Advertisement

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..

16

இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது எதையோ நினைத்துக் கொண்டே ஒருமாதிரி தடுமாற்றத்தில் இருந்தது. எனவே, நகம் கடிக்காத குறையாக காத்துக் கொண்டிருந்தான் தன்னவளின் வரவிற்காக.

இரவு உணவு முடித்து.. எல்லாம் எடுத்து வைத்து.. பெரியவர்களுக்கு உதவிதான்.. தங்களின் அறைக்கு வந்தாள், சாகம்பரி.

மித்ரன் உறங்கியிருந்தான். சஹா, விளக்கை போடாமல் டிவி ஒளிர்ந்துக் கொண்டிருக்க அதன் வெளிச்சத்தில் கதவை திறந்துக் கொண்டு நின்றாள். அந்த அறையில் இருந்து ரூம் ப்ரெஷ்ஷனர் ஸ்மெல் வந்து அவளை தீண்டியது. மென்மையான ஆர்கிட் ஸ்மெல்.. சஹாவிற்கும் இருந்த குழப்பமான சிந்தனை.. எல்லாவற்றையும் ஒரு நொடி தள்ளி நிறுத்திய வாசம் அது.

பெண்ணவளுக்கு, நிறைய யோசனை.. எத்தனை சமாதானங்கள் செய்துக் கொண்டாலும்.. இந்த அறை.. கடந்த கால அவனின் வாழ்க்கை.. என எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டோம் என இருவரும் எண்ணினாலும்.. திருமணத்தின் முக்கிய அங்கமான இந்த இரவு.. அவனின் வீடு.. அதன் கடந்தகாலம் என்பதை கிரகிக்க பெரிய புரிதல் வேண்டுமே.. அது இன்னும் அவர்களுக்குள்.. அடி எடுத்து வைக்க கூட இல்லையே. எனவே, அந்த அடிக்கான முதல் தடத்தில் இருவரும் நின்றனர் இப்போது. பார்வைகள் கோர்த்துக் கொண்ட நேரம்.. தடுமாற்றம் இன்னும் அதிகமாகியதாக தோன்றியது இருவருக்கும். 

கௌரி, கீழே அமர்ந்திருந்தான்.. லாப்டாப் வைத்துக் கொண்டு. இப்போது, கதவை திறந்துக் கொண்டு அடி எடுத்து வைத்தவளை பார்த்தவன் “வா..” என்றான் தயக்கமாக.. மருந்துக்கும் சிரிப்பில்லை.

சாகம்பரி “ம்..” என்றவள் உள்ளே வந்து ஒரமாக இருந்த கட்டிலை பார்த்தாள். மித்ரன் உறங்கிக் கொண்டிருந்தான்.. கட்டில் பெரிதாக இருந்தது. அந்த அறையும் பெரிதாக இருந்தது. கட்டில் தவிர மூன்று கப்போர்ட் இருந்தது. ஒரே ஒரு டிரெஸ்சிங் டேபிள்.. இவன் கீழே லேப்டாப்போடு அமர்ந்துக் கொண்டிருந்தான்.

சஹா, காட்டன் சல்வார் மாற்றி இருந்தாள்.. பூ.. தாலி.. செயின்.. என இயல்பான அலங்காரம்தான். அமைதியாக அமர்ந்தாள் கெளரியின் அருகில்.

கௌரி “மேலேயே உட்காரேன்..” என்றான்.

சஹா “பரவாயில்லை..” என அமர்ந்தாள்.

என்ன பேசுவது என தெரியவில்லை.. கௌரி “படுத்துக்கோ.. எனக்கு கொஞ்ச நேரமாகும்” என்றான்.

சஹா “ம்..” என்றாள். ஆனால், உறங்க முற்படவில்லை. என்னமோ ஒரு அன்ஈசி பீலிங்.. தன்னிரு கால்களை கட்டிக் கொண்டு.. அமர்ந்துக் கொண்டாள் பெண். என்னமோ யோசனை உள்ளே ஓடியது. மனது எதையோ கேட்க்க எண்ணுகிறது.. ஆனால், முடியவில்லை. அமைதியாக அந்த அறையை நோட்டம்விட்டால்.

தய்னகி என்றாலும், சஹா “வீடு புதுசா இருக்கு” என்றாள்.

கௌரி லாப்டாப் பார்த்துக் கொண்டே “ம்.. மாற்றிவிட்டேன்.. க்.. இங்கே.. கிடைச்சது. லாஸ்ட் வீக்தான் மாற்றினேன்.” என்றான், அவளின் முகம் பார்க்காமல்.

சஹா ஏதும் பதில் சொல்லவில்லை. ஆனால், ஒரு இதம்.. சட்டென அந்த ஆர்கிட் வாசம் போல அவளுள் பரவியது.

கௌரி “எல்லாவற்றையும் மாறிட்டேன்.. புது கப்போர்ட்.. உனக்கு ஒன்னு.. மித்துக்கு ஒன்னு.. எனக்கு ஒன்னு” என்றான்.. இப்போ அவளை பார்த்துக் கொண்டே.

சஹாவிற்கு என்னமோ புரிகிறது.. வீடு மாற்றம்.. திங்க்ஸ் மாற்றம் எல்லாம். ஆனால், அதை அவள் நினைக்க கூடாது என எண்ணுகிறாள், நான் அப்படி நினைக்கிறேன் என கணவனுக்கு தெரியக் கூடாது என ஷனத்தில் எண்ணினாள் பெண். அதனால் பேச்சை மாற்ற எண்ணினாள்.

சஹா “அஹ.. நீங்க எப்போ கிளம்பனும்” என்றாள்.

கௌரி “நாளைக்கு நைட் 3:20 ப்ளைஹ்ட்..” என்றான்.

சஹா “எப்போ வருவீங்க” என்றாள்.

கௌரி “டென் டூ.. பிப்டீன் டேய்ஸ், ம்..” என சொல்லி, அவளையே பார்த்தான்.

சஹா “நாங்க எப்போ வருவது” என்றாள்.

கௌரி “அங்கிருந்து கிளம்பும் போது சொல்றேன்.. அவனுக்கு எக்ஸாம் முடிஞ்சிடுமா” என்றான்.

சஹா “ம்..” என சொல்லி தேதியை சொன்னாள் பெண்.

கௌரி “ம்..” என்றான் பின் “வரியா கீழ போலாம்” என்றான்.

சஹா தலையசைத்தாள்.

மித்ரனுக்கு, தலையணையால் அணை கட்டிவிட்டு.. எழுந்தனர் இருவரும். கௌரி “குளிரும்..” என சொல்லி.. தன்னுடைய கோட் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.

சஹா “எவ்வளோ பெருசா இருக்கு” என்றாள்.

கௌரி “பரவாயில்லை போட்டுக்கோ.. தாங்க முடியாது இந்த குளிர்..” என்றான்.

அவள் அந்த கோட் அணிந்ததும்.. எதோ சோளகொல்லை பொம்மை என இருந்தாள். அவளின் ஸ்லீவ்’வை பட்டும் படாமல்.. இழுத்து இழுத்து சரி செய்தான், கணவன். என்னமோ மின்சாரம் தொட்டு தொட்டு விளையாடும் பாவனையில் பெண் உருகி நின்றாள்.

அவளுக்கு சரியாக இருக்கிறதா என கணவன், ஏற இறங்க பார்த்தான்.. ஆனால், சரியாக இல்லை.. லேசாக சிரித்தான், குடுமிக்காரன்.

சஹா, இருளில் கணவனின் புன்னகையை பார்த்து.. அந்த கோட் கழற்றினாள். தன் ஷால் எடுத்துக் கொண்டாள்.. “ம்.. போலாம்” என்றாள், ஒருமாதி வீம்பாக.

கெளரிக்கு, இன்னும் புன்னகை ஒட்டிக் கொண்டது. அப்படியே சிரித்தபடியே “ம்.. போலாம்” என சொல்லி.. கூட்டி போனான். 

மெதுவாக வாசல் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தனர். கீழே வந்தனர். இந்த இரவிலும் கார்கள் வர போக என மனிதர்கள் நடமாட்டம் இருந்தது, அந்த வளாகத்தில். 

அந்த ப்ளே ஏரியாவில்.. விளக்குள் எல்லாம் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.. இருவரும் நடப்பதற்கு என இருந்த பாதையில் நடக்க தொடங்கினர். மெதுவாக பேச்சுகள் தொடங்கியது. 

மணி 11க்கு மேல்.. இப்போது கௌரி ஒரு புல்லட்டின் சத்தத்தை கேட்டு திரும்பினான்.. தன் மனையாளிடம் “இங்க பாரேன்.. அதோ.. அந்த வண்டியை..” என காட்டினான்.

சஹா, பார்க்கத் தொடங்கினாள். நாற்பது வயது மதிக்க தக்க மனிதர்.. அந்த புல்லட்டில், அந்த வளாகத்தின்  நட்டநடுவே காத்திருந்தார்.

சின்ன பெண்.. ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு படிக்கும் பெண்.. அவரின் பெண் போல.. வந்தாள், தலையெல்லாம் களைந்து.. தூக்க கலக்கதில்தான் வந்தாள்.. கீழே. அழகாக அந்த வண்டியில் ஏறி அமர்ந்தாள்.. ஹெல்மெட் கழற்றி.. முன்புறம் வைத்துக் கொண்ட அவளின் தந்தை, வண்டியை அந்த வளாகத்தை சுற்றி செலுத்தினார். 

கௌரி, தன் மனையாளிடம் “பார்த்தியா இந்த அப்பர்ட்மென்ட்டில்.. இந்த ஒருகாட்சிதான் என்னை அடிக்கடி யோசிக்க வைக்கும்..” என்றான் ஆழ்ந்த குரலில்.

சஹா அமைதியாக கணவனின் வார்த்தைகாக காத்திருந்தாள்..

கௌரி “பாரேன் அந்த பெண்.. அவங்க அப்பாவிற்காக எவ்வளோ நேரம் வெயிட் பண்ணுதுன்னு.” என்றான் ரசனையாக. தொடர்ந்தான் “இது தினமும் நடக்கும். என்ன நேரம்தான் மாறும். என் கண்ணில் ஒரு ஆறு மாசமாக இது படுகிறது. என்னமோ மனது ஆசையாக இந்த காட்சியை தினமும் பார்க்க சொல்லுது. அவங்க அப்பா எந்த நேரம் வந்தாலும் இப்படிதான் இறங்கி கீழே வந்திடுவா.. அந்த குட்டி பொண்ணு. வேற எங்கயும் போகமாட்டாங்க.. இந்த காம்பவுண்ட் தாண்டி.. பாரேன்.. தூக்க கலக்கத்திலேயே ஒரு முத்தம் ஒன்னு கொடுக்கும்..” என்றான். அவன் சொன்னது போல.. வண்டியில் ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்ததும்.. தன் தந்தையை கழுத்தோடு கட்டிக் கொண்டு.. முத்தம் கொடுத்த சிறுமி.. லிப்ட் நோக்கி சென்றாள்.. சாதரணமாக.

ஒரு இருபது நிமிடம் இந்த நிகழ்வு நடந்திருக்கும்.. கௌரி என்னமோ அதை பற்றி.. ஆசையாக சொன்னான்.. கண்களில் என்னமோ ஒளி வந்திருந்தது. இப்போது, சஹாவின் விழிகளும் இமைக்க மறந்தது கணவனை பார்ப்பதில்.

கௌரி அந்த நிகழ்வு முடிந்ததுதான் இயல்பானான்.. தன்னவளை பார்த்தவன் “என்ன.. ஏதும் பேசமாட்டேங்கிற” என்றான்.

சஹா “இல்ல, ஒண்ணுமில்ல..” என்றாள்.

கௌரி “எவ்வளோ அழாகா இருக்குள்ள இந்த பாண்டிங்.. இதைதான் நான் கொஞ்சநாள் புரிஞ்சிக்காம இருந்தேன்.. இப்போவும் சரியாக புரியலைதான். ஆனால், உணர முடியுது.. சொன்னால் நம்ப மாட்ட, நான் எப்படி இருந்தேன் தெரியுமா” என்றான்.

சஹாவிற்குதான் தெரியுமே.. அதனால் பதில் சொல்லவில்லை. 

கௌரி, தன் மனையாளின் அமைதியை பார்த்து அவளுக்கு இந்த பேச்சு, பிடிக்கவில்லை என சுதாரித்தான். இரண்டு நிமிடம் அமைதியானான்.

சஹா “ஏன், என்னாச்சு” என்றாள்.

கௌரி “ஒரேநாளில் பேசிட்டா எப்படி.. ம்..” என்றான். மனையாள் புன்னகைத்தாள்.

கெளரியே மீண்டும் “கொஞ்சநாள் இங்க வந்து நடந்துட்டே இருப்பேன்.. ஏன் நட்க்கிறேன்னே தெரியாது.. அப்படியே நடந்து முடிச்சி.. வேர்க்க விருவிருக்க.. போய் படுத்துடுவேன்.. அப்போதான் தூக்கம் வரும்.. ஆனால், இன்னிக்கு.. மூன் வாக் மாதிரி.. மூன் கூடவே வாக்..” என்றான்.

Advertisement