Advertisement

யாவும் – 10

வெளியே நின்ற பெண் காவலாளிகள் சத்தம் வந்ததும், காஞ்சனாவை தள்ளிவிட்டு, உள்ளே நுழைந்தனர்.

திகழ் எந்த அறையில் இருந்து கத்துகிறாள் என்று ஆராய்ந்தவர்கள், அறைக்கதவை திறக்க, அங்கே திகழ் அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.

பெண் காவலாளியை கண்டதும், அவன் அடித்து பிடித்து எழ, அவனது கையில் விலங்கு மாட்டப்பட்டது. திகழ் அழுது கொண்டிருக்க, அந்த காவலாளி அவளிடம் சென்று, “வாம்மா… அழாத…” என்று அவளை அழைத்துச் சென்றனர். காஞ்சனாவையும் அவர்கள் விலங்கிட்டு அழைத்துச் செல்ல, அங்கே உள்ள பெண்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பார்வதி நின்றுக்கொண்டு இருக்க, சில நிமிடங்களில் காவல்துறை வாகனம் அவள் அருகில் வந்துவிட்டிருந்தது.

“நீ தான் பார்வதியா மா?” என ஒரு காவலர் வினவ, “ஆமா சார்..” என அவள் பதிலளித்தாள்.

“ஹ்ம்ம்… நீ போய் அவங்க கிட்ட பேச்சுக் கொடு மா. நாங்க பின்னாடியே வர்றோம்…” அவளை அவர் அனுப்ப, அவர்கள் அருகில் சென்றாள் பார்வதி.

“நீங்க தான் பார்வதியா?” என கணபதி வினவ, “ஆமா! விக்னேஷ் அனுப்புனான்…” என அவள் இயம்பிக் கொண்டு இருக்கும் போதே, மற்றொருவன், அவள் பின்னாடி சென்று மயக்கமருந்தை அவள் முகத்தில் வைக்கப் போன சமயம், காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

கணபதி தப்பி ஓடப்பார்க்க, அவனை நோக்கி துப்பாக்கியை நீட்டிய காவலாளி, “டோண்ட் மூவ்…” என்று கூற, அவன் அசையாது நின்றான்.

மற்றொரு காவலாளி, இருவரையும் விலங்கிட்டு வண்டியில் ஏற்றிவிட்டு, “நீங்க வீட்டுக்கு கிளம்புங்க மா. ரொம்ப தாங்க்ஸ்…” என கூறி, ஆட்டோகாரரிடம் கூறி, அவளை அனுப்பிவிட்டார். தன்னுடைய இலக்கத்தை அவளிடம் பகிர்ந்து, வீட்டிற்கு சென்றதும், தகவல் தருமாறு அறிவுருத்தினார்.

திகழை பரிசோதித்த மருத்துவர், அவளது காயங்களுக்கு மருந்திட, அவள் வலியில் அழறத்துவங்கினாள். திகழ் மீட்கப்பட்ட செய்தி சந்தானத்தை அடைந்ததும், அவர் திகழிடம் பேச வேண்டும் என்று கூற, அழைப்பு இணைக்கப்பட்டது.

“இந்தாம்மா… உங்க அப்பா பேசுறாரு…” என காவலர் திகழிடம் தொலைபேசியை தர, அதை வாங்கி காதில் வைத்தவளுக்கு அழுகை முட்டியது.

“அப்பா, என்னை மன்னிச்சுடுங்கப்பா! உங்களுக்கு நான் துரோகம் பண்ணிட்டேன். உங்களுக்கு நான் உண்மையா இல்லை!” என அவள் கதற, பெற்ற உள்ளம் துடித்தது.

“இல்லை டா… அப்படிலாம் இல்லை…” என அவர் மறுக்க,

“இல்லைப்பா… நான் பண்ணது தப்பு. உங்க எல்லாரையும் ஏமாத்துனதால தான் கடவுள் எனக்கு இப்டி ஒரு தண்டனை கொடுத்துட்டாருப்பா…” என அவள் அழுத அழுகை, சந்தானத்திற்கு நெஞ்சை அழுத்தியது.

“நீ முதல்ல வீட்டுக்கு வா டா. அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் உன்னைப் பார்க்காமல் கஷ்டப்படுறாங்க…” என அவர் பேச, அவள் அழுதுக் கொண்டே தான் இருந்தாள். மற்ற எல்லா வேலைகளும் முடிய, திகழிடம் ஒரு கையெழுத்தை வாங்கிக் கொண்டு, அவளை சென்னைக்கு இரண்டு பெண் காவலர்கள் அழைத்துச் சென்றனர்.‌

முழுதாக ஒரு நாள் பயணம் முடிந்து அவள் வீட்டிற்க்கு அழைத்து வரப்பட்டாள்.

நடந்ததைக் கேட்டு, மீனாட்சி ஒரு பாடு அழுதே கரைய, சந்தானம் தான் அவரை தேற்றினார். மகள் நல்லபடியாக திரும்பி வந்ததே, பெரிய விஷயம் என பலவழிகளில் அவர் சமாதானம் கூறினார்.

எல்லோரும் வெளியே காத்திருக்க, திகழ் உள்ளே நுழைந்தாள். கலைந்த தலைமுடி, அழுது வீங்கிய முகம், நெற்றியில் கட்டு என அவள் ஓய்ந்து வர, அதைப் பார்த்ததும் சந்தானத்திற்கு மனம் கனத்ததது.

உள்ளே நுழைந்ததும், ஓடி வந்த திகழ், சந்தானத்தின் காலில் விழுந்துவிட்டாள். “நான் பாவம் செஞ்சுட்டேன் அப்பா. மன்னிக்க முடியாத பாவம். என்னை மன்னிச்சுடுங்கப்பா… நான் செஞ்சது பெரிய தப்பு…” என அவள் அழ, அவளை தூக்கி அணைத்துக் கொண்டார் சந்தானம்.

அவள் அருகில் வந்த மீனாட்சி, “ஏன் டி… ஏன் இப்டி பண்ண? இப்படி பட்ட மனுஷனுக்கு துரோகம் பண்ணணும்னு எப்டிடி உனக்குத் தோணுச்சு. குடும்ப மானத்தையே இப்டி வாங்கிட்டியே! இனி எப்டி வெளிய தலை காட்ட போறோமோ!” என அவள் முதுகிலே அடிக்க, அழுதுக் கொண்டே அத்தனையும் திகழ் வாங்கிக் கொண்டாள்.

மீனாட்சியை தடுத்த சந்தானம், “மீனாட்சி, புள்ளையோ பாவம். அவளை ஏன் இப்டி போட்டு அடிக்குற..?” என அவர் கேட்டாலும், குரல் கரகரத்தது என்னவோ உண்மை.

தரையில் அமர்ந்த மீனாட்சி, தன் தலையிலே அடித்துக் கொண்டு கதறினார். “இப்டி ஒரு புள்ளையை பெத்ததுக்கு நான் பெறாமையே இருந்து இருப்பேனே. மத்த ரெண்டை விட, உன்னை நல்லாதானடி பார்த்துக்கிட்டேன். ஏன் இப்டி பண்ண?” என அவர் அழ, அவர் முன் மண்டியிட்ட திகழ், “தப்பு பண்ணிட்டேன் மா. தப்பு தான்… நான் பண்ணது சின்ன தப்பு இல்ல. என்னை கொன்னுடும்மா. உன் கையாலே கொன்னுடுமா. நான் வாழ தகுதி இல்லாதவ. நான் செத்துட்டா, இந்த அசிங்கம் எல்லாம் போய்டும் இல்ல மா. நான் உனக்கு வேண்டாம் மா.” என திகழ் தன்னையை அடித்துக் கொண்டு அழ, நிரஞ்சனாவும் மதனும் உடன் அழுதனர் பெற்றவர்களின் அழுகையைப் பார்த்து.

மீனாட்சி அவளை இழுத்து அணைத்தவர், “உன்னை கொன்னு போடுறதுக்கு தான் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தேனா?” என  கேட்க, அவரை இறுக அணைத்துக் கொண்டாள் திகழ்.

அன்றைய பொழுது அழுகையிலே கரைந்ததது. இரவு கவிழத் துவங்கி இருக்க, திகழ் அறைக்குச் சென்று, படுக்கையில் வீழ்ந்தவள், வெளியே வரவே இல்லை. தான் செய்த தவறு, அவளை பூதாகரமாக பயம்புடுத்தியது. இன்னேரம் அந்த காவலர்கள் வராது இருந்தால், தான் அந்த மிருகத்தின் காமபசிக்கு இரையாகி இருப்போம். அதை நினைக்கவே உடல் நடுங்கியது. நடந்து முடிந்ததை மாற்ற முடியாது என்று தெரிந்தாலும், அவளால் மறக்க முடியவில்லை. கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். எப்படி தான் இந்த சமூகத்தை சந்திக்கப் போகிறோம்? என்று நினைக்க நினைக்க, அழுகை முட்டியது அவளுக்கு. காதல் என்ற மூன்று வார்த்தை தன் வாழ்க்கையை இப்டி ஒரே நாளில் நாசமாக்கும் என்று தெரிந்த இருந்தால், அந்த வார்த்தையிடம் இருந்து, காத தூரம் சென்று இருப்பாள்.

காலையில் இருந்து யாரும் சாப்பிடாததால், வெளியே சென்று உணவு வாங்கி வந்த சந்தானம்,

“மீனாட்சி, சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கேன். பிள்ளைகளை சாப்ட வை.  காலைல இருந்து அவங்க எதுவும் சாப்டலை. நீயும் சாப்டு. நான் திகழை அழைச்சுட்டு வர்றேன்…” என கூறிய சந்தானம்

திகழின் அறைக்குச் சென்றார்.

படுக்கையிலே அழுது கரையும் மகளை பார்த்தவருக்கு துக்கம் தொண்டையை அடைக்க, தன்னை சரிபடுத்திக் கொண்டவர், “திகழ், அழுதுட்டே இருந்தா, எல்லாம் சரியாகிடுமா? அதை மறந்துடு டா.” என அவள் தலையை பரிவாக அவர் தடவ, எழுந்து அமர்ந்தவள், “ஏன் ப்பா… ஏன் என்னை ஒரு வார்த்தை கூட திட்டலை. என்னை திட்டுங்கப்பா. என்னை அடிங்கப்பா. எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு பா. என்னை அடிங்க பா‌. நான் ரொம்ப கெட்ட பொண்ணு பா. மோசமான பொண்ணு.‌‌..” என அவள் தன் கன்னத்திலே அறைந்துக் கொள்ள, “எல்லாரும் ஒரு வகை நம்பிக்கை துரோகத்தை தான் சந்திக்கிறோம். உனக்கு அந்த பைனால… எனக்கு உன்னால. ஆனால், நீ வேணும்னு தெரிஞ்சு பண்ணலையே! என்னோட வளர்ப்பு தப்பாகிடுச்சுன்னு மனசு வலிக்குது மா‌‌…” என அவர் கண்கலங்க, முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள் திகழ். கேவிக் கொண்டே இருந்தாள். இதுவரைக்கும் எதற்காகவும் கண்ணீரை சிந்தாத, தன் தந்தையை கண்ணீரை சிந்த வைத்து விட்டோமே! என மனது கூற, வேதனை ஏறிக் கொண்டே சென்றது. எதுவும் பேசாமல் அவள் அமர்ந்து இருக்க, கண்கள் மட்டும் அதன் வேலையை செவ்வென செய்து கொண்டு இருந்தது.

“நடந்தது நடந்துடுச்சு மா. எதையும் நம்மாள மாத்த முடியாது! இதை பத்தி கவலைப்பட்டு, வயித்தை காயப்போட கூடாது! வந்து சாப்டு…” என அவர் கூற, ‘வரமாட்டேன்’ என தலையை மட்டும் அசைத்தாள் திகழ்.

“நீ சாப்டலைன்னா, நானும் சாப்ட மாட்டேன்…” என அவர் அங்கேயே அமர,

“ப்பா… நான் செஞ்ச தப்புக்கு எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கிறேன் ப்பா. நீங்க தான் தரலை…”

அவளைப் பார்த்து விரக்தியாக சிரித்தவர், “சாப்டாம இருந்தா, அது தண்டனையா டா? நீ சாப்டாம இருந்தா, அது எனக்கு தான் தண்டனை. என்னை கஷ்டபடுத்துறதுக்கு சமம்டா. தப்பு பண்ணிட்ட. அதை மாத்த முடியாது. இனிமேல், அதை எப்டி பேஸ் பண்றதுன்னு யோசிக்கணும் டா. உன்னை கோழையா நான் வளர்க்கலை. தப்பு பண்ணாதவங்க யாருமே இந்த உலகத்துல இல்ல. அவங்க செய்ற தப்போட அளவை பொறுத்து குற்றமா பார்க்குறாங்க‌. அவ்ளோதான் வித்யாசம். கடவுளே கூட தப்பு பண்ண தான் செய்றாரு. அதை சரி பண்ணு டா.” என்று அவர் கூற, தலையை அசைத்தவள்,

“ப்பா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா. காலேஜ் போகும் போது, எல்லாரும் கேட்பாங்களேப்பா…” என அவள் அழ,

“தப்பு செஞ்ச அவன் தான் டா வெட்கப்படணும். நீ பண்ண ஒரு தப்பு அவனை நம்புனது. பார்த்துக்கலாம் டா. எல்லாத்தையும் நினைச்சு மனசை குழப்பிக்காத டா. இப்ப வந்து சாப்டு…” என அவளை கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்துச் சென்றார்.

மறுநாள் காலை புலர, திகழுக்கு என்ன காத்திருக்கிறது என்று யாருமே அறியார்!

தொடரும்…