Advertisement

வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!..

12

கெளரிசங்கர்க்கு, ஒன்றும் புரியவில்லை. சஹா, சாரி சொல்லியது.. கூடவே காம்பர்மைஸ் பற்றி பேசியது எல்லாம் சேர்ந்து.. அவனுக்கு, ஒரு சோர்வை ஏற்படுத்தியது. ‘அவள் தனக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை’ என தோன்றியது. மனம் தவிக்கிறது. ‘கேளு.. என்ன ஆச்சுன்னு கேளு..’ என மனம் தவிக்கிறது. அவள்தான் கூப்பிடாதீங்க நான் நிம்மதியாக இருக்கனும்ன்னு சொல்றாளே’ என அவளின் செய்தி நினைவு வந்தது.

 ஏதும் செய்ய முடியாத ஒரு சோர்வு.. அவன் அப்போதுதான் வேலையை முடித்துவிட்டு.. உணவுக்கு என அமர்ந்திருந்தான். ஆர்டர் செய்திருந்தான். அப்போதுதான் அவளின் பதில் வந்து சேர்ந்தது.. அப்படியே அமர்ந்துக் கொண்டான். என்னமோ எதுவும் பிடிக்காமல் போனது போல தோன்றியது.. உணவுகளை வாங்கி வைத்தவன் இங்கும் அங்கும் நடந்தான்.. தலையை கையில் தாங்கிக்  கொண்டு.. அமர்ந்தான்.

மனது தவித்தது ‘எப்படி புரியவைப்பேன்.. நான் நீ நினைப்பது போல இல்லை.. அவ்வளவு மோசமில்லை.. எனக்கு புரியலை கண்ணியம்.. என் கற்பு காப்பதும் என் கடமை என்று. அத்தோடு, இப்படி பித்தவளை அதனால் இழப்பேன் என்று நான் எண்ணவில்லை.. எதோ விளையாட்டாய் இருந்துவிட்டேன். எனக்கு அப்போது அது புரியவில்லை.. சாரி.. நான் இப்போது அப்படி இல்லை.. ‘ என தவித்துக் கொண்டே இருந்தான் அந்த இரவு முழுவதும்.

மறுநாள் ஊருக்கு செல்ல வேண்டும் என இருந்தவன்.. அலுவலக வேலைகள் எல்லாம் முடித்துதான் இருந்தான். ஆனாலும் இன்று கிளம்ப மனமில்லாமல் இருந்தான்.

ஆனால், காலையிலேயே சுகுமாரி அழைத்துவிட்டார் “கௌரிப்பா கிளம்பிட்டியா.. மதியம் லஞ்ச்க்கு வந்திடுவீயா” என கேட்டு அழைத்தார்.

கெளரிசங்கர் “இல்ல ம்மா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. எப்போ முடியும்ன்னு தெரியலை.. சொல்றேன்” என்றான் ஒன்றுமில்லா குரலில்.

அன்னை சுகுமாரிக்கு மனதே வாடி போனது.. இன்று நேரில் வரும் மகனிடம் பேசிட வேண்டும் என ஒத்திகையே பார்த்திருந்த்வருக்கு.. மகனின் பதில் வருத்தத்தை தந்தது. ஏதும் பதிலே சொல்லாமல் அப்படியே போனை கட் செய்துவிட்டார் அன்னை.

எப்போதும் போல மகன் அதற்கெல்லாம் அலட்டவில்லை.

ரத்தினம், மனைவியிடம விவரம் கேட்டார். சுகுனார் சொல்லினார் மகன் சொன்னத்தை.

ரத்தினம் “அதுசரி, தன்பால் வீட்டில் இந்த பத்து நாளும் எத்தனை போன் செய்திருப்ப.. இப்போ அவங்க பொண்ணுகிட்ட பேசி சம்மதம் வாங்கின உடனே.. நீயும் உன் மகனும் ஆரம்பிச்சிட்டீங்களா.. ஒழுங்கா அவனிடம் போனில் இப்போவே பேசு.. இதென்ன விளையாட்டா.. உனக்கும்.. அன்னிக்கு சஹாக்கு பார்த்திருந்த வரணுக்கும் என்ன வித்யாசம்.. உங்கள் விருப்பத்திற்கு சட்டென எல்லாவற்றையும் மாற்றுவீர்களா?. இப்போவே பேசு.. அப்புறம் அவன் ஆபீஸ் போயிடுவான்.. சரின்னு சம்மதம் மட்டும்தான் வாங்கணும் நீ.. சஹாக்கு, இணக்கமான பதில் வரலை..” என முடிக்காமல் சட்டென தோட்டம் சென்றுவிட்டார் ரத்தினம்.

சுகுமாரிக்கு என்ன செய்வதென பயம்.. மகன் ஒரு முசுடு தெரியும்.. நேரில் பேசினாலே.. இடக்காக பதில் சொல்லுவான். இப்போது போனில் என்ன சொல்லி புரியவைப்பேன் என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தார்.

பத்து நிமிடம் சென்றதும் ஒருமுடிவோடு, வீடியோ காலில் அழைத்தார் மகனை, சுகுமாரி.

கௌரி, சலித்துக் கொண்டே எடுத்தான் ‘விடமாட்டாங்களே’ என .

சுகுமாரி “ஒண்ணுமில்ல ப்பா.. ரொம்ப நாள் ஆச்சு உன்னை பார்த்து, அதான் இப்டி கூப்பிட்டேன்.. சாப்பிட்டியா இல்லையா.. முகமே எதோ வாட்டமாக இருக்கு.. என்ன இன்னிக்கு எக்ஸ்சசைஸ் நிறைய செய்துட்டியா” என்றார்.

கௌரி போனை டீபாய் மேல் வைத்தான் அதற்குண்டான ஸ்டாண்டில். பின் பிரிட்ஜ் திறந்து தண்ணீர் குடித்துக் கொண்டே.. “இல்ல, இன்னிக்கு எக்ஸ்சசைஸ் பண்ணலை.. தூங்கிட்டேன், அதான்.” என்றான்.

அன்னை “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. கொஞ்சம் பொறுமையா கேட்ப்பீயா” என்றார்.

கௌரி டவல் எடுத்து துடைத்துக் கொண்டான்.. முகத்தை. அன்னையின் கேள்வியில் “மேரேஜ் தவிர எதை வேணும்ன்னாலும் பேசுங்க.. கேட்க்கிறேன்.” என்றான்.

அன்னை “இருப்பா, ஒரே ஒரு தரம்.. இந்த ப்ரோபோசலை கேளு.. இது உன் அப்பா சம்பந்தபட்டது. இத்தனைநாள் பேசாமல் இருந்த உன் அப்பா, உனக்காக நீ நல்லா இருக்கனும்ன்னு நினைச்சி செய்த காரியம். சின்ன வயசிலிருந்து, உனக்கு எதையாவது சஜ்ஜெஸ் செய்திருக்காரா.. எல்லாம் உன் விருப்பம்தானே. இந்த ஒருமுறை அவரின் விருப்பத்தை.. விருப்பம் இல்லை, எண்ணத்தை கேளேன்.. உனக்கு அப்படியா கெடுதல் செய்திடுவோம்..” என்றார் தாழ்ந்த குரலில்.

கெளரிக்கு உணர்வுகளின் போராட்டம் இப்போது, அதனால் அமைதியாக இருந்தான்.

அன்னை “அப்பா, தன்னோட நண்பன் பெண்ணை.. சஹாவை உனக்காக பெண் கேட்டிருக்கார். கிட்டத்தட்ட எல்லாம் முடிவான நிலை. அவள் உன் வாழ்க்கையில் வந்தால்.. நீ சரியாகிடுவேன்னு நினைக்கிறார். உன்னை மன்னிச்சிட்டார்..” என சொல்லி மகனின் முகத்தில் எதோ மாற்றம் தெரியவும் நிறுத்திக் கொண்டார் அன்னை.

கௌரி, முதல்முறை அவனின் கடந்தகாலம் பற்றி பேசும் போது அமைதியாக இருந்தான் இப்போது.

மீண்டும் சுகுமாரியே “என்ன கௌரி.. என்ன” என்றார் அதட்டலாக.

கௌரி தோளில் மாலையாக போட்டிருந்த டவல் எடுத்து.. மீண்டும் முகத்தை துடைத்துக் கொண்டான். அன்னையின் ;பேச்சில் கொஞ்சமாகத்தான் கோவம் எழுந்தது, ஆனால், அவனின் முகத்தில் என்றுமில்லா திருநாளாக பல் தெரிய வாய் மூடா புன்னகை மின்னியது.  அந்த சிரிப்பில் சிறுபிள்ளை என.. கண்களும் சிரிக்க.. அன்னைக்கு ஆனந்தமே.

அன்னை “என்ன டா..” என்றார் வாஞ்சையாய்.

கௌரி “அப்பாவும்.. அப்படியா கேட்டார். என்ன சொன்னாங்க” என்றான்.

சுகுமாரிக்கு, மகன் அவசரத்தில் இப்படி கேட்க்கிறான் என எண்ணிக் கொண்டு “அப்பாதான் கேட்டார். அப்பா கேட்டு இல்லைன்னு சொல்லுவாங்களா.. இப்போ, நீதான் சொல்லணும்” என்றார்.

கௌரி எழுந்து.. போனில் முகத்தை காட்டா தூரம் வந்து சந்தோஷமாக சிரித்தான்.. சுவற்றில் ‘எஸ்.. ‘ என சொல்லிக் கொண்டே நான்குமுறை தன் கையால் குத்தினான் அந்த சுவரை.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததை தாண்டி.. வீட்டிற்கே வந்த நிலை இது. என்னமாதிரி உணர்வென அவனால் வரையறுக்க முடியவில்லை.. தொண்டையில் சிக்கியிந்த பெரிய பாறை ஒன்று.. இரங்கி.. நெஞ்சில் சில்லென அமர்ந்தது இப்போது. அதை அனுபவிக்க முடியாமல் அன்னையின் பேச்சு குறுக்கிட்டது அவனை.

கௌரி “கௌரி.. பேசு டா.. அப்பா வேற இப்போதுதான் கோவப்பட்டு போறார்.. கல்யாணம் செய்துக்கடா. அவருக்கும் மகன் நல்லா இருக்கனும்ன்னு இருக்காதா..” என தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.

கௌரி சிரித்து முடித்து.. கொஞ்சம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு போனின் முன் வந்து அமர்ந்தான்.. முகத்தில் வருத்தம் சோர்வு ஏதும் இல்லை, நொடிகளில் எல்லாம் மாறிவிட்டிருந்தது.. கலையான முகமாக “அப்பாகிட்ட சரின்னு சொல்லு ம்மா.. சரி, நேரில் வரேன் பேசிக்கலாம்..” என சொல்லி போனை வைத்தான் கௌரி.

அஹப்பா… சுகுமாரிக்கு பரமானந்தம். சந்தோஷமாக இந்த செய்தியை கணவரிடம் பகிர்ந்துக் கொண்டார் இனிப்பு செய்தார். மதிய உணவுக்கு ஏற்பாடுகளை தொடங்கினார்.

கௌரி, குளிக்க கூட இல்லை, கிளம்பினான் தன் ஊருக்கு.

கெளரிக்கு காரில் வர வர.. சந்தோஷம்தான்.. ‘என்னலாம் பேசினால்.. காம்பர்மைஸ் செய்துக்கிறாளாம். நானென்ன அவ்வளவு  மோசமாவா இருக்கேன். பேபி தப்பு தப்பா உனக்கு என்னை சொல்லி இருக்காங்க என் அம்மா.. நான் சும்மா.. ஜஸ்ட்…. அதுக்காகவெல்லாம் உன்னை காதலிக்காமல் விட்டுவிடுவேன்னு நினைக்காதே.. வரேன் நேரில் பார்த்து எல்லாத்தையும் கிளியர் பண்றேன்..” என எண்ணிக் கொண்டே வந்தான். கூடவே SBP வேறு. அவனுக்கு அந்த குரலில் ஒரு மோகமுண்டு.. எனவே, ததும்ப ததும்ப அவரின் கீதங்களை கேட்டுக் கொண்டு.. காரை விரட்டிக் கொண்டு வந்துவிட்டான் மதிய உணவுக்கு.

வீட்டில் கதவு திறந்துதான் இருந்தது. கௌரி உள்ளே வந்தான். ரத்தினம் அப்போதுதான் உண்டு முடித்திருந்தார். எனவே, ஹாலில் அமர்ந்திருந்தார். எப்போதும் கௌரி வந்தாலும்.. தந்தையை கண்டுக் கொள்ளாமல் அப்படியே மேலே சென்றுவிடுவான். இன்று உள்ளே வந்ததும் “ம்மா.. எங்க டாட்” என்றான் அமைதியான குரலில்.

ரத்தினம் ஏதும் பதறாமல், மகனை நிமிர்ந்து பார்த்தார். கௌரி கூலரை.. எடுத்துவிட்டு, தந்தையை பார்த்தான். ரத்தினம் “உள்ள இருக்கா.. இப்போதான் படுக்க போனாள்” என்றாவர்.. எதோ பேப்பரை எடுத்துக் கொண்டார் படிப்பது போல.

மகன் இரண்டுநிமிடம் அவரையே பார்த்திருந்துவிட்டு.. அம்மாவின் அறைக்கு சென்றான்.

சுகுமாரி உறங்கிக் கொண்டிருந்தார். கௌரி, பார்த்துவிட்டு மேலே சென்றான்.

குளித்து முடித்து.. தன் தாடியிக்கு தேவையான ஆயில்.. கிரீம் எல்லாம் போட்டு முடித்து.. தன் சிகையை ட்ரை செய்துக் கொண்டு.. பிடரி முடிகள்.. தோளில் தவழ.. தாடியும் மீசையுமாக.. ‘ரிஷி’ மாதிரி கீழே வந்தான்.

அன்னை இப்போது எழுந்திருந்தார். மகனை இப்படி பார்க்கவும் “வா கௌரி” என்றவர் “கல்யாணம் பேசியிருக்கு.. என்னவோ சந்நியாசி மாதிரி இருக்க பார்க்க.. ஏன் டா.. இப்படி, இதையெல்லாம் எடுத்திடேன்..” என்றார் அதட்டலாக.

கௌரி லேசாக புன்னகைத்தான். எந்த கவலையும் இறுக்கமும் இல்லா புன்னகை.. வந்தது மகனிடமிருந்து. மகனை பார்க்கவே இதமாக இருந்தது அன்னைக்கு.

சுகுமாரி “சாப்பிடு” என்றார் மணி மாலை ஐந்து.

அதன்பின் சுகுமாரி, மகனிடம் நடந்ததை சொல்லினார்.. ‘எப்படி எல்லாம் பேசினோம்.. எப்போதிலிருந்து எனக்கு ஆசை.. அப்பாவிடம் எப்படி சொன்னேன்.. தன்பால் அண்ணன் என்ன சொன்னார்.. இன்னும் சஹா பொண்ணு பேசவேயில்லை என்கிட்டே’ என எல்லாம் சொல்லினார் அன்னை, மகனிடம்.

கெளரிக்கு, ஆனந்தம்தான் கண்ணில், அதை உதடுகளில் காட்டாமல்.. அதிகமாக புன்னகைக்காமல் ‘அப்படியா’ என கேட்டுக் கொண்டான்.

அதன்பின், மேலே தனதறைக்கு சென்றுவிட்டான். சஹாவின் ஞாபகம்தான்.. ஆனால், அவளை தொந்திரவு செய்யவில்லை. என்னமோ அவள் என் வாழ்வில் வந்துவிடுவாள்.. தட்ஸ் என்னாஃப்.. என கண்களை மூடிக் கொண்டான், அப்படியே உறங்கியும் விட்டான். 

கௌரியை, இரவு உண்பதற்கு போனில் அழைத்தார்.. சுகுமாரி. அப்போதும் ‘எடுத்து வைச்சிடுங்க.. அப்புறமாக சாப்பிட்டுக்கிறேன்’ என்றவன்.. விட்ட தூக்கத்தை தொடர்ந்தான். 

அடுத்த இரண்டு நாட்களும் கௌரி நிம்மதியாக உண்டான் உறங்கினான். அதுதான் ப்ரதானம் என்பதாக நடந்துக் கொண்டான். அன்னைக்கு சந்தோஷமாக இருந்தாலும்.. ஒருபக்கம் பயம்.. எங்கே என்ன செய்வானோ.. என.

எனவே, சுகுமாரி “கல்யானத்திற்கு நாள் குறிக்க போறோம்.. அடுத்த மாசம் தை.. அப்போவே நாள் இருந்தால் பார்த்திடுவோம்.. சஹா வீட்டிலும் ஒன்னும் பிரச்சனையில்லை. உனக்கு வசதி படுமா.. இப்போவே சொல்லிடு.. உ..உனக்கு எல்லாம் ஓகேதானே” என்றார்.

கௌரி “நீங்க பார்த்து செய்திடுங்க.. எனக்கு ஓகேதான்.” என்றான்.

சுகுமாரி “டேய்.. மித்ரன், குட்டி பையன்.. நீ என்ன நினைக்கிற. நாங்க நிறைய பேசி இருக்கோம்.. நீ என்ன நினைக்கிற” என்றார்.

கௌரி “சாகம்பரி, மித்ரனுக்காகதானே என்னை கல்யாணம் செய்துக்கிறாங்க. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை” என்றான் ஒன்றுமே இல்லாத குரலில்.

அமர்ந்து, அன்னை மகனின் பேச்சு வார்த்தையை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த ரத்தினம் நிமிர்ந்து.. கண்ணாடியை துடைத்துக் கொண்டே மகனை பார்த்தார்.. அவனின் இந்த பதிலில்.

சுகுமாரி “என்ன டா.. நீயா பேசுறது.. எங்களுக்கு ஒன்னும் புரியலை.” என்றார்.

கௌரி “ம்மா, யோசிக்காத, நானேதான். எனக்கும் அவங்களை பிடிக்கும். ம்.. நானும் அவங்களும் காம்பர்மைஸ் செய்துக்கிறோம். ம்.. எப்படி சொல்றது. ம்கூம்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீங்க போகும் போது என்னையும் அங்க கூட்டி போங்க.. நான் கொஞ்சம் பேசணும்..” என்றான். பின் மாடிக்கு சென்றுவிட்டான்.

ரத்தினம் “ம்.. கொஞ்சம் கண்டிச்சி வளர்ந்த்திருந்தால். இந்த பக்குவம் அப்போதே வந்திருக்கும்.. நான்தான் தப்பு செய்திட்டேன்..” என சொல்லி மனைவியை பார்த்தார்.

சுகுமாரி “விடுங்க.. அவனுக்கு புரிஞ்சிடுச்சி.. நாம் வேலையை பார்ப்போம்.” என கிளம்பி நல்லநாள் பார்க்க சென்றனர்.

தனபால் பிருந்தா.. ரத்தினம் சுகுமாரி என நால்வரும் கிளம்பி சென்றனர். மாசியில்தான் நாள் நன்றாக இருக்கிறது இவர்களின் நட்சத்திரத்திற்கு என்றுவிட்டனர். எனவே, இரண்டு மாதம் டைம் இருக்கிறது என மண்டபம் பார்க்கலாம் என பேசிக் கொண்டே வந்து வீடு சேர்ந்தனர். சஹாவின் வீடு வந்தனர்.

மித்ரன் பள்ளி சென்றிருந்தான்.

சாகம்பரி “வாங்க அங்கிள் ஆன்ட்டி” என வரவேற்றாள்.

ரத்தினம் “இங்க வாடா..” என தன்னருகே அழைத்தார் அவளை. சஹா வந்து அமர்ந்தாள். மற்ற பெரியவர்கள் எல்லோரும் கண்டுக் கொள்ளாமல் எதோ பேசிக் கொண்டிருந்தனர்.

சஹாவை பெண் கேட்டதற்கு பின் இப்போதுதான் பார்க்கிறார்கள் ரத்தினம் தம்பதி, அவளை. எனவே, பெண்ணிடம் பேச வேண்டுமே என அழைத்தார்.

ரத்தினம் “போன் பண்ண கூடாதுன்னு இருந்தேன். சொல்லு. என்னை மாமான்னு கூப்பிட சம்மதம்தானே.” என்றார்.

சஹா தலையை குனிந்துக் கொண்டே ‘ம்..’ என்றாள்.

ரத்தினம் “என்ன ஆச்சு.. சஹாக்கு, ஏதேனும் தய்க்கமா..” என்றார்.

சஹா அமைதியாக இருந்தாள். 

ரத்தினம் நிதானமான குரலில் “தேவையில்லாதது டா.. உன்னை அவன் நல்லா பார்த்துப்பான். எப்படி சொல்றேன்னு கேட்க்கிறீயா.. எப்போ, அவன்.. ஊருக்கு, இங்க.. வந்து சேர்ந்தானோ அப்போவே.. அது தெரிந்தது. என்கிட்டே பேசவேயில்ல.. முறைப்பான், என்னை பொருட்டாகவே மதிக்காமல் போயிருக்கான். ஆனால், வந்த அன்று.. என்னை நிமிர்ந்து பார்க்காமல் மேலே போயிட்டான். நான் இருக்கும் இடத்திற்கு வந்ததேயில்லை. ம்.. அப்போதான் தோணிச்சு எதோ உறுத்துது அவனை’ன்னு.  அதுபோதுமே.. கொஞ்சம் கூச்சம்.. குற்றவுணர்ச்சி இருக்கே. அது போதும்.. மனுஷங்களுக்கு. அந்த கூச்சமும் குற்றயுணர்ச்சியும்.. நல்வழிப்படுத்திடும். அவன் கண்டிப்பா உன்னையும் மித்ரனையும் நல்லா பார்த்துப்பான். சத்தியம். இப்போது, வந்த அன்று.. என் முகம் பார்த்து பேசினான்.. கண்ணில் தப்பு செய்திட்டேன்னு இருக்கு. நீ பயப்படாதே.. உன்னையும் குழந்தையையும் நல்லா பார்த்துப்பான்.” என்றார் சஹாவின் கையை பிடித்துக் கொண்டு, சின்ன குரலில்.

சஹா “மாமா.. தேங்க்ஸ் மாமா. நான் கடந்தகாலத்தை பெருசுபடுத்த மாட்டேன். ஆனால், மித்ரனை ஏதும் சொல்லிட கூடாது.” என்றாள் சின்ன புன்னையோடு. 

சுகுமாரி “சஹாம்மா,  நான் பேசிட்டேன் டா.. அவன் சந்தோஷாமாக பார்த்துக்கிறேன்னு சொல்றான். உன்கிட்ட பேசனும்மாம். எப்போ வரதுன்னு கேட்க்கிறான்.. நீங்க பேசி பாருங்களேன்” என்றார்.

சஹா “ம்.. சொல்றேன் அத்தை..” என்றாள்.

சுகுமாரி “இல்ல டா.. அவன் கிளம்பிட போறான்.. நீ கொஞ்சம் பேசேன்” என்றார்.

சஹா “அத்தை.. போனில் பேசிக்கிறோம்.. என்ன இப்போ, மித்ரன்கிட்ட சொல்லணும் அத்தை. அப்புறம் நேரில் பேசிக்கிறேன்” என்றாள்.

சுகுமாரி, தன் கணவரை பார்த்தார். ரத்தினம் கண்மூடி திருந்தார் விரல்களை ‘விடு’ என்பதாக அசைத்தார். சுகுமாரி, சஹாவையே பார்த்தார் மீண்டும்.

இப்போது பிருந்தா “மதிய உணவு சாப்பிட்டு போங்க அண்ணா” என்றார்.

ரத்தினம் “எங்க மருமக சொன்னாதல்தான் சாப்பிடுவோம்” என்றார் விளையாட்டாய்.

சஹா “ஐயோ மாமா .. வாங்க சாப்பிடலாம்” என இயல்பாக அழைத்தாள்.

எல்லோரும் நல்லவிதமாக உண்டு பேசி முடித்து.. திருமண தேதியை சஹாவிடம் சொல்லி.. ரத்தினம் தம்பதி, கிளம்பினர்.

கௌரி அவளுக்கு மாலையில் ஒரு வாட்ஸசப் செய்தான்.. “என்னோட ப்ரோபோசலை ஏற்றதற்கு நன்றி. உன்னை பார்க்கணும்.. ஜஸ்ட் ஒருமுறை.. கொஞ்சம் பேசணும். அப்புறம் நீ நிம்மதியா இரு.. தொந்திரவு செய்யமாட்டேன். ம்.. டைம் கொடேன்” என அனுப்பிவைத்தான்.

சஹாவிற்கு அந்த செய்தியை பார்த்ததும் ஏனோ அழுகையாக வந்தது. பதிலே அனுப்பவில்லை.. பார்த்துவிட்டு அப்படியே இருந்துக் கொண்டாள்.

விடிய விடிய பதில் வருகிறதா என பார்த்துக் கொண்டே இருந்தான், கௌரி. அழைத்து கேட்கவும் சட்டென வரவில்லை ‘வேண்டாம்.. எதோ நிம்மதியாக இருக்கேன்னு சொல்றா’ என தோன்றுகிறது. ஆனாலும், அவளின் பதிலையும் எதிர்பாராமல் இருக்க முடியவில்லை. கெளரிக்கு, தன் நிலையை நினைத்து சிரிப்பாகத்தான் வந்தது. கடந்தகாலத்தின் சிக்கல்கள் எல்லாம் நினைவில் வந்தது.. முகம் இறுக்கமாகி கொண்டது.. நடு இரவில் மொட்டைமாடிக்கு சென்றுவிட்டான்.

  

Advertisement