தூக்கம் போச்சா..?” கண்ணம்மாவும், உதய்யும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்

சரி அப்படியே குளிக்க போங்க, கோவிலுக்கு போக எடுத்து வைக்கணும்..” கணபதி விரட்ட, அடுத்த நிமிடங்கள் கோவிலுக்கு கிளம்புவதில் சென்றது. உதய் முதலில் தான் சென்று குளித்து மனைவியை எழுப்பியவன்

குளிச்சிட்டு வா..   புடவை எடுத்து வந்திருக்க இல்லை..”   கேட்டு கொண்டவன்கீழிறங்கி பெற்றவர்களுக்கு எடுத்து வைக்க உதவி கொண்டிருக்க, ஒவ்வொருவராக கிளம்பி வந்தனர்

ராமை  மட்டும் எழுப்பவில்லை. டேப்லெட் எடுப்பது, முழுமையான தூக்கம் என்று அவரை ஜின்னா பொறுப்பில் விட்டு மற்றவர் எல்லாம் கோவிலுக்கு கிளம்ப ஆயத்தமாகினர்

ராமின் கேரவனிலே போகலாம் என்று நேற்றே முடிவெடுத்திருக்க, “உதய்.. நீ ஷாவை கூட்டிட்டு கார்ல வா, நாங்க போறோம்..” என்று எல்லோரும் கிளப்பிவிட்டனர்

இன்னும் என்ன செய்றா..?” உதய் மேலே சென்று பார்க்க, அப்போது தான் புடவை கட்டி அலுத்து நின்றிருந்தாள். புது காஞ்சி பட்டு. மடிப்பு சரியாக அமராமல் வேலை வாங்கிவிட்டது

எல்லாம் கிளம்பிட்டாங்கடி.. பூஜைக்கு நேரம் ஆகுது..” உதய் சொல்ல

சாரிங்க.. இதோ கிளம்பிடுறேன்..”  குளித்த தலைக்கு அப்படியே கிளிப் மாட்டி கொண்டவள் ஒரு பாக்ஸை கையில் எடுத்து கொண்டாள் போகலாம் என்று

நெத்தியில குங்குமம் எங்க..”

எடுத்துக்கிட்டேங்க.. வழியில வச்சுகிறேன்..” என, காருக்கு சென்றனர்

நாம தான் லேட்.. ச்சே.. ஏன் தான் இப்படி இருக்கேனா..” பாக்ஸை திறந்து கழுத்துக்கு, காதுக்கு, கைக்கு என்று தங்க நகைகள் அணிந்து கொண்டவள், சிறு கண்ணாடியில் குங்குமமும் வைத்து, முடிய சரி செய்து கொள்ள, கோவில் வந்தது

உதய் மனைவி செய்ததை பார்த்து கொண்டே வந்தவன், இறங்கும் போது சரி பார்த்து கொண்டான். எப்படியும் பூஜைக்கு எல்லாம் வருவர் என்று தெரியும்.  

பூ எங்கடி..?”

அச்சோ அனிதா கொடுத்ததை அங்கேயே மறந்துட்டேன்..”

சரி இரு டென்சன் ஆகாத..”   அங்கேயே விற்ற பூவை வாங்கி கொடுக்க வைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது தான் பூஜை ஆரம்பித்திருக்க, கண்ணம்மா இருவரையும் கூப்பிட்டு முன்னால் அமரவைத்தார்

அபிஷேக ஆராதனை எல்லாம் முடிய, ஷா பொங்கல் வைக்க ஏற்பாடு செய்தார் கண்ணம்மா. அனிதாவும் உதவ, அவர்கள் சொல்படி ஷா பொங்கல் வைத்து முடிக்க, சாமிக்கு படையல் கொடுக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி நடந்தது

மாலை இரண்டு கொடுக்கப்பட்டு உதய், ஷா இருவரும் மாற்றி கொள்ள, குங்குமம் வைத்தான் மனைவிக்கு. அடுத்து கோவிலை சுற்றி வந்தவர்கள், அப்போது தான் வர ஆரம்பித்திருந்த அங்காளி, பங்காளிகளுடன் கலந்து கொண்டனர். அன்னதானம் கோவிலில் சொல்லி ஏற்பாடு செய்ய பட்டிருக்க, காலை உணவு எல்லாருக்கும் அங்கேயே தான்

ராமும் குளித்து ஜின்னாவுடன் கோவிலுக்கு வர, உதய் மனைவியை அழைத்து அவருடன்  மீண்டும் ஒரு முறை  தரிசனம் செய்தான்வந்திருந்தவர்கள் உண்டு செல்ல, இறுதியில் குடும்பத்தினர் சாப்பிட்டு கிளம்பினர். அதற்கே பதினோரு  போலாகிவிட்டது

காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டதால் எல்லாரும் டையார்டில் நேரே தூங்க தான் சென்றனர். நன்றாக தூங்கி எழுந்தவர்கள் கையில் உணவுடன் குற்றாலம் கிளம்பினர்

ராம் வீட்டிலே ஓய்வில் இருந்தவர், ஜின்னாவை துரத்திவிட்டார். அவனுக்கு தெரியும் எப்படியும் அவர்களை சுற்றி கண்ணுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று. அதனாலே  அவனும் ஆசையாக மனைவியுடன் கிளம்பிவிட்டான்

முதலில் புது குற்றாலத்தில் குளித்து கேரவனிலே உடை மாற்றி சாப்பிட்டு, அடுத்து பழைய குற்றாலம் சென்றனர். அப்படியே பாலாறு, ஐந்து அருவி சுற்றி வர இரவு ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து இரவு உணவு முடித்து தூக்கம். அருவியில் குளித்தது அப்படியொரு ஆழ்ந்த சுகமான தூக்கத்தை கொடுத்தது எல்லோருக்கும்

மறுநாளும் பிள்ளைகள் திரும்பவும் குற்றாலம் செல்ல ஆசைப்பட, உதய், ஜின்னா, கவிதா  மட்டும் அனிதா குடும்பத்துடன் சென்றனர். ஷா, கணபதி தம்பதி  ராமுடன் இருந்து கொண்டனர். மாமியார், மருமகள் பேச்சுக்கள் சாதாரணமாக இருப்பது போல இருவரும் பார்த்து கொண்டனர்.  அன்று முழுதும் அப்படியே செல்ல, அன்றிரவு சென்னை கிளம்ப தயாராகினர்.  

ஷா ரூமில் இருந்த கணவனிடம் வந்தவள், “நாம ஒரு இரண்டு நாள் இங்கேயே  இருக்கலாமா..?” என்று கேட்க, உதய்க்கு என்னடா இது அதிசயம்..? என்றே தோன்றியது

அவனுக்கும் மனைவியுடன் அங்கு தங்க கொள்ள ஆசை தான். இன்னும் சொல்ல போனால் திருமணத்திற்கு முன்பு இங்கு வந்து தங்கும் நாட்களில் எல்லாம் ஷாவை நினைக்காமல் இருந்ததில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவகூட இங்க வந்து தங்கணும்.. என்று இத்தனை வருடங்களாக எதிர்பார்த்திருந்தவன் ஆயிற்றே

ஆனால் இப்போது இருவருக்கும் உள்ள பிணக்கில் அவனின் ஆசையை கிடப்பில் போட்டிருந்தவன், மனைவி கேட்கவும் உற்சாகம் கொண்டவன், “என்ன திடீர்ன்னு..?” என்று கேட்டான்.

“உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்ன்னு தோணிச்சு.. எப்படியும்  ஊருக்கு போனதுக்கு அப்பறம் ஆளுக்கொரு பக்கம் ஓடணும்நானும் ஆபிஸ் போக ஆரம்பிச்சிடுவேன், நிறைய வேலை குமிஞ்சி இருக்கு, இன்னொரு முறை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது, அப்பா ஆப்பரேஷனால தான் நீங்க பிளான் பண்ண ஹனி மூன் கூட போக முடியல, அதான் இப்போ இங்க இருக்கலாம்ன்னு..”  ஷா பட படவென  சொல்லி கணவன் முகம் பார்க்க, அவன் மனைவியை ஆச்சரியமாக பார்த்திருந்தான்

என் பொண்டாட்டி என்னை பத்தியும் நினைக்கிறா..” குதூகலித்து கொண்டவன், “சரி.. வா  வீட்ல சொல்லிடலாம்..” என, இருவரும் கீழே வந்தனர்

உதய்.. நீங்க கொஞ்ச நாள் இங்கேயே இருங்களேன், எப்போ பாரு ஆபிஸ், வேலைன்னு ஓடிட்டே இருக்கீங்க, ஒரு ரெண்டு நாள் இங்க ரிலாக்ஸா இருந்துட்டு வாங்க.. என்னண்ணா..?”  அவர் முன்னமே யோசித்து வைத்ததை ராமிடம் கேட்டார்  கண்ணம்மா

ரொம்ப நல்ல விஷயம்மா, என்னால அவங்க எங்கேயும் போக கூட முடியல, இப்படியாவது இருந்துட்டு வரட்டும்..”   ராமும் மிகவும் சந்தோஷத்துடன் சொல்ல, உதய் திரும்பி மனைவியை பார்த்து  கண்ணடித்தான் சிரிப்புடன்

சரிம்மா..”   உதய் சொல்ல, மற்றவர் மட்டும் கிளம்பினர். வந்தது போல கேரவனில் மதுரை சென்று அங்கிருந்து சென்னைக்கு  பிளைட்.   உதய் அவனுக்காக வர வைத்திருந்த அவனுடைய  கார் இங்கேயே இருந்தது

ப்பா.. உடம்பு பார்த்துக்கோங்க.. டேப்லெட் மிஸ் பண்ணிடாதீங்க.. செக் அப்க்குள்ள நான் வந்துடுவேன்..”  ஷா ராமிடம் சொல்லி கொண்டிருக்க இடையிட்ட தந்தை,   

ஷாம்மா.. ஏண்டா..? நீ இப்படி இருக்கிறது அப்பாக்கு உண்மையாவே கஷ்டமா இருக்கு, ப்ளீஸ் நீ உதய்கூட சந்தோஷமா இரு, அது தான் எனக்கு சந்தோஷம், இப்படி என்னையே நினைச்சு கவலைபட்டு, என்கூடவே இருக்கிறது அப்பாக்கு கில்ட் பீல் தான் கொடுக்குது, உண்மைடா, என் பேர பிள்ளைங்களை தூக்க வளர்க்கிறதுக்காகவே  அப்பா கண்டிப்பா உடம்பை பார்த்துப்பேன், கவலைப்படாத, நான் கிளம்புறேன்..” அவர் மகளின் தலை தடவி விடை பெற்றார்.  

பவ்யா.. அண்ணாவை நாங்க பார்த்துப்போம், உனக்கு அவரை நினைச்சு டென்சன் வேண்டாம்..”  கண்ணம்மா சொல்ல

சரிங்கத்தை..” தலை ஆட்டினாள் மருமகள்

அனி.. நீ கிளம்புறதுக்குள்ள நாங்க வந்துடுவோம்.. பை குட்டீஸ்..”  அவர்களும் விடைபெற, ஜின்னா மட்டும் பவ்யாவை தனியே விட யோசித்து நின்றான்

ஜின்னா கிளம்பு..”   ராம் கண் காட்ட, அவர் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என்று புரிந்து கொண்டு ஜின்னாவும்  விடைபெற, கேரவன் கிளம்பியது.

“ஒரு வாக் போவோமா..?” மனவியிடம் உதய் கேட்க, ஷா சரியென இருவரும் அப்படியே காலாற நடந்தனர்

நெல் போட்டிருக்கீங்களா..?” பின்னால் நிலத்தை பார்த்து ஷா கேட்க

ஆமா.. அந்தந்த சீசன் விவசாயம் நடந்துட்டே தான் இருக்கும், இரண்டு கிணறு தண்ணீர் இருக்கு, வேலைக்கும் ஆள் கிடைக்கிறாங்க, என்ன கூலி கொஞ்சம் அதிகம்.. நம்ம வீட்டுக்கு வர அரிசி, பருப்பு எல்லாம் இங்கிருந்து தான்..”  என, அப்படியே நிலம் பற்றி பொதுவான பேச்சுக்கள் சென்றது

இருட்டிய பிறகே  பண்ணை வீட்டிற்கு திரும்ப, இரவு உணவு தயாராக இருந்தது. “ம்மா.. இந்தாங்க பூ..”   மாலை பூத்திருந்த மொட்டு மல்லியை கட்டி கொடுத்தார் பராமரிப்புக்காக இருப்பவர். ஷா வாங்கி வைத்து கொண்டாள்

ஒரேடியா சாப்பிட்டு மேல போலாமா..? இவங்களும் சாப்பிட்டு தூங்குவாங்க..” உதய் கேட்ககணவனுடன் உணவுண்ண அமர்ந்தாள். அவர் பரிமாற உணவு  நேரம்  அமைதியாக கடந்தது

கொஞ்ச நேரம் கழிச்சு  பால் எடுத்துட்டு வரவா தம்பி..?” அவர் கேட்க

பிளாஸ்க்ல கொடுத்திருங்கக்கா..”  உதய் சொல்ல, அவர் அப்போதே கொடுத்து விட்டார். இருவரும் மேலே வர, ஷா மொபைல் எடுத்து ராமிற்கு அழைத்து எங்கிருக்கிறார்கள் கேட்க, உதய்  அவனின் மொபைல் எடுத்து வந்திருந்த கால்களுக்கு, மெயில்களுக்கு, மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்ய ஆரம்பித்தான்

ஷாவும் அப்படியே செய்ய, சில பல நிமிடங்கள் அதிலே சென்றது. ஷா முடித்து உதய்யை பார்க்க அவன் யாரிடமோ பேசி கொண்டிருந்தான். இவள் பாத்ரூம் சென்று ரெப்ரெஷ் செய்து, இரவு உடை அணிந்து வந்தாள்.

உதய் பார்த்தவன் தானும் சென்று ரிப்ரெஷ் செய்து டிரேக்  பேண்ட், கையில்லா ஸ்போர்ட்ஸ் பனியனில் வந்தான். கழுத்தில் புது செயின் மின்னியது. ஷா தான் திருமணத்திற்கு பிறகு ஆர்டர் கொடுத்து கிப்ட் செய்திருந்தாள்

என்னடி புதுசா பார்க்கிற..?” அவளின் பார்வை கண்டு கண்ணடித்து கேட்க, ஷா சிவந்துவிட்ட முகத்துடன் திரும்பி கொண்டாள்

உடனே திரும்பிக்கிறது..? என் புருஷன் நான் பார்க்கிறேன்னு சொன்னா என்னவாம்..?”  அவளின் முன் நின்று கேட்டவன்

“ஆனா நான் உன்னை மாதிரி இல்லைப்பா.. என் செயின் உன் கழுத்துல எப்படி மின்னுதுன்னு ரசிச்சு பார்த்திட்டு இருக்கேன், என்ன ஒரே குறை இன்னும் கொஞ்சம் பெருசா இருந்திருக்கலாம்..” அவனின் பார்வையில் ஷா அதிர்ந்து குனிந்து பார்க்க, அவளின் நைட் ஷர்ட்டின் முதல்  பட்டன் கழண்டிருந்தது

ஐயோ..” அவசரமாக பட்டன் போட போக, அவளின் கை பிடித்து விட்டான் கணவன்.

“அதை எதுக்கு வேஸ்ட்டா போடுற..?” அவளின் கையை தள்ளிவிட்டவன் அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான். அவனின் பார்வையிலே எப்போதும் போல ஷா சிவந்து போக, தடுமாறித்தான் போனாள் பெண்.  

அப்புறம் சொல்லுங்க மேடம்..”  அவனின் விரல்கள் காதோர முடிகளை ஒதுக்கிவிட்டு காதை வருட, என்ன சொல்வாள் அவள். கூசி அவனின் கைகளை தள்ளிவிட

நகம் கடிக்கும் பெண்ணே..

அடக்காதே ஆசை..

 நாகரீகம் பார்த்தால்..

 நடக்காது பூஜை..

 நெருக்கமே  காதல் பாஷை..”   

பாடிக்கொண்டே அவளின் ஷர்ட் பட்டன்களுக்கு விடுதலை அளித்தான் காதல் மாயவன்.