இன்று நடந்ததே போதும் அதற்கு, அவர்களின் சொந்த மாலில் கணவனும், கணவன் குடும்பமும் பணம் கட்டி வாங்குகின்றனர். ஷா முன்னமே கணவனிடம் இதை பற்றி பேச போக,
“மால் மட்டும் தான் உங்களுது ஷா, கடை எல்லாம் அவங்களுது, உன் பேர் சொல்லி வாங்க எனக்கு பிடிக்கல.. இது பத்தி பேசாத..” என்றுவிட, ஷாவால் மேலும் பேச முடியவில்லை. அவளுக்கான உரிமை, சலுகை, அதிகாரம் இருந்தாலும் உதய் அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிந்தது.
“அப்படியென்ன..?” என்று வீணான ஒரு கோவம் கணவன் மேல். அதன்விளைவுஅவளாகவேஅமைதியாகிபோனாள். முன்போலஉதய்யிடம்பேசமுடியவில்லை. மறுநாள்ரிசப்ஷன்என்பதால்அவளின்அமைதிஉதய்க்குதெரியவில்லை.