Advertisement

“சரி.. அப்படியே பண்ணிடலாம். அந்த இரண்டு டிபார்ட்மெண்டும் அப்பாகிட்ட விசாரணை நடந்து முடிஞ்சதோ, இல்லையோன்னு கோர்ட்டுக்கு போயிட்டாங்க. வேணும்ன்னே பண்ணது தான் அது..” என்றார்.

“எனக்கும் அது தான்ம்மா.. அப்பா ஒத்துக்காத வரை அது கருப்பு பணம்ன்னு அவங்களால நிரூபிக்க முடியாது. குற்ற சாட்டு தான் வைக்க முடியும். நம்ம நல்ல நேரம் அப்பாவும் கடைசி வரை அது கருப்பு பணம்ன்னு ஒத்துக்கலை. சோ நாம இப்போ அந்த பணத்தை டிஃபன்ட் பண்ணனும்..”

“அதுக்கு அந்த பணத்துக்கு தோதா இருக்கிற  சொத்தை விக்கிறதுக்கான டீட் அந்த தேதிக்கு ரெடி பண்ணி, அதை கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணனும். அவங்க அதுக்கு டேக்ஸ் கேட்பாங்க, நாம கட்டிட்டலாம். நான் எடுத்து வைச்சிருக்கிற பணம் அதுக்கு சரியா இருக்கும். பார்த்துக்கலாம்..” என்றான் சரித்திரன்.

“ம்ம்.. நாம நேர்வழியில அப்பாவை சிக்க வைச்சவங்களை வெளியுலகத்துக்கு காட்ட நினைச்சோம். ஆனா அப்பாவோட ஒத்துழைப்பு இல்லாம அது முடியல. இருக்கட்டும். எல்லாம் நல்லதுக்குன்னு எடுத்துக்கலாம்..” வேதவள்ளி சொல்லி முடிக்க முதல்லே,

“எதை நல்லதுன்னு சொல்றீங்கம்மா..?” என்றான் மகன்  பாய்ச்சலாக. நொடியில் அவன்  முகம் தகதகத்துவிட்டது.

“அமைதியா போறதால நான் இதை எல்லாம் அக்சப்ட் பண்ணிட்டேன்னு அர்த்தம் கிடையாது. எத்தனை நாள், எத்தனை வருஷம் ஆனாலும் அந்த பணத்தை பத்தின உண்மை வெளியே தெரிய வர அன்னைக்கு இருக்கு. எல்லோருக்கும் மொத்தமா இருக்கு. அப்போ தெரியும் நான் யாருன்னு..” என்று ஆக்ரோஷமாக  டேபிளை அடித்து கர்ஜித்து சென்றான்.

வேதவள்ளி மகனின் திடீர்  ஆக்ரோஷத்தில் அதிர்ந்துவிட்டார். அவனுக்குள் இவ்வளவு கோவமா..?

அதன்பின் சரித்திரன் தாமதிக்காமல் அடுத்த வழக்கு நாளில் லாயரை வைத்து தான் செய்ய நினைத்ததை செய்தான். குமரகுரு மகன் சொன்னதை அப்படியே சொன்னார். அந்த இரு துறையும் அதை நிரூபிக்க முடியாமல், அவகாசம் கேட்க, சரித்திரனின் லாயர், “நாங்க அதுக்கு கணக்கு காட்டிட்டோம். டேக்ஸும் கட்டுறோம்னு சொல்லிட்டோம், அப்பறம் என்ன..?” என்று தீவிரமாக வாதிட்டார்.

நீதிபதி உள்ளிட்ட அங்கிருந்த அத்தனை பேருக்கும் தெரியும் அது பொய் என்று. ஆனால் சட்டத்திற்கு ஆதாரம் தானே தேவை. உண்மை இல்லையே. அந்த உண்மையை வெளியே கொண்டு வர எல்லோராலும் முடிவது இல்லையே.

சரித்திரன் எந்த உண்மைக்கு காத்திருக்கிறானோ, அதே உண்மைக்கு தான் சட்டமும் காத்திருக்கிறது. அது கிடைக்காமல் நீதிபதி சரித்திரன் தரப்பு வாதத்தை ஏற்று கொண்டு அந்த இரு துறைக்கும் அவகாசம் கொடுத்தார். ஆனால் அவர்களால் அதை பொய் என்று நிரூபிக்க முடியவில்லை.

சரித்திரன் அவன் அப்பாவை வெளியே எடுத்திருந்தான். அவரின் மீதான கேஸ் முடிவுக்கு வந்தது. வரி கட்டுவிட்டு, அதை தலை முழுகினான்.

குமரகுரு அன்று நிம்மதியாக உறங்க, இவனுக்கு தூக்கம் பறிபோனது. அப்பாவின் மீதான தவறை நான் உறுதி செய்து வந்திருக்கிறேன் என்ற உறுத்தல் அவன் நிம்மதியை குலைத்தது.

தொடர்ந்த  நாட்களில் அவனிடம் பெரும் அமைதி சூழ, வேதவள்ளி சுதாரித்து கொண்டார். மகனின் மாற்றத்தை அவர் கண்டு கொண்டார்.

அவனுக்கான சந்தோஷத்தை அவன் கையில் கொடுக்க, விஸ்வநாதன் வீட்டிற்கு கணவரோட சென்றார். ராகவர்த்தினியை கொடுக்க, இந்த முறை விஸ்வநாதன் மறுக்கவில்லை. சம்மதம் தெரிவித்தார்.

அடுத்த வாரத்திலே பூ வைத்து உறுதி செய்தனர். முகூர்த்தம் இரண்டு மாதத்தில் குறித்தனர். “எனக்கு சிம்பிளா பண்ணா போதும் வர்த்தினி..” என்றான் சரித்திரன் பெண்ணிடம்.

அவளுக்கும் அவனின் அலைப்புறுதல் புரிய, “கோவில்ல வைச்சுக்கலாம்..” என்றுவிட்டாள்.

“எனக்கு உங்களோட இருக்கணும். நம்ம கல்யாணம் நடக்கணும்,  அவ்வளவு தான். அது எங்கன்னாலும் எனக்கு ஓகே..” என்றாள்.

சரித்திரனுக்கு அவளின் வார்த்தைகளில், அவளின் எல்லையில்லா காதலில் இறுக்கம் கலைத்து இளக்கம் கொண்டான்.

அவளுக்கான முகூர்த்த புடவை, நகைகளை தானே தேர்ந்துடுத்தான். பத்திரிக்கை மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே சென்றது. “மூத்த கட்சி ஆளுங்கப்பா..” என்று குமரகுரு கேட்க,

“சாரிப்பா.. ப்ளீஸ்..” என்றுவிட்டான் மகன். “அடிமட்ட கட்சி தொண்டர்களுக்கு கட்சி ஆபிஸ்லே நம்ம சார்பா விருந்து ஏற்பாடு பண்ணிட்டேன். இந்த மூத்த உறுப்பினர்கள் பற்றி எனக்கு வேண்டாம்ப்பா..” என்றான் முடிவாக.

விஸ்வநாதனுக்கு அந்த கேஸ் முடிவுக்கு வந்ததில் ஆசுவாசம். சரித்திரனிடம் முன் போல பழக பார்க்க, அவனோ மரியாதை கொடுக்கிறேன் என்ற பேரில் விலகி நின்று கொண்டான்.

“எனக்காக நான் யோசிக்க கூடாதா..?” என்று மகளிடம் கோவப்பட,

“அவங்க அப்பாக்காக அவரும் யோசிக்க கூடாதாப்பா..” என்றாள் மகளும்.

சித்ரா கணவரிடம் இருந்து விஷயத்தை கறந்து மகளிடம் சொல்லியிருந்தாரே. விஸ்வநாதன் திரும்பி மனைவியை முறைக்க, அவரோ தோள் குலுக்கி கொண்டு சென்றார்.

ராகவர்த்தினிக்கு இதை எல்லாம் கடந்து, முகூர்த்த நாள் நெருங்குவதே பெரும் ஆர்ப்பரிப்பு. எக்ஸைட்மென்ட். உற்சாகம், தவிப்பு, வெட்கம், திணறல் எல்லாம்.

சரித்திரனிடம்  சிறு மாற்றம் புரிந்தாலும், அவனும் எதிர்பார்ப்புடன் தான் இருந்தான். எத்தனை போராட்டம், காத்திருப்பு இந்த நாளுக்காக.  எக்காரணத்தை கொண்டும் அந்த நாளை கெடுத்து கொள்ள அவன் தயாரில்லை. அவனின் பெண்ணிற்காக. அவள் ஒருத்திக்காக தனக்குள் எல்லாம் புதைத்து கொண்டான்.

வர்த்தினியிடம் நிறையவே பேசினான். திருமண ஷாப்பிங் சென்று வந்தான். அவளுக்கு பிடித்தமானதை அறிந்து அடிக்கடி சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தான். அவளை மகிழ்ச்சியாக வைத்தான்.

வர்ஷா தான், “நான் எப்படி கல்யாணத்துக்கு வர, இப்போ தானே வந்தேன்..?” என்று புலம்பி கொண்டிருந்தாள். அவளுக்கும் வந்து செல்ல ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

திருமண நாளுக்கு முன்தினம் தான் வர்ஷா வீடு வந்திறங்கினாள். பெரிதான ஏற்பாடுகள் இல்லை. ஆனால் செய்தவை எல்லாம் நன்றாக செய்தனர். பக்கத்திலே உள்ள கோவிலில் வைத்து முகூர்த்தம் என்பதால், மிக நெருங்கிய உறவுகள் மட்டுமே சென்றனர்.

ராகவர்த்தினி மணப்பெண்ணாக வர, சரித்திரன் அவளை மிகையாத புன்னகையுடன், மிகுந்த காதலுடன் கரம் பற்றி விரல் கோர்த்து கொண்டான். அவனின் தேர்வான புடவை, நகையில் அவன் நினைத்ததை விட இன்னும் ஜோராக ஜொலித்து அவனை கொள்ளை கொண்டாள் பெண்.

கம்பீரமாக தன் கரம் பற்றி நடக்கும் காதலனை ரசித்து பார்த்தாள் ராகவர்த்தினி.  அந்த நொடிகளை தனக்குள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாடி கொண்டாள்.

உறுதியாக இந்த தருணம் வாய்க்கும் என்று தெரியும். ஆனால் அத்தருணத்தில் திளைக்கும் நேரம் மூச்சு காற்று கூட அதன் லயத்தில் இருந்து தவறி போகும் என்பது திருமண அனுபவமாகி போனது.

அவர்கள் காதல் மட்டுமே அங்கு லயத்துடன் இருக்க,  லாளிதமாய் அந்த காதலை போற்றி, தம்பதி சகிதமாய் சாமி முன் நின்றனர். மாலை மாற்றினர். மாங்கல்யம் வந்தது. தன் பெண்ணை பார்த்தான். அவளும் கட்டுப்படுத்த முடியா ஒற்றை துளி கண்ணீருடன் அவனை பார்த்து இதழ் விரிக்க, கழுத்தில் மாங்கல்யம் சூட்டி அவளை தன் சரிபாதியாக தன்னுடன் இணைத்து  கொண்டான் சரித்திரன்.

அதன் பின் நடந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், விருந்து எல்லாம் அவர்களுக்கு மாயமாகவே மறைந்து போனது. வேதவள்ளி மருமகளை வரவேற்று விளக்கேற்ற வைத்தது, பாலும் பழமும் கொடுத்தது, வர்ஷா அவர்களை கலாட்டா செய்தது,  அங்கிருந்து விஸ்வநாதன் வீடு சென்று வந்தது எல்லாம் மற்றவர் அருகாமையில் கனவு போலே நடந்து முடிந்தது.

அன்றிரவுக்கான சடங்கு பற்றி பேச ஆரம்பிக்க, “நாங்க புது வீட்டுக்கு போறோம்..” என்றுவிட்டான் சரித்திரன்.

வேதவள்ளியும் இரவு உணவு கொடுத்து மணமக்களை விசாகனுடன் அனுப்பி வைத்தார். நண்பன் இல்லையென்றால் சரித்திரன் பல நேரம் கஷ்டப்பட்டிருப்பான் என்று ராகவர்த்தினிக்கு நன்றாகவே தெரியும். அதனாலே பெண் காரை விட்டு இறங்கியதும், “ரொம்ப நன்றிங்கண்ணா..” என்றாள்.

“இதுக்கெதுக்குமா நன்றி எல்லாம்..” விசாகன் சொன்னவன், நண்பனை அணைத்து வாழ்த்தி விடைபெற்றான்.

சரித்திரனுக்கு மனைவி நன்றி சொன்ன காரணம் தெரியும். அது அவள் காதல். விசாகனுக்கு அது புரியவே இல்லை என்பது அவன் நட்பு. மனம் குளிர, மனைவி கை  கோர்த்தான்.

தம்பதி சகிதமாக இருவரும் கோர்த்த கரங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். மெழுகு வர்த்திகள், படுக்கை அறையில் அலங்காரம், பால், இனிப்பு என்று  முன்பே எல்லாம்  ஏற்பாடு செய்து வைத்திருந்தான் சரித்திரன்.

ராகவர்த்தினிக்கு இவற்றை  பார்க்கவும், கணவனை சகஜமாக பார்க்க முடியாமல் போனது. படுக்கை அறை சுவற்றில் சாய்ந்து நின்றுவிட, சரித்திரன் கதவை லாக் செய்து வந்தவன் அவள் முன் நின்றான்.

“அரேஞ்சமென்ட்ஸ் எல்லாம் ஓகேவா..?” என்றான் கண் சிமிட்டி.  இலகுவான உடையான டிராக் பேண்ட், டிஷர்ட்டில் இருந்தான். தலைக்கு குளித்த ஈரம் இன்னும் மினுமினுப்பாக, அவன் நெற்றியில் உரசி கொண்டிருந்தது.

இவள் குங்கும வண்ண கிரேப் சில்க் புடவையில், புது மஞ்சள் தாலி கழுத்தில் மினுங்க, அளவான நகை, மொட்டு மல்லி, கன்னத்து சிவப்பு என்று புது பெண்ணாக ஜொலித்தாள்.

கணவன் பார்வை அவள் மேல் இருக்க, அவளோ எங்கோ பார்த்திருந்தாள். இன்னும் கொஞ்சம் நெருங்கினான் இவன். புடவை உரசியது. அப்போதும் பெண் அவனை பார்க்கவில்லை. அடுத்து இன்னும் நெருங்கினான். புடவையுடன் இவனும் அவளை உரசினான். மனைவி உடல் குறுக்கினாள்.

புருவம் ஏற்றி இறக்கியவன், அவளுக்கு இரு பக்கமும் கையூன்றி நெற்றி முட்டி நின்றான். ராகவர்த்தினி இப்போது அவனை கொஞ்சம் சிணுங்கல் கலந்த முறைப்புடன் பார்த்தாள்.

சில்லென்ற அவன் ஈர முடி அவளை சிலிர்க்க  வைத்தது. “தள்ளி நில்லுங்க..” என்றாள் காற்றான குரலில்.

அவன் உஷ்ண மூச்சு காற்று அவள் மேல் படிய, ஒரு கை எடுத்து அவள் இடையில் வைத்தான். பெண் தவித்துவிட்டாள். அவன் கையை பார்க்க, மறுகையால் அவள் கன்னம் பற்றி தன்னை பார்க்க வைத்தான்.

“என்னை நானே பார்க்க வைக்கணுமா..? ம்ஹ்ம்..” கேட்டபடி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான். சூடான இதழ் முத்தம். அடுத்து ஒற்றை கன்னத்தை திருப்பி அங்கும் இதழ் பதித்தவன், நிமிடத்திற்கு அங்கேயே வைத்து கொண்டான்.

“என்ன.. என்ன பண்றீங்க..” புது பெண் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள பார்க்க, இன்னும் அவளோடு ஒட்டி உராய்ந்தவன், மறுகன்னத்தில் இதழ் மட்டும் வைக்காமல், பல்லையும் வைத்து பதம் பார்த்தான்.

“ஸ்ஸ்.. என்னங்க..”

அவனோ அவளின் விரல்களை தன் முகத்துக்கருகில் கொண்டு வந்தான். மனைவியை பார்த்தபடியே முத்தமிட்டவன், விரலை உதட்டுக்குள் இழுத்து கொள்ள, மனைவியின் கண்கள் விரிந்து போனது. மூச்சு காற்றின் வேகமும் கூடி போனது.

“இதுக்கேவா..” என்றவனின் தாப பார்வை அவள் இதழில் பதிய பெண்ணுக்கு தானே நடுக்கம் கண்டது. அவன் பார்வையில் கீழ் உதட்டை மடக்க,

“ம்ஹூம்.. அது என் வாய்க்குள்ள இருக்க வேண்டியதுடி..” என்றவன் நொடியும் இல்லாமல் சொன்னதை செய்தான்.

வர்த்தினி அவன் டிஷர்ட்டை பிடித்து கொள்ள, கால்கள் அவன் இழுப்புக்கு எக்கியது. அவசரமே இல்லாமல் அவளின் உதட்டில் காதல் புரிந்து கொண்டிருந்தவன்  கைகளோ அவளை மொத்தமாக தன்னுடன் இணைத்து கொண்டது.

உடைகளை தாண்டிய உடல் நெருக்கம். அவள் இடை வழி இரு கைகளும் நுழைய, வர்த்தினி தவித்து, திணறி அவனிடம் இருந்து உதட்டை பிரித்து கொண்டாள்.

அவனோ  “ஏண்டி..” என்று அவள் பின் தலை பிடித்து பற்றி கொண்டவன்,  “எத்தனை வருஷத்து ஏக்கம் தெரியுமா இது. மென்னு திங்காம ஓய மாட்டேன்..” என்றவன் திரும்ப திரும்ப அவள் உதட்டை பதம் பார்த்தான்.

கணவனாக அவதாரம் எடுத்திருந்த காதலனிடம் இப்படியான வேகத்தை பெண் எதிர்பார்க்கவே இல்லை என்பது போல அவளை தனக்குள் சுருட்ட ஆரம்பித்தான் அவன்.

நின்றபடியே கட்டி கொண்டு, உடல் இறுக்கம் கொடுத்தவனின் ஸ்பரிசம் அவளுக்கு புதிதாக இருந்தது. அவனின் கைகள் செல்லும் இடமெல்லாம் அவளை கொதிக்க வைத்தது.

உதடுகள் அவளில் மென்மையாக, வன்மையாக பதிய ஆரம்பிக்க, உடைகளுக்கு அங்கு இடமில்லாமல் போனது. கணவனின் பார்வை, அதில் தெரிந்த ஆசை, பிரமிப்பு அவளை கண் மூட வைக்க, மூட கூடாது என்று அவளை தீண்டி தீண்டி அராஜகம் செய்தான் கணவன்.

“நீ என் பக்கத்துல இருக்கும் போது இது என்னை டிஸ்டர்ப் பண்ணும், அது என்னை டிஸ்டர்ப் பண்ணும். கண்ட்ரோலா இருக்க நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்டி..” என்றவன், அவன் பாட்டை அவளிடம் மொத்தமாக இறக்கி வைக்க, அவள் தான் திண்டாடி போனாள்.

“நல்லவர் மாதிரி இருந்து எங்க எல்லாம் பார்த்திருக்கீங்க. கேடி..” வர்த்தினி செல்ல கோபத்துடன் அவன் மீசை பிடித்திழுத்தாள்.

சரித்திரன் குறும்பாக கண்ணடித்தவன், “இப்போ இன்னும் ஆசையா தான் இருக்கு. செமடி நீ..” என்று கமெண்ட் கொடுத்து அவளை ஒரு வழி செய்தான்.

அவள் எதிர்பார்த்த காதல் அவனிடம் அதிகமே என்பது அவளை ஆராதித்த நொடிகளில் பெண் கண்டு கொண்டாள். இன்னும் அவன் மேல் காதலும் கொண்டவள், அதை அவனுக்கு தெரியப்படுத்த, கணவனாவன், சொர்க்கம் சென்று வந்தான்.

மனைவியின் வெட்கத்தில் சிவந்த கன்னங்கள், கணவனின் சூடேறிய உடல் இரண்டும் அன்றய இரவு முழுதும் நீடித்தது.

Advertisement