Advertisement

“அரசியல்ல நேர்மைங்கிறது நாம மட்டுமே இருக்க கூடியது இல்லை, உன்னை சுத்தி இருக்கிறவங்களையும் பொறுத்து தான். அவன் என்ன பண்ணாலும் நான் சுத்தமா இருக்கேன், கண்டுக்க மாட்டேன்னு ஒதுங்க முடியாது. யார் ஒருத்தர் செய்றதும் நேரடியா மக்களை தான் பாதிக்கும். அவங்களை தான் ஏமாத்தும். அப்புறம் நீ மக்கள் பிரதிநிதியா இருந்து என்ன பிரயோஜனம். அவன் ஏமாத்தினா என்ன, நீ ஏமாத்தினா என்ன, எல்லாம் ஒன்னு தானே..” சரித்திரன் கேட்க,

“அதுக்கு தான் தலைவரே களத்துல இறங்கிட்டார் போல. எங்கேயாவது சிக்கு, நானே கேஸ் பைல் பண்ணி உன்னை தூக்குறேன்..” என்றான் பிரபாகரன்.

“என்னை சுத்தி எல்லாம் இப்படி தானா..? டூ பேட்..” சரித்திரன் நன்றாக சாய்ந்தமர்ந்து  தோள் குலுக்கி கொண்டான்.

“பதவியில நீ தேடி போகணும்ன்னு இல்லை, எல்லாம் தானாவே  வரும். மேல்தட்டு மக்கள்ல இருந்து அடித்தட்டு மக்கள் வரை நான் நேர் வழியில தான் போவேன் சொல்றவனை விரல் விட்டு எண்ணிடலாம். எங்கோ ஒரு இடத்துல பணம் கொடுத்து எதாவது ஒன்னு செய்யாம அவன் பிறவி முடியாது. நம்ம சிஸ்டம் அப்படி ஆகி போச்சு..”

“என் அப்பா கை நீட்டி ஒரு ரூபாய் வாங்க மாட்டார்ன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா பண விஷயத்துல அவர் மாட்டினப்போ எத்தனை பேர் அவரை நம்புனாங்க? அரசியல்ல இருக்கிறவர் எப்படி சரியா இருப்பார்ன்ற அவங்க எண்ணத்தை தானே அவங்க பேச்சு காட்டுச்சு. அப்புறம் நானும் என் அப்பா மாதிரி இருந்து என்ன சாதிக்க போறேன்? ஒன்னும் கிடையாது..” என்றுவிட்டான் சரித்திரன்.

“நீ சொல்றது உண்மை.. இப்போ எல்லாம் மதவெறி, சாதிவெறி கூட அரசியல் வெறியும் கூடி போச்சு.  சக மனுஷன் அழுதா கூட அவன் யார்ன்னு பார்த்து ஆறுதல் சொல்ற உலகத்துல தான் நாம இருக்கோம். முதல்ல இப்படி ஒரு சமுதாயத்துல வாழ நம்மை நாம தயாரா வைச்சுக்கணும். அப்புறம் மத்தவங்களை பார்ப்போம்..” பிரபாகரன் ஏற்று கொண்டான்.

“சரித்திரன் டேபிளுக்கு வர பணத்துல பெரும்பகுதி அவங்க ட்ரஸ்ட்க்கு தான் போகுது. மொத்தமாவும் அவர் வழி தவறிடலை..” சிவனேஷ்வரன் சொல்ல, பிரபாகரன், ஜனகன் நிம்மதி கொண்டனர்.

மேலும் அவர்கள் பொதுவாக பேசி கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். சரித்திரன் வீடு திரும்பும் நேரம், ராகவர்த்தினி கணவனுக்காக முழித்திருக்க, சரித்திரன் மென்னகை புரிந்தான்.

“குளிச்சுட்டு வந்துடுறேன்.. சூடா பால் இருந்தா பெட்டர்டி..” என்று குளிக்க சென்றான். ராகவர்த்தினி பால் வரவைத்து இருக்க, வேஷ்டி கட்டியபடி வந்தவனிடம் பாலை நீட்டினாள் மனைவி.

வர்த்தினியை தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டவன், அவளுக்கு பால் கொடுத்து தானும் குடித்தான்.

“சிவனேஷ்வரன், பிரபாகரன், ஜனகனை பார்த்துட்டு வந்தேன்..” என்றான்.

“அவங்களை பங்க்ஷன் கூப்பிட்டிருக்கலாம் இல்லை. ஏன் எங்கேயும் அவங்களை கூப்பிட மாட்டேங்கிறீங்க..” வர்த்தினி கேட்க,

“சில நட்புகள் எல்லோருக்கும் தெரியணும்ன்னு அவசியம் இல்லைடி. நமக்கான உறவுகள் நமக்கு மட்டுமே தெரிஞ்சா போதும்..” என்றுவிட்டான்.

வர்த்தினி கேட்டு கொண்டவள், “வர்ஷா நாளைக்கு ஷாப்பிங் கூப்பிட்டிருக்காங்க..” என்றாள்.

“எனக்கே எடுக்காத. உனக்கும் எடு. வெஸ்டர்ன் போ,சேரியே எடுக்காதடி..” என்றான்.

“அது தான் எடுப்பேன்..” என்றாள் மனைவி.

“ஏன் வெஸ்டர்ன் போட்டா என்னடி உனக்கு..” சரித்திரன் கை நீட்ட, பெண் அழகாக அவனுடன் விரல் கோர்த்து கொண்டவள், “எனக்கு சேரி தான் பிடிச்சிருக்கு..” என்றாள்.

“என்னவோ பண்ணு. பசங்க வளர்ந்து என்னை பயமுறுத்தினா நீ சேரி கட்டியே என்னை ஓல்ட்டா பீல் பண்ண வைக்கிற. நீ ஜீன்ஸ், டாப் எல்லாம் போட்டாத்தானே நான் இளமையாய் பீல் பண்ணுவேன்..” என்றான் குறையாக

“பின்ன நீங்க இன்னும் வயசு பையனா. ஆதி இப்போவே உங்க கழுத்துக்கு  இருக்கான்..” என்றாள் மனைவி சிரிப்புடன்.

“ஆமா.. அவன் இன்னும் வளர்ந்தா நான் அவன் பக்கத்திலே நிக்க மாட்டேன்டி..” முகத்தை சுருக்கி சொன்னவன், “நீ ட்ரஸ் மேட்டருக்கு வா..” என்றான்.

“நான் ஜீன்ஸ் போட்டா நீங்க இளமையா பீல் பண்றது எல்லாம் ஓவர்ங்க.. போங்க..”

“உனக்கு இதெல்லாம் புரியாது. ஸ்ட்ரக்ச்சரை நச்சுன்னு மெயின்டைன் பண்றவ, வெஸ்டர்ன் போட்டா என்னவாம்..”

“உங்க கையை எடுத்துட்டு இந்த கேள்வி கேட்டா பரவாயில்லை..” என்றவள் அவளில் மெல்ல மெல்ல ஊடுருவி கொண்டிருந்த அவன் கையை தட்டிவிட்டாள்.

மனைவி முகம் திருப்பி அவள் உதட்டை பிடித்து விட்டவன், “இதுவே டிஷர்ட்ன்னா பட்டுன்னு உருவியிருப்பேன். இங்க பாரு எவ்வளவு இடைஞ்சல்..” என்றவன் கை சென்ற இடம் வர்த்தினியை சிவக்க வைத்தது.

தடுத்து, தன் கையுடன் கோர்த்து கொண்டவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவளுக்கான இதமான நேரம் இது. அமைதியாக தனக்குள் ரசித்து கொண்டாள் பெண்.

“அத்தை கூப்பிட்டா அவங்களோட வீட்டுக்கு போ வர்த்தினி. நானும் வரேன் தானே. அவங்க ரொம்ப பீல் பண்றாங்க” என்றான் சரித்திரன்.

வர்த்தினி கணவனை முறைக்க, “என்னை தான் தப்பா நினைக்கிறாங்க. நான் எதோ உனக்கு சொக்கு பொடி போட்ட மாதிரி இருக்கு அவங்க பார்வை..” என்றான் அவன்.

வர்த்தினி அதை கண்டுகொள்ளவே இல்லை. “வர்த்தினி..” அவள் கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்தான். “பிள்ளைங்க  பிறந்தப்போ என் அவஸ்தை பார்த்துட்டு வந்த, ஆனா இப்போ வரைக்குமே அங்க போய் இருக்க மாட்டேங்கிற. ஒரே பொண்ணுடி நீ அவங்களுக்கு, உன்னை தேடும் இல்லை..” என்றான் நியாயமாக.

“நான் தங்கிறதில்லை தவிர, அவங்களை தனியா பீல் பண்ண விட்டதில்லை. எங்க இருந்தாலும் என் உறவுகளை என்னால அரவணைச்சுக்க முடியும்..” என்றாள் மனைவி.

“அதென்னவோ உண்மை தான். இல்லனா என்னை இப்படி உன்கிட்ட கட்டி வைப்பியா..” கணவன் சீண்ட,

“இது உண்மை தானா..?” என்று கேட்டாள் அவள்.

“ஏன் நான் உனக்கு அந்த பீல் கொடுத்தது இல்லையாடி..”

“கொடுக்காம யார் விட்டா..” என்றவள், “நீங்க இப்போ எல்லாம் வெளியே போறது அதிகம். உங்க வேலை அப்படி. ஆனாலும் நான் உங்களை மிஸ் பண்றேன். அப்படி எல்லாம் நீங்க வீட்ல இருக்கும் போது நான் போக மாட்டேன்.”

“புரியுதுடி.. ஆனா..” வர்த்தினி பார்வையில் நிறுத்திவிட்டான்.

அவள் விரல்களை தன் உதட்டுக்குள் இழுத்து கொண்டான். முத்தம் போய் மெல்ல கடித்தவன், ஒருவித வேகத்துடன் மொத்தத்தையும் உறியவும் செய்தான்.

“ஸ்ஸ்.. என்னங்க..” வர்த்தினி இழுக்க பார்க்க, விடவே இல்லை.

“என் லைப்ல எவ்வளவோ மாற்றம் வந்திடுச்சு. ஆனா நீ மட்டும் மாறவே இல்லைடி..”

“ஏன் மாறணும் நான்..” வர்த்தினி அவன் கழுத்தை வளைத்து கேட்க,

“நான் மாறிட்டேனே.. என்னால உன்னை போல இருக்க முடியலையே..” என்றவன் அவளின் உதட்டை இழுத்து கொண்டான்.

“நீங்க அப்படி ஒன்னும் மாறிடலை. நாம வேற தான். உங்களுக்கான கடமை அதிகம், அவ்வளவு தான்..” மனைவி அவன் உதடுகளை மென்மையாக வருடி சொன்னாள்.

“உனக்கும் தான் கடமை இருக்கு. ஆனா. ம்ப்ச். நீ..  நீ தாண்டி போ..” என்றவன் அவளை முழுதும் இழுத்து தனக்குள்  வைத்து கொண்டான்.

 வர்த்தினி அவன் பின் கழுத்து முடியை இறுக்கமாக பிணைக்க, அவன் மனைவியின் கழுத்தில் மூச்சு வாங்கினான். அதிகளவு தாபம் தான். ஆனால் மனைவி அவனை எடுக்க காத்தான்.

வர்த்தினி அவன் நெற்றியில் ஆரம்பித்து, உதடுகளில் நிலைத்தாள். “இது எனக்கு போதாதுடி..” என்றான் மனைவியின் மென்மையில்.

“இன்னைக்கு இப்படி தான்..” என்றாள் மனைவி.

கைகள் அவனை முழுதும் வருடி சிலிர்க்க வைக்க, சரித்திரனின் அனல் மூச்சு காற்று  வர்த்தினியை தகிக்க வைத்தது. காதலனான கணவனை ரசித்து, காதல் செய்யும் நேரம் சரித்திரன் அவளிடம் தன்னை ஒப்படைத்து விடுவான்.

இன்றும் அப்படியான நேரம் தான். சரித்திரன் அவள் மென்மையில் இன்னும் கிளர்ந்து போனவன், அவளிடமே தன்னை தணித்து, ஆசுவாசம் கொண்டான்.

இருவரின் காதலும் கூட தாம்பத்தியத்தில் வித்தியாசத்தை உணர்த்தும். அவனின் காதலில் வேகம், வன்மை, காயங்கள் அதிகம் இருக்கும். அவளிடம் முட்டி மோதி போராடுவான். போதாமல் திரும்ப திரும்ப தேடுவான்.

வர்த்தினியின் காதலில் நிதானமான ரசிப்பு, மென்மை, முத்தத்தின் எண்ணிக்கை, அணைப்பின் இதம், வருடலின் சுகம், தாபத்தின் நீளம், மோகத்தின் ஆழம் எல்லாம் அவளின் அளவில்லா காதலை தான் மிச்சமின்றி உணர்த்தி செல்லும்.

கணவன் அவனை முழுதும் தன்னிடம் கொடுக்கும் நேரம், மனைவிக்கு இன்னமுமே அவன் மேல் காதல் பெருகும். அவளின் காதல் வளர மூலமே சரித்திரன் தான். அதை தான் அவனுக்கு பல மடங்காக திருப்பி கொடுப்பாள் வர்த்தினி.

பிள்ளைகள் இருக்கும் நேரம் இருவருக்குமான நேரம் வேறு. தனியாக இருக்கும் போது இவர்களுக்கான நேரம் வேறு. அதிலும் மனைவியின் காதலை புரிந்து கொண்ட நாளில் இருந்து அந்த நேரத்தை வர்த்தினிக்கே பரிசளித்து விடுவான்.

என்ன செய்றியோ செய். பேசுறியா பேசு. தூங்கிறியோ தூங்கு. சண்டை போடுறியோ சண்டை போடு. என்னமும் பண்ணு. நான் உன்கிட்ட இருக்கேன் அவ்வளவு தான்.

 உன்னைப்போல என்னால காதலிக்க முடியாது. ஆனா உன் காதலுக்கான  நேரத்தை, மரியாதையை என்னால கண்டிப்பா கொடுக்க முடியும். கொடுக்கிறேன். கொடுப்பேன். அவ்வளவுதான்.

இரண்டாம் பரிமாண தாம்பத்தியத்தை விட அந்த காதல் தான் அவனை அதிகம் வீழ்த்தியது. காதல் ருசித்ததால் தாம்பத்தியம் ரசித்தது அவனுக்கு. அதற்கு காரணம் ராகவர்த்தினி.

எல்லா வயதிலும், எல்லா நிலையிலும் காதல் பல பரிமாணம் அடையும். ஆனால் சரித்திரனை பொறுத்தவரை.. காதலிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து இன்று வரை வருடம் கடந்து, குடும்பம் வளர்ந்த பின்னும் ராகவர்த்தினி எங்கும் மாற்றம் கொள்ளாதவள். நிலையானவள்.

சரித்திரன் மீதான அவளின்  ஒரே சீரான.. அழகான காதல் தான் லயம்.. லாளிதம்.. அவள்!

Advertisement