Advertisement

வரம் கொடு! தவம் காண்கிறேன்!

7

மித்ரனோடு மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாள் சஹா. குழந்தை இப்போது இன்னும் அடம் செய்தான்.. அவளை விட்டு புரியவே இல்லை அவன்.. அவள்தான் உணவு ஊட்ட வேண்டும்.. அவள்தான் மருந்து தர வேண்டும்.. அவள்தான் உடை மாற்றிவிட வேண்டும்.. என புதிதாக அழ கற்றுக் கொண்டான்.  பிக்ஸ் வந்து தளர்ந்து கிடக்கும் பிள்ளையிடம்.. என்ன செய்ய முடியும், பிருந்தாவும் தனபாலும் அமைதியாகினர்.

இது எல்லாவற்றையும் விட.. மித்ரன் தன் தாத்தா பாட்டியை பார்த்ததாலே அழ தொடங்கினான் பயத்தில்.. தன் அத்தை என அருகில் வரும் தினகரனின் அக்காவிடம் இன்னும் பயம் கொண்டான். அவர்கள் அறை வாசலில் நின்றாலே நடுங்கினான்.. எங்கே தன்னையும் சஹாவை பிரித்து விடுவார்களோ என. இந்த காட்சியை பார்க்க சாகம்பரிக்கு கொடுமையாக இருந்தது. பயம் தினகரனின் அன்னைக்கும் தந்தைக்கும்.. பேரனுக்கு சரியானால் சரி என மருத்துவமனையில், அவன் தங்கி இருக்கும்.. அறையின் வாசலில் அமர்ந்துக் கொண்டனர். உள்ளே செல்லவில்லை.

சாகம்பரி, மித்ரன் உறங்கியதும் அவர்களை அழைத்து வந்து பார்க்க செய்வாள். அவர்களும் பேரனின் சிகை வருடி அமைதியாக இரண்டுநிமிடம் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர்.

இப்போது வீடு வந்துவிட்டனர். எனவே, தினகரனின் அன்னை தந்தை வரவில்லை. மாலையில் சென்றுக் கொள்ளலாம்.. பேரனை பயப்படுத்த வேண்டாம் என எண்ணி இருந்தனர்.

மித்ரன், தன் வீட்டிற்கு.. தானும் சஹாவும் தங்கும் அறையை பார்த்ததும்தான் நிம்மதியானான். ஓய்ந்தே இருந்தவன்.. மினுக்கிக்கு புட் போடறேன்.. என வெய்யிலில் நின்றான். எங்க என் ஸ்பைடர் டி-ஷர்ட் என கேட்டான். இந்த கேள்வியிலும் பேச்சிலும்தான் நிம்மதியானது பிருந்தாவிற்கு.

பிருந்தாவிடம் தினகரனின் அன்னை பேசினார் மதியம் “மாலையில் வருகிறோம்.. பேரன் நல்லா இருக்கனா?, அவனை கஷ்ட்ட்படுத்த நினைக்கல சம்பந்தி.. உங்க பொண்ணு வாழ்க்கையை நினைச்சிதான் அப்படி செய்தோம். எங்களை பயமுறுத்திட்டான்.. மனசில் வைக்காதீங்க” என தொடர்ந்து பேசினார்.

பிருந்தா “அப்படி எல்லாம் இல்லைங்க, உங்களை புரியுதுங்க.. ஆனால், குழந்தையை மீறி என்ன செய்ய முடியும். அவர் சொன்னது போல கடவுள் விட்ட வழி.. பார்க்கலாம். அவன் கொஞ்சம் தெளிந்து வந்துட்டால் போதும் சம்மந்தி.. நீங்க மாலை வாங்க பேசிக்கலாம்” என சமாதானம் செய்து போனை வைத்தார்.

மித்ரனை சுகுமாரி.. ரத்தினமும் வந்து பார்த்து வந்திருந்தனர். 

சம்பந்தி வீட்டு ஆட்களும் வந்தனர் மாலையில். எனவே, பிருந்தா பிஸி. பெண்கள் எல்லோரும் கிட்சனில் பேசிக் கொண்டே இரவு உணவை தயார் செய்தனர்.  சஹாவை அங்கே விடவேயில்லை மித்ரன். தன் தாத்தா பாட்டி வந்திருந்ததால்.. முகம் இறுக்கமாக இருந்தது குழந்தைக்கு “சஹா, என்னை அனுப்பிடுவியா” என்றான் மடியில் அமர்ந்துக் கொண்டு.

சாகம்பரிக்கு ஏதும் பதில் சொல்ல முடியவில்லை “ஷ்..” என்றாள் தன் விரலை வாயில் வைத்து.

மித்ரன் அமைதியாகிவிட்டான். ஏதும் பேசவில்லை. சஹா உணவு ஊட்டிவிட நேரமாக உண்டு, மருத்துகள் எடுத்துக் கொண்டு தன் தாத்தாவிடம் அமர்ந்திருந்தான் உறங்காமல். 

பிருந்தா “மித்து போய் தூங்கு மணி ஆகுது” என்றார்.

மித்ரன் பதில் சொல்லவில்லை.

தனபால்.. தினகரனின் தந்தை எல்லோரும் அப்படியே சொல்லினர் ம்கூம்.. மித்ரன் அமைதியாகவே அமர்ந்துக் கொண்டிருந்தான்.

சஹா “கண்ணு சொக்குது, அப்படியே படுத்துக்கோ, நான் தாத்தாக்கு டிபன் கொடுத்துதான் வருவேன் மித்து.. போடா தங்கம்” என அமைதியாக சொல்லவும்.

மித்ரன் கண்கலங்கிக் கொண்டே “சஹா, நான் தூங்கினால், என்னை அனுப்பிடுவ.. மாட்டேன்” என்றான் விசும்பிக் கொண்டே.

தினகரனின் தந்தை “இல்ல ப்பா, மித்ரன். தாத்தா இனி உன்னை எங்கும் கூட்டி போக மாட்டேன்.. ப்ராமிஸ்.. நீ தூங்கு, அம்மா சாகம்பரி, நீ பேரனை பாரு, நாங்க அப்புறம் சாப்பிடுறோம்” என்றார்.

சாகம்பரி அமைதியாக மித்ரனை தூக்கிக் கொண்டு தங்களின் அறைக்கு சென்றாள்.. “பயப்பட கூடாது. இத்தனைநாள் இங்கதானே இருந்த, அங்கே எதோ டூ டேய்ஸ் போயிட்டு வந்தால்.. இப்படிதான் பேசுவியா. அப்படி எல்லாம் பேசகூடாது. யாரும் உன்னை எப்போதும் எங்கிட்ட இருந்த கூட்டிட்டு போகமாட்டாங்க.. ஓகே.. அழகூடாது. சமத்தா தூங்கு.. ஸ்கூல் போகனும்.. நெக்ஸ்ட் வீக்.. ஆனுவல் எக்ஸாம்.. உடம்பு சரியாகனுமில்ல தூங்கு” என்றாள் பொறுமையான குரலில்.

மித்ரன் “ம்.. “ என சொல்லி கண்கள் மூடிக் கொண்டான். குழந்தையின் மனம் இப்போதுதான் நிம்மதியானது போல.. மருந்தின் தாக்கமும் சேர.. உடனே உறங்கிவிட்டான் மித்ரன்.

சாகம்பரி சற்று நேரத்தில் வெளியே வந்தாள்.. எல்லோரிடமும் பேசிக் கொண்டே வேலைகளை செய்தாள். இப்படியே அன்றைய நேரம் முடிந்தது. எல்லோரும் உண்டு முடித்து வீடு கிளம்பினர்.

இப்படியாக மித்ரன் பெரியவர்களை மிரட்டி உருட்டி தன்னை அந்த இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டான்.

கௌரி தன் வேளையில் பிசியாக இருந்தான். என்னமோ அவன் வரவே மாதங்கள் கடந்தது. சுகுமாரி இரண்டு மாதங்கள் முடிந்ததும் பயம் வந்து சேர்ந்தது. மீண்டும் மகன் தன்னைவிட்டு போய்விடுவானோ.. தன் கனவை ஒன்றுமில்லாமல் ஆக்கிடுவானோ.. என பயம் வந்து சேர்ந்தது… எனவே, அடிக்கடி அழைத்து பேசினார். ஆனாலும், கௌரி பிசியாக இருந்தான். நேரம் எடுத்து பேசவில்லை.. சுகுமாரி தன் வாய்ஸ் மேஸ்சேஜில்.. “கௌரி.. எப்படி ப்பா, இருக்க.. உங்கிட்ட பேசவே முடியறதில்லை. வர வெள்ளி கிழமை உன் பிறந்தநாள் ப்பா.. ரொம்ப வருஷம் ஆச்சு நாமெல்லாம் ஒனன்றாக இருந்து.. இந்த வருஷம் வந்துட்டு போடா.. வாடா தங்கம்..” என ஒரு செய்தியை அனுப்பிவைத்தார்.

கௌரிசங்கரும் “ம்.. ட்ரை பண்றேன் ம்மா, நான் சென்ற வாரம் வரை.. டெல்லியில் இருந்தேன். வேலை சரியா இருந்தது, அதான் உன் கால்ஸ் எடுக்க முடியலை.. வரேன் ம்மா.. கிளம்பும் போது சொல்றேன்.. பை” என அவனும் ஒரு செய்தியை அனுப்பிவிட்டிருந்தான்.

சுகுமாரி, தன் கணவரிடம் இதை காட்டி.. பெருமை பட்டுக் கொண்டார், “பாருங்களேன், இப்போவெல்லாம் சரியா பதில் சொல்லிடுறான்.. எதோ மாற்றம் இருக்குங்க.. நீங்க இந்தமுறை அவன்கிட்ட பேசுறீங்க.. ஆமாம்” என்றார் கட்டளையாக.

ரத்தினம் அமைதியாக இருந்தார். மனையாள் இந்த நாட்களில் சற்று உடல்நலம் தேறி இருக்கிறார்.. மகனை பற்றி ஏதும் பேச வேண்டாம் என எண்ணி அமைதியாகினர்.

சுகுமாரி “அவனுக்கு, இந்த பிறந்தநாளிலிருந்து வயது 31. கல்யாணத்துக்கு பார்க்கலாங்க.. அவனுக்கும் வயசு ஏறுதுல்ல” என்றார் சின்ன குரலில்.

ரத்தினத்திற்கு கோவமாக வந்தது “சுகு, இதெல்லாம் என்கிட்டே சொல்லாதே.. போ, உனக்கு என்ன வேனுமோ செய்துக்கோ.. என்னை கேட்க்காதே.” என்றார் மனையாளின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல்.

சுகுமாரிக்கு மனது வாடி போனது, தன் கணவரிடம், மகனின் திருமணம் பற்றி பேசலாம்.. அத்தோடு, அவரின் நண்பரின் மகளை.. கேட்க்கும்படி..  பேசலாம் என எண்ணியவருக்கு, கணவனின் ஒட்டாத பேச்சு வருத்தத்தை தந்தது, எனவே அமைதியாகிவிட்டார். கிட்செனுக்கு சென்று தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டார்.

வெள்ளிகிழமை, அழகாக விடிந்தது சுகுமாரிக்கு. மகன் அதிகாலையில் தன் பேச்சை கேட்டு வீடு வந்து சேர்ந்தது அத்தனை சந்தோஷம் அவருக்கு. எனவே, மாவிலை கட்டவில்லை.. அதான் குறை, மற்றபடி வீடு விழா கோலம் கொண்டது அதிகாலையில்.

சுகுமாரி, தன் கொழுந்தனார் வீட்டை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். எப்போதும் வேலை செய்பவரோடு இன்று மற்றொரு நபரையும் உதவிக்கு வர சொல்லி இருந்தார் சுகுமாரி. எனவே, காலை உணவு முடித்துக் கொண்டு மகனோடு குடும்பமாக குலதெய்வம் கோவில் செல்லுவதாக முடிவு செய்திருந்தார் அன்னை. அதற்காக கிளம்பிக் கொண்டிருந்தனர்.

கெளரியை எழுப்பினார், அன்னை.

கௌரி “ம்மா, இதென்ன சின்ன பிள்ளையா நான். என்னால் கோவிலுக்கு எல்லாம் வரமுடியாது. நீங்க போங்க.. நான் டிரைவ் செய்து வந்தது டயர்டா இருக்கு.. ப்ளீஸ் டிஸ்டர்ப்.. பண்ணாத” என சொல்லி திரும்பி படுத்துக் கொண்டான். 

சுகுமாரி முகம் வாட கீழே இறங்கி வந்தார். ரத்தினம் மனையாளை.. பார்க்கவும் மகன் எதோ சொல்லி இருக்கிறான் என புரிந்தது. ஏதும் கேட்க்காமல் மனையாளையோடு கோவிலுக்கு கிளம்பினார்.

சுகுமாரி “அவனுக்கு முடியலை, அதான். இன்னொருநாள் வருவான்.” என்றார் காரில் சென்றுக் கொண்டே.

ரத்தினம் “ஏன் சுகு, உன் மகனை பற்றி உனக்கு தெரியாதா.. ஏன் இத்தனை ஆர்பாட்டம். மதியம் என்ன சொல்ல போறானோ.. சமாளிக்க ரெடியாக இரு.. என்னை கேட்க்காதே..” என்றார் ஒன்றுமில்லா குரலில்.

சுகுமாரி “அதெல்லாம் ஒண்ணுமில்ல, அவனுக்கும் எல்லோருடனும் பழகத் தெரியனுமில்ல.. கல்யாணம் அது இதுன்னு வரும் போது.. சொந்தம் வேணுமில்ல” என மீண்டும் ஆரம்பித்தார்.

ரத்தினம் அமைதியாகிவிட்டார்.

சுகுமாரிக்கு மீண்டும் ஏமாற்றம் வந்தது.. அமைதியாக கோவில் சென்றுவிட்டு வீடு வந்தனர் மூத்தமக்கள்.

பதினோரு மணிக்கு மேல்.. கொழுந்தனார் வீட்டிலிருந்து கொழுந்தனாரும்.. அவர் மனைவி மகனும் வந்து சேர்ந்தனர். நேரம் அதன்பின் இனிமையாக வேகமாக சென்றது சுகுமாரிக்கு. 

ஆனாலும் அடிக்கடி வாயிலை பார்த்தார் சுகு. இன்று சாகம்பரியையும் அழைத்திருந்தார். ஆனால், சஹா “இல்லை ஆன்ட்டி, நானும் அப்பாவும் அம்மாவின் செக்கப்’க்கு போறோம்.. கோயம்புத்தூர் வரை. ஈவ்னிங் வர பார்க்கிறோம்.. இல்லை, சட்டர் டேதான் ஆன்ட்டி..” என சொல்லி இருந்தாள். எனவே, வாசலில் ஒருகண் வைத்தார் சுகுமாரி. 

இப்போது, கௌரி வந்து சித்தி சித்தப்பாவை, பார்த்து சற்று நேரம் அமர்ந்து பேசினான். 

அப்போது சுகுமாரி “கொழுந்தனாரே, கெளரிக்கு பெண் பார்க்கணும்..” என ஆரம்பித்தார்.

 

 

Advertisement