Advertisement

விலகல் 25

டபடத்த இதயத்துடனும் தவிப்புடனும் ஹரீஷ் அந்த உணவகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தான்.

நான்கு சக்கர வண்டியை ஓட்டியபடி விஜய் ஏதேதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டே வர, அவன் அருகே அமர்ந்திருந்த திவ்யா அமைதியாகவே இருந்தாள்.

விஜய், “பவிக்கு கூப்பிடவே இல்லை” என்று சிறிது அலறும் குரலில் கூட கூறிப் பார்த்தான் ஆனால் அவளிடம் பதில் இல்லை. 

விஜய் சிறு கோபத்துடன், “இது ரொம்ப ஓவர் திவி.. ஏன் என்னிடம் பேசாம வர?” என்றான். 

“..” 

“ஏன்டி இப்படி பண்ற?” 

“…” 

“ச்ச்.. இப்போ ஹோட்டலுக்கு வரேன்னு நானா சொன்னேன்!” 

அதற்கும் பதில் இல்லை என்றதும், விஜய் ‘இவளை பற்றி தெரிந்தும் போனை எடுப்பியா!’ என்று புலம்பியபடி வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

 

 

திவ்யாவுடன் போராடி உணவை அவளை சாப்பிட வைத்து தானும் சாப்பிட்ட பிறகு கைபேசியை எடுத்து பார்த்தவன் அதில் பவித்ரா மற்றும் ஹரீஷிடம் இருந்து பல அழைப்புகள் வந்திருந்ததை பார்த்தான். அதுவும் ஹரீஷ் முப்பது முறை அழைத்திருந்தான்.

அப்பொழுது சரியாக ஹரீஷிடமிருந்து அழைப்பு வரவும், அவன் அதை திவ்யாவிடம் கொடுத்தான். அவள் அழைப்பை எடுக்காமல் கைபேசியை அவனிடமே கொடுத்தாள்.

விஜய், “பேசுடி.. நிறைய முறை கூப்பிட்டு இருக்கார்” என்றான். 

“எனக்கு பேச எதுவும் இல்லை” 

“ஒருமுறை பேசு” 

“எதுக்கு?” 

“என்ன தான் சொல்றார்னு தெரிந்து…………….” 

“தெரிந்து என்ன செய்யணும்? முதலில் எனக்கு எதுவும் தெரிந்துக்க தேவை இல்லை” 

“சரி நான் பேசுறேன்” என்றபோது அழைப்பு நின்றிருந்தது.

திவ்யா சிறு தோள் குலுக்கலுடன் நகர போக, மீண்டும் அழைப்பு வந்தது.

விஜய், “ஹரி சார் தான்” 

“ஃப்ரீயா விடு” 

“நாம எங்கே இருக்கோம்னு தெரியாம பயத்தில் கூட கூப்பிடலாம்.. இரு நான் பேசுறேன்” என்றவன் அழைப்பை எடுத்து ஒலிபெருக்கியை இயக்கினான்.

திவ்யாவின் தீ பார்வையில் நெஞ்சில் எழுந்த சிறு பயத்துடன், “சொல்லுங்க சார்” என்றான்.

ஹரீஷ் படபடப்புடனும் தவிப்புடனும், “தன்க் காட்.. எங்கடா இருக்கீங்க? திவ்யா எப்படி இருக்கா?” என்று கேட்டான். 

“என் வீட்டில் தான் சார் இருக்கிறோம்” 

“திவ்யா எப்படி இருக்கா?” என்றவனது குரல் பெரிதும் தவிப்புடன் ஒலித்தது.

விஜய் அவளை பார்த்தபடியே, “திவி இப்போ பரவாயில்லை சார்” என்றான். 

“..” 

“சார்” என்று மெல்லிய குரலில் அழைக்க,

ஹரீஷ் தயக்கத்தை உதறியவனாக, “திவ்யாவை கூட்டிட்டு XXX ஹோட்டல் இப்பவே வா” என்றான். 

“சார்!!!” என்று அவனது குரல் சிறு அதிர்ச்சியுடன் ஒலித்தது.

“நான் அவளுடன் பேசணும்.. கூட்டிட்டு வா” 

விஜய் அவளிடம் செய்கையில் ‘என்ன சொல்ல?’ என்று வினவினான். அவள் அமைதியாக இருக்கவும் அவனும் அமைதியாக இருந்தான்.

ஹரீஷ், “விஜய்! லைனில் இருக்கியா?” 

“இருக்கிறேன் சார்” 

“சரி நான் இன்னும் முக்கால் மணி நேரத்தில் அங்கே இருப்பேன்” 

“சார்” என்று விஜய் தயக்கத்துடன் இழுக்கவும்,

ஹரீஷ், “என்ன?” என்றான். 

“நான்.. திவி கிட்ட கேட்டுட்டு சொல்றேன்” 

“திவ்யா தூங்கிட்டு இருக்காளா?” 

“இல்லை”

 “அப்போ இப்பவே கிளம்பி வா” 

“சார்.. நான்…………….” 

“திவ்யா நான் முக்கால் மணி நேரத்தில் அங்கே வந்து காத்துட்டு இருப்பேன்” என்றவன் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான்.

திவ்யா தூங்கவில்லை என்றதும் தான் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டு தான் இருப்பாள் என்பதை கணித்தே ஹரீஷ் அவ்வாறு கூறி அழைப்பைத் துண்டித்தான்.

விஜய் ஆச்சரியத்துடனும் சிறு அதிர்ச்சியுடனும் பார்க்க, திவ்யாவோ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

விஜய், “இப்போ என்ன பண்றது?” என்று கேட்டான். 

திவ்யா அவனை முறைத்துவிட்டு வெளியே சென்று விஜய் அன்னையிடம், “ஆன்ட்டி நாங்க கொஞ்சம் வெளியே போயிட்டு வரோம்” என்றாள்.

அவர், “சரிமா” என்றபடி கேள்வியுடன் மகனை பார்க்க,

அவன், “XXX ஹோட்டல் போயிட்டு வரோம் மா.. வந்து சொல்றேன்” என்றான்.

“சரி போயிட்டு வாங்க” என்றதும் இருவரும் கிளம்பினர்.

 

கிளம்பியதிலிருந்து இந்த நொடி வரை அவளை பேச வைக்க முயற்சித்து தோல்வியை தழுவிக் கொண்டிருக்கிறான். 

விஜய், “ஹரி சார் நிறைய முறை காள் பண்ணி இருந்தார்.. அதான் அட்டென்ட் பண்ணேன்” என்றான். 

“உனக்கு அவன் தானே முக்கியமா தெரிகிறான்! அவனிடமே பேசிக்கோ.. இனி………………….” 

“உனக்காக தானே அவர் போனை எடுத்தேன்.. எனக்கு நீ தான் முக்கியம்.. நீ மட்டும் தான் முக்கியம்.. இனி அவருடன் காலேஜ்ஜில் கூட பேசலை போதுமா..” என்றபோது உணவகம் வந்திருக்க, அவள் பதில் கூறாமல் இறங்கி உள்ளே சென்றாள்.

‘கடவுளே! என்ன நடக்க போகுதோ!’ என்ற திகிலுடன் அவன் அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினான்.

அவன் உள்ளே சென்றபோது திவ்யா ஹரீஷை தேடிக் கொண்டிருக்க, ஹரீஷ், “விஜய்!” என்றபடி கையை தூக்கி காட்டினான். ஹரீஷ் திவ்யா உள்ளே நுழைந்ததும் பார்த்துவிட்டான் ஆனால் பொது இடத்தில் அவள் பெயரை கத்தி அழைக்க விரும்பாமல் விஜய் வந்ததும் அவனை அழைத்தான்.

இருவரும் அவன் அமர்ந்திருந்த மேஜைக்கு சென்று அமர்ந்தனர்.

ஹரீஷ் விஜயிடம், “என்ன சாப்பிடுற?” என்று கேட்டான். 

விஜய் மனதினுள், ‘இப்போ தானே பேச மாட்டேன்னு சொன்னேன்! இப்போ என்ன பண்ண!’ என்று யோசித்தபடி அமைதியாக தோழியை பார்க்க, அவளோ இவனை கண்டுக்கொள்ளவில்லை.

ஹரீஷ், “இல்லை ஜூஸ் குடிக்கிறியா?” என்று கேட்டான். 

செய்வதறியாது திணறிய விஜய் திவ்யாவிடம், “திவி நீ பேசிட்டு வா.. நான் வெளியே வெயிட் பண்றேன்” என்றவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

இரண்டு முறை அவனை அழைத்த ஹரீஷ், “என்னாச்சு இவனுக்கு? எதுக்கு இப்படி ஓடுறான்” என்றான்.

திவ்யா, “எதுக்கு என்னை இங்கே வர சொன்னீங்க?” என்று கேட்டாள். 

அவளது பன்மை அழைப்பில் விஜயை மறந்தவனாக அவளிடம், “என்ன மரியாதை புதுசா இருக்குது?” என்றான். 

“என்ன விஷயம்?” என்று வினவியவளது உணர்ச்சியற்ற முகத்தில் இருந்து ஹரீஷால் அவளது மனவோட்டத்தை கணிக்க முடியவில்லை.

“என்னாச்சுடா?” என்று கனிவுடன் கேட்டபடி மேஜை மீது இருந்த அவளது கையை பற்ற போக, அவள் சட்டென்று கையை விலக்கிக் கொண்டாள்.

யோசனையுடன் அவளை பார்த்தவன் மனதிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.

அவள், “சீக்கிரம் பேசி முடிச்சிட்டீங்கனா நான் கிளம்புவேன்” என்றாள். 

“என் மேல் என்ன கோபம்?” 

“எனக்கென்ன கோபம்?” 

“அதை தான் நானும் கேட்கிறேன்” 

“சார்.. பேச எதுவும் இல்லனா நான் கிளம்புவேன்” 

“நான் உனக்கு சாரா?” 

“என்ன புதுசா கேட்குறீங்க?” என்று வரவழைத்த ஆச்சரிய குரலில் வினவினாள். 

அவன் அவள் கண்களை பார்த்து, “நான் உனக்கு சார் மட்டும் தானா?” என்று கேட்டான். 

தன் மனதை அடக்கியவள் உறுதியுடன், “ஆமாம்” என்றாள்.

அவன் சிறு அதிர்ச்சியுடன், “என்னாச்சுடா? நான்…………….” 

“உங்க ஸ்டுடென்ட் கிட்ட பேசுறது போல் பேசுங்க” 

“முன்னாடி நான் சுத்தலில் விட்டேன்னு இப்போ நீ சுத்தலில் விடாதடி.. நான் ஏன் அப்படி பண்ணேன்னு சொல்றேன்.. ஆனா அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லணும்” என்று நிறுத்தியவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி மென்மையான குரலில்,

“தியா நான் உன்னை என்னுயிரா விரும்புறேன்.. நாம விரும்பிய அன்பும் காதலும் நிறைந்த வாழ்க்கையை நாம் வாழ்வோம்டா” என்றான். 

அவள் உணர்ச்சியற்ற பார்வையுடன் அமைதியாக அவனை பார்க்கவும் அவன் குழப்பத்துடனும் யோசனையுடனும், “தியா!” என்று அழைத்தான்.

அவள் வெறுமையான குரலில், “இப்போ நான் என்ன சொல்லணும்!?” என்று கேட்டாள்.

அவளது வெறுமையான குரலில் அவன் மனம் துடித்து. எதுவோ பெரிதாக அவள் கூறப் போகிறாள் என்பதை உணர்ந்தவனின் இதயம் படபடத்தது. அவன் அமைதியாக அவளை பார்க்க,

அவள், “ரொம்ப சந்தோஷம்.. என் கனவு நிறைவேறியது.. நீ என்ன சொன்னாலும் கேட்பேன்னு சொல்லி, நீ நினைப்பதுப் போல் சேர்மன் சாரையும் அவர் மனைவியையும் என் பேரென்ட்ஸ்ஸா ஏத்துக்கணுமா?” என்று கேட்டாள். 

“தியா!” என்று அவன் பெரும் அதிர்ச்சியுடன் அழைத்தான்.

“அப்படி நீங்க நினைத்தால்.. அம் சாரி மிஸ்டர் ஹரீஷ்” என்றாள் இறுகிய குரலில்.

அவளது அன்னியமான பேச்சில் அவன் நெஞ்சம் அடி வாங்கியதோடு மனம் பெரிதும் துடித்தது. அவன் வார்த்தைகளின்றி அடிபட்ட பார்வையுடன் பார்க்க, 

அவள், “என்ன பார்க்கிறீங்க! நீங்க, சேர்மன் சார் நிம்மதி தான் உங்களுக்கு முக்கியம்னு சொன்னதை என் காது குளிர கேட்டேன்.. அவர் நான் யாருனு சொன்னதையும் கேட்டேன்.. ஆனா அவர் விளக்கமா சொல்றதை கேட்கும் சக்தி இல்லாம கிளம்பிட்டேன்” என்றாள். 

“தியா.. நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்கிறடா.. நான்…………..” 

“காள் மீ திவ்யா” என்று கடுமையுடன் கூறியவள், “எல்லாம் சரியா புரிஞ்சிட்டு தான் பேசுறேன்” என்றாள். 

“உன்னை பற்றி தெரிந்துக்கொள்ள தான் அவரிடம் அப்படி பேசினேன்டா.. எனக்கு நீ தான் முக்கியம்” 

விரக்தியுடன் சிரித்தவள், “உங்களுடைய பரிதாபக் காதல் எனக்கு தேவையே இல்லை.. நான்…………….” 

ஹரீஷ் கோபத்துடன், “லூசு மாதிரி பேசாத” என்றான். 

“நான் லூசு தான்.. உங்களுடைய அன்பான ஒரு பார்வைக்காக உங்க பின்னாடியே சுத்தினேனே! நான் லூசு தான்” 

ஹரீஷ் சட்டென்று கோபம் வடிந்தவனாக, “நிஜமாவே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி” என்றான். 

“வெளியே கெத்தா இருந்தாலும் உள்ளுக்குள் இதை நீங்க சொல்ல மாட்டிங்களானு எவ்ளோ ஏங்கினேன் தெரியுமா! ஆனா இப்போ!!!!” 

“இப்போ மட்டும் என்னடி!” என்று அவன் தவிப்புடனும் காதலுடனும் கேட்டான். 

அவனது குரலில் மனம் சிறிது அசைந்தாலும், மனதை கட்டுப் படுத்திக் கொண்டு மீண்டும் உணர்ச்சியற்ற பார்வையுடன் அமைதியானாள்.

“நீ என்னை பற்றி நந்து கிட்ட கேட்டது போல் நான் உன்னை பற்றி சேர்மன் சாரிடம் கேட்டேன்” 

“ரெண்டுக்கும் வித்யாசம் இருக்குது” 

“என்ன?” 

“நான் காதலை சொன்ன பிறகு உன்னை பற்றி தெரிந்துக் கொண்டேன்.. அதாவது எனக்கு முக்கியமாக தெரிந்தது நீ மட்டும் தான்.. நீ யார்? ஏழையா பணக்காரனா? உன் பின்னனி என்ன? னு எதுவும் தெரியாமல் உன்னை உனக்காக விரும்பி என் காதலை சொன்னேன்..

ஆனா என்னை பற்றி தெரிந்த பிறகு வரும் உனது இந்த பரிதாபக் காதல் எனக்கு தேவையே இல்லை.. நான் இங்கே வந்ததே.. இனி என் தொல்லை உங்களுக்கு இருக்காதுனு சொல்ல தான்.. பை” என்று பன்மையில் முடித்தவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினாள்.  

ஹரீஷ் தலையில் கைவைத்தபடி இடிந்து போய் அமர்ந்திருந்தான். ஆனால் சில நிமிடங்களில் தன்னை மீட்டவன், ‘நீயே விலகினாலும், நான் உன்னை விட்டு விலக மாட்டேன்டி’ என்ற உறுதியை மனதினுள் கூறிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

 

வண்டியில் ஏறிய திவ்யா விஜயிடம், “என்னை ஹாஸ்டலில் விடு.. பவி கிட்ட நடந்ததை சொல்லிடு” என்றாள். 

“சார் என்ன சொன்னார்?” 

“லவ்வை சொன்னான்” என்று அலட்டிக்கொள்ளாமல் கூற விஜய் வண்டியை நிறுத்தினான்.

அவள், “வண்டியை எடு” 

“நீ என்ன சொன்ன?” 

“உன்னிடம் சொன்னதைத் தான் சொன்னேன்” 

“என்ன!!!” 

“ஹ்ம்ம்.. அவனுடைய பரிதாபக் காதல் எனக்கு தேவை இல்லைனு சொன்னேன்.. இனி என் தொல்லை அவனுக்கு இல்லைனு சொன்னேன்” 

“லூசாடி நீ” 

அவனை தீர்க்கமாக பார்த்தவள், “இப்போ வண்டியை எடுக்கிறியா இல்லை நான் ஆட்டோவில் போகட்டுமா?” 

“திவி நான் உனக்காகத் தான் சொல்றேன்” 

“நானும் எனக்காக தான் சொல்றேன்” 

“இவ்ளோ நாள் நீ போராடியது இதுக்கா?” 

“நிச்சயம் இல்லை.. நான் போராடியது அவனோட தூய அன்பிற்காக” 

“இப்போ மட்டும் இல்லைனு எப்படி சொல்ற?” 

“உனக்கு புரியாது” 

“அவருக்கு உன் மேல் காதல் இருக்குதுனு நீ தானே சொன்ன?” 

“அதை முதலில் சொல்லிட்டு, அப்புறமா அவன் என்னைப் பற்றி கேட்டிருக்கணும்” 

“எப்போ சொன்னா என்ன? அவர் காதல் உண்மை தானே!” 

“அவன் காதல் பொய்னு நான் எப்போ சொன்னேன்” 

விஜய் அவள் முகத்தை பார்க்க, அவள், “என்ன?” 

“நல்லா குழப்புற” 

“உனக்கு சொன்னா புரியாது.. ஒரு துளி கூட அவன் மத்தவங்களை பற்றி யோசிக்காமல் என்னை எனக்காக ஏற்று, அன்பு மழை பொழியணும் நினைத்தேன்..

என் வலிக்கும் வேதனைக்கும் மருந்தா அவன் இருக்கணும் நினைத்தேன்..

இன்னைக்கு உன்னிடம் கதறியது போல் அவனிடம் அடைக்கலம் ஆகணும் நினைத்தேன் ஆனா.. ச்ச் விடு” என்றவள், “உன்னிடம் அடைக்கலம் பெற்றதை நான் குறைவா சொல்லலைடா.. நான்………………” 

“புரியுதுடா..” என்றவன் பிறகு, “ஆனா அவர் நிலையில் இருந்து கொஞ்சம் யோசித்துப் பார்.. உனக்கு இப்படி ஒரு பின்னணி இருக்கும்னு அவருக்கு தெரியாதே! சாதாரணமா உன்னைப் பற்றி கேட்க நினைத்து கேட்டிருக்கலாமே!!!” என்றான். 

“என்ன தான் நீ சொன்னாலும் என் மனம் அதை ஏற்காது” 

விஜய் ஏதோ பேச வர, அவள், “ப்ளீஸ் டா.. என்னை எதுவும் கேட்காதே.. இப்போ என்னை ஹாஸ்டலில் விடு” என்று கூறி கண்களை மூடியபடி சாய்ந்து அமர்ந்தாள்.

விஜய் அமைதியாக வண்டியை கிளப்பினான்.

இணைய காத்திருப்போம்….

Advertisement