Advertisement

அன்றே கெளரிசங்கர் கிளம்பி பெங்களூர் வந்து சேர்ந்தான். ஏனோ அன்னையின் பேச்சை ஏற்க முடியவில்லை அவனால். இப்படி எல்லாம் ஒருவரின் பேச்சிற்கு செவி சாய்த்து எனக்கு பலகாலம் ஆகிற்று,  அதிலும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்த நான் கல்லூரி சேர்ந்த நாள்தொட்டு.. என் பழக்கம்.. வழக்கம்.. தேவைகள்.. முடிவுகள்.. எல்லாம் என் விருப்படி மட்டுமே. அதில் இத்தனை நாட்கள் தலையிட்டதே இல்லை அவர்கள். இன்று.. என்னமோ ஏதேதோ சொல்லுகிறார்கள் என காரில் வர வர ஒரே யோசனை அவனிற்கு.

நடு இரவில் தனது அப்பார்மென்ட் வந்து சேர்ந்தான். ஆடம்பரமான அடுக்குமாடி வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதி அது. இப்போதும் அந்த வளாகம் மக்கள் நடமாட்டத்தோடுதான் இருந்தது. கௌரி, தன் காரை தன்னுடைய இடத்தில் நிறுத்திவிட்டு நேராக 11ம் மாடியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றான். முழுவதும் இருளாக இருந்தது வீடு. 

கெளரிக்கு, இருள் என்பது பழக்கம் போல.. ஏதும் பதறாமல்.. உள்ளே நுழைந்து இடது கை பக்க சுவற்றை தொட்டு அங்கிருந்த ஸ்விட்ச்களை ஆன் செய்தான். வீடு மொத்தமும் ஒளிர்ந்தது.. வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அந்த வீட்டில் நிறைந்து இருந்தது. உள்ளே வந்தான், சோபாவில் தனது பாக்’கை தூக்கி போட்டான். 

அசந்து அமரவெல்லாம் இல்லை கௌரி, சுற்றிலும் பார்த்தான்.. வீடு போட்டது போட்டபடி இருந்தது. அன்று கிளம்பும் போது தூக்கி போட்டிருந்த தன்னுடைய டி-ஷர்ட் டீபாய் மேல் இருந்தது.. அப்படியே தான் கிளம்புபோது போட்டுவிட்டு சென்ற ஈர டவல்.. மற்றொரு சோபாவில் இருந்தது.. அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு.. கிட்சென் சென்றான். சாஸ் பாட்டில் திருந்து கிடந்தது மூடி எங்கோ காணோம்.. ப்ரிட்ஜ் திறந்து.. தண்ணீர் தேடினான். அவன் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தால் தானே, இருக்கும்.. பீர் வாங்கி வைத்திருந்தான் அது அமிர்தமாக கண்ணில் பட.. எடுத்துக் கொண்டு தன்னறை நோக்கி சென்றான்.

பெட்ரூம் மிகவும் சுத்தமாக இருந்தது.. அந்த பெரிய பெட்டில் போட்டிருந்த லேவெண்டேர் நிற விரிப்பு.. எந்த சுருக்கமும் இல்லாமல் அழகாக பளிச்சென மின்னியது. அவனின் பெரிய கண்ணாடியின் கீழே இருந்த டேபிளில் அழகாக தன்னுடைய சீப்பு.. பெர்ப்யூம்.. ஹேர் ஜெல்.. என எல்லாம் நேர்த்தியாக அடுக்கி வைத்தபடியே இருந்தது. அடுத்து, தனது கபோர்ட் திறந்தான்.. ஆபீஸ் செல்லும் போது அணிந்து செல்லும் உடுப்புகள் எல்லாம்.. அழகாக அடுக்கி இருந்தது.. இப்படி அவன் நேர்த்தியும் சில இடங்களில் தெரிந்தது. 

மற்றபடி.. அவனின் மற்ற ஆடைகள் எல்லாம் களைந்து, சுருட்டி.. எதோ ஒரு மூலையில் சொருகிதான் இருந்தது. ஆனால், ஏதும் அந்த அறை இறைந்து சிதறி கிடைக்கவில்லை.. நினைவுகளால் சூழ்ந்து ஒளியிழந்து இல்லை.. துடைத்து.. சுத்தமாக இருந்தது.. அந்த அறையை பயன்படுத்தி மூன்று மாதங்கள் ஆகிறது. ம்.. உடுப்புகள் வைக்கவும் குளித்து கிளம்பவும்தான் அந்த அறை.. மற்றபடி உறக்கம்.. ஓய்விற்கு எல்லாம் அவன் இப்போதெல்லாம் ஹால் நோக்கி சென்றுவிடுகிறான்.

இவனின் ப்ளாட்டில் மூன்று அறைகள். அதிலும் அவனின் மாஸ்ட்டர் பெட்ரூம் பெரியது.. பால்கனியில் இருந்து பார்க்கும் போது அந்த வளாகத்தில் இருந்த சின்ன கோவில் அவன் கண்ணில் தென்பட்டது. அதைத்தாண்டி எல்லாம் கட்டிடங்களும் வாகனங்களும்தான்.. தெரிந்தது. 

கெளரிக்கு, அமைதியை விட இந்த பரபரப்பு பிடிக்கும். ம்.. இத்தனை நாட்கள் இந்த பரபரப்பும் சத்தமும் இறைச்சலும்.. கொண்டாட்டமும் பிடிக்கவே செய்ததது.. அவனுக்கு, இந்த மெக்கானிக் லைப் மேல் அவனின் மோகம் அதிகம்தான் மூன்று மாதம் முன்புவரை.. காலையில் எழுந்து பரபரப்பாக அம்சமாக கிளம்பி அலுவகலம் செல்லுவான் காரில். அந்த இடத்திலும் எப்போதும் பரபரப்பு.. சுற்றிலும் நூற்று கணக்கில் தன் சகாக்களோடு வேலை. இடையில், தோன்றும் போது எதோ உணவு.. தேவையான நேரம் காபி.. கூல் ட்ரிங்க்ஸ்.. சிப்ஸ்.. மாலையில் வீடு கிளம்பும் போது.. எது முடிந்தது எது முடியவில்லை என குறிபெடுத்துக் கொண்டு அதே மனநிலையில் வீடு வருவது. விடிய விடிய.. விட்டு தொட்ட வேலையை லாப்பில் அமர்ந்து பார்ப்பது. இடையில் அத்தனை கால்ஸ் வேறு. வார விடுமுறையில் பப்.. ப்ரெண்ட்ஸ்.. என சென்ற அவன் நாட்களில்தான்.. தன்யா என ஒரு பெண் அவனின் வாழ்வில் வந்தாள். 

நட்பு என்ற பெயர் சொல்லித்தான் வந்தாள்.. ஒருவாரத்தில் தங்களுக்குள் ஈர்ப்பு இருக்கிறது என இருவரும் ஒத்துக் கொண்டனர். அவளிற்கும் திருமணம் என்ற அமைப்பில் பெரிதாக ஈர்ப்பில்லை. கெளரிக்கு வெளிநாடு சென்று படிக்கும் நேரத்தில் தோன்றியது இந்த திருமணம் என்பது ஒரு கமிட்மென்ட் என. அதனால் அவன் பெரிதாக திருமணம் என்பதை பற்றி யோசிக்கவில்லை. நட்ப்பில் கலந்து பேச பேச.. தங்களின் கொள்கைகள் ஒத்து போக.. இருவரின் மனமும் அதை ஏற்க.. ஆசைகளும் ஒத்து போக.. தடை ஏதும் இல்லையே இளமையை கொண்டாட.. தன்யா கௌரி இருவரும் விருப்பம் போல வாழ்ந்து களித்தனர். அவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் கூட அழகாக மாறியது. அந்த இரண்டு வருடங்களில்.

ஆனால், கெளரியின் பெற்றோர் ஒருநாள் தன் மகனின் வீடு வந்தனர். அன்று தொடங்கிய சண்டைகள் மட்டும் வளர்ந்துக் கொண்டே சென்றது. தன்யா எங்கோ தனக்கு முரணாக மாறுவதாக தோன்றியது கெளரிக்கு. இருவரும் சேர்ந்து அலுவலகத்திலிருந்து வீடு வருவர், ஆனால், ஒருமாதத்தில் அதெல்லாம் தன்யா குறைத்துக் கொண்டாள். இரவில் அதிகம் தோழிகளோடு தங்கிக் கொண்டாள். தன்னோடு செலவிடும் நேரம் குறைந்து போகிற்று.. என தோன்றியது, கெளரிக்கு. அவளை கேள்வி கேட்கவும் கெளரியின் மனம் விரும்பவில்லை.. ஏன் என தெரியவில்லை. எனவே, அவள் விலகி சென்றுவிட்டாள்.

அடுத்து, மூன்று மாதம் அவனுக்கு தனிமைதான். ஆனால், தன்யா நிறைய பாதித்திருந்தால் அவனை எனவே, உறக்கம் தொலைத்தான்.. வேளையில் கவனம் சிதறினான். அவனுக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வு கூட தள்ளி போனது. 

கௌரிசங்கர், திண்டாடி போனான்.. அப்போது தன்னை புதுபித்துக் கொள்ள.. ஜிம் சென்றான்.. நேரம் காலம் தெரியாமல் அங்கே செலவிட்டான்.. உடல் வலு பெற பெற.. மனமும் வலு கொண்டது அவனுக்கு. அப்படிதான் நம்பினான்.

அந்த நேரம், இவன் எடுத்து செய்த, ஒரு பெரிய ப்ராஜெக்ட் நிறைவடைந்தது அலுவலகத்தில். ஒருவராம் விடுமுறை.. ரிலாக்ஸ்.. என ஏதோ ஹில் ரேசொர்ட் சென்றான். நிம்மதியாக ஓய்வெத்தான்.. ஸ்பா சென்றான்.. தன்னை புதுப்பித்துக் கொண்டு மீண்டும் அதே திமிரோடும் கர்வத்தோடும் அலுவலகம் வந்தான் கௌரி.

அதன்பின் ஆறுமாதம் சென்று  ரித்து.. என்பவளை  தன் வாழ்வினுள் அனுமதித்தான் கௌரி. ஆனால், இந்தமுறை.. எதிலும் லயிக்கவில்லை அவன். தன்னுடைய ஈகோவை மெருக்கேற்றிக் கொள்ள அந்த அழகு பதுமையை தன்னோடு வைத்துக் கொண்டான். ம்.. அப்படிதான் ஆனது. எப்போதும் போல தனக்குண்டான அமைதியில்தான் இருப்பான் கௌரி. ஆனால், அதிகம் பேசினான் ரித்துவிடம். என்னமோ தன்னை பற்றி தானாகவே அதிகம் பேசினான். அந்த பெண்ணும் கெளரியின் பேச்சில், அவனின் ஆர்பாட்டத்தில்.. ஈர்ப்பு கொண்டாள். அடிக்கடி அவளை தன் வீட்டிற்கு அழைத்தான்.. ஆனால், தன்னோடு தங்க வைத்துக் கொள்ளவில்லை. ரித்துவிற்கு, கெளரியின் இயல்பு பிடித்து போக.. கல்யாணம் செய்துக்கலாம் என கேட்க.. அன்று தொடங்கியது அவனின் எரிச்சல்.. சண்டை எல்லாம். ரித்து, அழுது.. கெஞ்சி பார்த்தாள்.. ஒருகட்டத்தில் இவன் கல்மனம் கொண்டவன் என புரிய விலகி சென்றுவிட்டாள்.

கெளரிக்கு, எந்த வருத்தமும் இல்லை பாதிப்பும் இல்லை.. விட்டது தொல்லை என இருந்தான்.. நிம்மதியாக.

ஆனால், இப்போதெல்லாம் என்னமோ ஒரு குறை.. தனிமை அவனை துரத்துவதாக அடிக்கடி தோன்ற தொங்குகிறது அவனுக்கு. அதனால், அதிகமாக வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.. கேளிக்கைகளில் ஆர்வம் காட்டினான்.. பெட்ஸ் வாங்கி வளர்த்தான்.. ஜிம் சென்றான் மீண்டும்.. நண்பர்களுடன் வெளியே சென்றான்.. அதிகமாக. ஆனாலும், வெறுமை அவனை அடிக்கடி சூழ்ந்துக் கொள்கிறது. 

கௌரி எதையோ தேடும் நேரம்.. அவனின் அன்னை அவ்வபோது அழைத்து பேச தொடங்கவும்தான்.. தானாகவே வந்து சேர்ந்தான் தன் வீட்டுக்கு. மதம் கடந்த யானை.. பாகன், கட்டுபாட்டில் தானாக வரும் நேரம்.. பாகன் தன் அன்பு என்னும் அதிகாரத்தை காட்ட.. மீண்டும் அந்த யானை.. மிரளுகிறது.. மிரட்டுகிறது.. பாகனை.

கௌரி, இப்போது அதே அழுக்கு டவலோடு குளித்து வந்திருந்தான். ஓவனின் ஒரு கப் தண்ணீர் வைத்து.. சூடு செய்தான்.. பின் கிரீன் டீ பாக் ஒன்று எடுத்து அதில் போட்டு கலக்கி.. குடித்துக் கொண்டே.. ஆர்டர் செய்தான் உணவுகளை.  

தன் அம்மாவின் முகம் மனதில் வந்தது, கௌரி, அவர்களை நினைக்க எண்ணவில்லை.. எழுந்து பால்கனிக்கு சென்றான். 

!@!@!@!@!@!@!@!@!@!@!

சுகுமாரிக்கு, உடல் நலம்பெற.. ஒருவாரம் ஆனது. ம்.. சுகுமாரிக்கு, மகன் அன்றே ஊருக்கு சென்றது இன்னமும் அவரை பாதிக்க.. அன்னை ஏங்கி போனார் போல.. எழவேயில்லை அன்று முழுவதும். ரத்தினம் அன்றே மருத்துவமனைக்கு கூட்டி சென்றார் மனைவியை. அப்போதுதான் இயல்பாகினார் சுகுமாரி.

இது சாகம்பரிக்கு தெரியாது. ஒருவராமாக அழைக்கவில்லை எனவும், சஹா, மித்துவை பள்ளியில் விட்டு விட்டு.. நேரே வீடு வந்தாள் இன்று.

ரத்தினம் சஹாவை வரவேற்று.. பேசிக் கொண்டிருந்தார்.. சுகுமாரி வந்து நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தார்.

சஹா “என்ன ஆன்ட்டி, இவ்வளோ நடந்திருக்கு அங்கிள் எனக்கு சொல்லவேயில்லை..” என குறைபாட்டால் பெண்.

சுகுமாரி “நான்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அன்றுதான், மித்து வீட்டிலிருந்து வந்துட்டு போனாங்கன்னு.. தனா அண்ணா சொன்னார், அதான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்” என்றார்.

சாகம்பரி அமைதியாகிவிட்டாள்.

ரத்தினம் “அடி இவ ஒருத்தி எப்போதும் வேண்டாததை பற்றியே பேசுறது. பாரு அவ பீல் பண்றா.. நீ போய் நேற்று செய்த தேங்காய் பர்ஃபி  எடுத்து வா” என்றார்.

சுகுமாரி “சாரி டா.. சஹா” என்றார் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

சாகம்பரி “ஆன்ட்டி, அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல, நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க பர்ஃப்பி செய்தீங்களா.. கொடுங்க..” என்றாள்.. இயல்பான குரலில்.

ரத்தினம் “இங்க பாரு டா.. புதுசா ஒரு செடி வாங்கியிருக்கா உங்க ஆன்ட்டி. இங்க வா..” என, சஹாவை வீட்டின் பக்கவாட்டிற்கு கூட்டி சென்றார் ரத்தினம். 

சின்னதாக ஒரு தொட்டியில் பக்கு மரத்தின் கீழே.. ஒரு செடி இருந்தது. 

ரத்தினம் “இது மிளகு கொடி. நர்ஸரியில் சொல்லி வைத்து சுகு, இதை வாங்கி வந்திருக்கா.. இந்த மிளகை வைச்சிதான் எனக்கு ரசமாம்..” என்றார், அருகே வரும் மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே கிண்டலாக.

சுகுமாரி “ம்.. அப்படிதான், அதுவரை எங்க வீட்டில் ரசம் இல்லை.. சஹா” என்றார்.

சாகம்பரி “அப்போ சீரக செடியும் வாங்குங்க ஆன்ட்டி அப்போதான் ரசம் நல்லா இருக்கும்” என எடுத்து கொடுத்தாள்.

சுகுமாரி “ம்.. அப்போ அடுத்த வருடம் வரை.. ரசம் வைக்க வேண்டாம்” என சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டு.. கீரையை பறிக்க தொடங்கினார்.

ரத்தினமும் “ஆமாம் போ.. இப்படி செடியா வாங்கி வைச்சி, நீ பார்க்கறதே இல்லை.. எல்லாத்துக்கும் நான்தான் தண்ணீர் விடுறேன் சுகு. அதனால் நீ பாதுகாக்கிற மாதிரி இருந்தால் செடி வாங்கு.. இல்லை, என்னை விட்டுடு” என்றார்.

 

Advertisement