Advertisement

யாவும் – 9

 

அழைப்பைத் துண்டித்து விட்டு திரும்பிய பார்வதி திரும்ப, மீனாட்சி அழைப்பை விடுக்கும் போது, அதை ஏற்காமல் துண்டித்த சத்தானம், தொலைபேசியை அங்கேயே அருகில் உள்ள மேஜை மீது வைத்துவிட்டு சென்றதால், அதை எடுக்க உள்ளே நுழைந்தார்.

 

அவர் உள்ளே நுழைய, பார்வதி பேசிக் கொண்டு இருந்த அனைத்துமே அவரது செவியை அடைய, அவரால் நிற்க முடியவில்லை. கைகால்கள் உதற, அப்படியே நாற்காலியில் சரிந்தார். “அப்பா..!” என கத்திக்கொண்டே பார்வதி அவர் அருகில் செல்ல, காசியும் பார்வதியின் அம்மாவும் அங்கே ஓடி வந்தனர்.

 

“ம்மா! தண்ணீர் எடுத்துட்டு வாம்மா..” என அவர் கூறிக் கொண்டே, சந்தானத்தை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.

 

பார்வதி தண்ணீரை அவருக்குப் புகட்ட, “சார், ஒண்ணும் இல்லை. உங்க பொண்ணை கண்டுபிடிச்சுடலாம்!” என்று கூற, அவர் பார்வதியை பார்க்க, தலையை குணிந்துக் கொண்டாள்.

 

“நீ சொன்னதை எல்லாம் நான் கேட்டுட்டேன். அதெல்லாம் உண்மையா? என் பொண்ணு இப்ப எங்க இருக்கா? சொல்லுமா!”  என சந்தானம் கையைக் கூப்ப, பார்வதி பதறி,

“ஐயோ அப்பா! நான் சொன்னது எல்லாம் உண்மை தான் பா. அவ விக்னேஷ்ன்னு ஒரு பையனை லவ் பண்ணா‌. ரெண்டு வீட்லயும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க‌. நம்ம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு, அவன் கூப்டான். நான் போகப் போறேன்னு திகழ் என்கிட்ட சொன்னா அப்பா. அதனால தான் இப்ப நான் விக்னேஷ்க்கு கால் பண்ணி கேட்டேன்ப்பா. ஆனால், அவன் இப்ப சொந்த ஊர்ல இருக்கதா சொல்றான். அவன் மேல எனக்கு நம்பிக்கையே இல்லை..” என்று கூறியதை சந்தானத்தால் நம்பவே முடியவில்லை. தன்னுடைய மகள், தன்னை விட்டு வேறொருவனுடன் செல்ல முடிவு எடுத்து இருப்பாள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அவர் மனது இதை ஏறக் மறுத்தது‌‌.

 

தலையை இடம் வலமாக ஆட்டியவர், “இல்லை, என் பொண்ணு இப்டி ஒரு காரியத்தை பண்ணியிருக்க மாட்டா! அவ என்னை விட்டு எங்கேயும் போய்ருக்க மாட்டா!” என அவர் உணர்ச்சி வேகத்தில் பேச,

 

“சரிங்க சார், நம்ம விசாரிச்சுக்கலாம். பதட்டப்பதடாதீங்க..” என்ற காசி,

“அந்த பையன் யாரு? அவன் எந்த ஊரு? உங்களுக்கு எப்டி தெரியும்?” என பார்வதியிடம் வினவினான்.

 

“சார், அவன் பேர் விக்னேஷ். இங்க ராசிபுரத்துல இருந்து வர்றதா சொல்லுவான். நாங்க காலேஜ் பஸ் ஏற வரும்போது டெய்லி பின்னாடியே வருவான். அப்டி தான் திகழ் பின்னாடியே வந்து, லவ் பண்ண வச்சான். மத்தபடி அவனை பத்தி ஒண்ணும் தெரியாது சார்.”

 

“ஓ.. சரி, அவனோட போன் நம்பர் கொடுமா‌..” என்று அவளிடம் தொலைபேசி இலக்கத்தை வாங்கிய காசி, “மறுபடியும் அவன் கால் பண்ணா, எங்க கிட்ட அவனைப் பத்தி சொன்னதை சொல்லிடாதம்மா. அவன் அப்புறம் உஷாராக சான்ஸ் இருக்கு..” என்று அறிவுறுத்த,

 

“ஓகே சார்..” என பார்வதி தலையை ஆட்டினாள்.

 

சந்தானத்தை அழைத்துச் சென்ற காசி, “சார், சீக்கிரமா உங்க பொண்ணை கண்டுபிடிச்சுடலாம்..” என்று தைரியமூட்டிவர், காவல்நிலையத்திற்கு விரைந்தார்.

 

“ஹலோ மச்சான், நான் விக்கி பேசுறேன்.”

 

“சொல்லு டா. இப்ப ரிடர்ன்னா?”

 

“ஆமா டா. பட் ஒரு சின்ன பிராப்ளம்.”

 

“என்னாச்சு டா? அதான் சேஃபா வந்துட்டியே!”

 

“இல்லை டா, இந்த திகழ் சனியனை யார்கிட்டேயும் சொல்ல கூடாதுன்னு சொன்னேன். ஆனால், அவ பார்வதின்னு ஒரு பொண்ணு கிட்ட மட்டும் சொல்லிட்டா டா. இப்ப போலீஸ் திகழைப் பத்தி விசாரிச்சதும், அவ எனக்கு கால் பண்ணிட்டா டா. நான் இல்லைன்னு சாதிச்சுட்டேன். பட், இவ சொல்லிடுவாளோன்னு பயமா இருக்கு டா.” என விக்னேஷ் தன் நண்பன் கணபதியிடம் கூற,

 

“சரி டா, நீ பயப்படாத! அவளையும் நம்ம தூக்கிடலாம். இப்ப கூட ஒரு ஐட்டம் வேணும்னு கேட்டுட்டு இருந்தாங்க..”

 

“இது சரியா வருமா டா?”

 

“டேய்! அவளை மிரட்டுனாலும், அவ என்னைக்காவது ஒரு நாள் சொல்லிடுவாளோன்னு பயந்துட்டு இருக்கதுக்கு, நம்ம அவளை தூக்கிடுறதே மேல் டா.”

 

“சரி டா. எப்டி செய்றது..?”

 

“நான் சொல்றதை செய் டா. அவ கிட்ட போன் பண்ணி, என்னோட ப்ரண்ட் ஒருத்தன் போலீஸ்ல இருக்கான். அவன்கிட்ட நான் திகழ் விஷயத்துல ஹெல்ப் கேட்டேன். செய்றேன்னு சொல்லிருக்கான். இப்ப நான் வெளியூர்ல இருக்கேன். சோ நீ அவனை நான் சொல்ற இடத்துல போய் மீட் பண்ணு, அப்டின்னு சொல்லு டா. இது அன்அபீஷியலா விவசாரிக்குறதால, உங்க வீட்ல கூட யார்கிட்டேயும் சொல்லாதன்னு சொல்லிடு டா. இங்க நம்ம அட்ரஸ் கொடுத்துடு டா. நைட்டோட நைட்டா, அவளை பேக் பண்ணிடலாம்.” என கணபதி கூற,

 

நிம்மதி பெருமூச்சு ஒன்றை விட்டு விக்னேஷ், “தாங்க்ஸ் டா மச்சான்.” என்றான்.

 

“சரி டா, எப்படியும் உன்னை தான் போலீஸ் டார்கெட் பண்ணுவாங்க. நீ அழுது, நாடகம் போட்டு, அவங்களை நம்ப வச்சுடு.”

 

“ஓகே டா, அவங்களை நான் பார்த்துக்குறேன்.” என அழைப்பை துண்டித்தவன், மறுநொடி பார்வதிக்கு அழைத்து, கணபதி கூறியதை கூறி, “இப்ப நீ போய் அவனைப் பார்த்துட்டு, நடந்த எல்லாத்தையும் சொல்லு பார்வதி. உனக்கு அவன் உதவி பண்ணுவான். அப்புறம் இதை யார்கிட்டயும் சொல்லிடாத!” என்று அறிவுருத்த, அவனது பேச்சில் சந்தேகம் அடைந்த பார்வதி, “சரி விக்னேஷ், இப்பவே போய் பார்க்குறேன்..” என அழைப்பை துண்டித்தவள், யோசித்தாள்.

 

 

“சார், நாங்க விசாரிச்சதுல, அந்த பொண்ணை விக்னேஷ்னு ஒரு பையன் லவ் பண்ணி இருக்கதாவும், அந்த பையன் கூட தான் அந்த பொண்ணு போனதாகவும், இப்ப அந்த பையன் இல்லைன்னு சொல்றதாகவும் தகவல் கிடைச்சுருக்கு சார்..” என காசி, உயர் அதிகாரியிடம் கூற,

 

“சரி, அந்த நம்பரை உடனே ட்ரேஸ் பண்ண சொல்றேன். அதை நீங்க கன்ட்ரோல் ரூம்க்கு அனுப்புங்க..” என அவர் உத்தரவிட, அடுத்தடுத்து வேலைகள் துரிதகதியில் நடந்ததது.

 

காசிக்கு அழைப்பு வர, ஏற்றவர்,

“ஹலோ..” என்றார்.

 

“ஹலோ சார், நான் பார்வதி பேசுறேன் சார்.”

 

“சொல்லு மா..”

 

“சார், விக்னேஷ் எனக்கு இப்ப கால் பண்ணி இருந்தான்..” என நடந்ததை விவரித்தவள், “இப்ப என்ன பண்ண சார்?” என வினவ,

சிறிது நேரம் யோசித்த காசி, “நீங்க அந்த அட்ரஸ்க்கு தனியாவே போங்க. உங்களுக்கு பின்னாடி, போலீஸ் ஃபோர்ஸை நான் அனுப்புறேன். அவங்க மத்ததைப் பார்த்துப்பாங்க..” கூறி அழைப்பை துண்டித்தவர், சொல்லியது போல, அந்த இடத்திற்கு நான்கு காவல் அதிகாரிகளை அனுப்பி வைத்தார்.

 

காசிக்கு குறுஞ்செய்தி வர, “சார், அந்த விக்னேஷ் நம்பரை ட்ரேஸ் பண்ணிட்டோம் சார். அது டெல்லில இருந்து, சென்னை வர்ற ரூட்ல போபால் ஜக்ஷன்ல காட்டுது சார். அப்புறம், அதுக்கு அடுத்த ரயில்வே ஜக்ஷனை டென்மினிட்ஸ்ல ரீச் ஆகியிருக்கு சார். இப்ப இதை வச்சு பார்த்தா, அவன் ட்ரெயின்ல இருக்கலாம்னு ஒரு ஐடியா சார்..” என காசி கூற,

 

“ஓகே, இப்பவே அங்க இருக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு ரிப்போர்ட் பண்ணுங்க. அவனை ட்ராப் பண்ணி, விசாரிக்கச் சொல்லுங்க..” என உயர் அதிகாரி கூற,

 

“ஓகே சார்..” என தலையை ஆட்டிய காசி, உடனே போபால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தவன், விக்னேஷின் புகைப்படத்தையும் பார்வதியிடம் இருந்து வாங்கி அனுப்பினான்.

 

 

விக்னேஷ் சென்ற ரயில் நாக்பூரை அடைய, ஒரு குளம்பியை வாங்கி பருகிக் கொண்டு இருந்தான் விக்னேஷ். தடதடவென ஷூவின் காலடி சத்தம் அவனை அடைய, அவன் பதறி திரும்ப, காவலர்கள் அவனை சுற்றி நின்றிருந்தனர். இவன் வாயைத் திறந்து பதில் கூறுவதற்கு கூட அவகாசம் அளிக்கபட்டவில்லை.

 

ஹிந்தியில் எதோதோ கூறிய காவல்துறையினர், அவனது கையில் விலங்கிட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றானர்.

 

“வேர் ஸ் தட் கேர்ள்?” என ஹிந்தியில் ஒருவர் கேட்க,

 

“சாரி சார், ஐ டோன்ட் நோ, ஹூ ஸ் தட் கேர்ள்..” என அவன் வினவ, அவர் கன்னத்தில் அவனை அறைந்தார். அதற்கும் அவன் அசரவில்லை. இதெல்லாம் பார்க்க வேண்டும் என்று தெரியும் அவனுக்கு. உறுதியாக அவன் இருக்க, நான்கு காவலர்கள் சேர்ந்து, அவனை அடி பின்னி எடுத்தனர். அதற்கும் அவன் வாயைத் திறக்கவே இல்லை.

 

அங்கு வந்த உயர் அதிகாரி ஒருவர், ஹிந்தியில் எதேதோ கூறி, அவனது கையை தனது காலணிகளணிந்த காலால் நசுக்க, அவன் வலி தாங்க முடியாமல் அலற ஆரம்பித்தான். அவர் விடாமல் அழுத்த, “சொல்லிட்டுறேன்… சொல்லிடுறேன்…” என அவன் கத்திய பிறகே காலை எடுத்தார். திகழ் எங்கே இருக்கிறாள் என்று அவன் கூற, அந்த தகவல் காசிக்கு தெரிவிக்கப்பட்டது.

 

அவர், “சார், உங்க பொண்ணு எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சு சார்.. அவளை மீட்க தான் போறோங்க டெல்லி போலீஸ்..” என காசி கூற,

 

“சார், என் பொண்ணு கிடைச்சதும், அவளை என் கிட்ட பேசச் சொல்லுங்க சார். அவ குரலை கேட்கணும் சார்‌..” ஒரு தகப்பனாய் பரிதவித்த சந்தானம், “இப்ப எங்க இருக்கா சார் என் பொண்ணு..?” என அவர் வினவ,

 

சற்றுத் தயங்கிய காசி, “சார், அது வந்து விபச்சாரவிடுதில சார்..” என அவர் கூற, அப்படியே சந்தானத்திற்கு மரித்துவிட்ட உணர்வு. அவர் தொண்டையில் ஏதோ ஒன்று அடைக்க, பேச முடியாமல், அவர் பரதவிக்க, “சார், இந்த மாதிரி சமயத்துல தான் நீங்க ரொம்ப போல்ட்டா இருக்கணும். உங்க பொண்ணுக்கும், குடும்பத்துக்கும் தைரியம் சொல்லணும்..” என அவர் கூற, சந்தானத்திற்கு மனதிற்குள் பயபந்து சுழல ஆரம்பித்தது. ‘என் பொண்ணுக்கு எதுவும் ஆகாது. அவ நல்லபடியா என்கிட்ட வந்துடுவா! நான் அழ மாட்டேன்..’ என மனதிற்குள் உரு போட்டவர், கண்களைத் துடைத்துக் கொண்டு, “நான் நல்ல ஸ்ட்ராங்கா இருப்பேன் சார். என் பொண்ணு நல்ல படியா வந்துடுவா..” என அவர் கூற, சந்தானம் அவரது கையை ஆதரவாக பிடித்தார்.

 

ஆட்டோவில் ஏறி விக்னேஷ் சொன்ன இடத்திற்கு சென்றுகொண்டிருந்தாள் பார்வதி. லேசாக பயத்தில் வியர்க்க ஆரம்பிக்க, அதை தனது கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அந்த இடத்திற்கு சற்று தள்ளி ஆட்டோவில் இருந்து இறங்கியவள், காவல்துறை வாகனம் வருகிறதா? என தேடிக் கொண்டே, அந்த பகுதியை நோட்டமிட, தூரத்தில் இருவர் நின்று இருந்னர். அவர்களை தான் தான் காண வந்து இருக்கிறோம் என்பதை, ஓரளவுக்கு ஊகித்து விட்டாள்.

 

“டேய் கணபதி, என்ன டா. பிகர் வருமா? வராதா? நானே செம்ம மூடுல இருக்கேன்.” என கணபதியை அவனது நண்பன் சுரண்ட,

 

“மச்சான், நான் சொல்லி இல்லாம போய்ருக்கா. இன்னைக்கு புல்லா ஜமாய்ச்சுட்டு, நைட்டு அவளை பேக் பண்ணிடலாம். கொஞ்சம் பொறுமை டா.” என தன் நண்பன் தோளில் தட்டினான்.

 

 

போபால் காவல்துறையினர் டெல்லிக்கு தகவல் கொடுக்க, இரண்டு பெண் காவலாளி மற்றும் இரண்டு ஆண்காவலாளிகள் அந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே நுழைய, நான்கு தடியர்களும் அவர்களை உள்ளே விடாமல் சுற்றி நின்றுக் கொண்டே, காஞ்னாவிற்கு குரல் கொடுத்தனர்.

 

வெளியே வந்த காஞ்சனா, “இன்னா போலீஸூ.. எதுக்கு வந்து இருக்கீங்க..?” என அவர் வினவ,

 

“நீங்க திகழ்ன்ற ஒரு பொண்ணை கட்டாயப்படுத்தி கூட்டீட்டு வந்து, இங்க உங்க தொழில்ல ஈடுபடுத்துறதா எங்களுக்கு நியூஸ் வந்துச்சு.” என பெண் காவலாளி கூற,

 

“ஆயிரம் நியூஸ் வரும். அதெல்லாம் நம்புவீங்களா? கஷ்டப்பட்டு வர்றவங்களை மட்டும் தான் எங்க தொழில்ல சேர்த்துக்குவோம்..” என அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே, “அம்மா…!” என அலறல் சத்தம் வெளியே கேட்டது.

 

 

தொடரும்..

 

Advertisement