Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..

17

கௌரி, பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றான்.. அக்கறையாக “ஏன் இன்னும் சாரியிலேயே இருக்க, சேஞ்ச் செய்துக்கலாமில்ல.. வீட்டில் இருக்கும் போது ஏதாவது நைட் டிரஸ் போட்டுக்கலாமில்ல.. ம்..” என்றான்.

சாகம்பரி “இல்ல, இதுவே எனக்கு, கம்போர்ட்டாகத்தான் இருக்கு” என்றாள்.

கௌரி “நான் ஹெல்ப் பண்ணவா” என்றான் கொஞ்சம் தயங்கிய குரலில்.

சிங்க் அருகே நின்றுக் கொடிருந்தவள்.. ‘என்ன அதிசயம்’ என திரும்பி பார்த்தாள் கணவனை.. கௌரி பக்கவாட்டில் இருக்கும் சமையலறை மேடையில் சாய்ந்து நின்றுக் கொண்டு, கையை கட்டிக் கொண்டிருந்தான் ‘சும்மாதான் கேட்டன்’ என்ற பாவனையில். சஹாவிற்கு புரிந்தது, கணவன் ‘தான்.. ஏதும் பேசவில்லை’ என நிற்கிறான் என புரிந்தது.

சஹா “ம்.. நீங்க அந்த பக்கம் போங்க போதும்” என்றாள், இன்னமும் முகம் மலராமல்.

கௌரி கொஞ்சமாவது தன் மனையாளை இயல்பாக்காமல் செல்ல கூடாது என எண்ணி விளையாட்டாய் “இல்ல, பேச்சு துணைக்கு இருக்கேனே” என்றான். 

சஹா, கணவன் எதிர்பார்த்த அந்த மலர்ச்சியை இதழகளில் கொண்டு வந்து, புன்னகைத்தாள்.. ‘வேண்டாம்’ என்பதாக.

கௌரி “அப்புறம் உன்னிஷ்ட்டம்” என்றவன், அருகில் இருந்த குவளையில் இருந்த தண்ணீரை, அவளின் பரந்த மென்மையான முதுகில்.. தன் விரல்களால்.. தெளித்துவிட்டு.. சமையலறை விட்டு சென்றான்.

சாகம்பரி, தண்ணீர் பட்ட வேகத்தில் “ஹேய்..” என கணவன் செல்லும் பாதையையே திரும்பி பார்த்தாள்.. மீண்டும் முறைப்பாக.

கௌரி சென்றுக் கொண்டே.. “நீ சிரிக்காத, அப்படியே இரு” என்றபடி தன் அலுவலக பாக் எடுத்தான்.

அதிலிருந்து, தன்னுடைய லாப்டாப் எடுத்து வந்து.. ஹாலில் கீழே அமர்ந்தான், மித்ரனும் சோபாவில் உறங்குவதால்.

சஹா, வேலையை முடித்துக் கொண்டு வந்து.. தன் கணவனின் மேல்..  அவன் செய்தது போல.. இப்போது இவள் தண்ணீர் தெளித்தாள்.

கௌரி, அவளை போல முறைக்கவெல்லாம் இல்லை.. ஆசையாக திரும்பி அவளை பார்த்தான் “என்ன அதிசியம்.. எனக்கு மட்டும் மழை பொழியுது..” என்றான் கிண்டலாக.

சஹா, அவனின் பின் இருந்த சோபாவில் அமர்ந்தாள் ஏதும் பேசவில்லை.. டிவி சேனலை மாற்றினாள்.

கௌரி “இன்னிக்கு என் பிரென்ட் பொன்னுட பர்த்டே பார்ட்டி.. என்னை பாமிலியோட வர சொல்லி இன்வைட் பண்ணினான்.. போலாமா” என்றான்.

சஹா “முன்னாடியே சொல்லல.. ம்..” என்றாள்.

கௌரி “இல்ல, காலையில் சொல்லணும் நினைச்சேன்.. அந்த ஸ்கூல் மேட்டரில் மறந்துட்டேன். அதனால் என்ன போலாமா” என்றான் தன் சிகையை தன் விரல்களால் கலைத்துக் கொண்டே.

சஹா “இல்ல, நான் அப்படி கேட்க்கலை. சும்மாதான் கேட்டேன்” என்றாள் சமாளித்த வண்ணம்.. தன்னவனின் சிகையை முதல்முறை கவனித்தாள். நல்ல அடர்த்தி.. சுருள் சுருளாய்.. சரியாக பிடரிவரை மட்டுமே.. இருந்த சிகையை ரசித்தாள் பெண்.

அவளையும் அறியாமல், சஹா “என்ன ஷாம்பூ போடுவீங்க..” என்று கேட்டேவிட்டாள், அந்த சிகையில் மயங்கி.

கௌரி “ம்.. “ என திரும்பினான், நன்றாக அவளை பார்த்து சிரித்தான். பின் “கேர்ள்ஸ் ஆர் கேர்ள்ஸ்..” என்றான்.. லாப்டாப் பார்த்து திரும்பிக் கொண்டு இப்போது.

சஹா, நாக்கை கடித்துக் கொண்டு சிரித்தாள், ‘ஐயோ இத போய் கேட்டுட்டேனே’ என. அதை அவன் பார்க்கவில்லை.

கௌரி, இப்போது இவளை பார்க்காமல்.. “எனக்கு முடி கொட்டுது.. நீ கை வைச்சி பாரேன், கையேடு வரும்” என அவனும் எதார்த்தமாக சொன்னான்.

சஹாக்கு, நீண்டநாள் ஆசை.. அவனின் இந்த ஜடாமுடியை ஸ்பரிசிக்க.. நம்மை விட இவருக்கு அடர்த்தியாக.. அழகாக இருக்கிறதே என தோன்றியதுண்டு அவளுக்கு. அதனால்,  ஆசையாக அவனின் சிகையில் கை வைத்தாள்.

கௌரியின் உச்சியில் மென்மையாக தீண்டியது அவளின் விரல்கள்.. கௌரி, கண்மூடிக் கொண்டான்.. அந்த ஸ்பரிசத்தில். வரம் தரும்.. ஸ்பரிசமாக அவனை தீண்டியது சஹாவின், விரல்கள்.. அவனின் வெல்வெட் கேசத்தை அளந்தது.. பார்ப்பதற்கு ரஃப்பாக இருந்தாலும்.. பட்டென குழைந்தது அவளின் கைகளில்.. அவளும் தன் கையை எடுக்க மனமில்லாமல்.. தன் இடது கைகளால்.. அவனின் சிகையை வருடினாள்.. “அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை.. சாப்ட்..டா இருக்கு..” என்றாள், அதில் லயித்து.

கௌரி, பதில் சொல்லாமல்.. அவளை பார்க்காமல், அமர்ந்தபடியே..  தனது தலையை அவளின் மடி மீது வைத்துக் கொண்டு பின்னிலிருந்து சாய்ந்து.. கண்களை மூடிக் கொண்டு, உரிமையாய்.

சஹாவிற்கு சின்ன தடுமாற்றத்தில் அவளின் விரல்கள், சற்று ஸ்தம்பித்தது. பின், மீண்டும் அவளின் விரல்கள்.. தன் வேலையை தொடங்கியது.

இரண்டு நிமிடங்களுக்கும் மேல் அமைதி இருவரிடமும்.

கௌரி அதை கலைத்தான் “என்ன நினைக்கிற இந்த நிமிஷம்” என்றான், ஆசையாக.

சஹா “ம்கூம்..” ரசனையாக என்றாள்.

கௌரி “சொல்லேன்.. ஏதாவது.” என்றான், குரல் யாசித்தது அவளை.

சஹா “எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை” என்றாள்.

கௌரி “நாம பேசறதே இல்லை, மீறி பேசினால் மித்ரனுக்காக.. கல்யாணம் ஆகி, நான்கு மாதம் ஆக போகுது.. இன்னும் உனக்கு ஏதும் பேச தோன்றலையா” என்றான்.

சஹா “எ..என்ன பேசணும்” என்றாள்.

கௌரி “உனக்கு என்னை பிடிக்க என்ன செய்யணும்.. இது நானாக எடுத்துக் கொண்ட வாழ்க்கை.. அதனால், கொஞ்சம் பயமாக இருக்கு.. இப்படியே இருந்திடுவோமோன்னு, உனக்கு என்னை பிடிக்காமலே போகிடுமோன்னு..” என்றான், நன்றாக திரும்பி அமர்ந்து அவளை பார்த்தபடி.

சஹா “எனக்கு, அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல” என்றவள் எழுந்துக் கொண்டாள்.

கௌரி மௌனமானான்.

சட்டென அந்த இடம் வெப்பமானது இருவருக்கும்.. சஹா, தங்களின் அறையில் சென்று படுத்துக் கொண்டாள். 

கெளரிக்கு அவளை நெருங்கும் வழி தெரியவில்லை ‘அவள் சொல்லுவதும் சரிதான்’ எனத்தான் தோன்றியது. தன் வேலையை பார்க்க தொடங்கினான்.

மித்ரன் எழுந்துக் கொண்டான்.. சஹாவை தேடி வந்தான் அறைக்கு. ஆக, இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

மாலையை நெருங்க கௌரி இன்னமும் கிளம்பாமல் அமர்ந்திருப்பது பார்த்து, சஹாவே கேட்டாள் “போலாமா எங்கோ பர்த்டே குழந்தைக்குன்னு சொன்னீங்களே” என்றாள்.

கௌரி “ஞாபகம் இருக்கா” என்றான் நக்கலாக.

சஹா “ம்..” என சொல்லிக் கொண்டே.. பால் எடுத்து வைத்தாள் அடுப்பில்.

கௌரி “எப்படி இப்படி பிளான் ஏதும் இல்லாமலே இருக்க.. நான் நீ கிளம்ப மாட்டியோன்னு நினைச்சி வொர்க் எடுத்துட்டேன்” என்றான் சலித்துக் கொண்டு.

மித்ரன் பால்கனி சென்று.. அங்கிருந்த சின்ன செடிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

சஹா “இப்போ என்ன” என கணவனின் அருகில் வந்து நின்றாள்.. முகம் மீண்டும் கடுகடுக்கும் போல இருந்தது. ம்.. அப்படிதான் கெளரிக்கு தெரிந்தது.

கௌரி “போலாம்.. கிளம்புங்க, டைம் இல்ல சீக்கிரம்” என்றான்.

சஹா புன்னகைத்தாள்.. “அஹ அது..” என்றவள் “மித்து, வா.. உங்க சித்தப்பா வெளிய கூட்டி போறாங்களாம்” என்றாள்.

மித்ரன் “என்ன மாம் இப்போ சொல்றீங்க, நானும் ரித்திஷ்ம் விளையாட பிளான் பண்ணியிருந்தோமே” என்றான். இந்த நாட்களில் கீழே கிரௌண்ட்டில் விளையாடும் போது அவனுக்கு கிடைத்த தோழன் ரித்தீஷ். அதை சொன்னான் இப்போது.

சஹா “பெரிய பிளான்.. வாடா” என அழைத்தாள். 

கௌரி, மித்ரன் பேச்சிற்கு “ஆமாம் டா, நம்ம ப்ளானை கொலாப்ஸ் பண்றதே வேலை உங்க அம்மாக்கு” என கட்சி சேர்ந்துக் கொண்டான்.

மித்ரனுக்கு ஏதும் புரியவில்லை, என்றாலும் “உங்க பிளான்னும் ப்ளாப்ஃபா” என்றான் பெரியமனிதனாக.

கௌரி “டேய்.. எப்படி டா.. ஆமாம் ஆமாம்.. எப்போ என்ன சொல்லுவாங்கன்னே தெரியமாட்டேங்குதுடா..” என்றான் சலிப்பாக.

சஹா “மித்து..” என்றாள் மீண்டும் சத்தமாக. 

இப்போது இருவரும், சஹாவை பார்த்துக் கொண்டே  எதோ இரசியமாக பேசிக் கொண்டனர்.. வேண்டுமென்றே. ம்.. மித்ரன் அப்படி சிரித்தான் ஏனென்றே தெரியாமல். கௌரி “சிரிக்காத டா.. இதை உங்க அம்மாகிட்ட சொல்லாத” என்றான் வேண்டுமென்றே.

மித்ரன் “நீங்க ஒண்ணுமே சொல்லலையே” என்றது கள்ளமில்லாமல் குழந்தை.

கௌரி காதிலே விழாதது போல.. “சீக்கிரம் கிளம்பு” என்றான் அதட்டலாக.

சஹா, மித்ரனை கைபிடித்து இழுத்துக் கொண்டு தங்களின் அறைக்கு சென்றாள். அடுத்து பத்து நிமிடம் அவனை பாத்ரூம் போக வைத்து, முகம் கழுவ சொல்லி..  என அவனோடு நின்றாள். அடுத்து அவனுக்கு உடையை எடுத்து வைத்தவள்.. “சரி, இதை போட்டுட்டு வா” என சொல்லி, கிட்சென் வந்து பால் காபி என கலந்துக் கொண்டு.. கணவன் கையில் ஒன்றை கொடுத்தாள். பாலோடு அறைக்கு வந்தாள் பெண். 

மித்ரன் ப்ளாக் அன்ட் வெயிட் நிற உடை. கீழே ப்ளாக் பேன்ட்.. மேலே வெயிட் வித் ப்ளாக் ஸ்ட்டைப் டிசைன் என்றிருந்த உடை. மித்ரன் உடையெல்லாம் போட்டு கொண்டான்.. ஆனால், காலர் சரிசெய்யவில்லை.. பேன்ட் சரியாக இடுப்பில் போடவில்லை. சஹா வந்து அவனின் உடையை சரி செய்துக் கொண்டிருந்தாள்.

கௌரி, உள்ளே வந்தான்.. மித்ரனின் உடையை பார்த்து.. “ப்ளாக் அன்ட் வெயிட்.. ம்.. சூப்பர்” என்றவன் கட்டிலில் அதே போன்ற உடை இன்னொன்று இருக்க.. அதை பார்த்தாலே தெரிந்தது தனக்குத்தான் என.. எனவே இப்போது “டேய், மித்ரா.. எதோ பிளான் பண்ணிட்டாங்கடா” என்றான்.

மித்ரன் கெக்க பிக்கே என சிரிக்கத் தொடங்கினான்.. “யாரு” என்றான்.

கௌரி “என் பொண்டாட்டி டா” என ரகசிய குரலில் சொல்லி.. சஹாவையே பார்த்தான். சஹா, புன்னகையை அடக்கிக் கொண்டு, மித்ரனின் சிகையை வாரிக் கொண்டிருந்தாள்.

மித்ரனும் ரகசிய குரலில்  “என்ன சித்தப்பா.. யாரு” என தன் சித்தப்பாவின் அருகே ஓடி வந்தான்.

கௌரி “உன்னை போலவே எனக்கும் ஷர்ட் டா..” என்றான் கிசுகிசுப்பாக.

மித்ரன் “ம்.. அம்மா கொடுத்தாளா” என்றான், ரகசிய குரலில்.

கௌரி “ம்..” என்றான் பாவனையாக.

சஹா “மணியாச்சு, நான் அந்த ரூம் போறேன்” என்றவள் தன் உடையோடு மற்றொரு அறைக்கு சென்று கிளம்ப தொடங்கினாள்.

மித்ரன் கெளரியை விடுத்து “மாம்.. நான் ரித்தீஷ் கிட்ட சொல்லிட்டு வந்திடுறேன்” என அனுமதி வாங்கினான்.

கௌரி “நாம போகும் போது சொல்லிக்கலாம்” என்றான்.

சஹாவும் அந்த அறைவிட்டு சென்றாள். மித்ரன் டிவி பார்க்க சென்றான்.

மூவரும் பரபரப்பாக கிளம்பி வெளியே வந்தனர். சஹா, அழகான ப்ளாக் நிற நெட்டட் சரீ.. கௌரி பார்த்ததும் “ம்.. “ என மெச்சுதலாக புருவம் உயர்த்தினான் ஆசையாக வாய் பேசாமல் அவளை ரசித்தான். சஹாவின் உதடுகள் புனகைத்து அதை ஏற்றுக் கொண்டது. கௌரி “போலாமா” என்றான்.

 

Advertisement