Advertisement

வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!

9

கெளரிக்கு, அவ்வபோது வேலைக்கு நடுவே அடிக்கடி.. சாகம்பரியின் முகம் நினைவு வந்தது. அன்று தன் பேச்சை கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்த சாகம்பரியின் முகம் நினைவில் வந்தது. ஏன்! இந்த முகம் என்னை தாக்குகிறது’ என அதையே மீண்டும் எண்ணிக் கொள்வான்.. ‘நான் அன்னிக்கு பேசியிருக்க கூடாது.. யாரின் வாழ்க்கை எப்படி இருக்குமென நான் ஏன் சொல்ல வேண்டும்என எண்ணிக் கொண்டேசாகம்பரிஎன அவளின் பெயரை தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் கௌரி. இது இந்த நாட்களில் அவனின் அனிச்சை செயலானது.   

சாகம்பரிக்கு நாட்கள் முள்மேல் பயணமானது. தினமும் எப்படியும் ஒரு.. ஒரு ஜாதகம்.. மாப்பிள்ளை.. என பெற்றோர் பேசி விசாரிக்க தொடங்கிவிட்டனர். அத்தோடு சொந்தகளும்.. வர போக.. இப்போது சாகம்பரிக்கு மாப்பிள்ளை வேண்டும் என்பதுதான் சொந்தங்களிடம் பேச்சு. அதனால், சஹாக்கு மன வருத்தம்தான். ம்.. எப்படியும் எந்த பேச்சாக இருந்தாலும் அவளிடமே வந்து முடிந்தது.

பிருந்தாவிற்கு கவலைதான் அதிகமானது. எப்படியும் பேரனை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என எல்லா வரன்களிடம் சொன்னாலும்.. சட்டெனஅப்புறம் கூப்பிடுறோம்என சொல்லிவிடுங்கினர் மாப்பிள்ளை வீட்டார். எனவே, பயம் வந்தது அன்னைக்கு. அதனாலேயே சீக்கிரம் பெண்ணுக்கு திருமணத்தை முடித்திட வேண்டும் என எண்ணம் வந்தது அவருக்கு.

சுகுமாரி, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்லுவார்.. அப்படிதான் இன்று தன் கணவரோடு மருத்துவனை சென்றுவிட்டு  காரில் வந்துக் கொண்டிருந்தார்

சுகுமாரிஏங்க, சஹாகிட்ட நேற்று பேசினேன்.” என்றார்.

ரத்தினம்ம்.. என்ன சொல்றா.. இப்போவெல்லாம் வீட்டுக்கு வரதேயில்ல.. அந்த குட்டி பையனையும் காணோம்..” என்றார்.

சுகுமாரிம்.. இப்போவெல்லாம் எனக்கு ஏதும் மயக்கம் வரதில்ல.. அதனால, அவளை நாம் கூப்பிடறதில்லை. கூப்பிடுங்க.. அவகிட்ட பேசுங்க.. அந்த பிள்ளையை நம்ம கூடயே வைச்சிக்கலாம்.” என்றார் பூடகமாக.

ரத்தினம் சிரித்தார்.. அவருக்கு ஏதும் புரியவில்லை. இந்த கணவன்மார்களுக்கு, சரியாக மனைவிமார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனமட்டும் புரியாது. மற்ற தொழில் விஷயம்.. எல்லாவற்றிலும், எதிரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என புரிந்திடும். ஆனால், வீட்டில் மட்டும் புரியாது. 

இப்போது சுகுமாரி தன் எண்ணத்தை பொறுமையான குரலில் எடுத்து சொன்னார் தன் கணவரிடம். 

ரத்தினம் ஏதும் பேசவில்லை.. அமைதியாக கேட்டுக் கொண்டார்.. என்ன சொல்லுவது என புரியவில்லை.. அவர்களின் நிலையை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோமா.. இல்லை, அவளுக்கு நாம் நல்லது செய்ய மட்டுமே இப்படி யோசித்தாளா தன் மனையாள் என சிந்தனை.. ஆக, எப்படியோ ஒரு விதை.. அவள், மனதில் விழுந்துவிட்டது, அதை எப்படி.. கையாள்வது என யோசனையோடு கூடிய கவலைதான்.. அவருக்கு.

ரத்தினம், அடுத்த இரண்டு நாளும் ஒரே யோசனையில் இருந்தார். அதற்கு அடுத்தநாள், மித்ரனுக்கு விடுமுறை தினத்தில் சஹாவையும் குழந்தையையும் வீடு வர சொன்னார்.

சஹா, சனிகிழமை ரத்தினம் அங்கிள் வீடு வந்தாள், மனதில் ஆண்டவாஅந்த கௌரி அங்கே இருக்க கூடாதுஎன வேண்டிக் கொண்டு வந்தாள்.

அவள் எண்ணப்படியே கௌரி இல்லை. சந்தோஷமாக அந்த நாளை அவள் அங்கே கழித்தாள். மித்ரன் அந்த தோட்டத்தை சுற்றினான்.. ரத்தினம் என்னமோ இந்தமுறை சஹாவை கவனித்துக் கொண்டிருந்தனர். சுகுமாரிக்கு தன் கணவரின்.. பார்வையை கவனித்துக் கெண்டே இருந்தார். என்னமோ அவரின் முகம்,  நேரம் ஆக.. ஆக.. தெளிந்துக் கொண்டே வந்தது.

சஹா, சுகுமாரியிடம்  இயல்பாக பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பினாள், மித்ரனோடு.

சுகுமாரி, அவர்கள் இருவரும் கிளம்பியது முதல்.. தன் கணவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்

ரத்தினம்என்ன சுகுஎன்றார்.

சுகுமாரிஎன்ன, என்ன.. நீங்கதான் சொல்லணும்.. அவளை இன்னிக்கு பார்த்துட்டே இருந்தீங்க.. என்ன ஓடுது உங்களுக்குள்.. எதுவாக இருந்தாலும் சொல்லுங்க என்றார்.

ரத்தினம்என்னடி சொல்றது.. இந்த பொண்ணுக்காக இப்படி ஒரு வாழ்க்கைன்னு தோணுது. அதை நாம் கையிலெடுத்து.. ஏதாவது தப்பாகிட கூடாதேன்னு தோணுது.” என்றார்.

சுகுமாரிஎன்ன என் பையன் அப்படி என்ன.. கெட்டவன்னாஎன்றார் கரகரத்த குரலில்.

ரத்தினம் அமைதியானார்.

சுகுமாரிஎன் பையன் அப்படி என்ன கெட்டவன்.. எதோ வயது கோளாறு. அவளுக்கு வருகிற வரன் பற்றி உங்களுக்கு தெரியுதுதானே.. அதைவிட என் பையன் பரவாயில்ல.. ம்.. என் பையன் அவர்களை விட பெட்டெர் தானே.. அதை சொல்லுங்க என்றார்.

ரத்தினம்தெரியலை சுகுமாரி. ஒரு கமிட்மென்டோடு நடக்கிற திருமணம் எப்படி சரியாக வரும். ..அது.. அன்பால் இருந்தால் எவ்வளோ பெரிய சிக்கலாக இருந்தாலும் தீர்ந்திடும்.. தீர்க்க அவர்கள் முயல்வார்கள்.. இப்படி நமது வசதிக்காக கட்டி ஒட்டி வைத்தால்.. சரியாக வருமா எனக்கு தெரியலை. அத்தோட என் எண்ணம்.. உன் பையன் அந்த சின்ன குழந்தையை எப்படி ஏற்பான்னு நம்புகிறாய் என்றார்.

சுகுமாரிக்கு, சஹாவை தன் மகனுக்கு பெண்ணெடுத்தால் தன் மகன் வாழ்க்கை பொறுப்பானதாக மாறும்.. தன் மகனும் குடும்பத்துடன்  ஒட்டுதலுடன் இருப்பான்.. இங்கே வருவான்.. அவனை சஹா பொறுப்பெடுத்துக் கொள்வாள் என எண்ணி.. அவள் எந்த ரூபமாக, அதாவது ஒரு குழந்தையோடு வந்தால் கூட தன் மகனுக்கு.. திருமணம் செய்யலாம் என எண்ணினார். ஆனால், தன் மகன் எப்படி.. சஹாவை.. இந்த குழந்தையை ஏற்பான் என்பது அவருக்கும் தெரியாத ஒன்று. ஆனால், அதையெல்லாம் மீறி  இந்த பிரபஞ்சரகசியம் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு.. அதை நம்பி இந்த திருமண பேச்சு வார்த்தையை தொடங்கினார் சுகுமாரி.

ரத்தினம்யோசி சுகு..” என்றார்.

சுகுமாரிசரிங்க எப்படி முடியும்ன்னு தெரியலை.. ஆனால், என் மகன் வாழ்க்கைக்காக நான் எடுக்கும் முயற்சி இது. பேசி பார்க்கிறேன் என்றார்.

இரண்டு மாதமும் மகனிடம் திருமணம் திருமணம் எனதான் பேசினார், சுகுமாரி. அதற்கு பயந்தே கெளரிசங்கர் நேரில் வரவில்லை. போன் செய்வதையும் காரணம் சொல்லி குறைத்துக் கொண்டான்.

நாட்கள்தான் கடந்தது இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லை.

!@!@!@!@!@!@!@!@!

மித்ரன், பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டே.

காலையிலேயே கிளம்பி சென்றாள் சாகம்பரி, பள்ளிக்கு.

KG வகுப்புகளுக்கான  இறுதி போட்டிகள் நடந்தது.. ப்ராக் ரேஸ் நடந்தது.. மித்ரன் அதில் இரண்டாம் இடம் வந்தான். ரிலே ரேஸ் நடந்தது.. அதில் அவன் டீம் வென்றது. இப்படியாக நிகழ்ச்சிகள் நடந்துக் கொண்டிருந்தது.

அடுத்து பெற்றோருக்கான விளையாட்டுகள்.. தொடங்கியது. முதலில் ஆண்களுக்குள்.. குழந்தைகளின் தந்தைகளுக்கு என.. ரன்னிங் ரேஸ் நடந்தது. மித்ரன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்து அன்னைகளுக்கு என ரேஸ் நடந்தது.. மைக்கில் குழந்தைகளின் அன்னைகள் அனைவரையும் அழைத்தனர் பள்ளி நிர்வாகத்தினர். அதில் சாகம்பரி வந்து வரிசையில் நின்றாள் முதல் ஆளாக.

மித்ரன் தந்தைகளுக்கு இடையே நடந்த போட்டியின் போதேஇது ரக்ஷ்ன் டாடி.. இது.. ஐஸ் டாடி..’ என வந்தவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்

அடுத்து அன்னைகளுக்கு என நடக்கவும் இன்னும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.. அதில் தன் சஹாவின் முகம் தெரியவும்.. குழந்தைக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.. குதித்தான்.. மேலும் கீழும்.. “சஹாரன்..” என தன் கைகளை தட்டிக் கொண்டே குதித்தான், குழந்தை.

சஹா, மித்ரனை பார்த்துஷ் என வாயில் விரல் வைத்து அமைதிப்படுத்த முயன்றாள்.. ஆனால், மித்ரன் அதை கேட்கவேயில்லை. போட்டி தொடங்கியது.

மித்ரன்  “சஹாசஹா ம்மா என கத்தினான்.. தனியாக.

சஹாவிற்கு அவனின் சத்தம் மட்டும் தனியாக காதில் கேட்பதாக இருந்தது.. அவளால் ஓடவே முடியவில்லை.. அவனின் சத்தமும் கத்தலும் அவன் அன்னை என்ற உறவிற்காக எவ்வளவு ஏங்குகிறான் எனதான் உணர்த்தியது.

சாகம்பரி, எப்படி ஓடினால் என தெரியாது.. ஆனால், மூன்றாம் இடத்தில் வந்துவிட்டால்.. பரிசு என எதோ வண்ண காகிதத்தில் தந்தனர்.. மித்ரன் குதித்துக் கொண்டே இருந்தான்.. கிளப் செய்துக் கொண்டே இருந்தான்

சஹா, கண்கலங்க அவனை பார்த்துக் கொண்டே அந்த பரிசை வாங்கிக் கொண்டாள். என்னமோ, அவளால் அவனை நெருங்க முடியவில்லை.. ஆனால், மித்ரன் பரிசை சாகம்பரி வாங்கிய உடன்.. ஓடி வந்து இடுப்போடு கட்டிக் கொண்டான் குழந்தை. சாகம்பரி ஏதும் பேச முடியாமல் குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

மித்ரன்சஹா, நீ என் அம்மாவா என்றான், பெரிய மனிதனாக.

என்ன சொல்லமுடியும் இப்போது அவளால்.. “ம்.. ஏன் தெரியாதா என்றாள்.

மித்ரன், திருதிருவென விழித்தான் எப்படி ஏற்பது என குழந்தைக்கு தெரியவில்லை.. சஹாவிற்கும் ஒன்றும் புரியவில்லை. அமைதியாக அவனை தூக்கிக் கொண்டு, அந்த கூட்டத்திலிருந்து சற்று தள்ளி சென்று அமர்ந்துக் கொண்டாள்

பத்து நிமிடம் சென்று.. இருவரும் இயல்பிற்கு வந்தனர்.

மித்ரனின் ஆசிரியை வந்து அவனை அழைத்து சென்றார்.

மித்ரன் குதித்துக் கொண்டே அவரோடு சென்றான்.

@!@!@!@!@!@!@!@!@!@!@

Advertisement