Advertisement

கெளரிக்கு கோவமாக வந்தது.. தான் நினைத்ததை பேச முடியவில்லை.. அருகில் இருந்தும் காந்துகிறாள் என மனம் வாடியது. அமைதியாக விளக்கு அணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான்.

கெளரிக்கு அந்த பறந்த இருண்ட வானம்.. தன் வாழ்க்கையை நினைவுபடுத்தியது நீண்ட நேரம் அவனால், தங்களின் அறைக்கு வரமுடியவில்லை  அவள் சொன்ன வார்த்தைகளை அசை போடா தொடங்கினான்..’நான் எதையும் மறக்கலைன்னு சொல்றா அப்படியா.. இருக்கிறேன். ம்.. ஆனால், அவளுக்கு என்னுடைய கடந்தகாலம் நன்றாக நினைவில் இருக்கிறது. ம்.. என்னுடைய நெகட்டிவ் மட்டும்தான் அவளுக்கு தெரியுது’ என முதல்முறை.. திசை காட்டும் நட்சத்திரம் ஒன்றை கண்டுக் கொண்டான் இருண்ட இந்த வானத்தில். ‘ஆக, புரிந்து கொள் என அவளிடம் கதறி பிரயோசனமே இல்லை.. நான் முதலில் அவளை புரிந்துக் கொள்ளுகிறேன்’ என யோசனை சென்றது அவனுக்கு.

எப்போது வந்து உறங்கினானோ.. அதிகாலையில், மித்ரனின் சத்தில் விழித்தான்  கௌரி.

சஹாதான் முதலில் அவனின் கண்ணில் தெரிந்தாள்.. ஆலிவ் நிற புடவை.. தன் சிகையை.. கொண்டையாக போட்டுக் கொண்டு.. நெற்றியில் கற்றைமுடிகள் கரை தாண்டி கண்களில் விழ.. அதனை பொருட்படுத்தாமல்.. மித்ரனுக்கு உடை மாற்றிவிட்டுக் கொண்டிருந்தாள் பெண்.

கௌரி, ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான். 

மித்ரன் எதோ பேசிக் கொண்டிருந்தான்.. அவளும் “ம்.. இப்போ என்ன அதுக்கு” என கேள்வி கேட்க.. பையனின் முகம் வாடி போனது.

கௌரி “மித்ரன் குட் மோர்னிங்” என்றான்.

மித்ரன் “குட் மோர்னிங்..” என சோகமாக சொன்னான்.

கௌரி “உங்க அம்மாக்கும் குட் மோர்னிங் சொல்லிடுங்க” என்றான்.

மித்ரன் “நீயே சொல்லு..” என திரும்பி நின்றுக் கொண்டான்.

சஹா “டேய்.. அடி வாங்குவ.. சொல்லுங்க.. சொல்லனும்” என் திருத்தினாள். பின் “ஸ்கூல் போகனும்” என்றாள், அதட்டலாக.

கௌரி “சோட்டா பாய் என்ன கோவம்” என்றான்.

மித்ரன் “இன்னிக்கே ஸ்கூல் போணுமாம்.. நான் என் அம்மாக்கு மேரேஜ்.. நேக்ஸ்ட் வீக்தான் வருவேன்னு எல்லோர்கிட்டவும் சொல்லிட்டு வந்திருக்கேன்.. இப்போ ஸ்கூல் போ சொல்றாங்க” என்றான்.. கையை கட்டிக் கொண்டு எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான் குழந்தை.

கௌரி, சஹாவை முறைத்தான் “உனக்கு யாரும் சந்தோஷமாக இருந்தால் பிடிக்காதா” என சின்ன குரலில் அவளிடம் காய்ந்தான்.

பின் குழந்தையிடம் திரும்பி “நீ ஸ்கூல் போக வேண்டாம்.. நீ லீவ் ஓகே..” என்றான்.

இதுவரை, சஹா சொல்லுவதுதான் அவனை பொறுத்த வரை நடக்கும்.. எனவே, சஹாவின் முகத்தை பார்த்தான்.. சஹா “சும்மா எதுக்கு லீவ்.” என்றாள்.

மித்ரன் மீண்டும் திரும்பி நின்றுக் கொண்டான்.. கோவமாக.

கௌரி, மித்ரனை திருப்பி.. அவனின் கைபிடித்துக் கொண்டான் “சொல்லேன், ஒருநாள்.. பையன் என் கூட இருக்கட்டுமே.. ம்.. நாமமட்டும் தாத்தா வீட்டுக்கு போலாம் டா.. இவங்க இங்கேயே இருக்கட்டும்..” என்றான் கிண்டலாக.

சஹா முறைத்தாள்.

கௌரி “நாம மட்டும் போறோம் டா..” என்றான் வீம்பாக.

சஹா முறைத்துக் கொண்டே “முதல்ல.. பல்லு தேய்க்க சொல்லு டா.. அப்புறம் போகலாம். கீழ எல்லோரும் இருக்காங்க.. சரி, நீ ஸ்கூல் போக வேண்டாம். வா” என்றவள் நடந்தாள் வாசல் நோக்கி, வீம்பாக.

மித்ரன், அப்படியே கெளரியின் பின்னால் நின்றான்.

தன்னோடு வரவில்லை எனவும்.. குழந்தையை பார்த்து இன்னும் சஹா முறைக்கவும்.. கெளரியை பார்த்துக் கொண்டே.. சஹாவோடு.. சென்றான், மித்ரன்.

கௌரி ‘காலையில் எவ்வளோ டிராமா.. அவள் சொல்படிதான் நடக்கணும் போல.. ம்..’ என எண்ணிக் கொண்டே.. குளிக்க சென்றான்.

அழகாக விரிந்த சிகை.. ட்ரிம் செய்திருந்த தாடியும் மீசையுமாக வந்தான் கீழே கௌரி. எல்லோரும் இருந்தனர்.. சித்தப்பா வீடு.. அத்தை வீடு என எல்லோரும் இருந்தனர்.

கௌரி சஹா இருவரையும் அமர வைத்து உணவு பரிமாறினார். மித்ரனுக்கு, அப்போதே உணவு ஊட்டி விட்டிருந்தாள் சஹா. மித்ரன் இப்போது, ரத்தினம் தாத்தாவோடு விளையாடிக் கொண்டும் சொந்தங்களோடு பேசிக் கொண்டும் இருந்தான்.

பெரியவர்கள் மதியம் சஹாவின் வீட்டில் சாப்பாடு.. அதனால் அங்கே செல்ல வேண்டும்.. என சுகுமாரி சொல்லிக் கொண்டிருந்தார்.

கௌரி கேட்டுக் கொண்டான் ஏதும் பேசவில்லை. இருவரும் உண்டு முடித்து.. கௌரி சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு. மேலே சென்றான். சஹா, கீழேயே அமர்ந்து எல்லோரோடும் பேசிக் கொண்டிருந்தாள்.

சுகுமாரி “போ சஹா, கிளம்பு.. அவனையும் ரெடியாகி வர சொல்லு.. போகனுமில்ல” என சொல்லி மருமகளை மேலே அனுப்பி வைத்தார்.

சஹா, கீழே இருக்கவும்.. எல்லோரோடும் விளையாடிக் கொண்டிருந்த மித்ரன்.. அவள் மேலே செல்லவும்.. தானும் அவளோடு மேலே சென்றான்.

மித்ரன் “தூக்கு சஹா” எனவும்.. மித்ரனை தூக்கிக் கொண்டு மேலே ஏறினாள்.

சஹா “என்ன பண்ணுது.. ஏன் டல்லா இருக்க” என்றாள்.

மித்ரன் “கால் வலிக்கிது” என தன் முழங்களால் காட்டினான். அப்போதுதான் பார்த்தாள் எதோ அடி, அதற்கு தன் அன்னை ஆயின்மென்ட் எதோ போட்டு அனுப்பியிருப்பார் போல.. அறையின் உள்ளே வந்தவள்.. “எப்போ டா விழுந்த” என்றாள் காயத்தை ஆராய்ந்துக் கொண்டே.

மித்ரன் “மண்டபத்தில்” என சொல்லி எப்படி என விளக்க தொடங்கினான்.

கௌரி உறங்கிக் கொண்டிருந்தான்.

சஹா, அப்படியே குழந்தையை சேரில் நிறுத்தி.. கதை கேட்டுக் கொண்டிருந்தாள். அவளும் “சரி, இப்போ நம்ம வீட்டுக்கு போகும் போது வேறு மருந்து போட்டுவிடுறேன்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

மித்ரன், சஹாவின் தோளில் சாய்ந்துக் கொண்டான்.

சஹா “கொஞ்சம் தூங்கு சரியாகிடும்..” என சொல்லி பெட்டில் அவனை நடுவில் படுக்க வைத்து.. தான் ஓரமாக அமர்ந்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அவன் உறங்கிவிட்டான்.

சஹா, எழுந்து கிளம்பினாள். கெளரியை எழுப்பினாள் சத்தமில்லாமல்.. அவனும் விழித்து பார்க்க.. அவன் கனவில் கூட காணாத காட்சியாக அருகில் நின்றாள்.. சாகம்பரி.

கௌரி, கண்மூடி திறந்தான். இப்போதும் அவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.. சின்ன புனைகை அவனின் உதடுகளில்.. “நான் இது பெங்களூர்ன்னு நினைச்சேன்..” என சொல்லி அவளை பார்த்தபடி ஒருக்களித்து படுத்துக் கொண்டான்.

சாகம்பரிக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.. வேறு வேலையை பார்க்க போனாள்.

கௌரி பெருமூச்சு விட்டு எழுந்து கிளம்பினான்.

சஹா, உறங்கிக் கொண்டிருந்த மித்ரனை தூக்க போக.. கௌரி “நான் பார்த்துக்கிறேன்” என இயல்பாக குழந்தையை தூக்கிக் கொண்டு.. கீழே வந்தான்.

கௌரி “நாங்க முன்னாடி போகவா ம்மா” என்றான்.

ரத்தினம் “அவ உள்ள இருக்கா.. சஹா, நீங்க கிளம்புங்க ம்மா, நாங்க வந்திடுவோம்” என்றார்.

கௌரி “வரேன் ம்மா” என சொல்ல.. சுகுமாரியும் வந்தார். மூவரையும் வழியனுப்பி வைத்தார்.

அங்கே சாகம்பரியின் வீட்டில் விருந்து அமர்களப்பட்டது. உறவுகள் எல்லோரும் கெளரியை பார்த்து இரண்டு வார்த்தை பேசித்தான் சென்றனர். 

அடுத்தடுத்த நாட்களும் எந்த பிணக்கும் இல்லாமல் சென்றது மூவருக்கும். மூன்றாம் நாள் மித்ரன் பள்ளி செல்ல தொடங்கினான்.

கௌரி சஹா இருவரும் பள்ளியில் சென்று விட்டு வந்தனர் மித்ரனை. 

நேரே தன் வீட்டிற்கு காரை செலுத்தினான் கௌரி. இருவரையும் வரவேற்றார் சுகுமாரி.. கௌரி மேலே சென்றுவிட்டான்.

சஹா பேசிக் கொண்டிருந்தாள்.. சுகுமாரி “நீ மேலே போ.. அவன் இன்னிக்கு கிளம்பறேன்னு சொன்னான்.. போ.. நான் சாப்பிடும் போது கூப்பிடுறேன்” என மருமகளை மேலே அனுப்பி வைத்தார்.

மேலே வந்தாள், சஹா.

கௌரி, உடைகளை எடுத்து வைத்திருந்தான் பெட்ல். பெட்டியில் இன்னும் அடுக்கவில்லை.

அவனின் ஸ்பீக்கரில் “கீரவாணி.. கீரவாணி..

இரவிலே கனவிலே பாடவா நீ..

இதயமே உருகுதே..” என இதமான இசை அவனின் அறையை நிறைத்துக் கொண்டிருந்தது.

சஹா, பெட்டில் அமர்ந்துக் கொண்டு.. அடுக்க தொடங்கினாள்.. அவனின் உடைகளை.

கௌரி  “நான் ஆப்டர்நூன் கிளம்பறேன்..” என்றான், அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டு.

சஹா, அமைதியாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள். 

கௌரி, அவளின் கைகளை.. தன்  இடது கையால் பற்றி தன்பக்கம் இழுத்து.. அழுத்தினான். சின்ன நடுக்கம் அவளின் கைகளில் உணர்ந்தவன்.. அழுத்தம் தராமல் இதமாக பற்றினான்.

கௌரி “நடந்ததையே நினைச்சி குழப்பிக்காத.. ப்ரீயா இரு. ம்..” என சொல்லி அவளின் புறமாக திரும்பினான் “உனக்குள்ளே பேசாத.. யோசிக்காத, உன்னோட சேர்ந்து யோசிக்க. பேச நானும் இருக்கேன்.. ம்.. எல்லாம் சரியாகத்தான் இருக்கு.. ம்..” என்றான்.

சாகம்பரி கண்ணில் ஆச்சர்யத்தோடு கணவனை பார்த்தாள்.

கௌரி “ரொம்ப பெரிய விஷயம் இல்லை எதுவும்.. நாம பார்த்துக்கலாம்..” என சொல்லி தன் நீண்ட கைகளால் அவளை தோளோடு லேசாக பட்டும் படாமல் அணைத்து.. அவளை விடுவித்தான். ஆனால், சற்றும் தள்ளி அமரவில்லை.

சாகம்பரிக்கு, கணவனின் வாசம் நாசி நுழைய.. மனது இதமாக உணர்ந்தது.. மாயவலையாய் என்னமோ அவளை அமைதியாக்க.. இது நேரம் வரை.. தன் கையை பிடித்திருந்தவனது கையை தான் அழுத்தி பிடித்தால் பெண்.

சஹா “சீக்கிரமாக வந்திடுவோம்.. உங்களுக்கு நிறைய பார்டன் தரமோன்னு எனக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு.. க்கும்” என்றாள் இப்போது அவனை போலவே சாய்ந்து அமர்ந்து நேராக கணவனை பார்த்து கேட்டாள்.

கௌரி “இல்ல.. இல்லவே இல்ல..” என்றான், புன்னகைத்தபடி.

சஹாவை அவனின் புன்னகை தொற்றியது.

கௌரி “தினமும் கொஞ்சம் போனிலாவது பேசேன்..” என்றான்.

சஹா “ம்..” என்றாள்.

பெரிதாக பேசவில்லை.. ஆனால், உணர்ந்துக் கொண்டனர்.. இனி இப்படி சேர்ந்துதான் பயணிக்க வேண்டும் என.

மதியம் இருவரும் உண்டனர்.

கௌரி அதன்பின் பெங்களூர் நோக்கி கிளம்பினான்.

 

Advertisement