“போடாபோ.. எருமைமாடுவயசாகியும்இன்னும்சோறுபோடு, குழம்புஊத்துன்னுஅம்மாகிட்டவந்துநிக்கிறான், காலகாலத்துலகல்யாணம்பண்ணிகிட்டாஎன்னவாம், உன்னைஎல்லாம்இத்தனைவருஷம்வளர்த்ததேபெருசு, இனியும்உனக்குசோறுபோடாஎன்னாலமுடியாது, நீயேபோட்டுசாப்பிடு, இல்லைகிளம்பு..” மகனைவிரட்டியவர், அவன்கண்முன்னே, பூரிபோட்டுசாப்பிட, உதய் அவரை கடுப்பாக பார்த்துவிட்டு தானே போட்டு சாப்பிட்டவன் கிளம்பிவிட்டான்.
வேறென்னசெய்ய..? நின்றுபேசினால்இன்னும்பேசுவார், இல்லைபெண்போட்டோகாட்டிஉறுதிசெய்யநாள்குறித்துவிடுவார். அவரிடம் வாக்குவாதம் செய்யவும் நேரம் இல்லை, முக்கியமான வேலைகள் வரிசை கட்டி நிற்க கிளம்பிவிட்டவன் நேரே அவர்களின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு தான் சென்றான்.
சில மணி நேரம் வரை அங்கு இருந்த வேலைகளை முடித்துவிட்டு அவனின் புது கம்பனியான UK கன்சல்டன்ஸிக்கு சென்றான். உள்ளே நுழைந்தவுடன் எப்போதும் போல ஒரு மலர்ச்சி அவனின் முகத்தில். அவனின் இத்தனை வருட கனவு இது. படித்தது.. பிடித்தது எல்லாம் சாப்ட்வேர் தான்.
கன்ஸ்ட்ரக்ஷன் அவர்களின் தாத்தா ஆரம்பித்தது. இது இவனின் உழைப்பு. இரண்டு வருடம் முன்பு தான் ஆரம்பித்திருந்தான். இன்னும் பேர் சொல்லி கொள்ளும் அளவு வரவில்லை. வரவைத்துவிடுவதற்கான குறிக்கோளுடன் ஓடி கொண்டிருக்கிறான்.
அதற்கான முதல் வெற்றி தான் அவனுக்கு கிடைத்த அந்த ப்ராஜெக்ட். மிக பெரிய அளவிலான ப்ராஜெக்ட். கோடிகளில் அதன் மதிப்பு. அந்த டெண்டரில் பெரிய பெரிய கம்பெனிகள் போட்டி போட்டு அதில் வென்றது இவன் தான். அப்போது தான் இப்படி ஒருவன் இருக்கிறான் என்று மற்ற பிஸ்னஸ் மேன்களுக்கு தெரிய வந்தது.
அமைதியாக உள்ளே நுழைந்து அடித்து விட்டவனை வீழ்த்த ஒரு பெரிய கூட்டமே வேலை செய்து கொண்டிருந்தது. அது தெரிந்தும் தெரியாமலும் ஓடி கொண்டிருக்கும் உதய்க்கு மிகப்பெரிய சவால் அதை வெற்றிகரமாக முடித்து கொடுப்பது தான்.
இந்த வாரம் தான் அதற்கான டெட்லைன். ப்ராஜெக்ட்டும் கிட்டத்தட்ட முடியும் நிலை. நாள் நெருங்க நெருங்க அதிக பதட்டம். கொஞ்சம் மகிழ்ச்சியும். அன்று முழுதும் அவனின் டீம் ஆட்களுடன் தானும் இறங்கி வேலை பார்த்தவன், ஐந்து மணி போல வீட்டிற்கு சென்று குளித்து குணா வீடு கிளம்பினான்.
கார் நிறுத்தி இறங்கும் போது கண்ணாடி பார்க்க கண் துறுதுறுத்தாலும், “ம்ப்ச்.. எப்படியும் மேடம் வரமாட்டாங்க.. விட்றா..” தனக்கு தானே சொல்லி கொண்டவன் இறங்கும் போது கண்ணாடி பார்த்து தலை கோதியே இறங்கினான். “அவள் வந்துவிட்டால்..?”
“வா.. வா..” முகில், குணா குடும்பம் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். கொலு பூஜைக்கு வந்திருந்தான். பெரிய ஹால் முழுதும் கொலு வைத்திருந்தார்கள். மாலை நேரம் என்பதால் ஊதுபத்தி, பூ, சீரியல் லைட் என ஒரு ஆன்மீக வாசம் உள்ளேயும்.. வெளியேயும்..
நாளை இறுதி நாள் என்பதால் இன்று எல்லா வருடம் போல அவரின் பிஸ்னஸ் நண்பர்கள் வரவைத்து பூஜை செய்வார் குணா. ஆறு மணிக்கு பூஜை ஆரம்பிக்க, உதய்யின் கண்கள் இந்த வருடமும் அவளை தேடியது. ம்ஹூம்.. இல்லை. ஏமாற்றம் தான். தோளை குலுக்கி கொண்டான்.
நான்கைந்து வருடம் முன்பு இதே கொலுவில் வைத்து தான் அவளை முதல் முறை பார்த்தான். இருப்பத்தி ஐந்து வயது கூட நிரம்பாத உதய்க்கு அவளின் அந்த நளினமான அழகு பிடிக்க தான் செய்தது. ட்ரெண்டி ஹால்ப் சேரியில் அவனை ரகசியமாய் பார்த்த அவளின் அந்த பார்வை.. இன்று நினைத்தாலும் ஓர் சிலிர்ப்பு தான். ஆனால்..