யுகம் சுகம் தானே 21 3 20785 இதோ நாளை மூன்று வருட ஆனுவல் பன்க்ஷனும், அவர்களின் புது வீட்டிற்கான கிரக பிரவேசமும். ராம் வீட்டிற்கு பக்கத்து இடமே அவர்களுக்கு கிடைக்க, உதய் கண்ணம்மாவிடம் பேசி வாங்கிவிட்டான். ராமிற்கு மனைவி வாழ்ந்த வீடு என்ற அட்டேச்மெண்ட் இருக்க, அவரால் அந்த வீட்டை விட்டு வரமுடியவில்லை. ஷாவிற்கோ தந்தையை நினைத்து கவலை. பார்த்தவன் வீட்டில் பேசி அந்த இடத்தை வாங்கி, அங்கிருந்த பழைய பில்டிங்கை இடித்து அவர்களுக்கான பங்களாவை கட்டிவிட்டான். மறுநாள் காலையிலே கிரகப்பிரவேசம். உதய் பூஜையில் கண்ணம்மா, கணபதியை அமரவைத்தான். அவர்களும் மகனின் வீட்டிக்கென்று அவர்களால் முடிந்த பணத்தை கொடுத்திருந்தனர். உதய் மகளை கையில் தாங்கி நின்றிருக்க, ஷா கிரகப்பிரவேச வேலையில் சுழன்று கொண்டிருந்தாள். இங்கு பூஜை முடியவும், காலை உணவு முடித்து, ஷா கம்பெனி சென்றனர். அங்கு கம்பெனி ஆனுவல் பங்க்ஷனுடன், அவர்களின் செக்ஸஸிற்கான கொண்டாட்டமும் நடந்தது. எல்லாம் முடிந்து புது வீட்டிற்குவருவதற்குள் ஜோதி வீட்டை செட் செய்திருந்தார். ஜின்னா மனைவி கவிதா அவர்களின் கம்பெனியிலே வேலையில் இருக்க, மகன் இருந்தான். ஜித்தனுக்கு பெண் பார்த்து கொண்டிருந்தனர் திருமணத்திற்காக. ராம் வீட்டிற்கு பக்கத்திலே உதய் வீடு என்பதால் இரு வீட்டிற்கு இடையில் கேட் வைத்துவிட்டனர். அதில் உதய் மகள் ‘உதயதாரா‘விற்கு க்கு தான் கொண்டாட்டம். நடக்க ஆரம்பித்துவிட்டதால் குடுகுடுவென இரு வீட்டிற்கும் ஓட்டம். அவளை பார்த்து கொள்ளவே கண்ணம்மா, ஜோதிக்கு சரியாக இருந்தது. ஓர் நாளில் இருவரும் களைத்து போயினர். இரவு போல உணவு முடித்து எல்லாம் அமர்ந்திருக்க, ஷா ராமை பார்த்து வர சென்றிருந்தாள். இங்கு கண்ணம்மவோ, பேத்தியை வைத்து மகனை வம்பு இழுத்து கொண்டிருந்தார். “அப்படியே உங்க அப்பாவை போல என் உயிரை வாங்கு..” வேண்டுமென பேத்தியை பேச, “என்ன செய்ய அவங்க அப்பா அப்படியே அவங்க அம்மா மாதிரி அடங்காதவங்க..” உதய் திருப்பி கொடுத்தான். அதில் உதய் மகளுக்கு ஏகப்பட்ட குஷி. கைதட்டி சிரித்தாள் பூச்செண்டு. கண்ணம்மா இருவரையும் முறைத்து பார்க்க, “கண்ணு.. நாம போலாம் வா.. இங்க வாஸ்து சரியில்லை, அக்னி மூலை போல..” என்று மேலும் வம்பிழுத்தான். “டேய்.. உன் பொண்ணுக்கு தேவைன்னா வேற பேர் வைடா, எதுக்கு என் பேரை கூப்பிடுற..” அவர் வரிந்து கட்டி சண்டை போட்டாலும் பயன் இருக்காது. இன்னும் ஜோராக கூப்பிடுவான். “கண்ணு.. என் கிளாஸ் எங்க..?” புது வீட்டில் பொருட்கள் கிடைக்காமல் கணபதி வர, “நானு.. கண்ணு..” என்று உதய் மகள் தாத்தாவிடம் கண் உருட்டினாள். “அடியே.. நான் தான்டி கண்ணு.. உங்க அப்பா மகளுக்கு பேர் கூட வைக்க முடியாமல் என் பேரை சுட்டு வச்சிருக்கான், இதுக்கு உனக்கு கோவம் வேற..” பேத்தியை வைத்து மகனை வார, கணபதி தலையில் அடித்து கொண்டார். “மாமா.. இந்தாங்க உங்க கண்ணாடி, அவங்க இப்போதைக்கு ஓயமாட்டாங்க..” ஷா எடுத்து வந்து கொடுத்தாள். மாமனாருக்கும், மருமகளுக்கும் இந்த விஷயத்தில் புரிதல் அதிகம். அந்நேரம் அனிதா வீடியோ கால் செய்ய, எல்லோரும் அவளிடம் பேசினர். கணபதி பேசி முடித்து, மருமகள் கொடுத்த பாலை குடித்துவிட்டு தூங்க செல்ல, ஷாவும் மகளுக்கு பால் கொடுத்து அவளை தூங்க வைக்க ரூம் சென்றாள். உதய் தங்கைக்கு வீட்டை சுற்றி காண்பித்து கொண்டிருக்க, கண்ணம்மா அமைதியாக அமர்ந்திருந்தார். பார்த்த மகன் அனிதாவிடம் பேசிவிட்டு அவரிடம் வந்தவன், “என்ன ஆச்சும்மா..?” என்று கேட்க, “என்னமோ போ உதய், இந்த பொண்ணும் நம்மளோட இங்கேயே இருக்கலாம் இல்லை, வருஷத்துக்கு ஒருமுறை வந்து போறா, எங்களுக்கும் வயசாகிட்டே போகுது இல்லை, பிள்ளைகளோட இருக்கனும்ன்னு ஆசை இருக்கும் இல்லை..” ஆதங்கமாக பேசினார். மகளை மிகவும் மிஸ் செய்தார். ராகுல் அவரின் ப்ராஜெக்ட் முடித்து வருவார் என்று பார்த்தால் அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்கள் முடிவு என்று மரியாதையாக ஒதுங்கி கொண்டாலும் மனம் ஆறவில்லை தாய்க்கு. “ம்மா.. உங்களுக்கே தெரியும் மாமாக்கு இங்க விட லண்டன் ரொம்ப பிடிச்சிருக்குனு, நாம எப்படி சொல்ல முடியும்..?” “ம்ம.. அதான் நானும் அமைதியாகிட்டேன்..” என, அவரின் முகத்தில் இன்னும் மகளை பிரிந்திருக்கும் வருத்தம். என்ன இருந்தாலும் மகள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாதே. “ம்மா.. வாங்க தோட்டத்துக்கு வாக் போலாம்..” மகன் கூப்பிட, கண்ணம்மா மறுக்காமல் சென்றார். எப்படியும் அவருக்கு தூங்க முடியாது. ஒரு அரை மணி நேரம் பொதுவாக பேசி கொண்டே நடந்தவர்கள், வீட்டிற்குள் வர, உதய் காபி நீட்டினான். “போட்டியா உன் சுடு தண்ணிய..” அம்மா கேலியாக கேட்டாலும், விரும்பி குடித்தார். மகனுடன் பேச, அவனின் காலை வார என்று கண்ணம்மா நார்மல் ஆக, அதற்கு பிறகே அம்மாவை தூங்க அனுப்பி வைத்தவன், அவனின் ரூம் வந்தான். ஷா லேப்பில் வேலை பார்த்து கொண்டிருக்க, மெல்லிய சத்தத்தில் பாட்டு ஓடி கொண்டிருந்தது. மகள் பெட்டில் தூங்கி கொண்டிருக்க, இவள் ஓரமாக அமர்ந்திருந்தாள். “என்ன புருஷனுக்கு வெய்ட் பண்ற போல..” உதய் கதவை லாக் செய்து வந்தவன், லேப்பை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு அவளின் மடியில் படுத்தான். “ம்ம்.. வெய்ட் பண்றேன் தான், உங்களுக்கு தேங்ஸ் சொல்ல.. என் அப்பாகிட்டேயே என்னை கொண்டு வந்து சேர்த்ததுக்கு, அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார்..” “ச்சு.. இந்த வீணா போன தேங்க்ஸெல்லாம் எனக்கு எதுக்கு..? அதை வச்சு நான் என்ன பண்ண..?” ஷா சிரித்து கொண்டாள். “என்னடி பேச்சே காணோம்..” “பேசலைன்னா மட்டும் விடவா போறீங்க..?” “அதானே பேச்சு கூட எதுக்கு வீணா..” “சரிதான்..” “என்ன சரிதான்.. ஓஹ்.. நான் கேட்டதுக்கு சரி சொல்றியா.. கள்ளிடி நீ..?” “நீங்க என்ன கேட்டீங்க..” ஷா எப்போதும் போல தானாக தலையை கொடுத்தாள். “அப்படி வாடி என் சிங்காரி..” உல்லாசம் கொண்ட உதய், “அது தான்.. உன்னோட இந்த நைட் ஷார்ட் எனக்கு வேணும்ன்னு கேட்டிருந்தேன் இல்லை, அதுக்கு தானே சரி சொல்ற..” படுத்தபடியே பட்டனை கழட்ட, பட்டென அவனின் கையில் அடி போட்டாள். “ஸ்ஸ்.. ஏண்டி..” “நான் எவ்வளவு ஆசையா உங்ககிட்ட பேசிட்டிருக்கேன் நீங்க எப்போவும் போல பேச்சை மாத்துறீங்க..” “என்ன பேச்சை மாத்திட்டேன், நீ என்ன பேச போறன்னு எனக்கு தான் தெரியுமே..” “எங்க சொல்லுங்க பார்ப்போம்..” “இங்க வந்ததுக்கு தேங்ஸ் சொல்லுவ, விடாம உன்னை துரத்தி துரத்தி கல்யாணம் செஞ்சுக்கிட்டதுக்கு தேங்ஸ் சொல்லுவ, உன்னோட கேரியர்ல அச்சீவ் பண்றதுக்கு சப்போர்ட்டிவா இருந்தேன்னு தேங்ஸ் சொல்லுவ, இவ்வளவு அழகான தேவதையும், குடும்பத்தையும் கொடுத்ததுக்கு தேங்ஸ் சொல்லுவ, இவ்வளவு தானே..” “எப்படிங்க தெரியும்..” “அதான் நாம டாட்டா காட்ட போறோமே, இதை எல்லாம் சொல்லித்தானே இந்த சக்தி புள்ளை நம்மளை துரத்த போகுது..” {சரியா சொன்ன தெய்வமே.. உனக்கு பாட்டு வச்சு நான் பேர் வாங்கினது போதும், முதல்ல கிளம்பு} “நீங்க சொன்னதுல ஒன்னு மிஸ் ஆகிடுச்சு, நீங்க என் லைப்ல வந்ததுக்கு தேங்ஸ் சொல்லணும் இல்லை..” “தேங்ஸ் எல்லாம் வீண்ணு தான் நான் சொல்லிட்டேன் இல்லை, அதுக்கு பதில் இன்னொரு பொண்ணை பெத்து கொடு போதும்..” “ஏன் பையன் வேண்டாமா..? எனக்கு உங்களை மாதிரி பையன் வேணும்.. எங்க அத்தை என்கிட்ட சொன்ன மாதிரி நானும் என் மருமககிட்ட பெருமையா சொல்ற மாதிரி அவனை வளர்க்கணும்.. உங்களை மாதிரி அவனும் குடும்பத்துக்காகன்னு இருக்கனும், முக்கியமா உங்களை போல நானும் என் மகனும் நைட் டீ குடிக்கணும்..” “ஹாஹா.. அதுக்கெதுக்கு மகன், நான் போதுமே..” “அப்போ உங்களுக்கு மகன் வேண்டாம்..” “நோ.. எனக்கு பொண்ணு தான் வேணும், என் லைப்ல என்னோட மூணு பொக்கிஷங்களோட, நாலாவது ஒரு வைரமும் சேரனும்.. உண்மையை சொல்லணும்ன்னா, உன்னோட, அம்மாவோட சப்போர்ட் இல்லைன்னா நான் இல்லை, உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்..” “சொல்லியாச்சு இல்லை, தூங்க போங்க..” “ஏண்டி..” “நீங்க தானே நான் மகன் கேட்டதுக்கு முடியாது சொல்லிட்டீங்க, அப்பறம் என்ன மடி மேல படுக்கை..?” “ஹாஹா..” உதய் வாய்விட்டு சிரிக்க, அவனை ரசித்து காதலாக பார்த்தாள் ஷா. பல வருடங்களுக்கு முன்பு பார்த்து மயங்கிய அவனின் சிரிப்பு பெண்ணை இன்றும் மயக்கியது. எத்தனை வருட இடைவெளி இருந்தாலும், பேசாமல் விலகியிருந்தாலும் அவர்களின் காதல் மாறவில்லை. யுகம் நீண்டு சேர்ந்தாலும் இவர்களின் உறவில் முழுக்க முழுக்க சுகம் மட்டுமே..!!!!! என் அருகிலே கண் அருகிலே நீ வேண்டுமே.. மண் அடியிலும் உன் அருகிலே நான் வேண்டுமே.. சொல்ல முடியாத காதலும்.. சொல்லில் அடங்காத நேசமும்.. என்ன முடியாத ஆசையும்.. உன்னிடத்தில் தோன்றுதே..!!!