“அத்தை.. மண்டபத்துக்குஎடுத்துட்டுபோக திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டோம்..” அவரின் ஒன்றுவிட்ட மாமனாரின் மருமகள்கள் வந்து நிற்க,
“சரிம்மா.. இந்தாங்க பூவை கட் பண்ணி எல்லோருக்கும் கொடுத்துட்டு நீங்களும் வச்சுக்கோங்க..” பண்டில் முல்லை பூவை எடுத்து கொடுத்தார்.
“சரிங்கத்தை.. வாங்கி கொண்டவர்கள், அண்ணன் கல்யாணத்துக்கு அனிதா வரலையா..?” என்று ஆரம்பித்தனர்.
“நீ காலையிலே கேட்டப்போவே நான் என்ன சொன்னேன், இன்னிக்கு ஈவினிங் வந்துடுவான்னு தானே.. திரும்ப என்ன..?” கண்ணம்மா வேலை பார்த்துக்கொண்டே கேட்க,
“இல்லைத்தை.. என்ன இருந்தாலும் ஒரு அண்ணன், அவர் கல்யாணத்துக்கு இப்படி விருந்தாளி மாதிரி வந்தா எப்படி..?”
“அப்படி சொல்லு, அவதான் முன்ன நின்னு எங்க கொழுந்தன் கல்யாணத்தை எடுத்து செஞ்சிருக்கணும்..” இன்னொருத்தி சொல்ல, கண்ணம்மா திரும்பி இருவரையும் பார்த்தவர்,
“என் மருமகள்ங்க நீங்க தங்கமாட்டம் இருக்கும் போது அவ எனக்கு செஞ்சா என்ன செய்யாட்டி என்ன..? என்ன இருந்தாலும் அவ இன்னொரு வீட்டுக்கு போயிட்டா, பங்காளிங்க நாம தானே ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்துக்கணும்..”
“ஏன் போன மாசம் உன் பொண்ணு வயசுக்கு வந்தப்போ உன் பொறந்த வீடா முன்ன நின்னு செஞ்சுச்சு, நாங்க தானே எடுத்து போட்டு செஞ்சோம், எல்லாம் அப்படி தான்..” என்றுவிட, திரும்ப வாய் திறப்பார்களா என்ன..?
“நாங்க இந்த பூவை எல்லோருக்கும் கொடுத்துடுறோம்த்தை..” என்று ஓடிவிட, கண்ணம்மா பெரு மூச்சுடன் விட்ட வேலையை தொடர்ந்தார்.
“இந்த பொண்ணு ஒழுங்கா டிக்கெட் புக் பண்ணாம கோட்டை விட்டுட்டு எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கு..” மகளை மனதில் கடிந்து கொண்டவர், நலங்குக்கான ஏற்பாட்டை பார்க்க ஆரம்பித்தார்.
ரூமில் இருந்த உதய்யோஷாவிடம்எப்படிபேசுவதுஎன்றயோசனையில். திருமணம்முடிந்துமுதலில்அவர்கள்வீட்டுக்குதான்வரவேண்டும், அடுத்துபெண்வீடுசெல்வார்கள். ஆனால்உதய்தான், திருமணம்முடிந்துஉன்வீட்லேஇருந்துக்கோஎன்றுசொல்லியிருக்க, அவனுக்கேமண்டையிடி.
“அதுக்காக சம்பிரதாயத்துக்காக கூட வரமாட்டாளா என்ன..? வராம கிளம்பிட்டா..? எதுக்கு அவகிட்டேயே பேசிடுவோம்..” என்று கடந்த சில நாட்களாக முயற்சிக்க, ம்ஹூம்.. பேசமுடியவில்லை. ஷாபேசவிடவில்லை.
அதே நேரம் அங்கு உதய் வீட்டில் அனிதா வந்துவிட, இன்னும் கல்யாண களை கட்டியது. வந்த நேரமே தங்கையாகஅண்ணன்திருமணபொறுப்பைதன்கையில்எடுத்துகொண்டாள். கண்ணம்மாமகள்மேல்கோவமாகஇருந்தபோதும்அவளைமுன்நிறுத்தியேஎல்லாம்செய்தார்.