Advertisement

இருவரும் தான் காதலித்தோம். ஆனால் அவள் போல் என்னால் இருக்க முடியவில்லை. ஏன்..? என்ற கேள்வி அவனுள் அதிகமே. அதன் பொருட்டே இந்த இடைவெளி. அது வர்த்தினிக்கு புரிந்திருக்க வேண்டும். சரித்திரன் பதில் இல்லாமல் தூங்க ஆரம்பித்துவிட்டான்.

அடுத்த ஒரு வாரத்தில் குமரகுரு தள்ளாட, அவரின் ரத்த அழுத்தம் எகிறியிருந்தது. சரித்திரன் நேரே அம்மாவிடம் சென்று நின்றுவிட்டான். “என்ன பண்றீங்கம்மா. அவர் தப்பு தான். ஆனா பாவம்..” என்றான். அம்மாவிற்கு நிச்சயம் பிடிக்காது என்று தெரிந்தே கேட்பது  மகனுக்கு உதைப்பு தான்.

வேதவள்ளி கணவருக்கு பத்திய உணவு எழுதி கொண்டிருந்தவர், மகன் கேள்வியில் அவனை அமர சொன்னார். “நான் எப்போ தொழிலுக்கு வந்தேன் சொல்லு..” என்று கேட்டார்.

“நாற்பது வருஷம் இருக்கும்மா. நான் பிறந்தப்போ தானே..” மகன் சொல்ல,

“அப்போ நம்மளோட பங்கு பணம் மட்டும் தான் நம்ம சொத்து. வேற இல்லை. அதை எங்கேயாவது முதலீடு பண்ணிட்டு பாதுகாப்பா இருங்கன்னு தான் உங்க தாத்தா சொன்னார். ஆனா நான் தொழில் எடுத்து நடத்துறேன் சொன்னேன். உன் அப்பா கொஞ்சம் கூட யோசிக்காம எனக்கு சப்போர்ட் பண்ணார்.  என்னை முழுசா நம்பினார். அந்த பணம் காலின்னா நாமளும் காலின்னு அவருக்கு தெரிஞ்சும் அதை பண்ணார். அப்போ.. அந்த செகண்ட் அவர் என் ஆத்ம மனசை தொட்டார்..” என்றார் பெருமிதமாக.

“அப்போ மட்டுமில்லை அதுக்கடுத்து எத்தனையோ சந்தர்ப்பத்துல அவர் என் மனசை தொட்டிருக்கார். எல்லாம் குடும்பமா இருக்க சகிப்பு தன்மை,  பிள்ளைங்க, நம்ம கலாச்சாரம்ன்னு ஆயிரம் காரணம் சொன்னாலும், அது எல்லாத்துக்கும் பின்னாடி இந்த  சின்ன ரகசியம் ஒளிஞ்சுட்டு இருக்கும். எல்லோருக்கும் இப்படி இருக்குமா எனக்கு தெரியாது. ஆனா நானும் உன் அப்பாவும்  இப்படி தான்.

“கண்டிப்பா நான் சீக்கிரம் அவர்கிட்ட சரியாகிடுவேன். ஏமாற்றத்தை ஏத்துக்க எனக்கு டைம் வேணும் தானே. அதுவரைக்கும் கூட உன் அப்பா பொறுத்துக்க மாட்டாரா. அவரை பார்த்துக்க மாட்டாரா. சொல்லிட்டு போ. பின்னாடி தான் இருக்கார்..” என்று திரும்ப எழுத ஆரம்பித்துவிட்டார் வேதவள்ளி.

குமரகுரு தெளிந்த முகத்துடன் படுக்கைக்கு செல்ல, மகன் கிளம்பிவிட்டான். அவனுக்கு வர்த்தினி கேட்ட “நான் உங்க உயிர் தொடலையா?” என்ற கேள்வி சுட்டது.

நடந்து முடிந்துவிட்ட செயல்களை எப்படி நேர் செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவி சாதாரணமாக தான் இருக்கிறாள். இவன் தான் முழித்தான்.

தேர்தலுக்கு முன்பான அந்த காதல் காலங்கள், அவளுடன் நேரம் செலவிட்டது, கிப்ட் வாங்கிட்டு வருவது, பூ வாங்கிட்டு வருவது எல்லாம் தானே நடந்தது. இப்போது அப்படி இல்லை.

இன்னும் முதிர்ச்சி வந்திடுச்சோ. வயசாகிடுச்சோ. ட்ரை பண்ணி பார்ப்போம் என்று கிப்ட் வாங்க சென்றவனுக்கு மனம் ஒப்பவில்லை.

வீட்டுக்கு வந்துவிட்டான். தனி அறையில் இருந்தவனிடம் ஒரு மாதிரி கோவமே. மனைவி பார்த்திருந்தவள் பிள்ளைகள் தூங்கவும், “என்ன அமைச்சர் சார்..” என்று கேட்டாள்.

“என்னன்னு கேட்டா.. ஒன்னுமில்லை..” என்றான்.

வர்த்தினி கணவன் அருகில் அமர்ந்து அவன் கை பிடிக்க தள்ளிவிட்டான். “இப்படி நான் பண்ணா உங்களுக்கு ரொம்ப கோவம் வரும்..” என்றாள் மனைவி.

“அப்போ உனக்கு வரலையா..?” சரித்திரன் அவளை பார்க்க,

“வரதுனால தான் அதை சொன்னேன்..” என, சரித்திரனிடம் சிறு வெளிச்சம்.

“எனக்கு இப்போ நீ எடுத்த ட்ரஸ் பிடிக்கலை. வேணாம்..” என்றான்.

“ஏன் பிடிக்கலை. உங்க பேவரைட் கலர் தானே..?” அவள் கேட்க,

“இப்போ பிடிக்கலை. எல்லா நேரமும் எல்லாம் பிடிக்குமா என்ன..” என்றான்.

“சரி நான் மாத்திடுறேன்..” என,

“வேணாம் நானே எடுத்துகிறேன்..” என்றுவிட்டான் கணவன்.

“உங்களுக்கு இது பிடிக்கலை சொல்லுங்க. நீங்க எடுக்கிறேன் சொல்லாதீங்க..” அவளிடம் நன்றாகவே கோவம்.

“அப்போ மேடம்க்கு என்னை ஆட்சி பண்ண மட்டும் தான் பிடிக்கும். நான் உங்களை ஆள விட மாட்டீங்க அப்படி தானே..?” என்று கேட்டு வைத்தான்.

“என்னை உன் முந்தானையில வலுவா முடிஞ்சு வைச்சுக்கிட்டு என்னை சுத்தல்ல விடுற இல்லை..” என்றான்.

“நீங்க என் முந்தானையில இருக்கிறது மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுதா? நான் உங்க சட்டை பாக்கெட்ல இருக்கிறது உங்க கண்ணுக்கு தெரியலையா..?” மனைவி கேட்டாள்.

“இல்லையே.. இருந்தா நான் ஏன் இப்படி மண்டை காய போறேன்..” என்றான் அவன்.

“போங்க.. போங்க.. நைட்டுக்கெல்லாம் தனியா உருண்டு உருண்டு படுங்க. அதுக்கு தான் நீங்க சரிப்பட்டு வருவீங்க..” மனைவி கடுப்பாகி போனாள்.

“என்னடி நக்கலா..? பாரு நீ தான் என்னை இப்படி பீல் பண்ண வைக்கிற. நீயே இதுக்கு பதில் சொல்லு..”

“என்ன பதில் சொல்லணும் நான்..”

“நான் உனக்கு நல்ல புருஷன் இல்லைங்கிற மாதிரி எனக்கு நீ பதிய வைச்சுட்ட. ஒழுங்கு மரியாதையா அதை நீயே அழிச்சு விடு..” என்றான் அவன் பிடிவாதமாக.

“என்ன பேசுறீங்க நீங்க..? நான்.. நான் என்ன பண்ணட்டும்..”

“எதாவது பண்ணு. என்னை எவ்வளவு பேசின. என் காதல் எல்லாம் காதலே இல்லங்கிற மாதிரி நான் பீல் ஆயிட்டேன். ரொம்ப பீல் ஆயிட்டேன்..”

“என்ன ஆச்சு உங்களுக்கு..”

“எதோ ஆச்சு. நீ என்னை நார்மலாக்கி விடு. என்னை விட நீ தான் பெஸ்ட். நீயே சரி பண்ணு..”

“நான் தான் லாரில கொண்டு போய் காரை விட்டேனா..?”

“விடலை இல்லை..”

“விட்டிருந்தா தெரிஞ்சிருக்கும். இப்போ எதுக்கு இத்தனை பேச்சு. போய் தூங்குங்க போங்க..”

“அப்போ என் கஷ்டம் உனக்கு ஒண்ணுமே இல்லையாடி..”

“கடவுளே.. என்னங்க வேணும் உங்களுக்கு..”

“நான் பழையபடி உன்கிட்ட இருக்கணும். நான் பண்ண போனது  ரொம்ப பெரிய தப்பு. அதை நான் உணர்ந்துட்டேன். தண்டனையும் அனுபவிச்சுட்டேன். ஆனாலும் இது ஏன் நமக்குள்ள..? இந்த கேப், எனக்கு இது வேணாம்..”

“இப்படி இருக்க சொல்லி நான் சொல்லலையே. நான் ஓகே. நீங்க தான்”

“நான் உன்கிட்ட வர நினைச்சாலும் என்னால முடியல. முன்ன போல என்னால உன்னை சீண்ட முடியல. கொஞ்ச முடியல. முத்தம் கூட கொடுக்க முடியல. பாரு இப்போ கூட உன் இடுப்பு தெரியுது. கிள்ள கை வர மாட்டேங்குது. என்ன பண்ண நான்..”

“அதுக்காக நானா உங்க இடுப்பை கிள்ள முடியும்..?”

“ஏன் கிள்ளினா என்ன..? நானே பண்ணனும்ன்னு என்ன இருக்கு. நீ என்னை ஏமாத்துற..”

இவர் பிராடுத்தனம் ஏதும் பண்றாரா? நம்ப முடியாது இவரை. மனைவி சந்தேகமாக பார்க்க,

“என்னடி என்ன பார்வை. பாரு நான் மேல்ச்சட்டை இல்லாமல் தான் இருக்கேன். எங்க கிள்ளணுமோ கிள்ளு, கடிக்கணுமோ கடி..” என்றான் நெருங்கி அமர்ந்து.

“ஆஹ்ன்.. இதென்ன புதுசா..” மனைவி அரண்டு போனாள்.

“என்னடி பண்ண மாட்டியா? அப்போ நான் இப்படியே இருக்கணுமா..? அப்போ உன்னை யாரு என்கிட்ட இடுப்பு காட்ட சொன்னது..”

“நான் முடிக்கிறேன்” மனைவி சேலைய இழுத்து விட்டு கொண்டாள்.

சரித்திரன் பார்வை வேறிடம் பாய, கண்டு கொண்டவள் வேகமாக முந்தானைய சரி செய்தாள். “இப்போ எதுக்கு மூடுற. நான் தான் ஒன்னும் பண்ண போறதில்லையே. பீலிங்ல இருக்கேன் நான். நீ நல்லா இருந்தும் என்னை ஒன்னும் பண்ண மாட்டேங்கிற. உன்னை மாதிரி மூட கூட இல்லை நான். பாரு அப்படியே தான் இருக்கேன்..” என, வர்த்தினி கடுப்பாகி அவன் நெஞ்சில் உண்மையிலே கிள்ளி வைத்தாள்.

“ஸ்ஸ்.. என்னடி இப்படி கிள்ளிட்ட..”

“கிள்ள சொல்லி நீங்க தானே காமிச்சீங்க..”

“தேய்ச்சு விடு. ரொம்ப வலிக்குது..”

“முடியாது.. நீங்க வேற ஏதோ பிளான் பண்றீங்க. எனக்கு தெரிஞ்சு போச்சு..”

“என்ன பிளான் பண்ணிட்டேன் நான். எனக்கு வேற பீலிங். இந்த பீலிங் வர மாட்டேங்குது. அப்போ நான் அவ்வளவு கஷ்டப்படுறேன்னு அர்த்தம். அன்னைக்கு மாதிரி முத்தம் கொடுத்து என்னை தேத்திவிடலாம் இல்லை..” என்றான் குறையாக.

அவனிடம் பொய் இல்லை. நெருங்க தவிக்கிறான். ஏதோ தடுக்கிறது. இல்லையென்றால் இவ்வளவு அருகில் இருந்தும் அவன் கை சும்மா இருப்பது எல்லாம் அதிசயம் தான்.

வர்த்தினி அவனை நெஞ்சோடு அணைத்து கொண்டாள். சரித்திரன் அவளிடம் சரணடைந்துவிட்டான். மனைவியின் நெருக்கம், வாசமே அவனை சாந்தபடுத்தியது. அவ்வளவு தூரம் எல்லாம் நாங்கள் சென்றுவிடவில்லை. காதல் மிகுந்தது அங்கு.

வர்த்தினி கணவனின் அமைதியில் தானே அவன் இதழில் இதழ் பொருத்தினாள். முத்தமிட்டாள். மெல்ல கடித்து வைத்தாள். சரித்திரன் அவள் உதடுகளை தேய்த்து காயத்தை ஆற்றி கொண்டான்.

அவள் மேல் சரிந்தவன் மனைவியின் இதய துடிப்பை நெருக்கமாக மிக நெருக்கமாக கேட்க செய்தான். அவன் கைகள், உதடுகள் அப்படியே தேங்கி நின்றன. வர்த்தினி அவன் உச்சியில் விரல் கொண்டு அலைந்தாள்.

“யார் மேலயும் நம்மளை மீறி காதல் வராதுங்க. என் உயிருக்கு மேல ஒருத்தர்ன்னா அவர் கண்டிப்பா அதுக்காக தகுதியானவரா தான் இருப்பார்..”

“நான் உங்ககிட்ட இப்படி இருக்கேன்னா அதுக்கு காரணம் நீங்க. எல்லா கஷ்டத்தை நீங்க கடந்து வந்தாலும், என்னை எந்த கஷ்டத்துலயும் நீங்க விட்டது இல்லை. உங்க காதல் வேறங்க”

“என்னோட எல்லாம் நீங்க மட்டும் தான். உங்களுக்கு அடுத்து தான் நானே எனக்கு. ஆனா நீங்க அப்படி இல்லை. இருக்க கூடாது. உங்களுக்கான வாழ்க்கை பெருசு. அது எனக்கு புரியும். ஆனாலும் கொஞ்சம் பொஸசிவ் வைச்சுக்கோங்களேன். அதை நீங்க சமாளிச்சு தான் ஆகணும். இப்படி தனியா தவிக்க கூடாது.” என்றவள் அவனை கீழே தள்ளி அவன் மேல் படுத்தாள்.

முகத்தோடு முகம் உரச, கால்களோடு கால்கள் பிணைந்தது. “என்ன என்னை சமாளிப்பிங்க தானே..” என்று புருவம் தூக்கி கேட்க,

சரித்திரன் அவள் கண்களோடு கண்கள் வைத்து மூடி கொண்டான். அவன் புரிந்து கொண்டான். தெளிந்துவிட்டான். மனைவியை அணைத்து கொண்டுவிட்டான்.

அவளின் விரல்கள் அவனில் அலைய, இவனின் உதடுகள் அவளில் தடம் பதிக்க ஆரம்பித்தது. அவன் ஒற்றை முத்தத்துக்கு இவள் நான்கு மடங்கு திருப்பி தந்தாள்.

கைகள் கணவனை தழுவியது தழுவிய படியே. நொடியும் விலக்காமல் தன்னுடனே பிணைத்திருந்தாள். ஆடைகள் ஒன்றாகவே விடைபெற, உதடுகள் ஓய்வில்லாமல் வேலை செய்தது.

வலியோ, சலிப்போ அங்கில்லாமல் இரு கைகளும், இரு உதடுகளும் போதாத நிலையே. உடல்களின் உரசல்களை விட கண்களின் உரசல்கள் அதிக வன்மையை அங்கு பரிசளித்தது.

வேகம் வேகம் மட்டுமே. நிதானம் இல்லை. இருக்க முடியவில்லை. காதல் வேகம் பெற்றதுடன் இவர்களின் வேகத்தையும் கூட்டி கொண்டே சென்றது.

உதடுகள் காயம் பெற்று, வீக்கம் கண்டது. சிணுங்கல்கள் எல்லை மீறி சென்றது. புதுமண தம்பதியை விட அதிக ஆர்வம் கொண்டு இணைய தேடினர்.

விளக்குகள் ஒளிரப்பட்டு, அணைக்கப்பட்டு கண்ணாமூச்சி ஆடியது. மனைவியின் வெட்கத்தை தூண்டி அதில் தன் அனலை தணித்தான் கணவன்.

அவளும் கோவம் கொண்டு அவனை அலறவிட்டு, தவிக்கவிட்டு, திணற வைத்தாள். யார் யாரை அதிகம் காயம் செய்தது என்ற கணக்கே இல்லாமல் தழும்புகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே சென்றது.

ஓய்வெடுத்து ஓய்வெடுத்து தங்கள் சரிபாதியை ஒரு வழியாக்கினர். முதல் இரவை விட அதிகம் ரசிக்கத்தக்க, தேடல் கொண்ட இரவாக இது நீடித்தது.

Advertisement