சேரர், சோழா, பாண்டியன் மூவரும் தங்கள் அப்பாவை தான் பார்த்தனர்.
நவநீதம் பயங்கர ஆத்திரத்தில் இருந்தார்.
மல்லிகா பொறுமை தாங்காமல்”அதியா என்னது இது, இப்படி குடும்ப மானத்தை வாங்கிட்டீயே…?” என்று அவன் சட்டையைப் பிடித்தார்.
“என்ன பழக்கம் இது…? மல்லிகா கையை எடு. தோலுக்கு மேல் வளர்ந்தவன் அவன்” என்ற அன்னம்மா பாட்டி பூஜை அறையில் இருந்து எழுந்து வந்தார், அவருக்கும் காதில் விழுந்தது ஸனா டிவியில் பேசியது.
மல்லிகா கையை எடுக்க”அத்தை! இவன் என்ன செஞ்சு இருக்கான் பாருங்க, அய்யோ மானமே போயிட்டே… எப்படி பட்ட இடத்தில் பொண்ணு பாத்து இருக்கோம்.. ” என்று ஓப்பாரி வைத்தார்.
நவநீதம் சோழாவை முறைக்க, சோழா தன் மனைவியை அமைதிப் படுத்தினார்.
“ஏங்க! நம்ம பிள்ளை செஞ்ச தப்பைக் கூட கேக்க கூடாத…?” என்றார் ஆதங்கமாக.
“அம்மா! நீங்களே முடிவுப் பண்ணாதீங்க நான் தப்பு செஞ்சேனு…” என்ற அதியன்,
“தாத்தா!” என்றான்..
“அது உண்மையா…? இல்லையா…? அது மட்டும் சொல்லு…” என்றார் அவர்.
“தாத்தா! நான் தாலி கட்டலை.. இது தான் உண்மை.. ஆனா..?” என்று நிறுத்தினான்.
அதற்குள் போலிஸ் வீட்டிற்கே வந்தாகியது.
பரணி ஓடி வந்து”ஐயா! போலிஸ் வந்து இருக்காங்க..” என்றார் தகவலோடு.
நவநீதம் உள்ளே வர அனுமதி அளித்தார்.
“வணக்கம் ஐயா! நான் ஏன் வந்து இருக்கேனு உங்களுக்கே தெரியும்.. கேஸ் கொடுத்து ரொம்ப நேரம் ஆச்சு.. நான் அதியன் சாரை அழைச்சுட்டுப் போகனும்.. ஏனா அவங்க எப் ஐ அர் போட சொல்லிட்டாங்க. அவங்களை கவ்யாணம் பண்ணி ஏமாத்தி நாளைக்கு வேற ஒரு பொண்ணை நிச்சயம் செய்யப் போறாங்கனு. ஆதாரம் எல்லாம் இருக்கு…” என்றார் தெளிவாக.
நவநீதம் அதியனைப் பார்க்க,
“நான் தாலிக் கட்டவே இல்லை தாத்தா.. உண்மையை தான் சொல்றேன் நம்புங்க…” என்றான்.
போலிஸ்”சார்! அங்க வாங்க, ஸனா மேடம் அங்க இருக்காங்க, நீங்க நேரில் வந்தா தான் ஸ்டேசனை விட்டு நகருவாங்களாம். ஒரே க்ரவுடா இருக்கு ப்ளீஸ் சார். அங்க வந்து நிரூபிங்க எதுவா இருந்தாலும்..”
“நீங்க போங்க சார், நான் கமிஸ்னர் கிட்ட பேசிக்குறேன்..” என்றார் நவநீதம்.
“சார்! அவங்க நடிகை, பத்திரிக்கையாளர்கள், டிவி சேனல் டெலஹாஸ்ட் ஆச்சு, ஒரு வேளை நீங்க அவங்க கூட முன்னாடியே காம்பெர்மெய்ஸ் ஆகி இருந்தா பிரச்சனை இல்லை, இப்ப நியூஸ் பப்ளிக் ஆகிட்டு. கமிஸனர் சார் நினைச்சாலும் பேச முடியாது. நீங்க நேரில் வந்து காம்பெர்மெய்ஸ் ஆகுங்க..” என்றார் அவர் விளக்கமாக.
அதியனிற்குமே அது அதிர்ச்சியான நிலை, எதிர்ப்பார்க்காத நிலை.
நவநீதம் யோசிக்க, சேரர்”அப்பா நானும், அதியனும் போயிட்டு வரோம். இது ஏதோ மாட்டி விட பண்ற மாதிரி இருக்கு, அதியன் இப்படி எல்லாம் செய்றவன் இல்லை” என்றார் நம்பிக்கையாக.
“ஆமாப்பா! ஏதோ தப்பு நடந்து இருக்கு.. அதியன் நம்ம வீட்டுப் பையன்..” என்றார் சோழா.
“அது தெரியுது. அந்த நடிகை இப்படி சொல்ல காரணம் என்ன…?” எனக் கேட்டார் நவநீதம்.
“தாத்தா! சத்தியமா நான் தாலிக் கட்டலை ஆனா…” என்று உண்மை சொல்லிடலாம் என்று ஆரம்பிக்க,
“சார்! உங்க விளக்கத்தை அங்க வந்து சொல்லுங்க.” என்றார் போலிஸ்.
நவநீதம் ஏறி காரில் அமர்ந்தார். அவர்கள் ஒரு கார், பாரி,அதியன் ஒரு கார் என்று சென்றனர்.
அதியன் அத்தை பையன் ரஞ்சித் பாரியிடம் கேட்டுக் கொண்டே ஸ்டேசனிற்கு நேராக வந்தான்.
***
ஸனா போலிஸ் ஸ்டேசனில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள்.
கூடவே அஜியும், ராணியும் இருந்தனர்.
பொதுவாக கேஸ் கொடுக்க வருபவர்கள் அமரும் இடத்தில் அமர்ந்திருந்தனர்.
நவநீதம் முன்னே செல்ல, பின்னால் மற்றவர்கள் சென்றார்கள்.
ஸனா எழுந்திரிக்க வில்லை அப்படியே அமர்ந்திருந்தாள்.
அதியன் உள்ளே நுழைய அவனை பார்த்தும் அதே போல் அமர்ந்திருந்தாள்.
போலிஸ் நவநீதத்தை எதிர் சேரில் அமர சொன்னார்.
மற்றவர்கள் நிற்க, அதியன் ஸனாவைப் பார்த்தப்படி தாத்தா அருகில் சென்றான்.
‘இது ஸனா தானா, தான் பார்த்த ஸனா தானா, இப்படி இருக்க மாட்டாளே, ஏதோ வித்தியாசமா தெரியுறா…?’ என்று குழம்பிப் போனான்.
ஸனா இப்போது தன் ஆஸ்தான நடிப்பு வேலையைத் தொடங்கி இருந்தாள்.
முதன் முறையாக கேமரா, ஆக்ஷன், டேரக்டர், மேக் அப், எதுவும் இல்லாமல் நிஜ வாழ்க்கையில் அதுவும் தன் வாழ்க்கைக்காக நடிக்க ஆரம்பித்திருக்காள்..
அவளோட மனக்காயம் அவளை இந்த அளவிற்கு தூண்டி இருக்கிறது, முதல் இருமுறை அவளும் விரும்பி தான் போனதால், நேரிடையாக ஏமாற்றினர் மனம் அதை ஏற்றுக் கொண்டது..
ஆனால் அதியன் காரணமே இல்லாமல் சீண்டியது அவளோட தன்மானத்தை தூண்டிவிட்டது.
“மேடம்! வாங்க இங்க…” என்றார் போலிஸ்.
ஸனா எழுந்து சென்று, நவநீதத்தின் அருகில் இருந்த அடுத்த சேரில் அமர்ந்தாள் அதே போஸோடு கால் மேல் கால் போட்டு.
“இப்ப சொல்லுங்க மேடம்…”
“அதான் நான் சொல்லிட்டேன் சார், அவர் வீட்டுக்கு நான் போறேன். இல்லை என் வீட்டுக்கு அவர் வரட்டும்.. அதாவது அதியனை சொல்றேன்…” என்று ஓரப் பார்வையில் அதியனைப் பார்த்தாள்.
போலிஸ் நவநீதத்தைப் பார்க்க..
“இங்க பாருங்க போலிஸ். இது சினிமா இல்லை நடிக்க, அவன் என்னை கெடுத்துட்டான் இவன் என்னை கெடுத்துட்டானு சொல்ல, என் பேரன் இந்த தாலியைக் கட்டலை. சும்மா நடிக்காம போக சொல்லுங்க. கல்யாணம் பண்ண ஆள் இல்லனு பழிப் போட்டு பெரிய இடத்துப் பிள்ளையை பிடிக்கப் பாக்குறாங்க இந்த நடிகை…” என்றார் நவநீதம்.
அவனோ”நான் கட்டலை இதை. நீ ஏன் இப்படி நடிச்சுட்டு இருக்க ஸனா.. அஜி நீயும் துணையா இதுக்கு” எனக் கேட்டான் அதியன்.
“அதியன்! நீங்க செஞ்சது எதுவுமே எனக்கு தெரியாது, அதே மாதிரி இதுவும் எனக்கு தெரியாது. நீங்களாச்சு அவளாச்சு” என்றாள் அஜி.
“அதியா! நீ ஏன் கண்டவங்க கிட்டப் பேசுற…? இன்ஸ்பெக்டர் அந்த பொண்ணு படத்தில் நடிக்கப் போட்ட தாலியோடு வந்து கேஸ் கொடுத்தா உடனே நீங்க எடுத்துப்பீங்களா…?” எனக் கேட்டார் நவநீதம்.
“ஐயா! எல்லா எவிடென்ஸ்ம் இருக்கு. இங்க பாருங்க” என்று ரெஜிஸ்டர் மேரெஜ் சர்பிகேட், அவனும் அவளும் இருக்கப் போட்டோ, புடவைக் கொடுத்தது, போன் மெசேஜ் என அனைத்தையும் காட்டினார்.
அதை வாங்கி ஆராய்ந்த சேரர், அதியனைப திரும்பிப் பார்த்தார்..