Advertisement

வணக்கம் நண்பர்களே!

நான் சங்கீதா ராஜா, இத்தளத்தில் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர். வாசகர்கள் ஆகிய நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கதையை தொடங்குகிறேன்.?

“விறலி விண்மீன் அதியனவள்”

இந்த கதையின் கரு, நாயகன்,  நாயகி, உடன் பயணிப்பவர்கள், சூழ்நிலைகள், கதையின் முழுமையான நகர்வு, இவை அனைத்தும் முற்றிலும் என் கற்பனையே….

சரி! இனி கதையோடு பயணிக்க தொடங்கலாம். ஆதரவு தரப்போகின்ற அனைவருக்கும் நன்றி?.

“விறலி விண்மீன் அதியனவள்”

‘கல்யாணம் ஆனா முதல் நாளே இந்த சாந்தி முகூர்த்தத்தை வைக்க சொல்லி எவன் கண்டுப்புடிச்சானோ..’என்று மனதில் புலம்பியவாறு பால் சொம்போடு நடந்து அறையின் முன் வந்து நின்றாள் அவள்.

‘நீ புலம்புறேனு இந்த சீனை எல்லாம் மாத்த முடியாதும்மா, போ! போ! உன் புருசன் காத்துட்டு இருக்கான்’என்றது மனம்.

‘ம்ம்ம்! போயிட்டு தானே இருக்கேன்…’ என கதவினைத் திறந்தாள் வினுஷா.

மஞ்சத்தில் மயங்க காத்திருந்த நாயகனோ, கதவின் சத்தம் கேட்டு நிமிர்ந்து நேராக அமர்ந்திருந்தான்..

உள்ளே மெல்ல நடந்த வந்தவள், அவனை கண்டு வெட்கத்தோடு சிரித்தாள்.

“வினு! நீ சும்மா பாத்தாலே அழகு தான், அதுவும் இப்பிடி வெட்கப்பட்டா முடியலம்மா, கண்ணா அது….?” என்று காதல் மொழிகளை அள்ளி விட்டான்.

வெட்கம் கொண்டு சிரித்தவள், பால் சொம்பை அவன் முன் நீட்ட, சொம்புடன் சேர்த்து அவளின் கையைப் பிடித்தான்.

“வினய்! பாலை ஒழுங்காப் புடிங்க, கீழ கொட்டிடப் போது…”

“ம்ம்ம்!”என அதை வாங்கி அருகில் இருந்த மேசை மீது வைத்து, பின் அவளை அணைத்தப்படி அமர வைத்து தானும் அமர்ந்தான்.

“எனக்கு ஒரு மாதிரி நெவெர்ஸா இருக்கு வினய்”

“ஏன்..? இதுக்கு தான் அவுட்டிங் போகலாம், பேசிப் பழகலாமுனு சொன்னேன், நீ என்னனா அப்பாக்கு தெரிஞ்சா அசிங்கமா இருக்கும், அம்மாக்கு தெரிஞ்சா பதில் சொல்லனும், தங்கச்சி இருக்கானு, நிச்சயம் பண்ணி போன் கூட ஒழுங்காப் பேசல, அதும் இந்த காலத்தில்…”

“என்ன பண்ண, நான் அப்பிடியே வளர்ந்துட்டேன். அதான் கல்யாணமாகிட்டே இனி நீங்க என்ன சொன்னாலும் செய்றேன் போதுமா…?”

“ம்ம்ம்! என்ன சொன்னாலும்…?”

“ம்ம்ம்! ஆனா…” என்று ஏதோ சொல்ல வந்தவளின் வாயை மூடியவன்..

அவள் இடையில் கை வைத்து அருகில் இழுத்து, கண்களை பார்த்தான்.

“இத்தனை நாள் நீ சொன்னதைக் கேட்டேன், இன்னைக்கு நீ பேசவேக் கூடாது, நான் மட்டும் தான் பேசுவேன், அது பேச்சோ, செயலோ என்னோட விருப்பம்” என்று படுக்கையில் இழுத்துப் போட்டான் அவளை..

அவளும் முகத்தில் வெட்கத்தைக் காட்டி சிரிக்க, அவள் அருகில் படுத்தவன் அவளை அணைத்தான்…

*
*
*
*
*
*
*
*

“ஓகே! குட் ஷாட்… கட்! கட்! கட்!” என்றார் டைரக்டர்..

நாயகன், நாயகியாக நடித்த இருவரும் எழுந்து அவரவர் கேரவனுக்குச் சென்றனர்..

சிறிது நேரத்தில் நாயகியின் கேரவனுக்கு சென்றார் டைரக்டர்..

“வாங்க சார்”

“நெக்ஸ்ட் ஷாட் எக்ஸ்பிளைன் பண்ணிட்டாங்களா….?”

“எஸ் சார்…”

“ஓகே! ரெடி தானே.. இப்ப எடுக்கப் போற சீன் அடுத்து வரது தான், ஆனா இப்ப எடுத்தா கரெக்டா இருக்கும். ஏனா ஹீரோ சாருக்கு கால்சீட் ப்ராப்ளம்” என்றார்..

“ம்ம்ம்! ஆனா இந்த சீனுக்கு ஹீரோ தேவை இல்லையே சார்…”

“ஆமா மேடம்! ஆனா இந்த சீன் முடியும் போது அவர் என்டரி இருக்கனும், காஸ்டியூம் மாறாது சோ ஒரே ஷாட்டில் முடிச்சுடலாம்…”

“ஓகே! நோ ப்ராப்ளம்..”

“இது ரேப்பிங் சீன், சோ கொஞ்சம் அதுக்கு தகுந்த ரியாக்சன் வேணும் மேடம், கொஞ்சம் ரியலா இருக்கனும்… ஃபர்ஸ்ட் நைட் சீனுக்கு ஆப்போஸிட்”

சிரித்தவள், “சார்! எனக்கு ரெண்டும் ஒன்னு தான், என்ன ஃபர்ஸ்ட் நைட் சீனுக்கு சிரிச்சுகிட்டே இருக்கனும் ஒரு ஆள் பக்கத்தில்.. ரேப்பிங் சீன்ல அழுதுக்கிட்டே இருக்கனும் நான்குப் பேர் நடுவில். ஆக மொத்தம் சீன் ஒன்னும் தான் ரியாக்சன் தான் வேற”என்றாள் கேஷ்வலாக…

படத்தின் நாயகி அவள், நம் கதையின் நாயகிமான,

“ஸனா மஸ்தூரா”

டைரக்டர் அவளின் கூற்றைப் புரிந்துக் கொண்டதால், “இது உங்க ப்ரோப்ஷனல் ஜாப் அது மட்டுமே மண்டையில் ஏத்திக்கோங்க மேடம், புரியுது உங்க உணர்வுகள்.. நான் கிளம்புறேன், ஷாட்டுக்கு ரெடி ஆகுங்க…” என்று கேரவனை விட்டு இறங்கி சென்றார் அவர்.

அடுத்த சீன் எடுக்கப்பட்டது..

“மேடம்! நாளைக்கு ஷெடியுல் சேன்ஞ்சுடு…” என்று கூறினான் அசிஸ்சென்ட் டைரக்டர்..

“யா! ஐ நோ…” என்றவள், டேரக்டரை காணுவதற்கு சென்றாள்..

“மேடம்!”

“சார்! ப்ளீஸ் ஸனானு கூப்புடுங்க, என்னோட ஃபர்ஸ்ட் பிலிம் டைரக்டர் நீங்க, என்னோட மூத்தவர்…”

“ஆனா இப்ப நீங்க நம்பர் ஒன் பொஸிஸனில் இருக்கீங்க, எனக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கலை தேசிய விருதும் வாங்கி, நீங்க மனசு வச்சு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து இருக்கீங்க, அதுக்காக மரியாதைக் கொடுக்கனுமுல…”

“சார்! நீங்க அன்னைக்கு எனக்கு வாய்ப்புக் கொடுக்கலனா, எனக்கு இன்று நம்பர் ஒன் பொஸிஸன் இல்லை. ப்ளீஸ் அப்ப எப்பிடி கூப்புடுவீங்களோ அப்பிடியே கூப்புடுங்க…”

சிரித்தவர், “நீ இன்னும் மாறவே இல்லை ஸனா” என்றார்..

அவளும் சிரித்தாள்…

“ஓகே ஸனா, இண்டர்வியூக்கு ரெடி ஆகிடு.. ரொம்ப தேங்க்ஸ் எனக்காக நீ இண்டர்வியூ கொடுக்க ஒத்துக்கிட்டதுக்கு, படத்தின் புரோமோஷனுக்கு நீ வர மாட்ட, அதான் இந்த பப்ளிசிட்டி, என்னோட சுயநலத்துக்கு தான்…”

“பொதுவாக நான் இந்த மாதிரி கொடுக்க விரும்புறது இல்லை, உங்களுக்காக அசெப்டு, பட் கண்டிப்பா என்னோட பர்சனல் தான் கேள்விகளா இருக்கும், படத்தைப் பற்றி கேட்பதை விட” என சிரித்தாள்…

*** ***

டைரக்டரிடம் கேள்விகள் ஆரம்பம் ஆனது.
ஹீரோ சில படங்களில் மட்டுமே நடித்த வளரும் நாயகன் என்பதால் அவனிடம் பெரிதாக கேள்விகள் போகவில்லை.

ஸனா தான் இங்கு டார்கெட். “மேடம்! உங்க முதல் டைரக்டர், ஆனா இவ்வளவு நாள் கண்டுக்கவே இல்லைனு சொல்றாங்க…?”

“கால்ஷீட் ப்ராப்ளம் தான், சாரும் இடையில் மூவி எதும் ட்ரைப் பண்ணல…”

“இப்ப எத்தனை ப்ராஜெட் போயிட்டு இருக்கு மேடம்…?”

“த்ரீ ரிலீஸ்ஸுக்கு இருக்கு, நான்கு  போயிட்டு இருக்கு இந்த மூவியோடு சேர்த்து, சில கதைகள் கேட்டு இருக்கேன்…”

“அப்ப உங்க மேரெஜ் பத்தி ஐடியா எதும் இல்லையா… எப்போ பிளான் பண்ணி இருக்கீங்க…?”

“அதை பத்தி எல்லாம் யோசிக்கலை..”

“அப்ப உங்களுக்கும், ருத்ரம் மூவி ஆக்டருக்கும் இருக்க ரிலேசன் உண்மையா…? அவரை தான் கல்யாணம் செய்ய போறீங்களா..?”

“சாரி! நெக்ஸ்ட் க்வெஸ்டின்…”

“ஸனா மேடம்! ஆன்சர் ப்ளீஸ்.. ஆமா இல்லைனு சொல்லலாமே…”

ஆழ்ந்த பெருமூச்சை மெதுவாக வெளியிட்டவள்.

“ஸி எனக்கு மூன்னு ஆப்சன் இருக்கு..
ஒன்னு, ஆமானு சொன்னா அந்த நடிகர் குடும்பம் தேவையில்லாம மனம் வருந்தும், இல்லைனு சொன்னா மட்டும் நீங்க அப்பிடியே நம்பி ஏத்துக்க மாட்டீங்க  அதையே கேள்விக்குறியா ஃபிளாஷ் நியூஸா போடுவீங்க, மூன்றாவது தான் நான் சொன்ன நெக்ஸ்ட் க்வெஸ்டின்… புரியுதா…? நெக்ஸ்ட்..”

“நீங்க வந்து பத்து வருசம் ஆகப் போது ஃபீல்டில், இன்னும் எத்தனை வருசம் நடிக்க ஆசை…?”

“ஒரு நடிகையா எனக்கு நடிக்க ஆசை வாழ்நாள் முழுவதும்.. ஆனா ஒரு பெண்ணாக குடும்பப் பொறுப்பில் வாழ ரியால்டியில் ஆசை இருக்கு, ஆனா அது கேள்விக்குறியே, ஏனா நான் நடிகை.. அக்மார்க் குத்திய நடிகை…”

“மேடம்! லாஸ்ட் க்வெஸ்டின் பொதுவா எல்லாரும் ஃபீல்டில் ஒரிஜினல் நேம் சென்ஞ்ச் பண்ணுவாங்க, நீங்க அதே பெயரில் கண்டினீவ் பண்ணிட்டீங்க, உங்க பெயரில் எதும் சென்டிமென்ட் இல்ல லக்கி இருக்கா…?”

“என்னோட பெயர் என்னோட மதத்தைச் சொல்றதுக்காக பெத்தவங்க வச்சது அதை மாத்த விரும்பல, நீங்க கேட்ட சென்டிமென்ட்டும் இல்லை, லக்கியும் இல்லை ஆனா சீக்ரெட் இருக்கு..”

“ஸனா மஸ்தூரா… ஸனா அப்பிடினா பிரகாசமானவள், மஸ்தூரா அப்பிடினா
கற்புடையவள் இதான் அரத்தம். ஆனா என்னோட ப்ரோப்ஷனல் என்னை ஸனா அப்பிடினு தான் ஏத்துகிட்டு அடுத்த பெயரை சொல்லப் பயப்புடுது, ஏனா நான் நடிகை இல்லையா, நடிகைனா இப்பிடி தானு ஒரு வரையறை வச்சு இருக்க சமூகத்திடம் நான் நேரா சென்று நான் மஸ்தூரானு சொல்ல விருப்பமில்லை, சோ இந்த பெயர் தானா சொல்ல வைக்கும் இல்லையா… ” என்று சிரித்தவள்.

“ஆனா இதுவரை என்னைய யாரும் ஸனா என்பதை தாண்டி அழைத்ததில்லை” என்று கூறி எழுந்தாள்..

இண்டர்வியூ முடிந்தது..

****

“காலையில் எழுந்து இப்பிடி வாக்கிங் போறது சுகமாக தான் இருக்குல….” என்றான் அருகில் நடந்து வந்தவன், மிஸ்டர் ஒய்..

“சுகம் தான் யாரு இல்லைனா, ஆனா அது நம்ம விருப்பப்படி கிடைக்கனும்…”
என்றான் அவன், மிஸ்டர் எக்ஸ்..

ஒய்”நீ யாரை சொல்றேனு தெரியுது புரியுது.. அதுக்கு நம்ம இந்த குடும்பத்தில் பிறந்து இருக்கக் கூடாது..”

எக்ஸ்”ஏன் அண்ணா! நம்ம குடும்பத்துக்கு என்ன.. இது கிடைக்க நம்ம கொடுத்து வச்சிருக்கனும்” என்று சிரித்தான்.

ஒய்”அடேய்! நீ அப்பிடியும் பேசுவ, இப்பிடியும் பேசுவ… ஆளை விடு..”

எக்ஸ்”எப்பிடி பேசுறேன், சரியா தானே பேசுறேன்..”

ஒய்”நீ தானே சொல்லுவ, இது குடும்பமா இல்லை மிலிட்டரி ஹாலானு…”

எக்ஸ்”ம்ம்ம்! இந்த குடும்பம் புடிக்கும் அண்ணா, ஆனா இந்த ரூல்ஸ் அன்ட் ரெகுலேசன் தான் புடிக்கல.. அதை மாத்தினா நம்ம குடும்பம் டாப் கியரில் போகும்..”

ஒய்”அது முடியாது, நடக்காது.. வேணுனா நைட் கண்ணை மூடித் தூங்கு.. கனவு வரும் அதில் வரும் கனவில் டாப் கியர் போட்டுப் போ, சரியா…?”

எக்ஸ்”ம்ம்ம்! பாப்போம்… எத்தனை நாளைக்குனு…”

ஒய்”ம்ம்ம்! எம் பிள்ளைக்கும், உம் பிள்ளைக்கும் பிள்ளைப் பொறந்தாலும் இப்பிடி தான்டா இருக்கும்..”

எக்ஸ்”நம்ம ஒன்னும் அந்த ஓல்டு மேன் மாதிரி இல்லை, நம்ம பிள்ளைங்க இதே மாதிரி வாழ…”

மொபைல் ஃபோன் ரிங்கானது…

அண்ணன் என அழைக்கப்பட்டவன் எடுத்து அட்டென்ட் செய்தான்..

“என்ன வாக்கிங் போறேனு, அப்பிடியே பறந்துட்டீங்களா…? வாங்க கூட்டுக்கு…” என்றாள் ஒருவள்..

கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “ஓ! டைம் ஆச்சா, இதோ வரேன்மா….”என்று போனை வைத்தவன், “டேய்! வா போகலாம் லேட் ஆச்சு..”என்றான்.

எக்ஸ்”நீ போ, நான் வரேன்…”என்று சாலையில் வார்ம் அப்பில் இருந்தான்.

ஒய்”அடேய்! வாடா அப்புறம் அவரு கேள்விக் கேக்க ஆரம்பிச்சா தனியா வார்ம் அப் செய்யனும்…”

எக்ஸ்”முதலில் உன்னைய போடனும், அப்புறம் அந்த சீனியரைப் போட்டு தள்ளனும்.. அப்புறம் வரிசையா அவரு பெத்த மூன்னு புள்ளைங்களை.. அப்புறம்…” என்று அவன் ஆரம்பிக்க…

ஒய்”போதுமுடா, அப்புறம் ஜெயில் தான்.. உன்னைய என்னால புரிஞ்சிக்க முடியல,  நீயா திட்டுவ எல்லாரையும், நான் ஏதாவது சொன்னா உடனே என் குடும்பம் போல வருமானு பாட்டு பாடுவ, யாருடா நீ..? நல்லவனா..? கெட்டவனா….?”

எக்ஸ்”எனக்கே தெரியாதே… ஆனா நான் உன் சித்தப்பா பையன், நீ என் பெரியப்பா பையன்”

ஒய்”ம்ம்ம்! பேசுவ.. என் சித்தப்பா பையன் நீ ஆனா நீ எனக்கு அண்ணன், என் அப்பா மூத்தவர் என்று ஒரு மொக்கை காரணத்தை சொல்லி, நீ என்னை அண்ணனு சொல்ற .” என்றான்..

“ஹஹஹஹ! ஆமா தானே”

ஒய்”தனியா தானே இந்த மொக்கை, அங்க மிலிட்டரி முன் நான் உன்னைய அண்ணன், நீ என்னைய பேரு சொல்லி தானே கூப்புடனும். பொழைச்சுப் போ இப்ப வாங்க மிஸ்டர் அண்ணா… மிலிட்டரி ஆபிஸர் என்டர் ஆகிடுவார், வயசானாலும் மனுசன் ரிடையர் ஆக மாட்டேங்குறார்…”என்று நடந்தான்..

எக்ஸ்”ஏய்! அப்பிடி சொல்லாத, அவரு ரிடையர் ஆகக் கூடாது, அவர் மட்டும் தான் அந்த இடத்தில் இருக்க முடியும்..”

“நல்லவரே! போதும் வாங்க” என்று கடுப்பாகி நடந்தான் ஒய்.

வாயினுள் சிரித்து, ஹாயாக நடந்தான் பின்னே நம் ஹீரோ எக்ஸ்…

“அதியன் நவநீத ராகவன்”

அதியனவள் அடுத்து…

இந்த கதை, சமூகத்தில் நடிகையாக வாழ்பவர்களுக்கு இப்பிடியும் ஒரு பகுதி இருக்கலாம் என்ற எனது முழுக்கற்பனை மட்டுமே..

( படித்ததை வைத்து தெரிந்து இருக்கும், கதையின் நாயகிக்கு பணியும் நாயகி தான் என்று…

நாயகன் நல்லவனா…? கெட்டவனா…? அப்பிடினு அவனுக்கே தெரியாத ஒருவன்..

இவர்கள் நடுவே ஒரு அடிப்படையான பழக்கவழக்கத்தில் வாழும் குடும்பம்.. நம் நாயகன் குடும்பம் தான்..

ஒரு நடிகை பாரம்பரிய பழக்கவழக்கம் கூட்டுக் குடும்பத்தை நினைத்துப் பார்ப்பதும், அந்த குடும்பம் ஒரு நடிகையை ஏற்பதும்…? ? ? ?

அது நடந்தாலும் நிலைப்பது அதை விட  கஷ்டம்…?  விவாகரத்து எல்லாம் இப்போது, இதன் அடிப்படை தானே…

பார்ப்போம். இவர்கள் வாழ்க்கை எங்கே, எப்பிடி நகர்கிறது என்று.. உங்கள் கருத்துக்களை விமர்சனங்களாக தரவும்.)

……. சங்கீதா ராஜா…….

Advertisement