உங்க விஷ்..” சொன்ன கிஷோர், “உங்க ப்ரொஜெக்ட் எப்போ முடியுது..?”  ஆரம்பித்தார்

இந்த வீக்..”

ஓஹ்.. ப்ராக்ஜெக்ட் ஒர்க்  முடிச்சிட்டிங்களா..?”

ஏன்..?”  உதய் பதில் சொல்லாமல் திரும்ப கேள்வி கேட்டான்

கண்டிப்பா உங்களுக்காக தான்.. ப்ளீஸ் சொல்லுங்க உதய்..” மனிதர் பதுவிசாகாவே பேசினார்

அல்மோஸ்ட் முடிய போகுது..”

ம்ம்.. உங்க ஆபிஸ்க்கு எக்ஸ்ட்ரா  செக்யூரிட்டி ஏதாவது  அரேஞ் பண்ணியிருக்கீங்களா..?”

எப்போவும் இருக்கிற செக்கியூரிட்டி இருக்கும்..”

அது பத்தாது உதய்.. டைட் செக்கியூரிட்டி வேணும்..”

மிஸ்டர் கிஷோர் நாம  கொஞ்சம் ஓபனா பேசலாமா..?”

ம்ம்.. உங்க ப்ராஜெக்டை ஹாக் பண்ண  வேலை நடந்துட்டு இருக்கு, உங்க ஆபிசில் வேலை செய்ற தினேஷ் மூலமா தான் இது நடக்க போகுது..”

“உங்களுக்கு எப்படி தெரியும்..?” 

ஏன்னா அந்த ஏற்பாடே என் க்ளையண்ட்டு தான்.. எஸ் உதய்.. இப்போ நாம டீல் பேசலாமா..?”

நீங்க அந்த ப்ராஜெக்ட்ல இன்வெஸ்ட் பண்ணியிருக்கிற உங்க பணத்தை  காப்பாத்திக்க ரெண்டு வழி இருக்கு, ஒன்னு நீங்களே இந்த ப்ராஜெக்ட்ல இருந்து வாலன்டியரா விலகிடுங்க.. இல்லை என் க்ளையண்ட்கிட்ட கொடுத்துடுங்க..”  மிகவும் சாதரணமாக சொல்ல, உதய் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான்.  

புரிஞ்சிருக்கும் நினைக்கிறன் உதய்.. உங்க முடிவை பொறுத்து என் கிளைண்ட் பதில் இருக்கும்..”

ம்ம்.. இதுல எனக்கான ஆபர் ஏதும் கொடுத்திருக்காரா உங்க கிளைண்ட்..”  முகத்தில் அலட்சிய சிரிப்புடன் கேட்டான் உதய்

இருக்கு மிஸ்டர் உதய்.. உங்களுடைய இன்வெஸ்ட் பணம் இரண்டு மடங்கா கொடுக்கப்படும், அண்ட் இதை விட பெரிய ப்ராஜெக்ட் உங்க UK கன்சல்டன்சிக்கு கிடைக்கும்..”

ம்ம்நல்ல ஆபர் தான், ஆனா..”  வேண்டுமென்றே இழுத்தான்.

உதய்.. நீங்க புரிஞ்சுக்கல நினைக்கிறேன், நீங்க மறுத்தா மொத்தமும் போயிடும்.. ஆள் ரெடியா இருக்கு.. சொன்ன அடுத்த செகண்ட் மொத்தமும் புஸ்..”

ம்ம்.. புரியுது கிஷோர்..”   சில நொடி யோசிப்பது போல கன்னத்தை தடவி கொண்டவன், “ஓகே.. என்னோட முடிவை நான் எடுத்துட்டேன், ஆனா அதை உங்க அந்த கிளைண்ட்கிட்ட தான் சொல்வேன்..” என்றான் முடிவாக

நான் கேட்டு பார்க்கிறேன் உதய்..” கிஷோர் எழுந்து போன் பேச சென்றார்

டேய் உதய் என்னடா அவனை பேச விட்டு வேடிக்கை பார்க்கிற..?” அதுவரை உதய்யின் கண் அசைவில் அமைதியாக அமர்ந்திருந்த முகில் கோபத்துடன் கேட்டான்

காரணம் இருக்கு முகில்.. வெய்ட் பண்ணு..”  உதய் சொல்லி கொண்டிருக்க, அங்கு வந்த கிஷோர்

வரேன் சொல்லிட்டார், ஆனா அவரோட ஹோட்டல்..”

நோ.. நோ.. மிஸ்டர் கிஷோர்எனக்கு இங்க தான் பேசணும், அவரோட இடத்துக்கு நான் போறது எனக்கு பாதுகாப்பில்லை.. வேணும்ன்னா நாம பின்னாடி இருக்கிற தோட்டத்துக்கு போயிடலாம்.. என்ன முகில் உங்க தோட்டத்தை நாங்க யூஸ் பண்ணிக்கலாமா..?” கேட்டு எல்லோரும் அங்கு சென்றனர்.  

உதய்  சொல்வதை கிஷோரின் போன் வழியே கேட்டு கொண்டிருந்தவன் நக்கல் சிரிப்புடன், அங்கு வர ஒப்பு கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்தது என்னமோ கலாதரன் தான். குணா அங்கு நடப்பதை வெறும் பார்வையாளரா பார்த்து கொண்டிருந்தார்

ஹலோ மிஸ்டர் உதய்.. எப்படி இருக்கீங்க..?” பெரிதான சிரிப்புடன் கலாதரன் கேட்க

ம்ம்.. ஏதோ இருக்கேன் சார்..”  என்றான் அமைதியாக

ம்ம்.. எவ்வளவு மாற்றம்..? இருக்கனும் தானே.. சரி சொல்லு உன் முடிவை.. ப்ராஜெக்டை  டிராப் பண்றதா..?  எங்ககிட்ட கொடுக்கிறதா..?”

“உங்ககிட்ட கொடுக்கிறதா..?  அப்படின்னா நீங்க மட்டும் இல்லையா..?”  உதய் தெரியாதது போல கேட்டான்

ஹாஹா.. நான் மட்டுமா..? எனக்கு பின்னாடி யார் யார் இருக்காங்க தெரிஞ்சா நீ ஆடி போயிடுவ.. ஏன் உன் மானசீக குரு RK கூட இருக்கலாம்..”

என்ன..? அவரா..? ச்சே.. அவர்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..”  உதய் கோபத்துடன் சொல்வது போல சொல்ல, சத்தமாக சிரித்த கலாதரன்

சரி சொல்லு உதய்..”  அவனின் முடிவை ஆர்வமாக எதிர்பார்த்தார்

என்ன சொல்ல சார்..?” உதய் புரியாமல் கேட்டான்

என்ன சொல்லவா..? ப்ராஜெக்ட் பத்தின உன் முடிவு தான் வேறென்ன..?”

ப்ராஜெக்ட் பத்தின என் முடிவு என்னன்னா..”  சற்று இழுத்து நிறுத்தியவன், தன் முன் நின்றவர்களை கேலியாக பார்த்து கொண்டே, “நல்ல படியா முடிச்சு கொடுக்கிறது தான்..”  என்றான் அழுத்தமாக

உதய் உனக்கு உன் நிலைமை புரியல.. நாங்க இப்போ நினைச்சா உன் ஒட்டு மொத்த ப்ராஜெக்டும் காலி.. அப்பறம் நீ திரும்பவும் ஜீரோல இருந்து ஆரம்பிக்கணும், அந்தளவுக்கு ஒன்னுமில்லாமல் போயிடுவ..”  கலாதரன் எச்சரிக்க

கால் மேல் கால் பாட்டு படு அலட்சியமாக அமர்ந்தவன், “சரி..செய்..” என்றான்

என்ன..?”

அதான் இப்போ சொன்னியே நீங்க நினைச்சா என்னை ஏதோ செய்ய முடியும் சொன்னியே அதை செய் சொன்னேன்..” என்றான் மீண்டும்

நீ அடங்க மாட்டடா.. உன்னை என்னை பண்றேன் பாரு..”  கலாதரன் போனை எடுத்து யாருக்கோ அழைக்க, அந்த போன் எடுக்கப்படவில்லை. அவர் உடனே வேறு சில நம்பர்களுக்கும் கால் செய்ய, எதற்கும் பதில் இல்லை.  

என்ன தினேஷும், அந்த ஹேக்கர் கேங்கும் போனை எடுக்கலையா..?”  கேலியாக கேட்ககலாதரன் முகத்தில் லேசான பயம் ஒட்டி கொண்டது

சரி.. அவங்களை விடு, நீ உன் கண்டைனர் ட்ரைவர்க்கு போன் போடு.. ஓஹ் சாரி.. எந்த கண்டைனர் ட்ரைவர் சொல்லலை இல்லை, அதான் உன் ஆடி கார் ஷோ ரூமுக்கு கார் எடுத்துட்டு வர கண்டைனர்க்கு..”  உதய் முகத்தில் அலட்சியம் போய் கோவம் வந்தது

கலாதரன் ஏதோ புரிந்து அவசரமாக அவரின் மேனேஜருக்கு அழைக்க, அவன் சொன்ன தகவலில் முகத்தில் வேர்வை

என்ன கண்டைனர்ல  இருந்த கார்ங்க எல்லாம் மலை உச்சியில் இருந்து உருண்டுட்டு இருக்கா..? அச்சோ பாவம், எப்படியும் ஒரு அஞ்சாறு கோடி லாஸ் இருக்கும் இல்லை.. ம்ப்ச் போகட்டும் விடுங்க, ஆனா பாரேன் உன் திருப்பூர் மில் எரிஞ்சிட்டிருக்கிற விஷயம் உனக்கு இன்னும் யாரும் சொல்லலை..  டூ பேட் அட்மினிஸ்ட்ரேஷன்..”  உச்சு கொட்ட, கலாதரனின் போன் ஒலித்தது. எடுத்து பேசி வைத்தவர், வேர்வையை துடைக்க

ம்ப்ச்.. இதாவது பரவாயில்லைஇன்னும் கொஞ்ச நேரத்துல உங்க ஸ்டீல் பிளான்ட்.. அதை நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க, சொல்லிட்டா சஸ்பென்ஸ் இருக்காது..”  உதய் கோவ சிரிப்புடன் சொன்னான்

ஏய்.. என்ன பண்ற.. ஒழுங்கா எல்லாத்தையும் நிறுத்து..” கலாதரன் பயத்தில் கத்தவே செய்தார்

சரி நிறுத்திடலாம், ஆனா நான் கேட்டதை சொல்லிட்டா..”

என்ன..? என்ன சொல்லணும்..?”

சிம்பிள்.. என்னை ஏன் கை வைக்க நினைச்சீங்க..?”

அது நீ வளர கூடாதுன்னு.. ஒத்துக்கற மாதிரி இருக்கு ஆனா.. இன்னும் எதோ இருக்கும் போலயே..”

சொல்ல மாட்ட, சரி விடு..”  அவனின் போன் எடுக்க

சொல்லிடுறேன், ஷாவை கார்னர் பண்ண..” என்றுவிட்டார்.  

ஷாரா.. ஏன்..?”

அவங்க கம்பெனிஸ் எல்லாம்..”

புரிஞ்சுடுச்சு.. அவங்க மொத்த சொத்தையும் ஆட்டை போட பிளான் பண்றீங்க.. ஆனா அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்..?”

சொத்துக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை, ஆனா ஷாக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கு, அவளுக்கு ஏதாவது பிரச்சனைன்னா நீ கண்டிப்பா வருவ..  அதான் உன்னை முதல்ல முடிச்சுடலாம்ன்னு..”

ம்ம்.. அவளுக்காக நான் வருவேனா.. வருவேன் தான்.. விட மாட்டேன்.. நல்ல கெஸ்.. எனக்கே தெரியாத கெஸ்.. ஓகே.. நீ போ..”  என

கலாதரன் அந்த ஸ்டீல்.. என்று கேட்க

ஒன்னும் பண்ண மாட்டேன், ஆனா இன்னொரு முறை என் மேல கை வைக்க நினச்சா மொத்தத்தையும் முடிச்சுடுவேன், நான் முன்ன இருந்த உதய் இல்லை, எப்போ என் மேல கை வைக்க நினைசீங்களோ அப்போவே நானும் எந்த அளவுக்கும் இறங்க முடிவு பண்ணிட்டேன், எதையும் பார்க்க மாட்டேன், உங்களை மாதிரி கூப்பிட்டு வச்சு டீலும்  பேசிட்டு இருக்க மாட்டேன்.. உன் அண்ணன் மகனுக்கும்  இதை போய் சொல்லு.. போ..”  கர்ஜனையாகவே வந்தது அவனின் குரல்

அவனின் இந்த புதிய பரிமாணத்தில் காலதரனும்  அவனின் ஆட்களுடன் ஓடிவிட்டனர். “உதய் சூப்பர்டா.. கலக்கிட்ட..” முகில் ஆர்ப்பரித்து கொண்டிருக்க, அங்கு வந்த குணா, என்ன ஆச்சு உதய்.. என்று கேட்டு தெரிந்து கொண்டார்

அங்கிள்.. அந்த கலாதரன், அவன் அண்ணன் மகன் பத்தி  RK சார் பேமிலிக்கு தெரியுமா..?”

தெரியல உதய்..”  என்றார் குணா

ம்ம்..”  தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு முன் வந்தனர்

சாப்பிடலாமா உதய்..?”  முகில் கேட்க

இல்லை முகில்.. அவ வரட்டும்..” முதல் முறையாக அவளுக்காக காத்திருந்தான். ஷாவும் அடுத்த ஒரு மணி நேரம் சென்று வந்தாள்

உதய் ஷா கார்..”  முகில் சொல்ல, உதய்யின் பார்வை அவள் மேலே.

பிளாக் கலர் ஜாகுவார் மிதந்து வந்து நிற்க, அவளின் கார்ட் கதவை திறந்தான். உயர் ரக பனாரஸி புடவை  ஒற்றை முந்தாணியில், தோள் வரையிலான சில்க் முடியை ப்ரீ ஏர் விட்டு, காதில், கழுத்தில் மெலிதான பிளாட்டினம் ஜொலிக்க, ஹை ஹீல்ஸில் நேர் பார்வையுடன் கம்பீரமாக நடந்து வந்த ஷாவை எதிர்கொண்டனர் குணா குடும்பத்தினர்

அவர்களை பார்த்து கை குவித்தவள் நேரே கொலு இருக்கும் இடம் சென்று வணங்கினாள். “மேம்.. இந்தாங்க..”  மூச்சு வாங்க அவளிடம் சென்று ஒரு பார்சலை கொடுத்தான் ஒருவன்.  

அவன் ஷாராவின் PA என்கிற பேரில் இருக்கும் ஆல் இன் ஆல்ஜித்து என்கிற ஜித்தன்..”

கார்ல வந்துட்டு ஓடி வந்த மாதிரி பம்மாத்து வேலையை பாரு..”  நக்கலாக முணுமுணுத்தான் ஷாவின் பாடிகார்ட் ஜின்னா

உன்னை இப்போ கேட்டாங்களாடா..? உன் வேலை என்ன காவகாக்கிறது தானே, அதை மட்டும் பாருடா வாட்ச்மேன்..”  கேலியாக சொன்னான் ஜித்து

அதை ஆபிஸை கூட்டி பெருக்குற ஆபிஸ் பாய் நீ சொல்ல கூடாதுடா..”  ஜின்னா பதிலுக்கு கேலியாக சொல்ல, ஷா இவர்களின் பேச்சில்  திரும்பி இருவரையும் பார்க்க, அமைதியாகினர்

இந்தாங்க ஆன்ட்டி..” ஷா  பவுண்டைன் துர்கா மாதா சிலையை கிஃப்டாக கொடுக்க, குணாவின் மனைவி மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்

இது உங்களுக்கு..” முகிலின் இரண்டு வயது மகளுக்கு ஒரு பெரிய பார்சலை கொடுத்தாள். அந்த குழந்தை வெட்கத்துடன் வாங்கி கொள்ள, ஆசை கொண்ட ஷா அவளின் ரோஜா கன்னத்தில் இதழ் பதித்தாள்

குழந்தையின் கன்னமும், அவளின் இதழ்களும் ஒரே நிறத்தில் இருக்க, உதய் முகத்தில் அன்று போல இன்றும் ரசனை. அன்று அவளின் அழகு இளமை ததும்பும் அழகு.. அதை ரசித்தான். இன்று அவளின் அழகு.. கம்பீர் அழகு.. ஆராதிக்கும் அழகு. அதையும் ரசித்தான்

அன்று போல அவனின் பார்வை அவள் மேலே. ஆனால் அவனை பார்க்க வைத்தவளோ அவனின் பக்கமே தன் பார்வையை திருப்பவில்லை. “ரொம்பதான் பண்றா..”  எப்போதும் போல அலட்சியமாக தோளை குலுக்கி கொண்டான்.

ஷா.. சாப்பிடலாமா..?”  முகிலின் மனைவி அவளை கூட்டி கொண்டு வர, உதய்யும் அப்போது தான் உணவுண்டான். ஜித்து.. ஜின்னா இருவரின் பார்வையும் அவனையே தொட்டு தொட்டு மீண்டது

உணவு முடித்து அவள் வர, உதய் அவள் முன் வழி மறித்து நின்றான். இதை எதிர்பார்க்காமல் அவள் சட்டென்று பின்னால் ஒரு அடி வைத்து நின்றாள்இத்தனை வருடங்களில் ஒரு வார்த்தை கூட பேசி கொள்ளாத இருவரும் நேருக்கு நேர்..???