Advertisement

மறுநாள் காலை ஆதவன் சீக்கிரமே எழுந்துவிட, அதில் ராகவர்த்தினியும் விழித்துவிட்டாள். இருவரும் கிளம்பி ஹால் வர, வேதவள்ளி தனியே பைல் பார்த்து கொண்டிருந்தார்.

“குட் மார்னிங் பாட்டி.. தாத்தா எங்க, தூங்கிட்டு இருக்காரா..?” ஆதவன் கேட்டு அவர்கள் அறை எட்டி பார்க்க, வேதவள்ளி விழித்தார். அதில் ராகவர்த்தினி “மாமா நைட் வந்துட்டார் அத்தை..” என்றாள்.

“அப்போ அவன் கூட தான் இருப்பார். வரட்டும்..” வேதவள்ளி நொடிக்க, ஆதவன் அப்பா போர்ஷன் சென்றான். அங்கு குமரகுரு, சரித்திரன் இருவரும் கையில் காபி கப்புடன் இருக்க,  “தாத்தா..” என்று அவரை பாய்ந்து சென்று கட்டி கொண்டான் பேரன்.

குமரகுரு சிரிப்புடன் பேரனை கட்டி கொள்ள, ஆராதனாவும் இந்த சத்தத்தில் விழித்து கொண்டவள், “தாத்தா” என்று அவரை மறுபக்கம் கட்டி கொண்டாள். சரித்திரன் முகத்தில் இளம் முறுவல்.

பிள்ளைகளுக்கு அங்கேயே குடிக்க வந்துவிட்டது. வேதவள்ளி கணவர் வருவார் என்று காத்திருந்து, கடுப்பாகி போனவர், விசாகன் வரவும், “அவரை வர சொல்லு. நான் ஆபிஸ் கிளம்பணும்..” என்றார்.

விசாகன் முழித்தவன், எவரை வர சொல்றாங்க, “சரித்திரனையா மேடம்..?” என்றான் சந்தேகத்துடன்.

“அவனை அவர் வேற சொல்லணுமா நான், ஏத்தம்டா உனக்கு..” என்று இவன் மேல் பாய்ந்தார் வேதவள்ளி.

“எங்க சார் மினிஸ்டர் மேடம்.  அவர் சொல்லலாம் தப்பில்லை..” என்றான் விசாகன் கெத்தாக.

“அவர் சொன்னா மட்டும் போதுமா இல்லை மாலை மரியாதை கூட செய்யணுமா..?” வேதவள்ளி கேட்க,

“இவங்க செஞ்சுட்டாலும்..?” என்று வந்தான் சரித்திரன். பின்னால் குமரகுரு பேர பிள்ளைகளுடன் வந்தவர், “ஆபிஸ் கிளம்பிட்டியா வேதா..” என்று மனைவியிடம் கேட்டார்.

“கிளம்பிட்டேன். நீங்க எப்போ வந்தீங்க. ஏன் மெலிஞ்சிருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா..?” என்று கேட்க,

“நைட் தான் வந்தேன் வேதா. பேரப்பிள்ளைகளை ஸ்கூல் சேர்த்துட்டு ஆபிஸ் போயேன்..” என்றார்.

“அதே ஸ்கூல் தானா..?” மகனை கேட்க,

“அதே தான். உங்க மருமகளை கிளம்பி வர சொல்லுங்க..” என்றவன் பிள்ளைகளையும் தயார் செய்ய சொல்லி,  இரு கார்களில் கிளம்பினர்.

அந்த பள்ளியின் ப்ரின்ஸிபல் காருக்கே வந்து இவர்களை வரவேற்க, அன்றே அட்மிஷனும் முடிந்தது. மறுநாளில் இருந்தே பிள்ளைகள் பள்ளி செல்ல ஏற்பாடு செய்து கிளம்பினர்.

“ஏன்ப்பா இந்த ஸ்கூல்..?” ஆதவன் காரை விட்டு இறங்கவும் அப்பாவிடம் கேட்டான். விருப்பமின்மை அவனிடம்.

ஆராதனாவிற்கோ போர்டிங் இல்லை என்ற மகிழ்ச்சி மட்டுமே. பள்ளி பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. “ஏண்டா’ண்ணா  இந்த ஸ்கூல்க்கு என்ன..?” என்று அண்ணனிடம் கேட்டாள்.

“எனக்கு பிடிக்கலை. இன்னும் பெட்டரா நீங்க பார்த்திருக்கலாம்ப்பா..” என்றான் மகன்.

நல்லா கேளுடா என்று நின்றார் வேதவள்ளி. “ஆதவா என்ன பேச்சு இது..?” ராகவர்த்தினி கண்டிக்க, ஆதவன் பட்டென வீட்டிற்குள் செல்ல போனான்.

 “ஆதவா.. ஆபிஸ் ரூம் போ..” சரித்திரன் குரலில் நொடி நின்று ஷூ சத்தம் எதிரொலிக்க, ஆபிஸ் அறைக்கு சென்றான்.

சரித்திரன் அவன் சேரில் அமர்ந்து மகனை அமர சொல்ல, மகனோ பின்னால் கை கட்டி விறைத்து நின்றிருந்தான். சரித்திரன் எழுந்து அவன் முன் வந்து நிற்க, இப்போதே மகன் நெஞ்சுக்கு இருந்தான்.

“உனக்கு அந்த ஸ்கூல் பிடிக்கலையா..?” அப்பா கேட்க,

“எஸ் டாடி..” என்றான் மகன்.

“ஓகே.. அப்பாக்காக நீ ஒன் மந்த் அங்க போ. அப்புறமும் பிடிக்கலைன்னா நான் கண்டிப்பா மாத்திடுறேன்..” என்றான்.

ஆதவனிடம் மலர்வு. “ப்ராமிஸ் டாட்..?” என்றான்.  சரித்திரன் அமைதியாய் பார்க்க, “ஓகே ஓகே சாரி. நான் ப்ராமிஸ் கேட்கலை. ஒன் மந்த் தானே. நான் போறேன்..” என்றவன் அப்பாவை கட்டி அணைத்து சென்றான்.

சொன்னபடி மறுநாளில் இருந்தே பிள்ளைகள் பள்ளி செல்லவும் ஆரம்பித்துவிட்டனர். ராகவர்த்தினி முதல் சில நாட்கள்  தானே சென்று விட்டு, அழைத்து வந்தாள். “எல்லாம் ஓகே தானே. ட்ரைவர் போட்டுடலாம் இல்லை..” சரித்திரன் கேட்க, சரியென்றுவிட்டாள்.

அதன்படி டிரைவருடன் பள்ளி செல்ல, மாலை நேரங்களில் பள்ளியிலே ஸ்பெஷல் வகுப்புகள் ஏற்பாடு செய்தான் சரித்திரன். ஸ்போர்ட்ஸ், பாட்டு, டேன்ஸ், இசை, தற்காப்பு பயிற்சி என்று எல்லாம் அட்டவணைப்படி நடந்தது. மற்ற பிள்ளைகளும் அதிகளவில் இணைந்து கொண்டனர்.

குமரகுரு முன் போல கட்சி ஆபிசிலே இருக்காமல், வீட்டில் இருக்க ஆரம்பித்தார். மனைவியுடன் சில முறை தொழில் நடக்கும் இடங்களுக்கு சென்று வந்தவர், ராகவர்த்தினி யூனிட்க்கும் சென்றார்.

மருமகளுக்கு சிறிது பதட்டம் தான் மாமனார் என்ன சொல்வார் என்று. உடன் இருந்து எல்லாம் சுற்றி காமிக்க, “ரொம்ப நல்ல முன்னேற்றம்மா..” என்றார் குமரகுரு.

ராகவர்த்தனிக்கு முகம் மலர்ந்து போனது. அன்று நாள் முழுதும் அங்கேயே இருந்தவர் மாலை மருமகளுடனே வீடு வந்தார். சரித்திரன் வாசலில் நிற்க, குமரகுரு மருமகளிடம் ஏதோ பேச வந்தவர், மகனை கவனித்து விட்டுவிட்டார்.

மறுநாள் வேதவள்ளியும், குமரகுருவும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்பி சென்றனர். ஒருநாள் அங்கேயே தங்கி வருவதால் உடன் விசாகனும் இருந்தான். “இங்க என்ன உளவு பார்க்க வந்திருக்க..?” வேதவள்ளி அவனிடம் கேட்க,

“உளவா.. நாங்களா..? என்ன பேசுறீங்க மேடம்..?” அவன் ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

“நடிக்காதடா.. உங்களை எனக்கு தெரியாது பாரு. சரி அதை விடு, நான் உன் ப்ரண்டுகிட்ட ஒன்னும் கேட்க மாட்டேன், சொல்ல மாட்டேன். அன்னைக்கு ஏன் என்னோட ஆபிஸ் வந்த..?” என்று நயமாக கேட்க,

“என்னைக்கு மேடம்..? எனக்கு ஒன்னும் ஞாபகம் இல்லையே..?” என்றான் அவன் அப்பாவியாக. வேதவள்ளி பல்லை கடித்து அவன் தலையில் கொட்டி வைக்க, அவனோ யோசிப்பது போலே அந்த நாளை ஓட்டி தள்ளினான்.

வீட்டில் பிள்ளைகள் இரவு தூங்கிய பின்பு, ராகவர்த்தினி கணவனின் கார் இன்னும் வரதாதில் லேப் எடுத்து வைத்து அமர்ந்தாள். நடுஇரவே ஆகிவிட்டது. இன்னும் சரித்திரன் வரவில்லை. கேட்க ஆள் இல்லைன்னு நினைப்பா..? மனைவி பல்லை கடித்தாள்.

அரசியல் கட்சியின் முக்கிய நபர் வீட்டு விருந்து என்று தெரியும். அவனின் ஷெடியூல் இவளுக்கு தினமும் விசாகன் மூலம் வந்துவிடும். விருந்தில் இவ்வளவு நேரம் ஆகியும் என்ன வேலை..? மனைவி ஜன்னல் வழி பார்த்து நின்றிருக்க, சரித்திரன் கார் உள்ளே நுழைந்தது.

சில நிமிடம் சென்று, அவளின் போன் அடிக்க, சரித்திரன் தான். என்னவோ என்று எடுக்க, “கீழே வா..” என்றான் ஒரு மாதிரி குரலில்.

ஏதாவது பிரச்சனையா என்ற யோசனையில் வர, சரித்திரன் அவன் போர்ஷனில் இருந்தான். இதுவரை அவள் அங்கு சென்றதில்லை. அவன் உள்ளிருந்து, “வா..” என்று குரல் கொடுக்க, ராகவர்த்தினி நொடி தயங்கி அடியெடுத்து வைக்க, இரு கைகள் அவளை பலமாக வளைத்து கொண்டது.

ராகவர்த்தினி அதிர்ந்து, அலறி, கணவன் கை பிடித்து தள்ள, அவனோ விடாமல் அவளை சுவற்றோடு சாய்த்து பிடித்தான். “இதுக்கு தான் வர சொன்னீங்களா. பிராடு நீங்க..” மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க மனைவி முறைக்க, சரித்திரனுக்கோ அவளின் நெருக்கம் சொர்க்கம்.

கண்டுகொண்ட வர்த்தினி அவனிடம் இருந்து திமிற, “ஷ்ஷ்.. கொஞ்ச நேரம் சும்மா இருடி..” என்றான் நெருக்கத்தை கூட்டி.

ராகவர்த்தினிக்கு மூச்சு அடைப்பது போலிருக்க, “தள்ளி நில்லுங்க..” என்றாள் உத்தரவாக.

சரித்திரன் அவளை ஏக்கமாக பார்க்க, அவளோ இளகாமல் பார்த்தாள். “கல் நெஞ்சுக்காரிடி நீ..” என்றான் பொருமலாக.

“உங்களை விட இல்லை..” என்றாள் மனைவி.

“யார் நானா..? உன் மூச்சு காத்து என் மேல பட்டாலே நான் அப்படியே உருகிடுறேன். நான் கல் நெஞ்சுக்காரனா..?” என்று கேட்க, மனைவி முகம் திருப்பினாள்.

“வேத’வில்லி’ ட்ரைனிங் ஆச்சே. இங்க பாரு உன் நல்லதுக்கு சொல்றேன். அவங்களை பேசாம டிவோர்ஸ் பண்ணிடு..”

“என் நல்லதுக்கு டிவோர்ஸ் பண்ணனுமா..? உங்க நல்லதுக்கு டிவோர்ஸ் பண்ணனுமா..?” மனைவி கிண்டலாக கேட்டாள்.

“இரண்டு பேர் நல்லதுக்கு தான். நானும் நீயும் வேற வேற இல்லையேடி..”

“அரசியல்வாதி பேச்சு எல்லாம் வெளியே வருது போல..” மனைவி முகம் சாய்த்து பார்க்க,

“உன் புருஷன் பேச்சுடி இது. பாரு இதுக்கு தான் சொல்றேன். குதர்க்கமா யோசிக்கிறது, பேசுறது எல்லாம் அவங்ககிட்ட இருந்து தான் உனக்கு வந்திருக்கு. என் வர்த்தினி இது இல்லை..” என்றான்.

“உங்க வர்த்தினி யார்..? நீங்க என்ன பண்ணாலும், அக்சப்ட் பண்ணிக்கிட்டு உங்க கூடவே இருக்கிறவளா, அப்போ எனக்குன்னு தனி விருப்பு, வெறுப்பு இருக்க கூடாதா..? எனக்கான ஸ்டேண்டை நான் எடுக்க கூடாதா..? இது தான் உங்க காதலா..? இதை தான் நீங்க என்கிட்ட எதிர்பார்க்கிறீங்களா..?” மனைவி வெடிக்க, சரித்திரனோ அவள் உதடுகளை பட்டென  குவித்து பிடித்து கொண்டான்.

“ம்ம்” என்று அவள் முனக,

“அப்படி நான் எதிர்பார்த்திருந்தா நான் ஏண்டி தனியா இருக்க போறேன்..?”என்று அமைதியாக கேட்டான் கணவன்.

அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தானே இந்த பிரிவு. ராகவர்த்தினிக்கும் இது தெரியுமே. அவள் அமைதியாக, மனைவியின் குவித்த உதடுகளுக்கு அருகில் தன் உதடுகளை கொண்டு சென்றான்.

ராகவர்த்தினி கண்கள் பெரிதாக, “நான் வாய் திறந்து கேட்டும் நீ எனக்கு கொடுக்கல. என்னை ஏங்கி வேக வைக்கிற. எனக்கு திரும்ப உன்கிட்ட வரவோ, கேட்கவோ இஷ்டமில்லை. ஆனால்.. ம்ஹ்ம்.. என்னால முடியல. இது மட்டுமாவது எடுத்துக்கிட்டா தான் நான் நானாவே இருப்பேன். பஸ்ட் ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு. புரியுதா என்னை, எடுத்துக்கிட்டா.. சொல்லு வர்த்தினி. கொடுக்கிறியா..?” என்று உதடுகளில் அவன் அனல் தெறிக்க கேட்க, பெண் வார்த்தைகள் இன்றி சிலையானாள்.

நெஞ்சு வேகமாக அடித்து கொண்டது. கணவனின் ஏக்கம் அவன் வார்த்தையில், பார்வையில், உடல் மொழியில் தெள்ள தெளிவாக தெரிந்தது. “நீ சரி சொன்னா மட்டும் தான் எனக்கு வேணும். இல்லை வேண்டாம், சொல்லு..” என்றான்.

“நம்மோட பர்ஸ்ட் நைட்ல கூட நான் இந்தளவு இல்லைடி. இப்போ என்னமோ. ஓஹ் காட். கொன்னுடாத என்னை..” என்றான் நெற்றி முட்டி.

ராகவர்த்தினி உள்ளங்கைகள் வேர்த்து போக, கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள். இருவரின் மூச்சு காற்றும் பலமாக மோதி சிதறியது. பெண்ணுக்கு உடன்பட முழு சம்மதம் இல்லை.

‘என்னை விட்டு, என் நினைவே இல்லாமல் விபத்து ஏற்படுத்தி கொள்ள பார்த்தாரா..? அன்று எதாவது நடந்திருந்தால் நான்.. என் நிலை. என்னவாகி இருப்பேன் நான்..’  இப்போதும் அவள் இதயம் துடித்து அடங்கியது. கண்களின் ஓரம் கண்ணீர் தேங்கியது.

சரித்திரன் மனைவியின் அமைதியான் மறுப்பில், தன்னை கட்டு படுத்த முடியாமல் அவளை  இறுக்கமாக அணைத்து கழுத்தில் முத்தம் வைத்தவன், போதாமல் பல்லை வைத்து ஆழமாக பதம் பார்த்துவிட்டான்.

“ஸ்ஸ்ஸ்..” என்ற மனைவியின் வலியில் அவளை விட்டு விலகியவன், “ரூம்க்கு போ. போயிடுடி..” என்றவன், தானே அவளை வீட்டினுள் அனுப்பி வைத்துவிட்டான்.

சிறிதளவு காதல் கூட தர மாட்டேன்கிறாளே.. என்னை விட்டு தூரம் சென்றுவிட்டாளோ.. நினைக்கவே உடல் மொத்தமும் பலம் இழந்தது போல தளர்ந்தான்.

Advertisement