான்.

பாரியும், ரஞ்சித்தும் அவனுக்கு துணையாக நின்றனர்.

“அண்ணா!” என்ற பாரி, அவன் தோளில் கை வைத்தான்.

“அத்தான்! நிதானமா இருங்க” என்றான் ரஞ்சித்.

ஸனா அவனை பார்த்தப்படி நின்றாள்..

மல்லிகா”அதியா! இது எல்லாம் நமக்கு தேவையா….?” என்று அவன் அருகில் வந்து அழுதார்.

சோழா அவரை சமாதானம் செய்யவும்,

“இன்ஸ்பெக்டர்! ஒரு வேளை இது எல்லாம் இப்படி தானா. ரெண்டும் நடக்காது, என் பேரனுக்கு டைவர்ஸ் அப்ளே பண்ணிக்குறோம். சேரா வக்கீல் எங்க…?” என்றார் தாத்தா.

“வந்துட்டு இருக்காரப்பா..” என்றார்.

“ஹலோ! டைவர்ஸ் கேட்டு நான் இங்க வரலை. எனக்கு அதியன் கூட வாழனும்.. அவ்ளோ தான்.. எங்களுக்கு டைவர்ஸ் அப்ளே பண்ண ஹூ ஆர் யு…?” என்றாள் ஸனா.

நவநீதத்திற்கு கோபம் வர..

“இங்க பாரும்மா, என்ன நடந்திருக்குனு எனக்கு புரியுது, நீ உனக்கு ஏத்த மாதிரி மாத்திட்டு என் பேரனை பழி வாங்குற.. அது நடக்காது. அவன் என் பேரன். ஒரு போதும் நடக்காது, நீ அந்த வீட்டிற்கு வந்தா ஒரு பொழுது தாங்க மாட்ட…” என்றார்..

“அதை நான் பாத்துக்குறேன் மிஸ்டர் நவநீதம். உங்களுக்கு கவலை வேண்டாம்..” என்றாள் அவள்.

அதியன் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

பரணி, ட்ரைவரை கூட அங்கிள்னு கூப்புடுற ஸனாவ இது என்பது போல்..

“இன்னும் எத்தனை நேரம் சீக்கிரம் முடிவுப் பண்ணுங்க” என்றார் போலிஸ் சேரரிடம்.

அவருக்கும் செய்வது அறியாது நிற்க. வக்கீல் வந்து சேர்ந்தார்..

சேரர் அவரிடம் விசாரிக்க. அவரும்”சார்! உடனே எல்லாம் டைவர்ஸ் கிடைக்காது, குறைந்தபட்சம் ஆறு மாதம் சேர்ந்து வாழனும்.. பிறகு தான் லீகலா நம்ம ப்ரோஸிட் பண்ண முடியும்.” என்றார்.

சேரர் ஒரு முடிவோடு”இன்ஸ்பெக்டர்! அவங்களை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறோம்” என்றார்.

நவநீதம் சேரரைப் பார்க்க.

“அப்பா! இப்ப டைவர்ஸ் வாய்ப்பு இல்லை. ஆறு மாசம் ஆகனும், அப்ளே பண்ணிடலாம். அதுவரை நம்ம வீட்டில் இருக்கட்டும். எத்தனை நாளைக்கு தாக்குப்பிடிக்க முடியாதுல.. தானா போகட்டும்..” என்றார் சேரர்.

“என்ன அத்தான் சொல்றீங்க.. பாரிக்குனா இப்படி முடிவு எடுப்பீங்களா..? என் பிள்ளை வாழ்க்கையை பாழாக்காதீங்க..” என்று மல்லிகா சேரரை திட்டினார்.

“அண்ணி! அமைதியா இருங்க, அண்ணன் சொல்றது தான் சரி, யாரா இருந்தா என்ன…? பாரியோ, அதியனோ நம்ம பசங்க தான்..” என்றார் பாண்டியன்.

முடிவாக… ஸனாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ரெடியாகினர்.

நவநீதம்”ஆறு மாசம் தான். ரெடியா வா போறதுக்கு” என்று வெளியில் சென்றார் ஸனாவிடம் சொல்லிவிட்டு.. கூடவே பரணி, மற்றவர்கள் சென்றனர்.

அதியனும் ஸனாவைத் திரும்பிப் பார்க்கவில்லை.

ஸனா கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிட்டு இருவரிடமும் கையெழுத்து வாங்கினார் போலிஸ்..

கையெழுத்தைப் போட்ட அதியன் ஸனாவிடம்”என் வீட்டிற்கு வந்து என் கிட்ட எந்த உதவியையும், புருசனுங்கிற உரிமையும் எதிர்ப்பார்க்காத நீ. நான் தப்பு பண்ணிட்டேன் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. ஒத்துக்குறேன் ஆனா நீ என்னைய பழி வாங்கிட்ட ஸனா…” என்று தன் காருக்குச் சென்றான் வேகமாக.

பாரி ரஞ்சித்திடம்”நீ போ, நான் அவங்களை அழைச்சுட்டு வரேன்” என்று ஸனாக்குத் துணையா நின்றான்.

ஸனா அவளோட காரில் அஜி மற்றும் ராணியோடு, பாரியும் கூட வருவதாக சொன்னதால் ஒன்றாக சென்றனர் நவநீதம் வீட்டிற்கு..

அதியனவள் அடுத்து…

Advertisement