Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..

20

விழா முடிந்ததும் எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். கௌரி தன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். இப்போதெல்லாம் சஹா இருக்குமிடத்தில் தன்னை பொருத்திக் கொள்கிறான். எல்லோரும் சற்று நேரம் உறங்கினர்.

மாலையில் எல்லோரும் விடைபெற்று கிளம்பியிருக்க.. சஹா, தன் அன்னையோடு.. புடவைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

தனபால் தோட்டத்தை வலம்வர சென்றிருந்தார். மித்ரன் மினுக்கிக்கான உணவோடு.. வாசலில் காத்திருந்தான். 

கௌரி, அப்போதுதான் உறங்கி எழுந்து சோபாவில் அமர்ந்திருந்தான். தன் போனை பார்த்துக் கொண்டிருந்தான். 

மித்ரன் “ஹேய்… மினுக்கி.. என்ன, ஹாப்பியா.. ஏன் நேற்று வரலை.. “ என பேசிக் கொண்டே.. அளவான இடைவெளிவிட்டு.. அதற்கான உணவை கீழே தூவிக் கொண்டிருந்தான்.

கௌரிக்கு இந்த சத்தம் கேட்க்க.. ‘யாரு!’ என திரும்பி பார்த்தான்.. யாரையும் காணோம்.. நன்றாக எழுந்து நின்று பார்க்க.. மித்ரன் சுற்றி சுற்றி இன்னும் பேசிக் கொண்டிருக்க.. அவன் தூவிய உணவுகளை தின்றுக் கொண்டே.. தன் நீண்ட கழுத்தை அடிக்கடி நிமிர்த்தி பார்த்துக் கொண்டே.. அவன் பின்னோடு சென்றுக் கொண்டிருந்தது.. மித்ரனின் மினுக்கி.

கௌரி என்னமோ அதிசயத்தை பார்த்தது போல.. எழுந்து மெதுவாக சென்றான் போர்ட்டிகோவிற்கு. சத்தமில்லாமல்தான் சென்றான்.. ஆனாலும், அந்த மினுக்கி.. யாரோ வருவதை உணர்ந்து தன் பெரிய தொகையை சட சடவென.. வாரி சுருட்டிக் கொண்டு பறந்து மதில்மேல் அமர்ந்துக் கொண்டது.

மித்ரன், தன் சித்தப்பாவின் வரவை இப்போதுதான் உணர்ந்தான். அதனால்தான் மினுக்கி பறந்துவிட்டது  என உணர்ந்து “மினுக்கி.. அது சித்தப்பா.. சஹாவோடு ஹஸ்பன்ட்.. நீ சாப்பிடு.. ஒன்னும் பண்ணமாட்டார்” என பேசிக் கொண்டே.. கையில் தாணியத்தை ஏந்திக் கொண்டே.. அது அமர்ந்திருந்த மதில் சுவரை நோக்கி சென்றான். 

அந்த மினுக்கியும் சிறுவனை கண்டு பறக்காமல் அப்படியே அமர்ந்து சுற்றியும் பார்த்து.. சிறுவனையும் பார்க்க தொடங்கியது.

கெளரிக்கு, இன்னும் ஆச்சர்யம்.. தன் போனில் கேமராவை ஆன் செய்து வைத்துக் கொண்டான்.. நிமிடங்கள் கடக்க.. அழகாக.. மினுக்கி கீழே பறந்தது வந்து மித்ரனின் அருகில் நின்றது.. அவனின் கையில் இருக்கும் தாணியத்தை தன் அலகால் கொத்தி கொத்தி உண்ணத் தொடங்கியது.

மித்ரன் நான்காம் முறை.. மினுக்கி கொத்தி கொத்தி தின்னவும்.. நெளிந்தான்.. “ஊ.. ஆ.. வலிக்குது.. கீழ போடுறேன்” என சொல்லி கீழே தானியங்களை இறைத்தான். மீண்டும் அவனின் பேச்சு தொடர்ந்தது.. அந்த மினுக்கியும்.. அவன் பின்னோடு சென்றது.

அந்த கபடமில்லா நட்பை கலைக்காமல், தூரமாக நின்றுக் கொண்டு சத்தமில்லாமல் கவனமாக படமெடுத்தான் கௌரி.

சற்று நேரம் சென்று.. மித்ரன் உணவுகளை போட்டுவிட்டு அமர.. அதுவும் உண்டு பறந்து சென்றது.

கௌரி “டேய்.. என்ன டா.. நீ எல்லோரையும் பிரென்ட்டாக்கி வைச்சிருக்க..” என மித்ரனின் தோளில் கை போட்டுக் கொண்டு அமர்ந்தான்.

மித்ரனும் பெரிய மனிதனாக “எஸ்.. நான் மித்ரன் சித்தப்பா..” என சொல்லி சிரித்தான்.

கௌரி அப்படியே அவனை தூக்கி தன் தோள் மேல் ஏற்றிக் கொண்டவன்.. “எவ்வளோ பேசற நீயு.. ஓவர் டா” என சொல்லி மீண்டும் தன் வலிய புஜத்தால் மித்ரனை சுழற்றிக கொண்டே எழுந்தவன்.. இத்தனை நேரம்.. மினுக்கி அமர்ந்திருந்த மதில் மேல்.. மித்ரனை அமர்த்தினான்.. “கூப்பிடுடா.. என் மினுக்கிய.. காபி கூட கொடுக்கலை எனக்கு.. என்னான்னு கேளுடா..” என்றான்.

மித்ரன் “மினுக்கி காபி எல்லாம் கொடுக்காது சித்தப்பா.. மயிலிறகுதான் கொடுக்கும்” என்றான்.

கௌரி மித்ரனை பார்த்து “ம்கூம்.. அந்த மினுக்கி இல்லடா.. இது என் மினுக்கி.. கூப்பிடுறா உங்க அம்மாவை.. எனக்கு காபி கொடுக்காமல் என்ன பண்றான்னு கேளுடா” என்றான்.

மித்ரன் “சஹா மினுக்கி.. சஹா மினுக்கி” என அழைக்க தொடங்கினான்.

என்னமோ சத்தம் கேட்டகவில்லை போல சஹாவை காணவில்லை. இப்போது மித்ரனை, மதிலிலிருந்து இறக்கி விட்டான் கௌரி.

மித்ரன் “சஹா மினுக்கி.. மினுக்கி” என அழைத்துக் கொண்டே போர்ட்டிக்கோ தாண்டி.. ஹால் வந்தனர் இருவரும்.

சஹாவின் காதுகளிலும்.. பிருந்தாவின் காதுகளிலும் மித்ரனின் அழைப்பு எட்டியது இப்போதுதான். 

சஹாக்கு முதலில் யோசனை.. மினுக்கிதான் வந்திருக்கு.. அதான் ஓடுகிறான் என எண்ணினாள்.. ஆனால், ‘சஹா மினுக்கி’ என கேட்கவும் கொஞ்சம் கோவம் வந்துவிட்டது பெண்ணுக்கு.. தன் அம்மாவிடம்  “அம்மா, மித்துக்கு வாய் ஜாஸ்த்தியா போச்சு..” என கோவமாக எழுந்து வெளியே வந்தாள்.

பிருந்தா எல்லோருக்கும் காபி கலப்பதற்காக கிட்சென் சென்றார்.

சஹா மித்ரனை முறைத்துக் கொண்டே  “டேய்.. என்ன, யாரு மித்து.. என்ன பேசற.. நீ” என கோவமாக கேட்க்க.

கௌரி முகத்தை சீரியஸ்சாக வைத்துக் கொண்டு என்ன என்பதாக மனைவியை பார்க்க.. 

மித்ரன் “சித்தப்பா, மினுக்கி” என கம்ப்ஃலைன்ட் சொல்லும் விதமாக விரல் நீட்டினான் மகன்.

சஹா “டேய் என்ன பேசற..” என அதட்ட தொடங்கிவிட்டாள்.

மித்ரன் உடனேயே பயந்துவிட்டான் “சித்தப்பாதான்.. நீ மினுக்கி சொன்னாங்க” என்றான்.

கௌரி தன்னகுள் சிரித்துக் கொண்டே “ம்.. பாருடா.. கோவத்தில் கூட மினுமினுக்கிறா.. அதான் மினுக்கி சொன்னேன்.. நல்லா இருக்கு இல்ல டா, எனக்கு இப்படி பேர் வைக்கலாம்ன்னு.. இப்போதான் தெரியும்.. பாரேன்.. இந்த குட்டிக்கு தெரிந்திருக்கு.. எனக்கு தெரியலை..”  என, மனையாளின் கன்னம் தொட்டான் ரசனையாக கணவன்.

சஹா “ஐயோ.. வாயை மூடுங்க..” என்றாள் பார்வையால் கணவனை எரித்துக் கொண்டே. பின் “அறிவே இல்லை.. மட்டு மாரியாதையே இருப்பதில்லை.. எல்லாத்தையும் எங்கையும் உளற வேண்டியது..” என கணவனை சத்தமில்லாமல் திட்டினாள்.

மித்ரனிடம் “அப்படி சொல்ல கூடாது.. இனி சொன்னால்.. உனக்கும் சித்தப்பா இரண்டு பேருக்கும் அடி விழும்.. புரியுதா” என்றாள் மிரட்டலான குரலில்.

மித்ரன் தன் சித்தப்பாவை நிமிர்ந்து பார்த்தான்.. ஏதேனும் சொல்லுவார்.. சஹாவை என. ம்கூம்.. சித்தப்பா எப்போதும் போல அமைதியாக நிற்க.. முறைக்கும் சஹாவை பாவமாக பார்த்த குழந்தை “சொல்லமாட்டேன்” என்றவன் அங்கிருந்து ஓடியேவிட்டான். போய் வாசலில் நின்றான்.

கெளரியிடம், சஹா பொரிய தொடங்கினாள்  “அவனை வைச்சிகிட்டு என்ன பேசறோம்ன்னு தெரியாதா.. அம்மாவேற இருக்காங்க.. எல்லாத்தையும் எங்கையும் பேசிட வேண்டியது..” என சின்ன குரலில் கடிய தொடங்கினாள்.

கௌரி “சரி சரி.. விடு..” என அவளின் உச்சி தொட்டு சமாதானம் செய்தான். 

இப்போது பிருந்தா காபியோடடு வந்தார்.. கௌரி அதுவரை அவளிடமிருந்து கையை எடுக்கவில்லை.. மனையாள் அவசரமாக விலகிக் கொண்டாள்.. தன் அன்னையின் வரவை பார்த்து. கௌரி அமைதியாக அமர்ந்தான்.

பிருந்தா, மித்ரனை அழைத்து பூஸ்ட் கொடுத்தார்.. நால்வரும் அமர்ந்து காபியை  பருக தொடங்கினர். அன்னை பொதுவாக கேட்டுக் கொண்டிருந்தார் “எப்போ கிளம்பனும்” என்றார்.

Advertisement