Advertisement

கெளரிக்கு போனில் அழைப்பு வர.. பேச தொடங்கிவிட்டான். சஹா, மித்ரனை கவனிக்க சென்றாள்.

காலை உணவு முடித்துக் கொண்டு, கிளம்பினர் எல்லோரும் கெளரியின் சித்தப்பா வீட்டிற்கு. கௌரி அதிகமாக போனில் பேசிக் கொண்டே இருந்தான்.

எப்படியோ, அந்த விருந்து நல்ல விதமாக முடிந்தது. புதிதாக திருமணம் முடிந்த தங்கை வந்திருந்தாள்.. சுகுமாரி முறையாக எல்லோரிடமும் சஹாவை, அங்கே நல்ல நாளில் கூட்டி சென்றுவிட்டு வருகிறோம்.. என தகவல் சொன்னார். ஒருதரம் நாம எல்லாம் போகலாம் என்றார்.

கௌரி இரண்டு மணிக்கு “போலாமா ம்மா..” என்றுவிட்டான்.

சுகுமாரி “நீங்க கிளம்புங்க, நாங்க அப்புறம் வருகிறோம்” என சொல்லி மகனோடு இருவரையும் அனுப்பி வைத்தார் சுகுமாரி.

சஹா எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

கௌரி “உங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடலாமா” என்றான்.

சஹா “ம்..” என்றாள்.

மூவரும் சஹாவின் வீட்டுக்கு சென்றனர்.. சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிவிட்டனர். பிருந்தா “மித்து இங்க இருக்கட்டும், ஈவ்னிங் நாங்க கூட்டிக் கொண்டு வருகிறோம்..” என்றார்.

கௌரி “இல்ல, இல்ல.. நானும் கிளம்பிடுவேன்.. அவன் என்கூட இருக்கட்டும்..” என்றுவிட்டான்.

கெளரிக்கு வேலை பிராதனமாக இருக்க.. வீடு வந்ததும்.. உறங்கிக் கொண்டிருந்த மித்ரனோடு, மாடியேறியவன்தான்.. குழந்தையை பெட்டில் விட்டவன், லாப்டாப்போடு அமர்ந்துக் கொண்டான். 

சஹா, கீழே ஹாலில் அமர்ந்துக் கொண்டாள். ‘போனில் தான் சரியாக பேசாததால்தான், தன்னிடம் இப்போது சரியா பேசவில்லையோ இவர்..’ என உள்ளே குடைந்துக் கொண்டிருந்தது, எனவே, தன்னுடைய  முந்தைய பாராமுகம் பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள். ‘காலையில் நான் சரியாதான் பேசினேன்.. அவர்தான் பேசலை..’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள். ‘இப்போது மேலே போய் பேசணுமா.. வேண்டாமா’ என யோசனை. என்ன செய்வது என தெரியவில்லை.. அமைதியாக அப்படியே சாய்ந்த வாக்கில் உறங்கி போனாள் பெண்.

எவ்வளவு நேரம் சென்றதோ.. கௌரி “சாகம்பரி.. சாகம்பரி” என அழைத்தான் சத்தமாக.

அடித்து பிடித்து எழுந்தாள் பெண் “வரேங்க” என்றாள் அமர்ந்துக் கொண்டே.

பின் கிட்சென் சென்று முகம் கழுவிக் கொண்டு.. மேலே சென்றாள்.

கௌரி “எங்க காணோம் உன்னை..” என்றான்.

சஹாவிற்கு ‘அப்பாடா’ என நிம்மதியானது. “சும்மா டிவி பார்த்துட்டு இருந்தேன்” என்றாள்.

பின் கௌரி “என் கபோர்ட்டில்.. ம்.. ப்ளீஸ் என் டிரஸ் கொஞ்சம் எடுத்து வையேன்..” என்றான், அப்படியே அவனின் கவனம் முழுவதும் லாப்பில் தான் இருந்தது.. 

சஹாவிற்கு பின் வேலை சென்றது.. என்ன வேணும் என கப்போர்ட் பார்த்து எடுத்து வைத்தாள்.

சற்று நேரம் சென்று “உன்னோடது மித்ரனோடது ஏதாவது இருந்தால்.. கொடு.. கார் ப்ரீயாகதானே போகுது.. ம்..” என்றான். பின் மீண்டும் லாப்பில் தலையை நுழைத்துக் கொண்டான். 

சஹா “நீங்க உங்கள் ட்ரிப் முடிச்சிட்டே இங்கே வந்திருக்கலாம்..” என்றாள் சம்பந்தமே இல்லாமல்.

கெளரிக்கு சட்டென ஏதும் புரியாமல்.. நிமிர்ந்தான் “என்ன கேட்ட” என்றான்.

சஹா “ம்.. ஒண்ணுமில்ல..” என்றாள்.

கௌரி “என்..ன.. கேட்டாய்..” என்றான் கவனம் அவள் மேலில்லாமல்.

சஹா “ம்..இல்ல ஒண்ணுமில்ல..” என்றுவிட்டால். கெளரிக்கு ஏதும் புரியவில்லை வேலையே பிராதனமாக இருந்தது.

இப்படியே பேசிக் கொண்டு அன்றைய நேரம் சென்றது.

கௌரி, கிளம்பும் போது சஹாவிடம் “சீக்கிரம் வா.. “ என.. அவளின் விரல் பிடித்துக் கொண்டான். சஹா, அமைதியாக நின்றாள்.

சஹாவிற்கு உறக்கமே வரவில்லை.. என்னமோ அவர் பேசவில்லை.. டிரைவ் செய்யும் போது கூப்பிலாமில்ல.. என தோன்றிக் கொண்டே இருந்தது. எப்போதடா விடியும் என பார்த்திருந்தவள்.. ஐந்து மணிக்கு அழைத்துவிட்டாள்.. முதல்முறை கணவனுக்கு.

கௌரி மூணு மணிக்குதான் வந்து சேர்ந்திருந்தான்.. யார் என பார்க்க.. சாகம்பரி என ஒளிர்ந்தது போன் திரை. சந்தோஷமாகவே எடுத்தான் “ஹலோ..” என்றான் கரகரத்தக் குரலில்.

சஹா “ரீச் ஆகிட்டீங்களா” என்றாள்.

கௌரி “ம்.. 3க்கு. நீ தூங்கலை” என்றான்.

சஹா “ம்.. இனிதான் தூங்கனும்” என்றாள்.

கௌரி “ம்..” என்றான்.

சஹா “பை..ய்..” என்றாள், அவனிடமிருந்து ஏதும் சத்தமில்லை. அழைப்பை துண்டித்தாள். நிம்மதியாக உறங்க தொடங்கினர் இருவரும்.

அடுத்த இரண்டு நாளும் சென்றது,

சாகம்பரி.. தன் குடும்பத்தாரோடு பெங்களூர் கிளம்பினாள். காலையில் உண்டு கிளம்பினர். மாலை அங்கே சென்று சேர்ந்துவிட்டனர். கெளரிக்கு முன்னமோ தகவல் சொல்லி இருந்ததால்.. வந்துவிட்டிருந்தான்.

எல்லோரையும் வரவேற்றான். ஷார்ட்ஸ் அணிந்திருந்தான்.. ‘ஒரு போர்மல் உடை கூட இல்லை சுகுமாரி’ முனக தொடங்கினார். ரத்தினம் தன் மனைவி கையை பிடித்தார். அமைதியாகினர் அன்னை.

பெரியவர்கள் முதலில் உள்ளே சென்று.. மணமக்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் வீட்டினுள். 

தனபால் ரத்தினம் இருவரும்.. கடை பார்க்க சென்றனர். சமையலுக்கு அவசியம் தேவையான சாமான்கள் எடுத்து வந்திருந்தனர். பின்னர் இங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என. 

எனவே, பிருந்தாவும் சுகுமாரியும் சமையலறை சென்றார். வரும் போது பால் பாக்கெட் வாங்கி வந்திருந்தனர். எனவே, சஹாவை கூப்பிட்டு புது பாத்திரத்தில் பால் காய்ச்ச சொல்லினர்.

சற்று நேரத்தில் நண்பர்கள் இருவரும்.. காய்.. அரிசி.. என வாங்கி வந்தனர். மித்ரன் இங்கே ஓடினால் பால்கனி.. அங்கிருந்து பார்க்க.. ரோடு.. வீடுகள்.. மலை.. என தெரிந்தது. அங்கே சென்றான்.. வாசலில் ஏதும் தெரியவில்லை எதிர் ப்ளாட்தான் தெரிந்தது “ஏன் மாம்.. வாசல் இப்படி இல்லையா..” என கேள்வியாக கேட்டான்.

சஹா ஏதும் பேசவில்லை.. கௌரியும் அப்படியே.. குழந்தைக்கு பதில் சொல்லும் நிலைமையில் இருவரும் இல்லை. சஹா வீட்டை முழுதாக பார்க்க நேரமில்லை.. வேலைகள்.. சாமான்கள் எடுக்க.. பால் காய்ச்ச என.

பூஜை அறை.. சாமி படம் என ஏதும் அங்கே இல்லை. சுகுமாரி கொண்டு வந்திருந்த சிவன் பார்வதி  படத்தை வைத்தனர் இரு பெண்களும்.. புதிதாக வெள்ளி விளக்கு வாங்கியிருந்தார் பிருந்தா. அதனை எடுத்து வைத்தார். விளக்கு ஏற்றினாள் சாகம்பரி. ஊதுபத்தி.. ஏற்றினாள், அன்னை கொடுத்த பால்.. சாமியின் எதிரே வைத்தாள், நிவேதனம் செய்தாள். கற்பூர ஆரத்தி காட்டினாள்.. எல்லோரும் வணங்கினர். கௌரி எல்லோருக்கும் பின்னால்.. நின்றுக் கொண்டான். என்ன நடக்கிறது என பார்த்துக் கொண்டு. 

அனாதையாக கிடந்த வீட்டில் இப்போது அத்தனை உறவுகள்.. ஒருமாதிரி கூடடைந்த திருப்தி, கெளரிக்கு. நீண்ட நிம்மதி பெருமூச்சு.. அவனையறியாமல் எழுந்தது. பெரிதாக வீடு குடும்பம் பற்றி ஏதும் கண்டுகொண்டதில்லை.. அதனால், எதையும் யோசித்திருக்கவில்லையே. எனவே, நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். மனையாள் அவனிடம் கற்பூர ஆர்த்தி காட்ட.. எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டான். மித்ரன் அவளின் பின்னால் மணியோசையோடு சுற்றிக் கொண்டிருந்தான்.

சுகுமாரி விபூதி குங்குமம் மகனின் நெற்றியில் சின்னதாக வைத்தார். சஹா, கணவனை கண்ணால் அழைத்தாள். அவனுக்கு புரியவில்லை.. “ம்..” என கேள்வி கேட்டானே தவிர அருகில் வரவில்லை. மித்ரன் சமத்தாக சஹாவின் அருகில் வந்து நின்றுக் கொண்டான்.

அதை பார்த்து, கௌரியும்.. தாடியை நீவிக் கொண்டு அருகில் வந்து நின்றான். பெரியவர்கள் சிரித்தனர்.

சஹா “ஆசீர்வாதம் வாங்கிக்கலாம்” என்றாள்.

கௌரி “ம்“ என சேர்ந்து அவளோடு இரு பெற்றோரிடமும் ஆசீர்வாதம் வாங்கினர், மூவரும்.

பிருந்தா, சின்ன குக்கரில் சாதம் வைத்தார்.. சுகுமாரி, கோதுமை ரவை உப்பும்மா.. கிளறினார். மிக்ஸி இல்லை, சாம்பார் வைத்தால் சாகம்பரி. ஆக வேலைகள் நடக்க தொடங்கியது. எதோ கல்யாண மண்டபம் போல.. அவனின் வீடு கலையாக இருந்தது. சட்டென, தன்னுடைய முந்தைய நிலை நினைவு வந்தது அவனின் கண்ணில்.. கண்ணை மூடி திறந்தான்.. பழைய எண்ணங்கள்.. இந்த புதிய வாழ்வை மறைக்காமல் இருக்க.. நன்றாக கண்ணை திறந்து வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பார்த்தான் கௌரி.

சஹா, புடவையில் இருந்தாள்.. தான் அணிவித்த தாலி சரடு.. கூடவே, எதோ நகைகள்.. அத்தோடு பின்னி பிணைந்து இருந்தது. கெளரி, ‘என்ன நகை.. அது. எதோ ப்பேள்.. ஆர்நோமென்ட் மாதிரி இருக்கு.. இல்ல, லக்ஷ்மிதான்..’ என அவன் அவள் அணிந்திருந்த நகையை பார்த்துக் கொண்டிருந்தான் மும்முரமாக. இதுவரை பார்த்து பழக்க்படாத ஒன்றை நோக்கி.. ஒன்றுமே இல்லாத.. விஷயத்தை நோக்கி அவனின் சிந்தனை சென்றது.

பாவம் ஏதும் புலப்படவில்லை.

கௌரி ஹாலில் இருந்த பால்கனிக்கு சென்றான். சஹா காபியோடு வந்தாள் அவனின் அருகில்.. கௌரி “ஒருநிமிஷம்..” என்றான்.

சஹா “ம்..” என்றாள் நிமிர்ந்து.

கெளரியின் பார்வை.. தன் கழுத்துக்கு கீழேயே இருந்ததை பார்த்து, சஹா “என்ன” என்றாள் கொஞ்சம் தடுமாற்றமாக.

கௌரி தன் வலது சுட்டு விரலால்.. “இதென்ன.. ஆர்நோமென்ட்.. பேள்லா.. ம்ம்..” என மனையாளின் புடவை மடிப்பின் நடுவில் விரல்காளால் தேட.. 

சஹாவிற்கு, கன்னம் சிவந்து போனது.. “என்ன என்ன” என்றாள் திணறலாக.

கெளரிசங்கர் சட்டென நிமிர்ந்தான். புன்னகைத்தான் தன்னை தானே நொந்துக் கொண்டு.

சஹா, கீழுதடு வளைய கன்னம் குழிய புன்னகைத்தாள். அவனை கிண்டலாக பார்த்து.

கௌரி அவளின் புன்னகை, தன்னை கிண்டல் செய்கிறாள்.. என எண்ணி, தானும் “என்ன அது” என்றான்.. அந்த விரியா புன்னகை பார்த்து.

சஹா “அது முத்து பதித்த ராதாகிஷ்ணான் டாலர்.. ம்.. போதுமா” என்றாள்.

கௌரி “ம்கூம்.. அதில்ல.” என்றான்.

அதை கேட்க சஹா அங்கில்லை. உள்ளே சென்றுவிட்டிருந்தாள்.

அதன்பின் உண்டு உறங்க தொடங்கினர்.

 

Advertisement