வல்லவன் 17

ஆத்விக்கிடமிருந்து அலைபேசியை பறித்த சக்தி, தூரி..உன்னோட அம்மாவிடம் இந்த பக்கி என்னத்தையோ சொல்லி வச்சிருக்கான். பார்த்து சமீக்கு ஏதும் தெரியாமல் பார்த்துக்கோ..அந்த பக்கம் அலைபேசி துண்டிக்கப்பட்டது.

“என்னாச்சு? நான் சமீக்கு நல்லது தான செய்தேன்” பிரஜித் சொல்ல, பக்கமிருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து ஆத்விக் அவனை அடிக்க வந்தான்.

கடவுளே! எல்லாரும் என்னை கொல்லப்பாக்குறாங்க..

உன்னை கொல்ல முடியலையே எனக்கு கடுப்பா இருக்கு. என்னடா செஞ்சு தொலைச்ச?

அதுவா? என சிரித்த பிரஜித்..இருவர் வீட்லையும் கனெட் பண்ணி விட்டுட்டேன். இன்று மாலை எல்லாம் நல்லாவே நடக்கும்.

ஓ…காட்..இடியட்..ராஸ்கல் என சக்தி கோபமாக அலைபேசியை பிரஜித் மீது விட்டெறிந்தாள்.

சார், இவனை நம்ம டீம்ல்ல சேர்க்காதீங்கன்னு சொன்னேன்ல்ல? கேட்டீங்களா? சக்தி கோபமாக கேட்க, சுவா..என்ன இப்படி சொல்ற? அவன் வருத்தமாக கேட்டான்.

உன்னை என்ன செய்றதுன்னே தெரியல அவனை அழுது கொண்டே அடித்தாள்.

தூரி அம்மா நம்ம சமீயை பார்க்க நம்ம ஆபிஸிற்கே வந்துட்டாங்க.

இதுல என்ன? நல்லது தான பிரஜித் கேட்க, லூசுப்பயலே சமீ உன்னை காதலிக்கிறாள் என சொல்ல, சிரித்தான் அவன்.

செட் அக் பிரஜித். தேட்ஸ் நாட் ஃபன் என்று ஆத்விக் அவனிடம் கத்தி விட்டு அலைபேசியை எடுத்தான்.

யாருமே அலைபேசியை எடுக்கலை பதட்டமாக ஆத்விக் சொல்ல, பிரஜித் அவன் அலைபேசியில் அழைத்தான். யாருமே எடுக்கலை.

என்னாச்சு? யாருமே எடுக்கலை..

எல்லாம் உன்னால தான். எல்லாத்திலுமா விளையாடுவ சக்தி அவனை திட்ட, இல்ல…சமீ தூரியை தான..

வாய திறந்த உன்னை கொன்றுவேன் என சக்தி சொல்லி விட்டு, சார்..இருங்க..நான் தூரியோட சிஸ்டருக்கு கால் பண்றேன் என அவளது அலைபேசியை எடுக்க, அது உடைந்து இருந்தது..

சார், உங்களுடைய அலைபேசியை தாங்க என ஆத்விக்கிடம் வாங்கி அவளது சிம் கார்டை அவனுடையதில் போட்டு அந்த பொண்ணை அழைக்க, அவள் அழுது கொண்டிருந்தாள்.

ஏய், அப்பு..என்னாச்சு? தூரி பக்கத்துல்ல இருக்கானா? அவள் கேட்க, இல்ல சமீ அக்காவை அம்மா கண்டபடி பேசிட்டாங்க.

“அவ பக்கத்துல்ல இருக்காலா? இல்ல அக்கா ஹாஸ்பிட்டல்ல?” அந்த பொண்ணு அழ, “ஹாஸ்பிட்டலா? எதுக்கு ஹாஸ்பிட்டல்?” பயத்துடன் கேட்டுக் கொண்டே ஆத்விக், பிரஜித்தை பார்த்தாள்.

சமீ அக்கா தற்கொலை செய்ய போயிட்டாங்க.

சக்திக்கு தொண்டை அடைக்க, தாரை தாரையாக கண்ணீர் வந்தது.

எ..என்ன சொல்ற? தடுமாற்றத்துடன் கேட்டாள்.

டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க..

இப்ப தான பிரஜித்தை கேட்டாள்?

அக்கா, இப்ப உங்களுக்கு கால் பண்ணதே பிரஜித் செய்ததை பேச தான். அவர் வரவில்லை அவருக்கும் ஏதும் ஆச்சோ அந்த நிலையிலும் அவரை பற்றி தான் கேட்டாங்க. ஆனால் இப்ப அவர் உங்களிடம் பேசியதை கேட்டு தான்..இந்த முடிவு..

இப்ப நல்லா இருக்காலா?

தெரியல. நாங்க எல்லாரும் ஹாஸ்பிட்டல் வந்திருக்கோம். என்னோட அம்மா, சமீக்கா அம்மா எல்லாரும் இருக்காங்க.

சக்தி தலையை பிடித்து அமர்ந்தாள்.

“சுவா, என்ன? எதுக்கு ஹாஸ்பிட்டல்?” பதட்டமாக பிரஜித் கேட்க, ஆத்விக்கும் அவளிடம் வந்து, “என்னன்னு சொல்லு? டென்சன் ஆக்காத” ஆத்விக் கத்த,

ஹா..சமீ தற்கொலை முயற்சி செஞ்சிருக்கா. ஹாஸ்பிட்டல்ல டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கான்..போதுமாடா? என பிரஜித்தை பார்த்து கத்தினாள்.

சுவா, அப்படியெல்லாம் இருக்காது பிரஜித் ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீருடன் அவளிடம் வர, பக்கத்துல வந்த அவ்வளவு தான்.. போயிரு என அழுது கொண்டே வந்த அறைக்கே ஓடினாள்.

சார், நான் வேணும்ன்னே பண்ணலை. சமீ அவனை தான காதலிக்கிறான்னு என பிரஜித் கண்ணீருடன் ஆத்விக்கை பார்க்க, அவனோ வெறியுடன் அவனை பார்த்தான்.

ஏன்டா, இருக்கிற பிரச்சனை போதாதுன்னு ஏன்டா வெட்டி வேலை. அவள் உன்னை தான் காதலிக்கிறான்னு தெரியாமல் என்ன வேலை செஞ்சிருக்க? அதுவும் தூரி அம்மாகிட்ட என்று நெற்றியில் கை வைத்து, எவனும் நிம்மதியா இருக்கவே விடாதீங்க என அவனிடம் கத்தி விட்டு ஆத்விக் வெளியே ஓடினான்.

“அத்து” அதியா அழைக்க, வந்துருவேன் என்று சக்தி கீழே வைத்து சென்ற அலைபேசியுடன் வெளியே சென்றான். பிரஜித்தும் அவன் பின் சென்றான்.

நான் இப்பவே மும்பை கிளம்புகிறேன் பிரஜித் சொல்ல, கிளம்பி சென்று நம்ம ஆபிஸை இழுத்து மூடிற வேண்டியது தான். உன்னை..நான் அப்புறம் கவனிக்கிறேன்..

சார், என்னால தான பிரச்சனை. நானே சரி செய்கிறேன்..என்று துரியனை அழைக்க, அவன் பிரஜித்தை வருத்தெடுத்தான்.

சாரிடா, “நான் இரு வீட்டிலும் பேசணும். வீடியோ கால் வா. ப்ளீஸ்” பிரஜித் கெஞ்சினான்.

பெரியவர்களிடம் அவன் பேச, அவனை இரு வீட்டினரும் கண்டபடி திட்டினார்கள். சமீரா அம்மாவோ..அவள் உயிரோட வந்தாலே போதும் என அழுதார்.

ஈவ்னிங் பிளைட் டிக்கெட் கிடைக்குமா சார்? அவன் கேட்க, “எனக்கு தெரியாது” ஆத்விக் கோபமாக நகர, சாரி சார். இப்படி நடக்கும்ன்னு தெரியாது..

என்ன தெரியாது? நீ லாயர் நடக்கும் அனைத்தும் நாம் நினைப்பது போல் இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியுமா? தூரிக்கு சமீராவை பிடிக்கும் தான். அவள் என்ன நினைக்கிறால் என்று தெரியாமல் நீயே எல்லா முடிவும் எடுத்துட்ட.

“உன்னை மாதிரி எல்லாத்தையும் வேடிக்கையாக பார்க்கும் ஒருவனை காதலித்தது முதல் தவறுன்னா. உனக்காக சாக முடிவெடுத்தது மற்றொரு தவறு” சொல்லி விட்டு நிற்காமல் நடந்தான் ஆத்விக்.

பிரஜித் அவன் முன் வந்து, தவறு செய்தால் அதை சரி செய்யணும்ன்னு நீங்க தான சொல்வீங்க?

ஆனால் இதை சரி செய்ய உன்னால முடியாது. இப்ப சமீ பிழைத்து வந்திருவா. ஆனால் நீ அவள் முன் எத்தனை முறை இப்படி பேசி இருப்ப? சிந்தித்து பாரு. தூரமாக அவளை விட்டு வந்தும் கூட நீ சுவாவிடம் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாதவளால் எப்படி அவளுக்கான முடிவை எடுக்கப் போறான்னு தெரியல? கண்கலங்கினான் ஆத்விக்.

என்ன முடிவு? பிரஜித் புரியாமல் கேட்க, அடுத்து அவளை கண்டிப்பாக நம்ம ஆபிஸூக்கு விட மாட்டாங்க. மேரேஜ் பற்றிய முடிவு தான். இது தான் நடக்கணும்ன்னு இருந்தால் யாரால மாற்ற முடியும்.

“பட் உன்னை விட தூரியன் அவளுக்கு பெட்டர் பர்சன்” ஆத்விக் சொல்ல, பிரஜித் நெஞ்சம் குறுகுறுத்தது.

நான் கிளம்புகிறேன் சார்.

காலையில தான் பிளைட். இப்ப என்னோட வீட்டுக்கு போ. தூரியனிடம் முதல்ல மன்னிப்பு கேளு. சமீ விழிக்கவும் அவளிடமும் கேளு என்று உள்ளே சென்றான்.

சக்தி அறையை திறக்காமல் இருக்க, அதியா அழைத்து பார்த்தாள்.

“அதி அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும் விடு” ஆரியன் சொல்ல, “முதல்ல எல்லாரும் ஆடையை மாத்துங்க” உத்தமசீலன் சொல்ல, எல்லாரும் நகர்ந்தனர்.

ஆடையை மாற்றி விட்டு வந்த ஆரியன் கவலையுடன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருக்கும் பிரஜித்தை பார்த்தான்.

அந்த பொண்ணு விழிக்கலையா?

யாரும் எடுக்க மாட்டேங்கிறாங்க சார்..

எடுக்கலைன்னா கிளம்ப வேண்டியது தான. எப்போதும் நாம சரியாக இருக்க முடியாது. சில தவறுகள் நடக்கும். அதை திருத்துவதும் அப்படியே விடுவதும் நம் கையில் தான் அறிவுரை செய்தான்.

இப்ப எப்படி போறது?

இன்னும் அரை மணி நேரத்தில் மும்பைக்கு பிளைட்.. வேகமா சென்றால் கூட நாற்பது நிமிடங்கள்.. ஆகும். அந்த பொண்ணோட காதலை ஏத்துக்கிறதா இருந்தால் இப்பொழுதே கிளம்பு. நாற்பது நிமிடத்தில் செல்ல வேண்டிய நீ சரியான நேரத்தில் சேர்ந்து விடுவாய். டைம் இஸ் யுவர்ஸ் என்றான் ஆரியன்.

டிக்கெட்..உனக்கு அனுப்புறேன். உன்னால முடியும்ன்னா..போ. உனக்கு அந்த பொண்ணை பிடிக்குதோ இல்லையோ. நீ ஆரம்பித்ததை நீ தான முடிக்கணும் என்று ஆரியன் பிரஜித் கையில் பைக் கீயை கொடுத்தான்.

அதோ..ஆரியன் கையை காட்ட, வண்டியை எடுத்தான் பிரஜித்.

ஆத்விக் அவனை பார்த்து, “ஏய் எங்க போற?” கத்தினான்.

அவன் மும்பை கிளம்புகிறான் ஆரியன் சொல்ல, மாமா..அவன் போனால் பிரச்சனை அதிகம் தான் ஆகும்.

ஆகட்டும். அவன் செய்ததை அவன் சரி செய்வான். நீ வா..நாம பேசலாம் என ஆத்விக்கை ஆரியன் உள்ளே அழைத்து சென்றான்.

துருவினி அவர்களிடம் வந்து, சக்தி இன்னும் ஆடையை மாற்றலை என்று அவளுக்கான ஆடையை காட்டினாள்.

நான் பார்த்துக்கிறேன் என அதை வாங்கி ஆத்விக் சக்தி இருக்கும் அறைக்கு சென்று, சுவா..வெளிய வா. பிரஜா மும்பை கிளம்பீட்டான் ஆத்விக் சொல்ல, சக்தி கதவை திறந்து அவனை பார்த்தாள்.

“தனியா போயிருக்கானா? இன்னும் பிரச்சனையாகிடாமல் சார்” ஆத்விக்கை பார்த்தாள்.

“அவன் என்னமும் செய்யட்டும். நீ ஆடையை மாத்திட்டு வா” ஆரியன் சொல்ல, “சார்” அவள் தயங்கினாள்.

அதான் சொல்லாறாங்க. போ துருவினி அவளை அதட்ட, சக்தி எல்லாரையும் பார்த்தாள். துரத்திலிருந்து கவினும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ம்ம்..என்று கதவை அடைத்து ஆடையை மாற்றி வெளியே வந்தாள்.

“சக்தி நீ அழுறதுனால ஏதும் ஆகப்போறதில்லை” துருவினி சொல்ல, எல்லாரும் அவளை சுற்றி அமர்ந்திருந்தனர்.

ஐஸ்கிரீம் உருகி போச்சு..பெருமூச்சு விட்டாள் அதியா.

இங்க என்னவெல்லாம் பிரச்சனை ஓடுது. நீ ஐஸ்கிரீமுக்கு வருத்தப்படுற ஆத்விக் சினமுடன் கேட்க, “எங்களுக்கு அது தான வேணும். சொல்லு தர்சு?” அவனை இழுக்க, அதிம்மா..சக்தி ஆன்ட்டி பாவம்ல்ல. இப்ப ஐஸ்கிரீம் முக்கியமா?

அதியா கண்ணை விரித்து வாயில் கையை வைத்தாள்.

“ஆமா அதிம்மா, ஐஸ்கிரீம் இப்ப வேண்டாம்” ஆகர்ஷனா சொல்ல, “ஆகு என்ன வார்த்தை சொல்லீட்ட? ஐஸ்கிரீம் வேண்டாமா? எனக்கு சாப்பிடணும் போல இருக்கே” அதியா புலம்ப, யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை.

சக்தி அமைதியாக இருப்பதை பார்த்து அதிவதினி தொடங்கினார்.

வீட்டுக்கு கிளம்பலாமா? பொண்ணுக்கு செய்ய வேண்டிய முறை இருக்குல்ல?

ஆமா சித்தி, இருக்கு என துருவினி அவள் தந்தையை பார்த்தாள்.

எல்லாத்தையும் எடுத்து வைம்மா. “சக்தி துருவினிக்கு உதவு” அதிவதினி சொல்லி விட்டு, ஆது..மண்டபத்தை வெக்கேட் பண்ணனும். எல்லாத்தையும் செட்டில் பண்ணு என சொல்லி விட்டு அதியா பார்த்தார்.

அதி..இதுக்கு மேல ஐஸ்கிரீம். ஆடை மாத்தணும்ன்னு ஏதாவது வேலை செஞ்ச..இரவு உனக்கு சாப்பாடு கிடையாது.

“சரி அத்தை, எனக்கு வாட்டர்மெலான் மட்டும் வாங்கி தாங்க” அதியா சொல்ல, உன்னை திருத்தவே முடியாது ஆத்விக் சினமுடன் கூறி விட்டு செல்ல, அவனுடன் செல்ல இருந்த கவினை நிறுத்திய அவன் தாய், கவின் உனக்கு இங்க வேலை இருக்கு.

வினுவும், சக்தியும் எடுத்துக் கொடுப்பதை பேக் செய்து கார்ல்ல ஏற்று. அண்ணா, நீங்க வீட்டுக்கு முன்னாடி போங்க என்று உத்தமசீலனிடம் சொல்லி சிந்தித்து, வினு நீ அப்பாவோட வீட்டுக்கு சென்று தயார் செய். வா..நான் பொருட்களை எடுத்து தாரேன் என்று துருவினியை அழைத்து சென்றார்.

சக்தியோ சிந்தனையுடன் நிற்க, “என்னம்மா யோசனை? வா” என கவின் தந்தை சுகுமார் அவளை அழைக்க, கவினும் அவர்களுடன் சென்றான்.

ஆத்விக் சக்தியை தேடி வந்து, தூரி பேசணுமாம் என அவன் அலைபேசியை கொடுத்தான்.

சக்தி அவர்களிடமிருந்து நகர்ந்து, சமீ நல்லா இருக்காலாடா? அவன் கேட்க, ப்ளீஸ் சுவா..அவளிடம் பேசு. அவ எல்லாரையும் மிரட்டிட்டு இருக்கா?

மிரட்டுறாளா? என்ன சொல்ற? சக்தி கேட்க, அவள் விழித்தவுடனே என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்னா. என்னோட அம்மாவுக்கு கோபம் வந்து பேச, அவள் கையில் கத்தியை வைத்து மிரட்டிட்டு இருக்கா..எல்லாரும் பயத்துல்ல இருக்காங்க.

ஆத்விக் அண்ணாகிட்ட சொல்லி இருக்கலாம்ல்லடா?

அவருக்கு தெரிந்தால் பிரஜித் மேல தான் கோபப்படுவார். அதான் நீ பேசு துரியன் சொல்ல, துரி அவளிடம் நான் பேசினால் சரியாக இருக்காது. இப்ப நீ தான் பேசணும்..

அவளுக்கும் தெரியும் உன்னோட காதல். அதை இப்ப அவளிடம் கூறி, அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு.

உனக்கு என்ன ஆச்சு? இப்படி சொல்ல சொல்ற? எனக்கு அவளோட ஆழமான காதல் தெரியும்..என்னால எப்படி? அவன் கண்கலங்கினான்.

தூரி..இப்ப வழியேயில்லை.

இப்பவே பண்ணனும்ன்னு சொல்றா?

பண்ணுங்க..எனக்கு தெரிந்து இன்னும் அரைமணி நேரத்துல்ல பிரஜா மும்பை ஏர்போர்ட்டல்ல இருப்பான். சென்னை ஏர்ப்போர்ட் சென்று எனக்கு கால் பண்ணான்.

நாற்பது நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு இருபது நிமிடத்தில் பிரஜா போயிருக்கான். அவன் கண்டிப்பாக சமீ காதலை உணர்ந்திருப்பான்னு தெரியல..அவன் அழைத்தால் எடுடா. கண்டிப்பாக நீ சமீ கழுத்துல்ல தாலியை கட்டும் சமயத்தில் வந்திருவான்.. அப்புறம் அவன் பார்த்துப்பான்.

என்ன சொல்ற? இத்தனை நாள் உணராத காதலை பிரஜா இப்ப உணர்வான்னு சொல்றீயா?

ஆமா, என்னிடம் மன்னிப்பு கேட்டான். மேரேஜ் நடக்கப் போகும் இடத்திற்கு பிரஜா பெற்றோரையும் அழை. அவங்களை அழைத்து விட்டு இதே எண்ணிக்கு அழை. நான் அவங்களிடம் பேசிக்கிறேன்..

ஆனால் தப்பாகிட்டா..நான் எப்படி தாலி கட்டுறது? என்னோட அம்மா அவளை கொன்றுவாங்க..

கண்டிப்பா சொல்றேன். பிரஜா விட மாட்டான். நம்பிக்கையோட இரு சக்தி அவனை ஊக்கப்படுத்தினாள்.

சரி பார்க்கிறேன் இல்லை நான் தாலி கட்டும் நிலை வந்தால் கட்டிருவேன் அவன் சொல்ல, சக்தி அமைதியாக இருந்தாள்.

சுவா..

“புரியுதுடா பட் உங்க மூவர் வாழ்க்கையும் உன் கையில் சிந்தித்து செயல்படு. எனக்கு வேலை இருக்கு” சொல்லி அலைபேசியை துண்டித்தாள். ஆத்விக் அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அது வந்து..

பேசாத கோபமாக வெளியே சென்றான். அவளும் பின்னாலே ஓடினாள்.

சரி, போ. வேலையை பாரு என ஆத்விக் கண்ணை மூடி ஓரிடத்தில் அமர்ந்தான். அவன் அலைபேசி அலற, அதியாவும் ஆரியனும் அவனிடம் வந்தனர்.

அவர்களை பார்த்து புன்னகைத்து அலைபேசியை எடுத்து அந்த பக்கம் சொன்னதை கேட்டு அம்மண்டபத்தின் மாடிக்கு ஓடினான்…

“ஆரு” அதியா கத்த, அவன் காதில் வாங்கவேயில்லை. “அதி, நீ இரு. நான் பார்த்துட்டு வாரேன்” ஆரியன் ஆத்வின் பின் சென்றான்.

கருப்பு நிற ஆடையில் இருந்த ஒருவனுடன் ஆத்விக் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

“ஏய்” ஆரியன் சத்தம் போட, கருப்பு நிற உடையணிந்தவன் ஆத்விக்கை தள்ளி விட்டு மேலிருந்து குதித்து ஓடினான்.

அத்து, யாரு அவன்? ஆரியன் கேட்க, தெரியல மாமா. பிரகாஷ் சார் தான் மேல யாரோ வித்தியாசமா தெரியிற தா சொன்னார்.

இருவரும் மேலிருந்து எட்டி பார்க்க, ஆரியன் நண்பர்கள் அவனை பிடிக்க முயல. அவன் தப்பினான். லோகேஷ் அவனது மாஸ்க்கை பிடித்து இழுக்க, அவன் முகம் தெளிவாக தெரிந்தது.

மாமா, நிரஞ்சன்..இவன் எதுக்கு இப்ப இங்க வந்தான்? ஏதோ தப்பா இருக்கு.

அத்து நாம கீழ இருக்கும் போது அவன் மேல வந்துருக்கான்னா. ஏதும் வச்சிட்டு போயிருக்கானா? என ஆரியன், சீக்கிரம் மேல தேடு. ஏதோ செஞ்சிட்டு போறான் இருவரும் அலச, நவீன ரக டிஜிட்டல் பாம்மில் நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

அய்யோ..மாமா, நேரமில்லை ஆத்விக் பதற, மேலே வந்த ஆரியன் நண்பர்கள் பதறினார்கள்.

விஷ்ணு அந்த வருண் குடும்பத்துல்ல யாரும் தப்பிச்சிட்டாங்கலான்னு பாரு. அப்புறம் அத்தி, நீ உங்க கம்பெனிய சர்ச் செய்ய சொல்லு..

மாமா, நான் எப்படி சொல்றது? லோகு பதி சார்கிட்ட பேசுடா. உடனே சர்ச் பண்ண சொல்லுங்க என பேசிக் கொண்டே அவ்விடத்தை ஆராய்ந்து பக்கமிருந்த ஹோட்டலில் குதித்து வேகமாக ஓடினான் ஆரியன்.

“மாமா” ஆத்விக் கத்த, மச்சீ..வேண்டாம் என அனைவரும் கத்தினார்கள். அதிவதினி சத்தம் கேட்டு வெளியே வந்து மேலே பார்த்தார்.

நீங்க பார்த்துக்கோங்க என்று ஆத்விக்கும் ஆரியன் போல குதித்து அவன் பின்னே அவனை அழைத்துக் கொண்டே சென்றான்.

அதிவதினி அதிர்ந்து வேகமாக பதட்டமாக உள்ளே வந்தார். அவர் கணவன், சக்தி, கவின் இருந்த அறைக்கு சென்று விசயத்தை சொல்ல, அதியா கையிலிருந்து ஐஸ்கிரீம் கீழே விழுந்தது. எல்லாரும் மாடிக்கு விரைந்தனர். அதியாவும் பசங்களும் பயத்துடன் அவர்களுடன் சென்றனர்.

பேசி விட்டு தடதடவென கீழே இறங்கிய ஆரியன் நண்பர்களை பார்த்து கவின் கேட்க, “பேச நேரமில்லை” ஓடி சென்று பைக்கை எடுத்தனர்.

“மாமா, நானும் வாரேன்” அதியா அழ, “அதி சொன்னா கேளு” அவன் சீற்றமுடன் கத்தினான்.

வேண்டாம்ட்டா. அவங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீ எங்களுடனே இரு அதிவதினி சொல்ல, அவரை அணைத்து அழுதாள்.

“நான் வாரேன்” சிறிதும் யோசிக்காது சக்தி கவினுடன் பைக்கில் ஏறினாள்.

“இறங்கு” அவன் சத்தமிட, வாம்மா என சுகுமார் அழைக்க, அவனை முறைத்துக் கொண்டே இறங்கினாள். எல்லாரும் பைக்கில் சென்றனர்.

சக்தியோ, அங்கிள் நம்ம துருவினியும் அங்கிளும் தனியா போயிருக்காங்க. நான் அவங்கள பார்க்க போறேன் என சொல்ல, உனக்கும் ஆபத்து இருக்கும்மா..இரு அவர்கள் அவளை தடுத்தனர்.

துருவினியும் உத்தமசீலனும் சென்று கொண்டிருக்க, அவர்களை கார் ஒன்று பின் தொடர்ந்து கொண்டிருந்தது. அவளோ யோசனையுடன் தன் தந்தையிடம் சொல்ல, உள்ள எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல. ஆரியாவுக்கு கால் பண்ணனும் என அவர் அழைக்க, அவன் எடுக்கவில்லை. ஆத்விக்கிற்கு அழைக்க அவனும் எடுக்கவில்லை.

“உன்னோட அலைபேசியை கொடு” என்று வாங்கி துருவினி தோழர்களை அழைத்தார்.

அப்பா முதல்ல சாய்யிடம் சொல்லுங்க. அவனே நேசனை வர வச்சிருவான் அவள் சொல்ல, அவர் விசயத்தை சொல்லி லொக்கேஷன் ஷேர் செய்தார்.

அவர் செய்து முடிக்கவும் பின்னே வந்த கார் படாரென்று இவர்களின் ஸ்கூட்டியில் மோதியது. துருவினியும் உத்தமசீலனும் பறந்து சென்று முன்னே விழுந்தனர். அவர்களுக்கு சிலப்பல அடிகள் பட்டது.

காரிலிருந்து ஏழு பேர் இறங்கினார்கள்.

ஏய் கிழவா, உன்னோட மகன் என்ன பெரிய இவனா? அதி குரூப்ஸ் கம்பெனி சுக்குநூறாகப் போகுது. நீங்க யாரும் இருந்த தடமே கிடைக்காது. திரிபில் ஆர் கம்பெனியை சரிவுக்கு கொண்டு வந்து, எங்க அண்ணா குடும்பத்தையே உள்ள தூக்கி வச்சுட்டீங்களே! சிங்க குட்டி..என் மகன் இருக்கான்டா. வேலியில ஓணானை மேய விட்றலாமா? என்று இரு பொருள் படும் படி துருவினியை பார்த்துக் கொண்டே பேசினான்.

முகத்தை திருப்பினாள் துருவினி. உத்தமசீலன் சீற்றமுடன் அவனை முறைத்து, எவன் வந்தாலும் அதி குரூப்ஸை நாங்க பார்த்துக்கிறோம்டா..

ம்ம்..குட்டிப் பொண்ணு தான்டா பட் “ஷீ இஸ் மை பேமிலி கெர்ல்”. ஷீ இஸ் அதியாஆரியன்டா. முடிச்சதை பார்த்துக்கோ என உத்தமசீலன் மீசையை முறுக்கி விட்டார் கம்பீரமுடன்.

பாருடா கிழத்தை. மீசையை முறுக்குது என்று ஒருவன் துருவினி அருகே செல்ல, அவள் திமிறாக அவனை பார்த்தாள்.

அவன் துருவினி மீது கையை வைக்கும் முன் அவன் கதறல் அவ்விடத்தை அடைத்தது.

அவ என்னோட பொண்ணுடா. கையை வைக்குற என அவன் மணிக்கட்டை பிடித்து அழுத்தி அவன் கையை திருப்பி உடைத்தார் உத்தமசீலன். மற்றவன் அவரை தாக்க அவன் தள்ளிச் சென்று விழுந்தான்.

ஐவர் அவரை சுற்றி வளைக்க, வேஷ்டியை மடித்து கட்டி அவர்களுடன் சண்டையிட்டார். திடீரென விசில் சத்தம் கேட்க, எல்லாரும் அவ்விடம் பார்த்தனர். துருவினியின் தோழர்கள் சாய், நேசன் உத்தமசீலனின் வீரத்தை பார்த்து மெய் சிலித்து விசிலை பறக்க விட்டிருந்தனர்.

டேய், சும்மா வந்திருக்கீங்க? துருவினி கேட்க, மேடம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?

என்னோட லெஹங்கா பாழாகிடும். நீங்க அப்பாவுக்கு உதவுங்கடா என்றாள்.

வித் பிளசர் மேம் என புன்னகைத்து அவர்களும் உத்தமசீலனுக்கு உதவ, வந்தவர்கள் தப்பித்தால் போதும் என்று ஓடினர்.

அதியா பயத்துடன் இருக்க, கவினும் ஆரியன் நண்பர்களும் ஆரியன் ஆத்விக் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

மாமா, இங்க போடுங்க ஆத்விக் சொல்ல, அவனை நோக்கி வந்த ஆரியன் அவனை கடந்து வேகமாக அந்த மைதானத்தின் அருகே இருந்த வீட்டின் மாடியில் ஏறினான். ஆத்விக்கும் அவன் பின்னே ஓடினான். மறுநொடி ஆரியன் பாம்மை தூக்கி எறியவும் அது வெடிக்கவும் சரியாக இருந்தது.

ஆரியனும் ஆத்விக்கும் கைகளை கோர்த்து கீழே விழுந்தனர். ஆகாயத்திலே பாம் வெடித்து சிதறியது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தனர். பக்கத்தில் இருந்த வீட்டில் அலைபேசி பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் ஆரியன், ஆத்விக்கின் செயலை பார்த்து வீடியோ எடுத்தான். அதை இணையத்தில் போட்டு வைரலாக்கினான்.

அங்கிருந்தவர்கள் கை தட்ட, இருவரும் ஒரே போல் கீழே வந்தனர்.

ஹேய், உங்களுக்கு ஒன்றுமில்லையே! கவின் இருவரையும் ஆராய்ந்தான். அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். உத்தமசீலனும் ஆரியனிடம் அலைபேசியில் விசயத்தை சொல்ல, துரு நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிற்கு செல்ல சொல்லி அறிவுறுத்தினான்.

மண்டபத்தில் பாம் சத்தம் கேட்டு, காதை மூடிக் கொண்டு அதிவதினி அமர, அதியா சக்தி மீது மயங்கினாள். அனைவரும் பதற, சுகுமார் தண்ணீரை எடுத்து தெளித்தார்.

“அதிம்மா” இரு பிள்ளைகளும் அவளை ஒட்டிக் கொண்டனர்.

எழுந்த அதியா, “மாமா ஆரு, அத்துவுக்கு ஒன்றுமில்லைல்ல?” அழுது கொண்டே சுகுமாரிடம் கேட்டாள்.

“ஒன்றும் இருக்காதுடா” அவர் அதியாவை அணைக்க, ஆகர்ஷனாவும் தர்சனும் அழுதனர்.

சக்தி அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, ஆரியன், ஆத்விக், கவின், ஆரியன் நண்பர்கள் வந்தனர்.

“ஆரு அத்து” அழுது கொண்டே அதியா அவர்களை நோக்கி வந்தாள். பிள்ளைகளும் அவர்களிடம் வந்தனர்.

ஆரியன் பிள்ளைகளை பார்த்துக் கொண்டே அதியாவை அணைத்தான். தர்சனையும் ஆகர்ஷனாவையும் ஆத்விக் அள்ளி தூக்கினான்.

யாருக்கும் ஏதும் ஆகலைல்ல மாப்பிள்ள? சுகுமார் கேட்க, வாங்க நாம உடனே கிளம்பலாம் ஆரியன் அழைத்தான்.

மாப்பிள்ள, பத்து நிமிசம் பொறுத்து போகலாமா? நல்ல நேரம் கிளம்பினால் நல்லா இருக்கும் அதிவதினி சொல்ல, சரி என ஆரியன் தலையசைத்தான்.

“சொல்லாமல் போயிட்டீங்க ஆரு? நாங்க எப்படி பயந்துட்டோம் தெரியுமா?” அதியா அழுதாள்.

அதி, இங்க பாம் இருக்கு. அந்த நிரஞ்சன் தான் வச்சான். நாங்க கிளம்பவான்னு இனி மேல் கேட்டுட்டு போறோம் ஆத்விக் நக்கலாக சொன்னான்.

சும்மா இருடா.. பிள்ளை பயந்திருக்கு சுகுமார் சொல்ல, மாமா..அவளுக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சு. கம்பெனியை நடத்தணும். வீட்டை பார்க்கணும். எத்தனை பொறுப்பு இருக்கு..இவ இப்படி பேசிட்டு இருந்தால் என்ன செய்றது?

அதுக்காக..இப்ப தான கல்யாணமே முடிஞ்சிருக்கு அதிவதினி சொல்ல, ஓ..அப்படின்னா இப்ப அவள் எதுவும் செய்ய வேண்டாம் அப்படி தான? ஆத்விக் கேட்டான்.

“ஆது” அவனை தனியே இழுத்து சென்றார் அதிவதினி. அதியா ஆரியனை அணைத்தே நின்று கொண்டிருந்தாள்.

“சிஸ்டர் கொஞ்சம் நகர்ந்துருக்கிறீங்களா? நாங்க எல்லாரும் இருக்கோம்” சக்தி சொல்ல, கவின் ஆரியனை பார்த்தான்.

ஆரியன் யோசனையில் இருக்க, ஆரியா..கம்பெனியிலையும் பாம் வச்சிருந்திருக்காங்கடா. யாராக இருக்கும்? விஷ்ணு கேட்க, திரிபில் ஆர் கம்பெனியில மூத்த வாரிசு பாரின்ல்ல இருக்காருன்னு சொன்னாங்க. அவர் பற்றி ஏதும் தெரியல. அவருக்கும் இந்த வருண் போல பசங்க இருந்தாங்கன்னா வாய்ப்பிருக்குடா..அப்பா அப்படிதான் ஏதோ சொன்னார். வீட்டிற்கு சென்று தான் பேசணும்.

ஆத்விக்கிற்கு தெரியும்ல்லடா?

எனக்கு தெரியும். மூத்த அங்கிள் அக்கா மேரேஜூக்கு வந்தாங்க என்றாள் அதியா.

வீடியோ ஏதாவது இருக்கா அதி.

இருக்கு. அப்பா வீட்ல அக்கா அறையில இருக்கு.

அவருக்கு பசங்க இருக்காங்களா? லோகேஷ் கேட்டான்.

ஆமா அண்ணா…இரு பசங்க. ஒருவருக்கு பத்து படிக்கும் மகனே இருக்கான். மற்றவர் பற்றி தெரியாது. அவர் திருமணத்தில் வராததால் எதுவும் எனக்கு தெரியாது.

இப்ப எங்க இருப்பார்? ஆரியன் கேட்க, பாரின்ல்ல தான் இருப்பார். ஆனால் ஆரு..அவருக்கு தீவு என்றால் மிகவும் பிடிக்குமாம். அது மட்டும் தெரியும் என்றாள்.

அவரோட பெயர் தெரியுமா? விஷ்ணு கேட்க, ஹா..ஹர்சன்ன்னு சொன்னதா நினைவு என்று ஆரியனை பார்த்தாள்.

பாரின் பசங்க இருவர் பற்றியும் விசயத்தை கலெக்ட் பண்ணுங்க.

அது கஷ்டம். அவர் பெற்றோர் அண்ணா குடும்பத்தை தவிர அவர் முகத்தை கூட எல்லாரும் சிறுவயதில் தான் பார்த்திருக்காங்களாம்..

எப்படி இருந்தாலும் நாங்கள் கண்டறிந்து விடுவோம் என்றான் பிரகாஷ்.

“ஆரு, நீங்களும் என்னோட கம்பெனியை பார்த்துக்க வர்றீங்களா? உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயமா இருக்கு” அதியா மீண்டும் அவனை அணைக்க, “பாருடா பல்லி போல ஒட்டிக்கிட்டு இருக்கா என்னோட தங்கச்சிம்மா” லோகேஷ் சிரிக்க, “எனக்கு அது பிடிக்கவே பிடிக்காது” என்றாள் அதியா சிணுங்கியவாறு..

ஆரியனும் அவன் நண்பர்களும் சிரித்தனர்.

அதி இது எனக்கு ரொம்ப பிடித்த வேலை. கண்டிப்பாக விடணுமா? ஆரியன் அவளை போல் கேட்க, வேண்டாம்..பார்த்து இருங்க என்று மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.

எனக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக்கிறேன். ஓ.கே வா? ஆரியன் கேட்க, அவள் கன்னத்தை காட்ட, தங்கச்சிம்மா நாங்க இருக்கோமே வெட்கமா இல்லையா?

என்னோட ஆருகிட்ட முத்தம் கேட்க, நான் எதுக்கு வெட்கப்படணும்? நீங்க தான் வேடிக்கை பார்க்க வெட்கப்படணும் அங்கிள் என்றாள்.

ஆரம்பிச்சிட்டியா? அவன் தலையில் கையை வைக்க, அனைவரும் சிரித்தனர்.

வாங்க கிளம்பலாம் நேரம் நன்றாக இருக்கு என்று அதிவதினி சொல்ல, அவர்கள் ஆரியன் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

ஆரியன் வீட்டில் துருவினி மணமக்களுக்கு ஆராத்தி சுற்ற, எல்லாரும் வீட்டிற்கு வந்தனர். சக்தி உள்ளே வராமல் நின்றாள்.

“உள்ள வாம்மா” உத்தமசீலன் அழைக்க, “நான் ஆத்விக் சார் இல்ல அண்ணா வீட்டுக்கு போகவா? எனக்கு டயர்டா இருக்கு” சக்தி சொல்ல, “எனக்கும் தான் வா..நாம என்னோட அறைக்கு போகலாம்” அதியா நகர, அவளை ஆத்விக் இழுத்து ஆரியன் அருகே நிற்க வைத்து, சில சம்பிரதாயங்கள் இருக்கு. முடிச்சிட்டு ஓய்வெடு என்றான்.

அதி.வா..பூஜை அறையில விளக்கேற்றணும். சக்தி..உள்ள வா. உனக்கும் வேலை இருக்கு. அதுக்குள்ள நீ எப்படி ஓய்வெடுக்கலாம்? அதிவதினி சொல்ல மறுக்க முடியாமல் உள்ளே வந்தாள் அமைதியாக. சக்திக்கு அவளோட மூத்த அண்ணனின் திருமண நிகழ்வு நினைவிற்கு வந்தது.

அங்கே நடப்பவற்றை கண்கலங்க பார்த்தாள். துருவினியும் அதிவதினியும் முன்னிருந்து எல்லாம் செய்தாலும் துருவினி அவ்வப்போது சக்தியை பார்த்தாள். ஆத்விக் அதை பார்த்து துருவினியிடம் வந்து, “உன்னோட கவனம் எங்க போகுது? சக்தியை நான் பார்த்துக்கிறேன்” அவளருகே வந்து சொல்ல, “ஆது என்ன பேச்சு? தனியா?” சுகுமார் கேலியுடன் கூற, அவரை முறைத்து விட்டு நகர்ந்து சக்தி அருகே சென்று, நீ இப்ப அழுதேன்னா நல்லா இருக்காது.

“அண்ணா எப்போதும் உன்னோடவே இருப்பேன்” சக்தி கையை ஆத்விக் பிடித்து அழுத்தினான். அவள் கண்கலங்க அவனை பார்த்தாள். ஆத்விக் கண்ணை மூடி திறந்தான்.

சற்று நேரத்தில் ஆத்விக்கிற்கு அழைப்பு வர, சக்தியை பார்த்துக் கொண்டே அவன் எடுத்தான். சக்தி அவனருகே வேகமாக வந்து, என்னன்னு கேளுங்க?

ம்ம்..என்று அலைபேசியை காதில் வைத்த ஆத்விக் சக்தியை பார்த்து புன்னகைத்தான்.

இந்தா, “உன்னோட ப்ரெண்டு மேரேஜூக்கு வாழ்த்து சொல்லு” என்று அவளிடம் அலைபேசியை கொடுத்தான்.

யார? என்று பயத்துடன் உள்ளே போன குரலில் சக்தி கேட்க, பிரஜா தான் என்று புன்னகைத்தான் ஆத்விக்.

ஹப்பா என பெருமூச்சு விட்டு புன்னகையுடன் காதில் வைத்து வெளியே ஓடிச் சென்று பேசினாள். ஆத்விக் உள்ளே நடக்கும் சடங்குகளை கவனிக்கத் தொடங்கினான்.

துரியன் அவன் அம்மாவை மீறி கோவிலில் வைத்து சமீரா கழுத்தில் தாலியை கட்டும் நேரம், “ஸ்டாப் தி இடியட்” கத்தினான் பிரஜித்.

வாட் இடியட்? துரியன் வேண்டுமென்றே கட்ட செல்ல, ஓடி வந்து தாலியை பிடுங்கினான் பிரஜித்.

பிரஜித் அம்மாவோ, “ஜித்து..என்னடா பண்ற?” கோபமாக கேட்டார்.

சமீரா அவனை தள்ளி விட்டு, “எதுக்கு வந்த?” சீற்றமுடன் கத்தினாள்.

எதுக்கா? கண்டிப்பா தெரியணுமா? ஆளை கவிழ்க்கும் புன்னகையை அவன் வீச, அவளுக்கு கண்ணீர் வந்து விட்டது. சிறிதும் தாமதிக்காமல் துரியனிடமிருந்து தாலியை பிடுங்கி பிரஜித் சமீராவை கழுத்தில் வைத்து, கட்டவா? புன்னகையுடன் கேட்க, அவளால் நம்பவே முடியவில்லை.

சுவா..அவள் கேட்க, சுவா..ஜஸ்ட் ப்ரெண்டு. அது வெறும் இன்பாக்சுவேசன் தான் என்று மீண்டும் கட்டவா? பிரஜித் அவள் காதில் கேட்க, ம்ம்..என்று லேசான சத்தத்துடன் தலையையும் அசைத்தாள். அப்புறம் என்ன திருமணம் முடிந்து விட்டது. பிரஜித் அம்மா அழுகையை தொடங்க, “வா..அவங்க கால்ல விழுந்திருவோம்” என இருவரும் பட்டென அவர் காலில் விழுந்து சமாதானப்படுத்த, சமீரா அம்மா பயத்துடன் பார்த்தார்.

ஆன்ட்டி, “நோ ஃபியர்..ஒன்லி ஸ்மைலிங் டியர்” என்றான். அவர் புன்னகைத்து விட்டார்.

மாம், டாட் எங்க? அவன் கேட்க, அவனுக்கு பின்னே கையில் தடியுடன் நின்றார்.

“மாம், எங்களுக்கு கெல்ப் பண்ணுங்க” அவர் பின் ஒளிந்து இருவர் பெற்றோரையும் சமாதானப்படுத்தியதை சமீரா சொல்லவும் சக்தி ஆர்ப்பாட்டமாக, “இஸ் இட் சூப்பர் கங்கிராட்ஸ்டி..எங்க அவனை?” சக்தி கேட்க,

சுவா நீ தப்பா எடுத்துக்கலைன்னா நீங்க கொஞ்ச நாள் மட்டும் பேச வேண்டாமே! எங்க அவர் மனம் மாறிடுமோன்னு பயமா இருக்கு பட்டென சமீரா சொல்ல, சக்தி கண்ணீருடன் நின்றாள்.

அதை மறைத்து, ம்ம்..சொல்லப் போனால் எனக்கும் இங்க வேலை இருக்கு என்று சொல்லி விட்டு, நீ பேசுவேல்ல? என சமீராவை கேட்டாள். அவள் அமைதி சக்திக்கு மனம் கஷ்டமாகி போனது.

ஓ.கே சமீ, நான் வச்சுடுறேன் என சக்தி சொல்லி வைத்து விட்டு வீட்டின் பின்புறம் ஓடினாள். வெளியே வந்த கவின் சக்தி அழுது கொண்டே செல்வதை பார்த்து பின் தொடர்ந்தான்.

ஓரிடத்தில் அமர்ந்து சிரமப்பட்டு சத்தமில்லாமல் முகத்தை மூடி அழுதாள்.

“ஏய், என்ன பண்ற?” கவின் குரலில் பயந்து எழுந்தாள். கீழே எதையோ மிதிக்க, அதை பார்த்து அதிர்ந்து.. பாம்பு..பாம்பு..என குதித்து கவினிடம் ஓடி வந்து அவனை அணைத்தாள். அவன் அவளை நகர்த்தி முன் செல்ல, “வேண்டாம் சார்” என்று அவன் கையை பிடிக்க, கவின் அவளை முறைத்தான்.

நேற்றிரவு நடந்த அனைத்தும் அவளுக்கு நினைவு வர, வேகமாக அவனை விட்டு நகர்ந்தாள்.

அவள் கையை பிடித்து நிறுத்தி, “எதுக்கு அழுத?” அவன் கேட்க, “ஐ அம் சாரி சார்..நேற்று கொஞ்சம் ஓவராக தான் செய்துட்டேன்” என்று பேசிக் கொண்டே வெளியே பார்த்தவள்.. தா…தாரா…தாரா என அந்த பெண்ணை நோக்கி ஓடினாள்.