Advertisement

சில மாதங்களுக்கு பிறகு :- 

இரவு வீட்டில் ஹரீஷ் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. தூக்க கலக்கத்துடன் கதவை திறந்தவன் அங்கே நின்றிருந்த திவ்யாவை கண்டு கண்ணை தேய்த்துக் கொண்டு பார்க்க, அங்கே யாரும் இல்லை. அவன் மீண்டும் கண்ணை தேய்த்துக் கொண்டு திறக்க,

“பூம்” என்று கத்தியபடி பக்கவாட்டில் இருந்து புன்னகையுடன் குதித்து மீண்டும் தரிசனம் தந்தாள்.

அவன் கனவா நினைவா என்ற குழப்பத்துடன் நிற்கவும்,

வாய்விட்டு சிரித்த திவ்யா, “கனவில்லை நிஜம் தான்.. முதலில் நீ கண்ணை கசக்கவும் சைடில் ஒளிஞ்சிட்டேன்..” என்றாள். 

சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தவன், “பன்னிரண்டு மணிக்கு பேய் மாதிரி வந்து நிற்கிற!” என்றான். 

அவள் முறைத்துவிட்டு, “போடா” என்று கிளம்பப் போக, அவன் சட்டென்று அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து அவளை வலது கையால் அணைத்து இடது கையால் கதவை மூடினான்.

பிறகு அவள் இடையை வளைத்து நெற்றியில் செல்லமாக முட்டியபடி, “இந்த நேரத்தில் என் ரௌடி பேபிக்கு இங்கே என்ன வேலை? அதுவும் நான் வாங்கிய புடவையை எனக்கு தெரியாம திருடி கட்டிட்டு வந்து சர்ப்ரைஸ் தரீங்க!” 

“நான் ஒன்னும் திருடலை.. இது என்னோடது தானே!”

“ஆனா நான் கல்யாணத்துக்கு அப்புறம் தானே தருவேன்னு சொன்னேன்.. இன்னும் ஒரு வாரம் பொறுத்திருக்க முடியலையா உன்னால்!” 

“இதுக்கு விளக்கம் அப்புறம் சொல்றேன் அதுக்கு முன்னாடி” என்றபடி விலக பார்க்க,

அவன், “எதுவா இருந்தாலும் இங்கே இருந்தே சொல்” என்றான். 

“இரு டா.. இன்னும் ரெண்டு நிமிஷம் தான் இருக்குது” 

“எதுக்கு?” 

“சொல்றேன்.. நீ முதல்ல என்னை விடு” 

“நீ என்னனு சொல்லு” 

“என் செல்லக் குட்டில விடுடா” என்று அவன் நாடியை பிடித்து கொஞ்சவும், அவன் அவளை விட்டான்.

“கண்ணை மூடியபடி இங்கேயே இரு” என்றவள் வேகமாக சமையலறைக்கு சென்றாள்.

“என்னடி பண்ற!” என்று அலுத்துக் கொண்டபடி கண்களை மூடினான்.

சில நொடிகளில், “இப்போ தான் மணி பனிரெண்டு.. இப்போ கண்ணை திற” என்றாள்.

அவன் கண்ணை திறந்ததும் இன்பமாக அதிர்ந்தான். அறையின் விளக்கு அனைக்கப் பட்டிருக்க, அவள் கையில் மெழுகுவர்த்திகள் ஏந்திய பிறந்த நாள் அணிச்சல்(Cake) இருந்தது. அந்த சிறிய மெழுகுவர்த்திகளின் ஒளியில் அவள் தேவதையாக தெரிந்தாள். அவன் காதலுடன் அவளை நோக்க,

அவள், “ஹப்பிபிபிபிபி பர்த்டே ரிஷி கண்ணா” என்று மகிழ்ச்சியுடன் கத்தினாள்.

அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் சிறு மேசையில் அணிச்சலை வைத்தபடி, “ஹ்ம்ம்.. வந்து வெட்டு” என்றாள்.

“நீ மட்டும் வெட்டுறது இல்லை” 

“ரிஷி-ன்ற முனிவர் கொடுத்த அறிவுரையைக் கேட்டு என் முடிவை மாத்திக்கிட்டேன்.. இனி பழையபடி இந்த தியா பிறந்தநாளை கொண்டாடுவா” 

“அடிங்க.. நான் முனிவரா” என்றபடி அவளை அணைத்தவன் அவளது திமிரலை பொருட் படுத்தாமல், “முதல்ல பிறந்த நாள் பரிசு கொடு.. அப்புறம் தான் கேக் கட்” என்றான். 

“நீ என் கையை ப்ரீயா விட்டால் தானே தர முடியும்” என்று சிணுங்கினாள்.

“நான் பரிசு பொருளை கேட்கலை” 

“வேற!”

“எனக்கு ஸ்ட்ராபெரி சாக்லெட் வேணும்” 

“ஸ்ட்ராபெரி சாக்லேட்டா…..” என்று ஆரம்பித்தவள் அவன் பார்வை தன் இதழில் பதியவும், “கேடி.. அதெல்லாம் முடியாது.. கல்யாணத்துகு அப்புறம் தான் நான் தருவேன்” என்றாள். 

அவள் கண்களை பார்த்தபடி, “நான் கேட்கும் பிறந்த நாள் பரிசு இது தான்.. அப்புறம் உன் இஷ்டம்” என்றான்.

“ப்ளீஸ் டா” என்று அவள் கெஞ்ச அவன் அசையவில்லை.

சில நொடிகள் மௌனத்தில் கழிய, அவள் மெல்லிய குரலில், “நீ கண்ணை மூடிக்கோ” என்றாள்.

அவன் உதட்டோர புன்னகையுடன் கண்களை மூட, அவள் தயங்கியபடியே மெல்ல அவன் இதழ்களை நெருங்கி தன் இதழ் கொண்டு மென்மையாக மூடினாள். அவள் மென்மையாக ஆரம்பித்த இதழொற்றலை அவன் வன்மையாக மாற்றி இருந்தான். அவளது வெற்று இடையில் பதிந்திருந்த அவனது கரம் அதன் மென்மையில் எல்லை மீறத் துடிக்க, அதை கஷ்டப்பட்டு அடக்கினான். அவனது முதல் இடை தீண்டலில் அவள் அவளாக இல்லாமல் உருகினாள்.

அவள் மூச்சு காற்றுக்கு திணறவும், இதழ்களை விடுவித்தவன் அவள் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்ததும், “ஸ்ட்ராபெரி சாக்லேட் செம்ம டேஸ்ட்” என்று கூறி கண் சிமிட்டினான். அவள் வெட்கத்துடன் அவனை அடித்தாள்.

அவள், “சரி இப்பவாது கேக் கட் பண்ணு” என்றதும்,

அவன் அறையின் விளக்கை ஒளிரவிட்டுவிட்டு அணிச்சலை வெட்டி அவளுக்கு ஊட்டினான். அவளும் அவனுக்கு ஊட்டினாள்.

அதன் பிறகு தன் கழுத்தில் அணிந்திருந்த புது சங்கிலியை கலட்டி அவன் கழுத்தில் போட்டபடி, “இது நான் உனக்கு கட்டும் தாலி” என்றாள்.

பிறகு சோபாவில் இருந்த பையை எடுத்து கொடுத்தாள். அதில் அவனுக்கு புத்தாடை இருந்தது. ஆடையை மென்மையாக வருடியவன் காதலுடன் அவளை நோக்கி, “தேங்க்ஸ் தியா பேபி” என்றபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

பின், “இந்த கேக்கை எப்போ இங்கே கொண்டு வந்து வச்ச? இந்த புடவையை எப்போ எடுத்த?” என்று கேட்டான். 

“அதுவா.. அந்த ஜந்து நேத்து ஊருக்கு போறதுக்கு முன்னாடி அவனிடம் இருந்த வீட்டு சாவியை வாங்கிட்டேன்.. நீ காலேஜ்ஜில் இருந்த நேரத்தில் நேத்து இந்த புடவையை எடுத்தேன்.. அப்புறம் இன்னைக்கு இவனிங் கேக்கையும் டிரெஸ்ஸையும் வாங்கி வச்சேன்.. கிட்சன் லாப்டில் வச்சிருந்தேன்” 

“எதுக்கு இந்த புடவையை எடுத்த? நான் தான்………………….” 

தன் கரத்தினால் அவன் வாயை மூடியவள், “நீ சொல்லலைனாலும் இதை ஏன் நீ கொடுக்க விரும்பலைனு எனக்கு தெரியும்.. இதை கொடுக்க முடியாமல் போய் நமக்குள் சிறு பிரிவு வந்ததால் இதை தனியா வச்சிட்ட.. நான் கேட்டுட்டே இருக்கவும் கல்யாணத்திற்கு பிறகு தரேன்னு சொன்ன..

ஆனா நீ முதல் முதலா வாங்கிய இந்த புடவை எனக்கு ஸ்பெஷல்.. நீ இதை வாங்கியது தெரிந்ததில் இருந்து இதை கட்டும் வரை வேறு புடவை கட்டக் கூடாதுன்னு, நான் அதுக்கு பிறகு புடவையே கட்டலை தெரியுமா! ஆனா கல்யாணதப்ப அது முடியாதே.. அதான் இப்படி.. சரி அதை விடு.. சரீ எப்படி இருக்குது?” 

“சரீ சூப்பர்.. சரீ கட்டியிருக்கிற ஆள் அதை விட சூப்பர்” என்றவனின் பார்வை மையலுடன் மாறவும், 

அவள் சட்டென்று அணிச்சல் பாற்சாரமை(cake cream) எடுத்து அவன் முகம் முழுவதும் பூசிவிட்டு தள்ளி நின்று கொண்டாள்.

“ஏய்” என்று கத்தியவன் தானும் பாற்சாரமை கையில் எடுத்தான்.

அவள், “ரிஷி நோ” என்று கூறியபடி ஓட, “ஒழுங்கா நில்லு.. சேதாரம் கம்மியா இருக்கும்” என்றபடி அவளை துரத்திக் கொண்டு அவனும் ஓடினான்.

சில நிமிடகள் இருவரும் ஓடிக் கொண்டிருந்தனர்.

அவன் அவளை பிடித்துவிடவும் அவள், “என் செல்ல ரிஷி கண்ணா தானே! உன் தியா பேபி பாவம் டா.. விட்டுரு டா” என்று கொஞ்சியபடி கெஞ்ச,

அவன் உதட்டோர புன்னகையுடன், “விடுறேன் ஆனா என் முகத்தில் இருப்பதை நீ தான் கிளீன் பண்ணும் அதுவும் உன் உதட்டால்” என்றவன் இடது கை விரலால் அவளது உதட்டை வருடினான்.

அவன் கையை தட்டி விட்டவள், “நீ முகத்தில் பூசிக்கோ” என்றாள்.

அதற்கும் அவன் புன்னகையுடன், “சரி.. உன்னை சொன்னதை நான் செய்துட்டு போறேன்.. பூசிட்டு நானே கிளீன் பண்றேன்” என்று கூற,

“டேய்.. வேணாம்” என்றபடி அவனை தள்ளிவிட்டுவிட்டு அவள் பின்னால் நகர்ந்தாள். அவன் அவளை நெருங்கவும் பூஜை வேளை கரடியாக திவ்யாவின் கைபேசி அலறியது.

அவள் அருகில் இருந்த மேசை மீதிருந்த கைபேசியை பார்த்தாள். அழைத்தது பவித்ரா.

அவள் அழைப்பை எடுத்ததும், பவித்ரா, “நீ போய் ஒரு மணி நேரம் ஆச்சு.. சீக்கிரம் வாடி.. எனக்கு தான் பக்கு பக்குன்னு இருக்குது” 

“ஒரு மணி நேரமா ஆச்சு?” 

“பரதேவதையே! உனக்கு ஒரு நிமிஷம் போல தான் இருக்கும்.. இன்னும் அஞ்சு நிமிஷத்தில் நீ இங்கே இருக்கலை நான் கதவை மூடிட்டு தூங்க போய்டுவேன்” 

“போய் தூங்கு.. நான் பெல் அடிச்சுட்டு போறேன்.. இல்லை மிஸ்டர் சந்திரமௌலிக்கு போன் பண்ணிட்டு போறேன்” 

“எனக்கு நெஞ்சு வலி வர வச்சிராதடி.. சீக்கிரம் வாடி” என்று அழுதுவிடும் குரலில் கெஞ்சவும்,

“சரி சரி.. அழாத.. வரேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தாள். 

அவள் கிளம்ப மனமின்றி அவனை பார்க்கவும், அவன் இடது கையால் அவள் கன்னத்தை தட்டி, “பவி பாவம்.. நம்மால் அவளுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது.. சந்திரன் சாருக்கும் கெட்ட பெயரை வாங்கித் தந்திரக் கூடாது.. நீ கிளம்பு” என்று பொறுப்புடன் கூறினான்.

அவள் கிளம்ப மனமின்றி கிளம்பிச் சென்றாள்.

 

அவளைப் பார்த்த பிறகு தான் பவித்ரா நிம்மதியாக மூச்சு விட்டாள். இருவரும் அறைக்குள் செல்லவும் திவ்யாவின் கைபேசி சிணுங்கியது. அழைத்தது ஹரீஷ் தான்.

பவித்ரா, “லவ் பண்றவ கூட மட்டும் படுக்கவே கூடாது.. கொசு தொல்லையை விட பெரும் தொல்லை.. ஹரி சார் எப்படித் தான் தூங்கி வழியாம கிளாஸ் எடுக்கிறாரோ! நான் ஹாலில் போய் படுத்துக்கிறேன்” என்றுவிட்டு செல்ல,

ஹரீஷ், “என்ன சொல்றா உன் பிரெண்ட்?” 

“நம்மை புகழ்ந்துட்டு போறா” 

“நம்மையா உன்னையா!” 

“நான் வேறு நீ வேறா!” 

“நானே பஸ்ட் நைட் மிஸ் ஆன கவலையில் இருக்கிறேன்.. நீ வேற ஏத்தி விடாதடி” 

“என்ன சொன்ன?” 

“நீ எனக்கு தாலி கட்டின தானே.. அப்போ இன்னைக்கு நமக்கு பஸ்ட் நைட் தானே” என்று அவன் விஷமத்துடன் கூற,

“உன்னை போய் ரிஷிகேஷ்னு இந்த உலகம் நம்புதே!” 

“மனைவியிடம் ரிஷ்கேஷா இருந்தா தான்டி தப்பு என் செல்ல ரௌடி பேபி” 

“என்ன! இன்னைக்கு மனைவி அது இதுனு பேச்சு தூள் பறக்குது!” 

“எது எது?” 

“அது அது தான்” 

அவன் புன்னகையுடனும் காதலுடனும், “என்னை பொறுத்தவரை நம் மனம் இணைந்த நொடியில் இருந்து நீ என் மனைவி தான்.. இன்னைக்கு நீ தாலி கட்டியதும் அதை டிக்ளர் பண்றேன்.. அவ்ளோ தான்” என்றான். 

“ஐ லவ் யூ ஸோ மச் ரிஷி கண்ணா” என்று கூறி அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.

“நானும் லவ் யூ ஸோ மச் தியா பேபி” என்றவன், “ஆனா நேரில் இப்படி முத்தம் கொடுக்க மாட்டிக்கிறியே!” என்றான். 

“அதெல்லாம் எப்போ தரனும்னு எனக்கு தெரியும்” என்று அவர்களின் பேச்சு விடியும் வரை நீடித்தது.

 

 

ரு வாரம் மெல்ல கடந்தது. அவர்களின் கல்யாண நாளும் அழகாக புலர்ந்தது.

ராஜாராமும் ராகவனும் இணைந்து அவர்களின் திருமணத்தை விழாவை போல் கொண்டாடினர். சுபாஷினி மகிழ்ச்சியுடன் வேலைகளை இழுத்துப் போட்டு செய்துக் கொண்டிருந்தார். சூர்யா மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான். பார்வதி கவனிப்பாரின்றி எரிச்சலுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தார்.

அழகான தாமரை நிறத்தில் முழுவதும் ஜரிகை வேலைபாடு  நிறைந்த  பட்டுப் புடவையில்  ரதியை போல் காட்சியளித்த திவ்யா பவித்ரா மற்றும் ஜனனி நடுவே மெல்ல நடந்து வந்தாள். திவ்யாவை தன்னை மறந்து கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரீஷ்.

அரவிந்த் மாலையை சரி செய்வது போல் ஹரீஷ் காதில், “டேய் உன் ஸ்டுடென்ட்ஸ் நிறைய பேர் வந்திருக்காங்க.. அடக்கி வாசிடா” என்றதும், சுயஉணர்வை பெற்ற ஹரீஷ் இப்பொழுது காதலுடன் தன்னவளை பார்த்தான்.

அப்பொழுது நிமிர்ந்து பார்த்த திவ்யா அவனது பார்வையில் வெட்கப் புன்னகையை உதிர்த்தாள். அவளது கன்னங்கள் அவளது புடவையின் நிறத்திற்கு மாறியது. அது இன்னமும் அவளது அழகை கூட்டியது.

விஜய், “கண்ணும் கண்ணும் நோக்கியா” என்ற பாடலை பாடவும், திவ்யா புன்னகையுடன்  பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

அதன் பிறகு அவள் வந்து அமர்ந்ததும் அய்யர் மந்திரங்களை ஓதி தாலியை ஹரீஷ் கையில் கொடுத்தார்.

தாலியை வாங்கியபடி, “தியா” என்று மென்மையாக அழைத்தவன், அவள் பார்வையை அவன் பார்வையோடு கலக்கியதும், “இதே அன்புடனும் காதலுடனும் என்றும் இணை பிரியாமல் இருப்போம்.. லவ் யூ பேபி” என்று கூறியபடி அவள் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான்.

திவ்யா காதலுடனும் நெகிழ்ச்சியுடனும், “லவ் யூ ஸோ மச் ரிஷி கண்ணா” என்றாள்.

திவ்யாவே ஹரீஷை விட்ட போதும், அவளை விட்டு விலகாமல் அவள் காதலை வற்ற விடாது அவளுடன் இணைந்த ஹரீஷ் அவள் விலக்கிய உறவுகளையும் அவளுடன் சேர்த்துவிட்டான். இனி அவர்கள் இடையே விலகல் என்பதே இல்லை.

எப்பிலாக் இன்று மாலை 6 மணிக்கு.

Advertisement