Advertisement

வரம் கொடு! தவன் காண்கிறேன்!..

11

சஹா, இன்னும் சரியாகவில்லை. மாலை மணி ஏழு. அப்படியே தன்னறையில்.. புரண்டு புரண்டு படுத்தவண்ணம் இருந்தாள். என்னமோ மனதே சரியில்லை ‘ஏன் என்னை ஆளாளுக்கும் ஏலம் போல கேட்க்கிறார்கள்.. நானென்ன அவ்வளவா இறங்கி போய்விட்டேன்..’ என குழப்பத்தோடுதான்  இருகிறாள்.

மித்ரன் எழுந்து “ம்மா.. மினுக்கி இன்னும் காணோம்..” என வாசலுக்கும் உள்ளுக்கும் நடக்கும் போதுதான் கொஞ்சம் ஸ்மரணை வர பெற்றவள்.. மதியம் நடந்தவைகளை யோசிக்க தொடங்கினாள்.

மித்ரன், அப்படி அவளை யோசிக்க அனுமதிக்கவில்லை. அடுத்த வாரம் முதல் தொடங்க இருக்கும் எக்ஸாம்க்கு படிக்கிறேன் என தன் ஸ்கூல் போக்கோடு வந்து அமர்ந்தான். 

சஹாவும் தன்னை தேற்றிக் கொண்டு.. அவனை கவனிக்க தொடங்கினாள்.

சஹா, அன்னை தந்தையின் முகத்தை பார்க்கவில்லை. மித்ரன் உறங்கும் வரை பெரியவர்கள் அமைதியாக இருந்தனர். மித்ரன் உறங்கவே இன்று 10 மணிக்கு மேல் ஆனது. எனவே, அதன்பிறகுதான், அவளின் தந்தை தனபால் வந்து, மகளின் அருகில் வந்து அமர்ந்தார்.

வாசல் போர்ட்டிகோவில்.. ஃபோன் போட்டிருந்தனர். அவர்கள் வீட்டை சுற்றிலும் நிறைய செடி இருப்பதால்.. கொசு தொல்லை உண்டு.. எனவே, அந்த போர்ட்டிகோவில் இப்படி இரவில் யாரெனும் அமரும் போது.. goodnight.. ஃபோன்.. என எல்லா உபகரணங்களின் துணையோடுதான் அமருவார். அப்படிதான் இன்றும், மித்ரனை தன் மடியில் கிடத்திக் கொண்டு.. எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள், சஹா.

சஹாக்கு, மனதில்.. கௌரி அப்படி தன்னை கேட்டது என்னமோ பிடிக்கவில்லை அவளுக்கு.. ‘எதனால் அப்படி கேட்டிருப்பாங்க.. எத்தனை சொல்லி இருக்காங்க சுகு ஆன்ட்டி அவனை பற்றி’ என எண்ணம்தான். ‘அப்போ, என்மேல் பரிதாபப்பட்டு கேட்டிருப்பாங்க போல.. ம்.. இருக்கும்.  ஆனால், அப்படி அவன் குரல் இல்ல.. எதோ ஆசைப்பட்டு கேட்டது போல இருந்தது..’ எனவும் எண்ணம் எழுந்தது.

சஹா, ‘நான் பேசியது கொஞ்சம் அதிகப்படிதான், ஆனால், என்னை அவன் பெண் கேட்க்கும் போது.. என்னோட பேச்சு கொஞ்சம் குறைச்சல்தான்.. ஆனால், அவன் தனிப்பட்ட விஷயத்தை.. நான் அவனிடம் கேட்டிருக்க கூடாது.’ என ஒரு யோசனை. ‘நான் சும்மா கேட்க்கலை.. என்னை பற்றி அவர் பேசியதால்.. எதோ ஒரு ஆதங்கத்தில் பேசினேன்.. சும்மாவா கேட்டேன்’ என ஒரு யோசனை. 

ஆக, இந்த ஏகாந்தத்தில்.. அவளுக்கு மற்றைய எண்ணங்கள் எல்லாம் அறுபட.. வந்து நின்றவன் என்னமோ ‘கௌரி’ மட்டுமே. 

இப்போது, அவளின்  தாய் அருகில் வந்து, பேரனை தூக்கினார்.. சஹா “ம்மா.. ஏன் ம்மா” என்றாள்.

பிருந்தா “பெட்டில் விடுறேன்.. அப்பாகிட்ட பேசிட்டு வா” என்றார்.

அப்போதுதான் தன்னருகில் ஒரு சேரில் அமர்ந்திருந்த தந்தையை பார்த்தாள் பெண்.

 சஹா “ஏன் பா.. சொல்லுங்க” என சொல்லிக் கொண்டே.. அமர்ந்த வாக்கிலேயே அவரின் மடியில் தலைசாய்த்தாள், பெண்.

மென்மையாக மகளின் தலைகோதினார் தனபால்.. பின் “என்ன சொல்றது.. அந்த பையன்.. எதோ காதல் அது இதுன்னு இருக்கான் போல.. வீட்டில் மிரட்டி உருட்டி.. உன்னை கல்யாணம் செய்துக்க சொல்லியிருக்காங்க. அதான் பிரச்சனையாகிடுச்சி.. ம்..” என்றார் நிதானமான குரலில். நடந்து முடிந்த பிரச்னையை எடுத்து விளக்கினார்.

பின் தந்தையே “நீ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிற டா..” என்றார்.

சஹா கழுத்தை நிமிர்த்தி தந்தையை பார்த்தாள்.

தந்தை பல் தெரியாமல் புன்னகைத்தார்.. சின்ன வருத்தத்தின் சாயல் அதில் தெரிந்தது.. மகளுக்கும் புரிந்தது. ‘ம்.. இத்தோடு இந்த 11/2 வருடத்தில்… எத்தனைமுறை சொல்லிவிட்டார்.. நாங்க மித்துவை பார்ப்போம்.. அவனை நீ வந்து வந்து பார்த்து போனால் போதுமென’ எத்தனைமுறையோ சொல்லிவிட்டனர்.. என அந்த புன்னகைக்கு அர்த்தம் புரிந்துக் கொண்டாள் பெண்.

சஹா “பா, வேற பேசுங்க.. இப்போ என்ன, அந்த பையனுக்கு.. அவன் காதலித்த பொண்ணோட நிச்சயம் ஆகிடுச்சா.. “ என்றாள்.

தனபால் “அதென்னமோ.. நடக்கட்டும். உன் கல்யாணம் தான், இப்போ பேச்சு” என்றார். பின் “என்னமோ எனக்கு நெருடிட்டே இருந்தது.. ஆனால், அதுக்கு தகுந்தார் போலவே எல்லாம் நடந்திடுச்சி. என்னமோ.. வாத்தியார்தானேன்னு ஆளாளுக்கும் வந்து பார்த்துட்டு போறாங்க போல டா.. ஏமாத்திட்லாம்ன்னு நினைச்சிட்டாங் போல” என்றார் என்னமோ ஓய்ந்த குரலில்.

சஹா “விடுங்க பா.. இப்போ எல்லாம்.. எல்லாருக்கும் எல்லாம் நடக்குது. இதில் நாமமட்டும் என்ன எக்ஸ்சப்ஷனா.. “ என்றாள்.

தனபால் “ம்.. சரிதான். ஆனால், என் பிரென்ட் ஒன்னு கேட்டான்.. அதை எப்படி எடுப்பதுதான் தெரியலை.. அவனும் எல்லோர் போலதான் இருப்பனா.. இல்லை, நம்பலாமா என தெரியலை.. ம்..” என்றார் புதிராக.

சஹா “ம்.. யாரு பிரெண்ட்.. உங்களுக்கு இருக்கிற ஒரே பிரென்ட் ரத்தினம் அங்கிள்தான். அவர்  என்ன சொன்னாங்க..” என்றாள்.

தனபால் மதியம் நடந்ததை சொன்னார்.

சஹா, சாதாரணமாக கேட்க தொடங்கினாள். ஆனால், கௌரி பேசியதற்கும்.. இப்போது பெரியவர்களும் அதையே பேசவும்.. கௌரி பேசியது..  இப்படி, ஒரு கல்யாண ப்ரோபோசலாக இருக்கும்.. என எண்ணவேயில்லை பெண். அதுவும் எல்லாம் தெரிந்த என்னிடமே.. மகனின் திருமணத்திற்கு கேட்ப்பார்கள் பெரியவர்கள்.. என அவள் எண்ணியிருக்கவில்லை. கௌரி எதோ பாவப்பட்டு தன்னிடம் ப்ரபோஸ் செய்தான் என எண்ணி இருந்தவளுக்கு.. இது அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்தெடுத்த முடிவு என தெரியவும்.. அதிர்ச்சிதான் தாக்கியது அவளை  “என்ன பா.. உண்மையாகவே, அங்கிள் கேட்டாரா..” என்றாள்.

தனபால் “ம்.. முன்னாடியே, உன்னை பெண் கேட்க நினைச்சாங்களாம். கௌரி, ஊரிலிருந்து வரட்டும் என வெயிட் செய்திருக்காங்க. அதற்குள்.. இந்த வரன் நமக்கு வந்திருக்கு.. நாமும் பூ வைக்க வராங்கன்னு சொல்லி கூப்பிட்டோம். ‘இப்போது எதுவும் இல்லை என்றாகவும்.. நாட்களை கடத்த எண்ணமில்லாமல் ரத்தினத்திற்கு. இப்போவே பெண் கேட்க்கிறோம்..’ என சொல்லி உடனே கேட்டுட்டாங்க. எனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை.. அமைதியாகவே இருந்துட்டேன்.” என சொல்லி அமைதியானார் இப்போதும்.

சஹா, தந்தையின் மடியிலிருந்து தன் கழுத்தை எடுத்துக் கொண்டாள்.. அப்படியே முதுகின் எலும்புகள் எல்லாம்.. நேராய்.. கோர்த்துக் கொண்டது போல.. நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள் பெண்.. எதை யோசிக்க.. எதை எண்ணி அழ.. எதை எண்ணி சிரிக்க.. என தெரியவில்லை அவளிற்கு.. அமர்ந்திருந்தாள், அதிர்ச்சியில்.

இப்போது அவளின் தந்தையே தொடர்ந்தார்.. “ஈவ்னிங் கூட பேசினான்..ரத்தினம். என்ன முடிவெடுத்திருக்கீங்க.. என்ன சொல்றான்னு(சஹா) கேட்டான். ‘எனக்கு என்ன இருக்கு.. உன்கிட்ட இன்னும் பேசலை.. உன்னை கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன். அத்தோட, கௌரி இப்போவெல்லாம் இங்க வரான் போறான்.. ITயில் வேலை என்பதால், அப்படி சொல்ல முடியாது.. என்ன வேலையாக இருந்தாலும்.. அவரவர் விருப்பங்கள்தானே. என்னமோ.. எதோ.. பழக்க வழக்கத்தில் மாறுபாடு இருந்ததுதான். இப்போ ஏதும் கௌரி அப்படி இல்லை.. என்கிறான். நீ, அவன் வாழ்வில் வந்தால்.. எல்லாம் மாறிடும்ன்னு சொல்றான். இதெல்லாம் எனக்கு புரியுது. ம்.. என் நண்பனின் மகன்.. எனக்கு சின்னதிலிருந்து தெரியும்.. பார்த்திருக்கேன். உன்னை எப்படி ரத்தினம் பார்க்கிறானோ.. அப்படிதான் நான் கெளரியை பார்க்கிறேன். அதனால், எனக்கு புரிகிறது..” என அமைதியானார்.

சஹா அப்படியே எங்கோ வெறித்துக் கொண்டே நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.

தனபால் “ம்.. உனக்கு எப்படின்னு நீ சொல்லு. கட்டாயம் இல்லை எதுவும். மத்தபடி நீ சொல்லுடா.. நான் இந்த நண்பனை நம்பவா..” என்றார் தாழ்ந்த குரலில்.

இப்போது, பிருந்தா வந்தார் கையில் பால் எடுத்துக் கொண்டு. கணவரின் கையில் ஒன்றை கொடுத்தார். சஹாவின் அருகில் அமர்ந்து.. அவளிடம் ஒன்றை கொடுத்தார். 

பிருந்தா “சஹா, அவங்க சொல்லும் போதே.. மித்ரனையும் நாங்க பார்த்துக்கிறோம்’ன்னுதான் கேட்டாங்க.. “ என ஆரம்பித்து.. பேச தொடங்கினார் அன்னை.

சஹா, அன்னையின் பேச்சில் ‘மித்ரன்’ என்பவன் வரவும்.. கொஞ்சம் தளர்ந்து அமர்ந்தாள்.. அன்னை கொடுத்த பால் எடுத்து பருகினாள். 

பிருந்தா “என்ன டி, ஏதாவது பேசு டி” என்றார்.

சஹா “ஒரு ரெண்டுநாள் டைம் கொடும்மா..” என்றாள், முகத்தில் எதையும் காட்டாமல். ஆனால், மனதில் அத்தனை குழப்பம்.

பிருந்தா என்ன பேசுவது என தெரியாமல் கணவர் முகத்தை பார்த்தார். தனபால் ‘இனி ஏதும் பேச வேண்டாம்’ என தலையசைத்தார். பிருந்தாவும் அமைதியானார்.

சஹா, உள்ளே எழுந்து சென்றாள்.

சாகம்பரிக்கு அன்று தொடங்கி அடுத்த ஒருவாரமும் யோசனைதான். ம்.. ‘அவளுக்கு யோசனைதான். ஆனால், எதைபற்றி யோசிப்பது என தெரியாத யோசனை. அவனை மணப்பது பற்றி யோசிக்கனுமா.. இல்லை,  அவனின் கடந்த காலம் பற்றி யோசிச்சு பதில் சொல்லனுமா.. இல்லை, நானும் மித்ரனும்.. சேர்ந்து இருக்க போகிறோம் என யோசிக்கனுமா.. இல்லை, அவனோடு நாங்கள் என யோசிக்கனுமா.. இல்லை, திருமணம் முடிந்து அவனின் பழக்க வழக்கம் எப்படி இருக்கும் என யோசிக்கனுமா.. இல்ல, எப்படி நான் தப்பிப்பது என யோசிக்கனுமா..  எதை யோசிக்கணும் என தெரியாமல்.. தட்டு நிறைய உணவை போல.. கௌரி. ஆனால், எதை முதலில் புசிப்பது.. புளிக்குழம்பையா.. கூட்டையா.. சாம்பாரையா.. இல்லை இனிப்பையா.. என தெரியாமல் சென்றது, பெண்ணுக்கு.

Advertisement