யுகம் சுகம் தானே 6

“உங்களை பார்க்க உதய் சார் வந்திருக்கார்..”  ரூமில் இருந்த RK விடம் சென்று ஜித்தனின் அப்பா தியாகு சொல்ல

உட்கார வைச்சு கவனிங்க.. வரேன்..”  என்றவர் யோசனையான முகத்துடன் டிஷர்ட் அணிந்து ஹாலுக்கு சென்றார்

அங்கு தியாகுவின் மனைவி  ஜோதி உதய்க்கு  டீ கொடுத்திருக்க, அது டீபாய் மேல் ஆறி போயிருந்தது. உதய் முகமும் இறுக்கத்துடன் இருக்க, எல்லாம் அவதானித்த படி ஹாலுக்கு வந்த ராம்

வாங்க உதய்..” என்று அவனை வரவேற்க, உதய் மரியாதையுடன் எழுந்து நின்றான்

உட்காருங்க..”  என்றவர் உதய் அமரவும், “ஜோதி..”  என்று குரல் கொடுத்தார்

ண்ணா..”  என்று ஜோதி வரவும்

இந்த டீ எடுத்துட்டு போய், இன்னொரு டீ எடுத்திட்டு வாங்க..”  என, அவரும் அந்த ஆறி போன டீயை எடுத்து சென்றார் புது டீ எடுத்து வர

உதய் ஹாலில் மாட்டியிருந்த ராமின் குடும்ப  போட்டோவை பார்த்து கொண்டிருக்க, “அதுதான் என் மனைவி ஷாக்க்ஷி..” என்றார் ராம்

ம்ம்..”  என்ற  உதய் பார்வை என்னமோ அம்மாவின் தோளில் தொங்கி கொண்டிருந்த ஷாரா மேல் தான் இருந்தது

ஸ்கர்ட், ஷர்ட் போல எதோ போட்டு, தலை பின்னி பூ வைத்து, நெற்றியில் குங்குமம் மிளிர, ஸ்கூல் படிக்கும் பெண்ணின் தோற்றத்தில் முன் வரிசை பல் முழுவதும் தெரிய  சிரித்து கொண்டிருந்தாள்.   அதிலும்  ஷாக்க்ஷியின் தோளின் மேல் செல்லமாக சாய்ந்திருக்கும்  போது எடுத்த கேண்டிட் போட்டோ போல

இது எங்க கல்யாண நாள்க்கு எடுத்த போட்டோ..”  ராம் தானே சொன்னார்

ஓஹ்..”  என்ற உதய்க்கு ஜோதி திரும்ப டீ எடுத்து வந்து கொடுக்க

எடுத்துக்கோங்க உதய்..” என்றார் ராம். அவரிடம் மறுக்க முடியாமல் மரியாதை தடுக்க, எடுத்து கொண்டவன் இரண்டு சிப் மட்டுமே குடித்து வைத்துவிட்டான். அதற்கு மேல் குடிப்பவன் போல தெரியவில்லை

தம்பி.. சினேக்ஸ் கொஞ்சமாவது எடுத்துக்கோங்க..” ஜோதி திரும்பவும் பலகார தட்டுடன் வர

வேண்டாம் ஆன்ட்டி..” என்றுவிட்டான்அவர் கிட்சன் உள்ளே சென்றுவிட, தியாகுவும் வெளியே சென்றுவிட்டார். ஹாலில் இருவர் மட்டுமே

சொல்லுங்க உதய்.. ஷா என்ன சொல்லிட்டா..?” ராம் கேட்க

முடியாது சொல்லிட்டாங்க..”  என்றான் உதய் இன்னும் ஆறாத கோபத்துடன். ஷாவின் ஆபிசில் இருந்து நேரே இங்கு தான் வந்திருந்தான்.

ஓஹ்..”  ராம் முகத்தில் குழப்பம். ஷா ஏன் இவ்வளவு எதிர்க்கிறா என்று

அடுத்து என்ன..?” ராம் யோசனையுடன் கேட்டார்

நீங்க உங்க ஷேரை கொடுங்க..” என்றான் உதய் பட்டென

என்ன..?”  ராம் அதிர்ந்து பார்க்க

ஷா அம்மா ஷேர் இன்னும் உங்ககிட்ட தானே இருக்கு, அதை எனக்கு கொடுங்க..”  என்றான் நேருக்கு நேராக

உங்களுக்கு  ரொம்ப தைரியம் தான்..”  ராம் ஆச்சரியத்துடன் சொல்ல

எனக்கு இப்போ வேற வழி இல்லை, நீங்க எல்லா பவரையும் உங்க பொண்ணுக்கு கொடுத்து வச்சிருக்கீங்க..? என்னால ஓரளவுக்கு மேல வெளியே ஷேர் வாங்க முடியாது, நான் எதிர்பாக்குற ஷேர் மார்க்கெட்ல கிடைக்கவும் கிடைக்காது..”

அப்படியே அடிச்சு பிடிச்சு மேஜர் ஷேர் வச்சிருக்கிறவங்க கிட்ட வாங்க பார்த்தாலும் அந்தளவு இல்லை. ஒன்னு உங்ககிட்ட இருக்கு, இல்லை அந்த பிரசாத் கேங்கிட்ட இருக்கு, உங்க ப்ரண்ட்ஸ் குணா அங்கிள், முகில் இப்படி போனாலும் கொஞ்சம் தான் தேறுது, இதை தவிர பப்லிக் ஷேர் தான் இருக்கு, அதுல நான் எவ்வளவு வாங்கிட முடியும்..?”  படபடவென பேச, ராம் முகத்தில் சிரிப்பு தான்

இந்த ஒரு வாரமா இந்த வேலையா தான் இருந்திருக்கீங்க போல..” என்றார்

ம்ப்ச்.. சொல்லுங்க  சார், கொடுப்பீங்களா..? பணம் ரெடியா இருக்கு..”  அதிலே நின்றான்

ப்ராஜெக்ட்ல வந்த மொத்த பணத்தையும் இதுல தான் போடுறீங்க போல..”  ராம் கேட்க

ஆமா சார்..”  என்றான் உதய்

அப்படி என்ன அவசியம் உதய்..? இதுக்கு முன்னாடி நீங்க RK குரூப்க்குள்ள வர ஐடியால இல்லைன்னு தெரியும்.. இப்போ மட்டும் என்ன..?”

ஏன் சார் நான் உங்க RK குரூப்க்குள்ள வர கூடாதா..?”

கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா ஒன்னு சொல்ல இஷ்டம் இல்லை, அடுத்து பதில் தெரியாம இருக்கலாம்.. நீங்க எப்படி..?”

ரெண்டுமே தான்..” என்றுவிட்டான்

ஹாஹா..” ராம் சிரித்தேவிட்டார்

சார் சொல்லுங்க..” உதய் முகத்தில் அதே இறுக்கம் தான்

ஷாகிட்ட பேசாம செய்ய முடியாதே உதய்..”

இந்த ஒருமுறை செய்ங்க..”

அவரால அப்படி செய்ய முடியாது..”  என்று ஷா வந்தாள். உதய் முகத்தை அப்படியே திருப்பி கொண்டான். அவளை எதிர்பார்க்காமல் இல்லை. வீட்டில் இருக்கும் சிசிடிவியில் என்னை பார்த்து கண்டிப்பாக வருவாள் என்று தெரியும்

ராமிற்கு உடம்பு முடியாமல் போனதில் இருந்தே  தோணும் போதெல்லாம் மொபைலில் உள்ள சிசிடிவி புட்டேஜில் அவர் என்ன செய்கிறார்  என்று பார்த்து கொண்டே இருப்பாள். அப்படி இன்றும் பார்க்க, உதய் வந்திருப்பது தெரிந்து அப்படியே கிளம்பிவிட்டாள்

ராமிற்குமே மகள் வருவாள் என்று தெரியுமே. அவர் உதய்யை பார்க்க அவன் அவள் பக்கமே திரும்பவில்லை

சார்.. நீங்க சொல்லுங்க..” உதய் ராமிடமே பேசினான்

அவர் என்ன சொல்வார்..? புல் பவரும் என்கிட்ட தான் இருக்கு..”  ஷா சொல்ல

நான் உன்கிட்ட பேசல..”  உதய் அவளை பார்த்து பல்லை கடித்து பேசினான். அவனின் கோவத்தில் ஷா முகம் வாடி மீண்டது.   

ஷா.. முதல்ல உட்காரு..” ராம் மகளை உட்கார வைத்தவர், ஜோதி.. என்று குரல் கொடுக்க, அவர் கையில் ஜுஸுடன் வந்தவர், ராம், ஷா இருவருக்குமே கொடுக்க, எடுத்து கொண்ட ஷா,  “அண்ணனுங்க வெளியே இருக்காங்க..” என்றாள் ஜித்தன், ஜின்னாவை.

நான் கொடுக்கிறேன்..” உள்ளே சென்று டீயுடன் வெளியே சென்றார். அவர்கள் முன் ஹால் சோபாவில் குடும்பமாய் அமர்ந்து பேசி சிரித்து கொண்டே டீ குடிக்க, ராம், ஷா இருவரின் முகமும் வெளியே சாதரணமாக இருந்தாலும், கண்களில் அளவுகடந்த வேதனை

இருவரின் கண்களும் தன்னை போல ஷாக்க்ஷியின் போட்டோவை தொட்டு மீண்டது. வருடங்கள் கடந்தும் ஈடு செய்ய முடியாத இழப்பு. உதய் இவர்களை பார்க்காமல் மொபைலை பார்த்து கொண்டிருக்க, அவர்களின் வேதனை தெரியவில்லை

அப்பா, மகள் இருவரும் ஜுஸ் குடித்து முடிக்க, உதய்யை பார்த்தனர். அவன் முன்னால் சாய்ந்து மொபைலை பார்த்து கொண்டிருக்க, ராம், ஷா  இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து உதடு பிதுக்கினர்

டவர் நல்லா கிடைக்குதா உதய்..?” ராம்  கேட்க

பரவாயில்லை..” என்றான் அவன் நிமிர்ந்து பார்த்து

இவர் அடங்கவே மாட்டார்..” ஷா அவனை பார்க்க, அவனோ ராமை தான் பார்த்தவன், “என்ன செய்யலாம் சொல்லுங்க சார்..” என்றான்

உதய்..  ஷா சொல்றது சரி, என்னால இப்போ எதுவும் செய்ய முடியாது, அவகிட்ட தான் புல் பவர் கொடுத்திருக்கேன்..”

சிம்பிள் கேன்சல் பண்ணிடுங்க..”  என்றான் அதற்கும்

என்ன..?”  அப்பா, மகள் இருவரும் திரும்பவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ராம் முகத்தில் சிரிப்பு என்றால் ஷா முகத்தில் சிணுக்கம்

ப்பா.. அவருக்கு ஏன்  திடீர்ன்னு RK குரூப் ஷேர் வேணும்ன்னு கேட்டு சொல்லுங்க..” ஷா அவரிடம் கேட்க, உதய் உனக்கு பதில் சொல்ல முடியாது என்று அமர்ந்திருந்தான்

ஷா உனக்கு என்ன கேட்கணுமோ நீயே அவர்கிட்ட  கேட்டுக்கோ.. உதய் ரெண்டு பேரும் பொறுமையா பேசி முடிவுக்கு வாங்க, இது பிஸ்னஸ் மட்டுமில்லை.. பாத்துக்கோங்க, இது எனக்கு வாக்கிங் டைம்..”  தியாகு வாசலில் நின்றிருக்க, ராம் அவரை நோக்கி நடந்தார்

சார்.. நான் உங்ககிட்ட பேசணும் தான் வந்தேன்..”  உதய் தானும் கிளம்பினான்ஷா முடியாது என்று சொன்ன பிறகு அவளிடம் பேச அவனுக்கு விருப்பமில்லை. ராம் நின்று ஷாவை பார்க்க, அவள் முகத்தில் அடக்கப்பட்ட கோவம்.  

எனக்கு உங்ககிட்ட பேசணும்..” உதய் பார்த்து நேரடியாக சொன்னாள். ராம் அதற்கு மேல் அங்கு நிற்காமல் கிளம்பிவிட்டார்

அவரால் இருவருக்கும் இடையில் பேச முடியும் என்று தோன்றவில்லை. இருவருமே சின்ன பிள்ளைகள் இல்லையே.. தனியே இயங்கும் வல்லமை படைத்தவர்கள். அவர்களுக்கு இடையில் தான் என்ன பேச..?  அவர்களே பேசி முடிவுக்கு வரட்டும்.. என்று கிளம்பிவிட்டார்

உதய் கிளம்பியவன் அப்படியே நிற்க,   “இத்தனை வருஷம் இல்லாமல் இப்போ மட்டும் என்ன..?”  ஷா அழுத்தமாக கேட்டாள்

உதய் அவளின் பக்கம் திரும்பாமல் வாசலை பார்த்து நின்றான். “சொல்லுங்க..”  ஷா வந்து அவனின் பக்கத்தில் நின்று முகம் பார்த்தாள்

சொன்னா தான் ஷேர் தருவாங்களா மேடம்..?” உதடு வளைத்தான். பதில் சொல்லவில்லை. முகமும் பார்க்கவில்லை.  

“உங்க அலட்சியத்தை என்கிட்ட காட்டுறீங்களா..?”

“ம்ப்ச்.. உங்க பிஸ்னஸ்ல இன்வெஸ்ட் பண்ணனும் தோணுச்சு, இன்வெஸ்ட் பண்றேன், என்ன தப்பு..?” உதய் அவளை பார்த்து சொன்னான்.

“இது காரணம் இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்..”

“என்னப்பா வேணும் உனக்கு இப்போ..?”

“எனக்கு ஒன்னும் வேண்டாம்.. அதை தான் நான் உங்ககிட்ட சொல்றேன்..”  நிறுத்தி நிதானமாக சொன்னவளை உதய்  தீர்க்கமாக பார்த்தான். அவளும் அவனின் பார்வையை நேராக எதிர்கொண்டாள்.