Advertisement

யாவும் – 8

அந்த தெருவை கடக்க முயன்ற திகழ், கண்களை கூச, கண்ணை முடித்திறந்தாள். திறந்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, செய்வது அறியாது விக்கித்து நின்றாள்.

மகிழுந்தில் இருந்த கோபமாக இறங்கிய காஞ்சனா, அவள் அருகில் வந்தார். அவள் தப்பிக்க முயல, அவளது முடியை கொத்தாகப் பற்றியவர், “என்னடி, தப்பிச்சு போகலாம்னு பார்க்குறீயா?” என வினவிக் கொண்டே கன்னத்தில் ஒரு அறை விழ, “அம்மா!” என்ற அலறலுடன் கீழே விழுந்தாள் திகழ்.

“டேய்! அவளை பிடிச்சு உள்ள இழுத்துட்டு வாங்க டா!” என தன்னுடன் வந்தவர்களை அவர் பணிக்க, ஒருவன் அவளது கையைப் பிடிக்க, மற்றொருவன் அவளது தலைமுடியை பிடித்து இழுத்து வந்தான். “என்னை விட்டுடுங்க, ப்ளீஸ். வலிக்குது! விடுங்க..” என அவள் அழுகையை பொருட்படுத்தாமல், அவளை உள்ளே இழுத்து வந்தனர்.

தன் வாயிலிருந்த பீடாவை காஞ்னா துப்பிக் கொண்டே, “என்ன காஞ்சனா, புது பீஸா?” என வினவியவனிடம், பதிலளித்தாள்.

“ஆமா டா! இன்னைக்கு தான் வந்துச்சு. நினைச்சேன் இப்டி எதாவது பண்ணும்னு. அதான் போன வேலையை சீக்கிரமா முடிச்சுட்டு வந்தேன்..” என்றவள், ‘சே! இன்னாத்துக்கு சோத்தையும் போட்டு, துட்டையுக் கொடுக்குறேன்னு தெரிலை. செத்த நேரம் போய்ட்டு வர்றது வரைக்கும் இவனுங்க பார்த்துக்க மாட்டானுங்களா?” என வார்த்தைகளை கடித்து துப்பிக் கொண்டே சேலையை தூக்கி சொருகிக் கொண்டு உள்ளே நுழைய, வெளியே கேட்ட சத்ததில் அந்த நால்வரும் வெளியே வர, சங்கரும் புனிதாவும் திகழை பாவமாக பார்த்தனர்.

“ஏன் டா, தடியனுங்களா? உங்களை எதுக்கு டா வேலைக்கு வச்சு இருக்கேன். சோத்துக்கு செத்தவனுங்களா?” என அவர் பொரிய,

“க்கா.. இந்த பொண்ணு தான் பாம்பு பாம்புன்னு கத்துனா கா. அதுக்கு தான் நாங்க அடிச்சு பிடிச்சு ரூம்குள்ள போனோம்..”

“அவ கத்துனா, ஒருத்தன் போக வேண்டியது தான டா? எதுக்கு நாலு பேர் போனீங்க.. அப்டி ஒண்ணும் அவ பாம்பு கடிச்சு செத்துட மாட்டா!” என அவர் கடிய, நால்வரும் தலையை குனிந்து நின்றனர்.

புனிதா பக்கம் திரும்பிய காஞ்சனா, “இன்னாடி, பாம்பு வந்தது உண்மையா? இல்லை இவளை தப்பிக்க நீ ஏதும் உதவி பண்ணியா?” என அவளை நோக்கி ஒரு எட்டு வைக்க,

“க்கா, நான் எதுக்கு அவளுக்கு உதவ போறேன். அவ யார் எனக்கு? அக்கா வா? தங்கச்சியா?” என வரவழைக்கப்பட்ட தைரியத்துடன் புனிதா வினவ, அதை நம்பிய காஞ்னா, “நீ இன்னாடா திருட்டு முழி முழிக்கிற? சொல்லுடா!” என சங்கரை அவர் ஒரு அரட்டுப் போட, அவனுக்கு நடுங்கிற்று.

“க்கா, நான் எதுவும் பண்ணலை!” என்னும் போதே குரல் நடுங்கியது சங்கருக்கு.

அவனை ஒரே ஒரு அறை அறைந்து கீழே தள்ளிய காஞ்சனா, அவன் கழுத்தில் காலை வைத்து, “இல்லையே! நீ தான் இதை பண்ணி இருப்பன்னு எனக்கு தோணுது. உண்மை சொல்லு டா!” என கேட்க, கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது.

“ஐயோ அக்கா! எத்தினி வருஷமா இங்க நான் வேலைக்கு வர்றேன். என்னைப் போய் சந்தேகப்படுறீயே!” என அவன் அழ,

“அடச்சீ! பொட்டை மாதிரி அழாதடா! எழுந்துத் தொலை!” என அவன் கழுத்தில் இருந்து காலை எடுத்தவர், அவனை தூக்கினார்.

இந்த சத்தத்தில் அனைவரும் வெளியே நின்று வேடிக்கைப் பார்க்க, “இங்க என்ன ஷோ வா காட்றோம்.. உள்ள போங்கடி..!” என அவர் விரட்ட, எல்லோரும் அறைக்குள் சென்று முடங்க, புனிதா திகழை பாவமாக பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள். சங்கரும் விடை பெற, காஞ்சனா, அவள் உடன் வந்த அந்த ஆள் மற்றும் அந்த தடியன்கள் மட்டுமே

திகழின் அருகேச் சென்ற காஞ்சனா, “ஏன்டி! என்னையவே ஏமாத்தப் பார்க்குறீயா? எவ்ளோ தைரியம் உனக்கு?” என அவள் முடியை பிடித்து இழுத்து சுவற்றில் முட்ட வைக்க, குருதி வழிந்தது. அவள் அலறித் துடிக்க, அதைப் பார்த்து சிரித்த காஞ்னா, “ஏன் டி.. உன்னை இன்னா கொடுமை படுத்துனோம். ஒழுங்கா போட்ற சோத்தை துண்ணுட்டு அமைதியா கெடந்து இருக்கலாம் இல்லை. தேவையில்லாம அடி வாங்கி சாகுறீயே!” என கூறி மீண்டும் அவளை சுவற்றில் முட்ட வைக்க, மயக்கம் வருவது போல இருந்தது திகழ்க்கு.

“டேய்! கூட்டீட்டு வாங்க டா!” என கட்டளை இட்ட காஞ்னா நாற்காலியில் அமர, இரண்டு நாய்களும் அவிழ்த்து விடப்பட, அவளுக்கு சில அடிகள் மட்டுமே தொலைவில் இரண்டும் நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு நிற்க, தரையில் வீழ்ந்துக் கிடந்த திகழ்க்கு பயத்தில் இதயம் அடித்துக் கொள்ள, தொண்டை குழி ஏறி இறங்கியது‌.

“இன்னா பார்க்குற.. நான் ஒரு சொடுக்கு போட்டா, இன்னைக்கு அதுகளுக்கு நாஸ்தா நீதான். பார்க்குறீயா?” என அவர் வினவிக் கொண்டே சொடக்கப் போக, “வேண்டாம்!” என அவள் கத்த, “வேண்டாம் காஞ்சனா!” என அவர் உடன் வந்தவனும் கத்தினான்.

அவரை திரும்பி பார்த்த காஞ்னா, “இன்னா டா! அவளுக்கு சப்போர்ட்டா?” என வினவ,

“இல்லை காஞ்சனா, பாப்பா பாவம்…” என கூறியவன், பார்வையாலே அவளை துகிலுரித்தான்.

“ஓ.. பாவமா?” என அவர் நக்கலாக வினவ,

“என் சம்ஸாரம் அவ அம்மா வூட்டுக்குப் போய்ட்டா! வர ஒரு வாரம் ஆகும்.” என அவன் கூற,

“அதுக்கு..?” என அவர் கேள்வியாகப் பார்க்க,

“இல்லை, ரொம்ப காஞ்சுப் போய்ருக்கேன்‌. பாப்பா வேற பார்க்க சும்மா கும்முன்னு இருக்கா.. அதான்..”

“டேய்! பிரஷ் பீஸ்டா! ரேட் அதிகம்..”

“பரவாயில்லை, எனக்கு அந்த ரெண்டு கமிஷன் பாக்கிய தரவே வேணாம். எனக்கு அவ வேணும்..” என திகழை கைக்காட்ட, திகழ் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். அவனுக்கு தன் தகப்பன் வயது இருக்கும் என்று அவள் மூளை கணக்கிட, மனது ஊமையாய் அழுததது. அவனது பார்வையை அவளை கூசச்செய்தது. செய்வது அறியாது அமர்ந்து இருந்தாள்.

“அவ்ளோ புடிச்சு இருக்குனா, நான் வேண்டாம்னா சொல்ல போறேன்.. போ டா..” என அவர் திகழை கைக்காட்டிவிட்டு அவரது அறைக்குள் சென்றுவிட, அவன் திகழை நெருங்க, “ப்ளீஸ்.. வேணாம்.. என்னை விட்ருங்க..” என அவள் அழுகையை காதில் வாங்காமல் அவளது கையைப்பிடித்து இழுத்து அறைக்குள் தள்ளி கதவை சாத்தினான். அறையின் மூளைக்குச் சென்று அமர்ந்துக் கொண்டே அவள், “வேண்டாம்..” என்று கதற, “ஐயோ பாப்பா, ஒண்ணும் பயப்பட கூடாது! ஃபர்ஸ்ட் டைம்ல, அதான் பயப்படுற.. அழக்கூடாது!” என அவளை கட்டாயபடுத்தி இழுத்து கட்டிலில் போட்டான். ஏற்கனவே வாங்கிய அடியால் அவளால் எதிர்ப்பை பலமாக காட்ட முடியவில்லை. அவளிடமிருந்து துப்பட்டாவை அவன் உருவ, “அம்மா…” என அவள் கத்தினாள்.

கையில் வைத்திருந்த பார்த்திரத்தை தவர விட்ட மீனாட்சிக்கு, மனது படபடவென அடித்துக் கொள்ள, கண்கள் கலங்க ஆரம்பித்தது. கைகள் நடுங்க, அவரால் நிற்க முடியவில்லை. அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவர், தொலைப்பேசியை எடுத்து சந்தானத்திற்கு அழைக்க, “சொல்லு மீனாட்சி..” என அவர் வினவ, “ஏங்க, திகழை பத்தி எதாவது தகவல் கிடைச்சுதாங்க. எனக்கு பயமா இருக்கு..” என அவர் விம்மி அழ ஆரம்பிக்க,

“மீனாட்சி, அழதாம்மா.. ஒண்ணும் இல்லை. பயப்படாத! இங்க போலீஸை கூட்டீட்டு, நான் காலேஜ் வந்து இருக்கேன்.. எப்படியும் திகழை கண்டுபிடிச்சுடலாம்..” என அவர் ஆறுதல் கூறினாலும் குரல் உடைந்தே இருந்தது. மீனாட்சி அழுகை அதிகமாக, என்ன சமாதானம் கூறுவது என்று தெரியாமல் அவர் நிற்க, அருகில் நின்ற காவலாளி, அவரிடம் இருந்து தொலைபேசியை வாங்கி, “அம்மா, நான் காசி, கான்ஸடபிள் மா. உங்க பொண்ணைப் பத்தி விசாரிக்க தான் நாங்க வந்திருக்கோம்மா. நீங்க கொஞ்ச பொறுமையா வெயிட் பண்ணுங்க அம்மா, உங்க பொண்ணோட தான் நாங்க வருவோம். நம்பிக்கையோட இருங்க..” என்று அவன் சமாதானம் கூறி, அழைப்பை துண்டிக்க, சத்தானம் காசியை நன்றியுடன் பார்த்தார்.

அழைப்பை துண்டித்த மீனாட்சி, பூஜை அறைக்குச் சென்று அமர்ந்துக் கொண்டார். ‘கடவுளே! என் பொண்ணு வரணும். சீக்கிரம் வரணும்‌..’ என வேண்டியவர், சஹஸ்ரநாமத்தை பாட ஆரம்பித்தார்.

காசியும் சந்தானமும் சென்று கல்லூரி முதல்வரிடம் கூறி, அனுமதி பெற்று, திகழ் வகுப்பறைக்குச் சென்றனர்.

காசி உள்ளே நுழைய அனுமதி கேட்க, “எஸ் சார், உள்ளே வாங்க..” என பேராசிரியர் அனுமதி வழங்க, நடந்த அனைத்தையும் விவரித்த காசி, “அந்த பொண்ணை பத்தி விசாரிக்க வந்து இருக்கோம் மேம்.. கொஞ்ச உங்களோட க்வாப்ரேஷன் வேணும். ரொம்ப சென்சிடீவ் கேஸ் மேம்..” என அவர் கூற,

“கண்டிப்பா சார், திகழ் ரொம்ப நல்லா படிக்குற ஸ்டூடண்ட். அவ எந்த தப்பு, தண்டாவுக்கும் போக மாட்டாளே! அவ காணோம்ன்றது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. நீங்க விசாரிங்க..” என பேராசிரியர் கூற,

திகழ் புகைப்படத்தைக் காட்டிய காசி, “இந்த பொண்ணு திகழ், உங்க க்ளாஸ் மேட் தான். நேத்து காலேஜ்க்கு போறேன்னு வீட்ல இருந்து கிளம்பி இருக்காங்க. ஆனால், இப்பவரைக்கும் அவங்களை பத்தின ஒரு தகவல் இல்லை. உங்க கிட்ட எதாவது சொல்லீட்டுப் போனாங்களா? எதாவது தெரிஞ்சா சொல்லுங்க. அப்ப தான் அவங்களை தேட ஈஸியா இருக்கும்..” என அவர் கூற, கூட்டத்தில் ஒரே சலசலப்பு.

“நேத்தே திகழ் காலேஜூக்கு வரலையே சார்..” என ஒரு பெண் கூற, நாலாபக்கமும் இருந்து பதில் வந்தது.

ஒரு பெண் மட்டும் அவர்கள் அருகில் வந்து சார், “பார்வதி தான் திக்ழ்க்கு க்ளோஸ் ப்ரண்ட். அவ இன்னைக்கு காலேஜ் வரலை. நீங்க அவ வீட்டுக்கு போய விசாரிச்சா, எதாவது க்ளூ கிடைக்குமே!” என அவள் கூற, அவளிடம், “ரொம்ப தாங்க்ஸ் மா..” என நன்றி தெரிவித்த காசி, “சார், அந்த பொண்ணு வீட்ல விசாரிச்சீங்களா?” என வினவ,

“இல்லை சார், அந்த பொண்ணு பார்வதியைப் பத்தி திகழ் ஒரு தடவை கூட பேசுனது இல்லை..” என்று சந்தானம் கூற,

“இப்ப தான் கொஞ்சம் நாளா அவங்க க்ளோசா இருக்காங்க.. இது அவ அட்ரஸ்.. நீங்க ஒரு தடவை விசாரிங்க..” என அவள் பார்வதி முகவரியை கொடுத்தாள்.

அங்கு சென்றால் கண்டிப்பாக எதாவது தகவல் கிடைக்கும் என்று இருவரும் அங்கு விரைந்தனர்.

வீட்டை திற்ந்த பெண்மணி, காவல் உடையில் இருந்த காசியைப் பார்த்ததும் பயப்பட, “பயப்படாதீங்கம்மா, நாங்க உங்க பொண்ணு பார்வதியை விசாரிக்க வந்து இருக்கோம்.. இவரோட பொண்ணை திடீர்னு காணோம். அவங்களை பத்தி விசாரிக்க வந்தோம்..” என்று கூறி உள்ளே நுழைய, இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பார்வதி, அவர்களை பார்த்ததும் எழுந்து நிற்க, “உங்க ப்ரெண்ட் திகழை ரெண்டு நாளா காணோம். அவங்க எங்க போறேன்னு உங்க கிட்ட எதுவும் சொல்லீட்டுப் போனாங்களா?” என அவர் வினவியதும் அதிர்ச்சி அடைந்த பார்வதி, “இல்லையே சார், சொல்லலையே!” என அவள் பதற, சந்தானம் மனம் தளர்ந்து விட்டார் அவள் பதிலில். அவரது தொலைபேசி அழைக்க, எடுத்துப் பார்த்து அணைத்தார்.

“அபடியா மா! அவங்களை பத்தி எதாவது தெரிஞ்சா இந்த நம்பர்க்கு இன்பார்ம் பண்ணுங்கம்மா..” என காசி, அவளிடம் தனது இலகத்தை கொடுக்க இருவரும் விடை பெற்றனர்.

அவர்கள் சென்றதும் தனது தொலைப்பேசியை எடுத்த பார்வதி, விக்னேஷிற்கு அழைப்பு விடுத்தாள்‌. இரயில் அமர்ந்து தனது தொலைப்பேசியை நோண்டிக் கொண்டு இருந்தவன், அவளது அழைப்பை ஏற்று பேசினான். “ஹலோ! சொல்லு பார்வதி..”

“திகழ் எங்க விக்னேஷ்?”

“என்ன, திகழ் எங்கன்னு என் கிட்ட கேக்குற? அவ வீட்ல தான இருப்பா..”

“வீட்ல எப்டி இருப்பா? அவ தான் உன் கூட வந்தாளே!” என பார்வதி கேட்க, விக்னேஷூக்கு பக்கென்னு இருந்தது.

“எ.. என்ன சொல்ற நீ..?” என அவன் பதற,

“ரெண்டு பேரு வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க.. ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நீ சொன்னதாவும், நேத்து வீட்டை விட்டு உன் கூட வர்றதாவும் சொன்னா என்கிட்ட. அதை வேற யார்கிட்டயும் ஷேர் பண்ணலைன்னு சொன்னா..” என்று கூற,

‘சனியன், யார்கிட்டேயும் ஷேர் பண்ண கூடாதுன்னு சத்தியம் எல்லாம் வாங்குனேன். இவ கிட்ட வேற சொல்லி வச்சு இருக்கா.’ என மனதில் அவளை திட்டியவன்,

“அது.. பார்வதி திட்டம் போட்டோம். பட் என்னோட மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு, இப்ப நான் என்னோட வீட்டுக்குப் போய்டடு இருக்கேன்..” என்று அவன் கூற,

“இல்லையே! பிளான் கேன்சல் பண்றதை பத்தி அவ என்கிட்ட சொல்லவே இல்லையே!” என்று பார்வதி சந்தேகமாக வினவ,

“அது, அவ உன்கிட்ட சொல்ல மறந்து இருப்பா..”

“அப்டியா சொல்ற.. நீ சொல்றதை தான் நம்புறேன். பாவம் திகழ், அவளை காதலிக்குறேன்னு பின்னாடியே சுத்தி, லவ் பண்ண வச்ச.. என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியலை.. அவங்க அப்பா வந்து வேற கேட்டுட்டுப் போறாரு. பார்த்தா, அழுத மாதிரி இருந்ததுச்சு.. உண்மையை சொல்லாம மறச்சது வேற குற்ற உணர்வா இருக்கு..” என அவள் வருத்தப்பட,

“ஹே! நான் அவளை லவ் பண்ணது உண்மை. அவளை காணோம்ன்றது எனக்குமே அதிர்ச்சியா தான் இருக்கு. நானும் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு சொல்றேன்..” என்று அவன் கூற,

“ஹம்ம்.. சீக்கிரம் கேட்டு சொல்லு..” என அழைப்பை துண்டித்து திரும்பியவள், அதிர்ச்சி அடைந்தாள்.

தொடரும்…

Advertisement