Advertisement

வரம் கொடு! தவம் காண்கிறேன்!

6

தன் மகனை, தனபால் அண்ணனோடு செல்லுவதற்காக அழைத்து வந்த சுகுமாரியின் கண்களில், தன் மகன்.. யாரும் சொல்லாமல் குழந்தையை வாங்கிக் கொண்டதும்.. அதை கடந்து, அவளிடம் ஏதோ சொன்னதும் கண்ணில் பட.. முகமும் அகமும் மலர்ந்து.. எதையோ எண்ணி, தனக்குள் புன்னகைத்துக் கொண்டார் அன்னை. அப்போதே தன் மனதில் எதோ எண்ணத்தை வளர்ந்துக் கொண்டார் சுகுமாரி.

ரத்தினத்தின் தம்பி மகள் திருமணம் இனிதாக நிறைவடைந்தது. 

கௌரி மறுநாள் பெங்களூர் கிளம்பி சென்றான்.

ரத்தினமும் சுகுமாரியும் திருமண வேலைகள் எல்லாம் முடிந்து தங்களின் வீட்டிற்கு வந்தனர். நாட்கள் இயல்பாக சென்றது.

கெளரிசங்கர் அதன்பின் வீடு வர இரண்டுமாதம் ஆனந்து. சுகுமாரி இப்போது மகனிடம் அமைதியாக ‘சரியா சாப்பிடுப்பா.. தினமும் போன் பண்ணு போதும்.. எப்போ முடியுதோ அப்போது வா..’ என அமைதியாக பேசினார்.

!@!@!@!@!@!@!@!@!@!

இன்று தனபால் வீடு பரபரப்பாக இருந்தது. அக்ஷயாவின் புகுந்து வீட்டு ஆட்கள் வந்து சேர்ந்தனர். காலையிலேயே, மித்ரன் தனபால்.. அக்ஷயாவின் மாமனார்.. அவர்கள் வீட்டு மாப்பிள்ளை எல்லோரும் கிளம்பி பவானிகூடுதுறை சென்றனர்.

ம்.. இன்று அக்ஷயாவின் திவசம். மித்ரன் அன்னைக்கு திவசம் கொடுத்தான் கூடுதுறை படித்துறையில். எல்லாம் முடித்து அவர்கள் வீடு வரவே மணி மதியம் ஒன்று.

அமைதியாக எந்த சலசலப்பும் இல்லாமல் உணவு நடந்துக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் துக்கம்.. யாரும் பேச முற்படவில்லை.. பேசி பேசி இந்த நாட்களில் சென்றவர்கள் திரும்ப வரவில்லை. மேலும் பேசினால்.. மனஸ்தாபம்தான் வருகிறது என உணர்ந்த அனைவரும் அமைதியாக உண்டு அமர்ந்திருந்தனர்.

மித்ரன் உண்டு உறங்கிவிட்டான்.. சஹாவின் மடியில்.

அதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த அக்ஷயாவின் மாமியார்.. “அண்ணா, மித்ரனை நாங்க கூட்டிட்டு போகணும்ன்னு நினைக்கிறோம்.. என்ன இருந்தாலும் எங்களுக்கு இருக்கும் ஒரே வாரிசு. தாத்தாபாட்டி நாங்கள் நன்றாக இருக்கையில்.. எதற்கு அவன் இங்கே வளருவது.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. அதுதானே முறை..” என்றார்.

சாகம்பரி யோசிக்கவே இல்லை “அத்தை, ப்ளீஸ்.. இவன் உங்கள் வாரிசுதான், நாங்க யாரும் இல்லைன்னு சொல்ல.. எங்களைவிட உங்களுக்கு நூறு மடங்கு உரிமை இருக்கு. அத்தோடு அதிகமா துக்கமும் இருக்கு, இல்லைன்னு சொல்லல.. ஆனால், ப்ளீஸ்.. இவனை மட்டும் கேட்க்காதீங்க.. கொஞ்சநாள் எங்ககூட இருக்கட்டும். குழந்தை அவன்.. உங்களால் பார்க்க முடியாது அத்தை ப்ளீஸ்” என கெஞ்சலில் ஆரம்பித்த குரல்.. அவளையும் அறியாமல்  சிடுசிடுப்பாக முடிந்தது.

பெரியவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ம்.. அக்ஷரா இறந்து ஒருவருட முடிந்த திவசத்திற்குதான் வந்திருந்தனர் இங்கு. தினகரன் அக்ஷ்ராவின் கணவர். 

திருமணம் முடிந்து ஐந்தாவது வருடம். அக்ஷரா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வளைகாப்பு முடிந்து தன் தாய் வீடு வந்திருந்தாள். நிறைமாதம்.. அப்போதுதான் கல்லூரி முடித்திருந்தாள் சாகம்பரி. 

தனபால், தன் இளைய மகளிடம் திருமணத்திற்கு வரன் பார்க்க போகிறோம்.. என சொல்லிக் கொண்டிருந்த நேரம்.. அக்ஷராவும் இருக்க.. வீட்டில் சுப நிகழ்வுக்கான பேச்சக்கள் அதிகமாக நடந்தது. பிருந்தாவிற்கு எப்போதும் வேலைதான்.. பேரன்.. பிள்ளைபேருக்கு வந்திருக்கும் பெரிய மகள்.. திருமண கனவில் இருக்கும் இளைய மகள்.. என வீடு அமர்க்களபட்டது.

அக்ஷ்ராவை பார்க்க வரும் சொந்தங்களிடம் எல்லாம்.. அடுத்து சஹாவிற்கும் வரன் பார்க்கணும்.. நல்ல இடமாக இருந்தால் சொல்லுங்கள் என பேச்சுகள் நடந்துக் கொண்டிருந்தது.

மருத்துவர்கள் சொன்ன நாளுக்கு முன்னமே அஷ்ராவிற்கு பிரசவவலி வந்தது. அவளிற்கு ஆஸ்துமா பிரச்சனை உண்டுதான். எனவே, கவனமாகத்தான் அக்ஷ்ராவை பார்த்துக் கொண்டனர் எல்லோரும். ஆனால், பிரசவலி ஒருவாரம் முன்பே வந்துவிட்டது. தனபால் தோட்டத்திலிருந்து வந்து, ஈரோடு செல்ல காரெடுப்பதற்குள் அவளுக்கு மூச்சு திணறல் வந்துவிட்டது. தனபால் வேகமாக வண்டியை செலுத்தி கவனமாக வந்து சேர்ந்தார் மருத்துவமனைக்கு.

காரில் வரும்போதே.. பிருந்தா தன் சமப்ந்திக்கு அழைத்து சொல்லிவிட்டார். அவர்களும் ஈரோடுதான் என்பதால்.. மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர் சரியான நேரத்திற்கு.

ஆனால், அக்ஷரா கண் திறந்து பார்க்கவில்லை.. யாரையும். மருத்துவர்கள் உடனேயே சிகிச்சையை தொடங்கிவிட்டனர். தினகரன் வந்து சேர்ந்தார்.. மனைவியிடம் கையை பிடித்துக் கொண்டு பேசினார்.. மருத்துவர்கள் வலியில் வந்த மயக்கம் என்றனர்.. ஆனாலும்.. ஆக்சிஜன் உதவி இருந்தது ஆனாலும் கண் திறக்கவில்லை. முதல் குழந்தையின் போது, நாள் பார்த்து.. அறுவைசிகிச்சை செய்து குழந்தையை அழகாக எடுத்துவிட்டனர். ஆனால், இரண்டாவது குழந்தைக்கு பயமில்லாமல் இருந்தனர்.

ஆனால், இந்த சூழ்நிலை, யாருக்கும் சாதகமாக இல்லை போல.. மருத்துவர்கள் எவ்வளவு போராடியும்  பெரிய உயிரை காக்க முடியவில்லை என்றனர். குழந்தையை காட்டினர் கண்ணில்.. ஆனால், கையில் கொடுக்கவில்லை அவளுக்கும் மூச்சு விடுவதில் சிரமம் என சொல்லினர். ம்..பெண்குழந்தை பிறந்திருந்தது.

தினகரன் நொறுங்கி போனான். குடும்பமே நிர்கதியாய் நின்றது. என்ன ஏது.. என மருத்துவர்கள் மருத்துவமொழியில் பதில் சொல்லினர். கேட்ககூட தெம்பில்லை. விக்ரம் குடும்பம் வந்தது.. தினகரனின் அக்கா குடும்பம் வந்து சேர்ந்து எல்லாம் பார்த்து துணை நின்றனர்.

தினகரன், மனைவியை பார்த்து கதறிய கதறல் யாராலும்.. மறக்க முடியாது. மித்ரனுக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. சாகம்பரியின் கைகளில் அமர்ந்துக் கொண்டான். அன்றிலிருந்து இப்போதுவரை.. அவள்தான் துணை அவனுக்கு.

தினகரனை இன்னமும் துக்கம் விடவில்லை. மனைவியின் சடங்களை முடித்து வந்தவருக்கு.. பெண்ணும் அவரை விட்டு போயிருந்தாள். ஆக முதல்நாள் மனையாள் மூன்றாம்நாள் பெண். தினகரன் உருக்குலைந்து போனார்.

ஒருமாதம் ஆகிற்று தன் அறையிலிருந்து வெளியே வாசல் வருவதற்கு. ‘மித்ரன் எங்கே’ என்றான் தினகரன். 

தினகரனின் அன்னை “நேற்றுதான் சாகம்பரிகிட்ட விட்டு வந்தோம். பையன் அழறாம் ப்பா.. எனக்கு கொஞ்சம் உடம்பு முடியலை டா.. அக்காவிற்கு அவங்க சொந்தத்தில் விழா. அதான்.” என்றார்.

தினகரன் கோவமாக “அவன், நேற்றுதான் வந்தான்” என்றார்.

யாரிடமும் பதில் இல்லை.

தினகரன் கிளம்பி சென்று மகனை அழைத்து வந்துவிட்டார். இரண்டு நாட்கள் தானே மகனை கவனித்துக் கொண்டார். உணவு ஊட்டினான்.. குளிக்க வைத்தான்.. எல்லாம் செய்தார். ஆனால், மித்ரன் “ப்பா, அம்மா பாப்பாவோட எப்போ வருவாங்க” என தொடந்து கேட்க்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை அவரால்.

இந்த காட்சியை பார்க்கவே பாவமாக இருந்தது தினகரனின் பெற்றோருக்கு.

ஒருவாரத்தில் தினகரனின் அக்கா வந்தார். தினமும் தன் வீட்டிலிருந்து தம்பி மகனை, வந்து கவனித்துக் கொண்டார். தினகரன் அமைதியாக தொழில் பார்க்க சென்றார். ஹோல்செல் துணி வியாபாரம் இவர்களின் தொழில். 

ஆனாலும் மித்ரனை அரவணைக்க முடியவில்லை அவர்களால். குழந்தை தேடுவது அன்னையின் கதகதப்பை. இவர்கள் தருவது.. கருணையை. மித்ரனுக்கு உடல்நலமில்லாமல் போனது. ஒருவாரம் மருத்துவமனை வாசம். சாகம்பரிதான் பார்த்துக் கொண்டாள் குழந்தையை.

பெரியவர்கள் எல்லோரும் ஒரு முடிவுக்கு வந்தனர் குழந்தையை கருத்தில் கொண்டு. எனவே, சாகம்பரியோடு குழந்தையை அனுப்பி வைத்தனர்.

ஆறுமாதம் ஆகட்டும் என எண்ணி அமைதியாக இருந்தனர். தினகரன், குழந்தையை பார்க்க.. அன்னூர் வந்தார் வாரம் தோறும். அப்போது, ஒருநாள் தினகரனின் அன்னையும் தந்தையும்.. உடன் வந்தனர்.

தனபாலிடம், முறையாக சின்ன குரலில்.. ‘சாகம்பரியை மகனுக்கு கொடுங்கள்.. குழந்தையை மனதில் கொண்டு மட்டுமே கேட்க்கிறோம்..’ என பேசினர்.

தினகரன் குழந்தையை தூக்கிக் கொண்டு.. சென்றுவிட்டார். யாரையும் பார்க்கவில்லை.. கூப்பிடவில்லை.. கிளம்பிவிட்டார். எங்கோ சென்றுவிட்டார் இரண்டுநாட்கள் ஆள் வரவேயில்லை. அதன்பின் மித்ரனுக்கு உடல்நலமில்லாமல் போகவும் தனபாலுக்கு அழைத்து.. பேரனை மெயின் ரோட்டில் வந்து வாங்கிக் கொள்ளும்படி சொன்னார்.

அவசர அவசரமாக தனபால் பேரனை வாங்கிக் கொண்டார்.. தினகரன் தன் மாமனார் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் வீடு நோக்கி சென்றார்.

தினகரனின் அன்னை, மகனை முடிந்தமட்டும் வைதார், அழுதார்.. ‘அந்த பெண்ணையே கட்டிக்கடா.. நாங்க என்ன ஆசைபட்டா சொல்றோம்.. பேரனை பார்க்க வேண்டாமா’ என ஏதேதோ பேசினார்.

ஆனால், தினகரன் அசையவில்லை.

நாட்கள் கடந்தது, தினகரனின் அன்னையின் பேச்சுகள்.. எப்போதும் இதுவாகத்தான் இருந்தது. வேலையே ஓடவில்லை.. அவருக்கு. மகனை பார்க்க முடியவில்லை, தினகரனால்.. அந்த குற்றவுணர்ச்சி அதிகமாகியது. அக்காவும் வீட்டிற்கு வரவில்லை.. மகனை அழைத்து வரவும் முடியவில்லை. மனம் உடைய தொடங்கினார்.. தனியானார்.. தவித்தார்.. மாதங்கள் கடந்தது.

பொறுக்க முடியாத தினகரன்.. ஒருநாள் தன் மாமனாருக்கு அழைத்து பேசினார் திடீரென் “மாமா என்னை மன்னிச்சிடுங்க.. பேரனை நீங்களே வைச்சிக்கோங்க, நான் இனி கேட்கமாட்டேன். உங்களுக்கு கஷ்ட்டம் கொடுக்கிறேன்தான். ஆனால், என்னால்.. இன்னொரு பெண்ணை நினைக்கவே முடியாது.. வேலை இருக்கு அப்புறம் பேசறேன்” என வைத்தவர். திரும்ப பேசவேயில்லை.. தற்கொலை செய்துக் கொண்டார். மிகவும் நல்லவர்கள் வாழ்வே தகுதியற்றவர்களாக.. ஒருசில நேரம் இந்த சூழ்நிலைகள் செய்து விடுகிறது. முடிந்தது மித்ரனின் பெற்றோர் வாழ்க்கை. 

!@!@!@!@!@!@@!@!

அதனால், இப்போது பெரியவர்களுக்கு பயம்.. ‘சாகம்பரிக்கு அப்போதே வரன் பார்த்தனர்.. ஒருவருடம் முடிந்துவிட்டது. தன் பேரனின் இருப்பு.. இந்த வயது பெண்ணின் திருமணத்திற்கு தடையாய் இருக்குமென.. எண்ணி கேட்டுவிட்டனர் பேரனை கூட்டி போகிறோம்’ என. 

பெரியவர்கள் மனதிற்கும் தெரியுமே.. நம் சுயலாபத்திற்காக சின்ன பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க கூடாது என.. மேலும், சிலதை தள்ளி போட கூடாது என எண்ணம். அதனால், இப்போது இந்த வார்த்தையை சொல்லினர் தினகரனின் பெற்றோர்.

சாகம்பரி வீட்டில், பெற்றோருக்கு புரிகிறது அதுதான் உண்மை.. ஞாயம்.. நிஜம்.. என எல்லாம். ஆனால், இங்கே சாகம்பரிதானே அந்த குழந்தையை பார்த்துக் கொள்வது.. அங்கே அப்படி யாரும் இல்லையே என தோன்றியது. அப்படி யாரும் இருந்தாலும் அனுப்ப முடியாதுதான். ஆனால், அவர்கள் வீட்டு வாரிசு.. மகன் இல்லாமல் மருமகள் இல்லாமல் சிரமம்ப்படுபவர்களின் உரிமையை நாம் எப்படி ‘இல்லை’ என சொல்ல முடியும்.. என அதுவும் எல்லோருக்கும் புரிகிறது. ஆனால், குழந்தையின்  மனமும் அத்தோடு சேர்ந்து புரிகிறதே அதான் அமைதி.

சாகம்பரி சட்டென பேசவும்.. எல்லா பெரியவர்களும் அவளை வாஞ்சயாய் பார்த்தனர்.

தினகரனின் தந்தை உடைத்து பேசிவிட்டார் “ம்மா, இது நல்லதில்லை ம்மா.. உன் பெற்றோருக்கும் ஆசை இருக்கும். நீதான் அவர்களுக்கு எல்லாம். ஊரில் இப்போதே எங்கள் பேரனை உனக்கு பாரமாக்கிவிட்டோம் என சொல்லுகிறார்கள்.. அது சரியில்லைதானே.. ஸ்கூல் போகும் பையன் சமாளிச்சிப்போம் ம்மா.. உன் நல்ல மனசு புரியுதும்மா.. ஆனால், இன்னொரு பெண்ணின் வாழ்க்கை இதில் தடைபட கூடாதில்ல.” என்றார் திட்டவட்டமாக.

சாகம்பரிக்கு, இத்தனை மாதங்களில்.. அழுகை வரவில்லை. அக்கா இறந்த போதெல்லாம் அமர்ந்து அழுது ஆற்ற அவளுக்கு நேரமில்லை. மித்ரன் ஒருபக்கம்.. அன்னை ஒருபக்கம்.. என கையில் பிடித்துக் கொண்டாள். அடுத்தடுத்த நாட்களில் வீட்டில்.. எல்லாம் இவள்தான். மித்ரன் மித்ரன் மித்ரன்தான். உடல்நலமில்லை.. சாப்பிடலை அம்மா எங்கே.. என அவனின் எல்லா தேவைக்கும் பதில் இவளே. எனவே, சாங்கியத்திற்கு அழுதாள்.. மித்ரனை அரவணைத்தாள். இப்போது அவனை கேட்க்கிறார்கள்.. மனமார அழுதாள் பெண்.

அவளின் அழுகை பார்த்து தினகரனின் தந்தை “அடுத்த வாரம் வந்து கூட்டி போறோம் ம்மா” என சொல்லி விடைபெற்று சென்றனர்.

சாகம்பரிக்கு, கோவமாக வந்தது.. தன் தந்தையிடம் “ஏன் ப்பா.. நான் இவனை எப்படி ப்பா, விட முடியும். நாம என்ன அவ்வளவு மனமில்லாதவங்களா?.. குழந்தையைவிட என் கல்யாணம்தான் பெருசா? எனக்கு புரியலை ப்பா.. இல்ல, நான் பாரமா இருக்கேனா ப்பா.. நான் போயிடவா?..” என சத்தமாக பேச தொடங்கினாள்.

பிருந்தா “ஏய் சத்தம் போடாத. இதுதானே நிஜம். கல்யாணம் செய்யனுமில்ல.. உனக்கு. எங்களுக்கு உன் வாழ்க்கையும் முக்கியம்தானே. ஒருத்தி அல்பாய்ஸில் போயிட்டா.. நீயாவது நல்லா வாழணும்ன்னு நினைக்க மாட்டோமா. அவனை என்ன பாலைவனத்துக்கா அனுப்பபோறோம். அவங்க பாட்டி வீட்டுக்கு.. அவன் வீட்டுக்கு அனுப்ப போறோம். குழந்தை ஸ்கூல் போறான். முன்னமாதிரி உன்னையே சுத்தமாட்டான்.. கொஞ்சம் பழகிக்குவான். எல்லாம் பார்த்துக்கலாம்” என்றார்.

சாகம்பரி மித்ரனை இறுக்கி பிடித்துக் கொண்டாள் தன் மடியோடு. குழந்தை அதில் அசைந்தது.. தானே தட்டிக் கொடுத்தாள். ஆனால், எழுந்துக் கொண்டான் மித்ரன்.. “சஹா, டைம் ஆகிடுச்சா ஸ்கூல் போகனுமா.. தூங்கவா” என தூக்ககலக்கத்தில் கேட்டான் மித்ரன். அவனிற்கு இது மாலை என தெரியவில்லை.

சாகம்பரி “நீ தூங்கு.. இன்னும் டைம் இருக்கு..” என சொல்லி தன் இடையோடு அனைத்துக் கொண்டாள் குழந்தையை.

மித்ரன் கண்கள் சொருக.. உறங்க தொடங்கினான்.

மணி மாலை ஐந்து. மித்ரனை கீழே விட்டுவிட்டு, தானும் அவனோடு ஹாலிலேயே படுத்துக் கொண்டாள். ஆனால், உறக்கம் வரவில்லை. அன்னை எதோ தன் தந்தையிடம் பேசுவது கேட்க்கிறது.. ‘அவங்க, நம்ம பெண்ணை இரண்டாம் தாரமாக கேட்க்கிறாங்க.. எப்படிங்க முடியும்.. அவங்க பிள்ளையையும் சேர்த்து பார்த்துக்கனுமாம். அதைவிட்டால் சொத்தை கொடுன்னு கேட்க்கிறாங்க.. அவங்களை நம்பி எப்படி இரண்டுபேரை அனுப்பறது.. இதெல்லாம் மாறாதுங்க.. இது நடைமுறைதானே.. அவனை அனுப்பிடுவோம்.. நாம போய் பார்த்துட்டு வரலாம்.. இரண்டு வருஷம் போனால்.. அவனே பழகிடுவான்’ என அழுகையோடு பேசினார்.

தந்தையும் எதோ சொல்லுகிறார். வேறு சில நடைமுறைகள் எல்லாம் சொல்லுகிறார் பிருந்தா. தனபால் அமைதியானார். இறுதியாக “நம்ம கையில் என்ன இருக்கு பிருந்தா.. பார்த்துக்கலாம்.” என முடித்துக் கொண்டார்.

!@!@!@@!@!@!@!@!@!@!@!@!

அடுத்தவாரம் தினகரனின் பெற்றோர் சரியாக வந்தனர். மித்ரனிடம் “சஹாக்கு உடம்பு முடியலை.. ஹாஸ்ப்பிட்டல் போறா அவ. நீ ரெண்டுநாள் அங்க இரு.. அப்புறம் கூட்டிட்டு போவா..” என சொல்லி அவனை கூட்டி போகினர்.

சாகம்பரி அழுதாள். மித்ரன் அழாமல் கிளம்பினான்.. அவனுளிருக்கும் பெரிய மனிதன் “அம்மா மாதிரி பண்ணாத, நீ திரும்ப வந்திடு.. ஸ்கூலில் மன்டே.. எல்லோ டே செலேப்ரேஷன்” என முகத்தில் சிரிப்பே இல்லாமல்.. பவ்யமாக பேசவும்.. சாகம்பரி அழுதாள்..”ம்மா, ரெண்டாம் தாரமாக இருந்தாலும் நான் கட்டிக்கிறேன் ம்மா.. இவன் மட்டும் என் கூட இருக்கட்டும் ம்மா” என சத்தம் போட்டு சொல்லிக் கொண்டு அழுதாள்.

பிருந்தா “பயபடுத்தாத அவனை..” என அப்போதே அதட்டினார்.

ஒருவழியாக மித்ரன் பாட்டிவீட்டுக்கு.. அதாவது அவன் வீடு நோக்கி சென்றான்.

சாகம்பரிக்கு, தன்னை தானே மன்னிக்க முடியவில்லை.. அம்மா இல்லாத குழந்தையைவிட.. எனக்கு என திருமணம்தான் முக்கியமா? மனமில்லாதவர்கள்.. என அழுது அழுது.. அவளுக்கு அன்று இரவு ஜுரம். மாத்திரை விழுங்கி படுத்துக் கொண்டாள்.

மித்ரன், மன்டே அங்கிருந்தபடியே ஸ்கூல் போனான். ஏன் சஹா வரலை என கேட்டுக் கொண்டேதான் போனான். தினகரனின் அம்மாவும்  சமாதானம் செய்துதான் பள்ளி வேனில் ஏற்றினார். அதற்கே அவருக்கு முடியவில்லை. திணறி போனார்.

குழந்தைக்கு எதோ தப்பாக புரிந்து போனது போல.. பள்ளியில் ஒரே அழுகையாம்.. என்ன சொல்லியும் கேளாமல் அழுகையாம். சற்று நேரத்தில் உடல் சூடாக்கி பிக்ஸ் வந்துவிட்டது.

பள்ளியின் மூலம் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அப்படியே சாகம்பரிக்கு தகவல் சொல்லினர். அவள்தானே கார்டியன்.

சாகம்பரி கிளம்பி சென்றாள்.. மருத்துவமனைக்கு.

பிருந்தா, அதற்குள் சம்பந்திக்கு அழைத்து சொல்லி இருந்தார். அவர்களுக்கு தகவல் சொல்லாமல் எப்படி என. 

எல்லோரும் மருத்துவமனையில். தினகரனின் அம்மாவிற்கு அழுகை.. வேண்டுதல்.. ‘என் குலவாரிசை ஒன்றும் செய்திடாதே’ என வேண்டுதல்.

அடுத்த மூன்றுநாள் மருத்துவமனைதான் சாகம்பரிக்கும் மித்ரனுக்கும்.

Advertisement