Advertisement

சஹா, “நைட் எங்க வீட்டுக்கு போயிடுவோம் அம்மா.. மோர்னிங் பெங்களூர் கிளம்பிடுவோம்.. நாளையிலிருந்து மித்து ஸ்கூல் போகணும்.. ஈவ்னிங் பெங்களூர் போயிவிட்டால் சரியா இருக்கும்..” என நீண்ட விளக்கம் கொடுத்தாள்.

பிருந்தா எல்லாம் கேட்டுக் கொண்டு… பெண்ணுக்கு பொருட்களை பேக் செய்ய தொடங்கினார்.

இரவு உணவு முடித்து.. எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர் கெளரியின் குடும்பம். 

இங்கே கெளரியின் வீடு வந்து, சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின் மித்ரன் உறங்க தொடங்கிவிட்டான்.. ஹாலிலேயே. எனவே, சஹா, அவனை கூட்டிக் கொண்டு மேலே சென்றாள். சுகுமாரியும் கௌரியும் அமர்ந்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

கௌரி மேலே வரும் போது, சஹா.. எதோ துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டிருந்தாள்.

கௌரி, தங்களின் அறைக்கு சென்று.. உடைமாற்றி.. பிரெஷ்ஷாகி வந்தான் “என்ன மேடம்.. இப்போ வாஷ் பண்றீங்க” என்றான்.

சஹா “இதெல்லாம் இங்கேயே வைக்க வேண்டிய ட்ரெஸ்சஸ் அதான்.” என சொல்லி வந்து அமர்ந்தாள்.. கீழே, பாக்.. உடைகள்.. என வைத்திருந்தாள். எனவே, அதனை எடுத்து அடுக்க வேண்டும். எனவே கீழே அமர்ந்தாள் சாகம்பரி.

கௌரி லாப்டாப் எடுத்து வந்தான்.. ஹாலில் சார்ஜ் போட்டு தன் மனையாளின் எதிரில் அமர்ந்துக் கொண்டான். இன்று விடுமுறை எடுத்திருந்தான் அதனால், லாகின் செய்யவில்லை காலையிலிருந்து. இப்போதுதான் லாகின் செய்கிறான். எனவே, பத்துநிமிடம் ஏதும் பேசவில்லை கௌரி.

அதன்பின் “எத்தனை மணிக்கு கிளம்பலாம்..” என தொடங்கினான். சஹா பதில் சொல்லத் தொடங்கினாள். இப்படியே இருவரும் இரவு ஒருமணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.

கௌரி “அப்பாவோடு ஷஷ்டியப்த பூர்த்தியும் இன்னும் ரெண்டு மாசத்தில் வருதாம்.. அம்மா சொன்னாங்க” என தன் அன்னை சொல்லிய செய்தியையும் சொல்லி.. “காலையில் அம்மா அப்பாகிட்ட ஒரு வார்த்தை மேலோட்டமாக எப்படி செய்யலாம்.. என்னான்னு கேட்டுட்டு போயிடலாம்” என்றான் பொறுப்பாக.

மனையாளும் தலையசைத்தாள். கௌரி இப்போது லாப்டாப் எடுத்து வைத்து.. வந்தான், தன்னவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.. சஹா “தூங்க வேண்டாமா.. காலையில் டிரைவ் பண்ணனும்” என்றாள்.

கௌரி “ம்..” என சொல்லி, அவளின் கைகளை எடுத்து.. தன் சிகையில் வைத்துக் கொண்டான். சஹாவும் ஏதும் பேசாமல்.. அவனின் பட்டு போன்ற கேசத்தை வருட தொங்கினாள்.

கௌரி “நாளைக்கு பத்துமணிக்கு மீட்டிங் இருக்கு. அதை முடிச்சிட்டுதான் கிளம்பனும்..” என்றான்.

சஹா “ம்.. லேட்தான் ஆகிடும்” என்றாள்.

கௌரி “பரவாயில்லை..” என அவளின் வயிற்றை தன் முகத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டு.. அதில் முத்தம் வைத்தான்.

சஹா கணவனின் செய்கையில்.. அவனின் சிகையை கொத்தாக பிடிக்க.. கௌரி “அ.. விடுடி.. மினுக்கி” என்றான் செல்லமாக.

சஹா பிடித்துக் கொண்டாள் சண்டைக்கு.. மீண்டும் மாலையில் சொன்னதை ஒருமுறை ஆரம்பிக்க.. கௌரி “போதும் போதும்.. “ என அவளின் பின்கழுத்தில் கை கொடுத்து தன் முகத்தருகே வளைத்துக் கொண்டான் கணவன்.

சஹா, இதழ் மலர்ந்து.. கண்களை மூடிக் கொள்ள.. கௌரி, சஹாசங்கர் ஆக தொடங்கினான். அவனின் பேச்சுகளில் இருக்கும் இறுக்கம்.. மனையாளின் மலரிதழ்களை நாடியது தணிந்து மகிழ்ந்தது. இருவரும் தங்களை தாங்களே மறக்க தொடங்கினர். 

ஆகிற்று திருமணம் முடிந்து பத்து மாதங்கள்  ஆகிறது. இருவருக்கும் இதே போன்ற இதமான மனநிலைதான். நேரம் கிடைக்கும் போதெல்லாம்  சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை.. அதேபோல, நேசத்திற்கும் பஞ்சமில்லை.  சஹாவின் வாழ்வில் வரமாக வந்தவன் மித்ரன்.. ம்.. அந்த வரத்தால் தான்.. கௌரி கிடைத்தான். கெளரியின் வாழ்விலும் அதே வரமாக வந்தது மித்ரன்தான்.. ம்.. அந்த குழந்தையை அவள் ஏற்றதால்தான் சஹாவையே பிடித்தது. ஆக, இருவரும் வரங்களை முதலில் கையில் வைத்திருந்தனர். இது ‘வரம்தான்’ என உணர.. இந்த தவநாட்கள் அவர்களுக்கு தேவையாக இருந்தது. ஆக.. அடுத்த வரத்தை தேட தொங்கிவிட்டனர் இருவரும்.

!@@!@!@!@!@!@!@!@!

பத்து வருடங்கள் சென்று..

கௌரி, ஹாலில் அமர்ந்து லாப் பார்த்துக் கொண்டே தன்னுடைய சாக்ஸ் அணிந்துக் கொண்டிருந்தான். எதிரில் லாப்டாப்.

சஹா கிட்செனில் ‘இன்னும் நாலு கை கொடு ஆண்டவா’ என வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

மித்ரன்.. தன்னுடைய அறையில் தன்னுடைய யூனிப்போர்ம் அணிந்துக் கொண்டு.. கண்ணடியின் முன் நின்றுக் கொண்டிருந்தான். வீடே காலை நேர பரபரப்பில் இருந்தது.

அப்போதுதான் வீட்டின் இளவரசி வந்தாள்.. புல் நைட் ட்ரெஸ்சில் இருந்தாள்.. சின்ன நடையிட்டு.. தன் மித்ரன் அண்ணன் இருக்கும் அறைக்கு குடுகுடுவென ஓடி வந்து நின்றது.. “மித்தா.. நானும் ச்சூல்க்கு” என வந்து நின்றது அவனின் முன்.

மித்ரன் தன் தங்கையை வாரி எடுத்துக் கொண்டான்.. “பரெஷ் செய்துட்டியா” என்றான்.

அந்த ப்ரக்யா பாப்பா இப்போது அண்ணனின் தோளில் சாய்ந்துக் கொண்டு “ம்.. நானு ஸ்க்க்கு..க்கு” என்றாள்.

நான்கு வயதை அடுத்த மாதம் தொடும் குட்டி நிலவு.. இளவரசி.. பார்பி.. என பட்டபெயர்களை கொண்ட ப்ரக்யா குட்டி இவள். அண்ணனோடு ஹாலுக்கு வந்தாள்.

இப்போது, வில்லா மாடலில்  வீடு வாங்கியிருந்தான் கௌரிசங்கர். எனவே, மித்ரன் மேல் அறையில் இருந்தான்.. அதற்கு எதிர் அறையில் கௌரி சஹா.. பிள்ளைகளோடு இருக்கின்றனர். கீழும் இரண்டு அறைகள்.. ஒன்று அலுவலக அறையாக பாவிக்கிறான் கௌரி.

மித்ரன் இப்போது வளர்ந்து அரும்பு மீசையோடு.. பதினோராம் வகுப்பு செல்லுகிறான். 

காலங்கள் சஹாசங்கர் வாழ்வில் இருந்த சிலபல உறவுகளை எடுத்துக் கொண்டிருந்துவிட்டது. எனவே, முன்போல யாரும் வந்து செல்ல முடிவதில்லை. அத்தோடு கௌரி, இந்தியாவில் இருப்பதே நான்கு மாதம் என்ற நிலை.. மற்ற எட்டு மாதங்களும் அவன் வெளிநாடு வாசம்தான். எனவே, பாதுகாப்பான ஒரு இடத்தில் தன் குடும்பத்தை வைத்திருக்கிறான்.

மித்ரன் இப்போது கீழே வந்தான் தங்கையோடு.. சஹா, டிபன் எடுத்து டேபிளில் வைத்தாள்.. கெளரிக்கு இட்லி.. ப்ரக்யாக்கு இட்லி.. மித்ரனுக்கு சான்வெஜ், அதைவிட ஒருவன்  இருக்கிறான் ரவுடி பிரசன்னா. ம்.. கௌரி சஹாவின் சீமந்த புத்ரன் சாய்ப்ரசன்னா. நான்காம் வகுப்பு படிக்கிறான். அவனின் விருப்பம் எல்லாம் அவன் எண்ணமே. யாரும் எதையேனும் செய் என்றால்.. ம்கூம். இப்போது, வருவான்.. சஹா, கேட்டுதான் அவனுக்கு உணவு எடுத்து வைப்பாள். அன்னையாக ஏதேனும் எடுத்து வைத்துவிட்டால்.. ஒத்துக் கொள்ளமாட்டான். ‘எனக்கு இந்த இட்லி கலர் பிடிக்கலை என்பான். சாம்பார் இப்படி இருக்காது’ என சாதிப்பான். என்னமோ கெளரியின் சாயல் அவனிடம் அதிகம் தெரிவதாக தோன்றும் சஹாவிற்கு. அதனால், அவனை கவனமாக கையாளுகிறாள் அன்னை.

 

Advertisement