Advertisement

ஹரீஷ் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்த, அப்பொழுது விஜயின் கைபேசியில் அழைப்பு வந்தது. சத்தம் வரவில்லை என்றாலும் கைபேசியின் அதிர்வில் அதை கண்டுக் கொண்ட ஹரீஷ், “யாரு?” என்றான்.

கைபேசியை எடுத்துப் பார்த்த விஜய், “திவ்யா” என்றான்.

“ஸ்பிக்கர் போட்டு பேசு”

விஜய் தயங்க, ஹரீஷின் முறைப்பில் அவன் சொன்னதை செய்தான்.

விஜய் ‘ஹலோ’ சொல்லும் முன் திவ்யா கோபத்துடன் பொரிந்தாள், “பக்கி.. நீ பண்ணதை நான் சரி பண்ணிட்டேன்.. அவன் பவி பத்தி ஏதாவது பேசினால் அவன் தங்கை பற்றி பேசுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கிறேன்.. என்கிட்ட கேட்காம ஏதாவது மீம்ஸ் போட்ட! நீ அவனுக்கு சங்கு ஊதுறதுக்கு முன்னாடி உனக்கு நான் ஊதிருவேன்” என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தாள். 

அவள் பேசியதைக் கேட்ட ஹரீஷின் உதட்டில் புன்னகை அரும்பியது.

விஜய் திருதிருவென்று முழிக்க, ஹரீஷ் விரிந்த புன்னகையுடன், “உன் பிரெண்ட்க்கு இவ்ளோ பயப்படுவியா!” என்றான். 

விஜய் மெல்லிய புன்னகையுடன், “சார் நான் மீம்ஸ்ஸில் போட்டது எதுவும் பொய் இல்லை.. அவ நிஜமாவே நெருப்பு தான் சார்.. எவ்வளவுக்கு எவ்வளவு குறும்பு பண்றாளோ அதே அளவு டெரரும் கூட..” 

“ஹ்ம்ம்” என்றபோது ஹரீஷின் மனக்கண்ணில் அவளை அவன் கண்ட மற்ற சம்பவங்கள் வந்தது.

விஜய் ஹரீஷை ஆராய்ச்சி பார்வை பார்க்க, இரண்டே நொடியில் சுதாரித்த ஹரீஷ், “இனி இப்படி பண்ணாத.. எதையும் செய்றதுக்கு முன்னாடி யோசித்து பண்ணு.. சைமன் கோபத்தில் திவ்யாவை ஏதாவது செய்தால்?” என்று கேள்வியை நிறுத்தினான். 

ஒரு நொடி அதிர்ந்த விஜய், “திவ்யாவை அவனால் ஒன்றும் செய்ய முடியாது சார்” என்றான். 

“யானைக்கும் அடி சறுக்கும்னு கேள்வி பட்டது இல்லையா? அவ பவித்ரா பற்றி தான் யோசிப்பா, தன்னைப் பற்றி யோசிக்க மாட்டா.. சைமன் கிட்ட எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு..” 

விஜய் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தான். திவ்யா பற்றிய ஹரீஷின் புரிதலிலும் அவள் மீது அவன் காட்டும் அக்கறையிலும் தான் விஜய் ஆச்சரியம் கொண்டான். அதே நேரத்தில் தோழிக்காக மகிழ்ச்சியும் அடைந்தான்.

ஹரீஷ், “என்ன! சொன்னது புரிந்ததா?” என்றதும், 

“ஹ்ம்ம்” என்று தலையை ஆட்டினான்.

“சரி கிளாஸ்க்கு போ” 

இயல்பிற்கு திரும்பிய விஜய், “சார் திவ்யாவிற்கு ஏதும் பிரச்சனை வந்திராதே!” என்று இழுத்தான். இந்த கேள்வியை கேட்டது ஹரீஷின் மனதை மேலும் ஆராயவே.

ஹரீஷ், “நான் சேர்மன் சார் கிட்ட பேசுறேன்.. நீ தான் அதிகம் அவளுடன் இருக்கிற.. அதான் உன்னிடம் பேசினேன்.. சரி கிளம்பு” என்றான்.

“தேங்க்ஸ் சார்” என்று மகிழ்ச்சியுடன் கூற, ஹரீஷ் சிறு புன்னகையுடன் தலை அசைத்தான்.

இரண்டடி நடந்த விஜய் திரும்பி, “சார் உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?” என்று கேட்டான்.

விஜய் திடீரென்று கேட்கவும் ஒரு நொடி  ஹரீஷ் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தான் பின், “இல்லை.. ஏன் கேட்கிற?” என்று கேட்டான். 

விஜய் புன்னகையுடன், “சும்மா தான் சார்” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.

ஹரீஷ் சிறு தோள் குலுக்கலுடன் அடுத்த வேலையைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.

 

 

சைமன் நண்பர்களிடம், “நான் கிளம்புறேன்.. நீங்க கிளாஸ்க்கு போங்க..” என்றான். 

“உன் பேக்(Bag) 

“என் பேக்-யும்(Bag)  வண்டியையும் வீட்டில் கொண்டு வந்து விட்டுருங்க” என்றவன் அவர்கள் பதிலை எதிர் பார்க்காமல் சுவர் ஏறி குதித்து வெளியே சென்றான்.

நண்பன் ஒருவன், “அவனை தனியா விடுறது நல்லது இல்லை.. நான் அவனுடன் போறேன்.. நீ கிளாஸ்க்கு போ” என்றபடி அவசரமாக சுவர் ஏறி குதித்து சைமனை பிடித்தான்.

இன்னொருவன் வகுப்பிற்கு சென்றான்.

 

 

விஜய் வகுப்பிற்கு செல்லும் முன் ஒரு மரத்தடியில் நின்று திவ்யாவை கைபேசியில் அழைத்தான்.

அழைப்பை எடுத்தவள் சிறு கோபத்துடன், “இப்போ எதுக்குடா கூப்பிட்ட?” என்றாள். 

“என்னாச்சு திவி? இன்னும் என்ன கோபம்?” 

“ச்ச்.. அந்த சைமன் கிட்ட பேசிய கோபம்.. விடு.. எதுக்கு கூப்பிட்ட?” 

“அவன் எதுவும் தப்பா பேசினானா?” 

“அதெல்லாம் இல்லைடா.. நீ விஷயத்தை சொல்லு” 

“நிஜமா பிரச்சனை இல்லை தானே!” 

திவ்யா மெல்லிய புன்னகையுடன், “பிரச்சனையிடமே பிரச்சனை பண்ண முடியுமா?” என்றாள். 

புன்னகையுடன், “ஹ்ம்ம்.. நான் இப்போ ஒரு குட் நியூஸ் சொல்ல தான் போன் பண்ணேன்” என்றான்.

“என்னடா?” 

ஹரீஷுடன் பேசியதை சுருக்கமாக கூறினான். சைமன் தவறாக பேசிய விஷயம் ஹரீஷிற்கு தெரிந்திருப்பதை தெரிந்தது போல் விஜய் காட்டிக் கொள்ளவில்லை.

விஜய், “அவருக்கு உன் மேல் அக்கறை இருக்குது மச்சி.. நீ சொன்னது போல் அவருக்கும் உன்னை பிடித்து இருப்பது போல் தான் தோணுது.. உனக்காக அவர் கவலைப் படுறார்.. அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகலைனு அவரிடமே கேட்டு கண்பர்ம் பண்ணிட்டேன்” 

“தேங்க்ஸ்டா.. ரொம்ப சந்தோஷமா இருக்குது” 

“ஹம்.. உன் ஆளுடன் ட்ரீம்ஸ்ல டூயட் பாடு.. நான் கிளாஸ் போறேன்”

“ஹ்ம்ம்.. பை” என்று அழைப்பைத் துண்டித்தவள் உதட்டில் உறைந்த புன்னகையுடன் ஹரீஷ் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

 

 

சிறிது நேரம் கழித்து, ராஜாராமை அழைத்த ஹரீஷ் அவர் அழைப்பை எடுத்ததும், “குட் அப்ட்டர்நூன் சார்.. பிஸியா இருக்கீங்களா?” என்று கேட்டான். 

“முதலில் நீங்க கூப்பிட்ட போது மீட்டிங்கில் இருந்தேன்… இப்போ தான் மீட்டிங் முடிந்தது.. சொலுங்க”

(இப்பொழுது இராஜாராம் அவரது மருத்துவ கல்லூரியில் இருக்கிறார்.) 

சைமன் மற்றும் திவ்யா விஷயத்தின் தற்போதைய நிலவரத்தை விளக்கமாக கூறியவன், “உங்க வாட்ஸ்-அப்-பில் அந்த ரெண்டு விடியோவையும் அனுப்பி இருக்கிறேன் சார்.. சைமன் கோபத்தில் திவ்யாவை எதுவும் செய்திற கூடாதேனு உங்களுக்கு விஷயத்தை சொல்ல கூப்பிட்டேன்” 

“தேங்க்ஸ் ஹரீஷ்.. நான் சைமன் அப்பாவிடம் பேசுறேன்.. நீங்க அவன் அப்பா நம்பர் பார்த்துட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்க” 

“தேங்க்ஸ்-லாம் வேணாம் சார்.. திவ்யா உங்க ரிலேடிவ்.. உங்களுக்காக இந்த சின்ன விஷயத்தை செய்ய மாட்டேனா சார்! சைமன் அப்பா நம்பர் அஞ்சு நிமிஷத்தில் உங்களுக்கு அனுப்புறேன்” 

“ஓகே” என்றதும் அழைப்பைத் துண்டித்தவன் சைமன் வகுப்பு ஆசிரியரை நோக்கி சென்றான்.

 

 

விடுதிக்கு வரும் முன் ஹரீஷுடன் பேசியதை அசை போட்ட திவ்யா, ‘ஒருமையில் பேசியதை கேட்டு சிரிக்க தானே செய்தான், ஸோ இப்போ அவனுக்கு என் மேல் கோபம் இல்லை.. ஸோ இப்போ என் மேல் காதல் இல்லை என்றாலும் சீக்கிரம் வர வச்சிடலாம்’ என்று குதூகலித்தாள்.

அதன் பிறகு, ‘அப்புறம் ‘அது என்ன அரவிந்த் மட்டும் ஸ்பெஷல்’ னு கேட்டதில் பொறாமை இருந்ததோ? இல்லை சாதாரணமா தான் கேட்டானா!’ என்று யோசித்தவளால் அவனது மனநிலையை சரியாக கணிக்க முடியவில்லை என்றதும் ‘சரி விடு பார்த்துக்கலாம்’ என்று தோளை குலுக்கிக் கொண்டாள்.

‘பவிக்காக நான் கவலை பட்ட போது, அவன் என் பெயருக்காக கவலைப் பட்டானே! இப்போ கூட விஜி கிட்ட எனக்காக பேசி இருக்கிறானே! நிச்சயம் அவன் மனதில் எனக்குனு தனி இடம் இருக்கிறது தான்’ என்று மகிழ்ந்தவள்,

சிறிது யோசித்த பின், ‘தியேட்டர் விஷயம் பற்றி பேசிய போது ‘அதை இன்னும் நீ மறக்கலையா’ னு கேட்டானே! அப்போ அவனும் மறக்கலைனு தானே அர்த்தம்! அப்போ காலையில் அவனும் என் பெயரை தெரிந்துக்க தான் கேள்வி கேட்டானா! எனக்கு தான் அவன் திட்டிய தாக்கத்தில் அந்த சம்பவமும் அவன் முகமும் மறக்கலைனு வைத்துக் கொண்டாலும், அவனுக்கு என்ன! அப்போ அப்போதில் இருந்தே அவனை நான் பாதித்து இருக்கிறேன்னு தானே அர்த்தம்’ என்று யோசித்தவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.

 

 

திவ்யாவிற்கு இரண்டு முறை அழைத்த ராஜாராம் அவள் எடுக்கவில்லை என்றதும்  அவரை சிறு பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

அப்பொழுது ஹரீஷ் சைமன் தந்தை எண்னை குறுஞ்செய்தியாக அனுப்பினான்.

அவர் உடனே அவனை அழைத்தார்.

அவன், “சொல்லுங்க சார்” என்றான். 

“நம்பர் வந்தது.. இப்போ நான் போன் பண்ணது திவ்யா பற்றி.. இப்போ அவளுக்கு இரண்டு முறை கூப்பிட்டேன், அவ எடுக்கலை.. சைமன் கிளாஸ்ஸில் தான் இருக்கிறானா?” என்ற போது அவர் குரலில் சிறு பதற்றம் இருந்தது.

அவரது பதற்றம் ஹரீஷையும் தொற்றிக் கொண்டது ஆனால் அதை அவரிடம் காட்டி அவரை கலவரப் படுத்த விரும்பாமல் இயல்பு குரலில், “இதோ இப்போவே பார்த்துச் சொல்றேன் சார்” என்றான்.

“குவிக்.. நான் லைனில் இருக்கிறேன்” 

“ஓகே சார்” என்றவன் கிட்ட திட்ட சைமன் வகுப்பை நோக்கி ஓடினான். அங்கே போய் சைமனை அழைத்தான். வகுப்பில் இருந்த ஆசிரியர் வகுப்பை பார்த்துவிட்டு, “அவன் இல்லை” என்றார்.

ஹரீஷ் வரவழைத்த இயல்பு குரலில், “ஓகே சார்.. தன்க் யூ.. அவன் வந்தால் CSE ஸ்டாஃப் ரூம் வந்து என்னை பார்க்க சொல்லுங்க” என்றான். 

“ஓகே சார்” என்றதும் வேகமாக அகன்றவன் கைபேசியை காதிற்கு கொண்டு சென்று, “சார்” என்று ஆரம்பிக்க,

ராஜாராம், “நீங்க உடனே கேள்ஸ் ஹாஸ்டல் போய் பாருங்க” என்றார்.

“எஸ் சார்” என்றவன் பதற்றத்துடன் விடுதி நோக்கி விரைந்தான்.

இணைய காத்திருப்போம்…

Advertisement