Advertisement

வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!..

10

அன்று, தனபால்.. ரத்தினம் இருவரும் காரில் கிளம்பி வெளியே சென்றனர்.  பஞ்சயாத்து அலுவலகத்தில் தெண்டர்.. எனவே, ஏலம் எடுப்பவர்கள்.. வாத்தியார்.. பாங்கில் வேலை செய்தவர்  என தனபால் ரத்தினம் இருவரையும்  சாட்சி கையெழுத்திட.. கூப்பிட்டிருந்தனர். வேலை முடித்து அவர்கள் கொடுத்த டீ காபி உபசரிப்பை முடித்துக் கொண்டு கிளம்பினர் வீடு நோக்கி.

இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க.. தனபால் “ரத்தினம், சஹாக்கு.. ஒரு வரன் வந்திருக்கு..”இங்கதான்’ என ஒரு ஊரின் பெயரை சொன்னார். ”என் சித்தப்பா மகனின் சொந்தம். அதாவது அவங்க மனைவியோட ஒண்ணுவிட்ட அக்கா பேரன். வீட்டோட மாப்பிள்ளையா வரேன்னு சொல்லிட்டாங்க. நாளைக்கு பூ வைக்க வரேன்னு சொல்லியிருக்காங்க. பையன் படிப்பு கம்மி.. எதோ டிப்ளமோ.. அத்தோட, க்கும்.. வசதி வாய்ப்பும் இல்ல… வேலை ஏதும்  இல்ல.. நம்ம வீட்டோடையே வரேன்னு சொல்லிட்டாப்படி.. ஏதாவது தொழில் வைச்சி கொடுத்திடனும். ஒரே பையன்.. மத்தபடி குறைன்னு ஒண்ணுமில்ல.. ஆனால்..” என சொல்லி நிறுத்தி.. தன் நெஞ்சை நீவிக் கொண்டே பேச்சை நிறுத்தி,  தன் நண்பனை பார்த்தார், தனபால்.

ரத்தினத்தின் முகத்தில் சின்ன வருத்தம் வந்து போனது. ஆனாலும், மகனோடு.. சஹாவை நிறுத்த அவருக்கும் கொஞ்சம் யோசனைதானே, எனவே, தன்னை தேற்றிக் கொண்டு “சொல்லவேயில்ல.. பாலு. பையன் எப்படி.. நல்லா பழகுறானா.. படிப்பு வசதியை விடு.. பையன் குணம் எப்படி..” என்றார்.

தனபால் “தெரியலை.. அக்ஷ்யாவிற்கு, விசாரித்தேன்.. ஆனால், இப்போ விசாரிக்க தெரியலை.. பார்க்க நல்லா இருக்கான். சஹாகிட்ட போட்டோ காட்டினேன்.. புல்லை என்னமோ பார்க்கவேயில்ல. ‘நீங்க சொன்னால் சரிப்பான்னு சொல்றா’. அஹம்…” என நிறுத்தினார்.

ரத்தினம் அமைதியாகவே இருந்தார் பேசி முடிக்கட்டும் என.

மீண்டும் தனபால் “குடும்பம் தெரிஞ்ச குடும்பம் அப்படினாலும், என்னமோ நெருடுது.” என்றார் யோசனையாக. 

ரத்தினம் அமைதியாகிவிட்டார். என்ன பேசுவது என தெரியவில்லை. ‘தன் மனதில் முதலில் ஒரு எண்ணமிருக்க.. இப்போது தான் எதுவும் சொல்ல கூடாது’ என எண்ணி அமைதியானார்.

தனபாலுவை அவரின் வீட்டில் இறக்கிவிட்டு வீடு வந்தார் ரத்தினம். 

வீடு வந்த ரத்தினத்திற்கு, தன் மனைவியிடம் இந்த செய்தியை மறைக்க தோன்றவில்லை.. ‘அவள் சங்கட்படுவாள்.. கொஞ்சம் BP ஏறும்’ என பயம் இருந்தாலும்.. ரத்தினம் தன் மனைவியடம் தன் நண்பன் சொன்னதை சொல்லினார்.

சுகுமாரிக்கு, அழுகைதான் வந்தது. எப்படியேனும், தன் மகனிடம் பேசிவிடலாம்.. அடுத்த வராம் அவன் வெளிநாட்டிலிருந்து வந்துவிடுவேன் என்றான். அதனால், பேசி.. எப்படியும் ஒரு முடிவு எடுத்துவிடலாம்.. என எண்ணிக் கொண்டிருந்தவர்க்கு, இது அதிர்ச்சியாக வந்த செய்தி.. எனவே, அழ தொடங்கினார். 

அன்று கௌரி, சஹாவோடு பேசியத்தோடு சரி, தன் அன்னையிடம் பேசவில்லை. அலுவலக வேலையாக வெளிநாடு சென்றுவிட்டான். அன்னையிடம் சொல்லித்தான் சென்றான். ஆனால், இரண்டுவாரம் என்றவனுக்கு, நான்குவாரம் ஆகிவிட்டது. எனவே, அடுத்த வாரம்தான் வருகிறான். ஆனாலும் ‘திருமணம் பற்றி பேசக் கூடாது’ எனதான் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ரத்தினம், மனையாளை சமாதானம் செய்ய முயன்றார்.. செய்ய முடிந்ததா! என தெரியவில்லை. ஆனால், நேரம் ஆக ஆக.. சுகுமாரி அமைதியானார் அழவில்லை. மதியம் கணவனோடு அமர்ந்து உண்டு முடித்து.. உறங்க சென்றுவிட்டார். ரத்தினம் ஏதும் பேச்சுக் கொடுக்காமல் அமைதியாக இருந்தார்.

மாலையில்.. கிட்டத்தட்ட ஏழு மணி இருக்கும். தன் மகனுக்கு, அழைத்தார்.. சுகுமாரி. அவருக்கு டெம்பர் ஆனால் பேச வேண்டுமே.. எனவே, அழைத்துவிட்டார்.

மகன் போனை எடுக்கவும்.. எப்படி இருக்க என கூட கேட்க்காது “ஏன் டா, எத்தனை தரம் சொல்கிறேன் கல்யாணம் செய்துக்கோ.. நல்ல பெண்ணாக நான் பார்க்கிறேன்னு சொல்றேன்.. அதென்ன முடியாதுன்னு சொல்ற. இப்போ பாரு, சஹாவிற்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சி. இனி என்ன பண்ணுவேன். என் பேச்சை எப்போதும் கேட்க்கவே மாட்டியா நீ” என அழத் தொடங்கினார், கடகடவென.

ரத்தினம் தோட்டத்தில்தான் இருந்தார். அவருக்கு மனையாள் அமைதியாக இருப்பதால் ஏதும் தோன்றவில்லை. அத்தோடு BP எல்லாம் நார்மலில்தான் இருந்தது. எனவே, செடிகளுக்கு  தண்ணீர் விட சென்றுவிட்டார்.

தனியாக இருந்த சுகுமாரி இயல்பாக யோசித்ததில், தன் மகன் வாழ்க்கை மீண்டும் இப்படி வீணாகிறதே.. என தோன்ற மகனுக்கு அழைத்துவிட்டார். நேரம்  காலம் தெரியாமல்.

விடியற்காலை நேரம் அங்கே.

கெளரிசங்கர், அன்னை என்ன சொல்லுகிறார் என தோன்ற..  அது அவனுக்கு புரியவே ஐந்து நிமிடம் ஆனது. ஆக, அவனுக்கு புரிந்த விஷயம்.. எல்லோருக்கும், அதாவது சஹாவிற்கு உற்பட எல்லோருக்கும்.. கல்யாணம் நிச்சயமாகிட்டது. நீ இன்னும் இப்படியே இருக்க.. என்பதுதான்.

அதனால் கௌரி “நான் என்னம்மா செய்ய அதுக்கு. அவளுக்காக எல்லாம் நான் கல்யாணம் செய்துக்க முடியாது.” என்றான் தூக்க கலக்கத்தில்.

சுகுமாரி “டேய், அவளைத்தான் டா, உனக்கு பெண் கேட்க்கலாம்ன்னு இருந்தேன். அதுக்குதான் எப்படி எப்படியோ.. உன்கிட்ட பேசினேன்.. நீதான் கல்யாணமே வேண்டாம்ன்னுட்ட.. போடா.. நல்ல பொண்ணு. உன்னை கொஞ்சம் மாற்றி வைப்பான்னு நினைச்சேன்” என முடிக்க கூட இல்லை அன்னை.

கௌரி தெளிந்த இறுக்கமான குரலில்  “என்னை என்ன மாற்றனும். நான் என்ன தப்பாக இருக்கேன்.. ம்..” என்றான் விசாரணை குரலில்.

சுகுமாரி “டேய், அப்போ எல்லோரையும் போல கல்யாணத்திற்கு ஒத்துக்கோ..” என்றார் தன் பிடியிலேயே நின்று.

கௌரி “காம்ப்ளிகேட் பண்ணாத ம்மா” என்றான். உறக்கம் எல்லாம் கலைந்துவிட்டிருந்தது. எனவே இப்போது “யாருக்கு கல்யாணம்.. சாகம்பரிக்கா.. அந்த சின்ன பையனோட.. சேர்த்து..” என தயங்கி கேட்ட வந்ததை கேட்டாமல்.. அப்படியே நிறுத்திக் கொண்டான்.

சுகுமாரி “ம்.. வீட்டோட மாப்பிள்ளையாக வராங்களாம். நாளைக்கு நிச்சயம் மாதிரி.” என்றவர் தன்னை தானே சுதாரித்துக் கொண்டு “சரிப்பா, அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சி. நீயும் அதே போல.. கல்யாணத்திற்கு ஒத்துக்கோ.. ம்.. நல்ல சேதி சொல்லுப்பா, நான் பெண் பார்க்கிறேன்” என்றார்.

கௌரி “பை ம்மா.. அப்புறம் பேசறேன்..” என சொல்லி அழைப்பை துண்டித்தான்.

கௌரி புரண்டு படுத்துக் கொண்டான்.. என்னமோ கண்களை மூட முடியவில்லை.. எதிரில் அவள் நிற்பது போல ஒரு பிம்பம். என்ன உணருகிறான் என புரியவில்லை. தன்னுடைய இந்தியன் போனை எடுத்தான். அன்று அவள் அழைத்த நேரத்தை கணக்கிட்டு தன் போனில் அவளின் எண்ணை தேடினான். என்னமோ ஒரு பதட்டம் அவனுக்கு.. கிடைக்கவில்லை. சரியாக இந்த எண்தானா.. என தெரியவில்லை அவனுக்கு. பேச வேண்டும் போல இருந்தது.. நம்பர் கிடைக்கவில்லை எனவும்.. ‘என்ன கேட்பது அவளிடம்.. என்ன பேசுவ நீ’ என மனதில் கேள்வி எழ.. அமைதியாக எழுந்துக் கொண்டான்.

இங்கே,

மாலையில் பிருந்தா, சுகுமாரிக்கு அழைத்து.. “சஹாவை பெண் பார்த்து பூ வைக்க வராங்க.. நீங்க கண்டிப்பா வந்திடனும்” என அழைத்தார். ரத்தினத்திடமும் பேசி அழைத்தார்.

சுகுமாரி கொஞ்சம் தேறி இருந்தவருக்கு, மனது வருத்தம் கொண்டது, மீண்டும். ஆனாலும் ‘பெண் நல்லா இருக்கனும்..’ என தன்னக்குள் சொல்லிக் கொண்டு வேலையை பார்க்க தொடங்கினார். ரத்தினமும் மெதுவாக எதோ பேச தொடங்கினார் மனையாளிடம்.

மறுநாள்.

காலையிலேயே சாகம்பரியின் வீடு ஒரு சின்ன விழாவிற்கு தயாரானது. தனபாலின் அண்ணன் அக்கா வந்து சேர்ந்தனர் அதிகாலையிலேயே. எல்லோரும் இருபது கிலோமீட்டர் தூரத்தில்தான் இருப்பார். எனவே வந்துவிட்டனர்.

மாப்பிளை வீடு வருவதாக சொன்ன நேரமும் வந்தது. ஆனால், இன்னும் அவர்களை காணோம்.

மித்ரன் இன்று விடுமுறை எடுத்துவிட்டான். சஹாதான்.. ‘வரவங்களை இவன் பார்க்கணும்.. பழகனும் மா.. அதனால் இன்னிக்கு மித்து லீவ்..’ என்றாள் தன் அன்னையிடம்.

ஒன்றும் சொல்லவில்லை அவளின் அன்னை பிருந்தா. சரிதானே.. வீட்டோடு மாப்பிள்ளை.. பின் எதற்கு தயக்கம்… அவர்களும் பழக பேச இருந்தால் நல்லதுதானே என.. அமைதியானார்.

 சுகுமாரியும் ரத்தினமும் வந்து சேர்ந்தனர். 

தனபால், தன் சித்தப்பா மகனிடம் வந்து நின்றார் “என்ன ண்ணா, கொஞ்சம் போன் போட்டு விசாரிங்க.. ஏன் லேட்டுன்னு” என சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரும் “கூப்பிட்டுக்கிட்டுதான் இருக்கேன் பாலு, என்னமோ அவங்க எடுக்கலை.. என்னான்னு தெரியலையே.. வர வழியில் ஏதேனும் ஆகிடுச்சோ என்னமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு” என்றார்.

பின் பேச்சுகள் சென்றது,

சற்று நேரத்தில் அந்த சித்தப்பா மகன் வந்தார் தனபாலிடம் “பாலு, அங்க அவங்க வீட்டில் எதோ பிரச்சனையாம். எதோ பையன்.. காதல் அது இதுன்னு, யாரோ ஒரு பொண்ணு வீட்டிலிருந்து வந்து நாலுபேர் பேசிகிட்டு இருக்காங்களாம். என் பொண்டாட்டி, பக்கத்தில் உள்ளவங்களுக்கு கூப்பிட்டு பேசியிருக்கா..” என சொல்லி தனபாலின் கையை சட்டென பிடித்துக் கொண்டார்.

தனபால் அப்படியே அமர்ந்தார் சோபாவில். ஒன்றும் பெரிதாக ஆட்கள் இல்லை. வெளியாட்கள் என பார்த்தால் சுகுமாரியும் ரத்தினமும் மட்டுமே. மற்றபடி எல்லோரும் உடன்பிறந்தோர்கள்தான்.  எனவே, என்ன சொல்லுவது என தெரியாமல் அமைதியாகிவிட்டார் தனபால். ஆனாலும், சொந்தங்கள் எல்லாம் ஏதும் பேசவில்லை.. தனபாலின் வருத்தம் தெரிந்து.. அமைதியாகினர்.

பிருந்தா அமைதியாக அழுகை தொடங்கினார்.

சஹாவிற்கு விஷயம் தெரிய.. எல்லோரின் முகமும் போன போக்கை பார்த்தவள்.. மித்ரனை பார்த்தாள். அவனோ ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தான். சஹா, “மித்து.. வா டாட்டா போலாம்” என அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பி சென்றுவிட்டாள்.

யாரின் முகத்தையும் பார்க்கவில்லை. அன்னை தந்தை அத்தை சித்தி என யாரின் முகத்தையும் அவள் பார்க்கவில்லை. கோவமில்லை ஒரு மெத்தனம்.. ‘எனக்கு இவன் போதும் என்கிறேன் கேட்கமாட்டேன் என்கிறார்கள் இவர்கள்.. இப்போ பாருங்க, நான் சொன்னபடிதானே நடக்குது. என்னமோ செய்யட்டும்’ என மெத்தனம் வந்து சேர்ந்தது அவளிடம். கிளம்பிவிட்டாள் அங்கிருந்து.. மித்ரனோடு நேராக ஐஸ்கிரீம் பார்லர் சென்றாள். பெரிய பாக் வாங்கினால்.. இருவரும் அங்கேயே அமர்ந்து.. உண்ணத் தொடங்கினர். மித்ரன் கேள்வியாக கேட்டான்.. சஹா அனைத்துக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வீட்டில், அடுத்த ஒருமணி நேரத்திற்கு பிறகு.. தனபாலின் செல்லுக்கு தகவல் வந்தது அந்த வராமல் போன மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து.

அதை தொடர்ந்து, இரண்டு மணி நேரம் தனபாலுக்கு சொந்தங்கள் எல்லாம் வருத்தமா சொல்லி.. நல்ல வார்த்தை சொல்லி.. என யாரும் உண்ணவில்லை.  அப்படியே பேசிக் கொண்டிருந்தனர். 

சுகுமாரிக்கு பரமானந்தம், இப்போது. தன் கணவரையே பார்த்தார்.. ரத்தினம் மனையாளை பார்க்கவேயில்லை.  எங்கே! மனையாளை பார்த்தால்.. சிரித்து முகம் விகாசிக்க.. தன் அருகில் வந்து.. இப்போதே பெண் கேளுங்கள் என சொல்லிவிடுவாரோ என பயம் அவருக்கு. எனவே மனையாளை பார்க்காமல் அமர்ந்திருந்தார்.

ஆனால், சுகுமாரி ரத்தினத்தை எதிர்பார்க்கும் அளவுக்கு பயந்தவர் இல்லை போல.. எல்லா சொந்தகளும் இருக்கும் போதே.. “தனபால் அண்ணா, “ என தொடங்கி “இந்த நேரத்தில் பேசறோம்ன்னு நினைக்காதீங்க. முன்னாடியே பேசியிருக்க வேண்டியது. என் பையன் வெளிநாட்டில் இருக்கான். அவன் வந்ததும் பேசலாம்ன்னு நினைச்சோம்..” என கணவர் முகத்தை பார்த்தார்.

Advertisement