Advertisement

யாவும் : 4

சுப்பிரமணி பதில் கூறுமுன் கல்யாணி முந்திக்கொண்டு, “அண்ணி, கொஞ்சம் இருங்க, ஜோசியரே வர சொல்லி இருக்கோம், நம்ம செழியன் ஜாதகத்தை பார்க்க..” என்றார். 

வசந்தி, “என்ன திடீர்னு ஜாதகம் பார்க்க?” என்க,

சுப்பிரமணி, “நான் தான் வரச்சொல்லிருக்கேன். கேள்வி கேட்காம எல்லாரும் இங்க வந்து உட்காருங்க..” என்றார்.

வசந்தி செழியனின் முகத்தைப் பார்க்க, தான் காத்திருப்பதாய் கண்களால் சமிஞ்ஞை செய்ய, எல்லாரும் கோவிலில் காத்திருந்தனர்.  

சிறிது நேரத்தில் ஜோதிடர் வர, கல்யாணி, “வாங்க ஜோசியரே!” என்றவர், “செழியனுக்கும் தாரணிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம். புள்ளைங்க ஜாதகத்தை பார்த்து நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க..” என்று ஜாதகத்தை நீட்டினார். கல்யாணியின் வார்த்தையை கேட்ட எல்லோருக்கும் அதிர்ச்சி.

ஆகாஷிற்கு செழியனின் காதல் விஷயம் தெரியுமென்பதால் செழியனிடம், “மச்சான், உன்கிட்ட கேட்க்காம இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க..” என்று கோபமாக கேட்டான். செழியனுக்கும் இது அதிர்ச்சி தான். ஆனால் செழியன் கோபத்திலும் நிதானம் தவறாதவன். கோபத்தில் எடுக்கும் முடிவுகளும் பேசும் பேச்சும் தவறாக தான்  முடியும் என்பதை புரிந்து கொண்டவன். 

செழியன் நிதானமாக, “ஆகாஷ், பொறுமையா இரு. இது கோவில், இங்க வச்சு பேசுனா கண்டிப்பா பிரச்சினை வரும். வீட்ல போய் பேசிக்கலாம்..” என்றான்.  

வசந்திக்கு இது கவலை அளிக்க கூடிய விஷயமே. ஏற்கனவே தாரணி அந்த வீட்டில் செய்யும் அதிகாரத்தை பார்த்துக் கொண்டு இருப்பவர் அவர் தானே! கடவுளிடம் இருவருக்கும் ஜாதகம் பொருந்தவே கூடாது என வேண்டிக் கொண்டார்.  ஜோதிடர் இருவருடைய ஜாதகத்தையும் வைத்து விரல்களால் எண்ணி கணித்துக் கொண்டிருந்தார்.

சில பல நிமிடங்களில் ஜோதிடர் நிமிர்ந்து பார்க்க, எதிரிலிருந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அவரை எதிர்நோக்கினர். 

ஜோதிடர், “ரெண்டு ஜாதகமும் அமோகமா பொருந்தி இருக்கு. கல்யாண யோகமும் கூடி வந்திருக்கு..” என்க, 

கல்யாணி முகம் கொள்ளாப் புன்னகையுடன், “கோவில்ல வச்சு நல்ல சேதி சொல்லியிருக்கிங்க.  அப்படியே ஒரு நல்ல நாளா நீங்களே குறிச்சுக் கொடுங்க..” என்றார். ஜோதிடரின் வார்த்தை, தாரணி சுப்பிரமணி கல்யாணியை தவிர மற்ற எல்லோருக்கும் பிடித்தமின்மையையே கொடுத்தது. தாரணிக்கு சந்தோஷம் தாளவில்லை! அது அவள் முகத்திலே பிரதிபலித்தது. 

செழியனுக்கு எப்போதடா இங்கிருந்து எழுந்து செல்வோம் என்று தோன்றியது. ஜோதிடர்  பஞ்சாங்கத்தைப் பார்த்து, இன்னும் சரியா முப்பது நாள் கழிச்சு ஒரு நல்ல நாள் வருது, அப்பவே நிச்சியம் வச்சிக்கலாம்..” என்றார்.  

சுப்பிரமணி, “அவ்ளோ சீக்கிரமாவா? நிறைய வேலையிருக்குமே!” என்று யோசிக்க,  

கல்யாணி, “அண்ணா, அதெல்லாம் ஆளுங்களை வச்சுப் பார்த்துக்கலாம். நல்ல நாள் போனா வராது! அன்னைக்கே வச்சுக்கலாம்..” என்றார்.  சுப்பிரமணி சரிம்மா என்று தலையாட்டினார்.  பேசி முடித்து எல்லோரும் கிளம்ப, செழியன் தாயின் முகத்திலிருந்த கலக்கத்தைப் பார்த்து, “கவலைப்படாதிங்க மா! என்னை மீறி எதுவும் நடக்காது..” என்றவன் ஆகாஷுடன்  அலுவலகம் நோக்கி புறப்பட்டான். மகனின் வார்த்தை அளித்த தெம்பில் தெளிவுடன் வீட்டிற்குப் புறப்பட்டார் வசந்தி.

தாரணியும் கல்யாணியும் செழியன் மறுத்து பேசிவிடுவானோ என பயந்து கொண்டே இருந்தனர். செழியன் எதுவும் மறுப்பு சொல்லாதது இன்னும் மகிழ்ச்சியை அளித்தது. தாரணி செழியனைப் பார்த்து புன்னகைக்க, எப்பொழுதும் போலவே செழியன் அவளைக் கண்டுக்கொள்ளாமல் தனது தந்தையிடம், “அப்பா, கிளம்புறேன்..” என்றான். சுப்பிரமணியும் தன் சொல்லை மகன் தட்டவில்லை என்று அகமகிழ்ந்து, “பாத்து போ செழியன்!” என்றார்.

இவ்வளவு நேரம் தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்திருந்த ஆகாஷ், “டேய்! ஏன் டா அங்க வாய மூடிட்டு அமைதியா இருந்த? உனக்கு கல்யாணத்துல சம்மதமா?” என்று எகிற,

செழியன், “டேய்! நீ ஏன்டா இவ்ளோ கோபப்பட்ற? நானே அமைதியா இருக்கேன்..” என்று பதிலளித்தான். 

ஆகாஷ் எதுவும் கூறாமல் அவனை முறைக்க, செழியன், “ஏன் டா! உன் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமையிறதுல விருப்பமில்லையா?” என்றான். 

ஆகாஷ், “என் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க எனக்கு தெரியும். இப்போதைக்கு  என் நண்பனோட வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்..” என்றான். ஆகாஷின் பதிலைக் கேட்டு செழியனின் முகத்தில் நிறைவான புன்னகை பிறந்தது.   

செழியன், “நீ நண்பனா கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும்டா!” என்று உணர்ந்து கூறினான். 

ஆகாஷ், “என்னை அப்புறமா புகழ்ந்துக்கோ! நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு..” என்க, 

செழியன், “என்ன சொல்ல? சொல்ற நான் ஒரு பொண்ணை விரும்புறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னா..?” என்று வினவ, 

ஆகாஷ், “ஆமா! அதான உண்மை?” என்றான். 

செழியன், “அதுக்கு அந்த பொண்ணு என்னை காதலிக்கணும்..” என்க,

ஆகாஷ், “அதெல்லாம் திகழ்விழிக்கு கண்டிப்பா  உன்னை பிடிக்கும்..” என்றான். 

செழியன், “பார்ப்போம்! நானே அவக்கிட்ட இன்னைக்கு என் காதலை சொல்லலாம்னு இருந்தேன். ஆனால் இப்போ சொல்ல வேண்டிய கட்டாயம் வந்திடுச்சு..” என்றான்.  

ஆகாஷ், “மச்சான், திகழ் கண்டிப்பா உன் காதலை ஏத்துப்பாங்க..” என்க, செழியன், “பார்ப்போம்…!” என பெருமூச்சுவிட்டான்.

“திகழ்விழி, உன்னை எம்.டி கூப்பிட்றாரு..” என்று சக தோழி ஒருத்தி கூறியதிலிருந்து ஒரே படபடப்பு.  இன்று முன்னரே வீட்டிலிருந்து  கிளம்பியிருந்த போதும், காலையில் நடந்த நிகழ்வால் யோசனையுடனே நடந்தவள் பேருந்தை தவறவிட்டிருந்தாள். அடுத்த பேருந்து வரும்வரை காத்திருந்து வர தாமதமாகிவிட்டது. வந்ததும் வராததுமா கூப்பிடருக்காருனா கண்டிப்பா லேட்டா வந்ததுக்கு திட்றதுக்காகதான் இருக்கும் என நினைத்துக் கொண்டே கதவை தட்டி உள்ளே வர, செழியன் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.  செழியனை அங்கே எதிர்ப்பார்க்காத திகழ்விழி யோசனையுடன் அவனைப் பார்த்தாள். 

அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக ரசித்த செழியன், “நான் தான் உங்களை வரச் சொன்னேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், உட்காருங்க..” என்று இருக்கையை காட்டினான்.  

அவள் அவன் முன்னே அமர, அவளது முகத்தையே சில நிமிடங்கள் ஆராய்ந்து கொண்டு இருந்தான். அவனது பார்வை அவளை ஊசியாய்த் துளைக்க, அவளால் அவன் முன்னே அமர இயலவில்லை. அவள் நெளிந்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள். 

அதைப் பார்த்து உதட்டுக்குள் புன்னகைத்துக் கொண்டவன், பார்வையை அவளது விழிகளில் நிலைக்கவிட்டு, “மிஸ். திகழ்விழி.. 

நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கீங்க..?” என்று அவன் வினவ, அவனது கேள்வியில் உள்ளே சுள்ளென்று ஒரு வலி உருவாக, அதை முகத்தில் காட்டாமல் இருக்க பாடுபட்டவள், “அது உங்களுக்கு தேவையில்லாதது சார்.. வேலை விஷயமா எதாவது நீங்க கேக்கணுமா?” என்று அவள் அந்த கேள்வியை தவிர்க்க, அவள் முகத்தையே ஆராய்ச்சியாக பார்த்தவன், “ஏன் திகழ்.. நான் கேள்வி கேட்டா, பதில் சொல்ல மாட்டியா?” என மென்மையாக கூறி அவன் ஒருமைக்குத் தாவ, அவனது முக பாவங்களை அவதானித்தவளின் உள்மனது எச்சரிக்கை செய்தது. 

அவள் அமைதியாக அவனை நோக்க, நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கைகளை நெட்டி முறித்தவன், “பச்.. என்ன சொல்றதுன்னு தெரியலை திகழ்.. எப்படி! எப்படின்னு ஆராய்ச்சி பண்ணாலும், விடை தெரியாத கேள்வியா தான் இருக்கு..” என்று கூறியவன், பின்னந்தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன், தொடர்ந்தான். 

“சுத்தி வளைச்சுப் பேசலை திகழ்.. பிடிச்சிருக்கு! உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு..” என்று கூறியவன், இதழ் பிரித்து தனது பற்கள் தெரிய புன்னகைத்தான். அவன் கூறியதைக் கேட்டவளுக்கு நெருப்பில் நிற்பதை போல இருந்தது. 

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா திகழ்.. இப்ப இப்டி ஒரு சூழ்நிலைல என் லவ்வை நான் சொல்லுவேன்னு நான் நினைக்கலை.. பட்  சொல்ல வேண்டிய சூழ்நிலை.. எத்தனையோ பொண்ணுங்களை ஈஸியா கடந்து இருக்கேன்.. ஆனால் உன்னை.. சத்தியமா முடியலை.. தோணவும் இல்லை உன்னை கடக்க முடியும்னு.. என்ன சொல்ற..?” என்று முகம் கொள்ள புன்னகையுடன் அவளது கண்களை செழியன் பார்க்க, சட்டென்று துளிர்த்த கண்ணீரை அவன் அறியாமல் உள்ளே இழுத்தவள், இருக்கையில் இருந்து எழுந்தாள். 

“சாரி சார், எனக்கு இது சரி வரும்னு தோணலை! நீங்க வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க..” என்று அறையை விட்டு வெளியேறியவளின் கண்ணீரும் வெளியேர, அவன் தான் திகைப்பில் இருந்தான். அவளுடைய எதிர்வினை இதுவாக தான் இருக்கும் என்று அவன் முன்னமே அனுமானித்து இருந்தான் தான். இருந்தும் அவளது முகத்தில் ஒரு நொடி தோன்றிய பதகளிப்பு, பதட்டம் எதற்காகவென்று அவனுக்கு புரியவில்லை. அவன் காதல் சொன்னதால் தான் வந்தது என்று அவனுக்குத் தோன்றவில்லை. வேறு எதோ அவளுக்கு பிரச்சினை இருப்பதாக உள்ளுணர்வு உணர்த்த, அவன் அப்படியே அமர்ந்து இருந்தான். 

கழிவறைக்குள் நுழைந்த திகழ் தொண்டையில் இருந்து வெளிவரத் துடித்த கேவலை கஷ்டப்பட்டு விழுங்கினாள். எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ, அதையே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக யாரோ ஒருவரால் நினைவுக்கு வருகிறது. கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டு அவளது இதழ்கள் விரக்தியாக சிரித்துக் கொண்டன. திருமண கனவுகள் இருந்ததே அவளுக்கும். கொள்ளை கொள்ளையாய் கனவுகள், அன்றே! அந்த சமபவம் நடந்த அன்றே அதை குழித் தோண்டி புதைத்துவிட்டாளே! இன்னொரு முறை வாழ்க்கையில் யாரையும் அனுமதிக்க தயராக இல்லை அவள். முடியாது! மீண்டும் ஒரு ஏமாற்றம். ஏற்கனவே அவளது இதயம் மறித்து விட்டது. வேண்டாம்! 

திருமணம் என்ற வார்த்தையை அவளது அகராதியில் இருந்து நீக்கிவிட்டாளே பேதை! விழி நீர் அருவியாக கொட்டியது. துடைக்க துடைக்க வந்துக் கொண்டே இருக்க, முகத்தை நீரால் நன்கு கழுவினாள். முகம் லேசாக சிவந்து வீங்கியதைப் போல தெரிந்தது. தனது இடத்திற்கு வந்து அமர்ந்தவள், வேலையில் கவனத்தை செலுத்த முயற்சித்தாலும், அவளால் முடியவில்லை. 

“திகழ்.. என்னாச்சு..? ஏன் ஒரு மாதிரியா இருக்க? முகம் எல்லாம் சிவந்து வேற போயிருக்கு..?” என சக தோழி வினவ, 

முகத்தை இயல்பாக்க முயற்சித்தவள், “ஒன்னும் இல்லை! லைட்டா ஃபீவரிஷ்ஷா இருக்கு.. நான் வீட்டுக்குப் போறேன்.. நீ சார் கிட்ட சொல்லிடுறீயா?” என திகழ் கேட்க,

“சரி திகழ்.. நீ கிளம்பு.. நான் சொல்லிக்கிறேன் ப்பா..” என அவள் கூற, தலையை ஆட்டியவள், தனது கைப்பையை எடுத்துக் கொண்டு வெளயேறினாள். தனது அறையில் அமர்ந்து, காணொலியில் அவளது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான் செழியன். அவளது கசங்கிய முகம் அவனது மனதை பிழிய ஆரம்பித்தது. அவளுடைய பிரச்சினை என்ன என்று கேட்டு, அவளுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று மனதும் உடலும் பரபரக்க, அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்தவனது கால்கள் அவனது அனுமதி இன்றியே அவளைப் பின்தொடர்ந்தது. அவன் வெளியே செல்ல, திகழ் சென்றுவிட்டு இருந்தாள். அவள் பேருந்து நிலையத்தில் தான் இருப்பாள் என்று தோன்ற, தனது மகிழுந்தை பேருந்து நிலையத்தை நோக்கி செலுத்தினான்.

பேருந்து நிலையத்தையே வெறித்துக் கொண்டு இருந்தவளது மனது வெறுமையை சுமந்து இருந்தது. அவளது பொறுமையை சோதிக்கும் விதமாக ஒரு பேருந்து கூட அவளது கண்களை எட்டவில்லை. 

ஆறுதல் அளிக்க அவனும், ஆறுதலை மறுக்கும் அவளும்.. என்ன நிகழும் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

                             தொடரும்..

சாரி!!! வெரி சாரி மக்களே! ரொம்ப லேட் அப்டேட் தான். 

நான் காலேஜ் போற பொண்ணு மக்களே! சோ வேலை அதிகம். இனிமே வாரத்துக்கு இரண்டு அப்டேட் தர்றேன்.. நம்புங்க மக்களே! ?????