“என்ன செய்ற ஷா..” உதய் அவளை கட்டுப்படுத்தி பிடித்து வைத்தான்.
“ஷா என்ன இது..? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல.. உன் நல்லதுக்கு தானே நான் பேசினேன்..” பிரசாத் அப்போதும் மிகவும் வருத்தம் கொள்வது போல பேச, உதய்க்கு உண்மைக்குமே ஆச்சரியம். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று.
“மேடம்.. நாம கிளம்பலாம்..” ஜின்னா அவளை அங்கிருந்து கிளப்ப பார்த்தான்.
“வெய்ட் ஜின்னா சார்.. எனக்கு ஷாகிட்ட மீட்டிங்க பத்தி டிஸ்கஸ் பண்ண இன்னும் நிறைய இருக்கு..” என்றான் பிரசாத்.