Advertisement

படாரென ஒரு சத்தம் திடீரென கேட்க அனைத்து விளக்குகளும் எரிந்தது. “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!” எனக் கத்திக் கொண்டு செழியனின் எதிரில் நின்றிருந்தனர் ஆகாஷ், பாரதி, தாரணி. 

செழியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியவில்லை. நடந்ததை கிரகித்துக் கொண்டு அவர்களை பார்த்து செல்லமாக முறைத்தான். 

ஆகாஷ், “மச்சான், நான் எதுவும் பண்ணலை. இவங்கதான் உன் பிறந்த நாளை பனிரெண்டு மணிக்கு கொண்டாடனும்னு அடம் பிடிச்சாங்க…” என்று பாரதியையும் தரணியும் கை காட்டி விட்டான்.  

பாரதி, “அண்ணா, எவ்வளவு நாள் தான் பிறந்த நாளை பகல்லே கொண்டாட்றது…  அதான் புதுசா இருக்கட்டும்னு இந்த பிளான் பண்ணோம்..” என்று கூறி புன்னகைத்தாள். 

தாரணியும், “ஆமா மாமா!” என்றாள். 

தங்கையின் புன்னகையை பார்த்தும் செழியனால் தனது கோபத்தை பிடித்து வைக்க முடியவில்லை. கோபம் மறைந்து புன்னகைத்தவன், “அப்பாவுக்கு இது தெரியுமா?” 

பாரதி, “அண்ணா, அப்பாவுக்கு தெரியாம தான் பன்றோம்.  நீ சொல்லிடாத…” என்றவள், ” பனிரெண்டு மணியாக போகுது.. சீக்கிரம் கேக்கை வெட்டுண்ணா…” என்று கூறி மெழுகுவர்த்தியை பற்ற வைத்தாள்.

மற்ற மூவரும் பிறந்தநாள் வாழ்த்து பாட, செழியன் புன்னகையுடன் கேக்கை வெட்டினான்.  செழியன் கேக்கை வைத்துக்கொண்டு யாருக்கு ஊட்டுவது என்று தெரியாமல், மூவர் முகத்தையும் மாறி மாறி பார்க்க, தாரணி தனக்குதான் ஊட்டுவான் என மனதிற்குள் கர்வமாக நினைத்தாள். 

ஆகாஷ் நண்பனின் நிலையை பார்த்து, “மச்சான், நீ பாரதிக்கே கேக்கை ஊட்டிவிடு.. நாங்க ரெண்டு பேரும் ஒன்னும் நினைக்க மாட்டோம்…” என்றவன் தாரணியைப் பார்க்க  தாரணி ஆகாஷை  உள்ளுக்குள் அர்ச்சித்துவிட்டு ‘கல்யாணம் ஆகட்டும். அண்ணனையும் தங்கச்சியையும் பிரிச்சு விட்றேன்…’ என்று நினைத்து விட்டு வெளியே புன்னகைத்து, “ஆமா மாமா, நீங்க பாரதிக்கே கொடுங்க…” என்றாள். 

செழியன் பாரதிக்கு கேக்கை ஊட்டி விட்டு, பின் மற்றவர்களுக்கு ஊட்டினான். ஒவ்வொருவராக தங்கள் வாங்கிவந்த பரிசை கொடுக்க, தாரணி கொஞ்சம் அதிகமாகவே குழைந்துக் கொண்டு, “மாமா, உங்களுக்காக தான் தேடித் தேடி வாங்கினேன். பிரிச்சி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க…” என்றவள் அதனை கொடுக்கும் போது அவனது விரல்களை தொட முயற்சிக்க, எச்சரிக்கையுடன் அவளது விரலை தீண்டாமல் அதை பெற்றுக் கொண்டான். செழியனுக்கு தாரணியிடம்  எப்போதும் ஏதோ எச்சரிக்கை உணர்வு இருக்கும். பார்வையாலே அவளை தள்ளி நிறுத்தி விடுவான். அது அவளது நடவடிக்கைகளாலா? அல்லது கல்யாணியின் காரணமாகவோ?  எதனால் என்று தெரியவில்லை.  செழியனின் நடவடிக்கைகளால் தாரணி  முகம் மாறாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.

மறுநாள் விடியல் அழகாக விடிய, வசந்தி புதல்வனின் பிறந்தநாளையொட்டி அளவுக்கதிகமான சந்தோஷத்துடன் செழியனுக்கு பிடித்த அனைத்தையும் சமைத்துக் கொண்டிருந்தார். தாய் ஆசையாக வாங்கிக் கொடுத்த உடையை அணிந்தவன், தனது அக்மார்க் புன்னகையுடன் கீழே இறங்கி வந்தான். 

வசந்தி, “வாப்பா… வந்து சாமி கும்பிடு…” என்று கூற, மற்றவர்களும் கடவுளை வணங்கிவிட்டு சாப்பிட அமர்ந்தனர். 

சுப்பிரமணி, “எல்லாரும் சாப்பிட்ட பின்னாடி கோவிலுக்கு வாங்க. கோவில்ல பூஜைக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன். நானும் கல்யாணியும் முன்னாடி போறோம் நீங்க வாங்க…” என்று கூறி கிளம்ப எல்லாரும் உணவருந்த அமரந்தனர். 

வசந்தி  செழியனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார். வசந்தி செழியா உனக்கு பிடிச்ச கேரட் அல்வா பண்ணிருக்கேன் சாப்பிடுப்பா என்று பரிமாறினார். செழியன்  அல்வாவை‌ சுவைக்க, அது வசந்தியின் அன்பினால் அமிர்தமாக தெரிந்தது. ரசித்து அதை உண்டவன், “அம்மா, சூப்பரா செஞ்சு இருக்கீங்க…” என்று சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிட்டான். அதனைக் கேட்ட வசந்தியின் உள்ளம் பூரித்துப் போனது. முகம் கொள்ளா புன்னகையுடன், “இந்தாப்பா.. இன்னும் கொஞ்சம் சாப்பிடு” என்று கேசரியை வைத்தார். நாள் முழுவதும் வீட்டில் வேலை செய்து பார்த்து பார்த்து சமைக்கும் வீட்டுப் பறவைகளான இல்லத்தரசிகளுக்கு‌ பெரிய பரிசு பொருட்களை விட, குடும்பத்தினரின் மனமார்ந்த பாராட்டுகளே மகிழ்ச்சியாக மனம் கலங்காமல் வேலை பார்க்க போதுமானது. 

தராணி, ‘ரெண்டு பேரும் ஏன் இப்படி  ட்ராமா போட்றாங்க..’ என நினைத்துக் கொண்டாள். எல்லாரும் சாப்பிட்டுவிட்டு ஐயாறப்பர் கோயிலை நோக்கி பயணமாகினர். 

தனது தந்தையின் புகைப்படத்தின் முன் கண்மூடி நின்று வேண்டிக் கொண்டிருந்தவளை மோகனாவின், “திகழ்..” என்ற அழைப்பு நிஜ உலகிற்கு அழைத்து வந்தது. 

தன் விழியோரம் துளிர்த்த கண்ணீரை வேகமாக சுண்டி விட்டவள், “இதோ வரேன்மா…” என குரல் கொடுத்துக்கொண்டே பூஜை அறையிலிருந்து வெளியேறினாள்.  தனது முகத்தை இயல்பாக்கி கொண்டு புன்னகையுடன் சாப்பிடாம இருந்தாள்.

“அம்மா, காலேஜ்க்கு லேட் ஆகிடுச்சு… டிபன் பாக்ஸ்ல சாப்பாடு எடுத்து வை. நான் காலேஜ்ல போய் சாப்பிட்டுக்கிறேன்…” என்று அவசரகதியில் கூறிக்கொண்டே வந்த நிரஞ்சனா கால் தடுக்கி விழப் போக, சாப்பிட்டுவிட்டு கை கழுவிவிட்டு வந்த திகழ், “பார்த்து வா அஞ்சு…” என்று பதறிக் கொண்டே அவளை  கீழேவிழாமல் பிடித்தாள். 

திகழின் கைப்பட்டதும் நிரஞ்சனா வேகமாக தன் கையை உதறி, “சீ கையை எடு. நீ பிடிச்சதுக்கு நான் கீழயே விழுந்திருக்கலாம்…” என்றாள் குரல் முழுவதும் வெறுப்புடன். 

தனது தங்கையின் உதாசீனத்தில் துடித்தவள் அடுத்த நொடியே விலகி நின்றாள்.

நிரஞ்சனாவின் பேச்சைக் கேட்ட மோகனா கோபமாக, “அஞ்சு உன்கிட்ட எத்தன தடவை சொல்லிட்டேன்! அவளை இது மாதிரி பேசாதன்னு…” என்று இளையவளை அதட்டினார். 

நிரஞ்சனாவின் உதாசீனம் தனக்கு பழகிப் போன விஷயம் என்பதால் நொடியில் தன்னை சமன்படுத்திய திகழ்விழி, “அம்மா, காலையிலே அவளை திட்டாதீங்க! என் தங்கச்சிக்கு… என்னை பேச அவளுக்கு இல்லாத உரிமையா? நீங்க இதுல தலையிடாதீங்க…” என்று தன் தாயை கண்டித்தாள். 

மோகனா, “உனக்கு போய் சப்போர்டுக்கு வந்தேன் பாரு…என்னை சொல்லனும்… நீயும் திருந்த மாட்ட… அவளும் திருந்த மாட்டா..” என்று திட்டிவிட்டு மீண்டும் சமையல்கட்டிற்குள் நுழைந்து கொண்டாள். 

நிரஞ்சனா, “அப்படியே நல்லவ மாதிரி நடிக்காத! நீ என்ன நடிச்சாலும் உன்ன நாங்க நம்ப மாட்டோம்…” என்று முகம் கடுகடுக்க கூற,  திகழ்  அவளைப் பார்த்து விரக்தி புன்னகையை உதிர்த்தாள். 

“அக்கா, கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்த மதனை நிரஞ்சனா ஏகத்துக்கும் முறைக்க, 

மதன், “நான் என்னக்கா பண்ணேன். என்னை இந்த முறை முறைக்குற?” 

நிரஞ்சனா, “எல்லாம் உன்னால தான்டா… நீ சீக்கிரமா கிளம்பி வந்து இருந்தா, இவகிட்டலாம் பேசணும்னு எனக்கு அவசியம் வந்திருக்குமா?” என்று சம்பந்தமே இல்லாமல் அவனிடம் கோபத்தைக் காட்டியவள், “வா போகலாம்…” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றாள். 

மதன், “அக்கா, நான் இன்னும் சாப்பிடலை…” என்க, 

“லேட்டா வந்ததுக்கு, உனக்கு இதுதான் தண்டனை… சாப்பாடு கிடையாது…” என்றவள் அவன் கூறுவதை காதில் வாங்காமல் அழைத்துச் சென்றுவிட்டாள்.

போகும் தனது தம்பி தங்கைகளை வேதனையுடன் பார்த்து நின்ற திகழ், ஒரு பெருமூச்சை விட்டு தனது கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டாள். 

இவை அனைத்தையும் சமையல் கட்டில் இருந்து கவனித்த மோகனா முகத்தில் வேதனையின் சாயல். தன் கணவன் படத்திற்கு முன் சென்று நின்றவர், ‘நீங்கதான் எல்லாத்தையும் சரி பண்ணும்..’ என மனதிற்குள் வேண்டிக் கொண்டு, மற்ற வேலைகளை கவனிக்க சென்றார்.

ஐயறாப்பர் கோவில் சம்வர்த்தினி அம்மனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்க, அம்மன் அருள்பாலிக்கும் முகத்தைப் பார்த்து மெய்மறந்து வேண்டிக் கொண்டிருந்தனர் செழியன் குடும்பத்தார். கடவுளை வணங்கிவிட்டு வசந்தி தன் கொண்டுவந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு கொடுக்க செல்ல, பாரதி அவருடன் உதவிக்கு சென்றாள். 

கல்யாணியும் சுப்பிரமணியும் அம்மன் சன்னதியின் அருகில் அமர, மற்றவர்கள் பிரகாரத்தை சுற்றி சென்றனர். அருகில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தனது பேச்சை ஆரம்பித்தார் கல்யாணி. 

“அண்ணா, நம்ம செரியன் இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள இருபத்தியெட்டு வருஷம் ஆகிடுச்சு இல்ல…” என்க, 

சுப்பிரமணி, “ஆமம்மா.. எனக்கும் அப்படித்தான் இருக்கு.. நாளும் கிழமையும் யாருக்காகவும் நிக்குறதில்லை…” என்றார். 

கல்யாணி, “செழியனுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. தாரணியும் இந்த வருஷத்தோட படிப்பை முடிக்க போறா… நாம ஜோசியர் கிட்ட சொல்லி நல்ல நாள் பார்த்து இப்போதைக்கு தட்ட மாத்திடுவோமா?” 

சுப்பிரமணி, “அவசரப்படாத கல்யாணி! தாரணி படிச்சு முடிச்சதும் இந்த பேச்சை எடுக்கலாம்…” என்றார். 

கல்யாணி, “இப்போவே பிடிகொடுக்காம பேசுறீங்க..” என்க, 

சுப்பிரமணி, “என்னம்மா.. அண்ணன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? ஏற்கனவே தரணிக்கு செழியன்னு பேசி வைச்சது தான?” என்றார.

கல்யாணி, “அண்ணா, உங்க மேல நம்பிக்கை இல்லாமலா? நீங்க கொடுத்த வாக்கை மீறமாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும் என்னோட வாழ்க்கை தான் இப்படி சாமர்த்தியம் பத்தாத ஒருத்தருக்கு கட்டி கொடுத்து ஒன்னும் இல்லாம போயிடுச்சு… என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, அவ வாழ்க்கையை பத்தி நான் கவலைப்படாமல் இருப்பேன்…” என்று தனது அண்ணனின் வீக் பாயிண்ட்டை பிடித்தார். 

தங்கையின் பேச்சில்  இளகியவர், “எல்லாம் சரிதான்மா..  செழியன்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்…” என்றார்.

கல்யாணி, “அண்ணா, செழியன் உன் புள்ள… நீ சொல்லி கேட்க மாட்டேன்னா  சொல்ல போறான்… செழியன் உன்னோட வளர்ப்பு தப்பாகுமா…” 

சுப்பிரமணி விரைப்பாக, “என் வளர்ப்பு எப்பயும் தப்பாகாது. செழியன் நான் சொன்னா கண்டிப்பா கேட்பான்…” என்றார். 

கல்யாணி, “அப்புறம் என்னண்ணா? ஜோசியர் கிட்ட சொல்லி ஒரு நல்ல நாளா பார்க்க சொல்லுவோம்…  கல்யாண விஷயத்தை கோயில்ல வச்சு பேசுனா நல்லதுதான் நடக்கும்… இப்பவே ஜோசியரை வரச் சொல்லுவோம்…” என்று ஜோசியருக்கு அழைத்தார்.

பிரகாரத்தை சுற்றி விட்டு வந்த தாரணி கல்யாணியின் முகத்தை பார்க்க, கல்யாணி எல்லாம் ஓகே என்று கண்ணை காண்பித்தார் உடனே தாரணி வந்து சுப்ரமணியன் காலில் விழுந்து, “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா…” என்றாள் 

சுப்ரமணியசாமி, “தீர்க்காயுசா இரும்மா…” என்று ஆசீர்வதித்தார். 

செழியன் வசந்தியிடம், “அம்மா, நேரமாச்சு.. ஆபீஸ்க்கு கிளம்பனும்?” 

வசந்தி பதில் சொல்லும் முன் ஆகாஷ் முந்திக் கொண்டு யாருக்கும் கேட்காத வகையில், “ஆபீஸ்க்கு நேரம் ஆயிடுச்சா? இல்ல திகழ்விழியைப்  பார்க்க நேரம் ஆயிடுச்சா?” என்றான்.  

செழியன் தன் தாய்க்கு கேட்டுவிடுமோ என நினைத்து ஆகாஷைப்  பார்த்து முறைக்க, ஆகாஷ் வாயை மூடிக்கொண்டான்.  

வசந்தி, “இதோ எல்லாம் முடிஞ்சிடுச்சு… கிளம்பலாம்..” என்றவர் தனது கணவரிடம், “என்னங்க… கிளம்பலாமா?” என வினவினார்.

சுப்பிரமணி பதில் கூறுமுன் கல்யாணி முந்திக்கொண்டு, “அண்ணி, கொஞ்சம் இருங்க.. ஜோசியர வர சொல்லி இருக்கோம்… நம்ம செழியன் ஜாதகத்தை பார்க்க..” என்றார். 

வசந்தி, “என்ன திடீர்னு ஜாதகம் பார்க்க?” என்க, 

சுப்பிரமணி, “நான் தான் வரச்சொல்லிருக்கேன்… கேள்வி கேட்காம எல்லாரும் இங்க வந்து உட்காருங்க..” என்றார்.

வசந்தி செழியனின் முகத்தைப் பார்க்க, செழியன் தான் காத்திருப்பதாய் கண்களால் சமிஞ்ஞை செய்ய, எல்லாரும் கோவிலில் காத்திருந்தனர்.  

சிறிது நேரத்தில் ஜோதிடர் வர கல்யாணி, “வாங்க ஜோசியரே!” என்றவர், “செழியனுக்கும் தாரணிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.. புள்ளைங்க ஜாதகத்தை பார்த்து நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க..” என்று ஜாதகத்தை நீட்டினார். 

கல்யாணியின் வார்த்தையை கேட்ட எல்லோருக்கும் அதிர்ச்சி!